உமாபதி சிவாசாரியார் அருளிய வினா வெண்பா இது பதின்மூன்று நேரிசை வெண்பாக்களைக் கொண்ட மிகச் சிறிய நூலாகும். இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கிக் கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன. பாடல்கள் இறைவனையும், ஆன்ம சொரூபத்தைப் பற்றியும், தனக்குள் இறைசக்தி எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி நடத்துகின்றது எனபன பற்றியும் தனது ஆசிரியரிடம் கேட்பனவாக அமைந்துள்ளன. பாடல்கள் 11ம் 13ம் மட்டுமே கேள்விகள் இல்லாமல் தமது கருத்தினை விளக்குவனவாக அமைந்திருக்கின்றன. ஜீவன், முக்தி அடைவதற்கான தன்மைகளை விளக்குவதோடு எத்தன்மையுடையோர் வீடு பேற்றினை அடைய முடியும் என்பதையும் விளக்குகின்றன இப்பாடல்கள். இறைவன் அருளைப் பெற்று நித்திய இன்பத்தைப் பெறுவதற்கான வழிகளை இப்பாடல்கள் விளக்குவன என்கின்றார் ஆசிரியர். முக்தியாகிய நித்திய இன்பத்தை பெறுகின்றவர், 'காண்பானாகிய' தான் எனும் ஆன்மா, 'காட்டுவான்' ஆகிய இறைவன், 'காணப்படும் பொருள்' ஆகிய மூன்று தத்துவங்களிலிருந்து விலகி பரம்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பர். இதுவே வீடுபேறு என்கின்றது நூல்.
கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா நின்றவா றெவ்வாறு நீ. 1 இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி மருளி நிலையருளு மானும் - கருவியிவை நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா வீங்குனரு ளாலென் பெற. 2 புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள் ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா ஞானமலை யாவாய் நவில். 3 கனவு கனவென்று காண்பரிதாங் காணி னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள் தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா யானவத்தை காணுமா றென். 4 அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின் குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள் தாமா வறியா தடமருதைச் சம்பந்தா யாமா ரறிவா ரினி. 5 சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின் மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா வென்கொண்டு காண்பேனி யான். 6 உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண் தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா யானறிவ தெவ்வா றினி. 7 அருவே லுருவன் றுருவே லருவன் றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற் காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல் பூணுமிறைக் கென்னாம் புகல். 8 இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார் ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா வன்றாகி லாமா றருள். 9 ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார் தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி யோங்கியவா றெவ்வா றுரை. 10 காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை காண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன் வாட்டுநெறி வாரா தவர். 11 ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும் என்று மிடையி லிடமில்லை - யொன்றித் தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து பிரியாவா றெவ்வாறு பேசு. 12 அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப் பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன் கனாவின்பா லெய்துவிக்குங் காண். 13 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில் மொழிபெயர்ப்பாளர்: சித்தார்த்தன் சுந்தரம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 448 எடை: 500 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-83067-18-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை `தி டிப்பிங் பாயிண்ட்’ புத்தகத்தில் வழியாக மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போது `ப்ளிங்க்’ புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் உத்திகளைக் கற்றுத்தருகிறார். ஒரு தம்பதியை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து, அவர்கள் பேசிக்கொள்வதை உள்வாங்கி, அவற்றின் வழியாக அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடிந்துவிடுமா? என்று கணித்துவிட முடியுமா? உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அவர் குறித்த ஒரு துல்லியமான நிலைப்பாட்டை உங்களால் எடுத்துவிட முடியுமா? உங்களுக்கு முற்றிலும் புதியதொரு விஷயத்தைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்த தீர்மானமான முடிவுக்கு உங்களால் வந்துவிடமுடியுமா? மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் முடியும் என்பதுதான் உங்கள் பதில் என்று வைத்துக் கொள்வோம். எனில், உங்கள் கணிப்பு எல்லா சமயங்களிலும் சரியாக இருக்குமா? எப்போது சரியாக இருக்கும்? அல்லது எப்போது தவறாகப் போகக்கூடும்…? மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ”மிஸ்டர் க்ளாட்வெல் வரம் பெற்ற ஒரு கதை சொல்லி, எங்கே சென்றாலும் நினைவில் நிற்கக்கூடிய பாத்திரங்களையும், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் கண்டறியக் கூ டிய திறமையுள்ளவர்” – ஜார்ஜ் ஆண்டர்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்: நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்” – டேவிட் புரூக்ஸ், நியூயார்க் டைம்ஸ் புக் ரெவியூ நேரடியாக வாங்க : +91-94440-86888
|