உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு சூடாமணி நிகண்டு ஒரு இலக்கண நூல் ஆகும். இந்து கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள் வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. காப்பு முடிவி லின்பத்து முவா முதல்வனைப் போற்றி செய்தே அடிதொறு மிரண்டு மொன்று மாதியிற் பொருளடக்கி நடைபெறு ககரமாதி னகரவீ றெதுகை யாகப் படியிலோர் சொற்பொருட் பல்விதத் தொகை பகரலுற்றாம். ககரவெதுகை பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் பகலே நாளொரு முகூர்த்தம் பகலவ னடுவே தேசு மகரமே சுறாப் பூந்தாதாம் வசி கூர்மை வசியம் வாளே அக மன மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே. 1 சிகரி கோபுரமே வெற்புச் சீறெலி கருநாரைப்பேர் சிகழிகை மயிர்முடிப்பேர் சிறந்த வாசிகை தேமாலை சிகரமே மலையினுச்சி திரை சென்னி திவலை வெற்பாம் மகம் யாகம் ஓர்நாளென்ப மாய்வென்ப மறைவுஞ் சாவும். 2 இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பாம் புகரென்ப மழைக்கோள் குற்றம் புற்கெனு நிறமு முப்பேர் நகம் மலை யுகிர் மரப்பேர் நகை மகிழ் ஒளி சிரிப்பாம் ககனம் விண் படை காடென்ப கடவுள் தேமுனி நன்மைப்பேர். 3 சாகஞ் சாகினி வெள்ளாடு தேக்கெனுந் தருவுமாமே பாகலே காரவல்லி பலா வென்றும் பகரலாமே யூகமே கருங்குரங்கோடு உட்பொருளுணர்தல் தர்க்கம் நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பி யானை. 4 திகிரியே மூங்கில் வட்டந் தேருருள் ஆழி வெற்பாம் சிகியென்ப மஞ்ஞை தீயாந் தீதுறு கேதுவும் பேர் ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புரு கொள்ளிக்கும் பேர் எகினமே புளி மா ஞாளி கவரிமாநீர்நா யன்னம். 5 ஆகுவே யெலியி னாமம் ஆம்பெருச்சாளிக்கும் பேர் யோகமே தியானங் கூட்டம் உபாயமாம் உயர்ச்சிக்கும் பேர் போகி யிந்திரன் பாம்பென்ப போகில் புட்பொது பூமொட்டாம் கோகிலங் குயில் பல்லிப் பேர் குடங்கரே குடிசை கும்பம். 6 பொகுட்டுத் தாமரைப் பூங்கெட்டை பொருப்புச் சேற்றெழுந்த கொப்புள் இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோ டழைத்தல் ஈதல் புகைக்கிடு நாமந் தூமம் பேற்றும் யோசனைக்கும் பேரே அகைத்தல் வேதனை யொடித்தல் அறுத்திட லுயர்த்தலாமே. 7 சிக்கமே குடுமி நாமஞ் சீப்புட னுறியு மேற்கும் கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் வக்கிரங் கொடுமை மீளல் மடங்குத லுடனே வட்டம் சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு. 8 தூக்கென்ப பாட்டுங் கூத்தும்ந் துலாமும் ஆராய்தலும் பேர் பாக்கென்ப தெதிர்காலத்தை பகரிடைச்சொற் றுவர்க்காய் மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் யுண்மை யுடலுமாமே ஊக்கமே வலி யுற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும்பேர். 9 பக டிபம் பெருமை யேறு பஃறி யாண்மேதி யைம்பேர் தகடிலை யைம்மை யென்ப தபனனே யிரவி தீயாம் அகடெண்ப நடுவே குக்கி யருளென்ப கருணை சத்தி மகரந்தங் கள்ளுந் தேனு மலர்த்தாதும் வழங்குமுப்பேர். 