உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அம்பலவாண தேசிகர் அருளிய உபதேச வெண்பா உரைத்த கருணை உபதேசந் தன்னை விரித்தொரு பாவில் விளக்கக் - கருத்துவரல் ஒத்தாசை நீயே உணர்த்தா வடுதுறையென் அத்தா நாச்சிவா யா. 1 முத்திக்கு மூலம் மொழியுங் குருக் கிருபை பத்திக்கு மூலம் பகருமன்பு - புத்திக்கு மூலம் அரனெவர்க்கும் மூலமே யென்றறிவில் சாலமதிப் பாரே தவர். 2 புற்றரவே ஆடும் புகழ்மந் திரத்தார் முன் மற்றரவுக் காட மதியுண்டோ - சற்குருவை ஒட்டி நடக்கும் உயர்தவர்க்கும் ஒவ்வாமல் விட்டுநடப் பார்க்கும் விதி. 3 நீரரவு மந்திரத்தின் நில்லாது நீதியல்லாப் பார்நரருக் குண்டோ பரமகுருச் - சீரருளைச் சிந்தித்தார்க் கன்றோ சிவஞானம் சற்குருவை வந்தித்தார்க் கண்றோ வரும். 4 அரியைப் பதியென் றறிவிப்பார் தம்மைப் பிரிவித்தார்க் கன்றோ நற்பேறாம் - பெரிய அரன் பாதத்தின் மோகப் படுவாரை நீத்தரியைப் போதித்தார்க் கேநிரயப் போக்கு. 5 தேமருவு காமச் செயலிரண்டாஞ் செல்புத்தி காமரையே நீத்துக் கருதுமுத்தி - காமரையே உற்றார் தமக்கே உறுமுத்தி நீத்ததனைப் பெற்றார்க்கும் உண்டோமெய்ப் பேறு. 6 ஆகமல பாகமே ஆனாலும் ஆகத்தின் மோகமரன் பாலாக முற்றுமால் - தேகம் ஒருவடிவே யானாலும் உற்றவிகற் பத்தால் திருவேடம் ஈசனெனத் தேறு. 7 அங்கமே பொல்லா அவத்தமாம் ஆவிபொய் அங்கமே அல்ல அறிவாகும் - அங்கத்தை மாற்றினார்க் கன்றோ மதியாகும் மையலுற்றுத் தேற்றினார்க் குண்டோ செயல். 8 பற்றற்ற கண்ணே பசு விளங்கும் மேலருளைப் பற்றுதலால் அந்தப் பசுவுமறும் - குற்றமற்ற முத்திக்கும் உண்டோ மொழியும் உடல்விகற்பம் புத்திக்கே வாய்க்கும் பொருள். 9 எனதென்றும் இல்லத்தை யானென்றுங் காய மனதொன்றித் தன்றோ மல்த்தால் - நினைவொன்றி அங்கம் எனதாய் அடைந்தபோ தன்றோமெய் தங்குமரு ளாகத் தரும். 10 யானென்ற காயம் எனதென்ற போதுமலம் தானகன்ற தன்றோ தரிக்குங்கால் - ஊனகன்ற ஆவியே நேயம் அடையும் அலாதார்க்குப் பாவிப்ப தன்றோ பயன். 11 காயமே தானாய்க் கருமும்போ(து) ஆவிமல மாயமே அல்லாது மற்றுண்டோ - காயம் தனதாகும் போது தகுமுயிரும் ஒன்றாய் நினைவாகும் அன்றோ நிறைந்து. 12 யானென்னுங் காயம் எனதென்று பேதித்தும் ஊனோன்றி நிற்கும் உயிரன்றோ - தன்னொன்றில் நில்லாத போது நிறைவாகல் தன்னியல்பாம் இல்லார் பொதுவியல் பென்(று) எண். 13 சாயத்தை ஏற்ற தகும்பளிங்கு போலங்க மாயத்தை ஏற்ற மதியன்றோ - கயத்தை நித்தபோ தன்றோ நிறைவாம் நிகழ்சிவத்தை ஆர்த்தபோ தன்றோ அவர். 