பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.177 (6 மாதம்)   |   ரூ.590 (3 வருடம்)   |   புதிய உறுப்பினர் : P. Ayyappan   |   மொத்த உறுப்பினர் : 466   |   உறுப்பினர் விவரம்
google pay   phonepe   payumoney donors button
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்


அம்பலவாணக் கவிராயர்

இயற்றிய

அறப்பளீசுர சதகம்

     அறப்பளீசுர சதகம், 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் வகையைச் சார்ந்தது. இதனை இயற்றியவர் அம்பலவாணக் கவிராயர் என்பவர் ஆவார். இவர் சீர்காழி அருணாசலக் கவிராயரின் மகனாவார். அறப்பளீச்சுர சதகம், கொல்லி மலையில் அமைந்துள்ள அறப்பள்ளி ஈசுவரன் மேல் பாடப்பெற்றதாகும். இந்நூல் எழுந்த காலம் 18ஆம் நூற்றாண்டு ஆகும்.

     இந்நூல் 100 பாடல்களைக் கொண்ட சிறந்த ஒரு நீதி இலக்கியமாகும். ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும். சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும். ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும். நல்ல அரசும், அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும். உடன் பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழ வேண்டும். பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்வழியில் அமைய வேண்டும். நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்கள் பாடல்களாக இந்நூலில் காணப்படுகின்றன.


நேர்மையின் பயணம்
இருப்பு உள்ளது
ரூ.425.00
Buy

நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

கடைசிச் சொல்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

ஊக்குவிப்பு
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

வெஜ் பேலியோ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

தமிழ்நாட்டு வரலாறு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

21ம் நூற்றாண்டுக் கான பிசினஸ்
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

வெட்கம் விட்டுப் பேசலாம்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ஒளி ஓவியம்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

அணிலாடும் முன்றில்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

பணம்சார் உளவியல்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

திங்க் அண்ட் வின் லைக் தோனி
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

விஷ்ணுபுரம்
இருப்பு உள்ளது
ரூ.1000.00
Buy

மன்னன் நீ இள நெஞ்சின் கள்வன் நீ
இருப்பு உள்ளது
ரூ.320.00
Buy

கடலுக்கு அப்பால்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பிழையில்லாத எழுத்து
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

சுவையான சைவ சமையல் - 1
இருப்பு உள்ளது
ரூ.30.00
Buy

உயிர் காக்கும் உணவு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy
காப்பு

நேரிசை வெண்பா

உம்பர்கோன் எம்பெருமான் ஓங்கு அறப்பளீசுரன்மேல்
பைம்பொருள் சேரும் சதகம் பாடவே - அம்புவியோர்
ஆக்கும் துதிக்கையான் அன்புடையார்க்கு இன்பு அருளிக்
காக்கும் துதிக்கையான் காப்பு.

நூல்

1. உயர் பிறப்பு

கடல் உலகில் வாழும் உயிர் எழுபிறப்பின் உள்மிக்க
          காட்சிபெறு நர சன்மமாய்க்
     கருதப் பிறத்தல் அரிது அதினும்உயர் சாதியில்
          கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
          வருதல் அதுதனினும் அரிது;
     வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்று எண்ணி
          மாசில்வழி நிற்றல் அரிது;
நெடிய தனவான் ஆதல் அரிது அதில் இரக்கம்உள
          நெஞ்சினோன் ஆதல் அரிது;
     நேசமுடன் உன்பதத்து அன்பனாய் வருதல்இந்
          நீள்நிலத்து அதினும் அரிதாம்;
அடியவர்க்கு அமுதமே! மோழை பூபதி பெற்ற
          அதிபன் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

2. இல்லாளின் சிறப்பு

கணவனுக்கு இனியளாய், ம்ருதுபாஷியாய், மிக்க
          கமலைநிகர் ரூபவதியாய்க்,
     காய்சினம் இலாளுமாய், நோய்பழி இலாத ஓர்
          கால்வழியில் வந்தவளுமாய்,
மணமிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ன
          வரும் இனிய மார்க்கவதியாய்,
     மாமிமாமற்கு இதம் செய்பவளுமாய், வாசல்
          வரு விருந்து ஓம்புபவளாய்,
இணைஇல் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய்வந்தி
          என் பெயர் இலாதவளுமாய்,
     இரதி எனவே லீலை புரிபவளுமாய்ப் பிறர்தம்
          இல்வழி செலாதவளுமாய்,
அணியிழை ஒருத்தி உண்டாயின் அவள் கற்புடையள்
          ஆகும்;எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

3. நன்மக்கட் பேறு

தம் குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
          தருமங்கள் செய்து வரலும்,
     தன்மம் மிகு தானங்கள் செய்தலும், கனயோக
          சாதகன் எனப்படுதலும்,
மங்குதல் இலாத தன் தந்தை தாய் குருமொழி
          மறாது வழிபாடு செயலும்,
     வழிவழி வரும் தமது தேவதா பத்திபுரி
          மார்க்கமும், தீர்க்க ஆயுளும்,
இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,
          ஈகையும், சன்மார்க்கமும்
     இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே
          ஈன்றவன் புண்யவானாம்;
அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்
          அரசன் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

4. உடன் பிறப்பு

கூடப் பிறந்தவர்க்கு எய்து துயர் தமது துயர்
          கொள்சுகம் தம் சுகம் எனக்
     கொண்டுதாம் தேடுபொருள் அவர் தேடு பொருள்
          அவர்கொள் கோது இல்புகழ் தம் புகழெனத்,
தேடு உற்ற அவர் நிந்தை தம் நிந்தை தம் தவம்
          தீது இல்அவர் தவம் ஆம் எனச்
     சீவன் ஒன்று உடல் வேறு இவர்க்கு என்ன, ஐந்தலைச்
          சீறு அரவம் மணிவாய் தொறும்
கூடு உற்ற இரை எடுத்து ஓரு உடல் நிறைத்திடும்
          கொள்கைபோல் பிரிவு இன்றியே
     கூடிவாழ்பவர் தம்மையே சகோதரர் எனக்
          கூறுவதுவே தருமமாம்;
ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே!
          அண்ணல் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

5. நல்லாசிரியர் இயல்

வேதாந்த சித்தாந்த வழி தெரிந்து ஆசார
          விவரம் விஞ்ஞான பூர்ணம்
     வித்யாம் விசேடம் சற்குணம் சத்தியம் சம்பன்னம்
          வீரவைராக்யம் முக்யம்
சாதாரணப் பிரியம் யோகமார்க்க ஆதிக்யம்
          சமாதி நிஷ்ட அனுபவராய்ச்,
     சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர
          தருமமும் பரசமயமும்
நீதியின் உணர்ந்து, தத்துவ மார்க்கராய்ப், பிரம
          நிலைகண்டு பாசம் இலராய்,
     நித்திய ஆனந்த சைதன்யராய், ஆசை அறு
          நெறியுளோர் சற்குரவராம்
ஆதாரமாய் உயிர்க்கு உயிராகி எவையுமாம்
          அமல! உமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

6. நன்மாணாக்கர் இயல்

வைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி
          மாறாது இகழ்ந்தாலுமோ
     மனது சற்றாகிலும் கோணாது, நாணாது,
          மாதா பிதா எனக்குப்
பொய்யாமல் நீ என்று கனிவொடும் பணிவிடை
          புரிந்து, பொருள் உடல் ஆவியும்
     புனித! உன்றனது எனத் தத்தம் செய்து இரவுபகல்
          போற்றி, மலர் அடியில் வீழ்ந்து,
மெய்யாகவே பரவி உபதேசம் அதுபெற
          விரும்புவோர் சற்சீடராம்
     வினைவேர் அறும்படி அவர்க்கு அருள் செய்திடுவதே
          மிக்க தேசிகரது கடன்
ஐயா! புரம் பொடிபடச் செய்த செம்மலே!
          அண்ணல் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

7. பொருள்செயல் வகை

புண்ணிய வசத்தினால் செல்வம் அது வரவேண்டும்;
          பொருளை ரட்சிக்க வேண்டும்
     புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
          போதவும் வளர்க்க வேண்டும்;
உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்ராபரணம்
          உடலில் தரிக்க வேண்டும்;
     உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்கு உதவி
          ஓங்கு புகழ் தேட வேண்டும்;
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச
          வழிதேட வேண்டும்; அன்றி,
     வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே
          மார்க்கம் அறியாக் குருடராம்
அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
          அழகன்எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

8. ஒண்ணாது

வஞ்சகர் தமைக்கூடி மருவ ஒணாது அன்பு இலார்
          வாசலில் செல்ல ஒணாது;
     வாது எவரிடத்திலும் புரிய ஒணாது அறிவு இலா
          மடையர் முன் நிற்க ஒணாது;
கொஞ்சமேனும் தீது செய்ய ஒணாது ஒருவர் மேல்
          குற்றம் சொல ஒண்ணாது அயல்
     கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது;
          கோள் உரைகள் பேச ஒணாது;
நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது இருள்வழி
          நடந்து தனி ஏக ஒணாது
     நதி பெருக்கு ஆகின் அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது;
          நல்வழி மறக்க ஒணாது;
அஞ்சாமல் அரசர் முன் பேச ஒணாது இவைஎலாம்
          அறியும் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

9. ஒன்றற்கு ஒன்று அழகு

வாழ்மனை தனக்கு அழகு குலமங்கை; குலமங்கை
          வாழவினுக்கு அழகு சிறுவர்;
     வளர்சிறுவருக்கு அழகு கல்வி;கல்விக்கு அழகு
          மாநிலம் துதிசெய் குணமாம்;
சூழ்குணம் அதற்கு அழகு பேரறிவு; பேரறிவு
          தோன்றிடில் அதற்கு அழகுதான்
     தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை
          சொல்அரிய பெரியோர்களைத்
தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை
          சாற்றும் இவை அழகு என்பர் காண்
     சௌரி, மலரோன், அமரர், முனிவர், முச்சுடர் எலாம்
          சரணம் எமை ரட்சி எனவே.
ஆழ்கடல் உதித்துவரு விடம் உண்ட கண்டனே!
          அண்ணல் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

