உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அம்பலவாண தேசிகர் அருளிய சன்மார்க்க சித்தியார் நேரிசை வெண்பா சிறியேன் அறியாமை தீர்ப்பதற்க்குப் புத்தி அறியேன் எனினும் அருளின் - நெறியே முளைத்தார்கள் நீர்மை முதிரவினா வுற்றேன் அளித்தால் நமச்சிவா யா. 1 பாசமாய்ச் சுத்தப் பசுவாய்ப் பதியாகித்தே தேசுற்ற ஆவிச் சிறப்பென்றான் - நேசம் உடைத்தாய்த் தனுவற் றுணராமல் கண்ணை அடைத்தாய்வ தேதாம் அறை. 2 அறிவாய்ப் பரிபூ ரணமாய் அகண்ட செறிவாய் உளமொளித்த தேசா - பிறிவாகி உன்னிற் றனுவாய் உறுங்கண் இமைநீக்கில் அந்நிய்மேன் ஆவாய் அறை. 3 உளக்கண் விழித்தார்க் குறுங்கதிராய் உன்னை விளக்கிச் செக இருளை வேறாய் - ஒளிப்பைஎன மாயும் செகமுல்ளத்து மன்னுமெனக் கண்ணைமறைத் தாயுமருள் ஏதாம் அறை. 4 அம்பகத்தை மூடியருள் ஆய்வது நூலோதிச் செம்பொருளை கேட்டுத் தெளிவதுவோ - நம்பனருட்(கு) ஏற்ற உ பாயநிட்டை ஏதாகும் மும்மலத்தைப் பாறறுவாய் ஒன்றைப் பகர். 5 அணியாய்த் திருநீ றணிவார்கள் கண்ணின் மணியே உனைவேண்டி வந்து - பணியத் தொடும்போது மூர்ச்சை துயரகல நீற்றை இடும்போ தகல்வாய் இதென். 6 நினைத்தார்தம் நெஞ்சத்(து) அமுதாகும் உன்னைத் தனைத்தான் அறிவாரே சார்வார் - எனத்தலோ ஞானஞ் சுழுமுனையால் நல்குமென வாய்நீரைப் பானம் பணல் என் பகர். 7 சன்மார்க்க மென்னத் தகுமார்க்கம் ஓரியல்பாம் பன்மார்க்க மென்னப் படாததனால் - நன்மார்க்கம் காயம்ற ஆவி கருதானாம் கண்மூடும் மாயமென் மாணா வரும். 8 நேத்திரத்தை உற்ற பொருள் நேத்திரத்தை நீங்கின்மன மாத்திமே அன்றிஉளம் மன்னாதால் - நீத்துடலை அவிப் பயனறிவார் அம்பகத்தை மூடியருள் பாவிப்பர் அல்லரெனப் பார். 9 காயமனத் தால்சிவனைக் காணலாம் என்பதனுக்(கு) ஆய மறையும் அறையாதால் - ஞாயத் தனுமாய ஆவி தனுவாம் இறைவர்க்(கு) இனிமாய மில்லையென எண். 10 அறிவாய்த் தனுவை அறிவார் மலத்தைப் பிறிவார் உளம்பே ரறிவாய்ச் - செறிவாந் தனுவால் அறிவார் உளமே தனுவாய் உனுவார் திருவுருவென் றோர். 11 ஊனாய் உயிராய் உணர்வாய் உரையிறந்த தேனாய் உளமறைந்த சிற்பரத்தை - வானாய் ஒளியாய் உருவாய் ஒலியாய் உணர்வார் தெளியாய் தமையென்னத் தேர். 12 தனைத்தான் இவ் வாறென்னத் தானறியார் சம்பு வினைத்தான் எவ் வாறறிந்து மேவ - நினைத்தார் உறுமோ மனமதனில் ஒன்கணிமை நீக்க அறுமோ நமையாள் அருள். 13 சட்டகத்தை நீக்கச் சதுரறியார் கண்மூடி நிட்டையெனப் பாவித்து நிற்பதனால் - சுட்டிப் பத்மடைவ தல்லால் பரசிவத்தோ டத்து விதமடைவ தின்றாம் வினை. 14 சிந்திப்பார் அர்ச்சிப்பார் சேர்ந்திமையால் அம்பகத்தைப் பந்தித் திதயத்தில் பாவிப்பார் - பெந்தித்த சாலோ மாதிப் பயனோக்குச் சற்குருவால் நூலோதி னார்க்கறிவே நோக்கு. 