14 சீவிக்குங் காயஞ் செயலற்ற போதன்றோ ஆவிக்குத் தன்னியல்பே ஆகுமால் - தேவனையே ஓட்டியபேர்க்(கு) ஈதாம் உறுநிட்டை ஒவ்வாமல் தெட்டிய பேற்க்(கு) உண்டோ சிவம். 15 அகலத்தை மற்ற அகளத்தார் அல்லால் சகளத்தார் சாரத் தகுமோ - அகள நிராமயமே யாமால் நிராமயற்கே அலால் பராவமுத மாகப் படா. 16 உடற்பகுதி மற்ற உயிர்ப்பகுதுப் பேதந் திடப்பட்டார் முத்தித் திறத்தார் - விடப்பட்ட அங்கத்தை ஒட்டி அறிவார் பதமுத்திச் சங்கத்தார் என்னத் தகும். 17 வாதித்த காயத்தை மாற்றாமல் ஆசிரியர் போதித்த தெல்லாம் பொதுவியல்பாம் - பேதித்த அங்கத்தை மாற்றும் அனுக்கிரகம் ஞானத்தின் சங்கத்தால் உற்ற சதுற். 18 இயல்பு பொதுவாய் இசையும்போ(து) ஆவி அயலே மயலாய் அடையும் - இயல்பிநிலை தன்னையே நோக்கில் தடுத்தமலம் அத்தனையும் அன்னியமெ ஆக்கப் படும். 19 கேட்டலொரு நான்குங் கிடைத்தபேர்க் கேகருணை வீட்டை அடைதல் வினோதமாம் - மாட்டாதார் வீட்டை மருவ வெறு நிட்டை செய்வதங்கச் சேட்டை யென்ப தன்றோ திடம். 20 சரியை கிரியையெனத் தங்கும் இரண்டுள் உரியதொரு யோகம் ஒடுங்கும் அதனைப் வருமவர்க்கே எல்லா மதியாம் அதனைப் பிரிவார்க்கும் உண்டேமெய்ப் பேறு. 21 சமயம் விசேடமெனத் தங்கியதே தீக்கை அமையும் தொழிலோ(டு) அமையும் - இமையுமெடா(து) உற்றிப்ப தெங்ஙன் உறுந்தொழிலோ(டு) ஒன்றாகப் பற்றிநிற்ப தெங்ஙன் பகர். 22 சத்திநிபாதம் சதுர்விதமாம் ஆங்கதனை ஒத்த சரியாதி ஒருநான்காம் - முத்திநலத்(து) உற்றதொழில் நான்காம் உறுமுத்தி ஒர்நான்காய்ப் பெற்றதன்றோ தீக்கையின் மெய்ப் பேறு. 23 சமய விசேடகம் தகுஞானம் என்ன உமையொரு பாகர் உரைத்த(து) - அமைய இருந்(து) எட்டுதற்கோ ஈசற்(கு) இசைந்ததொழி லோடிசைந்தங்(கு) ஒட்டுதற்கோ ஒன்றை உரை. 24 சாதித்த யோகம் சமய விசேடமதில் போதித்(து) அடங்கப் பொருந்தியதாம் - பேதித்த தீக்கையென்ப(து) இன்றாம் தியானமே யோகமதால் ஏற்குமெவ்வி டத்துமெனெ எண். 25 ஊகித்(து) இதனை உணராதார் அன்றோமெய் யோகத்தை வேறே உணர்வதுமெய் - யோகம் பிரித்தறிவ தன்று பிரியாத் தொழிலில் தரித்தறிவ தாகத் தகும். 26 பேதித்த காயம் பிரியாமல் நிட்டையெனச் சாதிப்ப தெல்லாம் தவறன்றோ - வாதித்த காயமற்றால் ஆவி கருதுமரன் போற்கருணை நேயமுற்ற தன்றோ நிலை. 27 நீதித் தருமம் நிறுத்தும் சிவாகமத்தை சாதித் தாலன்றோ தகுநிட்டை - வாதித்த அங்கத்தோ(டு) ஆவி அரனெறியும் ஆயாத சங்கமோ நிட்டைச் சதுர். 28 சொல்லும் சிவாகமத்தின் சூழனைத்தும் பாராமல் வெல்லும் புலனைந்தும் வெல்லாமல் - செல்லுநெறி தன்னை வினையைத் தலைவனையுங் காணாமல் மன்னுதலோ நிட்டை வளம். 