10 சகுந்தம் புட்பொதுவே கங்கஞ் சடை யென்ப வேணிவேராம் சிகண்டியே பாலையாழின் றிறத்திசை மயில் அலிப்பேர் சகுனி புள் நிமித்தம் பார்ப்போன் சமமென்ப தம ரொப்பாகும் சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தமும் பேர். 11 சக்கரம் பெருமை யோர்புள் தரணியே பிறப்பு வட்டம் மிக்க தேருருளே யாழி வரையென விளம்பு மெண்பேர் பக்கம் புட்சிறகு நட்புப் பகர் திதி யருகு மாகும் நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டுமுப்பேர். 12 பூகமே திரளை பூகம் புன்கணென்பது நோய் துன்பம் வாகுவே யழகு தோளாம் மாசியே மக மோர்மாதம் பாகமே பிச்சை பங்காம் பயோதரம் புயலே கொங்கை வாகை பண் பொழுக்கம் வெற்றி தவந் தொழில் வழங்கண் மிக்காம். 13 நோக்கேன்பத யழகு பார்வை நுதலென்ப புருவ நெற்றி சேக்கையே மிருகந்துஞ்சுமிடம் முலை சிறந்த பாயல் பூக்கமே கமு கூரென்ப புலிங்கந் தீப்பொறி யூர் புள்ளாம் ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அறல் கருமணல் நீராமே. 14 சீகரங் கரகம் வீசுங்கவரி யுந்தி வலையும் பேர் சாகரந் துயிலொழித்தல் சமுத்திர மிருபேர் சாற்றும் காகுளி தவிசு கண்டெத்தெழு மொலி இசையுங் காட்டும் ஈகை பொன் ஈங்கைப் பேரி ரவியே மலை யாதித்தன். 15 தகை யென்பதழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர் அகியென்ப தரவி ரும்பாம் அரிட்டமே கள்ளுக் காக்கை ககமென்ப தம்பு புள்ளாங் கடுத்த லொப் பையம் வேகம் அகவல் பா மயிற்குரல் கூத் தந்தமே யழ கீறென்ப. 16 அக் கென்பு விடை முரிப்பு மணி சங்கு மணியுமாகும் நக்கலே நகை யுண்டற்பேர் ஞாட் பமர் பாரங் கூட்டம் இக்கென்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி அன்பு மக்கள் மானுடர் சிறார்பேர் வரைதலே கொள்ளல் நீக்கல். 17 கேகயம் மஞ்ஞை யோர் பண் அசுணமாக் கிளத்து முப்பேர் தோகையே மயிற்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லு முப்பேர் போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்ப மாகும் போகுதல் நெடுமை நேர்மை போகுதலெனு முப்பேரே. 18 கைக்கிளை இசை விகற்ப மொருதலைக் காம முப்பேர் சுக்கை தாரகை மாலைப் பேர் சூத்திரம் பொறி நூ னூற்பா எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபே ரென்ப மொக்குளே குமிழி பூவின்முகிழேன மொழியலாமே. 19 ஙகரயெதுகை புங்கமே யுயர்ச்சி யம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே திங்க ளம்புலி மாதப்பேர் சித்திரன் ஓவன் தச்சன் கங்கென்ப வரம்பின் பக்கங் கருந்தினை பருந்து மாமே தொங்கலே பீலிக்குஞ்சந் தூக்கொடு தொடுத்த மாலை. 20 - 1 சங்கமே கணைக்கா லோரெண் சபை சங்கு புலவர் நெற்றி பங்கென்ப முடமேயாகும் பாதியுஞ் சனியு மேற்கும் வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயமாமே அங்கணஞ் சேறு முற்றம் ஆஞ் சலதாரேக்கும் பேர். 