லா.ச. ராமாமிர்தம் (1916-2007)

     லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிர்தம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை "சிந்தாநதி" தினமணி கதிரில் தொடராக வந்தது. அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

     லா.ச.ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91 வயதில், சென்னையில் மரணமடைந்தார்.

எழுதிய நூல்கள்

நேசம்
மீனோட்டம்
இதழ்கள் (1959)
தயா (1966)
உத்தராயணம்
ஜனனி (1957)
பச்சைக் கனவு (1961)
அபிதா (1970) (புதினம்)
என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
அலைகள் (1964)
பாற்கடல்
அஞ்சலி (1963)
அவள்
சிந்தாநதி (கட்டுரைத் தொடர்)
கல் சிரிக்கிறது
பிராயச்சித்தம்
த்வனி
கங்கா (1962)
விளிம்பில்
கழுகு
அலைகள் ஓய்வதில்லை
நான்
சௌந்தர்ய
புத்ர (1965)(புதினம்)