காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய அருணாசல சதகம் காப்பு நேரிசை வெண்பா திருநாதன் தேடரிய சேவடியான் றன்மேல் அருணாசல சதக மன்பாத் - தெருணாவால் சொல்லுதற்கு மும்மதத்த தும்பிமுகத் தான்பதும மெல்லடியே நற்றுணை யாமே. நூல் கலிவிருத்தம் பொன்பரவுகொன் றையினோடுவான் புனலாறுவெண் மதிசூடுநீ என்பராமு மினிதாவணிந் திடுதன்மையா லெளியேன்சொலும் புன்பாடலிங் கிதுதன்னையும் போற்றிக்கொள்வா யெனவுள்ளெழும் அன்பாலுரைத் தேன்கொண்அருள் அருணாசலா! அருணாசலா! 1 கடியார்துள வத்தொங்கலான் கமலப்புது மலர்மேவினான் படியூடிடந் தடிதேடவும் பறந்தன்னமாய் முடிதேடவும் கொடியேன்மன மேகோயிலாக் குடிமேவினை யெனிலையநின் அடியாரெலா மென்சொல்லிடார் அருணாசலா! அருணாசலா! 2 கற்பம்மனு கற்பம்முப கற்பம்மெனு முறையால்வரு பொற்பின்மிகு திருநீறணி புனிதர்க்கலா னின்றாளெனு நற்பங்கய நாறுமாமலர் நணுகும்மரு டானெய்துமோ அற்பின்னடி யார்போற்றிடும் அருணாசலா! அருணாசலா! 3 வில்லார்மலர்க் கணையேவிய வேளைப்பொடி யாச்செய்தனை கல்லாலெறிந் தவன்முந்தியே காணப்பரிந் தனையாதலாற் பொல்லாமனத் தவனென்றெனைப் புறமேவிடுத் திடலையனே அல்லார்களத் தெம்மண்ணலே அருணாசலா! அருணாசலா! 4 முடிபட்டமென் றனக்கேமலர் முகிழ்போற்குழைந் திடக்கண்டிடும், வடிபட்டநோக் குடையாள்புவி வானோடளித்திடு வாள்மனம், பொடிபட்டநின் றிருமேனியிற் பொருபூழியன் கையிற்பிரம், படிபட்டபோ தென்பட்டதோ அருணாசலா! அருணாசலா! 5
கோனாகினை யடியார்மனங் குடிகொண்டவ ருணவூறிடுந் தேனாகினை யமுதாகினை தேரூர்ந்திடர் செறிபோரினில் ஆனாகிமால் வரவூர்ந்திடும் அருணாசலா! அருணாசலா! 6 புல்லாகியே பூடாகியே புழுவாகியே மரமாகியே கல்லாகியே னுந்நின்னகர்க் கண்மேவிலே னினியெங்ஙனே பொல்லாப்பிறப் பொழிந்துய்குவேன் புலைநாயினே னிமயந்தரும், அல்லார்குழற் கொருபாகனே அருணாசலா! அருணாசலா! 7 படைக்குந்தொழி லயற்கீந்தனை பரிக்குந்தொழி லரிக்கீந்தனை, துடைக்குந்தொழி லரற்கீந்தனை துதிக்குந்தொழி லடியார்க்கெலாங், கிடைக்கும்படிக் கினிதீந்தனை கிளரும்வைகை தனையன்றுநீ, அடைக்குந்தொழி லாளானதென் அருணாசலா! அருணாசலா! 8 பரிந்திட்டற மெண்ணான்குமுன் பயில்வாளிருக் கவுநின்னருள், சுரந்திட்டவன் றொண்டர்க்கெனச் சோறன்றுநீகச் சூரினில், இரந்திட்டதென் னோசொல்லுவா யெகினத்தவன் றலையொன்றினை, அரிந்திட்டதிற் பலிதேர்ந்திடும் அருணாசலா! அருணாசலா! 9 மையார்விழி மலைமாதொடு மருவுந்திருக் கோலத்தையோர் கையார்புனன் மலரானிதங் காணப்பரி யாதென்னையோ மெய்யானது வேறாகவே வேதாவரி யுழல்வுற்றனர் ஐயாவலர் மதியென்கொலோ அருணாசலா! அருணாசலா! 10 வாதாசன னாண்வின்மலை மாலார்கணை மறையேபரி போதாசன னேசாரதி புவியேரத மாக்கொண்டுபின் நாதாபுர நகைத்திட்டது நவிலும்மவ ரகமங்கவோ ஆதாரமா றினுமேலுறும் அருணாசலா! அருணாசலா! 11 முன்னாளிதழ் நறுமாலையு முரிதோலுமே புனையத்தரும் பொன்னாரித ழியினோடும்வெம் புலியானைமற் றிவைதம்மொடு மன்னாப்பயில் தரவெண்ணியோ வளர்மாமலை யுருவாயினை அன்னாயெனு மன்பர்க்கருள் அருணாசலா! அருணாசலா! 