21 - 2 ஞாங்கர் வேல் பக்க முன்பு மேலென நான்குமாகும் தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் வாங்கலே வளைத்தல் கொள்ளல் வையென்ப கூர்மை வைக்கோல் வேங்கைபொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூப்புள் சாவாம். 22 - 3 மங்குல் காரிருள் விண் முப்பேர் மருந் தமுதொடு மருந்தாம் பங்கியே பிறமயிற்கும் பகருமாண் மயிற்கும் பேராம் அங்கதம் பன்னகந் தோள் அணியுடன் வசைச் சொல்லாகும் பங்கமே சேறு தூசு பழுதொடு பின்ன மாமே. 23 - 4 அங்கமே யுடலுறுப் பென் பாறங்கங் கட்டி லைம்பேர் பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசலாகும் பொங்கரே மரத்தின் கோடு பொருப் புய ரிலவு முப்பேர் பொங்கலே கொதித்தல் மிக்காம் பொச்சாப்பு மறவி தீதாம். 24 - 5 சகரயெதுகை பாசனம் மென்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் வாசமே யிருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசாம் கோசமே மதிலுருப் பாண்குறி முட்டை முறை பண்டாரம் தேசிகன் வணிகன் றேசாந்திரியொடு குருவுமாமே. 25 - 1 மூசல் மொய்த்திடல் சாவென்ப முடலையே திரட்சி யுண்டை கீசகங் குரங்கு வேயாங் கேழ் நிறமொளி யொப்பாகும் வீசலேயெறிதலீவாம் வெம்மை யுட்டணம் விருப்பம் கேசர மகிழ்பூந்தாதாங் கிருட்டியொ ரீற்றாப் பன்றி. 26 - 2 அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர் நிசி யிரா மஞ்சள் பொன்னாம் நீர் புனல் குணம் பூராடம் பிசியென்ப பொய்யும் சோறும் பேசரும் பொருளு முப்பேர் சுசி கோடைசுத்தந் தீயாஞ் சுடர் விளக் கிரவி யங்கி. 27 - 3 ஆசென்ப விரைவு குற்றம் அற்ப மெய்க்கவச நாற்பேர் காசென்ப கோழை குற்றங் கதிர்விடு மணி முப்பேரே ஆசினி பலாவிசேடம் மரவுரி மரக்காழ் விண்ணாம் தேசிக மழகு காந்தி திசைச்சொல் லோர்கூத்துச் செம்பொன். 28 - 4 பச்சையே மரகதம் தோல் பரிமளப் புதல் மால் புந்தி கச்சை யென்பது தழும்பு கயிறொடு கவச முப்பேர் செச்சைமை வெட்சி தேய் வைதிகையென்ப திசை சுணங்காம் மிச்சையே பொய்த்தாலாகு மிடித்தலஞ் ஞானமுப்பேர். 29 - 5 பிச்ச மாண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையுமாகும் கச்சம் யானைக்கழுத்திற் கய றளவொடு மரக்கால் எச்சமே குறை சேயாக மிகமென்ப மரக்கோடி யானை அச்சமே யகத்தியைம் மை யஞ்சலிம்முப் பேராமே. 30 - 6 ஆசையே திசை பொன் அன்பாம் ஆகுலம் வருத்த மோசை காசையே காயா நாணல் காமர் தா னழகு காதல் பாசமே கயிறு கூளி பக ரூசித்துளை அன்பாகும் தூசென்ப தாடை யானைப் புரசை தூசிப்படைப் பேர். 31 - 7 தாசியே பரணி சூளை தளியென்பது துளியே கோயில் வேசரி கழுதையே கோவேறு வேசரி யுமாகும் ஆசுகம் பகழி காற்றாம் அந்தரி யுமையே துர்க்கை கோசிகஞ் சாம வேதங் கூறு பட்டாடைக்கும் பேர். 32 - 8 பசுவேறு சீவனாவாம் பாரதி வாணி தோணி வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களுந் தீயு நாற்பேர் அச மூவாண்டுறு நெல் லாடாம் அணை யென்ப கரையே மெத்தை சசி யென்ப கர்ப்பூரஞ் சந்திர னயிராணி முப்பேர். 