அருணகிரிநாதர்

அருளிய

திருவகுப்பு

     திருவகுப்பு என்னும் நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. இது சந்தப்பாக்களால் ஆன நூல். காலம் 15ஆம் நூற்றாண்டு. ஒரே பொருளை பலவிதமாக வகுத்து, தொகுத்து சொல்லும் நூலுக்கு வகுப்பு என்று பெயர். முருகன் அருளின் சிறப்பு, அடியார் பெருமை முதலானவற்றை வகுத்துக் கூறும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகுப்பு. இந்த நூலில் 25 வகுப்புகள் உள்ளன. ஆனால் அவைகளில் 18 வகுப்புகள் தான் அருணகியாருடையது, மற்ற பாடல்கள் இடைச்செருகல் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

1. சீர்பாத வகுப்பு

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான தானதன

உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள்

உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும்

உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவன ...... சிவயோக சாதனையில்

ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியதி ...... தமதூடு நாடுவதும்

உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
முழலுவன பரசமய ...... கலையார வாரமற

உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ...... ரநுபூதி யானதுவும்

உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
வுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும்

உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
உறைவதுவு முலைவிலது ...... மடியேன் மனோரதமும்

இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
இமகிரண தருணவுடு ...... பதிசேர் சடாமவுலி

இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
இமையமயில் தழுவுமொரு ...... திருமார்பி லாடுவதும்

இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
றெரிபுகுத வுரகர்பதி ...... அபிஷேக மாயிரமும்

எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
இளையதளர் நடைபழகி ...... விளையாடல் கூருவதும்

இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட ...... தடபார மேருவுடன்

இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் ...... வலமாக வோடுவதும்

எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
யிரலைமரை யிரவுபகல் ...... இரைதேர்க டாடவியில்

எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
இனிதுபயில் சிறுமிவளர் ...... புனமீ துலாவுவதும்

முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல ...... வருகால தூதர்கெட

முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை
முடியவரு வதுமடியர் ...... பகைகோடி சாடுவதும்

மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதள ...... முழுநீல தீவரமும்

முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
முநிவர்கரு தரியதவ ...... முயல்வார் தபோபலமும்

முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக

மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும்

முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி

முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும்

மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை

வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும்

மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும்

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி

மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி

வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன்

மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே.

2. தேவேந்திர சங்க வகுப்பு

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன

தரணியி லரணிய முரணிர ணியனுடல்
தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில்
சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள்
சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை

தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள்
தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள
கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர்
எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட
விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி
யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு
கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்

கனலெரி கணபண குணமணி யணிபணி
கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி
கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு
கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்மவி தந்தவன்

அரணெடு மடமரை யடியொடு பொடிபட
அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கு மரன்குகன்

அறுமுக னொருபதொ டிருபுய னபிநவ
னழகிய குறமகள்
தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளி
றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை
அருள்பட மொழிபவர்
ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே.

3. வேல் வகுப்பு

தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தான

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்
இடுக்கண்வினை சாடும்

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கொர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனேன துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே.

4. திருவேளைக்காரன் வகுப்பு

தானதன தத்ததன தானதன தத்ததன
தானதன தத்ததன தானத் தானன

ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பத்தசன வாரக் காரனும்

ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும்

ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும்

ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும்

ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும்

ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும்

ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும்

ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும்

யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும்

யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணை யோடக் காரனும்

ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும்

ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும்

யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை
யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும்

ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்
யாகமுநி வர்க்குரிய காவற் காரனும்

ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும் ஆசைக் காரனும்

ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை
யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும்

வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்
வாவியில்உ தித்தமுக மாயக் காரனும்

வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு
மானும்அய னைக்கறுவு கோபக் காரனும்

வாழியென நித்தமற வாதுபர விற்சரண
வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும்

மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும்

வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்
வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும்

வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது
வாகைபுனை குக்குடப தாகைக் காரனும்

மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்
வானிலணு வுக்கணுவு பாயக் காரனும்

வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம
காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும்

மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை
மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும்

வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை
வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும்

வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனி வேலைக் காரனும்

மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்
வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும்

மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்
வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும்

வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி
சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும்

வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி
யாகுலம னத்தினொடு போம்விற் காரனும்

மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிரு வேளைக் காரனே.

5. பெருத்த வசன வகுப்பு

தனத்த தனதன தனத்த தனதன

அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை
யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்

அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும்
அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும்

அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும்

அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை
யடக்கி யவநெறி கடக்க விடுவதும்

எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு
எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும்

இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும்

இருக்கு முதலிய சமஸ்த கலைகளும்
இதற்கி தெதிரென இணைக்க அரியதும்

இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்

நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும்

நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்

நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு
நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும்

நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும்

உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும்

ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்

உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை

உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.

6. பூத வேதாள வகுப்பு

தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன 1

தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன 2

தத்ததன தானதன தத்தனா தத்ததன
தத்ததன தானதன தத்தனா தத்ததன 3

தந்தத் தந்தனத் தான தாந்தன
தந்தத் தந்தனத் தான தாந்தன 4

தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன 5

தானதன தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன தானதன தந்ததன 6

தனதனன தந்தனந் தந்தான தத்ததன
தனதனன தந்தனந் தந்தான தத்ததன 7

தனதனன தானதன தத்ததன தத்ததன
தனதனன தானதன தத்ததன தத்ததன 8

தனதன தத்த தனத்தன தத்த தானன
தனதன தத்த தனத்தன தத்த தானன 9

தானனா தான தனாதன தந்தன
தானனா தான தனாதன தந்தன 10

அருண கணபண புயக சுடிகையின்
அகில புவனமும் உதவு மலைமகள்

அமலை யாரியை யந்தரி சுந்தரி
யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி

அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி
யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி

அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி

அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு
சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி

ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர்
ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன்

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி

அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும்
அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன்

அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை
வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன்

ஆசிலா சார தபோதன ரின்புறும்
வாசகா தீத மனோலய பஞ்சரன்

அகரு ம்ருகமத களப பரிமள
விகட முகபட கடின புளகித

அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி
குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி

அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி
தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன்

ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில்
ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள்

அப்படி பத்தி பழுத்த மனத்தினர்
அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன்

ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும்
ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும்

அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி
அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும்

அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில்
அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும்

அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி
அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன்

ஆறுமா மாதர் பயோதர பந்தியில்
ஆரவே பாலமு தாருநெ டுந்தகை

வருண சரவண மடுவில் வருமொரு
மதலை மறைகமழ் குதலை மொழியினன்

மதுக ராரவ மந்திர சிந்துர
மணம ராத கடம்பு புனைந்தவன்

மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக
மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை

மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம்
வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன்

மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட
நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன்

மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக
மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய

மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது
பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள்

மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன்
உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன்

மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள
வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன்

மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்
ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன்

வரத விதரண விரத அநுபவ
மவுன குருபரன் நிபுண குணதரன்

வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற
வலிய பாரவி லங்கிடு புங்கவன்

மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும்
உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும்

மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய
செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன்

மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள்
சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன்

வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல
வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன்

மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய
வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன்

மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன்
வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன்

மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர்
வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு

வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர்
சூரமா சேனையை மோதுக ளந்தனில்

(சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை)

உருவம் இருளெழ எயிறு நிலவெழ
உலகு வெருவர அசைய வருவன

உடைய நாயகி கண்டும கிழ்ந்திட
நடைவி நோதவி தம்புரி பந்திய

ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக
உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன

உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும்
ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன

யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை
ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன

யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய
மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ

உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில்
உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன

உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில்
உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன

உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல்
உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன

ஓடைமால் வாரண யூகம் அடங்கலும்
ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ

உடலி னிசிசரர் மவுலி ஒலியலும்
உதடு மலைவன பதடி முலையின

உததி யேழும டங்கவு றிஞ்சியும்
உதர வாரழல் நின்றுகொ ளுந்துவ

உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும்
ஒற்றியிரு தோள்கொடுப றித்திடா தப்புவன

ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு
வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன

ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை
விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன

யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ
ஓடைமத தந்திவயி றூடினிது றங்குவன

உசிதபிசி தங்கொணர்ந் திங்கேற விற்றுமென
மதமலையெ லும்புகொண் டங்காடி கட்டுவன

உதிரநிண வாள்பெருக வொட்டுவன வெட்டுவன
உடலினடு வூடுருவ முட்டுவன தட்டுவன

ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு
ஒடியவு ழக்கிவ ழுக்கி யுருட்டி வீழ்வன

ஊசலார் வார்குழை யோலை யிடும்படி
ஓதுசா மீகர நேமி பிடுங்குவ

கரணம் இடுவன குணலை யிடுவன
கழையை நடுவன பவுரி வருவன

ககன கூடமு டைந்துவி ழும்படி
கதறி வாயனல் கண்கனல் சிந்துவ

கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித
சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக

கண்டச் சம்பதிப் பேத மாம்பல
கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி

கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண
சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன

காயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ
காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ

கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய
கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன

கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய
நடைநவிலு பாவனை யுதிக்குநட வித்தையின

கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின
கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ

காலமா றாத வராளிசி கண்டிகை
பாலசீ காமர மானவி பஞ்சிகை

கவுட பயிரவி லளிதை கயிசிகை
கவுளி மலகரி பவுளி யிசைவன

கனவ ராடிய ரும்பட மஞ்சரி
தனத னாசிவி தம்படு பஞ்சமி

கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்தடைவில்
உச்சமது சாதிகமெ டுத்துமேல் எட்டுவன

கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு
றிஞ்சிப் பண்குறித் தியாழை யேந்துவ

கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை
மத்தளி கொட்டிய முற்றும டிப்பன

காரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை
வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி

கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன
முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன

கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு
களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன

கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை
நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய

காதநூ றாயிர கோடி வளைந்தன
பூதவே தாளம் அநேகவி தங்களே.

7. பொருகளத் தலகை வகுப்பு

தனத்த தனதன தனத்த தனதன

அதிர்த்த பரிபுர பதத்தி பயிரவி
அமைத்த கரதலி ப்ரியத்தை யுடையன

அடித்த தமருக கரத்தர் பயிரவர்
நடித்த நவரச நடத்தை யறிவன

அருக்கர் பதமல வுடுக்கள் பதமள
வடுக்கு பிணமொரு குறட்டி லடைசுவ

அளக்கர் உடைபட மிகுத்த குருதியை
அடைத்து மடைபட வுடைத்து விடுவன

அரக்கர் முடிகளை யடுப்பு வகிர்வன
அவற்றின் உலையென இரத்தம் விடுவன

அடுக்கல் எனுமவர் எயிற்றை யவர்கர
அகப்பை யவைகொடு புகட்டி அடுவன

அமிழ்த்தி அடிவிழு பிணத்தின் நிணவெளி
றளற்றி னிடையடி வழுக்கி விழுவன

அடப்பை யிடவரும் அணுக்க ருடன்வரு
தடக்கை மதமலை நடத்தி வருவன

குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு
குறட்கு மிகுதசை கொடுத்து வருவன

கொழுத்த குரகத இறைச்சி வகைவகை
குவித்து முறைமுறை அவித்து நுகர்வன

குருத்து மலரினும் வெளுத்த நிணமது
கொளுத்தி அனலதில் வெதுப்பி யிடுவன

குதட்டி நெடுயன உதட்டில் இடுதசை
கொடிக்கு முதுசின நரிக்கும் உமிழ்வன

குணக்கு வளைகடல் வடக்கி யமதிசை
குடக்கு முழுவது மடக்கு வயிறின

குரக்கு மிடறின கரத்தில் எழுகிரி
குலுக்கி யடியொடு பறித்து நிமிர்வன

குதித்து முழுகியும் இரத்த நதியிடை
குடித்தும் உணர்வொடு களித்து வருவன

குறத்தி யிறைவனை நிறைத்து மலரடி
குறித்து வழிபடு குணத்தை யுடையன

துதிக்கை மலைகளை அடுக்கி அலகைகள்
துதிக்க அவைமிசை யிருக்கும் அரசின

துளக்கம் உறுசுடர் விளக்கை யனையன
சுழித்து வெருவர விழித்த விழியின

துதித்து வழிபட நடத்தல் குறையன
சுகித்து வெளிபட நகைத்து வருவன

துணித்த கரியுடல் திணித்த மிடறிடை
துவக்கி அவசமொ டுவிக்கி நிமிர்வன

தொலைத்த முடிநிரை பரப்பி வயிரவர்
சுழற்றி நடமிடு துருத்தி இடுவன

துணுக்கம் உளஅவர் துணுக்கம் இலையென
எடுத்த கழிநெடில் படித்து வருவன

சுரர்க்கு மகபதி தனக்கும் இனியொரு
துளக்கம் இலையென மகிழ்ச்சி புகல்வன

தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு
தொகுக்கு தொகுஎன நடித்து வருவன

எதிர்த்து மலைவன முடித்து வெளிமுக
டிடித்து விழும்இடி இடித்த குரலின

இரட்டை இளமதி உதித்த எனவெளி
றெயிற்றில் நிலவெழும் இருட்டு வடிவின

இயக்க முறுபல ரதத்தின் உருளைகள்
இருத்தி அணிதரு பெருத்த குழையின

இடக்கை குடமுழ வுடுக்கை துடிபறை
எடுத்து முகிலென முழக்கி வருவன

இதத்த கயிசிகம் இனித்த பயிரவி
எழுப்பி எழுவகை நிருத்தம் இடுவன

இறப்பும் வரும்எழு பிறப்பும் அறஇனி
திருத்தும் எனமயில் விருத்த மொழிவன

இடைக்க ழியில்ஒரு செருத்த ணியிலினி
திருக்கும் அறுமுகன் ஒருத்தன் இளையவன்

இலைத்து நிசிசரர் பதைத்து மடியவொர்
இமைப்பில் அமர்பொரு களத்தின் அலகையே.

8. செருக்களத் தலகை வகுப்பு

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனத்த தனதன

குதிரைத் திரள்பட் டபிணத் தையெடுத்
துதிரப் புனலிற் குளிக்கு மொருதிரள்

குருதிக் கடலைப் பெருகப் பருகிக்
குணலைத் திறனிற் களிக்கு மொருதிரள்

கொடுகொட் டிபடத் துடிகொட் டிநடத்
தடமிட் டுவளைத் திருக்கு மொருதிரள்

குடுரைப் புயமிட் டுலலைச் சிறுகக்
குலையிட் டதிரச் சிரிக்கு மொருதிரள்

சதையைச் சிலகைக் கொளமற் றதனைச்
சருவிச் சருவிப் பறிக்கு மொருதிரள்

தறுகட் சிறுகட் டவளக் கவளத்
தமரத் திமிரப் பனைக்கை மதமலை

தலையுக் குளநற் றருணக் கிரணத்
தரளத் திரளைக் குவித்த டியெனுரல்

தனிலிட் டதனைத் தகுகைத் தலமுற்
றிடுநெட் டைமருப் புலக்கை முறைமுறை

எதிரிட் டதுகுத் திமுடித் தலையொப்
பஅடுப் பெனவைத் தெலுப்பு விறகினை

எரியிட் டெரியிட் டுருவத் துடனெட்
டுலைவைத் துணவைச் சமைக்கு மொருதிரள்

இருள்செற் றதடித் தினையொத் திடுகட்
கமெடுத் தெறியத் தெறித்த தலைகளை

இதெனக் கதுனக் கதுமற் றதனுக்
கெனமொய்த் துலவிப் பொறுக்கு மொருதிரள்

அதரத் துவிரற் படவைத் துமிகுத்
தரவத் தொடுகொக் கரிக்கு மொருதிரள்

அமுதொத் தநிணத் தசைமுக் கியறத்
தவசத் துயிலிற் கிடக்கு மொருதிரள்

அடவிப் புனமுற் றகுறத் திருவுக்
கமைவுற் றமணிப் புயத்தன் அறுமுகன்

அடன்மிக் கதயித் தியர்பட் டுவிழப்
பொருதிட் டசெருக் களத்தில் அலகையே.

