கிழவி

ஸெல்மாலேகர்லாப் - ஸ்வீடன்

     மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை. அவளுடைய நடையிலும் கிழடு தட்டவில்லை. நீண்ட சட்டையும் லேஸ் வைத்துத் தைத்த குல்லாயும் போட்டுக் கொண்டிருந்தாள். கையில் ஜெபப் புஸ்தகமிருந்தது. கழுத்துத் துணியில் லவண்டர் பூக்கொத்து ஒன்றைச் சொருகி இருந்தாள்.

     மலைச்சரிவிலே மரங்கள் வளரக்கூடிய வளத்தைக் குளிரினால் இழந்துவிட்ட பிராந்தியத்திலே அவள் ஒரு குடிசையில் வசித்து வந்தாள். விசாலமான பனிக்கட்டு ஆறு ஓரத்தில் அந்தக் குடிசை இருந்தது. மலையுச்சிக்கு மூடியிட்ட பனிக் கட்டிகள் திரண்டு இந்த ஆற்றுக்கு ஜீவனைத் தந்து பள்ளத் தாக்குவரை உந்தித் தள்ளி ஓட்டியது. அங்கே அந்தக் கிழவி தன்னந் தனியாய் வசித்து வந்தாள். அவளது உற்றார் உறவினர் யாவருமே செத்து மடிந்து விட்டார்கள்.


இமயகுருவுடன் ஓர் இதயப்பயணம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

The Greatness Guide
Stock Available
ரூ.270.00
Buy

கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

டிஜிட்டல் மாஃபியா
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மறக்காத முகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சுழலில் மிதக்கும் தீபங்கள்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

மூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

Curious Lives
Stock Available
ரூ.270.00
Buy

Seven Steps to Lasting Happiness
Stock Available
ரூ.270.00
Buy

இருள் பூமி
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

சிலையும் நீ சிற்பியும் நீ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

நீலகண்டம்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

காஃப்கா எழுதாத கடிதம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சிவப்பு மச்சம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இந்தியா என்றால் என்ன?
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

அன்பே தவம்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

நீர்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
     அன்று ஞாயிற்றுக்கிழமை. கர்த்தருடைய ஓய்வு நாள். அவள் சர்ச்சுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். புனித யாத்திரையால், அவளது மனம் ஏனோ மகிழ்ச்சியால் தழைக்காமல் சோர்வால் தள்ளாடியது. உபதேசியார் சாவைப்பற்றியும் செத்து மடிந்த பாவிகளின் ஆத்மாக்களை பற்றியும் அன்று செய்த உபதேசம் அவள் மனத்தில் வெகுவாய்ப் பதிந்திருந்தது. தான் இப்போது வசிக்கும் குடிசைக்கும் மேலே, மலையுச்சிலே பாவிகளின் ஆத்மாக்கள் கணக்கிலடங்காமல் திசை கெட்டுத் தடுமாறித் திரிகின்றன என்று சிறுபிள்ளைப் பிராயத்தில் யாரிடமோ கேட்டிருந்தது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது. பனிப்பாறைகள் மீது உலாவித் திரியும் இந்தக் களைப்பறியாச் சாயைகளை ஊசிக்குளிர்காற்று விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது என்று கதை கதையாகக் கேட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. மலைப்பயம். மகா பயங்கரத்தைத் தரும் எட்டாத் தொலைவில் உச்சாணிப் பயப்பிராந்தி அவளைப் பற்றிக் கொண்டது. அவளது குடிசை சரிவில் இருப்பதாக அவளுக்குப்பட்டது. அந்த மலையுச்சியில் திரியும் மாயாவிச் சமுதாயம் கீழே இறங்கி விட்டாலோ! என்ன நினைப்பு. தன்னந் தனியாக அந்தக் குடிசையில் அவள் வசிக்கிறாள். தனிமைப்பாடு என்ற அந்த நினைப்பு எப்பொழுதுமே அவள் மனதைத் தின்று கொண்டிருந்தது. சோகப்படுதாவைப் போட்டு மூடியது. அதை நினைக்க அக்னேட்டாவுக்கு மனம் இன்னும் கொஞ்சம் சோகத்தில் அழுந்தியது. மனிதப் பூண்டற்ற இடத்தில் அவ்வளவு தொலைவில் வசிப்பதென்றால் கஷ்டந்தான்.