33 -9 விசும்பு பொன் னுலகு மேகம் விண்ணொடு திசையு நாற்பேர் தசும்பு நற்குட மிடாவாஞ் சாத்தனே அருகன் ஐயன் இசை புகழ் கிளவி பாட்டாம் ஏங்கலே யொலி யிரங்கல் பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசு முப்பேர். 34 - 10 வச்சிரங் சதுரக்கள்ளி வைரமே குலிச முப்பேர் நொச்சியே சிந்து வார மதில் சிற்றூர் நுவலலாமே தச்சனே சித்திரைப்பேர் தபதி யென்றானுமாகும் உச்சி நண்பகலுச் சிப்பேர் உறுப் பவயவ முடம்பாம். 35 - 11 பாசென்ப பசுமை மூங்கில் பப்பென்ப பரப்போ டொப்பாம் மாசென்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே கேசம் பெண்மயிற்கும் ஆண்பாற் மயிற்குங் கிளத்தலாகும் வாசியே குழன் முன்னா ண்மா வாசி யென் னேவ னாற்பேர். 36 - 12 மிசையென்ப துணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர் விசயமே வென்றி வெல்லம் வெங்கதிர் மண்டலப்பேர் முசலியே யுடும்பு தாழை முந்திய ராம னோந்தி வசதி நல்லிட மூர் வீடாம் வர னயன் பரமன் காந்தன். 37 - 13 ஞகரயெதுகை துஞ்சலே நிலை பேறாகுந் துயில் சோம்பு சாவுமாகும் பஞ்சரஞ் செருந்தி கூடாம் பரதரே கழியர் நாய்கர் கஞ்சமே தாளங் குல்லை கமல வெண்கலம் வட்டப்பம் குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச் சொல்லே. 38 - 1 நெஞ்சென்ப மன மார்பின்பேர் நிழல் செல்வங் குளிர்ச்சி சாயை மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முது கிவ்வைந்தே வஞ்சி மேற்செல வோரூர் பா வல்லி மென்மருங்குற் பெண்ணாம் தஞ்சமே எளிமை யென்ப தரு பற்றுக்கோடுமாமே. 39 - 2 அஞ்சனங் கறுப்பு மை திக்கானையி லொன்று முப்பேர் மஞ்சரியே பூங்கெத்து மாலை செந்தளிருமாகும் அஞ்சலி வணங்கல் வாவற்பறவையு மாகுமென்ப இஞ்சியே புரிசை யிஞ்சி யெறுழென்ப வலி தண்டாமே. 40 - 3 கிஞ்சுக முருக்குச் செம்மை கிருட்டினன்தான் மால் பார்த்தன் கஞ்சமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே பஞ்சமே சிறுமை யைந்தாம் பகழி யம்பிதன் குதைப்பேர் வஞ்சனை மாயை பொய்யா மாயன் மால் கருநிறத்தோன். 41 - 4 குஞ்சியாண் மயிர் புட் பார்ப்புக் குன்றியின் கொடிமுப்பேரே வஞ்சமே கபடம் வாளா மாயம் வஞ்சனை பொய் யென்ப கஞ்சனே குறளன் வேதன் களங்கந்தான் அழுக்குக் குற்றம் கஞ்சிகை சிவிகை யாடை கட்டிடு திரையுமாமே. 42 - 5 டகரயெதுகை நடலை வஞ்சனை பொய் யென்ப நடுங்கிய நுடக்க முப்பேர் மடல் பனையேடு போல்வ மலரித ழோர் நூற்கும் பேர் படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்கும் பேர் குட நகர் பசு வோர் கூத்துக் கும்பமே கரும்பின் கட்டி. 43 - 1 மாடமே உழுந்தோ டில்லாம் மழையென்ப குளிர்ச்சி மேகம் கூடமின் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டி னுச்சி சேட னோர்சாதி பாங்கன் செகந்தாங்கு மனந்தனென்ப கேடகம் பரிசை வேறோர் கேடிலுர் பலகை முப்பேர். 44 - 2 இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கரின் முப்பேரென்ப முடங்கலே மடங்கல் கைதை முங்கில் நோய் ஓலை யைம்பேர் படங்கு மேற்கட்டியென்ப பகர் பெருங்கொடி யுமாகும் விடங்க மேர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பஞ் சோறாம். 