சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி சீர்தருஞானச் செழுஞ்சுடராந்திரு வண்ணாமலைவல மான்மியம்போல் தீர்த்தமகிமை வெளியுரைக்கத்திக ழானைமுகவன் பதந்துணையே. 1 பூசுரராடி மனங்களிக்கும் சிவ பொன்மலைச்சாரும் புனல்மகிமை பேசுவறுமுகன் றாள்போற்றி - பெரு மானிருபாதந் தினந்தொழுவேன். 2 அண்ணாமலைவளர் தீர்த்தமகிமையிங் காதியோடந்த மெடுத்துரைக்க வுண்ணாமுலையாமென் தாயாரருள்படி வும்பருமற்றவ ருந்துணையே. 3 பூலோகவாசைத் துறந்தகுரவனாம் போதமகாரிஷி கௌதமருஞ் சாலோகவேத மலைககளர்சன்னதி சார்ந்தான்வேள்வி நடத்தவென்றே. 4 அக்கினிமுட்டியே கௌதமருமங்கே ஆரணமாரி சொரிகையிலே தக்கவழகுள வேதியனுந்தணல் தன்னில்பிறந்தான் வினாடியிலே. 5 பெம்மானண்ணாமலை யீச்சுரனை துறந்தஞான விழினோக்கிதினம் தோத்திரஞ்செய்யெனத் தொண்டளித்தான். 6 பின்னுந்தருப்பைகள் யேழெடுத்துக்கிள்ளி போட்டனரக்கினி குண்டமதில் உன்னிதசெந்திரு போலேழுபெண்க ளுதித்தாரோம அழல்நிறம்போல். 7 கண்டந்தமாரிஷி யேதுரைப்பாரிந்த கன்னிகைமார்களைத் தான்பார்த்து அண்டர்பதிக்கி நடனம்புரிந்திட ஆக்கினையீந்தார் மகாரிஷியும். 8 இப்படியாதியில் ஜெனகருக்குவேதன் செப்பியவாறுபோ லிப்படியோர் ஒப்புப்புராண முறைப்படிக்கேயின்னம் ஓதுவேனிங்கனம் கேள்மனமே. 9 இந்திர தீர்த்தம் சந்திரன்மேவு முடிக்கடவுள்மலை சார்ந்தகிழக்கு முகந்தனிலே இந்திரதீர்த்த மிருக்கும்பெருமையிங் கேதென்றுரைப்பே னதன்மகிமை. 10 இந்திரனாலே சமைத்ததுவாமிரண் டேழுலகோரு மதில்தினமும் வந்தல்லோமூழ்கிப் பவந்துலைத்தாரினி வாருங்கலியுக மானிடரே. 11 கூடுந்தைப்பூரண பூசத்திலேயதில் குளித்தொருகைச்சல முண்டவதற்கு நீடுமொருகோடி பிரம்மத்தியுங்கூட நீங்குங்கலியுக மானிடரே. 12 அக்கினி தீர்த்தம் மாமறைபோற்று மருணகிரியெனும் மாலைதென்கிழக் காமதிலே நேமஞ்சேரக்கினி தீர்த்தமுண்டத்துட னேர்மையென்சொல்லுவேன் மானிடரே. 13 பங்குனிமாதம் பௌர்ணமிகாலத்தில் பாருளஜீவர்க ளாரெனினும் அங்கனம்சென்று முழுகின்மகுத்துவம் ஆரால்விளங்குமோ மானிடரே. 14 மிக்கதவமுனி யெழுவர்கள்பத்தினி மார்களைக்கண்டொரு நாளையிலே அக்கினிதேவன் விரும்பவவன்பெண்டீ ரானசுவாகை தெரிந்தனளாம். 15 தன்னுருமாறியக் கன்னியர்போலவே தக்கசுகுண வடிவெடுத்து வன்னிப்புருட னெனுங்கணவன்றனை வஞ்சியுங்கூடிக் கலந்தனனே. 16 மன்னுயிர்போல வடிவெடுத்துகற்பு மாற்றியபாவ மதைத்துலைக்க வன்னிதடாகத்தில் மூழ்குமக்காலையில் வானவர்நாடு கிடைத்தனவாம். 17 எம தீர்த்தம் எண்டிசையோரும் வணங்குமண்ணாமலை தென்றிசைபக்க மொருபுனலாம் சண்டனார்தீரமொன் றுண்டதில்மூழ்கிடக் கண்டபலன்கேளும் மானிடரே. 