உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அம்பலவாண தேசிகர் அருளிய சிவாச்சிரமத் தெளிவு காப்பு திருவா வடுதுறையில் தேவே அடியேற் கொருவாவினைமால் ஒருவ - குருவாய்த் திரள்வாய் அறத்தின் சிறந்தவினா உற்றேன் அருவள்வாய் நமச்சிவா யா. 1 நூல் வருகரும பாகர்க்கும் மாயமற நோக்குத் திருமலபா கர்க்குந்தான் ஒன்றாம் - நிருமலாந் தீக்கையொரு நான்காஞ் சிறப்பீசர் பாகமிரண்(டு) ஆக்குவதெவ் வாறாம் அறை. 2 செய்யும் உலக தருமிணிக்கும் சேர்சிவமாய் உய்யும் சிவதரும ஓண்மணிக்கும் - மெய்யுறவே பாவுஞ் சமயாதிப் பண்பொன்றா நற்றருமம் ஆவதுஎன் பேதம் அறை. 3 அனுக்கிரகம் தீக்கைக் கதிகாரம் ஈகை மனுக்கிரகர்க் காமாறும் வைத்தாய் - தனித்துற்வோ(டு) இல்லம் சரியா மிசைந்ததொழி லார்க்காமம் சொல்லுவதென் பேதமதாய் சொல். 4 தீக்கைசெபம் பூசை தீயானமருள் நூலோதல் ஊக்கிப் பிறர்க்கும் உரைத்திடுதல் - நோக்கில் துறுவில் லறத்துஞ் சொலுமார்க்கம் ஒன்றாம் அறமிரண்டோ ஆமா றறை. 5 மலமகலத் தீக்கை வருவிப்பாய் நான்காய் இலமகலு வார்க்குமிலத் தோர்க்கும் - புலமிலரை விட்டறிவின் தேசிகர்பால் மேவுகென நூலோதப் பட்டதென்னை யீசா பகர். 6 போகி விரத்தார் பொதுவாய்ச் சமயாதி ஆகுமபி டேகாந்தம் ஆதரித்தும் _ தேகமாம் அந்தியத்தில் யோசனைகள் ஒன்றாம் அறமிரண்டாய்ப் புந்தியுற்ற தேதாம் புகல். 7 ஒதினிய நூலை உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் மேதினியில் தீக்கை விரித்தத்தும் - தீதினிமை உற்றார் அறிவோ உறாஅ துலகதனை அற்றார் அறிவோ அறை. 8 வந்தனையால் ஒன்றா மருவுமரன் பாலுற்ற சிந்தனையால் பேதமெனச் செப்புவதாம் - நந்தனையாய் வையந் துறந்தார்க்கும் மற்றதனை உற்றார்க்கும் செய்யும் அறத்தின் திறம். 9 போற்றுஞ் சமயாதி பூணுமபி டேகாந்தம் ஆற்றுந் தவவேடம் ஆதரித்தும் - பாற்றியிடும் அச்சு முதலா அனைத்தும்மல பாகமதில் இச்சைகன்ம பாகமென எண். 10 வஞ்சத்தில் வாஞ்சை மறவாமல் மாசிவத்திற் கொஞசத்தில் ஆசை கொளுவாரைச் - செஞ்சொல் உலக தமிணியென் றோதும் பொய் வஞ்சத் திலகார் சிவதரும ரென். 11 பூசையுடன் கல்வி பொருந்துள்ளும் - வாசமலர்த் ஆசையுடன் தீக்கை அளிப்பதுள்ளும் - வாசமலர்த் தாமமே யிட்டுத் தருக்குமட வார்வாழ்க்கைக் காமமிலத் தோர்க்கெனவே காண். 12 கொலையிற் களவிற் கொடுந்தொழிலிற் கோப வலையிலுவப் புள்ளும் மருவும் - பலபுட்பத் தாமமே சாத்தித் தருக்குமர னாயுற்ற காமந் துற வோர்க்கே காண். 13 ஊக்குஞ் சமயாதி உற்றாபி டேகாந்தம் ஆக்குமுண்மை நற்சரியாதி பற்றிச் துறந்தார்கள் உண்மைச் சரியாதி பற்றிச் சிறந்தார் அருட்பாகந் தேர். 