10. ஒன்று இல்லாமல் பயன்படாதவை

கோவில் இல்லாத ஊர், நாசி இல்லா முகம்,
          கொழுநன் இல்லாத மடவார்,
     குணமது இல்லா வித்தை, மணமது இல்லாத மலர்,
          குஞ்சரம் இலாத சேனை,
காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை,
          கதிர் மதி இலாத வானம்,
     கவிஞர் இல்லாத சபை, சுதி லயை இலாத பண்,
          காவலர் இலாத தேசம்,
ஈவது இல்லாத தனம் நியமம் இல்லாத செபம்,
          இசை லவணம் இல்லாத ஊண்,
     இச்சை இல்லாத பெண் போக நலம், இவை தம்மின்
          ஏது பலன் உண்டு? கண்டாய்!
ஆவி அனையாட்கு இடம் தந்தவா! கற்ப தரு
          ஆகும் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

11. தகாத சேர்க்கை

பூத தயை இல்லாத லோபியர் இடத்திலே
          பொருளை அருளிச் செய்தனை!
     புண்ணியம் செய்கின்ற சற்சனர் இடத்திலே
          பொல்லாத மிடி வைத்தனை!
நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க
          நெறி மாதரைத் தந்தனை!
     நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு
          நீலியைச் சோவித்தனை!
சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று
          தாழ்ந்து பரவச் செய்தனை!
     தமிழ் அருமை அறியாத புல்லர் மேல் கவிவாணர்
          தாம் பாடவே செய்தனை!
ஆதரவு இலாமல் இப்படி செய்தது என் சொலாய்?
          அமல! எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

12. பதர்

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
          வாயிலாதவன் ஒரு பதர்;
     வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
          மனக்கோழை தான் ஒரு பதர்;
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசிஎன்று
          இகழ நிற்பான் ஒரு பதர்;
     இல்லாள் புறம் செலச் சம்மதித்து அவளோடு
          இணங்கி வாழ்பவன் ஒரு பதர்;
வேறு ஒருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
          வீண்பேசுவான் ஒரு பதர்;
     வேசையர்கள் ஆசைகொண்டு உள்ளளவும் மனையாளை
          விட்டு விடுவான் ஒரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய்
          அமல! எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

13. செய்ய வேண்டும்

வாலிபம் தனில்வித்தை கற்க வேண்டும்; கற்ற
          வழியிலே நிற்க வேண்டும்;
     வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்; தேடி
          வளர் அறம் செய்ய வேண்டும்;
சீலம் உடையோர்களைச் சேரவேண்டும்; பிரிதல்
          செய்யாது இருக்க வேண்டும்
     செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண்டும்; கொண்டு
          தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண்டும்; நாட்டி
          நன்றாய் நடத்த வேண்டும்;
     நம்பன் இணை அடி பூசை பண்ணவேண்டும்; பண்ணி
          னாலும் மிகு பத்தி வேண்டும்
ஆலம் அமர் கண்டனே! பூதி அணி முண்டனே!
          அனக! எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

14. மேன்மேல் உயர்ச்சி

தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
          சாமர்த்தியம் உள புருடன் ஆம்
     சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன் மிக்க
          தரணி புகழ் தருதேவன் ஆம்.
பொன் மட்டிலாமல் ஈந்து ஒரு நூறு பேரைப்
          புரப்பவன் பொருஇல் இந்த்ரன்,
     புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
          புண்யவானே பிரமன் ஆம்
நன்மைதரு பதினாயிரம் பேர் தமைக்காத்து
          ரட்சிப்பவன் செங்கண்மால்,
     நாளும் இவன் மேல் அதிகமாக வெகுபேர்க்கு உதவு
          நரனே மகாதேவன் ஆம்,
அல் மட்டுவார் குழலி பாகனே! ஏகனே!
          அண்ணல்எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

15. செயற்கு அருஞ் செயல்

நீர் மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!
          நெருப்பை நீர் போல் செய்யலாம்!
     நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!
          நீள் அரவினைப் பூணலாம்!
பார் மீது மணலைச் சமைக்கலாம் சோறு எனப்
          பட்சமுடனே உண்ணலாம்!
     பாணமொடு குண்டு விலகச் செய்யலாம்! மரப்
          பாவை பேசப் பண்ணலாம்!
ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
          எடுக்கலாம்! புத்தி சற்றும்
     இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
          எவருக்கும் முடியாது காண்!
ஆர்மேவு கொன்றை புனை வேணியா! சுரர்பரவும்
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

16. நல்லோர் - 1

செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர் செய்
          தீமையை மறந்த பேரும்,
     திரவியம் தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல்
          சித்தம் வையாத பேரும்,
கை கண்டு எடுத்த பொருள் கொண்டு போய்ப் பொருளாளர்
          கையில் கொடுத்த பேரும்,
     காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி
          காத்தருள் செய்கின்ற பேரும்,
பொய் ஒன்று நிதிகோடி வரினும் வழக்கு அழிவு
          புகலாத நிலைகொள் பேரும்.
     புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
          பொய்ம்மை உரையாத பேரும்,
ஐய இங்கு இவர் எலாம் சற்புருடர் என்று உலகர்
          அக மகிழ்வர்! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

17. நல்லோர் - 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
          அவனே மகா புருடனாம்;
     அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்
          அசைவு இலன் மகா தீரனாம்;
தொடுத்து ஒன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
          தோன்றலே மகராசனாம்;
     தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
          துரையே மகா மேருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும்
          அவனே மகா தியாகியாம்;
     அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும்
          அவனே மகா உசிதன்ஆம்;
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

18. இல்லை

காமிக்கு முறை இல்லை; வேசைக்கு நாண் இல்லை;
          கயவர்க்கு மேன்மை இல்லை;
     கன்னம் இடு கள்வருக்கு இருளில்லை; விபசார
          கன்னியர்க்கு ஆணை இல்லை;
தாம் எனும் மயக்கறுத்து ஓங்கு பெரியோர்க்கு வரு
          சாதி குலம் என்பதில்லை;
     தாட்சணியம் உடைய பேர்க்கு இகலில்லை; எங்கும் ஒரு
          சார்பிலார்க்கு இடமது இல்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
          புகழென்பது ஒன்றும் இல்லை;
     புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
          புருடருக்கு ஒன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத்து இறைவனே
          அன்புடைய அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

19. நிலையாமை

காயம் ஒரு புற்புதம்! வாழ்வு மலை சூழ்தரும்
          காட்டில் ஆற் றின் பெருக்காம்!
     கருணை தரு புதல்வர் கிளை மனை மனைவி இவை எலாம்
          கானல் காட்டும் ப்ரவாகம்!
மேய புய பலவலிமை இளமை அழகு இவை எலாம்
          வெயில் மஞ்சள்! உயிர் தானுமே,
     வெட்ட வெளி தனில் வைத்த தீபம் எனவே கருதி,
          வீண் பொழுது போக்காமலே
நேய முடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்
          நினைவு வைத்திரு போதினும்
     நீர்கொண்டு மலர்கொண்டு பரிவு கொண்டு அர்ச்சிக்க
          நிமலனே! அருள் புரிகுவாய்
ஆயும் அறிவாளர் பணி பாதனே! போதனே!
          அண்ணல் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

20. திருமகள் இருப்பிடம்

நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,
          நாகரிகர் மாமனையிலே,
     நளின மலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
          நறை கொண்ட பைந்துளவிலே,
கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
          கல்யாண வாயில் தனிலே,
     கடிநகர் இடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
          கதிபெறு விளக்கு அதனிலே,
பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
          பொய்யாத பேர் பாலிலே,
     பூந்தடந் தன்னிலே, பாற்குடத்து இடையிலே
          போதகத்தின் சிரசிலே
அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்
          அண்ணல் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

21. மூதேவி இருப்பிடம்

மிதம் இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,
          மிகுபாடையோர் இடத்தும்,
     மெய் ஒன்றிலாமலே பொய் பேசியே திரியும்
          மிக்க பாதகரிடத்தும்,
கதி ஒன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய
          கந்தை அணிவோர் இடத்தும்
     கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத
          கன்னி வாழ் மனைஅகத்தும்,
ததிசேர் கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,
          சார்ந்த ஆட்டின் திரளிலும்
     சாம்பிணம் முகத்திலும் இவை எலாம் கவலை புரி
          தவ்வை வாழ் இடம் என்பர் காண்!
அதிரூப மலை மங்கை நேசனே! மோழைதரும்
          அழகன் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

22. இருநிலையிலும் பயனற்றவை

குணம் அற்ற பேய் முருங்கைத் தழை தழைத்து என்ன?
          குட்டநோய் கொண்டும் என்ன?
     குரைக்கின்ற நாய்மடி சுரந்து என்ன ? சுரவாது
          கொஞ்சமாய்ப் போகில் என்ன?
மணம் அற்ற செம்முருக்கது பூத்து அலர்ந்து என்ன?
          மலராது போகில் என்ன?
     மதுரம் இல்லா உவர்க் கடல் நீர் கறுத்து என்ன?
          மாவெண்மை ஆகில் என்ன?
உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன? படராது
          உலர்ந்து தான் போகில் என்ன?
     உதவாத பேர்க்கு வெகு வாழ்வு வந்தால் என்ன?
          ஓங்கும் மிடிவரில் என்ன காண்?
அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!
          ஆதியே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

23. குறைந்தாலும் பயன்படல்

தறிபட்ட சந்தனக் கட்டை பழுது ஆயினும்
          சார் மணம் பழுது ஆகுமோ!
     தக்க பால் சுவறிடக் காய்ச்சினும் அது கொண்டு
          சார்மதுரம் குறையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும் அதின்
          நீள்குணம் மழுங்கி விடுமோ?
     நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்
          நிறையும் மாற்றுக் குறையுமோ?
கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அது கொண்டு
          கதிர் மதி கனம் போகுமோ?
     கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்
          காசினி தனிற் போகுமோ?
அறிவுற்ற பேரை விட்டு அகலாத மூர்த்தியே!
          ஐயனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

24. ஒன்றுக்குஒன்று ஆதரவு

வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர் கோள்கட்கும்
          வாழ்வு தரும் உதவி புவனம்
     வளம்மிக்க புவனம் தனக்கு மேன்மேல்உதவி
          வாழ்வு பெற்றிடு மன்னராம்!
தேனமர் நறுந்தொடையல் புனை மன்னவர்க்கு உதவி
          சேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம்;
     சேர்குடி படைக்கு உதவி விளை பயிர்! பயிர்க்கு உதவி
          சீர்பெற வழக்கு மழையாம்!
மேல் நிமிர் மழைக்கு உதவி மடமாதர் கற்பு ஒன்று;
          வேந்தர் தம் நீதி ஒன்று
     வேதியர் ஒழுக்கம் ஒன்று இம் மூன்றுமே என்று
          மிக்க பெரியோர் உரை செய்வார்
ஆனமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே!
          அதிபனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