12 மேனாளொரு விழியுன்பத மேல்சாத்திய மாயோன்பெரு மீனானநா ளினுமாங்கவன் விழிகொண்டது ருசியென்று தீங் கானார்கரும் பதைவேரொடு களைகின்றது போலானதால், ஆனாயனார் தொழுமையனே அருணாசலா! அருணாசலா! 13 பாரின்கணே யைந்தாகினை பகர்நீரிடை நான்காகினை சேருந்தழற் கண்மூன்றெனச் செறிந்தாய்வளிக் கிரண்டாகினை, நேரும்விணி லொன்றாகினை நிமிரும்முயிர்க் குயிராகினை ஆருன்னிலை யறிவார்சொலாய் அருணாசலா! அருணாசலா! 14 மாறாவரந் தருவோமென வைகுந்தனும் மலர்த்தேவனு நூறாயிர முறைவந்தெதிர் நுவல்கிற்கினு நின்னன்பர்கள் பேறாயதை நினைவார்கொலோ பிறவிக்கட லதுநீந்தவே ஆறாறுநீத் தவர்வாழ்த்துறும் அருணாசலா! அருணாசலா! 15 ஊனந்தரு மிவ்வாழ்வினி லுலையேற்றுமா மையினண்ணியே ஈனந்தொடர் துயர்மேவினே னென்செய்குவே னெளியேனருண் மோனந்தரு நிலையிதென மொழிவாயெனி லினியுய்குவேன் ஆனந்தமே யுருவாகிய அருணாசலா! அருணாசலா! 16 இடியுங்கரை மரமாமென வெண்ணாமலிவ் வுடறன்னையோர் பிடியுங்குறை யாதுண்டுநான் பெரிதேவளர்த் துனதன்பினில் படியுங்குண மிலனாயினும் பரிவாருனை யலதியாவரே அடியுமுடி யுங்காணொணா அருணாசலா! அருணாசலா! 17 மட்டார்மலர் கொடுநின்னடி மலர்பூசனை செய்கின்றிலார், மொட்டார்தனத் தார்தம்மையே முயங்கித் திகைப்பாரையையோ கெட்டாரவர் தமக்குன்னருள் கிடையாது முப்புரநீறெழ, அட்டாரணன் றொழநின்றருள் அருணாசலா! அருணாசலா! 18 பாம்பின்விட வாயிற்குளே படுதேரைபோ லெளியேனுளந் தேம்பிப்புல னிற்சிக்குறாத் திகைப்புற்றுநல் லுணர்வின்றியே சாம்பிக்கிடக் கின்றேனரு டருவாயெனி லினியுய்குவேன் ஆம்பற்சிறு வாய்பங்கனே அருணாசலா! அருணாசலா! 19 வீட்டுக்கொரு வித்தாகிய மெய்ஞ்ஞானநன் னெறிதேர்கிலார் பாட்டுக்கருள் செய்வாயெனும் பண்பேனுநன் குணர்கிற்கிலார் கேட்டுக்கிட மாய்நாடொறுங் கிறிசெய்குவா ருய்வார்களோ ஆட்டுக்குவல் லவனாகிய அருணாசலா! அருணாசலா! 20 செம்பிற்களிம் பதுநீங்கவே செம்பொன்னெனத் திகழ்தன்மைபோல், பம்புற்றமும் மலநீங்கவே பரமாவைநீ யெனவோதினை, வம்புற்றநா யேனோர்ந்திலேன் மயிலைக்குளுங் கயிலைக்குளும், அம்பர்க்குளு மகிழ்பூத்திடும் அருணாசலா! அருணாசலா! 21 பாராளுமன் னவர்செல்வமும் பகரும்விசும் பிறைசெல்வமுஞ் சீரானவே தன்செல்வமுந் திருமான்மகிழ் தருசெல்வமுங், காராருமின் னெனவெண்ணியுன் கழல்போற்றுவார் தஞ்செல்வமிங்கு ஆராலுமோர வொண்ணாததாம் அருணாசலா! அருணாசலா! 22 உனக்குண்மறைந் திந்நாளுநா னுறல்போலென தருளாலினி, யெனக்குண்மறைந் திருமைந்தனே யென்றாய்குரு வாய்வந்துநீ, நினைக்குந்தொறு நினைக்குந்தொறு நீயன்றியொன் றுங்காண்கிலன், அனக்குண்டமோர் பூதக்கருள் அருணாசலா! அருணாசலா! 23 காவிக்குநேர் விழிமாதரார் காமக்கட லதின்மூழ்கிய பாவிக்குநின் னிருதாட்புணை பாலித்திடா யெனிலுய்வனோ நாவிக்கருள் செயுமையனே ஞானத்தவர் புகழ்தூயனே ஆவிக்குறு துணைமெய்யனே அருணாசலா! அருணாசலா! 24 ஒன்றாகினை பலவாகினை யுளதாகினை யிலதாகினை யென்றாரண மதுகூறுவ தெண்ணாதுதாம் பரமென்றிடுங் கன்றால்விள வெறிமாயவன் கமலத்தயன் வெருவுற்றிட அன்றாரழல் வரையாகினை அருணாசலா! அருணாசலா! 