14 நண்ணும் உபாயச் சிரியாதி நான்குமில்லோர் பண்ணும் அனுக்கிரகப் பண்புமிக - எண்ணித் துறந்தார்கள் உண்மைச் சரியாதி தொக்கிச் செறிந்தா ரற்வென்னுந் நேசு. 15 பாவனையால் தீக்கை பணிப்பரத்தில் யோசித்துத் தீவினையும் ஆங்கே சிதைத்ததனால் - பூவினையைப் பாற்றுவார் தீக்கை பலமடைவார் பண்பிலத்தில் ஆற்றுவார் நற்றாரும ராம். 16 சரியைக்கே சாலோகம் தன்னில்யோ சித்தால் தெரிய நடந்தவர்க்கே சேர்வாம் - பிரியா நிலவுலகில் இச்சை நிறைந்தோர்க்குத் தீக்கைப் பலநிலவு நற்ற்ருமம் பார். 17 பரிபாகத் தால்தீக்கைப் பண்புற்றார் தீதைத் தெரிவார் இலந்துறத்த் சேர்வார் - ப்ரிவாம் இலத்துச் சரியாதி சேமெய்ச் சரியைப் பலத்துக் குபகரணம் பார். 18 கருமாற்றுந் தீக்கையால் கற்பொன் றெனினும் வருமா றிரண்டாகும் மாணா - திருமா மனுக்கிரகர்க் காக்கும் வருமார்க்கம் மார்க்கம் அனுக்கிரகம் நீத்தோர்க்கே யாம். 19 அத்திரமொன் றாக் மதிக்குஞ் சபத்துக்குத் ததிதிரமே பேதமெனுந் தன்மையாற் - புந்திப் பலமாம் இலத்தோர்க்குப் பண்ணவக்குத் தீய மலமாய்க்கும் என்றே மதி. 20 துறவனிவ் வஞ்சத்தில் தோயிலிவ் வஞ்சம் இறைவனாம் மாணா இலத்தாம் - அறவன் இறவா அரன்பூசை ஏத்துகினிம் வஞ்சம் மறவான் அதனான் மதி. 21 தேசனையே நெஞ்சில் தியானிக்கில் இல்வாழ்க்கை வாசனையும் ஆங்கே மறைக்குமால் - காசினியை அற்றார் ககிலம் அணுகில் தியானத்தின் பற்றாய் அதுமறைக்கும் பார். 22 உறையும் இலந்துறந்தார் உள்ளஞ் சிவமென்(ற) அறையும் அருணூல்க ளாய்ந்துஞ் - சிறையைக் கழியார் இலத்தறவர் கற்றதிறஞ் சற்றும் ஒழியார் துறவோரென் றோர். 23 இலங்குநூற் கர்த்தம் இலத்தார் இசைப்பின் துலங்க இலம் பேணிப்ச் சொலுவார் - விலங்க இலந்துறந்தார் கூசாது இசைப்பரிவ் வில்லம் மந்தகைய வாராத வாறு. 24 துறந்தார்முன் பாமம் சொலிக்கும் துறவை இறந்தார்முன் காமம் எழுமால் - நிறைந்த இலம் தொட்டாரை விட்டறிவில் தோய்ந்தாரைத் தோய்வதுநூற் பட்டாங்கில் உல்ல படி. 25 பண்ணும் அனுக்கிரகப் பான்மை தனுப்போ நண்ணுதற்கே இற்குரவர் நாடியதாம் - எண்ணித் துறந்தகுர வோராவித் தொன்மலத்தை மாற்றச் சிறந்ததென மாணா தெளி. 26 பாவனையால் தீக்கை பணவருகால் அன்றில்ல மாவினையே நெஞ்சின் மருவுமால் - தீவினையை மாற்றுவார் சீடன் வரும்பொருளால் நீத்தோர்கள் பாற்றுவார் பாவனையால் பார். 27 கொடுவிடங்கள் மாயக் குடரியாற் கொத்தி யிடுவரவார் மாணா இலத்தார் - கடுகும் பறவைக் கரசுதனைப் பாவிப்பார் போலும் துறவர்க் கரசர் தொழில். 