25. இதனை இதுகண்டு மகிழும்

தந்தை தாய் மலர் முகம் கண்டு நின்று ஆலிப்பது
          அவர் தந்த சந்ததியது ஆம்!
     சந்த்ரோதயம் கண்டு பூரிப்பது உயர்வாவி
          தங்கு பைங்குமுத மலர் ஆம்!
புந்தி மகிழ் வாய்இரவி வருதல்கண்டு அக மகிழ்வ
          பொங்கு தாமரை மலர்கள் ஆம்!
     போதவும் புயல்கண்டு கண்களித்தே நடம்
          புரிவது மயூர இனம் ஆம்!
சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு
          சீர் பெறுவது இரவலர் குழாம்
     திகழ் நீதி மன்னரைக் கண்டு களி கூர்வது இச்
          செகம் எலாம் என்பர் கண்டாய்!
அந்தி அம் வான் அனைய செம் சடாடவியனே!
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

26. ஆகாதவை

உள்ளன்பு இலாதவர் தித்திக்கவே பேசி
          உறவாடும் உறவும் உறவோ?
     உபசரித்து அன்புடன் பரிமாறிடாத
          சோறு உண்டவர்க்கு கன்னம் ஆமோ?
தள்ளாது இருந்து கொண்டு ஒருவர் போய்ப் பார்த்து வரு
          தக்க பயிர் பயிர் ஆகுமோ?
     தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன் சென்றிடும்
          தானையும் தானை யாமோ?
விள்ளாத போகம் இல்லாத பெண் மேல்வரு
          விருப்பமும் விருப்ப மாமோ?
     வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
          மிக்க சீவனம் ஆகுமோ?
அள்ளாது இருங்கருணையாளனே! தேவர் தொழும்
          ஆதியே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

27. நற்பண்புக்கு இடம் இலார்

வெறி கொண்ட மற்கடம் பேய் கொண்டு, கள் உண்டு
          வெம் கரஞ்சொறிப் புதரில்
     வீழ்ந்து, தேள் கொட்டிடச் சன்மார்க்கம் எள்ளளவும்
          மேவுமோ? மேவாது போல்,
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
          கூடவே இளமை உண்டாய்க்,
     கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் மிக்க
          குவலயந்தனில் அவர்க்கு,
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்
          நிதானமும் பெரியோர்கள் மேல்
     நேசமும் ஈகையும் இவை எலாம் கனவிலும்
          நினைவிலும் வராது கண்டாய்;
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

28. இவர் இன்ன முறையர்

தன்னால் முடிக்க ஒண்ணாத காரியம் வந்து
          தான் முடிப்போன் தமையன் ஆம்;
     தன் தலைக்கு இடர் வந்த போது மீட்டு உதவுவோன்
          தாய் தந்தை என்னல் ஆகும்;
ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது
          உதவுவோன் இட்ட தெய்வம்;
     உத்தி புத்திகள் சொல்லி மேல் வரும் காரியம்
          உரைப்பவன் குரு என்னல் ஆம்;
எந்நாளும் வரும் நன்மை தீமை தனது என்னவே
          எண்ணி வருவோன் பந்து ஆம்;
     இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன்
          எவன் எனினும் அவனே சுதன்
அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

29. ஒழுகும் முறை

மாதா பிதாவினுக்கு உள்ளன்புடன் கனிவு
          மாறாத நல்லொழுக்கம்;
     மருவு குரு ஆனவர்க்கு இனிய உபசாரம் உள
          வார்த்தை வழி பாடு அடக்கம்;
காது ஆர் கருங்கண் மனையாள் தனக்கோ சயன
          காலத்தில் நய பாடணம்;
     கற்ற பெரியோர் முதியர் வரும் ஆதுலர்க்கு எலாம்
          கருணை சேர் அருள் விதானம்;
நீதி பெறும் மன்னவர் இடத்து அதிக பய வினயம்;
          நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
     நேயம் உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு
          நேரலர் இடத்தில் வைரம்
ஆதி மனுநூல் சொலும் வழக்கம் இது ஆகும் எமது
          ஐயனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

30. குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவர்;

          சொல்லும் நற் கவியை மெச்சார்
     துர்ச்சனர்க்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் வரும்
          தூயரைத் தள்ளி விடுவார்
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார்; கறுப்பு
          என்னிலோ போய்ப் பணிகுவார்;
     ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார்; வேசை
          என்னிலோ காலில் வீழ்வார்;
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
          நன்றாகவே பேசிடார்;
     நாளும் ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு
          நன்மை பலவே செய்குவார்;
அட்டதிசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை காண்!
          அத்தனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

31. குணம் காணும் குறி

கற்றோர்கள் என்பதைச் சீலமுடனே சொலும்
          கனவாக்கினால் காணலாம்;
     கற்பு உளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
          கால்நடையினும் காணலாம்;
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
          அடக்கத்தினால் அறியலாம்;
     அறம் உளோர் என்பதைப் பூததயை என்னும் நிலை
          அது கண்டு தான் அறியலாம்;
வித்து ஓங்கு பயிரைக் கிளைத்து வரு துடியினால்
          விளையும் என்றே அறியலாம்;
     வீரம் உடையோர் என்பது ஓங்கி வரு தைரிய
          விசேடத்தினால் அறியலாம்;
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

32. கூடின் பயன்படல்

செத்தை பல கூடி ஒரு கயிறாயின் அது கொண்டு
          திண்கரியையும் கட்டலாம்!
     திகழ்ந்த பல துளி கூடி ஆறாயின் வாவியொடு
          திரள்ஏறி நிறைவிக்கலாம்!
ஒத்த நுண்பஞ்சு பல சேர்ந்து நூல் ஆயிடின்
          உடுத்திடும் கலை ஆக்கலாம்!
     ஓங்கி வரு கோலுடன் சீலையும் கூடினால்
          உயர் கவிகை ஆ கொள்ளலாம்!
மற்றும் உயர் தண்டுலத்தோடு தவிடு உமி கூடின்
          பல்கும் முளை விளைவிக்கலாம்!
     மனமொத்த நேயமொடு கூடி ஒருவர்க்கு ஒருவர்
          வாழின் வெகு வெற்றி பெறலாம்!
அற்ற கனியைப் பொருத்து அரி பிரமர் தேடரிய
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

33. வெற்றி இடம்

கலைவலாருக்கு அதிக சயம் மதுரவாக்கிலே;
          காமுகர்க்கு அதிக சயம்
     ஓகைப் பொருளிலே;வரும் மருத்துவர்க்கோ சயம்
          கை விசேடந் தன்னிலே;
நலமுடைய வேசையர்க்கு அழகிலே! அரசர்க்கு
          நாளும் ரணசூரத்திலே
     நற்றவர்க்கு அதிக சயம் உலகு புகழ் பொறையிலே;
          ஞான வேதியர் தமக்கோ
குல மகிமை தன்னிலே; வைசியர்க்கோ சயம்
          கூடிய துலாக்கோலிலே;
     குற்றம் இல்லாத வேளாளருக்கோ சயம்
          குறையாத கொழு முனையிலே;
அலைவுஇல் குதிரைக்கு நடை வேகத்தில் அதிக சயம்
          ஆம் என்பர்; அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

34. ஒன்றின் இல்லாமையான் பாழ்படல்

தாம்பூல தாரணம் இலாததே வரு பூர்ண
          சந்த்ரன் நிகர் முக சூனியம்!
     சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்து வாழ்
          தரும் பெரிய நகர் சூனியம்!
மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே
          மிக்க தேசச் சூனியம்!
     மிக்க சற்புத்திரன் இலாததே நலமான
          வீறு சேர் கிருக சூனியம்!
சோம்பாத தலைவர் இல்லாததே வளமுடன்
          சொல் உயர் சபா சூனியம்!
     தொல் உலகில் அனைவர்க்கும் மா நிதியம் இல்லதே
          சுத்த சூனியம் என்பர் காண்!
ஆம்பல் வதனத்தனைக் குகனை ஈன்று அருள் செய்த
          அத்தனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

35. மூடர்களில் உயர்வு தாழ்வு

பெண் புத்தி கேட்கின்ற மூடரும், தந்தை தாய்
          பிழைபுறம் சொலும் மூடரும்,
     பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
          பிதற்றிடும் பெரு மூடரும்,
பண்புற்ற சுற்றம் சிரிக்கவே இழிவான
          பழி தொழில் செய்திடும் மூடரும்,
     பற்றற்ற பேர்க்கு முன் பிணை நின்று பின்பு போய்ப்
          பரிதவித்திடும் மூடரும்,
கண் கெட்ட மாடென்ன ஓடி இரவலர் மீது
          காய்ந்து வீழ்ந்திடும் மூடரும்,
     கற்று அறிவு இலாத முழு மூடருக்கு இவர் எலாம்
          கால் மூடர் அரை மூடர்காண்
அண்கற்ற நாவலர்க்கு ஆகவே தூது போம்
          ஐயனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

36. இதற்கு இது வேண்டும்

தனக்கு வெகு புத்தி உண்டாகினும் வேறொருவர்
          தம் புத்தி கேட்க வேண்டும்;
     தான் அதிக சூரனே ஆகினும் கூடவே
          தள சேகரங்கள் வேண்டும்;
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்
          கற்றோரை நத்த வேண்டும்;
     காசினியை ஒரு குடையில் ஆண்டாலும் வாசலில்
          கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
          சுதி கூட்ட ஒருவன் வேண்டும்;
     சுடர் விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
          தூண்டு கோல் ஒன்று வேண்டும்;
அனல் கண்ணனே! படிக சங்கம் நிகர் வண்ணனே!
          ஐயனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

37. வறுமையின் கொடுமை

மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன?
          வெகு வித்தை கற்றும் என்ன?
     மிக்க அதி ரூபமொடு சற்குணம் இருந்து என்ன?
          மிகுமானி ஆகில் என்ன?
பாலான மொழி உடையன் ஆய் என்ன? ஆசார
          பரனாய் இருந்தும் என்ன?
     பார் மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
          பாக்கியம் இலாத போது;
வாலாய மாய்ப் பெற்ற தாயும் சலித்திடுவள்!
          வந்த சுற்றமும் இகழுமே!
     மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
          மனைவியும் தூறு சொல்வாள்!
ஆலாலம் உண்ட கனி வாயனே! நேயனே!
          அனகனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

