![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’ |
டென்னிஸ் மழைக் காலம் ஆரம்பித்து விட்டது. மக்களின் மனம் கொஞ்சம் குளிர ஆரம்பித்திருக்கிறது. வறட்சையால் தவித்த செடி, கொடி, பயிரினங்கள் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றன. வருமோ என்று ஏங்கிய ஜனங்களும் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றனர். பச்சைப் பசேலென்று வயல்கள் சிரித்துச் சிரித்து ஆடுகின்றன. குடியானவர்கள் மழைத் தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள். நமக்கும் வெகு ரம்மியமாகத்தானிருக்கிறது. ஆனால் - இந்த எழவு ஆனாலைச் சொல்லு! எந்த நல்ல விஷயத்திலும் ஒரு நொடிக்குள் விஷத்தை திணித்து விடுகிறதே... உம்! அதற்கு நாமென்ன செய்யலாம். மழையினால் நன்மையென்றேனல்லவா? அதனாலேயே பலருக்குத் துன்பம் விளைகிறது தெரியவில்லையா? எவ்வளவு தான் வெயில் கொளுத்தி, கால்களில் 'பொடி' ஒட்டிக் கொண்ட போதிலும் "நல்லா வெயில் கொளுத்துது" என்று மட்டும் சொல்வார்கள். ஒருக்கால் சற்று இளைப்பாறுவார்கள். ஆனால் சேர்ந்தாற் போல் இரண்டு மூன்று நாள் மழை மட்டும் பொழிந்து விட்டால் உலகம் தவிப்பாய் தவிக்கிறது. கூரை வீடுகளுக்கும் மண் சுவர்களுக்கும் காலம் பெருங்கி விடுகிறது. ஏழைகள் வீடெல்லாம் ஒரே ஒழுக்கு. வீட்டிலிருக்கும் குடியானவனோ, வண்டிக்காரனோ, கொசுவோடும், மாடுகளோடும், சாணியோடும், மழை ஜலத்தோடும், குழந்தைகளோடும் திரும்ப இடமில்லாமல் வீட்டில் தத்தளிப்பது பார்க்க சகிக்காத காட்சி. இதற்குக் கதி மோட்சமேது? ஏழைகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டம். பணக்காரர்களுக்கும் இது பெரிய கஷ்டந்தானாம். "என்ன சார்! டென்னிஸ்தான் இல்லை. ஹாலுக்குப் போய் ஒரு ஆட்டம் 'பிரிட்ஜ்' போடுவோமென்றால், போக முடியாது போலிருக்கிறதே. தரித்திர மழை!" என்கிறார் ஒரு பணக்காரர். |