28 உடல்விடத்தைத் தீர்ப்பார் உறுமுயிருக் குற்ற நடை நடைநடப்பிப் பாரோ நவில்வாய் - திடனாகப் போக்கும் பொருட்குவ்மை புண்ணியனோ டொன்றாக ஆக்கும் உவமைக் கடா. 29 சத்தியா லாதல் தருங் கருமத் தாலாதல் அத்துவா சுத்தி அடைதலுமாம் - முத்தி செறிவிக்கும் நூலில் சிறந்தவத்தை பத்தால் அறித்தல் சத்தியமே யாம். 30 பிறியாக் கலைகள் பிறிக்குங்கால் மாணன் அறியா(து) அசத்தித்தியமே ஆகும் - நெறியாக ஆங்கவையை அசான் அறிவித் தகற்றுகையால் ஒங்கியநற் சத்தியமென் றோர். 31 உற்றநிரு வாணம் இருவைகயா ஓதியதில் செற்றார் அனுக்கிரகஞ் செய்வதாம் - மற்றில்ல நல்லார் அசத்தியமே நண்ணுவதாம் மேலவத்தை சோல்லாத ஆதலினால் தேர். 32 கடுவடுக்குக் காட்டுமருந் துற்ற கொடுவிடத்தைத் கொன்றுமொப் பாமோ - மடமடக்கு நோக்குக் கிணையாமோ நுண்பொருளால் ஆகுதியை ஆக்கியது மாணா அறி. 33 பிறிவா அறிவு பிறந்திலத்தை மாற்றித் துறவா அருளாம் துறவர்க் - கிறவா அதிகாரத் தால்தீக்கை ஆக்குவோம் என்னும் மதிகா ரகஎக்கென வரும். 34 சித்தத் தறியாமை சேர்ந்திலத் தின்பண்பாய்ச் சத்தியே யெவ்விடத்துஞ் சாருமால் - ஒத்தே அளிப்பான் உடல்பொர்ருளோ டாவியெல்லா மாங்கே ஒளிப்பான் குருவோ ஒழி. 35 அகத்தகலா ஈசன்பால் அன்பாகித் தீய செகத்தகலு வாரே சிவமாய்ப் - புகுத்திடுமால் ஆர்ப்பார் உடல்பொருளோ டாவியெல்லாம் ஆங்கேறச் சேர்ப்பார் அவர்குருவாய்த் தேர். 36 தனக்குப் பலன்கருதான் தக்கவுயிர்க் குற்ற வினைக்குற்றந் தீர்ப்பான் விரத்தன் - மனைக்குற்றத் தோங்குவான் தீக்கைக் குறுங்கூலி வாங்கியில்லந் தாங்குவான் தேசிகனோ தான். 37 அனுக்கிரகம் செய்தங் கவர்பால் அணுகி இனிக்கிரகம் தாங்கென் றிரவார் - தனிகதிராய்க் காய்வார் பிரவஞ்சக் காரகல னோக்கியருள் ஈவார் துறவோரென் றெண். 38 பிணிதீர்ப்பார் மக்கள் பிணியுற்றார் கூலி எணிஒரா மக்கட் கிரங்கி - அணிநோயை மாற்றுவார் போல மலப்பிணியை மன்னுயிர்க்குப் பற்றுவார் தேசிகராய்ப் பார். 39 தன்னாக்த் துற்றார் தருமகுரு ஆகுமென இன்னா இலத்தார் இசைவென்னாம் - மின்னாம் அனித்தியத்தைச் சேர்ந்தங் கறிவறிவிற் சேர்ந்து செனித்தவரே தேசிகர்தே சால். 40 திலமளவு தானம் திகழ்மலைபோல் ஆகிப் புலம்விளையச் செய்யும் புகழால் - இலமன்ற தேசிகர்க்கே ஆவிதனுச் செல்வமுமொத் தீவாரை மாசிவமாய் மாணா மதி. 41 பலவிசிட்டத் தாலும் பவமறவே நோக்கும் நிலைவிசிட்டத் தாலுநிறை வாலுங் - கலைவிசிட்டம் காட்டி அறிவிற் கலப்பானும் நீத்தோரை நாட்டியற் றேசிகராய் நாடு. 42 ஆகையினால் ஆர்க்கும் அனுக்கிரக ராம்சிவத்தோடு ஏகமாய் ஆவிக் கிசைந்தபரி - பாகமே நோக்குத் துறவோரை நுண்ணறிவாய் உள்ளத்தில் அக்குவதே ஆவிக் கணி. 