இந்தப் பல் விவகாரம்

மைக்கேல் ஜோஷெங்கோ - ருஷ்யா

     எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது.

     காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம். வருஷங்களும் ஓடி மடிகின்றன. மனுஷ சரீரமும் நைந்துபோக ஆரம்பிக்கிறது. எலும்புகளும் ஒடிய ஆரம்பிக்கின்றன. பல்லுக்கும் அதே கதிதானே!

     சுருக்கமாகச் சொல்லப்போனால், ஐவான் எகோரிச் ஸாசகெவ் பற்களை ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்தார். இவர் எங்களோடு வந்து வசிக்க ஆரம்பித்து சுமார் ஒரு வருஷ காலமிருக்கும்.


அஞ்சாங்கல் காலம்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

கிரிவலம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

அறிந்தும் அறியாமலும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - 2
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

குட்பை தொப்பை
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

வரப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

மானாவாரி மனிதர்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நாயுருவி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

கனவு சினிமா
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

கடல்புரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

மனிதனும் மர்மங்களும்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

அம்பானி கோடிகளைக் குவித்த கதை
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

பண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy

சிரியாவில் தலைமறைவு நூலகம்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

கள்ளம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கே.பாலசந்தர்
இருப்பு உள்ளது
ரூ.105.00
Buy

அரசியலின் இலக்கணம்
இருப்பு உள்ளது
ரூ.515.00
Buy

பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

கற்சுவர்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
     பேச்சு முற்றியபோது அவருடைய பற்களில் ஒன்று வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பது வாஸ்தவந்தான். ஆனால் மற்றவையெல்லாம் சுய இஷ்டத்தின் பேரிலேயே வெளியேற ஆரம்பித்தன. அவை 'சம்பவங்களுக்காக'க் காத்திருக்கவில்லை. அடை சுவைக்கும்போது அவை ஒடிந்து விழுந்தன. சம்பள விகிதம்பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தபோது சில நொறுங்கின; அல்லது யாருமே இல்லாத சமயத்திலும் அவை வெளியேறின. மிகவும் ஆச்சரியப்படத்தக்கதுதான். சொற்ப காலத்தில் அவர் ஆறு பற்களை இழந்தார்.

     ஆனால் எங்கள் எகோரிச் இதைக் கண்டு கவலை கொள்ளவில்லை. பொக்கை வாய்ப் பயம் அவருக்குக் கிடையாது. அவர் இன்ஷுர் செய்து கொண்டிருந்தார். அவருக்குத் தேவையான சமயத்தில் வேறு பல் ஒரு ஸெட் வந்து சேரும். அதை நினைக்க நினைக்க அவருக்கு ஆனந்தம் குதி போட்டது.

     "பல் விவகாரத்திலே நமக்குக் கஞ்சத்தனமே கிடையாது. யாரும் பல்லைத் தட்ட வந்தால் எனக்கு அதை இழக்க எப்போதும் சம்மதந்தான். எந்தப் பயலும் அடிக்க வந்தால் மூக்கிலோ முஞ்சியிலோ குத்துவிட அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தப் பல் விவகாரம் வேறே. அதைப் பற்றிக் கவலையே கிடையாது. எங்களைப்போல இன்ஷுர் செய்து கொண்டவர்களுக்கெல்லாம் ஆபத்தே கிடையாது" என்று எகோரிச் தம்முடைய கொள்கையை சாயனம் செய்து கொண்டிருப்பது வழக்கம்.

     பல் ஆறு போனதும், மூலாதார ரிப்பேருக்காக ஏற்பாடு பண்ணுவது என்று தீர்மானித்தார். இன்ஷுரன்ஸ் கடுதாசிகளை எடுத்துக்கொண்டு ராஜாங்கப் பல் ஆஸ்பத்திரிக்கு நடையை நீட்டினார்.

     பல் ஆஸ்பத்திரியிலே அவரைப் பார்க்கச் சந்தோஷம் என்றார்கள். "ஒரு ஸெட் செய்து கொடுக்கத் தயார்தான். உங்களுக்கு எத்தனை பல் போச்சு. அடாடா... குறைந்த பட்சம் எட்டுப்பல் போனால்தான் செய்து கொடுக்க வேண்டும் என்பது எங்கள் சட்டம். உமக்கு அதைவிட ஜாஸ்தி போயிருந்தால் உம்முடைய அதிர்ஷ்டம். எங்கள் துரதிர்ஷ்டம் எட்டுக்கும் குறைந்திருந்தால் எங்களால் உமக்கு எதுவும் செய்து தருவதற்கு சாத்தியப்படாது. சில்லறை வேலைகளை வைத்துக் கொண்டு நேரத்தை வீண்படுத்த ஆஸ்பத்திரியால் முடியாது. இன்ஷுரன்ஸ் சம்பந்தமான சட்டம் எல்லாம் அந்தப்படிதான்."