9. போர்க்களத் தலகை வகுப்பு

தனதன தந்தன தனதன தந்தன தத்தா தத்தன
தனதன தனந்த தாத்த தத்த தனதன

பகலிர வின்றியொர் புகல்திசை நந்திய பற்பா னுத்தகை
படமுதல் விசும்பு தூர்த்த டுக்கு பிணமலை

பவுரிவ ரும்பரி புரநரல் பங்கய வித்தா ரத்தன
பயிரவி பதங்கள் வாழ்த்தெ டுத்த பசியன

பரியகொ ழுந்தசை பயிரவர் என்றுப லிக்கா நிற்பவர்
பகரிடம் அறிந்து பாத்தி ரத்தில் இடுவன

பரவிவ ருங்குறள் பசிதணியும்படி பட்டார் கைப்படு
பரிசையின் முகந்து சூட்டி றைச்சி சொரிவன

படுகள மென்பதொர் செறுவில் விளைந்தன பற்கோ வைப்பயில்
பவுரிவி சைகொண்டு தீட்டி மெத்த அடுவன

பரியணி திண்பணை முடியம டிந்துடல் பப்பா தித்துணி
படவிழு பெருங்கை மாக்க ருக்கல் பகிர்வன

படைவிச யந்தெரி சலதிவ லம்புரி பற்றார் பட்டுள
பலபல விதங்கள் ஆர்ப்பெ டுக்கும் உதடின

பகடுபி ளந்ததன் உரிவைபு னைந்திடு குப்பா யத்தன
பதவிய ரிணஞ்செ யூட்டு டுத்த வுடையின

உகமுடி வன்றினும் வெருவவ ரும்பல உற்பா தத்தன
ஒளிமதி வகிர்ந்த கீற்றெ யிற்று நிலவின

உருவம் இருண்டன திகிரிவி லங்கலின் உட்பாய் கிற்பன
உலவிநி ணமொண்டு கூட்ட மைத்து நுகர்வன

உததியு றுஞ்சுவ வடவைநெ டுங்கனல் உட்கா கப்பெரு
குதிரபி சிதங்கள் பேர்த்தி றக்கி யிடுவன

உருமுமி டைந்தென அதிர்குர லின்றமில் ஒப்பே றிட்டுநி
ருதர்மவு லிகொண்டு கோட்டை யிட்டு மலைவன

உலகுகு லுங்கிட அரியது ணங்கையி னைச்சா திப்பன
உவணப டலங்கள் காக்கை சுற்றி வருவன

உலைதரு மென்குட ரிடைபட இந்திர னுத்யா னத்தலர்
உகிர்கொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன

உயரிப முங்குர கதகுல முங்கன பொற்றேர் வர்க்கமும்
உடைபடு கலங்கள் போற்சு ழித்து விரைபட

ஒழுகுதி ரந்தனின் முழுகியெ ழுந்தன உச்சா டத்துடன்
உடைகடல் அதிர்ந்து கூப்பி ளக்கு நடையின

செகதலம் எங்கணும் அதிரமு ழங்கிய டிப்பாய் வெற்றிய
திரள்வரை பிடுங்கி நாட்டி யொட்டு குழையின

சினமலி வெங்குறள் இனமொடு திண்டிறல் மற்போர் கற்பன
திசையள வுநின்று நீட்டி வைக்கும் அடியின

திசைகள்தொ றும்பல குறைகள் எழுந்துது டித்தா டச்சிறை
செறிகழு கரங்கில் வீற்றி ருக்கும் அரசின

திமிரபி லங்கிழி படவிசை கொண்டுகு தித்தா லிப்பன
சிகரவ டகுன்றி னூற்றி ரட்டி நெடியன

சிறியன கிண்கிணி யணிகுரு வின்சர ணத்யா னத்தின
திசைபட அகண்ட சீர்த்தி மெச்சி யிரைவன

திமிலைபெ ரும்பறை சிறுபறை நின்றதி ரச்சே வித்துயர்
சயமகள் விளங்கு வேற்க ரத்தை மொழிவன

திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண
செககண மொழிந்து கூத்த னைத்து நவில்வன

சிலைமலி திண்புய அசுரர்சி ரங்கள் அடுப்பா வைத்தவர்
செறிகுடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன

நிகரில் அறம்புரி குருகல பஞ்சவர் மெய்த்தூ துக்கொரு
நிமிடம திலன்று போய்க்க வித்த மணிமுடி

நிருபர்ப யங்கொள நெறுநெ றெனும்படி பொற்பீடத்திடை
நிலைபெற இருந்து நூற்று வர்க்கும் அவரறி

நினைவுற வன்புறும் ஒருபதி னெண்குண அக்ரோ ணிப்படை
நிகிலமு மடிந்து கூற்று வற்கு நிறைவுற

நிலமகள் வன்பொறை கடியுமு குந்தன்மு தற்சேண் முட்டவு
நெறிபட நிமிர்ந்த ஆக்கை யற்கு மருமகன்

நிமலைத்ரி யம்பகி கவுரிதி கம்பரி நிர்ப்பா வக்குண
நிருமலி யிரங்கு தாய்ப்ரி யத்தன் அறுமகன்

நிகரக னங்குல சிகரிதொ டும்பெரு வெற்பார் உற்பல
நிறையருவி கொஞ்ச ஓச்சி யத்தில் ஒளிர்சுனை

நியதியின் நன்கலர் தணிகைஎ னும்பதி நிற்பான் முற்பட
நெடுமகர சிந்து தீப்ப றக்க வெகுவித

நிபுடது ரங்கக சவிரத சங்க்ரம நிட்டூ ரக்கொலை
நிருதரை முனிந்த போர்க்க ளத்தில் அலகையே.

10. திருஞான வேழ வகுப்பு

தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன தான தானன

சடலை பட்டலை உடல் எனப்படு
தரும சித்திர கூட மானவை

தவிர நிட்கள வெளியில் நிற்பன
சமய தர்க்கவி ரோத வாதிகள்

தகர எற்றுவ புகர்ம னக்கிரி
தனைமு ருக்குவ, ஆசை ஆணவ

தளைஇ யற்கையை விடந டிப்பன
சனன முற்றிய சாத மாம்எழு;

கடல்க டப்பன, படுகொ லைச்சமர்
கடகம் அப்படி சாய மோதுவ

கருவி னைத்தரும் இருவினைத்தொடர்
கழல்ப தத்தன, யோக சாதகர்

களைப றிப்பன, கிளைஎ னப்படு
கவலை சுற்றிய காடு சாடுவ,

கருணை மெய்த்தவ திருவ ருட்கன
கவள மொக்குவ, காம ராசனை

அடல்கெ டுப்பன, அகில கற்பனை
அரண் அழிப்பன, கோப மானவை

அவிய நற்பொறை எனுந திப்பிர
ளயம் இறைப்பன, லோப மோகிதம்

அவைமு றிப்பன, மதமு ழுத்தறி
யடிப றிப்பன, ராச தாதியின்

அதிகு ணத்ரய மதில் இடிப்பன,
அளவில் தத்துவ தூளி வீசுவ;

திடமு டைச்சிறை மயில் உகைத்தெழு
சிகரி குத்திய வேலை நீள்சுனை

தினமும் உற்பல மலர்தி ருத்தணி
இறைதி ருப்புகழ் பாடு நாவலர்

திரள்ப்ரி யப்பட இனித ளிப்பன
செயலொ ழித்தநு பூதி மீமிசை

திகழும் அற்புத மவுன நிர்க்குண
சிவம யத்திரு ஞான வேழமே.

