உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார் அருளிய நல்லை வெண்பா ஈழ மண்டலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியத் தலங்களுள் ஒன்றாகிய நல்லூர் என்னும் ஊரில் எழுந்தருளி இருக்கும் முருகக்கடவுள் மீது வெண்பா யாப்பினால் இயன்றமையால் இந்நூல் நல்லை வெண்பா எனப்பட்டது. இந்நூலில் காப்பும் கடையும் சேர்த்து நூற்றிரண்டு செய்யுட்கள் உள்ளன. காப்பு கந்தவேள் வேன்முருகன் காங்கேயன் காதலித்து வந்த நல்லூர் வெண்பா வகுப்பதற்குச் - சந்த வனகவள வாரணமுன் னாங்குடிலை மேவுங் கனகவள வாரணமே காப்பு. நூல் பூமாது பூவினுளப் பொன்மலரென் றெண்ணிநித நாமா துடன்வாழு நல்லூரே - தேமாது பாலனய னத்தன் பரிந்தறியா நின்றவரன் பாலனய னத்தன் பதி. 1 பொன்னுலக மன்ன புகழீழ மண்டலஞ் சேர் நன்னகர நாகரிக நல்லூரே - முன்னிலகுங் காற்படையான் பூத கணப்படையா னென்னையினி மேற்படையான் மேவும் பதி. 2 சீர்விளங்கு மெப்பதிக்குஞ் செப்புகின்ற சொற்பெயரே யூர்விளங்கு நாமமா நல்லூரே - யூர்விளங்கு நன்கதிரை நாகத்தா னண்ணலரென் றஞ்சுவிக்குந் தென்கதிரை நாகத்தான் சேர்வு. 3 போற்றுமடி யார்பிறவிப் புன்மையிரு ணீக்குதலா னாற்றிசையும் வந்திறைஞ்சு நல்லூரே - யேற்ற மருவலரை நேர்முடித்தான் வானவர்க்காய் நீப மருவலரை நேர்முடித்தான் வாழ்வு. 4 ஆம்பன் முகவோடை யார்ந்தங் குசந்தழுவி யோம்பொருளா மைங்கரனேர் நல்லூரே - பாம்பஞ்ச வாடு மயிலா னமருலகு வாழவம ராடு மயிலா னகம். 5 கண்முளரி சங்கங் கவின்றுநா கம்பொருந்திப் பெண்ணிடத்தன் போலும் பெருநல்லை - விண்ணிறமா ரங்கத் திருந்தா ரமரழித்தா ரன்றுதமிழ்ச் சங்கத் திருந்தார் தலம். 6 பொன்னங்கலையார் விலோதனத்தான் மாதிரம் போய்த் துன்னியசீ ராலுமை நேர் தூநல்லை - முன்னயனைத் தாரகங்க டாவினான் றாபரக்கட் பீலியைச்சூர் போரகங்க டாவினான் பூ. 7 சசிதவள வானையும் தாமனையென் றெய்த விசைகடவுள் யானையன்ன நல்லை - நிசிசரர்கள் பஞ்சர யுதவகன்போற் பற்றியுண்க வென்று தொட்ட பஞ்சா யுதன்றன் பதி. 8 மாகுலவர் நம்பியுள மாதருடன் போற்றுதலாற் கோகுலமா வல்லிநிகர் நல்லையே - கோகனக வையற் கறைந்தா னருமறையினுட்பொருளை யையற் கறைந்தா னகம். 9 தும்பி மருப்பொசித்துச் சூழ்ந்தவன மாலையினாற் கம்பமருங் கையினனேர் நல்லையே - யும்பருறை மாகனக வில்லார் மகனா ரடியருளக் கோகனக வில்லார் குலம். 