45 - 3 குடிஞை புட்பொதுவும் யாறும் கூகையு யாகுமென்ப தடி வய லுலக்கை வில்லு தண்டுமின் தசை யுடும்பாம் தொடி வளை யொருபலப்பேர் சூழ்ந்த கங்கணமு மாகும் மடி யடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை. 46 -4 படிவமே வடிவ நோன்பாம் பந்தமே கிளையுங் கட்டும் வெடியச்சம் பரிமளிக்கு மென்புகை வௌியிம் முப்பேர் துடியெலம்பறை காலப்பேர் தூத் தூய்தூன் பற்றுக்கோடாம் கொடிறு பூசங் கதுப்பாங் குரவையே கட லோர்கூத்து. 47 - 5 கடிகை நாழிகையே துண்டங் கதவிடு தாழே முப்பேர் படிறு பொய் கிள விரண்டாம் பகர்தலே விற்றல் பேசல் சுடிகையே மடகு முச்ச சுட்டியு மிட்டபேரே இடி யிடிப்பேரே நென்மா வேற்றிடு முறுதிச் சொல்லே. 48 - 6 நாடி நாழிகை நரம்பாம் நந்தல் கேடுடனே யாக்கம் பாடியே நகர நாடு பாசறை யாயரூர்ப் பேர் கோடிகந் துகில் பூந்தட்டாங் குடம்பையே முட்டை கூடு கோடி யெண் புதுமை தூசாங் குடிமியே வெற்றி யுச்சி. 49 - 7 உடு விண்மீன் கிடங்கு நாவாயோட்டுங்கோ லம்பி லீர்க்காம் கடு விட முள்ளுத்தானே யரிதகி கசப்பு நாற்பேர் படு மரக்குலையே கள்ளுப் பரவு நீர்நிலை நன்மைப் பேர் படுதலே யொலி யின்றாதல் பகரி லுண்டாதல் பூத்தல். 50 - 8 மாடுபொன் பக்கஞ் செல்வம் வைகல் வைகறை நாடங்கல் சேடென்ப பெருமை நன்மை திரட்சியே யழகு நாற்பேர் பா டிடம் பெருமை யோசை பட்டே பட்டாடை சிற்றூர் ஈடென்ப குழைவே யொப்பே வலியொடு பெருமையும் பேர். 51 - 9 மடையென்ப மதகு சோறு மணிப்பணிக் கடைப்பூட்டும் பேர் படைபடைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை இடை நடு வென்ப மற்று மிடப்பெயர் நுசுப்புமாமே மட மறியாமை சத்திர மன்னிய முனிவாசப் பேர். 52 - 10 வாடை யென்பதுதான் வீதி வடக்காற்றுந் தானுமாமே ஆடு மேழகம் வெற்றிப்பேர் அல்கல்நாள் சுருங்கல் வைகல் கோடை மேல்காற்றினொடு குதிரை வெண்காந்த ளேன்ப ஓடை நீர்நிலை கிடங்கே யொரு மரம்வல்லி பட்டம். 53 - 11 அடுப் பென்ப பரணி நாளே யச்சமே சுல்லி முப்பேர் வடுச்செம்பு தழும்பு வண்டாம் மத்தக நெச்சி சென்னி இடக்கடரே மறைத்த வார்த்தை கும்பமு மென்ப நூலோர் கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றமாமே. 54 - 12 பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமா வாம் புட்டமே காகமாகும் புடைவையு நிறைவு முப்பேர் குட்டமே தொழுநோய் ஆழங் குளமெனப் பெயர் முப்பாற்றே வட்டமே பரிசை நீர்ச்சால் வலயங் கைம் மணி தூ சூர் கோள். 55 -13 திட்டையே யுரலு மேடுந் திண்ணையு நண்ணு முப்பேர் தட்டை வேய்த் தினைத்தாள் கிள்ளைதனைக் கடிகோலே முண்டம் கிட்டியே தலையீற்றாவாங் கிருட்டியாந் தாள முப்பேர் கட்டளை நிறைகல் லொப்பே யிட்டிகை யியற்ற லாணி. 56 -14 நாட்டங் கண்ணோர்பண் வாளாம் நாகு சங் கிளமை நத்தை ஓட்ட மேலுதடே தோல்வி யுயிரென்ப காற்றறே சீவன் கோட்டங் கோண் படப்பை நாடு கோயி லவ்விய மான் கொட்டில் தோட்டியங்கு சங்க பாடந் துணையென்பதளவும் ஒப்பும். 