11. திருக்கையில் வழக்க வகுப்பு

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன

தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன
தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன,

தடித்தெழு குலப்புவி நடுக்குற அதிர்ப்பன
தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன,

சதுர்த்தச தலத்தையும் எடுத்தக டவுட்பணி
சகஸ்ர பணபத்தியும் ஒடுக்குற நடப்பன,

சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன,
தரத்தன, தலைச்சுர, நதிப்புனல் குளிப்பன;

அருக்கர் பதம்உட்பட மிதித்திடு பதத்தன;
அறப்படு கொலைத்தொழில் புறப்படு முகத்தன;

அரக்கர்ப டைகெட்டுமு றியப்பொரு பதத்தன;
அயற்கும் அமரர்க்கும்ஒ ருபொற்பதி யளிப்பன;

அளித்தவ முதுக்கவள மொக்குவன; முத்தெறி
அலைக்கடல் கலக்குவ; குலக்கிரி குலுக்குவ;

அடித்தெழு பொருப்பினை நெருப்பெழ விழிப்பன
அதிக்ரம கமப்ரவுட விக்ரம மதத்தன;

மருக்குலவு கற்பக வனத்தலர் பறிப்பன;
வளைத்தெழு தருக்களை மொளுக்கென முறிப்பன;

மதிப்பிள வெனச்செருகி வைத்தென மணிச்சதுர்
மருப்பின; இமைப்பற விழித்த நயனத்தன;

வளைத்த கிரியைப் பொடிபடுத்தி இபம்எட்டையு
மலைத்தவண் அடிப்பட மடப்பிடி அணைப்பன;

மழைப்புயல் கிழிப்பன புனற்பசி தணிப்பன;
மணிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன;

திருத்திய புனத்திடை வனத்தழை உடுத்தினி
திருப்பவள் விருப்புறு வரைப்புயன் வினைப்பகை

செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல்
சிவத்த கமலச் சரவணத் தறுமுகப்பொருள்

செகத்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கொரு
திருப்புதல்வன் உற்பல கிரிப்பெயர் தரித்தருள்

திருத்தணி மலைக்கிறை திருப்புகழ் படிப்பவர்
சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே.

12. வேடிச்சி காவலன் வகுப்பு

தனதனன தத்ததன தனதனன தத்ததன
தனதனன தத்ததன தானத்த தானதன

உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும்
உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும்

உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய
உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும்

உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர்
ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும்

உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம்
உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும்

உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர
னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனும்

உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும்;

உரககண சித்தகண கருடகண யக்ஷகணம்
உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும்

ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும்
உபயமுறும் அக்நிகர மீதிற்ப்ர பாகரனும்

அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும்

அவரைபொரி யெட்பயறு துவரைஅவல் சர்க்கரையொ
டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும்

அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன்
அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும்

அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில்
அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில்

அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப்பொழுதின் வாழ்வித்தவேதியனும்

அரிபிரம ருக்குமுதல் அரியபர மற்குயரும்
அருமறை முடிப்பையுப தேசித்த தேசிகனும்

அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும்
அகிலபுவ னத்தமர சேனைக்கு நாயகனும்

அநுபவனும் அற்புதனும் அநுகுணனும் அக்ஷரனும்
அருமனம் ஒழிக்கும்அநு பூதிச் சுகோதயனும்

இதமகிதம் விட்டுருகி இரவுபக லற்றஇடம்
எனதற இருக்கைபுரி யோகப் புராதனனும்

எனதுமன சிற்பரம சுகமவுன கட்கமதை
யமன்முடி துணிக்கவிதி யாவைத்த பூபதியும்

எழுமையும் எனைத்தனது கழல்பரவு பத்தனேன
இனிதுகவி யப்படிப்ர சாதித்த பாவலனும்

இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்புமென
திதயமு மணக்குமிரு பாதச் சரோருகனும்

எழுதரிய கற்பதரு நிழலில்வளர் தத்தைதழு
வியகடக வஜ்ரஅதி பாரப் புயாசலனும்

எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்
இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும்

எழுபரி ரதத்திரவி எழுநிலமொ டக்கரிகள்
இடர்பட முழக்கியெழு சேவற் பதாகையனும்

இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷ்களனும்
இளையவனும் விப்ரகுல யாகச் சபாபதியும்

மதுகையொடு சக்ரகிரி முதுகுநெளி யப்புவியை
வளையவரும் விக்ரமக லாபச் சிகாவலனும்

வலியநிக ளத்தினொடு மறுகுசிறை பட்டொழிய
வனஜமுனி யைச்சிறிது கோபித்த காவலனும்

வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன
வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும்

வரதனும் அநுக்ரகனும் நிருதர்குல நிஷ்டுரனும்
மநுபவன சித்தனும நோதுக்க பேதனனும்

வயிரிசை முழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும்
மகிழ்குரவை யுட்டிரியும் வேடிக்கை வேடுவனும்

மரகதம ணிப்பணியின் அணிதழை உடுத்துலவும்
வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும்

மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும்
மடலெழுதி நிற்குமதி மோகத் தபோதனனும்

வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின்
மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே.

13. சேவகன் வகுப்பு

தனதன தனன தனதன தனன
தனதன தனன தனத்தா தனனா

இருபிறை எயிறு நிலவெழ உடலம்
இருள்படு சொருபம் உடைக்கோ விடவே

இறுகிய கயிறு படவினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்

அருமறை முறையின் முறை முறை கருதி
அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்

அறிவொடு மதுர மொழியது குழறி
அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்

ஒருபது சிரமும் இருபது கரமும்
விழஒரு பகழி தொடுத்தோன் மருகா

உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா

மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா

வளைகடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச்சே வகனே.

14. வேல்வாங்கு வகுப்பு

தனதன தந்தன தனதன தந்தன தந்தன
தானாந்தன தானாந்தன

திடவிய நெஞ்சுடை அடியர்இ டும்பைகெ டும்படி
தீயாங்குறை போயாழ்ந்தது

செயசெய என்றிசை பரவிய எங்கள்கொ டுங்கலி
தேசாந்தர மேசாய்ந்தது

செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர்
தீமான்கதர் தாமேங்கினர்

சிகரத ரங்கித மகரநெ ருங்குபெ ருங்கடல்
தீமூண்டுதன் வாய்மாண்டது

தெரியலர் சென்றடை திசைகளில் எண்கரி சிம்பெழ
மாறாங்கிரி நூறாந்தொளை

சிகரநெ டுங்கிரி குகைகள்தி றந்துதி கந்தமும்
லோகாந்தமு நீர்தேங்கின

சிறையுள் அழுந்திய குறைகள்ஒ ழிந்துசெ யங்கொடு
தேவேந்திரர் சேணாண்டனர்

திரிபுவ னங்களும் ஒருபயம் இன்றிவ ளங்கெழு
சீர்பூண்டற நேர்பூண்டன;

விடவச னஞ்சில பறையும்வி ரிஞ்சன்வி லங்கது
கால்பூண்டுதன் மேல்தீர்ந்தனன்

விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில்
வீவான்பொழில் பூவாய்ந்தது

விழைவுத ரும்பத சசிதன்வி ளங்கிய மங்கல
நூல்வாங்குகி லாள்வாழ்ந்தனள்

வெருவி ஒதுங்கிமை யவரெவ ருஞ்சிறை வென்றித
மேலாம்படி யேமீண்டனர்

விழியொர்இ ரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன்
மேல்வாங்கிளை கால்சாய்ந்தது

வெளிமுழு துந்திசை முழுதும்வி ழுங்கி எழுங்கன
சூர்மாண்டற வேர்மாய்ந்தது

விபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு
மேடாம்படி பாடோங்கின

மிடைகுறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்தென
ஊனார்ந்தகல் வானார்ந்தன;

அடவிப டுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி
யாமாங்கதர் வாமாங்கனை

அநுபவை அம்பிகை அநுதிதை அம்பைத்ரி யம்பகி
ஆசாம்பரை பாசாங்குசை

அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி
காலாந்தகி மேலாந்திரு

அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி
மானாங்கணி ஞானாங்குரை

அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல்
வாய்கான்றிடு நாகாங்கதை

அபயவ ரம்புரி உபயக ரந்திகழ் அந்தணி
யாமாங்கறி தாய்மாண்பினள்

அதுலைத ருந்திரு மதலையி பங்கொள்ப யங்கொடு
பாய்மாண்கலை வாய்மாண்புன

அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர
ராசாங்கம தாராய்ந்தவன்;

வடவையி டும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய
மாடாம்புடை நாடாண்டகை

வசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட
வேபாண்டவர் தேரூர்ந்தவன்

வளவில்வ ளர்ந்திடை மகளிர்கு விந்துத டங்குடை
வார்பூந்துகில் வார்பூம்பூயல்

வரைநிரை கன்றின முழுதும யங்கிய பண்கெழு
வேயேந்திய வாயான்கழல்

மருதிடை சென்றுயர் சகடுத டிந்தடர் வெம்புளை
வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன்

மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக
மாமான்பகை கோமான்றிரு

மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி
வாகாம்பரை தோய்காங்கேயன்

மகபதி தன்பதி பகைகிழி யும்படி அன்றடல்
வாளோங்கிய வேல்வாங்கவே.