10 எண்ணம் புயத்தா லிசையுங்கா யத்திரியார் நண்ணுதலால் வேதனா நல்லையே - விண்ணுலவுங் கங்கை வயிற்றுதித்தார் காதலுளார் போற்குறவர் மங்கை வயிற்றுதித்தார் வைப்பு. 11 மெய்ப்புலவ ருள்ளுறலான் மேகமதி லூர்தலா லொப்புவணை நாயகனா நல்லூரே - யப்புருவ நஞ்சார் கணியானா னன்கா னவர்முன்பு நஞ்சார் கணியானா னாடு. 12 நத்தமூ ருங்கயத்தா னன்கிளைகொள் பாடலத்தாற் சித்தசவேள் போலுந் திருநல்லை - முத்தின் றிருத்தணிகை மாமலையுந் திண்கோட்டிற் காட்டுந் திருத்தணிகை மாமலையான் சேர்வு. 13 தாவார் கலியடக்கு மத்தவளந் தாங்குதலா னாவார் தமிழ்முனிநேர் நல்லூரே - பூவாரும் வாளங் கெடுத்தார்ப்பில் வந்த தனிமாயா வாளங் கெடுத்தார் வழி. 14 பூமேல்வாழ்ந் தீகை யுடையார் மனைப்பொலிவான் மாமாது போல வளர்நல்லை - மாமணிகொ ளாறா னனத்தா னருட்குரவ னம்புயநே ராறா னனத்தா னகம். 15 சீரயனால் வாயிசைந்து செய்ய கலைமருவிப் பாரதியை மானும் பதிநல்லை - நாரதன்செய் யாகத் துவந்தா ரெதிர்வருமை யாரொருவி யாகத் துவந்தா ரிடம். 16 காளகண்ட னன்கிசைமெய்ப் பூவையரி கண்ணுறலால் வாள்வயங்கொ ளையனா மாநல்லை - நீளசுர மாநாக மாளவைத்தார் வைவேல் பணித்தரியூர் மாநாக மாளவைத்தார் வாழ்வு. 17 மற்குரிய தோளரசர் மாமுடியுங் கையகமும் பொற்கவிகை காட்டும் புகழ்நல்லை - விற்குலவு நாகங் கலந்தா ரெனநயந்தார் சேயிருவர் பாகங் கலந்தார் பதி. 18 பொன்னனையார் சிற்றிடையும் பூசுரர்கள் சொற்கிடையு நன்னூல் கலைவிளங்கு நல்லூரே - முன்னிளைஞ ரேற்றமருள் வீட்டினா னீர்வேலா னன்பருக்கே யேற்றமருள் வீட்டினா னில். 19 அரும்புமுலை யார்வாணி யைம்பா லுடனே கரும்பிரசங் காட்டுங்கார் நல்லை - பெரும்போர் மலையுருவ வேறொட்டார் வாழ்த்தினரை மாய மலையுருவ வேறொட்டார் வாழ்வு. 20 கண்ணீல வாளிக் கரும்புருவ வில்லினல்லா ரெண்ணார் மதனோ டிகனல்லை - விண்ணா கருவா வினன்குடிஞை காலுலவும் பண்ணைத் திருவா வினன்குடியான் சேர்வு. 21 கற்பகஞ் சேர் காமக் கொடியார்பண் பாலீழ நற்பதியான் மேலுலகா நல்லூரே - கற்பமுறுங் காலங் கடந்தான் கமலா சனனெனவே ஞாலங் கடந்தா னகர். 22 தெங்குயிலா னண்ணிச் சிறுமியர்மா லைக்குயிலாற் பூங்குயில்க ளேங்கும் பொழினல்லை - யோங்கும் பரங்கிரியார் நள்ளாரிற் பாறா தருளும் பரங்கிரியார் நள்ளார் பதி. 