38. இழிவு

இரப்பவன் புவி மீதில் ஈனன்; அவனுக்கு இல்லை
          என்னும் அவன் அவனின் ஈனன்
     ஈகின்ற பேர் தம்மை ஈயாமலே கலைத்
          திடும் மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன் உண்டு எனக் காட்டி
          உதவிடான் அவனில் ஈனன்!
     உதவவே வாக்கு உரைத்தில்லை என்றே சொலும்
          உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலிப்
          பலகால் அலைந்து திரியப்
     பண்ணியே இல்லை என்றிடும் கொடிய பாவியே
          பாரில் எல்லோர்க்கும் ஈனன்!
அரக்கு இதழ்க் குமுதவாய் உமை நேசனே! எளியர்
          அமுதனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

39. மறைவும் வெளிப்படையும்

சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
          தீது இல்கிரகச் சாரமும்,
     தின்று வரும் அவுடதமும், மேலான தேசிகன்
          செப்பிய மகா மந்த்ரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
          புனையும் மடவார் கலவியும்,
     புகழ் மேவும் மானமும், இவை ஒன்பதும் தமது
          புந்திக்குளே வைப்பதே
தன்மம் என்று உரை செய்வர்; ஒன்னார் கருத்தையும்
          தன் பிணியையும் பசியையும்,
     தான் செய்த பாவமும், இவை எலாம் வேறொருவர்
          தம் செவியில் வைப்பது இயல்பாம்!
அல்மருவு கண்டனே! மூன்று உலகும் ஈன்ற உமை
          அன்பனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

40. வானவர் கால அளவை

சதுர்யுகம் ஓர் இரண்டாயிரம் பிற்படின்
          சதுமுகன்கு ஒருதினம் அதாம்!
     சாற்றும் இத் தினம் ஒன்றிலே இந்த்ர பட்டங்கள்
          தாமும் ஈரேழ் சென்றிடும்!
மதிமலியும் இத்தொகையின் அயன் ஆயுள் நூறு போய்
          மாண்ட போது ஒரு கற்பம்ஆம்!
     மாறிவரு கற்பம் ஒரு கோடி சென்றால் நெடிய
          மால் தனக்கோர் தினம் அதாம்!
துதி பரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
          தோன்றியே போய் மறைந்தால்
     தோகையோர் பாகனே! நீநகைத்து அணிமுடி
          துளக்கிடும் காலம் என்பர்!
அதிகம் உள பல தேவர் தேவனே! தேவர்கட்கு
          அரசனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

41. தூய்மை

வாம் பரிதனக்கு அதிக புனிதம் முகம் அதனிலே;
          மறையவர்க்கு உயர் புனிதமோ
     மலர் அடியிலே; புனிதம் ஒளிகொள் கண்ணாடிக்கு
          மாசில் முன்புறம் அதனிலே;
மேம்படும் பசுவினுக்குப் பின்புறத்திலே;
          மிக்க மட மாதருக்கோ
     மேனி எல்லாம் புனிதம் ஆகும்; ஆசௌசமொடு
          மேவு வனிதையர் தமக்கும்
தாம்பிரம் அதற்கும் மிகு வெள்ளி வெண்கலம் அயம்
          தங்கம் ஈயம் தமக்கும்
     தரும் புனிதம் வரு பெருக கொடு புளி சுணம் சாம்பல்
          சாரும் மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவை என்பர்; மாமேரு வில்லியே!
          அனகனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடிய பொலிஎருதை இரு மூக்கிலும் கயிறு ஒன்று
          கோத்து வசவிர்த்தி கொள்வார்;
     குவலயந்தனின் மதக் களிறு அதனை அங்குசம்
          கொண்டு வசவிர்த்தி கொள்வார்;
படியில் விட அரவை மந்திர தந்திரத்தினால்
          பற்றி வசவிர்த்தி கொள்வார்;
     பாய் பரியை நெடிய கடிவாளம் அது கொடு நடை
          பழக்கி வசவிர்த்தி கொள்வார்;
விடம் உடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
          வீசி வசவீர்த்தி கொள்வார்;
     மிக்க பெரியோர்களும் கோபத்தை அறிவால்
          விலக்கி வசவிர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்க வரு செந்தாமரைப் பதத்து
          ஜயனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

43. ஒளியின் உயர்வு

செழுமணிக்கு ஒளி அதன் மட்டிலே! அதனினும்
          செய்ய கச்சோதம் எனவே
     செப்பிடும் கிருமிக்கு மிச்சம் ஒளி! அதனினும்
          தீபத்தின் ஒளி அதிகமாம்!
பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
          பகல்வர்த்தி அதில் அதிகமாம்!
     பார மத்தாப்பின் ஒளி அதில் அதிகமாம்! அதிலும்
          பனி மதிக்கு ஒளி அதிகம்ஆம்!
விழைதரு பரிதிக்கும் மனு நீதி மன்னர்க்கும்
          வீர விதரணிகருக்கும்
     மிக்க ஒளி திசைதொறும் போய் விளங்கிடும் என்ன
          விரகுளோர் உரை செய்குவார்!
அழல் விழிகொடு எரி செய்து மதனவேள் தனை வென்ற
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

44. நன்று தீதுஆதல்

வான் மதியை நோக்கிடின் சோரர் காமுகருக்கு
          மாறாத வல்விடம் அதாம்!
     மகிழ்நன் தனைக் காணில் இதம் இலா விபசரிய
          மாதருக்கு ஓவிடம் அதாம்!
மேன்மை தரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
          மிக்க பேர்க்கு அதிக விடமாம்!
     வித்தியா அதிபர்தமைக் கண்ட போது அதிலோப
          வீணர்க்கு எலாம் விடம் அதாம்!
ஈனம் மிகு புன்கவி வலோர்க்கு அதிக சபை காணில்
          ஏலாத கொடிய விடமாம்!
     ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில்
          எந்நாளும் அதிக விடமாம்!
ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

45. தாழ்வும் உயர்வுபெறும்

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
          மேன்மையோர் செய்யின் அழகாம்!
     விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
          விழை மங்கை செய்யின் அழகாம்!
தகுதாழ்வு வாழ்வு வெகு தருமங்களைச் செய்து
          சாரிலோ பேரழகு அதாம்!
     சரீரத்தில் ஓர் ஊனம் மானம் எதுவாகிலும்
          சமர் செய்து வரில் அழகு அதாம்?
நகம் மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
          நாளும் அது ஓர் அழகு அதாம்!
     நாய் மீதில் ஏறினும் வீழினும் கண்ட பேர்
          நகை செய்து அழகன் என்பர் காண்!
அகம் ஆயும் நற்றவர்க்கு அருள் புரியும் ஐயனே!
          ஆதியே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

46. நல்வினை செய்தோர்

சாண் எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,
          தானம் இளையாது உதவினோன்,
     தந்தை சொல் மறாதவன், முன்னவன் கானவன்
          தாழ்பழி துடைத்த நெடியோன்,
வருபிதிர்க்கு உதவினோன், தெய்வமே துணை என்று
          மைந்தன் மனைவியை வதைத்தோர்,
     மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு
          மாய்த்து உலகில் மகிமை பெற்றோர்
கருதரிய சிபி அரிச்சந்திரன், மாபலி,
          கணிச்சியோன் சுமித்திரை சுதன்,
     கருடன், பகீரதனுடன் சிறுத்தொண்டனொடு
          கானவன், பிரகலாதன்,
அரிய வல்விபீடணன் எனும் மகா புருடராம்
          அத்தனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

47. தீவினை செய்தோர்

வாய் இகழ்வு பேசி மிகு வாழ்வு இழந்தோன், சிவனை
          வைது தன் தலை போயினோன்,
     மற்றொருவர் தாரத்தில் இச்சை வைத்து உடலெலாம்
          மாறாத வடுவு ஆயினோன்,
தாயத்தினோர்க்கு உள்ள பங்கைக் கொடாமலே
          சம்பத்து இகழ்ந்து மாய்ந்தோன்,
     தக்க பெரியோர் தமை வணங்காது மதத்தினால்
          தந்தி வடிவாய் அலைந்தோன்,
மாயனைச் சபை அதனில் நிந்தை செய்து ஒளிகொள் நவ
          மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,
     வரு நகுடனொடு தக்கன் குருடன்
          மகன், வழுதி, சிசுபாலனாம்!
ஆயும் அறிவாளரொடு தேவர் பணி தாளனே!
          அவனி புகழ் அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

48. நன்நகர்

வாவி பல கூபமுடன் ஆறு அருகு சேர்வதாய்,
          மலை காத வழியில் உளதாய்
     வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய்ச், செந்நெல்
          வயல்கள் வாய்க்கால்கள் உளதாய்,
காவி கமலம் குவளை சேர் ஏரி உள்ளதாய்க்,
          கனவர்த் தகர்கள் மறைவலோர்
     காணரிய பல குடிகள் நிறைவு உள்ளதாய், நல்ல
          காவலன் இருக்கை உளதாய்த்,
தேவர் ஆலயம் ஆடல் பாடல் அணி மாளிகை
          சிறக்க உளதாய்ச் சற்சனர்
     சேரும் இடம் ஆகுமோர் ஊர் கிடைத்ததில் அதிக
          சீவனமுமே கிடைத்தால்
ஆவலொடு இருந்திடுவதே சொர்க்க வாசமென்று
          அறையலாம்! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

49. தீநகர்

ஈன சாதிகள் குடி இருப்பதாய், முள்வேலி
          இல்இல்லினுக்கு உளதாய்,
     இணைமுலை திறந்து தம் தலை விரித்திடு மாதர்
          எங்கும் நடமாட்டம் உளதாய்க்,
கானமொடு பக்கமாய் மலை ஓரமாய் முறைக்
          காய்ச்சல் தப்பாத இடமாய்,
     கள்ளர் பயமாய், நெடிய கயிறு இட்டு இறைக்கின்ற
          கற்கேணி நீர் உண்பதாய்.
மானம் இல்லாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்ற
          மணியம் ஒன்றுண்டன் ஆனதாய்,
     மாநிலத்து ஓர் தலம் இருந்து அதனில் வெகுவாழ்வு
          வாழ்வதிலும், அருகரகிலே
ஆன நெடு நாள்கிடந்து அமிழ்தலே சுகமாகும்
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