15. புய வகுப்பு

தனதன தனன தனதன தனன தனாதன
தான தான தனதன தத்தன
தந்த தந்த தந்த தானத் தனந்தன

வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன

மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ
காக நாடி வகைவகை கட்டும
ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன

வருணித கிரண வருணித வெகுதரு ணாதப
சோதி யாடை வடிவுபெ றப்புனை
திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன

வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக
லாப கோப மயில்வத னத்துவி
ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன

வரைபக நிருதர் முடிபக மகர மகோததி
தீயின் வாயின் மறுகவி திர்த்தயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன

மதியென உதய ரவியென வளைபடு தோல்வி
சால நீல மலிபரி சைப்படை
கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின

மனகுண சலன மலினமில் தூியஅ தீதசு
காநு பூதி மவுனநி ரக்ஷர
மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன

வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச
மூக ராக மதுபம்வி ழச்சிறு
சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன

மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர
சேனை தேடி விததிபெ றச்சில
கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன

வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி
சாசு போத மிகுதொனி பற்றிமு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன

விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும்
லீலை யாக விமலச லத்தினை
விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன

விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர்கு லக்குலி
சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன

விகசித தமர பரிபுர முளரி தொழா அபி
ராம வேடர் விமலதி னைப்புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன

விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ரஅ
லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின

விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு
கோட ளாவி ம்ருகமத கற்புர
குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன

வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர்
தூது போக விடுமது பக்ஷண
வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன

இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித
னாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன

இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு
காது தோயும் இலகும ணிக்கன
விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன

எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின

எழுதரும் அழகு நிறமலி திறல்இசை யாகஉ
தார தீரம் என உரை பெற்றஅ
டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின

இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய
மேரு சாதி இனமென ஒத்துல
கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன

இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி
பார கோர இவுளிமு கத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன

இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை
மார்பு பீறி அவனுதி ரப்புனல்
செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன

எவையெவை கருதில் அவையவை தருகொடை
யால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன

அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை யுடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன

அகிலமும் எனது செயலல திலையென யானென
வீறு கூறி அறவுமி குத்தெழும்
ஐம்பு லன்தி யங்கி வீழத் திமிர்ந்தன

அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்கபி
லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன

அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன்
வானை ஆள அரசுகொ டுத்தப
யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன

அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ்
கோடல் பாடல் அளிமுரல் செச்சைய
லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன

அரியதொர் தமிழ்கொ டுரிமையொ டடிதொழு தேகவி
மாலை யாக அடிமைதொ டுத்திடு
புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன

அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை யிந்த்ர நீலச் சிலம்பினன்

அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அ
நேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ச லெ ன்ப்ர சண்ட வாகைப் புயங்களே.

16. சித்து வகுப்பு

தனன தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான தனன தந்த தான 1

தனன தனதான தானான தந்த
தனன தனதான தானான தந்த 2

தான தானன தனதன தந்தன
தான தானன தனதன தந்தன 3

தனன தானன தனதன தானன
தனன தானன தனதன தானன 4

தனதன தந்தன தந்தன தானன
தனதன தந்தன தந்தன தானன 5

தானன தனதன தானந் தந்தன
தானன தனதன தானந் தந்தன 6

தனதன தனதன தனன தத்தன
தனதன தனதன தனன தத்தன 7

தத்த தந்த தான தத்தாதன
தத்த தந்த தான தத்தாதன 8

தனன தத்தான தனதன தந்தன
தனன தத்தான தனதன தந்தன 9

தானதன தான தானாந்தன
தானதன தான தானாந்தன 10

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன 11

தான தாத்தன தத்தன தத்தன
தான தாத்தன தத்தன தத்தன 12

அடல்பு னைந்த வேலு மயிலும் என்றும் வாழி
அரிய தொன்று கூற அருகி ருந்து கேண்மின்

அளவில் பலகாய மோடாடி யண்டர்
அறிய விளையாட வர்முலி ஒன்றில்

ஆசை வேறிலை அறுமுக வன்திரு
ஆணை மேருவை அடிதலை கண்டனம்

அகில லோகமும் அடைவடை வேமுதல்
அருளி னோம்அது சிவனறி யாதல

அமையும் எனும்படி நின்ற மநோரதம்
அவைமுழு துந்தரு வம்பத றாதுகொள்

ஆதியு முடிவுமி லாநந் தந்தரும்
ஆறிரு கரதல நாதன் தந்தவை

(பச்சிலை மூலிகைகள், மருந்து வகைகள்)

அவுஷதம் உளசில கிலுகி லுப்பைகள்
அரசிலை நறுவிலி கரிய கக்கரி

அத்தி செம்பி ராகை முட்காவளை
துத்தி சங்கம் ஓரி தழ்த்தாமரை

அவுரி கற்றாழை யொடுவைகு றிஞ்சிலி
சிவிறி கத்தாரி பொடுதலை சண்பகம்

ஆரைகொடு வேலி வேல்காஞ்சிரம்
வீரையிரு வேலி பேரீ ந்திலை

அமுக்குர வெருக்கிலை முருக்கிதழ் செருப்படை
அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை

ஆலம் ஆத்தி கடுக்கை கொடிக்கழல்
கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கணை

அகில்ப ரம்பை காரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம்

அறுகு தழுதாழை மாபாலை புன்கு
புரசு பழுபாகல் பூலா அழிஞ்சில்

ஆயி லாவிரை இறலி இரும்பிலி
ஆடி ஆவணி புடமிட என்றழை

அவனி பாடல மனல மகீ ருகம்
இவைச மூலமும் எழுபது சாலடை

அதிம துரந்தக ரஞ்சிறு பாலடை
பதிமுக வெந்தய மின்கய மோதகம்

ஆறிடை அபினிரி தாரங் கந்தகம்
நூறிடை திரிபலை யோரொன் றெண்பலம்

அதிவிட யமுமொழி கிருமி சத்ருவும்
அனல்முறு கலுமற முறுகு துத்தமும்

அற்பம் ஒன்று கீரை வித்தேழிடை
யத்தில் ஒன்று பாதி தக்கோலமும்

அடவி கச்சோல நிமிளை நறும்பிசின்
அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி

ஆமலகம் ஏலம் நான்மூன்றிடை
சேமசிால கூட லோகாஞ்சனம்

அரப்பொடி கடிப்பகை விடத்திர ணமப்பிர
கசத்தைசத குப்பிவிதை கொத்தமலி திப்பிலி

ஆலி கோட்டம் எலிப்பகை சச்சிலை
நீலி காய்ச்சு நிலப்பனை கற்பிசின்

மடல்சி வந்த தாழை மணவ சம்பு நீலம்
வருகு ரும்பை கோடல் துருசு சம்பி ராணி

மரிசி வசவாசி காகீச மஞ்சள்
மகிழ விதைமேதை மாமேதை குன்றி

வாரி வாய்நுரை சயில சலம்புரி
பூரி வாதுமை சணவுபெ ருங்குமிழ்

வடுவில் சீரக பலமயி ரோசனை
கடுகு ரோகணி சிவதைம னோசிலை

வகைவகை கொண்டொரு மண்டல மோரொடு
குகையினில் எண்பது செம்பினில் ஊறவை

வாதநல் வழிகள் அநேகம் பண்டையில்
வாகடம் அலகுரு நாதன் தந்தது

வழிபடும் அரியர பிரம ருட்பட
மொழிகிற வகையிது சிறிது பெற்றிலர்

மற்றும் இந்த்ர சாலம் உச்சாடனம்
முற்று மிங்ங னேத ரத்தாழ்விலை

மதலை யர்க்கீது மொழிவது பண்பல
கதவி னிற்றாழை யிடுபயம் ஒன்றிலை

வாலுழுவை யோரி காராம்பசு
வாலின்மயிர் கீரி தேவாங்கழை

மரித்தவர் சனித்தகுழி உப்புறு சலத்தினை
வடித்தினி தெடுத்தொரு குடத்தினில் நிறைத்துவை