57 - 15 தடமலை பெருமை கோணஞ் சரிகரை அகலம் வாவி அடல் கொலை வலிபோராகும் அருத்தமே பொருள் பொன் பாதி உடல் பொரு ளாகமென்ப வோங்கல் வெற் புயர மூங்கில் விடமே யிடபராசி விடை மரக்கொம்பு முப்பேர். 58 - 16 கடகமே சேனை வட்டங் கைவளை மதி னாற்பேரே வடகந் தோல் அத்தவாளம் வலமென்ப திடமே வெற்றி படுவி கள் விற்பாள் குண்டம் பரமென்ப கவச மெய்யாம் நொடி பிதிர் கிளவியாகு நூ னநிச்சயமே குன்றல். 59 - 17 கடங் கயிறு வாக் கதுப்புக் கான் சுர முடம்பு நீதி குடங் கடா மீமம் யானைக் குழாங் கடன் முழவைந் தேழாம் மடங்கலே சனி சீய மறலி நோ யுக மூழித்தீ படங் கரிமுகபடா நற்றுகில் பாம்பின்பட முப்பேரே. 60 - 18 ஆடலே பெண்ணான் கூடல் வார்த்தைக் கூத்தாடல் வென்றி பாடலஞ் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் கோடரங் குரங்கு சோலை கொம்பொடு குதிரையாகும் ஆடவர் புருடர் நாமம் ஆ மிளையவர்க்கும் பேரே. 61 - 19 கடிமணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கங் காப்பு வடி வச்சம் வாச மையம் வரைவு விம்மித மேழாறாம் வடுகே யிந்தளராகப்பேர் மருதயாழ் திறனுமாமே வடவையே குதிரைப் பெட்டை யுவாப்பிடி வடவைத் தீயாம். 62 - 20 கோடு சங்கூது கொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை யேழ்பேராம் மோடு மேடு தரமாகும் முறுவலே நகைத்தல் பல்லாம் ஆடி யே யோர்மாதங் கண்ணாடி யுத்தராடமாமே. 63 - 21 தட்டுத்தேர் நடுவு குற்றந் தட்டொடு பரிசை முட்டாம் செட்டி வாணிகன் செவ்வேளாஞ் செப்புரை கரண்டகப் பேர் மட்டென்ப தெல்லை கள்ளாம் மார்கமே சமயம் வீதி பட்டிகை யென்ப கச்சுப் பகட்டுட னிரதமாமே. 64 - 22 கடைமுடி விடம் வாயிற்பேர் களே வரம்பிண முடம்பாம் உடை துகில் செல்வமென்ப வுடுக்கை தண்ணுமை துகிற்பேர் அடை யிலை கனமே யப்ப மடுத்தல் செல்வழி ஐம்பேராம் நடைவழி ஒழுக்கஞ் செல்வம் நாரென்ப கயி றன்பாமே. 65 - 23 விடையெதிர்மொழியு மேறும் விடுத்தலும் விளம்பு முப்பேர் கிடை சடை யுவமை நெட்டி கீதமே யிசையும் வண்டும் படியங்கவடி சோபனம் பகை குண முவமை பாராம் குடி குலம் புருவ மூராங் கொடி வல்லி துவசங் காக்கை. 66 - 24 நட்டமே நடனங் கேடா நகரென்ப மனையு மூரும் தொட்டலென்பதுவே யுண்டல் தோண்டல் கைதீண்டல் முப்பேர் தட்டலே தடை கிட்டற்பேர் தையெரு மாதம் பூசம் கட்டலென்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல். 67 - 25 புட்கர நிறைவு பாண்டமுகந் தீர்த்தம் புனல் வான் சேனம் கட்கம் பங்கயமே யானைக்கைநுனி குரு கீ ரைந்தாம் வெட்சி யென்பதுவே செச்சை மிகு நிரைகவர்த லென்ப பெட் பென்ப பெருமை யன்பாம் பிரசந் தேன் மது வண்டாமே. 68 - 26 அடுதலே அட்ட லென்ப அடர்தலு கொலையு முப்பேர் சடிலமே நெருங்கலோடு சடை குதிரை முப்பேரே படலையே படர்தன் மாலை பதலையே வாசிக்கோவை கிடுகு தேர் மரச்சுற்றின் பேர் பரிசைக்குங் கிளத்தலாமே. 