     "எனக்கு ஆறு பல் போச்சு" என்றார் எகோரிச்.

     "காம்ரேட், என்ன செய்யலாம்? ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கு. நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லையே. எட்டு விழுகிறவரை நீ காத்திருக்க வேண்டியதுதான்" என்றார்கள்.

     எகோரிச்சுக்கு ரொம்பக் கோபம் வந்தது.

     "நான் சுத்தியை வைத்துப் பல்லைத் தட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? உங்கள் அர்த்தம் தான் என்ன?"

     "நீர் பல்லைகில்லைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. இயற்கையின் போக்கில் நீர் தலையிடலாமா? நீர் காத்திருக்க வேண்டும். அதிர்ஷ்டமிருந்தால் இரண்டு மூன்று தானே விழுந்து விடக்கூடும்."

     ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வரும்போது எகோரிச் மனம் நிலை கொள்ளவில்லை. இந்தப் பல் விவகாரத்தில் அவ்வளவு நிச்சயமிருந்தது அவருக்கு. ஆனால் இப்பொழுது பார்க்கப் போனால் எல்லாம் ஏகக் குளறுபடியான சிக்கலாகக் கிடக்கிறது.

     இந்த அதிர்ஷ்டக் குந்தகமான அந்தப் பற்கள் விழும்வரை காத்திருப்பது என்று தீர்மானித்து மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டார்.

     ஒன்று வெகு சீக்கிரத்தில் விழுந்தது. இன்னொரு பல்லுடன் எகோரிச் கொஞ்சகாலம்... தச்சனுடைய அரத்தை வைத்துப் பல்லுக்கு மெருகு கொடுக்க முயன்றார். அது ஆட்டம் கொடுத்து ஈறை விட்டு வெளியே கழன்று விழுந்தது.

     எகோரிச் கால்கொண்ட வேகத்தில் ஆஸ்பத்திரிக்கு ஓடினார்.

     "இப்பொழுது - சட்டப்படி எட்டுப் பல் விழுந்தாச்சு" என்று அறிவித்தார்.

     "ரொம்ப நல்லது. வேலையை இனிமேல் ஆரம்பிப்போம். இந்த எட்டுப் பல்லும் ஒரே இடத்தில் விழுந்திருக்கிறதா எப்படி? எட்டுப் பல்லும் ஒரே வரிசையில் விழுந்திருக்க வேண்டும் என்பது எங்கள் சட்டம். ஒரே வரிசையில் இல்லாவிட்டால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது; இங்கொன்றும் அங்கொன்றுமாக விழுந்திருக்கும் பற்களைப் பற்றிக் கவனிக்க முடியாது. உமக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். திக்காலுக்கு ஒன்றாக விழுந்திருந்தால் உம்மால் இன்றும் சுவைத்துச் சாப்பிட முடியு"மென்றார்கள்.

     "அவை ஒரே இடத்திலிருந்து விழவில்லை" என்றார் எகோரிச்.

     "அப்படியா? ரொம்ப வருத்தப்படுகிறோம். நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை."

     இதற்கு என்ன பதில் சொல்வது என்று எகோரிச்சுக்குப் புரியவில்லை. மீந்து நின்ற பல்லை நெற நெறவென்று கடித்துக்கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார்.

     எதிர்பாராத விதமாய் எப்படி வந்து முடிந்து விட்டது? இனிமேல் நமக்கென்ன கவலை என்ற நம்பிக்கையில் நிம்மதியாக ஜீவித்து வந்தார். ஆனால் இப்பொழுது நம்பிக்கையெல்லாம் நாசமாய்ப்போச்சு.

     அன்றிலிருந்து எகோரிச் ஜீவியமே மாறியது. இப்பொழுது ரொம்பவும் அமரிக்கையாகக் காலத்தைக் கழிக்கிறார். திரவ பானமாகத்தான் ஆகாரம். தினசரி மூன்று முறை பல் விளக்க ஆரம்பித்துவிட்டார்.

     இந்த மாதிரியில் பல் ஆஸ்பத்திரிச் சட்டம் ஒரு நல்ல காரியத்தைச் செய்தது!
சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி - PDF
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்