மாறில் தோத்திர வித்தை பலித்திடின்
மாடை சேர்க்க வருத்தம் உனக்கிலை

ரசவாதி கேட்பன

மணம தின்று நாளை எனமொ ழிந்து கேளு
மனைகள் எங்கும் ஓடி இனிவி ரைந்து தேடு

வளையல் குழைபீலி காலாழி தண்டை
மணிவ யிரவீடு மேலீடு செம்பொன்

வாளி பாடக மணிபிறை சங்கிலி
பாளை சூடக மயிலம் இலம்பகம்

மவுலி நூபுர மயில்திரு வாசிகை
சவடி தோள்வளை முகவளை மேல்வளை

மரகத குண்டலம் வெண்டய மேகலை
அரசிலை கம்பி குறுங்குணி சாலகம்

வாரணி யுடைமணி ஆரங் கிங்கிணி
வாகுவ லயநெளி பீடங் கண்டிகை

மணிமக ரிகைவளை திகிரி பட்டிகை
பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள்

வட்ட அம்பொ னோலை முத்தாவளி
சுட்டி சந்து காறை கைக் காறைகள்

வடக முத்தோலை அரைவட முஞ்செறி
கடகம் வித்தார மகர நெடுங்குழை

மாதரணி தாலி நூல்காஞ்சனம்
மாலிகை மதாணி பீ தாம்பரம்

மதிப்பரிய கைச்சரி சரப்பணி யிலைச்சினை
பதக்கம் இவையுட்பட அணிப்படலம் இட்டுவை

மாடை பாட்டிபு தைத்த குடப்பண
மோடு கூட்டியு ருக்கவி ருப்புடன்

இடுப்ர சங்கி யாமல் உலை அ நந்தகோடி
எரியில் வெந்தி டாத கரிநி ரம்ப வேணும்

இதுபழைய கவுரி பாஷாண வுண்டை
யிடுசகல வேதி பூநாக செம்பின்

ஈயம் ஆனதொர் இரதமும் எண்பலம்
ஏழு கோடியும் இரவு சிவந்திடும்

யமுனை நீர்கொடு குகைபதி னாயிரம்
இறுக வேசமை நிலஅறை யூடுவை

எழுபதொ டெண்பது வண்டியி லேபதர்
இடுகொடு வந்து சொரிந்து குவாலிடு

யாமொழி படரச வாதந் தந்தன
நீசிவ குருவுப காரங் கண்டிரு

இரதமொ டுருகிய சருகு பித்தளை
இவைஇவை குகைதொறும் இடை நறுக்கிவை

எற்ற வந்தி ராது பொய்க்காளல
எட்டி ரண்டு மாறு தப்பாதுகொள்

எழுப தக்ரோணி புடமுள செங்களம்
ரணமு கத்தானை படையொடு வந்திரு

ஈழம்வெகு கோடி யாமீந்திட
ஏழுநிலை மாட நீமேய்ந்துகொள்

இபத்திரள் உரித்தன பருத்தன துருத்திகள்
இலக்கற உனக்கரு கடுக்கிவை சடக்கென

யாவும் வாய்ப்பது சத்யம் உனக்கிவை
ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம்

இறைவர் குன்ற மானை மணம கிழ்ந்த நாளில்
இணையில் அண்ட ரோடும் உணவு கொண்ட தாகும்

எமது பசிதீர மாராச இந்த்ர
அமுது படைபோத ஆகாச கங்கை

ஆறு போலநெய் சொரிவட கம்படை
நூறு சாலொடு பொரியலை இங்கழை

இடுக மாவடு வடையிடை கீரையி
லவணம் ஊறிய கறியடை வேபடை

இருபது தண்டை யுடும்பு குவால்சமை
துருவைகள் பன்றி சமைந்தஎ லாம்அழை

யாமைஅ வியல்முயல் ஆணங் கண்டறி
யோமிது சிவசிவ மேலெங் கும்படை

இடைவெளி யறமிகு விடுக ருக்கலை
யிறவகை கயல்கெளி றிவைபொ டித்தன

எட்டு வண்டி வாளை யிற்பீலியில்
இட்ட முண்டு தீயன் முற்பாடழை

இடைகொ ழுப்பாடில் இளையஎ லும்புடன்
அடைசு ரைக்காயில் அடுபடை முன்கறி

ஈறுபுளி வார்வி டாய்போம்படி
ஏடு பிரியாத பால்தேன்சொரி

இருக்கிற சருக்கரை வருக்கை கதலிக்கனி
ரசத்தினை யனைத்தையும் இலைக்குள் அடையப்படை

ஈக பாக்குடன் வெற்றிலை கர்ப்புரம்
யாரு மேத்த இனிச்சுகம் உற்றிரு;

முருகன் பெருமை .. சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர்
முருகன் திருப்புகழைக் கற்றவரே

மிடைத ரும்ப்ர வாள சடைபெ ரும்ப்ர வாக
விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை

விரவு மணநாறு பாதார விந்த
விதரண விநோத மாதாவின் மைந்தன்

மீன கேதனன் உருவின் மிகுந்தருள்
தான வாரிதி சரவண சம்பவன்

விகிர்தி வேதனன் மவுன சுகாதனன்
அகில காரணன் அகில கலாதரன்

விகசித சுந்தர சந்தன பாளித
ம்ருகமத குங்கும கஞ்சப யோதரி

வேழுமு முழைகளும் ஆரும் பைம்புனம்
மேவுறு குறமகள் மேவுந் திண்புயன்

விரிகடல் துகள்எழ வெகுளும் விக்ரமன்
அரிதிரு மருமகன் அறுமு கத்தவன்

வெட்சி கொண்ட தோளன் வெற்பூடுற
விட்ட வென்றி வேல்மு ழுச்சேவகன்

வெருவு நக்கீரர் சரணென வந்தருள்
முருக னிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன்

மேதகுபு ராண வேதாங்குரன்
ஓதரிய மோன ஞானாங்குரன்

மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட
அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்

வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி

வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற
விரவும் இந்த்ர லோக வழிதி றந்த மீளி

மிகவிருது கூறு மேவார்கள் கண்டன்
விகட அசுரேசர் சாமோது சண்டன்

மேக வாகன மிகுமத வெண்கய
பாக சாதன னகரி புரந்தவன்

விபுத தாரகன் விபுத திவாகரன்
விபுத தேசிகன் விபுத சிகாமணி

விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன்
அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன்

மேருவை யிடிபட மோதுஞ் சங்க்ரம
தாரகன் மகுட விபாடன் புங்கவன்

வெயிலுமிழ் கொடியொடு வினைமு கத்தினின்
மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பயன்

வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்
சத்தியன் ப்ரதாப வித்யாதரன்

விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்
நிருத நிட்டூரன் நிருதர் பயங்கரன்

வீரமத லோக வேள் காங்கெயன்
சூரரண சூர சூராந்தகன்

வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக்கடல்

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே.

17. கடைக்கணியல் வகுப்பு

(முருகக் கடவுளின் கடைக்கண் நோக்கின் பெருமையை விளக்கிற்று)

தனதனன தந்த தத்த தனதனன தந்த தத்த
தனதனன தந்த தத்த தானனா

அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும்
அரசென நிரந்த ரிக்க வாழலாம்

அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும்
அரசென அறஞ்செ லுத்தி யாளலாம்

அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும்
அருள்பெற நினைந்து சித்தி யாகலாம்

அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க
அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம்

இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த
இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம்

இருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும்
ஒருவன்இவன் என்று ணர்ச்சி கூடலாம்

எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
இடிஎன முழங்கி வெற்றி பேசலாம்

இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தை
யினையினி விடும்பெ ருத்த பாருளீர்;

முலையிடை கிடந்தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப
முகையவிழ் கடம்ப டுத்த தாரினான்

முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள்
முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான்

முனைதொறு முழங்கி யொற்றி முகிலென இரங்க வெற்றி
முறைநெறி பறந்து விட்ட கோழியான்

முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று
முதுகழுகு பந்தர் இட்ட வேலினான்

மலைமருவு பைம்பு னத்தி வளருமிரு குன்ற மொத்தி
வலிகுடி புகுந்தி ருக்கு மார்பினான்

மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர்முலை யுண்டு முற்றும்
வடிவுடன் வளர்ந்தி ருக்கும் வாழ்வினான்

மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை யென்று தித்து
மலையிடிய வுந்து ணித்த தோளினான்

மயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
இயலையு நினைந்தி ருக்க வாருமே.