23 மொய்ம்மணிமேன் மாளிகையின் மின்னார் முகமதியை மெய்யிற் சகோரம் விழைநல்லை - துய்ய திருவே ரகம்பதியான் சீரடியார் தம்மைக் கருவே ரகம்பதியான் கால். 24 சுவாசகமுந் நூலோர் சுருதியிசை தேர்ந்து சுவாசகமுஞ் சொல்லுசீர் நல்லூர் - தவாத பரதத்து வத்தன் பரையாள் குடையாம் பரதத்து வத்தன் பதி. 25 தேக்கும் புலவருடன் சீரகத்தார் மார்பினருந் தூக்கின் பொருள் பகருந் தூநல்லை - காக்குமவன் கந்தப் பொகுட்டான் கரியவனுங் கைதொழுசீர்க் கந்தப் பொகுட்டான் களம். 26 வேதவொலி வேள்வியொலி மிக்க விழாவொலியா லோதவொலி நாணுமுயர் நல்லை - காதரவின் மாற்கிழவ னாகி வரைக்குறவர் முன்வள்ளி பாற்கிழவ னானான் பதி. 27 அத்திபல வாலரசு நாக மிசையுறலா லித்தரணி போலு மெழினல்லை - தத்த னனந்தனந்தி மெய்யிளைஞர்க் கன்றருள்வா னவ்வி யனந்தனந்தி மெய்யா னகம். 28 வச்சிரனல் லில்லான் மகிழரம்பை யாரிசைவா லச்சுந் தரிநே ரணிநல்லை - மெய்ச்சிவ நூன் மாமலை யத்தவற்கே வாய்மலர்ந்தான் மன்னுதுடி நாமலை யத்தவனல் லூர். 29 கந்துகமுந் தானைவேற் காளையருங் கன்னியருங் கந்துகமுந் திக்களிகூர் நல்லூரே - சந்திரமா மாவைப் பிழந்தார் மகிழ்பூப்ப வீரையிலோர் மாவைப் பிழந்தார் வழி. 30 தூவிமயின் மீதாகச் சுந்தரநல் லூரிறைவன் சேவலங்கை யான்பவனி சேர்ந்ததுதான் - தீவகம்போ லக்குருகு முன்னா வவர்க்குருகு மாயிழையார் கைக்குருகு கொள்ளவே காண். 31 சந்தமணி சீர்பொருள்கள் சார்ந்தகர முன்னதாச் செந்தமிழே போலுந் திருநல்லை - செந்தேனு மாவுங் கனியுமென்றார் வல்லிசெவ்வாய்த் தேனுக்கு நாவுங் கனியுமென்றார் நாடு. 32 பாகனசொல் லார்நகையும் பன்னு சிவநூலு மாகதியைக் காட்டு மணிநல்லை - நாகவுரி போர்க்குமரன் சத்திதரப் போந்தசுரர் மாளவடும் போர்க்குமரன் சத்திதரன் பூ. 33 கண்டைமா வேயன்றிக் கற்றவரு மற்றவருந் தண்டம் பொருந்தாத் தனிநல்லை - விண்டுதொறு மாடும் பதத்தினா னண்டர்களு நான்மறையுந் தேடும் பதத்தினான் சேர்வு. 34 நீல னிலவார னீள்கதிர்பொன் வெள்ளிபச்சை சால்பவனத் தால்வான் றகுநல்லை - யால்வளருந் தாமோதரன் மருகன் றண்ணகையால் விண்ணமரர் தாமோ தரன்மருகன் சார்பு. 35 புலிசேர்ந் துவாக்கள் பொலியப் பிணாக்க ளிலகுகள பத்தொடிசை நல்லூர் - புலவோர் பொருந்தாரை வேலையிடைப்பொன் றுவிக்கும் சோதிப் பொருந்தாரை வேலான் புரம். 