69 - 27 படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டாம் கொடியனே கொடியன் கேதாங்குண்டாழந்தாழ்வாண்மாவே தொடுவென்ப மருதப்பூமி தோட்டங்கைதவ முப்பேரே முடிமயிர் முடியே சென்னி மகுடமுமொழியலாமே. 70 - 28 ஆடகந்துவரை பொன்னாம்அஞரறிவிலரே துக்கம் கோடகமுடியருப்புங்குதிரையும்புதுமையும்பேர் பீடிகையாவணம் பூந்தட்டொடுபீடமுப்பேர் தோடு பூவிதழே பெண்ணை மடல் போல்வ தொகுதிக்கும்பேர். 71 - 29 அடரென்பநெருங்குதற்பேரைம்மையுவடிவுமாகும் விடர்முனியிருப்புத்தூர்த்தர்கமர் வெற்பின் முழைகாடைம்பேர் விடலையே தலைவன் பேரும் விறலொன்றன்பேருமாகும் அடிசெண்டு வெளி தாளாதி கவிதையின்பாதமாமே. 72 - 30 ணகரயெதுகை புணர்வு தோய்ந்திடலிசைப்பாம் பொழில் புவிபெருமை சோலை உணர்வென்ப தௌிவே யூடல் ஒழிதலே அறிவுமாகும் குணமென்ப கயிறு பண்பு கும்பம் வின்னானி நாற்பேர் கணமுடுநோய் திரட்சிகாலநுட்பம் பேய் வட்டம். 73 - 1 ஆணமே குழம்போடன்பாம் அலநாஞ்சில் அமையுமென்றல் ஓணமாயோனாளாறாம் ஊதிய மிலாபங் கல்வி காணமே பரியூண் செக்கோர் காணம் பொற்காசு நாற்பேர் கோணலே மாறுபாடுங் கூனுமாம் வளைவுமாமே. 74 - 2 குணில் குறுந்தடி கடிப்பாங் குல்லையே துளவு வெட்சி மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை துணி சோதிநாளே துண்டந் துளி மழைத்துளி பெண் ணாமை பிணி முக மயில் புட்பேராம் பிசிதம் நீ ரிறைச்சி வேம்பு. 75 - 3 நா ணிலச்சைப்பேர் தானே கயிறென்று நாட்டலாகும் தோணியே கடைநாள் வங்கந்தொடு கணை தெப்பஞ் சேறு வாணியே யோர்கூத்தின்பேர் வாக்கு நாமகளுமாமே ஏணியே யுலகோடெல்லை யிறைவை மானென்றுஞ் சொல்லும். 76 - 4 திணை நிலங் குல மொழுக்கஞ் செவி யென்ப காது கேள்வி பிணை யாசை விலங்கின்பெண்பேர் பிலவங்கங் குரங்கு தேரை கணை யம்பு திரட்சியும் பேர்கட்சியே காடுங் கூடும் பணை வயல் பரியின் பந்தி பருத்தல் வே யரசு பீடாம். 77 - 5 யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை பாணந்தான் மேகவண்ணக் குறிஞ்சி யெய்கணை பூம்பட்டாம் சேணென் பதகலநீளஞ் செப்பிடி லுயர முப்பேர் ஆணை மெய்யுடனே வென்றி சூ ளேவலாக நாற்பேர். 78 - 6 அண்டமாகாய முட்டை அயிலென்ப வேலே கூர்மை துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதன மூக்காம் கண்டமே கவசம் வெல்லங் கழுத் திடுதிரை வாள் துண்டம் முண்டகந் தாழை கள்ளு முளரி மத்தக முள் மூலம். 79 - 7 அண்டரே பகைவர் வானோர் ஆய ரென்ராகு முப்பேர் சுண்டனே சதய நாளுஞ் சூரனும் வேறுகாட்டும் கண்டல் கேதகை முள்ளிப்பேர் கரைதலே விளித்த லோசை பண்டம் பொன் பணிகாரப்பேர் பாகு பால் குழம்பு பாக்காம். 80 - 8 விண்டென்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்றாம் தொண்டென்ப பழமை யொன்பான் றொழும் பொடு வழிபாடாமே தண்டென்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி வண்டென்ப சங்கு குற்றம் வளை யளி வாளி யைம்பேர். 