25 பளகானதில் லாவன்பர்கள் பரிவாகவே யேத்தித்தொழக் கிளர்மாமலை தனிலேயொளி கெழுசோதிகாட் டாநின்றநின் அளவார்தெரி பவரையனே அருணாசலா! அருணாசலா! 26 ஒருபான்மல ரயனாகவு மொருபாறிரு மாலாகவும் பொருவாவருட் டிருமேனியாய்ப் பொலிவாயிதன் றியுமாமலை வருபாவையோர் பாலாகவும் வருவாயிதன் றியுமையனே யருவாவையுன் னருளென்னையோ அருணாசலா! அருணாசலா! 27 ஒப்பானதி லொருமூர்த்தியா யொருபாதமார் திரிமூர்த்தியாம், அப்பான்மைபோன் மலையாகியு மருளின்பெரு மையினையனே, இப்பாருளோர் கண்டேதொழ விருந்தாய்நதி மதியாடர, வப்பார்சடை முடியண்ணலே அருணாசலா! அருணாசலா! 28 இருப்பானது வெளிமலை யிடத்தோர்மர கதமாமலை, மருப்பார்மத மவைபெற்றது வளைவில்லொரு பொன்மாமலை, விருப்பாமித னாலோவொளி மேவும்மலை வடிவாயினை, யருப்பாரெருக் கணிமாலையாய் அருணாசலா! அருணாசலா! 29 பொறியின்வழி மனம்போக்கிடார் பொன்னந்திரு வடிசேர்வதுஞ், செறியும்மிரு வினையாளர்க டிகழும்பிற வியிலாழ்வதும், வெறிகொண்மரை பரிதிக்கெதிர் விகசித்துவா டுதல்போலுமென், றறியுந்நிலை யெற்கீந்தருள் அருணாசலா! அருணாசலா! 30 படியாவுமோர் குடைநீழலிற் பரிக்கும்மவர் மகிழ்செல்வமுங், கடியார்தரு நிழல்வைகுறுங் கண்ணாயிரன் மகிழ்செல்வமு, நெடியோன்மகிழ் தருசெல்வமு நின்னன்பர்தாள் பணிந்தேத்திடும், அடியாரடிப் பொடிநேருமோ அருணாசலா! அருணாசலா! 31 காட்டுக்குளே தவஞ்செய்குவார் கனலின்னடுத் தவஞ்செய்குவார், தேட்டுற்றநற் கதிகாணவென் செயலிங்கிதுன் கோயிற்குளே, வேட்டுற்றல கிட்டேதிரு மெழுகிட்டிலார் கதிகாண்பரோ, ஆட்டுக்குமன் றினினின்றிடும் அருணாசலா! அருணாசலா! 32 பிறவாநெறி தருவானுநீ பிறக்கும்படி செய்வானுநீ யிறவாவரந் தருவானுநீ யிறக்கும்படி செய்வானுநீ மறவாதுனை வாழ்த்தும்படி வந்தாளவும் வேண்டுமையா அறவாணர்வாழ்த் தொலிமேவிய அருணாசலா! அருணாசலா! 33 உன்றாண்மலர் முடியாகவே யுறுமன்பர்கூற் றுவர்பெற்றபே றொன்றேனுமா லயன்வானுளோ ருறுகின்றில ரெனிலாங்கவர், கன்றார்களோ விதுநன்றுகொல் கருணாகரா! மதிசேகரா! அன்றாலமுண் டருள்செய்திடும் அருணாசலா! அருணாசலா! 34 மானேந்தினை மழுவேந்தினை மதியேந்தினை நதியேந்தினை கானேந்திலா வெருக்கேந்தினை கமலன்முடி கரத்தேந்தினை வானேந்தினா ரெலும்பேந்தினை வறியேன்மொழி யையுமேந்திநல், ஆனேந்தவே வந்தாளுவாய் அருணாசலா! அருணாசலா! 35 திருமாலொரு கண்வாங்கியுன் செஞ்சேவடி மிசைசாத்தினன் கருமாவடர் கண்ணப்பருன் கண்ணுக்கொரு கண்சாத்தினர் பெருமானிவர் களில்யாவரே பெரியோரெனச் சிலரெண்ணுவார், அருமாதவர் மெய்யோர்குவார் அருணாசலா! அருணாசலா! 36 பூமாந்ந்தினோன் முதலோர்தமைப் பொன்றச்செய்வை யெனவோர்ந்துமே, காமாந்தக னாவாயெனுங் கருத்தேபெரி தாக்கொண்டுவீ, ணேமாந்தர்கள் புகழ்வாரிது வெறியோமிகு, மஞ்ஞானமோ, ஆமாம்பிணை திரிசாரல்சூழ் அருணாசலா! அருணாசலா! 37 கல்லானைமுன் கைநீட்டியே கரும்புண்ணுமா றருள்செய்தநீ, பொல்லாதகன் மனமுன்னருட் போதந்தனை யண்ணச்செய வல்லாயலை போனிற்பதென் மாயஞ்சொலாய் மகிழ்தொண்டர்கள் அல்லாதவர்க் கரிதாகிய அருணாசலா! அருணாசலா! 