     அவள் தனக்குள்ளாகவே பேசிக் கொள்ள ஆரம்பித்தாள். அந்த மலைத் தனிமையிலே இருந்திருந்து அவளுக்கு அந்தப் பழக்கம் வந்துவிட்டது. 'அடியே நீ குடிசையிலே உட்கார்ந்து நூற்றுத் தள்ளுகிறாய். பட்டினி கிடந்து மடியாமலிருக்க ஓயாமல் ஒழியாமல் நூற்று நூற்றுச் சாகிறாய். நீ உசிரோடே இருப்பதால் யாருக்குச் சந்தோஷம்? ஏண்டி யாராவது இருக்காளா? உன்னுடையவர்கள் யாராவது உசிரோடே இருந்தால், ஒரு வேளை அப்படி இருக்கலாம். இன்னும் கொஞ்சம் தள்ளி ஊருக்குப் பக்கத்திலே நீ குடியிருந்தா யாருக்காவது உபயோகமா இருக்காதா? நாயும் பூனையும் கூட உன்னுடன் வளர வொட்டாமல் உன் வறுமை தடுக்கிறது வாஸ்தவந்தான். இருந்தாலும் அகதி என்று வருகிறவன் முடங்க இராத்திரி உன்னால் இடம் கொடுக்க முடியுமே. வழியைவிட்டு அவ்வளவு தள்ளி இருப்பார்களோ? 'அம்மா நாக்கு வரளுது' என்று வருகிற நாடோ டிக்கு ஒரு சிரங்கைத் தண்ணீராவது கொடுக்கலாமே. அப்படி இருந்தாலும் நாலு பேருக்கு உபகாரமாப் பொழுதைக் கழிப்பதாக நீ திருப்திப் படலாமே.

     அவள் பெருமூச்சு விட்டாள். நூற்பதற்குச் சணல் நார் கொடுக்கும் குடியானவப் பெண்கள் கூடத் தான் செத்துப் போனதாகக் கேள்விப் பட்டால் ஒரு பொட்டுக் கண்ணீர் விடுவார்கள் என்று நினைத்தாள். மனதிலே குறை வைக்காம கடவுளுக்குப் பொதுவா உழைக்க அவள் முயன்றதில் சந்தேகமில்லை. அவளைவிடத் தொறனயா வேலையைச் செய்யக் கோடானு கோடி இருக்கவும் கூடும்.

     சர்ச்சில் இத்தனை வருஷங்களாக அந்த மூலையில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப்போன உபதேசியாருக்கு அவள் அங்கே உட்கார்ந்திருக்கிறாளா இல்லையா என்பதில் அக்கறைகூட இருக்காது என்று அவள் மனதில் ஒரு நினைப்புத் தோன்ற அவளுக்கு அழுகை வந்தது.

     'நான் செத்து மடிந்தவள்தான். நான் இருந்தால் என்ன? செத்தால் என்ன? அதில் யாருக்கு அக்கறை? குளிரும் துன்பமும் என்னைப் பனிக்கட்டியோடு பனிக்கட்டியாக உறைய வைத்துவிட்டது. நானில்லா விட்டாலும் என் நெஞ்சு அப்படிப் போச்சு. என்னைத் தேடுகிறவர்கள் என்று யாராவது ஒருத்தர் இருந்தால்! நான் உபகாரமாக இருக்கக்கூடிய ஒருவரை நீ எனக்குக் காண்பித்துக் கொடுத்தால் நான் இப்படியே உடம்பைக் கீழே போட்டுவிட்டுச் செத்துப்போவேன்' என்று வானத்தை நோக்கி விரலை ஆட்டிப் பத்திரம் காட்டினாள்.