36 சங்கமுடன் றாமரைநற் செந்தாது தானுறலாற் பிங்கலனூர் போலும் பெருநல்லை - பொங்கரியின் மாது வசத்தினான் மானிடனு மாகியோர் மாது வசத்தினான் வாழ்வு. 37 சிலம்புவளை யார்பதம்போற் செவ்விப் பறம்புஞ் சிலம்புபுனை செய்யதிரு நல்லூர் - வலஞ்சேர் சதகோடி யன்னான்கைத் தாக்குமுக்க ணான்பொன் சதகோடி யன்னான் றலம். 38 தாரா பதந்தழுவுந் தண்பூகத் தாறருணன் றேர்மேற் புனைமணியாஞ் சீர்நல்லூர் - சீர்மேவுந் தூக்குக் குடத்தான் சுதனும் தொழுந்தோகைக் கூக்குக் குடத்தான் குலம். 39 ஓங்கு வளைக்குழையா ரொண்கண்ணுஞ் செங்கரமும் தேங்குவளை காட்டுந் திருநல்லூர் - பூங்குறிஞ்சிக் கார்த்திகையா ரும்பல் கனங்கிரியான் காயமுலாங் கார்த்திகையா ரும்பல் களம். 40 ஆசினிவே ணிப்பொலிவா லாரமணி கன்னிகையார் தேசதனாற் காசிநிகர் தென்னல்லை - வாசவன்மு னண்டரண்ட ராயநிலை யட்டருளி னானகில வண்டரண்ட ராய னகம். 41 செல்வமலி நல்லூரே செஞ்சிலைக்கை வெஞ்சூரன் றொல்வலியன் றன்மாயச் சூழ்வினாற் - பல்விதமரம் புல்லுருவங் காட்டினா னென்பதெல்லாம் போக்கியோர் நல்லுருவங் காட்டினா னாடு. 42 இரவலராய் வாய்மலர்வ தீங்குவளை முன்னா வரவலரே வாய்ந்தவெழி னல்லை - திரமா முரவா குவையுய்த்தான் பின்னவனொற் றோதி வரவா குவையுய்த்தான் வைப்பு. 43 வாரணியுங் கொம்மையா ரோதிமன்ன ரம்புயம்போற் றாரணியைத் தாங்குந் தனிநல்லை - நாரணிதன் செங்கைக் குமாரன் சிறுகுடியில் வாழ்ந்தமா னங்கைக் குமார னகர். 44 வண்டேறு கையார் மதனனையார் மார்பினிற்கோ வண்டேறு காட்டு மணிநல்லை - வண்டேறு செச்சையங் கோடலான் சிந்தையிலு முந்துகதிச் செச்சையங் கோடலான் சேர்வு. 45 பாலனத்தை நண்பாம் பசுங்கிளிகள் மாலெனவே பாலனத்தை யாரும் பகர்நல்லை - யாலைக் கழனிவரைக் கந்தநீர் காலருவி பாயும் பழனிவரைக் கந்தன் பதி. 46 அம்பரத்தைத் தாவியருஞ் சூரனேர் சந்திசைவான் மொய்ம்பினனா மொய்பொழில்சூழ் நல்லூரே - யும்பரிலே கோக்குஞ் சரத்தான் குடியேறத் தானவரைக் கோக்குஞ் சரத்தான் குலம். 47 நந்தா வனத்தருவி நன்மதுவா ருந்தேன்கள் மந்தாரத் தேனளவு மாநல்லை - முந்தா மடங்கலையம் பிற்செற்றான் மாறூர்ந்த வெய்ய மடங்கலையம் பிற்செற்றான் வாழ்வு. 48 காவலர்கள் வேந்து கதித்துயர்ந்த மேற்குலத்தான் மேவுங் கவுசிகநேர் மெய்ந்நல்லை - தூவரையிற் காஞ்சிமணி மாநிழலார் கன்னிவள்ளி சேர்கந்தன் காஞ்சிமணி மாநிழலான் காப்பு. 