50. முழுக்குநாள்

வரும் ஆதி வாரம் தலைக்கு எண்ணெய் ஆகாது
          வடிவ மிகும் அழகு போகும்;
     வளர் திங்ளுக்கு அதிக பொருள் சேரும்; அங்கார
          வாரம் தனக்கு இடர் வரும்
திரு மேவு புதனுக்கு மிகு புத்தி வந்திடும்;
          செம்பொனுக்கு உயர் அறிவுபோம்;
     தேடிய பொருள் சேதம் ஆம் வெள்ளி; சனி எண்ணெய்
          செல்வம் உண்டு ஆயுள் உண்டாம்;
பரிகாரம் உளது ஆதி வாரம் தனக்கு அலரி;
          பௌமனுக்கான செழுமண்
     பச்சறுகு பொன்னவற்கு ஆம்; எருத்தூள் ஒளிப்
          பார்க்கவற்கு ஆகும் எனவே;
அரிதுஆ அறிந்த பேர் எண்ணெய் சேர்த்தே முழுக்கு
          ஆடுவார்; அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

51. மருத்துவன்

தாதுப் பரீட்சை வரு கால தேசத்தோடு
          சரீர லட்சணம் அறிந்து,
     தன்வந்த்ரி கும்ப முனி தேரர் கொங்கணர் சித்தர்
          தமது வாகடம் அறிந்து
பேதம்பெருங் குளிகை சுத்திவகை மாத்திரைப்
          பிரயோகமோடு பஸ்மம்
     பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்
          பேர் பெறுங் குணவாகடம்
சோதித்து, மூலிகாவித நிகண்டுங் கண்டு
          தூய தைலம் லேகியம்
     சொல் பக்குவம் கண்டு வரு ரோக நிண்ணயம்
          தோற்றியே அமிர்தகரனாய்,
ஆதிப் பெருங்கேள்வி உடையன் ஆயுர்வேதன்
          ஆகும்; எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

52. உண்மை உணர் குறி

சோதிடம் பொய்யாது மெய் என்பது அறிவரிய
          சூழ்கிரகணம் சாட்சி ஆம்!
     சொற் பெரிய வாகடம் நிசம் என்கை பேதி தரு
          தூய மாத்திரை சாட்சி ஆம்!
ஆதியில் செய்த தவம் உண்டு இல்லை என்பதற்கு
          ஆளடிமையே சாட்சி ஆம்!
     அரி தேவதேவன் என்பதை அறிய முதல்நூல்
          அரிச்சுவடியே சாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற்கோ ருத்ர
          நமகசமகம் சாட்சி ஆம்!
     நாயேனை ரட்சிப்பது உன்பாரம்! அரிஅயன்
          நாளும் அர்ச்சனை செய் சரணத்து
ஆதி நாயக மிக்க வேத நாயகனான
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

53. பிறவிக்குணம் மாறாது

கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,
          கல்வியும், கருணை விளைவும்,
     கருது அரிய வடிவமும் போகமும், தியாகமும்,
          கனரூபம் உள மங்கையும்,
அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,
          ஆண்மையும், அமுத மொழியும்,
     ஆன இச்செயல் எலாம் சனன வாசனையினால்
          ஆகிவரும் அன்றி, நிலமேல்
நலம் சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்
          நண்ணுமோ? ரஸ்தாளிதன்
     நற்சுவை தனக்குவர வேம்புதவமே நெடிது
          நாள்செயினும் வாராது காண்!
அலங்காரம் ஆக மலர்கொன்றை மாலிகை சூடும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே.

54. ஊழ்வலி

கடல் அளவு உரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
          காணும் படிக்கு உரை செய்வர்,
     காசினியின் அளவு பிரமாணம் அது சொல்லுவார்
          காயத்தின் நிலைமை அறிவார்,
விடல் அரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்
          விடாமல் தடுத்து அடக்கி
     மேன்மேலும் யோக சாதனை விளைப்பார், எட்டி
          விண் மீதினும் தாவுவார்,
தொடல் அரிய பிரம நிலை காட்டுவார், எண் வகைத்
          தொகையான சித்தி அறிவார்,
     சூழ்வினை வரும் பொழுது சிக்கி உழல்வார்! அது
          துடைக்க ஒரு நான்முகற்கும்
அடைவு அல எனத் தெரிந்து அளவு இல் பல நூல் சொல்லும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

55. உயர்வு இல்லாதவை

வேதியர்க்கு அதிகமாம் சாதியும், கனக மக
          மேருவுக்கு அதிக மலையும்,
     வெண்திரை கொழித்து வரு கங்கா நதிக்கு அதிக
          மேதினியில் ஓடு நதியும்
சோதி தரும் ஆதவற்கு அதிகமாம் காந்தியும்,
          சூழ்கனற்கு அதிக சுசியும்
     தூய தாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
          சுருதிக்கு உயர்ந்த கலையும்,
ஆதி வடமொழி தனக்கு அதிகமாம் மொழியும், நுகர்
          அன்னதானம் தனிலும் ஓர்
     அதிக தானமும் இல்லை என்று பல நூல் எலாம்
          ஆராய்ந்த பேருரை செய்வார்!
ஆதவன் பிரமன் விண்ணவர் முனிவர் பரவ வரும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே.

56. வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீண் உரை
          விரும்புவோர் அவரின் வீணர்!
     விருந்து கண்டு இ்ல்லாள் தனக்கு அஞ்சி ஓடி மறை
          விரகு இலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும் கல்வி இல்லோரும் வீணரே!
          நாடி அவர் மேல் கவி சொல்வார்
     நானிலம் தனில் வீணர்! அவரினும் வீணரே
          நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்ட அறிவிலாத பெரு வீணரே அவரினும்
          சேர் ஒரு வரத்தும் இன்றிச்
     செலவு செய்வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
          திரியும் எளியேனை ஆட்கொண்டு
ஆட்டம் செய்யும் பத அம்புயம் முடியின் மேல் வைத்த
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

57. கெடுவன

மூப்பு ஒருவர் இல்லாத குமரி குடி வாழ்க்கையும்,
          மூது அரண் இலாத நகரும்,
     மொழியும் வெகு நாயகர் சேரிடமும், வரும் எதுகை
          மோனை இில்லாத கவியும்
காப்பு அமைவு இலாததோர் நந்தவனமும்,நல்ல
          கரை இலா நிறையே அரியும்,
     கசடறக் கற்காத வித்தையும், உபதேச
          காரணன் இலாத தெளிவும்,
கோப்பு உள விநோதம் உடையோர் அருகு புகழாத
          கோதையர் செய் கூத்தாட்டமும்,
     குளிர் புனல் நிறைந்து வரும் ஆற்றோரம் அதினின்று
          கோடு அயர்ந்து ஓங்கு தருவும்,
ஆப்பது இல்லாத தேர் இவை எலாம் ஒன்றாகும்
          ஐயனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

58. இவையே போதும்

பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர்
          பூவலம் செய வேண்டுமோ?
     பொல்லாத கொலை களவு இலாத நன்னெறி உளோர்
          புகழ்அறம் செய வேண்டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
          நல்லறம் செய வேண்டுமோ?
     நல் மனோசுத்தி உண்டான பேர் மேலும் ஒரு
          நதி படிந்திட வேண்டுமோ?
மெய்யா நின் அடியரைப் பரவுவோர் உன்பதம்
          விரும்பி வழிபட வேண்டுமோ?
     வேதியர் தமைப் பூசை பண்ணுவோர் வானவரை
          வேண்டி அர்ச்சனை செய்வரோ?
ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை
          அதிபனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

59. அரியர்

பதின்மரில் ஒருத்தர் சபை மெச்சிடப் பேசுவோர்!
          பாடுவோர் நூற்றில் ஒருவர்!
     பார் மீதில் ஆயிரத்து ஒருவர் விதி தப்பாது
          பாடி ப்ரசங்கம் இடுவோர்!
இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர்!
          இதை அறிந்து இதயம் மகிழ்வாய்
     ஈகின்ற பேர் புவியிலே அருமையாகவே
          இலக்கத்திலே ஒருவராம்!
துதி பெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த்
          தூயர் கோடியில் ஒருவர் ஆம்.
     தொல் உலகு புகழ்காசி ஏகாம்பரம் கைலை
          சூழும் அவிநாசி பேரூர்
அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி
          அத்தனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

60. கற்பு மேம்பாடு

தன் கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்
          தனக்கு இணங்காத நிறையாள்,
     தழல் கதிர் எழாமலும் பொழுது விடியாமலும்
          சாபம் கொடுத்த செயலாள்,
மன்னி வளர் அழல் மூழ்கி உலகு அறிய வேதனது
          மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,
     மைந்தனைச் சுட வந்த இறைவன் தடிந்த வடி
          வாள் மாலையான கனிவாள்,
நல் நதி படிந்திடுவது என்னஆர் அழல் மூழ்கி
          நாயகனை மேவு தயவாள்,
     நானிலம் புகழ்சாலி, பேர் பெறு நளாயினி,
          நளின மலர் மேல் வைதேகி
அன்னம் என வரு சந்த்ரமதி துரோபதை என்பர்
          ஆதியே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

61. கோடி உடுக்கும் நாள்

கறைபடாது ஒளி சேரும் ஆதிவாரம் தனில்
          கட்டலாம் புதிய சீலை;
     கலை மதிக்கு ஆகாது; பலகாலும் மழையினில்
          கடிது நனைவுற்று ஒழிதரும்;
குறைபடாது இடர் வரும்; வீரியம் போம், அரிய
          குருதி வாரம் தனக்கு;
     கொஞ்ச நாளில் கிழியும், வெற்றி போம் புந்தியில்;
          குருவாரம் அதில் அணிந்தால்,
மறைபடாது அழகு உண்டு, மேன்மேலும் நல் ஆடை
          வரும்; இனிய சுக்கிரற்கோ
     வாழ்வு உண்டு, திருவு உண்டு, பொல்லாத சனியற்கு
          வாழ்வு போம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

62. சகுனம் - 1

சொல் அரிய கருடன் வானரம் அரவம் மூஞ்சிறு
          சூகரம் கீரி கலைமான்
     துய்ய பாரத்வாசம் அட்டை எலி புன்கூகை
          சொல் பெருக மருவும் ஆந்தை
வெல் அரிய கரடி காட்டான் பூனை புலிமேல்
          விளங்கும் இருநா உடும்பு
     மிக உரை செய் இவை எலாம் வலம் இருந்து இடம் ஆகில்
          வெற்றி உண்டு அதிக நலம் ஆம்;
ஒல்லையின் வழிப் பயணம் ஆகும் அவர் தலைதாக்கல்,
          ஒரு துடை இருத்தல், பற்றல்,
     ஒரு தும்மல், ஆணை இடல், இருமல், போகேல் என்ன
          உபசுருதி சொல் இவை எலாம்
அல்லல் தரும் நல்ல அல என்பர்; முதியோர் பரவும்
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

