திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன் அறத்துப்பால் பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.பகவன் முதற்றே உலகு. 1 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.நற்றாள் தொழாஅர் எனின். 2 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.நிலமிசை நீடுவாழ் வார். 3 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.யாண்டும் இடும்பை இல. 4 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
இறைவனின் மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்.நெறிநின்றார் நீடுவாழ் வார். 6 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.மனக்கவலை மாற்றல் அரிது. 7 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.பிறவாழி நீந்தல் அரிது. 8 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
எண் வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது.தாளை வணங்காத் தலை. 9 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.இறைவன் அடிசேரா தார். 10 2. வான் சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்.தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.துப்பாய து¡உம் மழை. 12 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்.உள்நின்று உடற்றும் பசி. 13 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.வாரி வளங்குன்றிக் கால். 14 கெடுப்பது¡உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.எடுப்பது¡உம் எல்லாம் மழை. 15 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகில், பசும்புல்லின் தலையைக் காண்பதுங் கூட அருமையாகி விடும்.பசும்புல் தலைகாண்பு அரிது. 16 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும்.தான்நல்கா தாகி விடின். 17 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா.வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்.வானம் வழங்கா தெனின். 19 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.வான்இன்று அமையாது ஒழுக்கு. 20 3. நீத்தார் பெருமை ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் துணிபு.வேண்டும் பனுவல் துணிவு. 21 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
பற்றுகளை விட்டவரின் பெருமையைஅளந்து சொல்வதானால் உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும்.இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
இம்மை மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும்.பெருமை பிறங்கிற்று உலகு. 23 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான்.வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனுடைய வலிமைக்கு அகன்ற வானுலகோர் கோமானாகிய இந்திரனே போதிய சான்று.இந்திரனே சாலுங் கரி. 25 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவர் பெரியோர்; சிறியோர், செய்வதற்கு அரியவற்றைச் செய்யமாட்டாதவர் ஆவர்.செயற்கரிய செய்கலா தார். 26 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.வகைதெரிவான் கட்டே உலகு. 27 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.மறைமொழி காட்டி விடும். 28 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும்.கணமேயும் காத்தல் அரிது. 29 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர்.செந்தண்மை பூண்டொழுக லான். 30 4. அறன்வலியுறுத்தல் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை.ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.செல்லும்வாய் எல்லாஞ் செயல். 33 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை.ஆகுல நீர பிற. 34 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்.இழுக்கா இயன்றது அறம். 35 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத துணையாகும்.பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
சிவிகையைச் (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் அமர்ந்து செல்பவன் ஆகியவரிடையே, ‘அறத்தின் வழி இதுதான்’ என்று கூற வேண்டாம்.பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.வாழ்நாள் வழியடைக்கும் கல். 38 அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.புறத்த புகழும் இல. 39 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.உயற்பால தோரும் பழி. 40 இல்லறவியல் 5. இல்வாழ்க்கை இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.நல்லாற்றின் நின்ற துணை. 41 துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.இல்வாழ்வான் என்பான் துணை. 42 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும்.பண்பும் பயனும் அது. 45 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன?போஒய்ப் பெறுவ தெவன்? 46 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்.முயல்வாருள் எல்லாம் தலை. 47 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை
பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும்.நோற்பாரின் நோன்மை உடைத்து. 48 அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
அறம் என்று சான்றோரால் சொல்லப்பட்டது யாதெனில், இல்வாழ்க்கையே; அதுவும் பிறன் பழித்துப் பேசுவதில்லையானால் சிறப்பாகும்.பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்.தெய்வத்துள் வைக்கப் படும். 50 6. வாழ்க்கைத் துணைநலம் மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்.வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது.எனைமாட்சித் தாயினும் இல். 52 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன?இல்லவள் மாணாக் கடை? 53 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை.திண்மைஉண் டாகப் பெறின். 54 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும்.பெய்யெனப் பெய்யும் மழை. 55 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்.நிறைகாக்கும் காப்பே தலை. 57 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்.புத்தேளிர் வாழும் உலகு. 58 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை.ஏறுபோல் பீடு நடை. 59 மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.நன்கலம் நன்மக்கட் பேறு. 60 7. மக்கட்பேறு பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை.மக்கட்பேறு அல்ல பிற. 61 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா.பண்புடை மக்கட் பெறின். 62 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
‘தம் பொருள்’ என்று போற்றுதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப்பயனால் வந்தடையும்.தம்தம் வினையான் வரும். 63 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.சிறுகை அளாவிய கூழ். 64 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உலகுக்கு இன்பமாகும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65 குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, ‘குழலிசை இனியது’, ‘யாழிசை இனியது’ என்று புகழ்ந்து கூறுவார்கள்.மழலைச்சொல் கேளா தவர். 66 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.முந்தி இருப்பச் செயல். 67 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்.மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.சான்றோன் எனக்கேட்ட தாய். 69 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
மகன், தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ’ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.என்நோற்றான் கொல் எனும் சொல். 70 8. அன்புடைமை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்.புன்கணீர் பூசல் தரும். 71 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.என்பும் உரியர் பிறர்க்கு. 72 அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர்.என்போடு இயைந்த தொடர்பு. 73 அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும்.மறத்திற்கும் அஃதே துணை. 76 என்பி லதனை வெயில்போலக் காயுமே
எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்.அன்பி லதனை அறம். 77 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம்.வற்றல் மரந்தளிர்த் தற்று. 78 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்?அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்.என்புதோல் போர்த்த உடம்பு. 80 9. விருந்தோம்பல் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும்.வேளாண்மை செய்தற் பொருட்டு. 81 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று.மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று. 82 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்.பருவந்து பாழ்படுதல் இன்று. 83 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்.நல்விருந்து ஓம்புவான் இல். 84 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ?மிச்சில் மிசைவான் புலம். 85 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர்பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.நல்வருந்து வானத் தவர்க்கு. 86 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும்.துணைத்துணை வேள்விப் பயன். 87 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
பொருளை வருத்தத்தோடு காத்து, அது போய்விட்டபோது ‘தாம் பற்றில்லாதவர்’ என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வியில் ஈடுபடாதவரே யாவர்!வேள்வி தலைப்படா தார். 88 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும்.மடமை மடவார்கண் உண்டு. 89 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.நோக்கக் குநழ்யும் விருந்து. 90 10. இனியவை கூறல் இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.இன்சொலன் ஆகப் பெறின். 92 முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.இன்சொ லினதே அறம். 93 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 94 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா.அணியல்ல மற்றுப் பிற. 95 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும்.நாடி இனிய சொலின். 96 நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.பண்பின் தலைப்பிரியாச் சொல். 97 சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்.இம்மையும் இன்பம் தரும். 98 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?வன்சொல் வழங்கு வது? 99 இனிய உளவாக இன்னாத கூறல்
இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100 |