     அந்தச் சமயத்தில் நெட்ட நெட்டென்று வளர்ந்து முகத்தில் சந்தோஷக்களை அற்ற ஞானம் ததும்பும் முகதேஜஸ் கொண்ட சாமியார் அந்த வழியாக அவளை நோக்கி வந்தார். அவள் மனம் சங்கடப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு கொண்டு போகும் திசையை விட்டுத் திரும்பி அவளுடன் நடக்கலானார். தான் உபகாரமாக இருக்கக்கூடிய ஒருவரைக் கடவுள் தன்னிடம் அனுப்பாவிட்டால் பனிப்பாறையில் சஞ்சரித்துத் திரியும் அந்த சஞ்சல ஜீவன்கள் போல ஆகிவிடப் போவதாக அவள் கூறினாள்.

     'கடவுளால் அப்படிச் செய்ய முடியுமே' என்றார் சாமியார்.

     'இந்த உசரத்தில் கடவுளுக்குச் சக்தி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா' என்றாள் அக்னேட்டா. 'இங்கே குளிரைத் தவிர, தனிமையைத் தவிர வேறு ஒன்றுமில்லே' என்றாள்.

     இவர்கள் மலைச்சரிவில் நெடிய தூரம் உயர ஏறிச் சென்றார்கள். பாசியும் ஊசிக்கதிர் போன்று இலைவிடும் குத்துச் செடிகளும் இருந்த பாதை வழியாக நடந்தார்கள். ஒருபுறம் பாறைச் சரிவு, பனிப்பாறையின் அடியிலே காணப்பட்ட குடிசையைக் கண்டார் சாமியார்.

     'ஓகோ? அங்கேயா நீ குடியிருக்கிறாய்? அங்கே நீ தனியாக இல்லியோ? போதுமான ஆட்கூட்டம் இருக்குமே. அங்கே பாரு."

     இப்படிச் சொல்லிக்கொண்டே சாமியார் விரல்களை வளையம்போல் சுருள வளைத்துக் கொண்டு அதனூடே அவள் பார்ப்பதற்கு இசைவாக இடது கண் அருகில் காட்டினார். அக்னேட்டா பயந்து போய்க் கண்களை மூடிக் கொண்டாள். 'அங்கே எதுவாவது பார்க்கக்கூடியது இருந்தாலும் எனக்குப் பார்க்கப் பிரியமில்லை, இங்கே இருந்து தொலையறதே போதும்' என்றாள்.

     'சரி போய்விட்டுவா. இன்னொருதடவை பார்க்கலாம்னா முடியாது' என்றார் சாமியார்.

     வார்த்தை, ஆசையைத் தட்டித் தூண்ட, வட்ட வளையத்தின் ஊடே பனி மூடிய மலையைப் பார்த்தாள். முதலில் ஒன்றும் தெரியவில்லை. அதிகமாக ஒன்றும் தெரியவில்லை, பிறகு கொஞ்சங் கொஞ்சமாக வெள்ளையாக ஏதோ பனிக்கட்டி மேலே நடமாடுவது மாதிரி தெரிந்தது. முதலில் பஞ்சு என்று அவள் நினைத்தாள். லேசாக நீல ஓட்டத்துடன் கூடிய சாயைகள் எல்லாம் பாவியான ஆத்மாக்கள். கோடானு கோடி.