49 பண்ணை மடந்தையரும் பாணரும் பாய்பரியும் பண்ணையிசை பண்பாரு நல்லூரே - யெண்ணரிய மாமாய வீட்டினான் மாயுவுரு வாஞ்சூர மாமாய வீட்டினான் வாழ்வு. 50 போதப் பொலிவுள்ளார் முத்தீ நலம்பொருந்தி யோதக் கடல்போ லுயாநல்லை - பாதக் கனகச் சிலம்பன் கலைப்புலவன் செவ்வே ளனகச் சிலம்ப னகம். 51 ஓவர் புனையோ வியம்புதுக்க மேனிலையிற் றேவரெம ரென்றணையுஞ் சீர்நல்லை - பூவுலகங் காப்பா னளிப்பானற் கஞ்ச னெனவனைத்துங் காப்பா னளிப்பான் களம். 52 சங்கந் தரியாமா லானா ளலர்தழீஇ யங்கம்பொன் னாயு மனம்வெறுத்தா - ளெங்கும் விரும்பவனி போற்றுநல்லை வேலர் மயின்மேல் வரும்பவனி கண்டுவந்த மான். 53 பொங்கர்சூழ்ந் தங்கார் முகச்சிகரிப் பொற்பினாற் றங்கமலை போலுந் தனிநல்லை - யங்குளத்திற் கோட்டம் புரிந்தார் குறிக்கரியார் நன்குமா கோட்டம் புரிந்தார் குலம். 54 என்னீலங் கட்கிடைந்ததென்னு மின்னார் மொய்ந்நகையா லந்நீல மாங்கே யலர்நல்லை - பொன்னூர்த் திருக்குமரி ஞாங்கரான் றெவ்வொடன்பர் நெஞ்சிற் றிருக்குமரி ஞாங்கரான் சேர்வு. 55 வாவிக் கயலுகளும் வான்கவரிக் கன்றுடனே வாவிக் கயலுகளு மாநல்லை - தூவிப் பொருந்தோகை மேற்கொண்டான் பூம்புனத்தோர்பூவை பொருந்தோகை மேற்கொண்டான் பூ. 56 ஏழிசைநன் கந்தருவ மேந்திரதஞ் சேர்நலத்தாற் சூழுங் கதிர்போலுந் தூநல்லை - யேழையர்தம் பொய்க்கதிர்கா மத்தினார் புந்தியுறார் பைந்தடஞ்சூழ் செய்க்கதிர்கா மத்தினார் சேர்வு. 57 வன்ன வுவளகத்து மாழை தவழகத்து மன்னம் வழங்கு மணிநல்லை - முன்னயனை யுட்காந் தளையிட்டா ருச்சியினிற் செச்சையந்தா ருட்காந் தளையிட்டா ரூர். 58 தண்டாளி னம்புயமுந் தார்வயவ ரம்புயமும் வண்டா சனங்கொள்ளு மாநல்லை - தண்டாத வேகத் தடுத்தான் விடுமிரத ஞாலநிலை யாகத் தடுத்தா னகம். 59 கற்கடக வில்லாற் கலைவளருங் காட்சியா லற்கதிரை யொப்பாகு நல்லூரே - முற்கீரன் சொற்கா மரத்தா னணிதூய மாலையான் பொற்கா மரத்தான் புரம். 60 என்னாசை யம்பரமே லானே னினிநாண மென்னாசை யம்பரமே பாதலால் - முன்னொருநாட் டந்தார் வந்தாரார் நல்லூரார் தழைகடப்பந் தந்தார் வந்தாரார் தனி. 61 நந்திக் கிளையா னயக்குங் குழக்கன்றுந் தந்திக் கிளையாத் தனிநல்லை - வந்திக்கா யன்றா றுடையா தடைத்தான்சே யக்கரங்க ணன்றா றுடையா னகர். 