29 அறியும் பகுதி அறிவறியத் தானே பிறியும் பகுதி பிறியும் நேறியாகும் சன்மார்க்கத் தாற்கே தகுஞான நூலோதல் நன்மார்க்கத் தாகும் நாம். 30 பாதத்துக் கேற்ற பணிபலவுஞ் செய்துமலஞ் சேதித்தார் கன்றோ திடமாகும் - நீதி நடையே நடந்தரனை நண்ணியென்றும் நீங்காத் தடையே சமாதிச் சமாதிச் சதுர். 31 தீக்கைக்தனக் குற்ற செயக்பலவுஞ் செய்து மலம் நீக்குதலே அன்றோ நிலையாகும் - பாக்கியமாம் பூசையின்மேல் மோலப் புணர்ப்பல்லால் மற்றுமோர் ஆசையின்மேல் உண்டோ அரன். 32 பூசை தியானம் பொருந்துந் தொழிலனைத்தும் நேசித்தார்க் கன்றோ நிலையாகும் - தேசுற்ற அத்து விதத்தோ(டு) அடைவதெல்லாம் நன்மேனி புத்தியின்மேல் உற்ற பொருள். 33 கற்பிப்ப தெல்லாங் கருணைவடி வல்லாது கற்பிப்ப தல்ல கருணைநலம் - அற்புதமாய்ப் போக்குதே தும்போக்கிப் போகாப் பொருளறிவில் ஆக்குவதே நிட்டைக் கழகு. 34 சுருதிகுரு வாக்குச் சுவானுபவம் ஒன்ற மருவுவதே ஞானவழக் காகும் - சுருதி அடையாமல் நிட்டை அடைவதெல்லாம் முத்தித் தடையாகும் என்னத் தகும். 35 அளவையொரு முன்றாம் அறிபொருளுக்(கு) ஆவி உள அறிவார்க்கு ஏதளவை ஓது - மெள அறியும் அக்கங் கருதல் அடையாநல் லாகமத்தின் பக்கமுமின் றாமேல் பழுது. 36 முந்தியதோர் செய்யுள் முதல்நினைப்பார் எல்லார்க்கும் சந்தயமே இல்லைத் தகுநிட்டை - இந்தநூல் வந்தித்தார்க் கன்றோ மருவும் சமாதிஅதைச் சந்தியார்க்கு ஏதாகுந் தான். 37 வாக்குமனக் காயம் மருவா அறிவுமையல் ஆக்கௌயுற்று நிற்பார்க்(கு) அகப்படுமோ - நீக்கமிலாக் காயமறும் போது கருதுமரன் போலாவி நேயமுறும் அன்றே நிறைந்து. 38 ஊகம் அனு போமென ஓரிரண்டாம் மும்மலங்கள் பாகப் படாதார்க்கும் பட்டாதார்க்கும் - ஆகமுறப் பட்டார்க்கு உபாயம் பகற்நூலோ(டு) ஊகித்தல் விட்டார்க்(கு) அனுபோகம் வீடு. 39 முத்தியென மற்றொன்றைப் பற்றி முயல்வதெலாம் புத்தயற்ற தன்றோ புகலுங்கால் - சித்தமுற்றங்(கு) ஓயாத துன்பத்து உறுவிக்கும் தேகத்தைத் தோயா தவரே சுகர். 40 சன்மார்க்கம் என்னத் தகுநூலை ஒதியதன் புன்மார்க்க மெல்லாம் புறம்பாக்கி - நன்மார்க்கம் சார்ந்தறிவைச் சார்ந்து தகும்பூ ரணமாகத் தோய்ந்தபேர் அன்றோ சுகர். 41 ஆகமுற்றார்க் கெல்லாம்பொய் அங்கமுற்ற மங்கயைர்கள் போகமுற்ற தல்லாற் பொருளுடோ - மோகம் தணிந்தானை நோக்கித் தகும்பூசை செய்யத் துணிந்தபேர் அன்றோ சுகர். 42 செஞ்சொலால் இன்னுரையைச் சேர்த்தேன் அறிவுடைமை நெஞ்சடைவ தாக நினைந்தருளாஞ் - செஞ்சடைசேர் ,எய்யா உபதேச வெண்பாவே நீயாம் என் ஐயா நமச்சிவா யா. 43 உபதேச வெண்பா முற்றிற்று |