38 வாட்டேறுகண் நிசைஞானியார் மைந்தன்றனை யாட்கொண்டநாள், பாட்டேயருச் சனையாமெனப் பகர்ந்தாயஃ துணர்ந்தும்பிறர், மாட்டேகவி சொலவெண்ணுமென் மருணீக்குவா யிருவோர்கள்போ, ராட்டேசெய வவர்முன்வரும் அருணாசலா! அருணாசலா! 39 ஈனந்தரு பிறவிக்கட லிடையேழையேன் பலகால்விழ ஊனந்தரும் வினையாம்வளி யுறுவித்தலா லுனதின்னருள் மோனந்தரு குகைசேரவே முன்னிக்கொடு வந்தேனையா ஆனைந்துமா டியவையனே அருணாசலா! அருணாசலா! 40 நாய்தன்னிலுங் கடையாகிநின் னல்லன்பர்தம் பானண்ணிலேன், வாய்தன்னினின் றனைவாழ்த்திலேன் வணங்கிப்பணி செய்தும்மிலன், பேய்தன்னொடா டியவாறுபோற் பித்தேறுமென் னகநண்ணினை, ஆய்தன்னினு மருள்செய்திடும் அருணாசலா! அருணாசலா! 41 சந்தித்துமா லயன்வாதுசெய் தலினாங்கவர்க் கரிதாகினை வந்தித்தலா லொருபாணன்முன் வந்தாய்விற கோதிக்கொடு சிந்தித்திடி லவரித்திறந் தெளிவெய்தியின் னருள்சேர்குவார், அந்திப்பிறை முடியாளனே அருணாசலா! அருணாசலா! 42 உமையாளரு ளனையாகவு மொருதந்தைநீ தானாகவுந் தமருன்னடி யாராகவுஞ் சார்பற்றவர் தமைநோக்குறி னமனார்நணு காதோடுத னாயேனுணர்ந் துனையண்டினேன் அமர்நீதியார் தொழுமையனே அருணாசலா! அருணாசலா! 43 கார்மேவிய களங்கண்டனன் கழன்மேவுமால் விழிகண்டனன் போர்மேவுசூ லங்கண்டனன் போதன்றலைக் கரங்கண்டனன் சீர்மேவுமா திடங்கண்டனன் சிறியேனிட ரினிக்காண்பனோ ஆர்மேவுதா ரணிதோளனே அருணாசலா! அருணாசலா! 44 திருமாலய னுனதாண்முடி தெரிவானல மந்தார்முனம் ஒருமாதுவந் தியின்வாய்தலி னுறுமாறறி கிலராகிநல் லுருமாறிய திறனென்னையோ வுமைபாகனே! யருளாகனே! அருமாதவர் பலரேத்திடும் அருணாசலா! அருணாசலா! 45 வல்லாளமன் னவன்வாழவோர் மகவாயவற் கருளீந்திடும் வில்லார்மதி முடியண்ணலே வினையேன்பிறந் திடவைப்பையேல், கல்லாய்மர மாயேனுநீ கனிவோடமர் தருமிப்பதி யல்லாவிடந் தனில்வைத்திடேல் அருணாசலா! அருணாசலா! 46 வரமாமல ரவனீந்திட வானோர்களுக் கிடரேசெயு நரகாசுரன் றனைவெல்லமுன் னாராயணன் றவஞ்செய்தலின் ஒருபாதியாங் கவனுக்களித் தொருபாதிதே விக்கீதலால் அருவாய்மரு வினையோசொலாய் அருணாசலா! அருணாசலா! 47 எள்ளுக்குளெண் ணெய்போலவு மெறிமாமணி யொளிபோலவுங், கள்ளுற்றபூ மணம்போலவுங் கனகத்துறு மொளிபோலவும், விள்ளுற்றிடா துயிர்தோறுநீ மேவுற்றதோர்ந் தவர்ப்போற்றுவேன், அள்ளுற்றநீ றணிமெய்யனே அருணாசலா! அருணாசலா! 48 உமையாளுன் விழிமூடுநா ளொளிருங்கதிர் மதிவானிடை, சமைவாயிருக் கவுநள்ளிரு டரணிக்குண்மூ டியதன்மையாற், கமையாருநின் விழிகாரணக் கதிர்மாமதி யெனவோர்ந்தனன், அமைவாமனத் தவர்போற்றிய அருணாசலா! அருணாசலா! 49 பெருமைக்கட னிறவண்ணனும் பிரமன்முத லியதேவரும் ஒருமிக்க,மாய் தரு,மூழிதோ றொருதானுமாய் தர,னீங்கவே தருமக்கட வுள்வெள்விடை தானாய்வர வுவந்தூர்ந்திடும் அருமைத்திரு வருளாளனே அருணாசலா! அருணாசலா! 50 மலையான்மகள் கழுவாய்செயும் வகைசொல்லியே வினைநின்னரு, ணிலையீதெனி னெவருய்ந்திடார் நிமிர்செஞ்சடை, மிசையேமதி, அலையார்நதி யொடுசூடிய அருணாசலா! அருணாசலா! 