     குறுகிக்கிடந்த கிழ அக்னேட்டா காற்றடிபட்ட இலை போல வெட வெடவென்று நடுங்கினாள். குழந்தைப் பிராயத்தில் அவள் கேட்டிருந்ததெல்லாம் அங்கே தெரிந்தது. செத்து மடிந்தவர்கள், துர்மரணப்பட்டவர்கள் அங்கே நிம்மதியான குளிரில் சொல்ல வொண்ணாத உளைச்சல்களை அனுபவித்துக்கொண்டு திரிந்தார்கள். மீண்டும் பார்த்தாள். அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய எல்லோரும் ஏதோ நீண்டு வெளுத்த ஒன்றைப் போர்த்தியிருந்தனர். ஆனால் தலைக்கும் காலுக்கும் மட்டிலும் ஒன்றுமில்லை. அங்கே கணக்கிடலடங்காதோர் சஞ்சரித்துத் திரிந்தார்கள். அவள் பார்க்கப் பார்க்க மேலும் மேலும் கூட்டம் ஓய்வில்லாமல் வந்து கொண்டே இருந்தது. சிலர் நிமிர்ந்து நடை போட்டுத் தலைவணங்காமல் நடந்தார்கள். மற்றவர்கள் நடந்து செல்லுவதே குதித்துக் குதித்துப் போவது போல இருந்தது. அவர்கள் ஒவ்வொருத்தர் காலும் பனிக்கட்டி குத்தி இரத்தப் பிரவாகம் வழிந்தபடி இருந்தது.

     கொஞ்சம் சூடு ஏறாதா என்று உடம்போடு உடம்பு ஒட்டி நெருங்க அவர்களில் பலர் முயன்றனர். ஆனால் சாவின் விரைத்துப் போன குளிர்ச்சிதான் அவர்களுடைய உடலை விட்டுப் படர்ந்தது. அதனால் அவர்கள் நெருங்கவும் பயந்து விலகிச் சென்றார்கள். மலை உச்சியிலே விளைந்த குளிர்ச்சி அவர்கள் உடலிலிருந்து பிறந்தது. அவர்கள்தான் பனிக்கட்டியை உருக விடாதபடி செய்கிறார்கள். மூடுபனிக்கு இவ்வளவு ஊசிக் குளிர்ச்சி கொடுத்தார்கள் என்று நினைக்கும்படியாயிருந்தது.

     சிலர் நடமாடாமல் பனியில் விறைத்துப் போய் வருஷக் கணக்காய் நிற்பது போலும் தென்பட்டது. அவர்களுடைய உடம்பின் மேல்பகுதிதான் தெரிந்தது. மற்றதெல்லாம் பனிக்கட்டியுள் மறைந்து மூழ்கிக் கண்ணுக்குத் தெரியாமல் கிடந்தன.

     பார்க்கப் பார்க்கக் கிழவிக்கு மனத்தில் பதட்டம் நின்றது. பயம் நீங்கியது. முன்போல் பயப்படாமல், துன்பப்படும் அந்த ஆத்மாக்களுக்காக அவள் பரிவு கொண்டாள். அவர்களுக்குத் தங்க இடமில்லை. வெட்டுண்ட சிதைந்த காலைத் தரிக்க இடமில்லை. அவர்களும் அந்தக் கொடும் குளிரில் ஈட்டிக் குத்துபோல் உடம்பைத் துளைக்கும் குளிரில் எப்படி நடுங்குகிறார்கள்!

     அந்தக் கூட்டத்தில் சிசுக்களும் உண்டு. அவர்கள் முகத்தில் இளங்களை மாறிவிட்டது. முகம் குளிரால் நீலம் பாரித்துப் போயிருந்தது. அவர்கள் விளையாடுவது போலத் தெரிந்தது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சியெல்லாம் செத்து மடிந்து கிடந்தது. அவர்கள் வெட வெடவென்று நடுங்கிக் கொண்டு கிழங்களைப் போல நடந்தார்கள். பையன்களும் பெண்களும் மாதிரியாகவா தெரிந்தது? அவர்களுடைய கால்களெல்லாம் பனிக்கட்டிகளையே நாடி அதன்மேல் ஊன்றுவது போலத் தெரிந்தது.