18. சிவலோக வகுப்பு

(மெளன யோக நிலையால் வரும் பேரின்ப அன்பெனப் படுஞ் சிவலோகந் தருவதான சிறப்புக்களை எடுத்துக் கூறிற்று)

தனதன தனதன தனதன தனதன தந்தன
தநதம் தாத்தன தந்தந் தனதானன

உரகமும் இதழியும் உதகமும் உடுபதி யும்புனை
யும்பஞ் சாட்சரர் பங்கின் கொடிதாளினில்

உலகமு மலைகளும் உததியும் உயிரும டங்கவொ
டுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன்

உபநிட முடிவினும் இடபம தனிலுமு யங்கிவ
யங்குஞ் சீர்ப்பதி யொன்றென் றவிதாஎன

உறைவிடு படையினன் அடலுடை நிசிசரர் தண்டமு
டைந்தங் கார்ப்பெழ வங்கம் பொருசேவகன்

வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள்
கந்தன் கார்த்திகெ யன்செங் கழுநீர்மலர்

மழுவிய குருபரன் வனசரி பதயுக கஞ்சம்வ
ணங்கும் பாக்யக தம்பன் கருணாகரன்

வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தனெ
னுஞ்செஞ் சேக்கையி லுங்கண் துயில்மால்திரு

மருமகன் இமையவர் வழிபடு மணியணி கிங்கிணி
பண்கொண் டார்த்திசை கொஞ்சும் பதசூடிகை

அருவுரு ஒழியஓ ரபிநவ வடிவரு ளுந்தனி
யந்தந் தீக்ஷையெ னுங்குண் டலபூஷணம்

அணிமய மெனுமொரு சிவிகையொ டதிகுண மஞ்சினு
மஞ்சொன் றாக்கிய தென்பொங் கரியாசனம்

அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும்
அம்பொன் சேர்த்தக லிங்கஞ் சயசாரமும்

அவனவள் அதுஎன மொழியவும் இலதொரு வன்பிணி
யுங்கொண் டாக்கமும் இன்பங் களுமேதரும்

இரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம்
இங்கங் காப்பில் எனுஞ்சுந் தரகாகளம்

எனதறு துறவினும் உயர்கொடை யவிரத சங்குல
கெங்குங் கேட்டுவ ழங்கும் பொறைமாமுர

சிமையவர் கணமுனி கணமுடன் இனிதுப்ர பஞ்சம்
றைஞ்சுங் கீர்த்திது ரங்கந் திறல்வாரணம்

இருவினை கெடஒரு நிரமய பரமவு னந்தரும்
இன்பந் தேக்கிய அன்பின் சிவலோகமே.

19. மயில் வகுப்பு

(மயிலின் ஆற்றலைக் கூறுவது)

தானதன தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன தந்த தனனா

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே

ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர்

ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
யாகமுழு துங்குலைய வந்த றையுமே

வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே

மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ

வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே

போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
போதனை யிரந்துமலர் கொண்டு முறையே

பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரணக ணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே

கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
கோலவுட லங்கருகி வெந்து விழவே

கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே

கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே

கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே.

20. கொலு வகுப்பு

(முருகன் கொலு வீற்றிருக்கும் திரு ஓலக்கக் காட்சியைக் கூறுவது)

(கொலுக் கூட்டத்தினரின் வர்ணணை)

தனதன தனதன தனதன தனதன
தனந்த தனனா தனந்த தனனா

அருமறை யவன்முதல் அரிஅரன் மகபதி
அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால்

அருணனு மதியமும் அனல்ஏழு கனலியும்
அணங்கி னொடுசூழ் கணங்கள் ஒருபால்

வருணனும் நிருதியும் வழியொடு தனதனும்
மகிழ்ந்து மிகவே புழ்ந்த தொருபால்

வயிரவ ரொடுபடர் உவணரும் உரகரும்
வரங்கள் பெறவே இரங்க ஒருபால்

இருடிகள் எவர்களும் இனியகி னரர்களும்
இணங்கி எதிரே வணங்க ஒருபால்

இபமுக வனும்எழில் இளவல்கள் அனைவரும்
இயன்ற நெறியே முயன்ற தொருபால்

உருமலி குறளின மொடுவசு முசுமுகன்
உறைந்து பரிவாய் நிறைந்த தொருபால்

உடுவொடு நடவுப னிருவரு முறைமுறை
உகந்து தொழவே மிகுந்த தொருபால்

அடல்விடை முகன்அறை கதையுற வெகுசனம்
அதுங்கி அருகே ஒதுங்க ஒருபால்

அயன்முடி திருகிய வயவனு நியமமொ
டடங்கி வலமே தொடங்க ஒருபால்

மடல்புனை புகரொடு வருபதி னொருவரும்
மருங்கின் உறவே நெருங்க ஒருபால்

மருவொடு துவர்இரு வருமிசை வலமொடு
வசிந்து மனமே கசிந்த தொருபால்

மிடலிறை விறலரி விமலர்கள் அருள்சுதன்
வியந்து விரைவாய் நயந்த தொருபால்

வெயில்விரி சுடரவன் மகனொடு மதிமகன்
விளம்பு முறையே கிளம்ப ஒருபால்

உடலொளி மவுனிகள் உடன்உப னிடதரும்
உளங் குளிரவே விளங்க ஒருபால்

உமைதிரு மகள்நில மகள்கலை மகளொடும்
உகந்தெ வருமே தொகுந்த தொருபால்

அதிபகி ரதிபயி ரவிபக வதிசசி
யரம்பை யருமே நிரம்ப ஒருபால்

அழகிய கவுரியொ டிலகிய வலவையும்
அடைந்து தயவாய் மிடைந்த தொருபால்

மதியர சருநிறை வசியரும் வினைஞரும்
மலிந்து முகமே பொலிந்த தொருபால்

வருசிவன் அடியவர் அரகர எனமுறை
வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்

விதிமுறை கருதியை வகைபுரி கருவிகள்
விளைந்த ஒலிவான் அலைந்த தொருபால்

விதமுடன் அபிநய வனிதையர் சதிமுறை
விரிந்த நடமே புரிந்த தொருபால்

உதிர்தரு மலர்விரை யுறுபுகை ம்ருகமதம்
உமிழ்ந்த மணமே கமழ்ந்த தொருபால்

ஒழுகிய கிரிதொடு பணிதம தடுசுடர்
உவந்த ஒளியே நிவந்த தொருபால்

அரியக டெனமுக டளவிய ஒருகுடை
அமர்ந்த நிழலே சமைந்த தொருபால்

அருமட அனமென இருபுடை கவரிகள்
அசைந்த அழகே யிசைந்த தொருபால்

வரிசைசெய் துயலொடு வனமயில் சிவிறியின்
வயங்கு சிறுகால் இயங்க ஒருபால்

மறுகட லினில்எழு நிறைமதி அமுதென
வரிந்து பனிநீர் சொரிந்த தொருபால்

விரியிருள் வலிதரு கிரணம தெனநல
மிகுஞ்சு ழலில்வீ சுகுஞ்ச மொருபால்

வியன்மர கதமணி மிளிர்தரு களசெதிர்
விரைந்து நிரையாய் நிரைந்த தொருபால்

உரியவெ ளிலையுடன் உயரிய கமுகினில்
உகுந்த கனியே பகுந்த தொருபால்

உலகுள வனிதையர் அவரவர் விரதமொ
டுணர்ந்து கனியே கொணர்ந்த தொருபால்

(முருகவேளின் திருக்கோல வர்ணணை)

கேசாதி பாதம்

அறுகதி ரவரென அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்த தொருபால்

அறுமதி எனஅறு திருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்த தொருபால்

மறுவறு கடலென மருவுப னிருவிழி
வழிந்த அருளே பொழிந்த தொருபால்

வனைதரு மகரமு மணியணி பணிகளும்
வயங்கு குழையே தயங்க ஒருபால்

இறுகுபொன் மலையொடும் இடறுப னிருபுயம்
இசைந்து நெடுவான் அசைந்த தொருபால்

எழிலியை அனையப னிருகையில் அயில்முதல்
இலங்கு படையே துலங்க ஒருபால்

உறுவரை யருவியை நிகர்தரும் உரமிசை
யுடன்கொள் புரிநூல் கிடந்த தொருபால்

உருமென இகலிமுன் எதிர்பொரும் அவுணருள்
உடைந்த உடைவாள் சிறந்த தொருபால்

அநவர தமுமறை முறையிடு பரிபுரம்
அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால்

தேவியர்

அளவறு கலவியின் முழுகிய குறமகள்
அமர்ந்துள் ஒயிலாய் நிமிர்ந்த தொருபால்

வனதரு வினிலுறை சதமகன் அருள்மகள்
வதிந்து மணமே பொதிந்த தொருபால்

அடியார்கள்

வருமடி யவரிடம் வலியச நதம்வர
வளர்ந்த சபையே கிளர்ந்த தொருபால்

நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர்
நினைந்து திருநீ றணிந்த தொருபால்

நிறைமல ரொடுநல கலவையும் உயர்குரு
நினைந்து தரவே புனைந்த தொருபால்

தினகரன் உலவுச நிதியினில் இரவலர்
தெளிந்த தமிழே பொழிந்த தொருபால்

சிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு
திருந்த முருகோன் இருந்த கொலுவே.