51 தக்கன்முனிந் தேகூறிய சாபந்தொடர்ந் தெய்தாதுனைப், புக்கண்முசந் திரனோர்கலை பொலிவெய்தவுன் முடிமீதிலே வைக்கும்படி யச்சந்திரன் மனநைந்துசெய் தவமென்னையோ அக்கன்புட னணிமெய்யனே அருணாசலா! அருணாசலா! 52 உன்னன்னிலை வினவும்பொழு துமைதன்னையே வியந்தாளென, மன்னும்யமு னையிற்சங்கமாய் மருவிச்சிறு விதிமாமக, ளென்னப்பொலிக என்றேவியது எவர்க்கும்மருள் தரவல்லவோ, அன்னத்தவன் பணியையனே அருணாசலா! அருணாசலா! 53 விண்ணாளுமிந் திரனக்கினி விறலந்தக நிருதர்க்கிறை தண்ணார்வரு ணன்வாயுவே தனதன்னுட னீசானனும் உண்ணாடிமூழ் கியதீர்த்தமின் றொன்றேயெம திடர்தீர்த்திட, அண்ணாமலை யெனநீடிய அருணாசலா! அருணாசலா! 54 பூசிக்கநன் மலருண்டுதீம் புனலுண்டுநன் னெறிதேர்குவான் வாசிக்கவா கமமுண்டுநின் மலர்நோக்கமு முண்டாகுமே னேசித்தெளி யேனுய்குவே னீறோடுகண் மணிபூண்டுளத் தாசற்றவர் தொழுமையனே அருணாசலா! அருணாசலா! 55 திருவாசக மொன்றுண்டுநற் றேவாரமு முண்டாங்கவை கருவாய்வழி வாராநெறி காட்டும்மெனச் சான்றோர்சொலத் தெருளாதுவீ ணேயையவோ தெருநாயினுங் கடையாயினேன், அருமாதவர் துதியோவிலா அருணாசலா! அருணாசலா! 56 பல்லார்விடப் பணியரவு உன்னைப் பரிந்தேதொழ வருளீந்ததும், பொல்லாவிட முண்டண்டரைப் புரந்தாள்வது மோர்ந்தும்முனைக், கல்லார்களைச் சேராநெறி கடையேற்கருள் செயவேண்டுமால், அல்லார்சுட லையிலாடிய அருணாசலா! அருணாசலா! 57 தேவாதிதே வாவென்கிலேன் சிவலோகநா தாவென்கிலேன், காவாயர னேயென்கிலேன் காபாலிவந் தாளென்கிலேன், சேவானதூர் வோயென்கிலேன் சிறியேனத னாலோவையா, ஆவாவென வருள்செய்கிலை அருணாசலா! அருணாசலா! 58 கன்னாகுபே ராவிந்திரா காமாமுக சோமாபுவி மன்னாவென வேபொய்யரை வாழ்த்திக்கவி சொல்லாமனன், குன்னாரருள் பெறுமன்பர்தா ளுளம்வைத்துவாழ்த் துறநல்குவாய் அந்நாவலூ ராளிக்கருள் அருணாசலா! அருணாசலா! 59 பச்சென்னிற மொருபாலுறப் பைம்பொன்னிற மொருபாலுற, வெச்சென்றநீ நிறமேவிமேல் வெண்ணீறுபூத் திடநின்றநீ, நச்சுண்டிருண் டிடுகண்டமு நணலுற்றதைம் பூதங்களுக், கச்சென்னநிற் பதுகாட்டவோ அருணாசலா! அருணாசலா! 60 பன்னாகணைத் துயின்மாயனே பரிவோடுகாத் தருள்செய்குவ, னென்னாச்சில ரெடுத்தோதுவ ரீதுண்மையே லிமையோர்வரை, தன்னாற்கடைந் திடவந்தநஞ் சங்கண்டவ ரஞ்சித்தொழும் அந்நாள்புர வாவண்ணமென் அருணாசலா! அருணாசலா! 61 காமத்தொடு கொலைசூதுபொய் களவுக்கிடந் தந்தென்மனம், பூமத்தமென் பணிகின்றநீ பொருந்தற்கிடந் தாராமையால், ஈமத்தெரி நரகம்மெனக் கிடமாகுமென் றெணிநின்னரு, ளாமொய்த்துணை யேநம்பினேன் அருணாசலா! அருணாசலா! 62 உனக்குள்ளடி யேன்மேவியு முனையோர்கிலா மையினிவ்வுடல் எனக்கென்னவீந் தனைமுன்னிரு ளென்னோடுசேர்ந் தந்தோவெனை, நினக்குப்புறம் பாய்நிற்கவே நீடுற்றதா லென்செய்குவேன், அனக்கன்னிநேர் தருமாதர்சூழ் அருணாசலா! அருணாசலா! 63 பாசக்கிடம் பசுவென்னவும் பசுவுக்கிடம் பதியென்னவு, மாசற்றமா மறைபேசுமம மாயைப்பசு வாமென்னுளே தேசிற்பொலி பதியாகுநீ திகழ்கின்றதற் புதமல்லவோ ஆசைக்குமே னிமிர்சோதியே அருணாசலா! அருணாசலா! 