62 வல்விலங்கே தன்பேர்ப் பொருள்பூண்ப வாய்மறந்துஞ் சொல்விலங்கா நல்லோர்வாழ் தூநல்லை - கல்விலங்கல் வேற்றா னையினட்டான் மேலவரைத் தான்பதியா மாற்றா னையினட்டான் வைப்பு. 63 செந்நெல்லும் வேள்வித் திறத்தினருங் கன்னலுமே கன்னனிலை காட்டுங் கவினல்லை - மன்னுசிவ னுண்மைகோ லானிறுத்தா னொட்டிவருஞ் சூர்மாயத் திண்மைகோ லானிறுத்தான் சேர்வு. 64 வாழைநலி யக்குதிக்கும் வன்கடுவன் மாறாகத் தாழையிள நீருகைக்குந் தண்ணல்லை - நாளுங் குடத்தியரை வேட்டான் கொடுத்தவிரு கொம்மைக் குடத்தியரை வேட்டான் குலம். 65 புண்டரிக னீள்போகி போற்றிப் பணிகுதலாற் புண்டரிக மாபுரநேர் நல்லையே - மண்டமரி லார்ப்பினடைத் தானவர்சே ரண்ட நெறிவாளிப் போர்ப்பி னடைத்தான் புரம். 66 பூசல் வளைக்கையார் பூங்குழலும் பொன்மலரும் கேசரநன் காருங் கிளர்நல்லை - யாசினியிற் செக்கரிந்து நேர்மலைந்தார் செல்வர் வடிவேலாற் கொக்கரிந்து நேர்மலைந்தார் கோ. 67 வான்புலவர் போல்வேளை வாழ்த்தும் புலவோருந் தானமுதங் கொள்ளத் தகுநல்லை - யூனா ருடம்பிடிக்கைச் சீரா னுறுநரையஞ் சேலென் றுடம்பிடிக்கைச் சீரா னுலகு. 68 காரணி கையினண்ணிக் காவினன்மே னாடுறலால் வாரணிமந் தாகினிநேர் மாநல்லை - நாரணன்றன் மால்வளைசேர் கண்டன் மறமழித்தான் வான்வளரும் பால்வளைசேர் கண்டன் பதி. 69 வேலிகவா மன்னவரு மெய்ம்மை யணங்கினருங் கோலி னிறைகுன்றா நல்லூரே - மாலுதவு மாதங்க மாகமுற வந்தருள்வா யைந்துகையாய் மாதங்க மாகவென்றான் வாழ்வு. 70 கம்பை யிசையொலியாற் காமாரி மேலுறலா னம்புகச்சி யொப்பாகு நல்லூரே - யம்பரகப் பாலார்ந்த வாயன்கைப் பைந்தொடித னம்பொழியும் பாலார்ந்த வாயன் பதி. 71 மும்மொழிச் சிலேடை சாரங் கனிமொழியார் கண்ணுதல்போற் றாழ்குழலுஞ் சாரங்கங் காட்டுந் தனிநல்லை - கீரங்கொள் வெள்ளத் துறையான் வியன்மருகன் மெய்யற்றா ருள்ளத் துறையானுலகு. 72 நான்மொழிச் சிலேடை வார்காட்டும் பொற்குடத்தார் வாய்நகை கைகொந்தளமுங் கார்காட்டப் பீலிமகிழ் காநல்லை - வார்கோட்டுத் தானமுறக் காதினான் றானவவே தண்டமுட னீனமுறக் காதினா னில். 73 பூம்பா சிளங்கமுகின் றண்பாளை பொன்னிரத வாம்பா டலக்குளையா மாநல்லை - தீம்பனச்சூர் பட்டிகுடித் தேவனிலை பாடழிக்கும் வைவேலோ னெட்டிகுடித் தேவ னிடம். 74 மாலவளர்வா னொச்சிசூழ் வாரிமணிக் கோட்டத்தா னாலுதிணை யும்பொருந்து நல்லூரே - நாலாகுந் தேன்சிலம்பு மட்டார் திருக்கடம்பர் சீருறைவாய் வான்சிலம்பு மட்டார் வழி. 