43 விடப்பட் டதனு விடுவிப்பார் தம்மால் தொடப்பட் டதனைவிடச் சொல்லர் - தடைப்பட்ட இல்வாழ்வார் நன்கென் றிசைப்பார் இதனைவிடச் சொல்வார் அலரே துணி. 44 உண்ணான் புலால்தீதென் றோதுவான் உண்பான்தீ தெண்ணான் இலந்தீதென் றேத்துவான் - பெண்ணைத் துறந்தான் இலத்துறைவான் தோய்ந்தநலஞ் சற்றும் மறந்தான் அலனே மதி. 45 சரியாதி நான்கின் தரும்குரவோர் நான்காய் வரையா மரபின் வரினும் - உரைசேரும் ஊனக் குரவர் ஒருமூவர் மற்றோருவர் ஞானக் குரவரென நாடு. 46 கரும குருநிலைமை கைவிட்டு ஞான தரும குரவனடி சாரென் - றொருமித்தே எல்ல மொழியும் இசைக்கும் துறவோர்க்கின் றில்லா ரிணையலவாய் எண். 47 ஆய்ந்துகிரி யாவிதிவீ டாயாக் குரவனைவிட்(டு) ஆய்ந்தறிக வாய்ந்தவர்க்கா ளாயென்று - தோய்ந்தநெறி வல்லான் கருணை மறைந்ஞான மாமுனிநூல் நல்லான் உரையதனை நாடு. 48 பிரமவுப் தேசம் பெறுதலே பாங்கு கருமவுப தேசம் கழியென் - றுரமதுற உற்ற மறைஞான மாமுனிவன் ஓதியநூல் நற்றுமவர்க் கன்றோ நலம். 49 உயர்ந்தோரைச் சேர்ந்தோன் உறுமிலத்தைத் தாங்கும் நயந்தோரைச் சார நலமோ - கயந்தோர் மலங்களையத் தோன்றி மருவுகர வோர்க்கும் இலங்களைவான் அன்றோ இவன். 50 அறத்துறந்தார் இற்கதிகம் ஆனாலும் அங்கத் திறத்தகல்வார்க் கொப்பாமோ தேரின் - புறத்துறவோர் மேலவத்தை செல்லார் மிகுசகளத் தொன்றாவர் ஆலவரைக் கீழாய் அகல். 51 இல்லறத்தார்க் கெல்லாம் உறினுமிவ் வில்லத்தைக் கொல்லுதற்குண் டாமோ குண நெறிகள் - புல்லற்த்தைத் தீர்ந்தார்க்கு நல்லறிவு சேர்ந்திடினும் மேலறிவு சார்ந்தாய்தற் குண்டோ சதுர். 52 சகளத் தபிமானஞ் சாலோக மாதி நிகளத் தழுத்தி மலநீக்கும் - அகளத்தை உற்றார் நிராமயமாய் நீள்சிவத்தோ டோரறிவாய் அற்றார் தமையென் ற்றி. 53 காயம் அறுங்கால் கருதியமெய் யாவிவிட்டுப் போயோர் தனுவிற் புகுகையால் - ஆயகலைய் தந்திரமா யோசித்துத் தானியத்தால் ஆகுதியை மந்திரத்தாற் செய்வன் மகிழ்ந்து. 54 ஆவி பிறிதுட்லை ஆவரிக்கும் ஆசரியன் பாவிக்கு மாறு படாததனால் - பூவில் தரும்பொருளால் ஆகுதியைத் தக்க அரற் காக்க வருமதனால் நற்கதிக்கு மால். 55 அடைந்ததனுப் போய்யென் றறிவிக்க ஆய்ந்து மிடைந்ததனு விட்டருளை மேவித் - துடர்ந்த குருவருளைப் பற்றிக் குறித்தவத்தை அஞ்சில் வருந்துறவோர்க் கன்றோ வரும். 56 தத்துவத்தை நீங்கில் தகுமறிவோர் தேகாந்தம் ஒத்த உயிர்க்கு அந்தியோட்டி ஓதக்கேள் - முத்தி அவத்தை கழித்தருளோ டாக்கிக் ககுணைச் சிவத்தில் அழுத்துவதைத் தேர். 