64 யான்செய்தனன் பிறர்செய்தனரெனதியா னெனுமஞ்ஞானமே, யூன்செய்பிற வியைநல்குமென் றுணர்ந்தேனின தருளாலினி வாய்செய்பத விகள்யாவினு மயங்காநெறி தந்தாளுவாய் ஆன்செய்நெடுங் கொடியாளனே அருணாசலா! அருணாசலா! 65 வெய்யோனுத யஞ்செய்திடில் விரவும் மிரு ளொழிவாதல்போற், பொய்யானதில் குருவந்ஹ்டிடப் பொய்ப்போதநீங் கிடுமென்னவே, மெய்யானநூ லுரைசெய்யவும் வீணேதிரிந் துழல்வார்சிலர், ஐயாவவ ருய்வார்கொலோ அருணாசலா! அருணாசலா! 66 பரையுன்னிரு விழிமூடுகைப் பதுமத்தனி விரற்பத்திலும் வருகங்கைபத் தினின்மூன்றயன் மாலிந்திர னுக்கீந்துமற் றொருநான்குமூன் றையும்வேணியி லொளித்துப்புவ னங்காத்தநின், அருமைச்செய லறிவாரெவர் அருணாசலா! அருணாசலா! 67 மடவார்மய றானோர்புறம் வருகின்றபல் பிணியோர்புறந் திடமாம்வறு மையுமோர்புறந் தீராததீப் பசியோர்புறம் கடனாகும்வன் பேயோர்புறங் கழிமானமாங் குரங்கோர்புறம் அடலான்மெலிந் துனையண்டினேன் அருணாசலா! அருணாசலா! 68 தாய்மார்களுஞ் சலித்தார்வரு சமனாருமோ சலித்தார்மலர் வாய்வேதனுஞ் சலித்தானழன் மலிகும்பியுஞ் சலித்திட்டதாற், சேய்நானினிச் செயும்வண்ணமென் செப்பாய்பல கலைவேதமும், ஆய்மேலவர் தொழுமையனே அருணாசலா! அருணாசலா! 69 மனையாண்மனம் வெறுப்பாகவு மாதாமனம் வெறுப்பாகவுங், கனிவானபெண் கள்பிள்ளைகள் கசந்தேமனம் வெறுப்பாகவுஞ், சனியாமிரு மலுமீழையுஞ் சார்ந்தேழையே னலியாவகை, அனையாமென வந்தாளுவாய் அருணாசலா! அருணாசலா! 70 காட்டுக்குளே தவஞ்செய்குவார் கனலுக்குளே தவஞ்செய்குவார், நாட்டுக்குளே யறஞ்செய்குவார் நதியாவினும் போய்மூழ்குவார், பாட்டுக்குநால் வர்களெய்திய பரிசிற்பய னடைவார்களோ, ஆட்டிற்பொலி தீக்கண்ணனே அருணாசலா! அருணாசலா! 71 பறவைக்கர சால்நைந்தவெம் பணிவந்துபோற் றப்பூண்டநீ, மறமுற்றுமா தவரேவிட வருபாம்பணிந் திடவில்லையோ, திருமுற்றுவன் பிலனென்றெனைச் செயிர்த்தாட்கொளா வகையென்னைமுன், அறவர்க்கரு டருமையனே அருணாசலா! அருணாசலா! 72 எரிகின்றதீப் போற்சீறியே யியமன்வரு மேற்பேதையேன், பரிகின்றமார்க் கண்டேயர்போற் பணிந்துன்பதம் போற்றுந்திறந், தெரிகின்றிலே னதனாலினே சிறியேனையாண் டருள்வெம்பலி, யரிகின்றசென் னியிலேற்றிடும் அருணாசலா! அருணாசலா! 73 தம்மாலறி வனயாவையுந் தாமல்லவென் பதுமைந்தனே சும்மாவிருந் திடுமாறெனச் சொல்லித்தெரி விப்பான்மலர்க் கைம்மான்முத லியயாவையுங் கரந்தோர்குரு வாய்வந்தனை அம்மாவுன தருளென்னையோ அருணாசலா! அருணாசலா! 74 காலாழ்களர் படுமாயின்வெங் கரிதன்னையு நரிகொல்வது, போலாசையாம் படுசேற்றினிற் புலையேன்விழுந் துழல்கின்றதாற், பாலாமிரு வினைவெல்லுநின் பதமெங்ஙனந் தொழுவேனையா, ஆலாலமுண் டருணாதனே அருணாசலா! அருணாசலா! 75 மருளீட்டுமா தர்களாசையின் மயங்கித்திரி தரவுங்கொலோ தெருளீட்டுமித் தனுவீந்தனை தேவாதிதே லாவென்னையே அருளீட்டுமன் பர்கள்போற்றிய அருணாசலா! அருணாசலா! 76 பொய்யானதே குடிகொண்டது புழுவானதோ நெளிகின்றது, சையோகமே விழைகின்றது சவமாகிமேல் விழுகின்றது, மெய்யானதிங் கிதைநாயினேன் வீணேசுமந் துழல்கின்றிலேன், ஐயாவுன தருள்வேண்டினேன் அருணாசலா! அருணாசலா! 