அம்பலவாண தேசிகர் அருளிய நிட்டை விளக்கம் பாயிரம் நெஞ்சே உனைஇரந்தேன் நீஅம் பலவாணன் எஞ்சா வடுதுறைமெய் இன்பருளச் - செஞ்சொல்புனை நிட்டை விளக்கம் நினைதலினால் எப்பிறப்பும் இட்டம் உனைப் பெறஎன்(று) எண். நூல் கட்டளைக் கலித்துறை ஆட்டி மலுலிலை ஆர்ப்பரித்(து) ஒங்கி அடித்துகால் நீட்டிக் கிடப்பது நிட்டைய தோநிலை யாத்தனுவை ஒட்டிநின் பாதத் தொடுக்கி உயிரையும் நீயெனவே நாட்டிய அம்பல வாணா திருத்தில்லை நாயகமே. 1 ஓங்கிய நெஞ்சத் தருளோர் உருவைத்(து) அங் குற்றமலம் நீங்கிய தன்றுபொய் யெல்லாம் அகல நிருமலத்தே தேங்கிய தன்று சிவமே வருமெனச் செய்கையறத் தூங்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய துய்யவனே. 2 அரன்நேர் உறின் உடல் சோகம தென்னில் அகத்தினும்நீ வரினே தனுவும் உளதாய் மயக்கும் வருவதின்றாம் பரனே மலமற நின்றாவி பற்றிப் பசுப்பரமாய்த் தரினே சிவமென்னும் அம்பல வாதில்லைச் சங்கரனே. 3 வருத்துங் தனுவினை ஓரிட மாக மனஞ்சருக்கி இருத்த வருமருள் என்மனம் நோக்கி இருத்துதற்கோர் கருத்தனும் வேண்டும்பின் நீங்குதற்(கு) ஓர்வினை காண்பதுண்டாம் திருத்தியல் பாகஎன் அம்பல வாதில்லைச் சிறபரனே. 4 தெரிசித்தல் அர்ச்சித்தல் சிந்தித்தல் மூன்றுங் திகழ்பதத்தைப் பரிசித்தல் நூலினைப் பார்த்தல்சன் மார்க்கமிப் பண்பதற வருசித்து மற்றக் கரண மடக்க வருங்சிவமென்(று) உருசித்த வாறென்கொல் தில்லையுள் ஆதிய உத்தமனே. 5 தோயச் சிறிதங் தாகும் துடர்ந்து மற்றும் பாயப்பொய் மாயம் பறிந்தறிவாய்நிற்கும் பண்பதென்றால் யாக மயக்கென்கொல் அம்பல வாதில்லைக் கண்ணுதலே. 6 திருக்குச் சிறிதுமுற் பாதத் துற அருட்சிந்தையுற்றங்(கு) உருக்குஞ் சிறிதுபின் மற்றவை ஒங்கின் உளங்குழைவாய்ச் செருக்க துருக்கும தென்றால் தனுமையல் செருமெனப் பெருக்கிய வாறென்கொல் அம்பல வாதில்லைப் பெற்றியனே. 7 மலம்பரி பாகம் உளத்தாஞ் சிரியையும் மற்றதுபோல் செலும்பரி பாகம் கிரியையும் யோகமும் தீமையறச் செலும்பரி பாகமெய்ஞ் ஞானமும் இவ்வண்ணஞ் சேருமென்றால் புலுங்கர ணங்கள் அடக்குவ(து) என்தில்லைப் புண்ணியனே. 8 ஒருக்குமை யற்சிறி தேயுறும் போதத்தில் உற்றதன்பால் தரிக்குஞ் சிறிதன்பு மற்றந்தப் பாதத்துந் துங்கியன்பு பெருக்குமெய்ஞ் ஞானத் தவவாற்றிற் சீவனும் பேரன்பென்றால் தருக்குங் கரண மயலேது உரைதில்லைச் சங்கரனே. 9 அவமே சரியை புரியிலஞ் ஞானம் அவனியறத் தவமே சரியை புரியின் மெய்ஞ் ஞானமித் தன்மையறச் சிவமே உறுஞ்செயல் எல்லாம் அறவெனச் செப்புமையல் நவமே திரைதில்லை அம்பல வாதில்லை நாயகமே. 10 சத்திநி பாதஞ் சதுவிதத் தாற்பொய்த் தகுமலத்தின் பித்த(து) அகல்வது நால்வகைத் தாம்பிரி யாதவினைக் கொத்த(து) அகல்வதும் அவ்வகைத் தாமாற்கொடுங்கரணச் சித்தம் ஒழிப்பதென் அம்பல வாதில்லைச் சிற்பரனே! 11 மரணந் தவிர்க்குஞ் சரியாதி நான்கும் வருமறிவுன் சரணம் புகில்தனுத் தான்புகுந்(து) அச்தெயல் சாருமென்றார் கரணம் அடக்க வரும் அருள் என்றுன்னிக் காத்திருக்கும் முரணெ(து) உரையெனக் கம்பல வாதில்லை முக்கண்னே! 