நான்மணிமாலை நூல்கள் |
நான்மணிமாலை என்பது தமிழில் உள்ள 90 பிரபந்த வகைகளுள் ஒன்று. அந்தாதியாக நாற்பது செய்யுள்களில் அமையும் இப் பிரபந்த வகையில் வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் பாடல் வகைகள் மாறி மாறி அமைந்து வரும். இவ்வாறு நான்கு பா வகைகள் மாலை போல் கோர்வையாக அமைவதாலேயே இது நான்மணிமாலை எனப்படுகின்றது. புகழ் பெற்ற நான்மணிமாலை நூல்கள் கதிரை நான்மணிமாலை - நெ. வை. செல்லையா கந்தவனக்கடவை நான்மணிமாலை - சோமசுந்தரப் புலவர் நல்லை நான்மணிமாலை - ச. சபாரத்தின முதலியார் பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் புலோலி நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் நால்வர் நான்மணிமாலை - சிவப்பிரகாச சுவாமிகள் கோயில் நான்மணிமாலை - பட்டினத்தார் |