15 புரையேய் செவிதா ரகமாப் புகுமால் வரையேய் அருணூலின் மாண்பவ் - வுரையே பதிபசுபொய்ப் பாசத்தின் பண்புதேர் வித்துக் கதிசேர்க்குஞ் சன்மார்க்கக் கற்பு. 16 அறிவால் உணர்த்தி அறியாமை நீக்கிப் பெறுமாறே அத்துவிதம் பேரா - மறுமாற்றி ஆவியே ஈசன் அருவினையைக் காட்டாமல் பாவியென்பார் சற்குருவோ பார். 17 உன்னைத் தனுவை உயிர்க்குயிரை உள்ளத்துப் பின்னமற நிற்குமலப் பெற்றியையுஞ் - சொன்ன சுருதிகுரு வாக்குச் சுவானுபவம் ஒன்றத் தெரிவிப்பான் தேசிகனாய்த் தேர். 18 எங்கும் அறிவாய் எழுந்தசிவா னந்தத்தைத் தங்குநய னத்தடக்கித் தான்விழிக்கப் - பங்கமுறக் கற்குநிட்டை யாகுங் கருதியறி வாய்நிறைந்து நிற்குநிட்டை யல்லவென நில். 19 அகக்கண் திறந்தார்க் கறிவல்ல்ணால் ஒன்றும் புகத்தக்க தில்லையெனும் பொற்பான் - முகக்கண் நிறைத்தார்மற் றோரகத்தின் நீடிருளாற் கண்ணை மறைத்தார் செகத்தஞ்சு வார். 20 அகத்திமிரத் தாலாவி ஆகமாய்த் தீய செகத்துமய லாமூர்ச்சை செய்யா - இகத்தரனைப் பெற்றார்தங் காயமதும் பேரறிவாம் மெய்மூர்ச்சை உற்றார் பொய்த் தீவினையென் றோர்ச். 21 உரையே அகவிருளுக் கொண்க்திரே யாமால் வரையார் அறிவையோர் மாண்பைப் - பரஞானம் சாதிப்பா ரும்கேட்டல் சிந்தனையைச் சார்ந்துமலஞ் சேதிப்பா ரென்னத் தெளி. 22 மனுவே திருநீற்றை மன்னுமால் ஞானத் தனுவே தவிர்க்கத் தகாதே - துனவே அருள்மால் திருநீ றணிய அகலும் மருள்மால் எனவே மத். 23 வன்னமுற்ற காயத்தை மாற்றி அறி வேஎன்னத் தன்னையுற்றார்க் கின்பாகுந் தாணுவற்ப் - பீன்னமுற்றா ஊனீர்மை தானாய் உணரும்பொய் மக்கட்கு வாய்நீர் அமுதாய் வரும். 24 அருந்துமனம் வாயால் அகற்றி அற்க் கோழை திருந்தாருள் சேருமெனுஞ் சேயாய்ப் - பொருந்தும் தனுக்கோழை நீங்காது தாதனறி ஞானம் உனக்கோழை எந்நாள் உறும். 25 செகத்திமிரம் தீர்க்கும்வான் செலதிர்போல் ஆவி அகத்திமிரம் தீர்க்கும் அருள்நூல் - பகுத்தறியப் புத்தியில்லார்க்(கு) எல்லாம் பொருளாகுங் கண்ணற்றார் அத்திகண்டாற் போலென் றறி. 26 நன்மார்க்க நற்குரவோர் நாட்டுமரு ணூனோக்கிச் சன்மார்க்க சித்தியெனத் தானுரைத்தேன் - புன்மார்க்கம் அற்றார்தம் நெஞ்சத் தமுதாகுஞ் செகமார்க்கம் பெற்றார்க் கிதுபேத மாம். 27 காயமெனக் குள்ளடங்கி காதலித்த யான்கருணை நேயநீ யாயடங்கி நிற்பதனுக் - காயநிட்டை வைத்தாய் சிவஞான வாரியருள் மல்லேறே அத்தா நமச்சிவா யா. 28 சன்மார்க்க சித்தியார் முற்றிற்று சன்மாக்க சித்தியெனச் சாற்றுமிரு பானெட்டைப் புன்மார்க்கஞ் சென்ரோர்க்குப் போக்கினான் - நன்மார்க்கம் காட்டா வடுதுறையில் கண் அம் பலவாணன் தாட்டா மரையெனக்குத் தந்து. |