18 கார்த்திகைதோரும் பதினாராண்டிலும் காரணமாக முழுகினவர் சீர்பெருதிரேகமே பொன்னிறமாமென சித்தர்களின்னமு மூழ்குவராம். 19 முன்னொருகாலத்தில் பிரமாவினாயுதம் பட்டுயெமனுடல் குன்றினதால் யின்னதிமூழ்கியே தீர்த்துக்கொண்டானென்று ஏழுலகத்தோரும் மூழ்குவராம். 20 நிருதி தீர்த்தம் நிருதிமூலை நடுவணையில் நல்ல நிருதிதீர்த்தமொன் றுண்டதிலே கருதிமுழிகினோர் கொண்டமகுத்துவம் கட்டுரையாக விளங்கிடுமே. 21 ஜென்மாந்திரப்பகை தான்விலகுங்கொடும் சேடனைப்போன்ற விடந்துலையும் கன்மமெல்லாங்கடல் தான்கடக்கும்பல காரணம்சொல்லி முடியாது. 22 வருண தீர்த்தம் மேலுலகத்தவர் போற்றுமருணையின் மேற்கெனுந்திக்கில் வளமிகுந்த பாலவருணனார் தீர்த்தமுண்டதின் பான்மையென்சொல்லுவேன் மானிடரே. 23 நல்லமனுநெரி தன்னுடனேயதில் நாளுமுழுகின பேர்களுக்கு வல்லகிரகங்க ளொன்பதுமேவருத் தாதெனவேமறை தாமரையும். 24 இன்னம்நவக்கிரக மொன்பதுவும் - தனக் கேற்றதுயர மகலவென்று பன்னிதினந்தினம் மூழ்குதென்றே - பழ மாமறைசொல்லிடும் மானிடரே. 25 வாய்வு தீர்த்தம் அங்கேயடுத்துள வாய்வுதீர்த்தமதி லன்புடன்மூழ்கிடும் பேர்களுக்கு சங்கடம்யாவுந் துலைந்துஅளவற்ற சர்வசவுக்கிய மெய்துவராம். 26 குபேர தீர்த்தம் டருதிபரவுமண் ணாமலைவடக்கு பக்கம்குபேரனார் தீர்த்தமதில் கருதிமுழுகிடும் பேரிடம்செந்திரு கன்னிக்குடியா யிருந்திடுவாள். 27 செல்வச்செருக்கு செழித்திடுமாந் - தினம் செய்யுந்தொழிலும் பலித்திடுமாம் வல்லதுணையும் அடுத்திடுமாம்கடை வானோடுகூட பலித்திடுமாம். 28 அசுவனிதேவர் தீர்த்தம் வடகிழக்கென்னுமீ சானியத்திக்கிலே வளம்பெருமஸ்வினி தீர்த்தமதில் அடுத்துநித்தமும் முழிகிடும்பேர்களி னானந்தமென்சொல்வேன் மானிடரே. 29 நீச்சசாதியோ ராயினுமன்னதி நித்தமும்சுத்தமாய் மூழ்கிவரில் யீச்சுரன்றன்கழல் பூணுவதுமன்றி யின்னகர்மன்னவ னாய்பிறப்பான். 30 அகஸ்தியர் தீர்த்தம் இகத்தில்தமிழுக் கொருகுருவாம்பதி னெண்பெயர்தங்கட்கு முன்னவராம் அகத்தியமாமுனி தீர்த்தமகிமையிங் கறையக்கேளும் புவியினரே. 31 கன்னியெனும்புரட் டாசிமாதந்தனில் காலையிலேதினம் வேலையதாய் நன்னதிசென்று முழுகிலவர்தமிழ் நாவலராவர்காண் மானிடரே. 32 வசிட்டர் தீர்த்தம் சொல்லுங்குபேரனார் தீர்த்தமருகினில் சூழும்வதிஷ்ட மகாமுனியாம் வல்லவர்தீர்த்தமொன் றுண்டதினுண்மை வளப்பமதுகேளும் மானிடரே. 33 கார்த்திருந்தற்பிசி மாதமுழுமையும் கங்குலும்காலை முழிகிவரின் சாஸ்திரம்யாவையும் பிட்சைகொடுக்கும் சமர்த்துபலிக்குமே மானிடரே. 