77 இந்நாள்வரை யிலுமுண்டசோ றெல்லமள விடவெண்ணிலோ, பொன்னாமலை தானேருமோ புலையேனின முணலே,பெரி, தென்னாவழல் வேனாதலா லியமன்வர வேயுன்னுவான், அந்நாளின்மு னீவந்தருள் அருணாசலா! அருணாசலா! 78 பறக்குஞ்சிறை மறையன்னமும் படிகீண்டகோட் டொருபன்றியுங், கறக்கின்றவான் பாலாட்டியே கனிவாயருச் சித்தீன்றவன், இறக்கும்படி செயுமன்பர்தா மெய்தும்பய னுணரார்கொலோ, அறக்குஞ்சியஞ் சடையாளனே அருணாசலா! அருணாசலா! 79 தாய்தந்தைநீ குருதெய்வநீ தமியேனுயி ரதுநீயெனா, வாய்தந்தனமொழி வேனலேன் மனமாண்ட நின்னடியாரொடுந் தோய்தந்துவல் வினைநீங்கவுந் துலையொத்தநன் னிலைகூடவும் ஆய்தந்திலே னுய்வேன்கொலோ அருணாசலா! அருணாசலா! 80 மார்த்தாண்டனின் மலையுச்சிமேன் மதியாதுநா டொறுமேகுதல், பார்த்தாங்கவன், வெருவும்படி பணித்தோர்புறஞ் செலவைத்தநீ, வேர்த்தாவென வுனைமேவுமென் வினையோர்புறஞ் செலவைத்திலை, ஆர்த்தார்முடிக் கணியண்ணலே அருணாசலா! அருணாசலா! 81 தெள்ளித்தெளி தருமன்பர்மாற் சேர்ந்தேயரு ளீவாய்,படர் முள்ளிக்குவே லிகள்போடுதன் முறையல்லவென் பதுபோலெனை, யெள்ளித்திரு வருளீந்திலை யெனினேழையே னென்செய்குவென், அள்ளிப்புனன் முடிமேற்கொளும் அருணாசலா! அருணாசலா! 82 தேன்பட்டசொல் லியராசையிற் றிகழாலைவாய்க் கரும்பென்னவே, நான்பட்டுநொந் தனன்மேலுமோ நமனார்வரி லென்செய்குவேன், கான்பட்டபூங் குழல்பாகநின் கழல்குடியாட் கொளவேண்டுமால், ஆன்பட்டநீள் கொடியண்ணலே அருணாசலா! அருணாசலா! 83 பதியாகுநின் பதமாமலர் பணியாதபே யருநின்புகழ் துதியாதமூ டருமாலயஞ் சூழவந்திடாப் புலையாளரும் கதியாதுகா ணுவரையையோ காலன்கதை யடிபட்டுநைந் ததியாகுல மடைவாரலால் அருணாசலா! அருணாசலா! 84 மாயோனையுந் தொழுகின்றிலன் மலரோனையுந் தொழுகின்றில னாயேனினை யேபோற்றுவே னல்காயரு ளெனிலாங்கவர் ஏயேயென நகைசெய்வரே யெனநாணிநான் மெலிகின்றனன் ஆயேயென வடியார்க்கருள் அருணாசலா! அருணாசலா! 85 பொருப்புச்சிலை யாயுன்னருட் போதந்தலைப் படுமன்பர்க ணெருப்புக்கும்வா யுவினுக்குநீ ணீருக்குமஞ் சார்மேலுமோ மருப்புக்கடா மறலிக்குமே மனமாய்வுறா ரெனவோர்ந்துநின் அருட்புக்குவான் விழைகின்றனன் அருணாசலா! அருணாசலா! 86 வாசிப்பதுன் னடியார்புகழ் வந்திப்பதுன் னடியார்பத நேசிப்பதுன் னடியார்பத நினைகிற்பதுன் னடியார்பதம் பூசிப்பதுன் னடியார்பதம் புனைகிற்பதுன் னடியார்பதம் ஆசிப்பதுன் னடியார்பதம் அருணாசலா! அருணாசலா! 87 பொன்னுக்குளே யொளியென்னவும் பூவுக்குளே மணமென்னவும், என்னுக்குளே நீமேவுவ தெளியேனுணர் தருமாறுசெய், துன்னுக்குளே யான்மேவவு மொருநீயருள் செயவேண்டுமால், அன்னக்கொடி யோன்போற்றிடும் அருணாசலா! அருணாசலா! 88 வேலிக்குமுள் ளிடவெண்ணிலார் வெறிகொண்டபே யர்களாகியோர், காலுக்குமுள் ளிடல்போலுனைக் கடையேன்மறந் திதுகாறுமே, மாலுற்றமெய் யதுபோற்றியுன் மலர்த்தாடொழு மாறோர்ந்திலன், ஆலிக்குமுள் ளத்தோர்க்கருள் அருணாசலா! அருணாசலா! 89 நட்டுத்தொழா தவனென்றரு ணல்காயிஃ தோர்வாரெனிற் றொட்டுக்கலா லெறிந்தோற்குமுன் றொலையாதவின் பந்தந்தது கட்டுக்கதை யென்றேசிலர் கழறிக்கொள்வா ரேயம்மொழி, யட்டிச்சுடு மென்காதினை அருணாசலா! அருணாசலா! 