75 வாரிக்கு நேராலை மண்டொலிபோ யெண்டிசையும் வாரிக்கு நேராய் வளர்நல்லை - யோரியினங் கந்தருவ மேவினார் காதலர்மான் கன்னிமணங் கந்தருவ மேவினார் காப்பு. 76 வாதா யனமனையார் வாண்முகத்தால் வான்மதியை வாதா யனஞ்சயங்கொண் மாநல்லை - பூதியமார் கண்டங் கரியான் வலவனய னுய்யவே கண்டங் கரியான்சேய் காப்பு. 77 கன்னிமணி வாழை கனங்குலையாற் காய்கதிரோ னுன்னியுட னட்பா முயர்நல்லை - பன்னோ ருருத்திரமா னத்துப்பா ரோங்கயிலார் காம ருருத்திரமா னத்துப்பா ரூர். 78 எண்கோட் டகத்து மெழின்மலர்ப்பூங் கோட்டகத்துந் தண்கோட் டலவன் றவழ்நல்லை - வெண்காட்டு ளாடி முருகா ரடியவர்க்குக் காட்சிதரு மாடி முருகா ரகம். 79 தானமருண் மாவுந் தரணிபரும் வானவர்போற் றானம் பொருந்துந் தனிநல்லை - தேன்வனத்தார் மன்பர சுந்தரத்தார் வள்ளிசுர வேழஞ்சேர் மன்பர சுந்தரத்தார் வாழ்வு. 80 கீதவிசை யால்வெடிபோய் நீள்கிடங்கின் மீள்வாளை சீதமுனி போலுந் திருநல்லை - யோதமர ரிட்ட விலங்கறுத்தா னெல்லரியவ் வான்வரை யிட்ட விலங்கறுத்தா னில். 81 சுருதி யிசைவிதிசேர் வாணிமினார் சூழ்வாற் பிரம பதம்போலும் பேர்நல்லை - யருளியமா தாவ மலையகத்தான் றாரகத்தான் வேங்கடமாந் தேவ மலையகத்தான் சேர்வு. 82 பணியணைநன் மாதவராற் பாரெண் பொறியான் மணிவளர்வை குந்தநேர் நல்லூர் - திணியசுர வன்பர்க் கருள்வா னிசைபுலர வான்விபுத வன்பர்க் கருள்வா னகம். 83 பாரிடத்தர் போற்றும் பதியகமாம் பண்பினாற் றாரவரை போலுந் தனிநல்லை - யாரணம்சேர் புள்ளூர்முத் தையனலப் பொற்பா னரிபரவும் புள்ளூர்முத் தையன் புரம். 84 சீரரச கேசரிமுன் னாகுந் திறலாண்மைப் பாரரசர் போற்றும் பதிநல்லை - காரிகையார் தாராதா ரக்களத்தன் றந்தமட வார்புனையுந் தாராதா ரக்களத்தன் சார்பு. 85 படைமடத்தை நீங்கினார் கற்றார்பன் னூலுங் கொடைமடத்தர் வாழ்வுகூர் நல்லூர் - விடமடைத்த கந்தரத்தர் செம்மலருட் காங்கேயர் வேலுகந்த கந்தரத்தர் செம்மல் களம். 86 ஐயமினார் சிற்றிடையே யன்றி யெவரிடத்து மையமெனார் வாழு மணிநல்லை - பையரவை வாட்டுமொக ரத்தன் மகரவரை மாத்திரைசேர் நீட்டுமொக ரத்த னிலம். 87 பொங்காழி மாலெதிரப் பூங்குழலார் பொன்னுடனே சங்காழி தாங்குந் தனிநல்லை - வெங்காளி நாடகமு னாடினார் நந்தர்மா தைப்புனமே னாடகமு னாடினார் நாடு. 