34 பாவமுழுதுங் கடல்கடப்பதன்றி பாவலர்நாவலர் யாவருக்கும் காவலனாகும்சமர்த்து கிடைக்குமக் கங்கையின்மான்மியம் போல்மனனே. 35 சுப்பிரமணியர் தீர்த்தம் செங்கைவடிவேலர் சுப்ரமண்யரருள் செம்மைப்புனல்சிவ தீர்த்தமதில் தங்கிமுழுகு மவர்பெருமைச்சொல்லுந் தன்மையதென்வச மல்லகண்டீர். 36 வினாயகர் தீர்த்தம் தானவராதியர் போற்றும்வினாயக தற்பரமூர்த்தி புனல்மகிமை வானவருஞ்சொல்லிக் காணாதெனச்சொல்ல வற்பனான்சொல்லிடி லொப்பிடுமோ. 37 வயிரவ தீர்த்தம் சைவமறைக்கொரு காவலராம்சிவ சங்கரனார்திருப் பாலகராம் வைரவமூர்த்தியின் தீர்த்தமகிமையை வையகத்தோர்சொல்வ தல்லகண்டீர். 38 சந்திரசூரிய தேவர் தீர்த்தம் சந்திரசூரிய ரஷ்டவசுக்களுஞ் சத்தகன்னிமுதல் மற்றவரும் சிந்தைகளித்து முழுகிய தீர்த்தங்கள் செப்பவனேகமுண் டப்புறமும். 39 திரு நதி ஒப்பிடக்கூடா வருணைசிவகிரி யோங்கும்வடக்கு திசைதனிலே செப்பவடங்கா திருநதியென்றொரு செல்வநதிகண்டீர் மானிடரே. 40 புண்ணிய நதி அண்ணலண்ணாமலை மேற்குதிசைதனில் அண்டர்களின்னமும் மூழ்கிவரும் புண்ணியமாநதி தன்பெருமைவிள்ளப் புத்தகமாதுக் கதிசயமாம். 41 சேயார் நதி விண்டநதிக்கு வடதிசைதன்னிலே விண்டுவயன்றினம் மூழ்கிவரும் பண்டுசேயாரருள் பான்மைவிளங்கிட பாரதியாளும் மயங்குவளாம். 42 வானாட்டுக்கிடர் செய்தவசுரரை வாரிசுவரிட வேல்விடுத்த சேனாபதிசிவ சுப்பிரமண்ணியர் செய்யகூர்வேல்விட் டழைத்ததுவாம். 43 பாலசுப்ரமண்யர் வேல்சுவரியிந்த பாருக்குதவிய மாநதியை சீலமுடன்சே யாரெனப்போற்றியே சித்தர்கள்சுத்தித் தவமிருப்பார். 44 சிவகெங்கை ஈசனார்சன்னதி தன்னிற்சிவகெங்கை யென்றொருதெய்வத் திருக்குளமாம் மாசிமாதந்தனில் மூழ்குமடியவர் மாதவராகப் பிறப்பனராம். 45 சிந்தையிலன்னதி யெண்ணிடினுஞ்ஸ்தானம் செய்தநற்புண்ணியங் கிட்டுமென்று அந்தணர்விஞ்சயர் மாமறையுமிந்த அண்ணமெல்லாஞ்சொல்லும் மானிடரே. 46 சக்கரை தீர்த்தம் படியோரடியா யளந்தமகாவிஷ்ணு பத்துபிறப்பின் வராகமதில் முடிவணங்கியிந்த சக்கரைபொய்கையில் மூழ்கிவெகுவரம் பெற்றனராம். 47 பிரம தீர்த்தம் சர்க்கரைப்பொய்கையின் தென்கிழக்கருகே சார்ந்தவடபா லொருதிசையில் மிக்கபிரமனா ருண்டுப்ண்ணதீர்த்த மேன்மையென்சொல்லுவேன் மானிடரே. 48 இன்னமனேகமாந் தீர்த்தவிசேடங்க ளெண்ணியளவிட நம்மளவோ சொன்னச்சிவகிரி கண்டவருமினி தொல்லைப்பிறவி யெடுப்பதுண்டோ. 49 பச்சைநிறத்தா ளடிபோற்றி - யொரு பாகமருணேசன் றாள்போற்றி இச்செகமன்னன் வல்லாளநருங்குண வியற்பைச்சொல்லுவேன் மானிடரே. 50 திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி முற்றும் |