தினசரி தியானம்

ஓயாத பாடம்

     உன்னை அடைதற்கான பாடத்தை ஈசா, நீ ஓயாது புகட்டிக்கொண்டே இருக்கிறாய்.

     மனிதன் ஆனந்தத்தை நாடுகிறான். ஆனால் நிலையற்ற உலகப் பொருள்களிடத்தில் அவன் அதை நாடி ஏமாற்றமடைகிறான். அடிமேல் அடியடித்து இயற்கைத் தாய் அந்த இன்பம் அழியும் பொருள்களிடத்து இல்லையென்ற பாடத்தைப் புகட்டுகிறாள். ஆனந்தத்துக்கு இருப்பிடம் இறைவன் என்பதை அறிந்துகொள்ளும்வரை அப்பாடம் நடக்கிறது.

ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்தவெள்ளம்
பாயாதோ ஐயா பகராய் பராபரமே.

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.