63. சகுனம் - 2

நரி மயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை
          நாவி சிச்சிலி ஓந்தி தான்
     நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி
          நாடரிய சுரபி மறையோர்
வரி உழுவை முயல் இவை அனைத்தும் வலம் ஆயிடின்
          வழிப்பயணம் ஆகை நன்றாம்;
     மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்,
          வாய்ச்சொல் வாவா என்றிடல்,
தருவளை தொனித்திடுதல், கொம்பு கிடு முடி அரசு
          தப்பட்டை ஒலி வல்வேட்டு
     தனிமணி முழக்கு எழுதல் இவை எலாம் ஊர்வழி
          தனக்கு ஏக நன்மை என்பர்!
அருணகிரண உதயம் தருண பானுவை அனைய
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

64. சகுனம் - 3

தலைவிரித்து எதிர் வருதல், ஒற்றைப் பிராமணன்,
          தவசி, சந்நாசி, தட்டான்,
     தனம் இலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,
          தட்டை முடி, மொட்டைத் தலை,
கலன் கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,
          கதித்ததில தைலம், இவைகள்
     காண எதிர் வரஒணா; நீர்க்குடம், எருக்கூடை,
          கனி, புலால் உபய மறையோர்
நலம் மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை
          நாளும் வண்ணான் அழுக்கு
     நசை பெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர் இவைகள்
          நாடி எதிர் வர நன்மையாம்;
அலை கொண்ட கங்கை புனை வேணியாய்! பரசு அணியும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

65. உணவில் விலக்கு

கை விலைக்குக் கொளும் பால் அசப்பால், வரும்
          காராக் கறந்த வெண்பால்
     காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு
          காந்திக் கரிந்த சோறு,
செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,
          தென்னை வெல்லம் லாவகம்,
     சீர் இலா வெள் உள்ளி, ஈர் உள்ளி, இங்குவொடு
          சிறப்பு இல் வெண் கத்தரிக்காய்,
எவ்வம் இல் சிவன் கோயில் நிர்மாலியம் கிரணம்,
          இலகு சுடர் இல்லாத ஊண்,
     இவை எலாம் சீலம் உடையோர்களுக்கு ஆகா
          எனப் பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும்
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

66. நற்பொருளில் குற்றம்

பேரான கங்கா நதிக்கும் அதன் மேல் வரும்
          பேனமே தோடம் ஆகும்!
     பெருகி வளர் வெண் மதிக்கு உள் உள் களங்கமே
          பெரிதான தோடம் ஆகும்!
சீராம் தபோதனர்க்கு ஒருவர் மேல் வருகின்ற
          சீற்றமே தோடம் ஆகும்!
     தீதில் முடி மன்னவர் விசாரித்திடாது ஒன்று
          செய்வது அவர் மேல் தோடம் ஆம்!
தாராளமா மிகத் தந்துளோர் தாராமை
          தான் இரப்போர் தோடம் ஆம்!
     சாரம் உள நல் கருப்பஞ் சாறு கைப்பது அவர்
          தாலம் செய் தோடம் ஆகும்!
ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

67. மனை கோலுவதற்கு மாதம்

சித்திரைத் திங்கள் தனில் மனைகோல மனைபுகச்
          செல்வம் உண்டு அதினும் நலமே
     சேரும் வைகாசிக்கு; மேனாள் அரன் புரம்
          தீயிட்டது ஆனி ஆகா;
வெற்றி கொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம்
          வீறு அல்ல; ஆவணி சுகம்;
     மேவிடும் கன்னி இரணியன் மாண்டது ஆகாது;
          மேன்மை உண்டு ஐப்பசிக்கே;
உத்தமம் கார்த்திகைக்கு ஆகாது மார்கழியில்
          ஓங்கு பாரதம் வந்த நாள்;
     உயர் உண்டு மகரத்தில்; மாசி மாதத்தில் விடம்
          உம்பர் கோன் உண்டது ஆகாது;
அத்த நீ! மாரனை எரித்த பங்குனி தானும்
          ஆகுமோ! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

68. விருந்து வாரம்

செங்கதிர்க்கு உறவு போம், பகை வரும், விருந்து ஒருவர்
          செய்ய ஒணாது உண்ண ஒணாது;
     திங்களுக்கு உறவு உண்டு; நன்மையாம்; பகைவரும்
     செவ்வாய் விருந்து அருந்தார்;
பொங்கு புதன் நன்மை உண்டு உறவாம்; விருந்து உணப்
          பொன்னவற்கு அதிக பகை ஆம்;
     புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப்
          போன உறவும் திரும்பும்;
மங்குல் நிகர் சனி வாரம் நல்லதாம்; இதனினும்
          மனம் ஒத்து இருந்த இடமே
     வாலாயமாய்ப் போய் விருந்து உண விருந்து உதவ
          வாய்த்த நாள் என்று அறியலாம்;
அம்கையில் விளங்கி வளர்துங்கம் மழுவாளனே!
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

69. பூப்பு வாரம்

அருக்கனுக்கு அதி ரோகி ஆவள்;நற் சோமனுக்கு
          ஆன கற்புடையள் ஆவாள்;
     அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள்; புந்தி
          அளவில் பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
          சிறுவரைப் பெற்று எடுப்பாள்;
     சீர் உடைய பார்க்கவற்கு அதிபோகவதியும் ஆம்;
          திருவும் உண்டாய் இருப்பாள்;
கருத்து அழிந்து எழில் குன்றி வறுமை கொண்டு அலைகுவாள்
          காரி வாரத்தில் ஆகில்;
     களப முலை மடமாதர் புட்பவதியாம் வார
          கால பலன் என்று உரை செய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

70. பூப்பு இலக்கினம்

வறுமை தப்பாது வரும் மேடத்தில்; இடபத்தில்
          மாறாது விபசாரி ஆம்;
     வாழ்வு உண்டு போகம் உண்டாகும் மிதுனம்; கடகம்
          வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமை செயும் மிடி சேர்வள் மிருகேந்திரற்கு எனில்
          சீர்பெறுவள் கன்னி என்னில்;
     செட்டுடையள் துலை எனில்; பிணியால் மெலிந்திடுவள்
          தேளினுக்குத்; தனுசு எனில்
நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையளாம்;
          நீள்மகரம் மானம் இலளாம்;
     நிறைபோகவதி கும்பம் எனில்; மீனம் என்னிலோ
          நெடிய பேரறிவு உடையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
          அது என்பர்; அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

71. தீவும் கடலும்

நாவலந் தீவினைச் சூழ்தரும் கடல் அளவு
          லட்சம் யோசனை; இதனையே
     நாள்தொறும் சூழ்வது இலவந்தீவு; அதைச் சூழ்தல்
          நல்கழைச் சாற்றின் கடல்;
மேவும் இது சூழ்வது குசத்தீவு அதைச் சூழ்தல்
          மிகும் மதுக்கடல்; அதனையே
     விழைவொடும் சூழ்தல் கிரவுஞ்சதீவம் இதனின்
          மேற்சூழ்தல் நெய்க்கடலது ஆம்;
பூவில்இது சூழ்தல் சாகத்தீவம்; இங்கு இதைப்
          போர்ப்பது திருப்பாற் கடல்;
     போவதது சூழ்தல் சான்மலி தீவம் ஆம்; தயிர்ப்
          புணரி அப்பாலும் அப்பால்
ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச் சூழ்வ
          தரும்புனற் அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

72. மாணிக்கங்கள்

சுழி சுத்தமாய் இருந்து அதிலும் படைக்கான
          துரகம் ஓர் மாணிக்கம் ஆம்;
     சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உள
          துரையும் ஓர் மாணிக்கம் ஆம்;
பழுது அற்ற அதி ரூபவதியுமாய்க் கற்புடைய
          பாவையோர் மாணிக்கம் ஆம்;
     பலகலைகள் கற்று அறி அடக்கம் உள பாவலன்
          பார்க்கிலோர் மாணிக்கம் ஆம்;
ஒழிவு அற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
          உசிதனோர் மாணிக்கம் ஆம்;
     உத்தம குலத்து உதித்து அதிலுமோ மெய்ஞ்ஞானம்
          உடையனோர் மாணிக்கம் ஆம்;
அழிவற்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

73. உண்டிஇலையும் முறையும்

வாழைஇலை புன்னை புரசுடன் நல் குருக்கத்தி
          மா பலாத் தெங்கு பன்னீர்
     மாசில் அமுது உண்ணலாம்; உண்ணாதவோ அரசு
          வனசம் செழும்பாடலம்
தாழைஇலை அத்தி ஆல் ஏரண்ட பத்திரம்
          சகதேவம் முள்முருக்குச்
     சாரும் இவை அன்றி, வெண்பால் எருக்கு இச்சில்இலை
          தனினும் உண்டிட ஒணாதால்;
தாழ்வு இலாச் சிற்றுண்டி நீர் அடிக்கடி பருகல்
          சாதங்கள் பல அருந்தல்
     சற்று உண்டல் மெத்த ஊண் இத்தனையும் மெய்ப்பிணி
          தனக்கு இடம் எனப் பருகிடார்;
ஆழி புடை சூழ் உலகில் வேளாளர் குலதிலகன்
          ஆகும் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே.