     சாமியார் கையை எடுத்து விட்டார். கிழவி கண்களுக்கு வெற்றுப் பனி வனாந்தரம் தவிர வேறு ஒன்றும் புலப்படவில்லை. அங்கும் இங்குமாகப் பனிக்கட்டி சில திக்காலுக்கு ஒன்றாகக் கிடப்பதுபோலத் தென்பட்டது. ஆனால் அவை மடிந்து மறைந்தவர்களின் உயிரையே அடக்கி வைத்திருந்தது. பனிப் பாறையில் நீலச்சாயம் பனிக்கட்டியில் சிக்கிக் கிடந்த உடம்பிலிருந்து வரவில்லை. பனிச் சிதள்களை காற்று எற்றி விரட்டியது. இருந்தாலும் வளையத்துக்குள் பார்த்ததெல்லாம் வாஸ்தவம் என்று நிச்சயித்துக்கொண்டு, 'இவர்களுக்கு ஏதாவது உபகாரம் செய்வதற்கேதும் வழி உண்டா?' என்று கேட்டாள்.

     'நன்மை செய்வதற்கு அன்புக்கு உரிமை கிடையாது என்றோ அல்லது பரிவு கொண்ட மனம் ஆறுதல் சொல்லக் கூடாது என்றோ கடவுள் எப்போதாவது தடை செய்திருக்கிறாரா?' என்று பதில் கேள்வி போட்டுப் பதில் அளித்தார் சாமியார்.

     இப்படிச் சொல்லிவிட்டுச் சாமியார் தன் வழியே சென்றார். அக்னேட்டா வேகமாகத் தன் குடிசைக்கு நடந்தாள். உள்ளே உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தாள்.

     பனிப்பாறையில் திசை கெட்டுத் திரியும் அந்தப் பாவிகளுக்கு என்ன விதமாக உதவி செய்ய முடியும் என்பதை அவள் சாயங்காலம் முழுவதும் உட்கார்ந்து யோசித்தாள்.

     தான் ஏகாங்கியாக இருப்பதை நினைக்க அவளுக்குப் போதில்லை.

     மறுநாள் காலை அவள் கிராமத்துக்குச் சென்றாள். அவளுக்கு மனம் உள்ளுக்குள்ளாகவே பூரித்தது. வயசின் சுமை கழன்றுவிட்டது. போகும்போது தனக்குத் தானே பேசிக்கொண்டு நடந்தாள்.

     'செத்துப் போனவர்களுக்கு சிகப்புக் கன்னமும் சிலுக்கு உடையும் வேண்டாம். உடம்பிலே கொஞ்சம் வெதுவெதுப்பு இருந்தால் போதும் என்று அல்லாடுகிறார்கள். சிறுசுகளுக்கு அந்நினைப்பேது? உலகத்தில் மீந்து நிற்கும் கிழடு கெட்டைகள் நெஞ்சைத் திறந்து காட்டி அழைக்காது போனால் மரணத்தின் எல்லையற்ற குளிர்க் கொடுமையிலே அவர்களுக்குத் தாரகம் ஏது?'

     அவள் பலசரக்குக் கடையில் ஒரு பெரிய கட்டு மெழுகுதிரி வாங்கினாள்; குடியானத்தி ஒருத்தியிடம் ஒரு வண்டி விறகு கொண்டுவர உத்தரவு போட்டாள். என்றும் கொண்டு போவதை விட இரட்டிப்புச் சுமை சணல் நூற்பதற்காக எடுத்துச் சென்றாள்.

     சாயங்காலமாச்சு. வீட்டுக்குத் திரும்பினாள். வந்துவிட்ட பிற்பாடு ஜெபம் செய்தாள். தைரிய மூட்டிக்கொள்ள தெய்வ கீதங்களைத் திரும்ப திரும்பப் பாடினாள். இருந்தும் அது கீழ் நோக்கியே சாய்ந்தது. மனதில் நினைத்ததைச் செய்ய இந்தக் கோழைத்தனம் தடை செய்யவில்லை. தன்னுடைய படுக்கையைக் குடிசையின் உட்கூடத்தில் விரித்துப் போட்டாள். வெளிக் கூடத்திலிருந்த கணப்பு அடுப்பில் கைநிறைய விறகெடுத்துப் போட்டுப் பற்ற வைத்தாள். இரண்டு மெழுகுதிரிகளை ஏற்றி ஜன்னலில் வைத்தாள். வீட்டு வாசல் கதவை முடிந்த மட்டிலும் விரியத் திறந்து வைத்தாள். அப்புறம் அக்னேட்டாக் கிழவி போய்ப் படுத்துக்கொண்டாள்.