90 கையாற்பெறு பயனின்மலர்க் கழலர்ச்சனை யதுசெய்தலே மெய்யாற்பெறு பயன்மெய்யனீ மேவாலய மதுசூழ்தலே பொய்யானதில் வாயாற்பயன் போற்றித்துதி செயலிங்கிவை ஐயாவெளி யேற்கெய்துமோ அருணாசலா! அருணாசலா! 91 மலமூன்றுடை யாருக்கருள் வடிவங்கொடு வந்தாங்கவர் சலமூன்றிரு வினையொப்பிலே தருபோதுவா தனைநீங்கியே நலமூன்றுற வருள்செய்யுநீ நாயேற்கருள் செய்வாய்கொலோ அலமூன்றுதோ ளவனேடிய அருணாசலா! அருணாசலா! 92 பாசாடவிக் குள்ளைம்புலப் பகைவேடருக் குறவாதலாற் காசாசையான் கொண்டற்பர்தங் கடைவாயிறோ றுங்காத்திது, பூசாபல னோவென்றுளே புலம்பித்திரிந் துழல்கின்றிலேன், ஆசாரமா றாதார்க்கருள் அருணாசலா! அருணாசலா! 93 புலையானதோர் தொழில்செய்யினும் பொய்யானதோர், மொழிபேசினுங், கொலையாகிய செயல்செய்யினுங் கொடிதாங்கள வதுசெய்யினு, மலையாதுநின் னருள்சேர்வரேல் வறியேனவ ரடிசேர்வனால், அலையாறுசூ டியவண்ணலே அருணாசலா! அருணாசலா! 94 படைப்பானுநீ யுலகியாவையும் பரிவாயளித் திடுவானுநீ, கடைப்பாலனுநீ பொய்பொய்யெனத் தோற்றாவகை மறைப்பானுநீ, கடைப்பாலனுக் கிரக்கஞ்செயுங் கண்ணாளனு நீயாயன், அடைப்பாற்றுயில் வோனாயதென் அருணாசலா! அருணாசலா! 95 பாடார்கவி பரியாருனைப் பனிமாமலர் கொடுபூசியார் தேடாரடி யார்தம்மையுந் தினமுண்டதே யுண்டையையோ மாடாமெனத் திரிவாரவர் மனம்வெந்துகும் பியில்வீழ்வரே ஆடாதபே யுடனாடிய அருணாசலா! அருணாசலா! 96 போகாதுவா யுவையுள்ளுனே பூரித்துநே ரிற்போக்கியே சாகாமனத் தவராகிநின் சார்புற்றிட வேயெண்ணுதல் சேகார்தரு பலவேணிகள் செறித்தாங்கதன் மேலேறியே ஆகாயமெட் டிடல்போலுமால் அருணாசலா! அருணாசலா! 97 மாலாரொரு கற்பந்தனின் மழைமேகமாய் வரவாங்கதன், மேலாயினை பின்னும்மொரு விடையாய்வர வேயூர்ந்தனை, பாலார்மொழி மாதாய்வரப் பரிவாஇடப் பாலீந்தனை, ஆலாலமுண் நும்பித்தனீ அருணாசலா! அருணாசலா! 98 பாய்வானதி நீர்ப்பாய்ச்சினும் படரெட்டியின் கனிகைப்பறா, நாய்வானிமி ராதாற்பல நாண்கொண்டிறுக் கிக்கட்டினு, மாய்வாகிவன் மனநேருறா வகையாங்கவை போலாதலோர்ந், தாய்வார்க்கரு ளுனையண்டினேன் அருணாசலா! அருணாசலா! 99 கொம்பாரிடை வண்டார்விழிக் கொங்கார்தனச் சிங்காரிக, டம்பான்மனஞ் சென்றேயழி சண்டாளனை யென்றாள்வையோ, செம்பாகினேர் மொழிபங்கனே சிந்தித்தவர்க் குயர்வீடருள், அம்பார்சடை நம்பாவொளிர் அருணாசலா! அருணாசலா! 100 படியாளுமன் னவர்வாழவும் பரிவோடுமன் னுயிர்வாழவும், முடியாமறை தான்வாழவும் முதலானசை வம்வாழவுங், கடியானெறித் தமிழ்வாழவுங் கவிவாணர்யா வரும்வாழவும் அடியார்கள்வா ழவுநன்கருள் அருணாசலா! அருணாசலா! 101 அருணாசல சதகம் முற்றிற்று |
நாளை மற்றுமொரு நாளே... ஆசிரியர்: ஜி. நாகராஜன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 165.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
ஆயிரம் வண்ணங்கள் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : ஓவியக் கலை விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|