81 - 9 உண்டையே திரளை யாகம் உறுபடை வகுப்பு மென்ப தொண்டை யாதொண்டை கொவ்வை தூங்கும் யானைத் துதிக்கை கொண்டையெ மயிர் முடிக்கு மிலந்தையின் கனிக்குங் கூற்றாம் கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய்செப்பு. 82 - 10 தண்ண மோர்கட் பறைப்பேர் தறித்திடு மழுவுமாகும் வண்ண மேர் சந்தம் பண்பாம் மறை யிராசியமே வேதம் பண்ணென்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் மண் ணணு வொப்பனைப்பேர் முழவின் மார்ச்சனை யுமாமே. 83 - 11 அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் துணங்கையே விழாப் பேய் கூத்தாம் ஆதிரைநாளுஞ் சொல்லும் குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர் துணங்கற லிருள் விழாவாந் தோன்றலே சுத னாதன் பேர். 84 - 12 புணரியே வாரி நீரிற்பொருதிரை கரை முப்பேராம் பணிலமே சலஞ்சலஞ் சங்கிருபெயர் பகரலாமே கணி வேங்கை மரமதாகுங் கழனிசூழ் மருதமும் பேர் பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலு மாமே. 85 - 13 பாணி யூர் நீர் கையோசை பற்றுக்கான் போது நாடு சேணுறு சோலை பண்டஞ் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் தாணுவே சைலங் குற்றி சங்கர நிலை தூ ணைம்பேர் வேணியே சடை விசும்பாம் வியாளமே புலியும் பாம்பும். 86 - 14 குண்டலங் குழை விசும்பாங் குபேரனே தனதன் சோமன் மண்டலம் பரி யூர் வட்டம் மந்தியே யூகம் வண்டு கொண்டலே முகில் கீழ்காற்றாங் கோட்டியே வாயில் கூட்டம் மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயுமாமே. 87 - 15 புண்டரீகந் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் தண்டமே யானைசெல்லும்வழி தண்டாயுதங் குடைக்கால் பிண்டி நென்மா வசோகாம் பிதாச் சிவன் பிரம னாரை கண்டகஞ் சுரிகை முள் வாள் களவென்ப களாச் சோரப் பேர். 88 - 16 பண்ணவன் முனிவன் தேவன் பகர்குரு யருக னார்ப்பேர் தண்ணடை மருதஞ்சாரூர் நாடேன யிருபேர் சாற்றும் வண்மையே வழங்கல் வாய்மை வளம்புகழ் வலியாமென்ப ஓண்மையே மிகுதி நன்மை யொழுங் கறி வழ கைம்பேரே. 89 - 17 எண் வலி யெள் ளிலக்கம் எளிமை சோதிடம் விசாரம் கண் ணிடங் கணுவே கண்ணாங் காஞ்சி மேகலை யோர்பண்ணாம் விண் முகில் சுவர்க்கம் வானாம் விபுலம் பார் விரிவு பீடு பண்ணையே வய னீர்த் தாழ்வு மருத மாத்துயிலும் பாழி. 90 - 18 காண்டமே திரை கா டம்பு கமண்டலங் கலன் பெய்செப்பு நீண்டகோன் முடிவு தூசு நீர் படைக்கல மீரைந்தாம் பாண்டி லே றூர்தி வட்டம் பணை கட்டில் விளக்குத் தாளம் ஈண்டென்ப இவ்விடத்தோ டிப்படி சடிதியும்பேர். 91 - 19 அண்டச முதலை யோந்தி அரணை புள் ளுடும்பு பல்லி நண்டு மீன் தவளை யாமை நாக மிப்பியு மீராறாம் சண்டன் கூற்ற வலி வெய்யோனாந் தாள் கதவுறுதாள் பாதம் சுண்டையே சுண்டைக் கள்ளாஞ் சுவர்கமே சுவர்கங் கொங்கை. 92 - 20 பணமென்ப தரவின்பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் மணமென்ப வாசங் கூட்டம் வதுவையு மாகுமென்ப பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோயாம் நுணவை யெண்ணோலை பிண்டி நுனியென்ப நுதி நுண்மைப்பேர். 93 - 21 |