57 வரையகில மாதின்ப மாதவரைச் சேரும் புரையகில என்னும் புகழ் நூல் - கரையகலக் கற்றும்பொய் வஞ்சத்தைக் காமுறுவார் நூலதனை உற்றும் உறாதாரென் றோர். 58 அருணூல் சிவதீக்கை அற்றும் அகில மருண்மால் அகல்வார் மதியாம் _ பொருணூல் அறிந்தும் பிறர்க்கே அனுக்கிரகம் செய்திற் செறிந்தார் அறிவலவாய்த் தேர். 59 மருணீக்கும் தீக்கை வகைநான்கும் உற்றும் பொருணீக்கும் இல்லிற் புண்ர்வார் - இருணீக்கம் உற்றார் அலராம் ஒருநூலுந் தீக்கையுமற் றற்றா ர்றிவென் ற்றி. 60 நிறைந்தகல்வி தீக்கை நிறைவாலும் பாகம் சிறந்த தல அகிலம் சிந்தத் - துற்ந்த நெறிச் சீரகத்தார் காவி சிறந்ததாம் தீக்கையுற்றுங் காரக்த்தார்க் காவியிலை காண். 61 அநிந்தியத்தை நித்தியமென் றாய்வார் மத்திற் செனித்தவரென் றாக்மங்கள் செப்பும் - தனித்தறிவாய் நித்தியத்தை நித்தியமென் றாய்வார்கள் நீல்சிவத்துற் பத்தியென நீத்தோரைப் பார். 62 உலக தருமிணியோ(டு) ஒண்கரும பாக்ங் குலவுமிற் காமக் கணமும - நிலவியுடும் புல்லறத்தை மாற்றிப் பொருந்துஞ் சிவதீக்கை இல்லறத்தார்க் காகுமென எண். 63 சிவதரும நன்மணியும் சேருமல பாகம் அவமறைக்கும் ஈசற் கவாவும் - பவமாய் இறைமறைக்கும் இல்லிற்(கு) இசையாத ஈசன் துறவறத்துக் கென்றே துணி. 64 தாரகைநேர் இற்கரவர் தண்மதிக்கு நேராகுங் காரகத்தை நீத்த கனகுரவர் - பாரகத்தில் ஆர்க்கும் இருள்தீர்க்கும் ஆதவன்நேர் மையலற்த் தீர்க்கும் அருட்குருவாம் தேசு. 65 சாதிக் கதிகந் தகுமறையோர் சட்சமய நீதிக்குட் சைவ நிலையதிகம் - ஆதி மறைக்கதிகம் ஆகமமே ஆகமமே வாண்மதஞ்சேர் இல்லாம் துறைக்கதிகம் நீத்தோர் துணி. 66 இலைத்த அறமிரண்டும் நேரொக்கத் தூக்கில் பலத்தில் குறைஅதிகம் பார்க்கில் - இலத்தோர் கடுகில் அணுவளவுங் காணாது நீத்தோர் நெடுமலையும் வானினும் நீட்டு. 67 அறிவித்தால் ஒத்தங் கறிவார்பொய் அங்கம் பிறிவித்தால் அக்கலைகள் பேரும் - அறிவித்தால் ஒன்றும் அறியா தவர்க்குமுறும் பாவனையால் கொன்றிதுவான் நீத்தோன் குறித்து. 68 பவுத்தர்முத லாய பலசமயம் எல்லாம் தவத்துக் குரித்தாய்த் தகுமால் - நவத்தாம் அறமிரண்டாம் இல்லுக்கும் அந்தந்த மார்க்கத் துறவதிகம் என்றே துணி. 69 பேறிஉவே ஆதலினால் பெற்ற அதி காரத்தை மாறுபட்தார்க் கன்றோ வரும்பிறவி - ஆறுபட்ட செஞ்சடையான் செஞ்சொல்லைச் சேர்த்தேன் அறிவுடைமை நெஞ்சடைய மாணா நினைந்து. 70 சிவாச்சிரமத் தெளிவு முற்றிற்று சிவாச்சிரமத் தின்தெளிவைச் செய்தெழுப தாகப் பவச்சிரமம் மாற்றிப் பணித்தான் - சிவாச்சிரமம் தென்னா வடுதுறையில் தேவம் பலவாணன் என் அகத்(து) இன்பாய் எழுந்து. |