74. கவிஞர் வறுமை

எழுதப் படிக்க வகை தெரியாத மூடனை
          இணை இலாச் சேடன் என்றும்,
     ஈவது இல்லாத கன லோபியைச் சபை அதனில்
          இணை இலாக் கர்ணன் என்றும்,
அழகு அற்ற வெகு கோர ரூபத்தை உடையோனை
          அதிவடி மாரன் என்றும்,
     ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடி தனை
          ஆண்மை மிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய் சொல்லி அலைகின்ற வஞ்சகனை
          மொழி அரிச்சந்த்ரன் என்றும்,
     மூது உலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
          முறையின்றி ஏற்பது என்னோ?
அழல் என உதித்து வரு விடம் உண்ட கண்டனே!
          அமலனே! அருமை மதவேள்!
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

75. கவிஞன்

தெள் அமிர்த தாரை என மதுரம் கதித்த பைந்
          தேன்மடை திறந்தது எனவே
     செப்பு முத்தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்
          தெரிந்து உரை செய் திறமை உடனே
விள் அரிய காவியத்து உட்பொருள் அலங்காரம்
          விரி இலக்கண வி கற்பம்
     வேறும் உள தொன்னூல் வழக்கும் உலகத்து இயல்பும்
          மிக்க ப்ரபந்த வண்மை
உள்ள எல்லாம் அறிந்து அலை அடங்கும் கடலை
          ஒத்த அதிக சபை கண்ட போது
     ஓங்கு அலை ஒலிக்கின்ற கடல் போல் ப்ரசங்கம்
          அது உரைப்பவன் கவிஞன் ஆகும்!
அள்ளி விடம் உண்ட கனி வாயனே! நேயனே!
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

76. நல் சார்பு

காண் அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
          கண் இணைகள் செய் புண்ணியம்;
     கருணையாய் அவர் சொல்மொழி கேட்டிட லபிப்பது இரு
          காது செய்திடு புண்ணியம்;
பேணி அவர் புகழையே துதி செய லபித்திடுதல்
          பேசில் வாய் செய் புண்ணியம்;
     பிழையாமல் அவர் தமைத் தொழுதிட லபிப்பது கை
          பெரிது செய்திடு புண்ணியம்;
வீண் நெறி செலாமல் அவர் பணிவிடை லபிப்பது தன்
          மேனி செய்திடு புண்ணியம்;
     விழைவொடு அவர் சொற்படி நடந்திட லபிப்பதே
          மிக்க பூருவ புண்ணியம்;
ஆணவம் எனும் களை களைந்து அறிவினைத் தந்த
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

77. பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்

சென்ம நட்சத்திரத்து ஆதி வாரம் வரின்
          தீரா அலைச்சல் உண்டாம்;
     திங்களுக்கு ஆகில் வெகு சுக போசனத்தினொடு
          திரு மாதின் அருளும் உண்டாம்,
வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும்
          வாராது சுகமது என்பார்;
     மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம் புந்தி எனும்
          வாரத்துடன் கூடினால்;
நன்மை தரு குரு வாரம் அது சேர்ந்து வரில் ஆடை
          நன்மையுடனே வந்திடும்;
     நாரியருடன் போகம் மிகவும் உண்டு ஒரு வெள்ளி
          நல்ல வாரத்தில் வந்தால்;
அல் மருவு பீடை உண்டாம் என்பர் சனியனுக்(கு);
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

78. ஏது?

பொன் ஆசை உள்ளவர்க்கு உறவு ஏது? குரு ஏது?
          பொங்கு பசி உள்ள பேர்க்குப்
     போதவே சுசி ஏது? ருசி ஏது? மயல் கொண்டு
          பொது மாதர் வலை விழியிலே
எந்நாளும் அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது
          என்றென்றும் உறு கல்வி மேல்
     இச்சை உள பேர்க்கு அதிக சுகமேது? துயிலேது?
          வெளிதாய் இருந்து கொண்டே
பன் நாளும் அலைபவர்க்கு இகழ் ஏது? புகழ் ஏது?
          பாரில் ஒருவர்க்கு அதிகமே
     பண்ணியிடு மூடருக்கு அறம் ஏது மறம் அலால்?
          பகர் நிரயம் ஒன்றுளது காண்!
அல் நாண வருகரி உரித்தணியும் மெய்யனே!
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

79. மழைநாள் குறிப்பு

சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல் நல்ல
          சீரான பரணி மழையும்,
     தீதில் வைகாசியில் பூரணை கழிந்த பின்
          சேரும் நாலாம் நாளினில்
ஒத்து வரு மழையும், அவ் ஆனியில் தேய்பிறையில்
          ஓங்கும் ஏகாதசியினில்
     ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும்,
          உண்டாயிருந்து ஆடியில்
பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்
          பகரும் ஆவணி மூல நாள்
     பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்
          பாரில் வெகு விளைவும் உண்டாம்;
அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்
          அண்ணல் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

80. பயன் இலாதவை

சமயத்தில் உதவாத நிதியம் ஏன்? மிக்க துயர்
          சார்பொழுது இலாத கிளை ஏன்?
     சபை முகத்து உதவாத கல்வி ஏன்? எதிரி வரு
          சமரத்து இலாத படை ஏன்?
விமலனுக்கு உதவாத பூசை ஏன்? நாளும் இருள்
          வேளைக்கு இலாத சுடர் ஏன்?
     வெம்பசிக்கு உதவாத அன்னம் ஏன்? நீடு குளிர்
          வேளைக்கு இலாத கலை ஏன்?
தமது தளர் வேளைக்கு இலாத ஓர் மனைவி ஏன்?
          சரசத்து இலாத நகை ஏன்?
     சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?
          தரணி மீது என்பர் கண்டாய்!
அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத
          ஆதியே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

81. மறையோர் சிறப்பு

ஓர் ஆறு தொழிலையும் கைவிடார்; சௌச விதி
          ஒன்று தப்பாது புரிவார்;
     உதயாதியில் சென்று நீர் படிகுவார்; காலம்
          ஒரு மூன்றி னுக்கும் மறவாது
ஆராய்ந்து காயத்ரி அது செபிப்பார்; நாளும்
          அதிதி பூசைகள் பண்ணுவார்;
     யாகாதி கருமங்கள் மந்த்ர கிரியா லோபம்
          இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிக நன்மார்க்கமே
          பிழையாது இருக்கும் மறையோர்
     பெய்யெனப் பெய்யும் மு கில்; அவர் மகிமை எவர்களும்
          பேசுதற்கு அரிது அரிது காண்!
ஆர்ஆர் நெடும் சடில அமலனே! எனை ஆளும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

82. அரசர் சிறப்பு

மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட
          வரும் அதிக ரண வீரமும்,
     வாள் விசயமொடு சரச சாதன விசேடமும்,
          வாசி மதகரி ஏற்றமும்,
கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,
          கைகண்ட போர்ப் படைஞரும்,
     கசரத பதாதியும், துரக ப்ரவாகமும்
          கால தேசங்கள் எவையும்
இனிதாய் அறிந்த தானா பதிகளொடு சமர்க்கு
          இளையாத தளகர்த்தரும்,
     என்றும் வற்றாத தன தானிய சமுத்திரமும்,
          ஏற்றம் உள குடி வர்க்கமும்,
அனைவோரும் மெச்ச இங்கு இவையெலாம் உடைய பேர்
          அரசராம்! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

83. வணிகர் சிறப்பு

நீள்கடல் கடந்திடுவர்; மலையாளமும் போவர்!
          நெடிது தூரம் திரிந்தும்
     நினைவு தடுமாறார்கள்; சலியார்கள்; பொருள் தேடி
          நீள் நிலத்து அரசு புரியும்
வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள்;
          வரும் இடம் வராத இடமும்
     மனத்தையும் அறிந்து உதவி ஒன்று நூறாயிட
          வளர்ப்பர்; வரு தொலை தொலைக்கும்
ஆள்விடுவர்; மலிவு குறைவது விசாரித்திடுவர்
          அளவில் பற்பல சரக்கும்
     அமைவு உறக் கொள்வர்; விற்பார் கணக்கு அதில் அணுவும்
          அறவிடார்; செலவு வரிலோ
ஆளி ஒத்தே மலையின் அளவும் கொடுத்திடுவர்
          அருள் வைசியர்! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

84. வேளாளர் சிறப்பு

யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்
          இயற்றி நல் ஏர் பெறுவதும்,
     இராச்ய பாரம் செய்து முடி மன்னர் வெற்றி கொண்டு
          என்றும் நல் ஏர் பெறுவதும்,
வசனாதி தப்பாது தனதானியம் தேடி
          வசியர் நல் ஏர் பெறுவதும்,
     மற்றும் உள பேரெலாம் மிடி என்றிடாது அதிக
          வளமை பெற்று ஏர் பெறுவதும்,
திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை
          செய்யு நல் ஏர்பெறுவதும்,
     சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர்
          செய்யும் மேழிப் பெருமை காண்
அசையாது வெள்ளி மலை தனில் மேவி வாழ்கின்ற
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்

தன் அரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
          சாலமேல் வரு கருமமும்
     தான் அறிந்து அதி புத்தி உத்தி உண்டாயினோன்
          தானாதிபதி ஆகுவான்;
மன்னவர் மனத்தையும், கால தேசத்தையும்,
          வாழ்குடி படைத் திறமையும்,
     மந்திர ஆலோசனையும் எல்லாம் அறிந்தவன்
          வளமான மதிமந்திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
          சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்,
     தோலாத வெற்றியும் திடமான சித்தி உள
          சூரனே சேனாதிபன்
அன்னையினும் நல்ல மலை மங்கை பங்காளனே!
          அனகனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

86. அரசவைக் கணக்கர்

வரும் ஓலை உத்தரத்து எழுதி வரு பொருளினால்
          வரவிடுப்போன் மனதையும்,
     மருவி வரு கருமமும் தேச காலத்தையும்
          வரு கரதல ஆமலகமாய்
விரைவாய் அறிந்து அரசர் எண்ணில் எண்ணினை
          அளவிட எழுத வாசிக்கவும்
     வெற்றி கொண்டே பெரிய புத்தி உடையோன் புவியின்
          மேன்மை ராயசகாரன் ஆம்;
கருவாய் அறிந்து தொகை ஈர் ஆறு நொடியினில்
          கடிது ஏற்றிடக்கு உறைக்கக்
     கடுகை ஒரு மலையாக மலையை ஒரு கடுகுமாக
          காட்டுவோன் கருணீகன் ஆம்;
அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

87. சீற்றத்தின் கொடுமை

கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை!
          கோபமே குடி கெடுக்கும்!
     கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது!
          கோபமே துயர் கொடுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
          கோபமே உறவு அறுக்கும்!
     கோபமே பழி செயும்! கோபமே பகையாளி!
          கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
          கூடாமல் ஒருவனாக்கும்!
     கோபமே மறலி முன் கொண்டுபோய்த் தீய நரகக்
          குழியினில் தள்ளும் ஆல்!
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளும்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

88. பல்துறை

தாம் புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்
          தங்களுக்கு அவை தழுவுறா!
     சற்றும் அறிவில்லாமல் அந்தணரை நிந்தை செய்
          தயவிலோர் ஆயுள் பெருகார்!
மேம்படு நறும் கலவை மாலைதயிர் பால் புலால்
          வீடு நல் செந்நெல் இவைகள்
     வேறொருவர் தந்திடினும் மனுமொழி அறிந்த பேர்
          விலை கொடுத்தே கொள்ளுவார்!
தேன் கனி கிழங்கு விறகு இலை இவை அனைத்தையும்
          தீண்டரிய நீசர் எனினும்
     சீர் பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்
          சீலம் உடையோர் என்பரால்!
ஆன் கொடி உயர்த்த உமை நேசனே! ஈசனே!
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

89. முப்பொருள் (தத்துவத் திரயம்)

பூதம் ஓர் ஐந்துடன், புலன் ஐந்தும், ஞானம்
          பொருந்தும் இந்திரியம் ஐந்தும்,
     பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
          புகல் அரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
          உயர்கால நியதி கலையோடு
     ஓங்கி வரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று
          உரை செய்யும் ஓர் ஏழுமே
தீதில் வித்யாதத் தவம் என்றிடுவர்; இவை அலால்
          திகழ் சுத்த வித்தை ஈசன்,
     சீர் கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
          சிவதத்வம் என்று அறைகுவார்;
ஆதி வட நீழலிற் சனகாதியார்க்கு அருள் செய்
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே.

90. காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்

வனசம், செழும் சூதமுடன், அசோகம் தளவம்,
          மலர் நீலம் இவை ஐந்துமே
     மார வேள் கணைகளாம்; இவை செயும் குணம்; முளரி
          மனதில் ஆசையை எழுப்பும்;
வினவில் ஒண் சூதமலர் மெய்ப் பசலை உண்டாக்கும்;
          மிக அசோகம் அது உயர் செயும்;
     வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம் உயிர் போக்கி விடும்;
          மேவும் இவை செயும் அவத்தை;
நினைவில் அதுவே நோக்கம், வேறொன்றில் ஆசை அறல்,
          நெட்டுயிர்ப்பொடு பிதற்றல்,
     நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
          நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனை உயிர் உண்டில்லை என்னல் ஈர் ஐந்தும் ஆம்!
          அத்தனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

91. காமன் துணைப் பொருள்கள்

வெஞ்சிலை செழும் கழை; வில்நாரி கரு வண்டினம்;
          மேல் விடும் கணைகள் அலராம்;
     வீசிடும் தென்றல் தேர்; பைங்கிள்ளையே பரிகள்;
          வேழம் கெடாத இருள் ஆம்;
வஞ்சியர் பெரும் சேனை; கைதை உடைவாள்; நெடிய
          வண்மை பெறு கடல் முரசம் ஆம்;
     மகரம் பதாகை; வரு கோகிலம் காகளம்;
          மனதே பெரும் போர்க்களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுத நேயன் கவிகை;
          சார்இரதியே மனைவி ஆம்;
     தறுகண் மடமாதர் இளமுலை மகுடம் ஆம்; அல்குல்
          தவறாது இருக்கும் இடம் ஆம்;
அஞ்சுகணை மார வேள்கு என்பர்; எளியோர்க்கு எலாம்
          அமுதமே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

92. பகை கொள்ளத் தகாதவர்

மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு
          மாறாத மர்மம் உடையோர்,
     வலுவர், கருணீகர், மிகு பாகம் செய்து அன்னம் இடும்
          மடையர், மந்திரவாதியர்,
சொன்னம் உடையோர் புலையர், உபதேசம் அது செய்வோர்
          சூழ்வயித்தியர், கவிதைகள்
     சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்
          சொப்பனந் தனில் ஆகிலும்
நன்னெறி அறிந்த பேர் பகை செய்திடார்கள் இந்
          நானிலத்து என்பர் கண்டாய்!
     நாரியோர் பாகனே! வேத ஆகமம் பரவும்
          நம்பனே! அன்பர் நிதியே!
அன்னம் ஊர் பிரமனும் கண்ணனும் காணாத
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

93. நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்

சுவை சேர் கரும்பை வெண் பாலைப் பருத்தியைச்
          சொல்லும் நல் நெல்லை எள்ளைத்
     தூய தெங்கின் கனியை எண்ணாத துட்டரைத்
          தொண்டரைத் தொழு தொழும்பை
நவை தீரு மாறு கண்டித்தே பயன் கொள்வர்
          நற்றமிழ்க் கவிவாணரை
     நலம் மிக்க செழுமலரை ஓவியம் எனத் தக்க
          நயம் உள்ள நாரியர் தமைப்
புவி மீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
          போர் வீரரைத் தூயரைப்
     போதவும் பரிவோடு இதம் செய்ய மிகு பயன்
          புகழ் பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே!
          அண்ணலே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

94. முப்பத்திரண்டு அறங்கள்

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்
          பிள்ளைகள் அருந்திடும் பால்,
     பேசரிய சத்திரம், மடம், ஆவுரிம் சுகல்
          பெண்போகம், நாவிதன், வணான்,
மறை மொழிகணாடி, தண்ணீர், தலைக்கு எண்ணெய் பசு
          வாயின் உறை, பிணம் அடக்கல்,
     வாவி, இறும் உயிர் மீட்டல், தின் பொருள், அடைக்காய்
          வழங்கல், சுண்ணாம்பு உதவுதல்,
சிறை உறுபவர்க்கு அமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
          செய்தல், முன் நூலின் மனம்,
     திகழ் விலங்கு ஊண், பிச்சை, அறு சமயருக்கு உண்டி,
          தேவர் ஆலாயம், அவுடதம்;
அறைதல் கற்போர்க்கு அன்னம் நால் எட்டு அறங்களும் முன்
          அன்னை செயல்; அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே.

95. இல்லறம்

தந்தை தாய் சற்குருவை இட்ட தெய்வங்களைச்
          சன்மார்க்கம் உள மனைவியைத்
     தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
          தனை நம்பி வருவோர்களைச்
சிந்தை மகிழ்வு எய்தவே பணி விடை செய்வோர்களைத்
          தென்புலத்தோர் வறிஞரைத்
     தீதிலா அதிதியைப் பரிவு உடைய துணைவரைத்
          தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததம் செய்கடனை என்றும் இவை பிழையாது
          தான் புரிந்திடல் இல்லறம்;
     சாரு நலம் உடையராம் துறவறத்தோரும் இவர்
          தம்முடன் சரியாயிடார்!
அந்தரி உயிர்க்கு எலாந் தாய் தனினும் நல்லவளுக்கு
          அன்பனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

96. புராணம்

தலைமை சேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
          சாரும் வாமனம், மச்சமே,
     சைவம், பெருங் கூர்மம், வருவராகம், கந்த
          சரிதமே, பிரமாண்டமும்,
தலைமை சேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம்;
          நெடிய மால் கதை; வைணவம்
     நீதி சேர் காருடம், நாரதம், பாகவதம்,
          நீடிய புராணம் நான்காம்;
கலை வளர் சொல் பதுமமொடு, கிரம கைவர்த்தமே,
          கமலாலயன் காதை ஆம்;
     கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
          கனல் காதை ஆக்கினேயம்;
அலை கொண்ட நதியும் வெண் மதியும் அறுகும் புனையும்
          அத்தனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

97. புகழ்ச்சி

பருகாத அமுது ஒருவர் பண்ணாத பூடணம்,
          பாரில் மறையாத நிதியம்,
     பரிதி கண்டு அலராத நிலவு கண்டு அலராத
          பண்புடைய பங்கேருகம்
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெம்
          கானில் உறையாத சீயம்;
     கருதரிய இக்குணம் அனைத்தும் உண்டான பேர்
          காசினியில் அருமை ஆகும்!
தெரிய உரை செய்யின் மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
          சீர் இதயம், ஈகை, வதனம்,
     திடமான வீரம், இவை என்று அறிகுவார்கள்! இச்
          செகமெலாம் கொண்டாடவே
அருள் கற்பதரு என்ன ஓங்கிடும் தான துரை
          ஆகும் எமது அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

98. திருமால் அவதாரம்

சோமுக அசுரனை முன் வதைத்து அமரர் துயர் கெடச்
          சுருதி தந்தது மச்சம் ஆம்;
     சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமையாம்; பாய் போல்
          சுருட்டி மாநிலம் எடுத்தே
போம் இரணியாக்கு அதனை உயிருண்டது ஏனம் ஆம்;
          பொல்லாத கனகன் உயிரைப்
     போக்கியது நரசிங்கம்; உலகு அளந்து ஓங்கியது
          புனித வாமன மூர்த்தி ஆம்;
ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன்;
          இரவி குலம் வேர் அறுத்தோன்
     ஏர் பரசு இராமன்; வரு கண்ணனொடு பலராமன்
          இப் புவி பயம் தவிர்த்தோர்
ஆம் இனிய கல்கி இனி மேல் வருவது இவை பத்தும்
          அரி வடிவம்; அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

99. சிவமூர்த்தி

பிறைசூடி, உமை நேசன், விடை ஊர்தி, நடம் இடும்
          பெரியன், உயர் வதுவை வடிவன்
     பிச்சாடனன், காமதகனன், மறலியை வென்ற
          பெம்மான், புரந்தகித்தோன்,
மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன் முடி
          வௌவினோன், வீரேசுரன்,
     மருவு நரசிங்கத்தை வென்ற அரன், உமை பாகன்
          வனசரன், கங்காளனே,
விறல் மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி
          மிக்க சக்கரம் உதவினோன்,
     விநாயகனுக்கு அருள் செய்தோன் குகன் உமையுடன் கூடி
          மிளிர் ஏக பாதன், சுகன்,
அறிவரிய தட்சிணா மூர்த்தியொடு இலிங்கம் ஆம்
          ஐயனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!

100. கவி வணக்கம்

மலர் இதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை
          மருக்கொழுந்து உயர் கூவிளம்
     மற்றும் உள வாச மலர் பத்திரம் சிலர் சூட
          மணி முடி தனில் பொறுத்தே
சிலர் எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு
          செம்முள்ளி மலர் சூடவே
     சித்தம் வைத்து அவையும் அங்கீகரித்திடும் மகா
          தேவ தேவா! தெரிந்தே
கலை வலார் உரைக்கு நன் கவியொடம் பலவாண
          கவிராயன் ஆகுமென் புன்
     கவியையும் சூடியே மனமகிழ்ந்திடுவது உன்
          கடன் ஆகும் அடல் நாகமும்
அலை பெருகு கங்கையும் செழு மதியமும் புனையும்
          அமலனே! அருமை மதவேள்
     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
          அறப்பளீசுர தேவனே!
சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)

ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்

கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


உடல் பால் பொருள்
ஆசிரியர்: பெருந்தேவி
வகைப்பாடு : பெண்ணியம்
விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download

ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்

ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download

நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download

உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்


நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு
ஆசிரியர்: ஷாட் ஹெம்ஸ்டெட்டர்
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 299.00
தள்ளுபடி விலை: ரூ. 280.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com