21. வீரவாள் வகுப்பு

(வீரவாகு தேவரின் வாட்படையின் சத்தியைக் கூறிற்று)

தானனா தத்ததன தானனா தத்ததன
தானனா தத்ததன தந்ததாத் தனனா

பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு
பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே

பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை
போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே

பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு
போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே

போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ்
பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே

பாவ்ரு பக்கொடிய சூரனார் பெற்றபல
பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே

பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி
பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடமே

பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி
பாறுபேய் துய்த்திடநி ணங்க்ளுட் டிடுமே

பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக
பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே

ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக
ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே

யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ
ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே

ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல்
ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே

ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும
றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே

மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு
மேருவாம் விற்பரமர் தந்தபாக் கியவான்

வேடர்மா னுக்குமுயர் தேவயா னைக்கும்இசை
வேலர்தா ளைத்தொழுது யர்ந்தவாழ்க் கையினான்

வீறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை
வீரர்நே யத்தமையன் என்றதோட் டுணைவோன்

மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு
வீரவா குத்தலைவன் வென்றவாட் படையே.

22. சிவகிரி வகுப்பு

(சிவகிரி - பழநி என்றாவது சிவகிரி என்னும் தனித்தலமாகவாவது கொள்ளலாம்)

தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த தனதானனா

மெத்த மெத்த அக்ர மத்தின்
மெத்த மெத்த விக்ர மத்தின்
மெத்த மெத்த உக்ர வெற்றி மிகுபாசமே

விட்டு விட்டு றுக்கு றுக்கு
கட்டு கட்டு குத்து குத்து
வெட்டு வெட்டெ னச்சி னத்து நமனாடியே

சத்த மிட்ட தட்டி நெட்டெ
யிற்றி னைக்க டித்து றுக்கு
தர்க்க மிட்டெ னைப்பி டிக்க வருபோதிலே

தத்த ளிக்கு புத்தி யைத்தி
டப்ப டுத்தி யொத்தி டத்த
ணிப்பு றுத்தி மெய்த்து ணைக்கு வரவேணுமே

எத்த லத்து மெப்ப திக்கும்
எப்ப டிக்கும் எச்ச ரித்து
நற்ப தத்தை யுச்ச ரிக்கும் நினைவாகியே

இட்டம் வைத்த வர்க்க நுக்ர
கச்ச முத்ர வித்தை யிற்ப்ர
சித்த நித்ய முத்த மிழ்க்கும் அருள்போதனே

அத்ர பத்ர சித்ர மிட்ட
யிற்ப டைத்த யிற்கி ணைத்த
லர்க்க ணுற்ற பொற்கு றத்தி மணவாளனே

அத்த னுக்கு மைக்கி தத்த
புத்ர சித்தி முத்தி யைச்செ
யற்பு தச்சி வக்கி ரிக்குள் முருகேசனே.

23. திருச்செந்தில் வகுப்பு

தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த தனதானனா

சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து
சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே

தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர்
தங்கண் முன்பு நின்று நின்று மெலிவோ தியே

சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி
சிந்தி யிந்த வெங்கு டம்பை அழிபோதுமா

சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ
சிந்த துன்ப மென்றொ ழிந்து கரையேறுவேன்

அந்த ரங்கள் அண்டர் அண்டம் மண்ட லங்கு லுங்க நின்ற
சைந்த சைந்து பந்தெ ழும்ப அசுராதியோர்

அங்க டங்கள் துண்ட துண்ட கண்ட பந்தி கண்டை வந்த
லைந்து ருண்டு மண்டை சிந்த அடர்கோபனே

கந்த சந்த நுங்கு கும்ப கொங்கை யிந்தி ரன்ம டந்தை
கங்க ணம்பு ரந்த வென்றி அணிநேயனே

கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி டுந்தி றஞ்செ றிந்து.

24. திருப்பழநி வகுப்பு

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தனதானனா

எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும்
எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும்
எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே

எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத
எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும்
எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே

வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள்
வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ
ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே

வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர
கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ
ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே

தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி
குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர
சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே

தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை
யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத
தண்டைசிறு கிங்கிணிப லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா

செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை
சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ
றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே

சிந்தியஅ ரம்பைபல வின்கனியில் வந்துவிழ
மென்கனியு டைந்தசுளை விண்டநறை கொண்டுசிறு
செண்பகவ னங்கள்வளர் தென்பழநி யம்பதியின் முருகேசனே.

25. திருப்பரங்கிரி வகுப்பு

தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன
தானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தன தனதானனா

சாதியுங்குலம் ஆவதுங்குடி ஆவதுஞ்சனம் ஆவதுங்கிளை
தாரமுந்திர பாலரும்பிர தானமும்பெரு காண்மையும்பெறு
தானமும்பகு மானமுஞ்சிவ ஞானமும்பல கோலமும்புரி தொழிலோடுமெ

தாழ்வகன்றிடு வாழ்வும்வெம்பிணி நோயும்அங்கதி லாதுரந்தனி
லாவதுந்தளர் சாவொழிந்திடு யோகமுஞ்சிவ பேறும் எந்தநி
தானமுஞ்செய்த ராசுகண்டது போல்வரும்பொது வாகுமென்றுன திருதாளையே

ஓதினெஞ்சய ரார்தினந்திரி காலமுந்தொழு வோர்விரும்பிய
தேதும் அன்புட னேதருங்க்ருபை யாகவந்தநு பூதிதந்துமு
னூல்கடந்திட வேபுரந்தருள் கூரும்இங்கித சேவைநம்பிய படிகாணவே

ஓகைவந்தனை யாய்வணங்கிய ஏழைசிந்தையு ளேநினைந்திடு
வேளைவந்தினி தாய்வரந்தர வேணுமென்றக மேவருந்தியும்
ஓதினன்தினம் நான்விளம்புதல் நீஅறிந்தும் இதேன்இரங்கிலை யறிவேன்ஐயா

ஆதியந்தம னாதிவிந்துவு நாதமும்பிரி யாநிறைந்தவ
ருபஇன்பசொ ரூபசுந்தர சோதிமின்பொலி நீதியம்பொரு
ளாகநின்றப ராபரன்கரு ணாலயன்புல வோர்இறைஞ்சிட எதிர்காளிவா

தாடலின்செக சேகிணங்கிண சேகுடண்டம டாடமண்டம
தாகிணங்கிண தோதிணங்கின தாதிமிந்திமி தோஎனுந்தொனி
யார்சிலம்பொலி தாளமிஞ்சிட வேநடம்புரி பாதநம்பரன் அருள்பாலனே

மாதிரந்திசை யாகவந்திக டாசலந்திரை மாசலம்புவி
மாகமண்டக டாகமும்பொனின் மேருவின்தலை யேகுலுங்குிட
வாசமொன்றிய கால்பொருந்துகள் வான்நிரம்பிட வேவருங்கதிர் வடிவேலனே

வானரங்கதிர் தாவுதண்டலை மேவுகொண்டலை யூடுநின்றலை
மாஇனங்களி கூஇரூநண்பொடு கோகநஞ்செறி வாவிசிந்திய
பால்அருந்திய பேர்சிறந்திரு மூவர்விஞ்சையர் சூழ்பரங்கிரி முருகேசனே.

திருவகுப்பு முற்றிற்றுபுரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247