மயில் விருத்தம் - Mayil Virutham - முருக பக்தி நூல்கள் - Muruga Bakthi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


அருணகிரிநாதர்

அருளிய

மயில் விருத்தம்

     மயில் விருத்தம் என்னும் நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. சந்தப்பாக்களால் ஆன நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு ஆகும். இந்த நூலில் விநாயகர் காப்புச் செய்யுளையும் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன. முருகப் பெருமானின் மயில் ஊர்தி இந்த நூலில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

காப்பு : சந்தன பாளித

ராகம் : நாட்டை
தாளம்: ஆதி

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்
சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்

கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்

கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்

தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்மமுகச்
சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

மயில் விருத்தம் - 1 : சந்தான புஷ்ப

ராகம் : ஹம்சத்வனி
தாளம்: கண்டசாபு

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
சரணயுக ளமிர்தப்ரபா

சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.

மயில் விருத்தம் - 2 : சக்ர ப்ரசண்டகிரி

ராகம் : மோகனம்
தாளம்: கண்ட சாபு

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் ரவுஞ்ச சயிலந்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்

பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
கந்தச்சுவாமி தணிகைக்

கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே.

மயில் விருத்தம் - 3 : ஆதார பாதாளம்

ராகம் : சாரங்கா
தாளம்: கண்டசாபு

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
தண்டமுக டதுபெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
கவுட்கிரி சரம்பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
மிக்கப் ரியப்படவிடா

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா

மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.

மயில் விருத்தம் - 4 : யுக கோடி

ராகம் : மனோலயம்
தாளம்: ஆதி

யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
உதித்ததென் றயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்

வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்

முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
மூரிக் கலாப மயிலே.

மயில் விருத்தம் - 5 : சோதியிம வேதண்ட

ராகம் : பாகேஸ்வரி
தாளம்: கண்டசாபு

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
நயதுல்ய சோம வதன

துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
யாவுங் கொடுஞ்சி றகினால்

அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே.

மயில் விருத்தம் - 6 : சங்கார காலம்

ராகம் : சிந்துபைரவி
தாளம்: கண்டசாபு

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்

சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்

ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்

தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்

கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்

கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.

மயில் விருத்தம் - 7: தீரப் பயோததி

ராகம் : பீம்பளாஸ்
தாளம்: கண்டசாபு

தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத் தேநடுங்கப்

படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சைப்ர வாள மயிலாம்

ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
அமிர்தகல சக்கொங் கையாள்

ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
மாநந்த வல்லி சிறுவன்

கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
குருதரு திருத்தணி கைவேள்

கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.

மயில் விருத்தம் - 8 : செக்கர் அளகேச

ராகம் : மாண்டு
தாளம் : கண்டசாபு

செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி யமிர்தந்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
சங்கார கோர நயனத்

தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
சண்டப்பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
விருத்தன் திருத்த ணிகைவாழ்

வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமிவா கனமா னதோர்

துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

மயில் விருத்தம் - 9 : சிகர தமனிய

ராகம் : துர்கா
தாளம்: கண்டசாபு

சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்

தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
திங்கள்சங் கெனவும்ப்ரபா

நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்றமா முகில் என்னவே

நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்

அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே

அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே

மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்

வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
வையாளி யேறு மயிலே.

மயில் விருத்தம் - 10 : நிராசத விராசத

ராகம் : மத்யமாவதி
தாளம்: கண்டசாபு

நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா

னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்

புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகும் அயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.

மயில் விருத்தம் - 11 : எந்நாளும் ஒருசுனையில்

ராகம் : மத்யமாவதி
தாளம்: கண்டசாபு

எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
திலங்கிய திருத்த ணிகைவாழ்

எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
நம்பிரா னான மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்தஅதி மதுர சித்ரப்

பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணிதழு வப்பெ றுவரால்

மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
அமுதா சனம்பெ றுவர்மேல்

ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெ றுவரே.

மயில் விருத்தம் முற்றிற்று



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247