88 வாரிசமி னன்னார் நகைநிலவான் மைந்தருள வாரிசங்கள் விள்ளு மணிநல்லை - யூர்க வனப்புரு வைப்பரித்தார் செச்சையர் மாவேட வனப்புரு வைப்பரித்தார் வாழ்வு. 89 சாலகத்தார் மந்தாரஞ் சாலகத்தார் மெல்லியர்க்குச் சாலகத்தா னல்குந் தனிநல்லை - மேலரண்மே லுந்துஞ் சரவணத்தா னும்பருய மகவாய் நந்துஞ் சரவணத்தா னாடு. 90 கட்டேற லாரறுகால் காவியுடன் கன்னியர்தங் கட்டேற லாவயல்சூழ் காநல்லை - கட்கமொளி வட்டங் கழுக்கடையார் நாயகவை வேலர்பொய் யுட்டங் கழுக்கடையா ரூர். 91 முத்திபதந் தங்களினேர் மூரலம்மத் தார்மயறீர் முத்திபதந் தந்தருண்முத் தையனிட - முத்தம் பலவலஞ்சூ ழில்லார் பவனம் பழனம் பலவலஞ்சூழ் நல்லைப் பதி. 92 வில்லிரவி மேலோங்கும் பொன்காப்பு வெண்காப்பால் வில்லிரவி போலும் வியனல்லை - நல்லிரவிற் கானவரை யுற்றா ரெனக்கவர்ந்த கன்னியுடன் கானவரை யுற்றார் களம். 93 அகங்காரங் கோவாதி சீர்நிலையா னென்னு மகங்காரந் தீர்த்தருளு மையன் - குகன்கோயில் பூவுலகுங் கீழ்மேல் பொருந்துலகு நாலிரண்டா மாவுலகும் வாழ்த்தியநல் லூர். 94 அன்ப ரகத்தளையு மாயர் சிறாருளையு நன்களையு முத்தங் கொளுநல்லூர் - பொன்குலவு வத்திரங்க ளைந்தான் மகனசுரர் கொண்டவிய வத்திரங்க ளைந்தான் வலம். 95 பாரியரி சந்தனங்கொள் பண்பினரா லேற்பவரும் பாரியரி சந்தனங்கொ ணல்லூரே - பாரி வருஞ்சயந்த னத்தான் மகன்றருவி னீழல் வருஞ்சயந்த னத்தான் வழி. 96 சலமிலர்கோள் வஞ்சங் கரவு தவிர்ந்தார் நலமியல்பார் வாழ்வுகூர் நல்லூர் - பொலியு மிருவாலை பாகனைய தோளினிய சொல்லா ரிருவாலை பாக னிடம். 97 சீரியபொன் மின்னுகந்த மாதனமுள் ளார்செறிவா னேருந் திருச்செந்தூர் நீணல்லை - பூருக் கனவிலஞ்சே லென்றாருங் கட்சுந் தரிசேய் கனவிலஞ்சே லென்றார் களம். 98 தவருந் தனிமா தவரும் பதுமத் தவருந் தவமகிழு நல்லூர் - தவருஞ் சலதரமு மாகநின்றார் தன்மையர்வை வேலார் சலதரமு மாகநின்றார் சார்பு. 99 தன்மங் கலமெனக்கொள் சால்பினர்மெய்ச் செல்வர்சேர் நன்மங் கலஞ்சிறந்த நல்லூரே - பொன்மலியுந் தாம மதலையார் தன்னடியா ருய்யவருள் சேம மதலையார் சேர்வு. 100 கடை சைவம் பொலிக தமிழ் தழைக தாரரசர் செவ்வியகோ லுய்கவளர் சீர்நல்லை - மெய்ம்முனிவர் நன்கவியுங் கானவரே னற்சருவும் கொள்வானென் புன்கவியுங் கொள்வான் புரம். நல்லை வெண்பா முற்றிற்று
|