     இருட்டில் கிடந்து சப்தம் கேட்கிறதா என்று காதைக் கூர்மையாக வைத்திருந்தாள்.

     ஆமாம்; அதுகள் காலடிச் சத்தமாகத்தான் இருக்க வேண்டும்.

     சில பனிப்பாறைகளில் வழுக்கி வருவதுபோலக் கேட்டது. வேறு யாரோ ஒருவர் முனங்கிக் கொண்டே உள்ளே நுழைவதற்குப் பயந்துபோய் குடிசையைச் சுற்றித் தயங்கித் தயங்கி நடப்பதுபோல் கேட்டது.

     அக்னேட்டாவுக்கு இதற்குமேல் தாங்கமுடியவில்லை. படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தாள். ஒரே ஓட்டமாக ஓடி வெளிக்கதவைப் படார் என்று இழுத்து மூடித் தாளிட்டாள். இதை யார் தாங்க முடியும்? ரத்தமும் சதையும் பயந்து துடிக்காமல் எப்படிச் சகித்துக்கொண்டு இருக்கும்?

     குடிசைக்கு வெளியே ஒரு நெடிய பெருமூச்சுக் கேட்டது. கால் வலி தாங்கமாட்டாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்லும் காலடிச் சத்தம் தூரத்தில் பனிப்பாறை நோக்கி மங்கி மறைவது கேட்டது. தேம்பித் தேம்பியழும் சப்தமும் அவள் காதில் விழுந்தது. அப்புறம் ஒன்றுமே கேட்கவில்லை. அதற்கு அப்புறம் கிழவி அக்னேட்டாவுக்கு மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது.

     வழக்கம்போல் தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

     'அடி முட்டாளே! மெழுகுதிரிகள் அணைந்து போகுமே, அனலும் அணைந்து போகுமே. அவை என்ன காசா, லேசா. நீ வடிகட்டின கோழை என்பதற்காக இத்தனையும் வீணாகி நாசமாகிறதா?'

     அவள் மறுபடியும் படுக்கையைவிட்டு எழுந்திருந்தாள். உடம்பு நடுங்கியது. பல் கிட்டியடித்தது. வெளிக் கூடத்திற்கு வந்து வாசற் கதவை விரியத் திறந்தாள், மறுபடியும் போய்ப் படுத்துக்கொண்டு அவள் காத்திருந்தாள்.

     இப்போது பயம் அகன்றுவிட்டது. அகதிகளை விரட்டி விட்டோமே, இனிமேல் தைரியமாகத் திரும்பி வருவார்களோ என்ற பயந்தவிர அவளுக்கு வேறு ஒரு கவலையுமில்லை.

     பிறகு இருட்டில் கூப்பிட ஆரம்பித்தாள். சிறு பிராயத்தில் அவள் ஆடு மேய்த்துத் திரிந்தபொழுது மந்தைகளை அப்படித்தான் அழைப்பது வழக்கம்.

     'என் குட்டிகளா, அருமைக் குட்டிகளா வாருங்கள், வாருங்கள்' என்றைத்தாள். மலைச் சிகரத்திலிருந்து குடிசைக்குள் நேராகப் பெருங்காற்று பாய்ந்தடித்தது போலிருந்தது.

     கிழவியின் காதுக்குக் காலடிச் சத்தமோ அழுகைக் குரலோ கேட்கவில்லை. வீட்டுக்குள் நுழைந்த காற்றின் ஓலந்தான் கேட்டது.