12 சரியாதி நன்குஞ் சதாசிவத் தோங்ந் தகுதியன்பு விரிசா தகுஞ்செய்ய வேண்டுங்தக் கோர்கள் வெருண்டு நிட்டை வருசாத கர்லிங்க மாறாக நோகி வருவரென்னும் ஒரு சாதகஎன்கோல் அம்பலவா தில்லை உத்தமனே. 13 துறக்கும்பொய் வஞ்சம் சிறிதே துறந்துன் துணைமலர்த்தாள் நிறைக்கும் வகைசிறி தேநிறைத் தேற நிகழ்சரியை பிறக்கும் மற்றவை பேரன்பென் றால் உனைப் பெற்றுமந்தோ வெறுக்கும் பசாசருக் கென்சொல்லு கேன்தில்லை வேதியனே. 14 பித்தனித் தம்பிர வஞ்சமென் றோடிப் பிணியொதுக்கி அத்தனித் தன்னென் றறிவதற் கோவென் அகத்தினுள்ளே சத்திநி பாதம் உதித்தந் தோதனுச் தோதனுச் செய்கையற்றுச் சித்தமும் பித்துறு தற்கோ சொல் தில்லைச் சிதம்பரனே. 15 என்னிச்சை உன்னோ டுறுமிச்சை உன்னிச்சை யேமலத்தின் தன்னிச்சை உன்னுச்சை என்னிச்சை யாகத் தருவதுண்டேல் அன்னிச்சை நீயற் றருளிச்சை யாக அடையுமந்த மன்னிச்சை யேநிட்டை என்றான் சிவாயநம் மன்னவனே. 16 நீணாட் டியானித் திடினும் உடலுர் நீதிசற்றும் காணார் கண்முடிப் பயனென்கொ லோகலை யாலருளைக் கோணா துணர்த்துங் குருவே அறிவைக் கொடுப்பனின்பம் நாணா திதுநிட்டை என்றான் சிவாய நமகுருவே. 17 உருவே தியானித் துறுவர்கண் மூடி உருமுடலின் கருவே தியானித்துக் காண்பதுண் டோகலை யாலுணர்த்தும் கருவே அறிவைத் தருவன் இமையினைக் கூடலின்றித் தெரிவே தெரிநிட்டை என்றான் சிவாயமெய்த் தேசிகனே. 18 ஒவய மேதனு வுற்றோர் உயிர்க்கும் உவமையின்றால் பாவிய மேதனு வாமால்மெஞ் ஞானம் பகர்ந்தநன்னூல் ஆவியை மிக்க சிவத்தோ டழுத்துமவ் வாறதுறத் தாவிய தேநிட்டை என்றான் சிவாயமெய்ச் சற்குருவே. 19 பிறிவே பிறித்துப் பிறியா அறிவெனும் பெற்றிதந்த செறிவேகண் மூடித் தியானித்த லோசொல்லு சேர்ந்த நன்னூல் அறிவே அறிவை அறிவித்து நற்சிவ மாக்குமின்ப நிறைவே தகுநிட்டை என்றான் சிவாய நெடுந்தகையே. 20 உறவே அறிவறீ வேஉடம் பாகும் உடம்புஞ்சுட்டி அறவே உயிரெனும் ஆவியு மாமரு ளோடுறையும் நிறைவே துயனித்து நிற்பது வோசொல்லு நீயிதனை மறவேல் அதுநிட்டை என்றான் சிவாயநம் மன்னவனே. 21 முகத்தே இருகண் மறைக்கமெய்ஞ் ஞான முளைக்குங்கண்கள் பகுத்தே நடக்க அருள்பாயும் என்பது பாவமெய்ந்நூல் செகத்தே பிறித்தங் கறிவறி வாக்கிச் சிவத்தை நல்கும் அகத்தே விடுநிட்டை என்றான் சிவாய அருட்குருவே. 22 பொன்னேர் கணினிறம் பூணும் பொறியொன்று பூண்டுசுவை தன்னேர் அறிவொன்று தானொன் றூவமை தகாசிவத்தின் அன்னே ரறியும் அறிவொன்று தம்முள் நயப்பு மொன்றாய்ச் சொன்னே ரிடல்நிட்டை என்றான் சிவாயமெய்த் தூயவனே. 23 அறிவே அறியில் அறிவனு போகம் அறிவுளருள் உறவே அறிவே உறவனு போகம் உயர்சிவத்தின் நிறைவே அறியின் இறையனு போகம் நிலைமையொன்றாய்ச் செறிவே இதுநிட்டை என்றான் சிவாயமெய்த் தேசிகனே. 24 ஒலவே அறிவு விளங்குமெய்ஞ் ஞான்றும் சொலவு சொல்லிற் றிலவே பகுத்தறி வின்றாய் இருந்த படியிருக்கும் வலபே ருரையை மருவமெய்‘ஜ் ஞான மருவுந்துன்பம் அலவே இதுநிட்டை என்றான் சிவாய அருட்குருவே. 25 ஆவியைக் காயத் தடக்கிஅஞ் ஞானத் தழுத்திமலம் மேவிய தாலதை மாற்றிமெய்ஞ் ஞான மருவவங்கம் ஓவியன் கைவழி ஓவியம் போலவொன் றாகிற்றுத் தாவிய தேநிட்டை என்றான் சிவாயமெய்ச் சற்குருவே. 26 நிட்டை விளக்கம் முற்றிற்று |