     'அவர்களைப் பயப்பட வைத்து விடாதே' என்று யாரோ சொல்லுவது போலக் கேட்டது.

     கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனாலும் வெளியறையில் அது கொள்ளுமட்டும் கூட்டம் வந்திருப்பதாக அவள் உணர்ந்தாள். சுவர்கள் இன்று விழுந்து விடுமோ என்று நினைக்கும்படி அவ்வளவு நெருக்கம். அப்போது கிழ அக்னேட்டா மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்தது. கைகளை நெஞ்சில் மடக்கி வைத்துக் கொண்டு கண்ணுறங்கலானாள்.

     விடிந்தபோது நடந்ததெல்லாம் சொப்பனம் என்று நினைத்தாள். ஏனென்றால் வெளி அறை பழையபடியேதான் இருந்தது. நெருப்பு எரிந்து அவிந்துவிட்டது. மெழுகு திரிகளும் அப்படியே. திரிகளில் சொட்டு மெழுகு கூட மிஞ்சவில்லை.

     உயிரோடு இருக்கும் வரை அக்னேட்டா இந்தப் படியாகச் செத்தவர்களுக்காகப் பாடுபட்டாள். அவள் கஷ்டப்பட்டுப் பகல் முழுவதும் நூற்றாள். ஒவ்வொரு ராத்திரியும் வெளியறையில் நெருப்பேற்றி வைக்க இப்படி உழைத்தாள்.

     அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். ஏனென்றால் யாராவது ஒருவருக்கு உபகாரமாக வாழ முடிகிறது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.

     பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை அவள் சர்ச்சில் வழக்கம்போல் உட்காருமிடத்தில் இருக்கவில்லை. கிராமத்துக்காரர்கள் என்னமோ ஏதோ என்று பார்த்து வர அவளுடைய குடிசைக்குப் போனார்கள். அவள் செத்துப் பிரேதமாகக் கிடப்பதைக் கண்டு அடக்கம் செய்வதற்காகச் சவத்தைக் கிராமத்துக்கு எடுத்து வந்தார்கள்.

     அக்னேட்டாவின் சவத்துக்குப் பின்னால் கல்லறைத் தோட்டத்திற்கு வெகுபேர் போகவில்லை. கூடப் போனவர்கள் முகத்திலும் வருத்தமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பெட்டியைக் குழிக்குள் இறக்கப் போகும்போது திடீரென்று கல்லறைத் தோட்டத்துக்குள் நெட்ட நெடிய மகிழ்ச்சிக்களையற்ற ஞானதேஜசுடைய சாமியார் நின்றார். பனி மூடிய மலையுச்சியைக் காட்டினார். கல்லறைக் குழியருகில் நின்றவர்கள் மலைச்சிகரம் முழுவதும் இளஞ்சிவப்புப் பூத்துச் சிகரம் முழுவதையும் பிரகாசமாக முழுக்காட்டியதைக் கண்டார்கள். சிகரத்தின் குறுக்கே சிறுசிறு ஒளித்திரள் வரிசை வரிசையாகச் செல்வதைக் கண்டார்கள். மெழுகுதிரி ஊர்வலமாக நடந்து செல்வது போலிருந்தது. பனிப்பாறையில் அகதிகளாகத் திரியும் பாவிகளுக்குச் செத்துப்போன கிழவி வாங்கிய மெழுகுதிரிகளின் தொகைக்கு அன்று வெளிச்சம் தெரிந்தது.

     'கடவுளைத் துதிப்போமாக. தனக்காக வருந்த ஒருவரும் அற்ற அவள் மலைகளின் மகா தனிமையிலே நேசர்களைப் பெற்று விட்டாள்' என்றார்கள் ஜனங்கள்.
சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode - PDF
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode
     ஏலாதி (உரையுடன்) - Unicode
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode
     மூவருலா - Unicode
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)