சொ. சிங்காரவேலன்

இயற்றிய

கதிரேச சதகம்

காப்பு

வெண்பா

பூக்குமரு ளீந்தே புவியறத்து ளோங்குவிக்கும்
ஆக்குந்தன் றாளே அரும்புணையா - வாக்கருளும்
நற்கதிரை யைங்கரத்து நாயகன்சீர் எந்நாளும்
எற்கனிந்து நல்கும் இனிது.

நூல்

உலகிலுறுஞ் சமயமெலா முவந்து போற்றி
     உள்ளொளியே நண்ணுதற்கும் உவப்பி னோடு
பலகலைக ளெல்லாமும் நுனித்துப் பார்த்துப்
     பரவுதற்கும் பேரருளே வழங்கு மெந்தாய்!
அலகில்புக ழருள் வெள்ளந் துளைய மாட
     அடியர் தமக் குடனுறையும் கதிர்கா மத்துத்
தலமுயரும் கதிரேசத் தலைவ! நின்றாட்
     தண்மலர்கள் எப்போதும் ஏத்து வேனே. 1

ஏத்துபவர் கருத்தொன்றிக் காத லாகி
     இருகண்ணில் நீர்வார இளையர் பெண்டிர்
மூத்தவர்கள் முதலாக முருகா வென்று
     மொழிகுநராய் மெய்மறந்து முழுகும் போது
காத்தவர்தம் கருத்தோடே கலந்து நிற்கும்
     கதிரேசா! மாலமருகா! சீலா! நின்னை
யாத்திடுமிக் கவிமாலை யாப்பி னாலே
     யாத்தனனெ னுள்ளன்பால், அருளு வாயே. 2

அருள்நெறியும் அருளுணர்வும் உணர்வா ரின்றி
     அருநரகில் வீழ்நெறிகள் அவமே பேணி
இருள்நெறியில் இடர்நெறியில் இணைவார் அந்தோ!
     இருகண்கள் பயன்கொள்ளார் வறிதே வாழ்ந்து
தெருள்நெறியில் திருநெறியில் மனம்வை யாது
     தினங்கழிக்கும் இனங்கலந்து தெளிவில் லேனை
அருள்நெறியில் மயிலேறிக் கதிரே சாநின்
     அடியனெனக் குறிக்கொள்ள வருக வின்னே. 3

குறிக்கொள்ளா மனத்தோடே கோட்ட மிக்க
     குணத்தோடே இனத்தோடே கோதில் லாத
நெறிக்கொள்ளா நிலையோடே நினைப்பி னோடே
     நெடுநாளாய்ப் புல்லர் குரல் கனைப்பி னோடே
தறிக்கொள்ளும் துயரோடே தவிப்பி னோடே
     தவமுயலா உளத்தோடே தளர்ந்தே னூடே
கிறிக்கெடுத்து அருளீயக் கதிரே சாசீர்
     கிளக்குமயி லொடுவருக அளியி னோடே. 4

அளியாத காயானேன்; அழகி ழந்த
     அணிவானத் தாரைகையே ஆனேன்; கெட்ட
இளிவான நிலைபேணி இருகண் கெட்டே
     எழில்பேணும் ஒருகுருடன் ஆனேன்; அன்னாய்!
களியாத கவலாத நிலையைத் தந்து
     கனிவுற்ற நெஞ்சுற்ற காட்சி தந்து
விளியாத பேரின்பம் தன்னைக் கூட்ட
     வெளியே, நல் வளியே, யிங் கெழுக வின்னே. 5

வளியினிடை மணம்போன்று சிந்தை யூடு
     வருகுவைநீ கோலமிட்டு மெழுக்கு மிட்டே
ஒளியினிடைச் சுடர்தூண்டிக் கனிகள் வைத்தே
     உருகுகின்ற குரல் காட்டிக் கண்ணீர் சிந்தி
வெளியினிடை ஆடலுறும் விண்ணோன் பெற்ற
     வேலவனே! உன்வரவு பார்த்திருக்கும்
நளியுடைய நல்லன்பு நாடகத்தால்
     நடிக்கின்றேன் எனைத்திருந்த நண்ணு வாயே. 6

“நடிக்கின்றேன் நானென்”று வாசகத்தே
     நன்மணிவா சகப்பெருமான் நவிற்றும் பாட்டுத்
துடிக்கின்ற என்னளவில் மெய்யே யாதல்
     துலங்கு கதிரே சா, நீ துளைத்துக் காண்டி;
வடிக்கின்ற கண்ணீரால் மெய்ந னைந்து
     வற்றாத ஆறாகும் வாய்ப்புப் பெற்றுப்
பிடிக்கின்ற மனவளமு பெற்றே னில்லை;
     பெருநிலத்தி லிவைபெறுநாள் பேசு வாயே. 7

வாயுரைக்கும் வார்த்தையெலாம் வடிவே லா, நின்
     வண்மையருள் கொழிக்கின்ற வார்த்தை யாயிப்
பேயுரைக்கும் பாட்டெல்லாம் புனிதா, நின்றன்
     பெருங்கருணைத் திருவடிசேர் பாட்டே யாகத்
தாயுரைக்கும் பேச்செல்லாம் தனிவே லா,நின்
     தண்ணடியை நண்ணுகின்ற பேச்சேயாகத்
தீயுரைக்கு நெஞ்சேனுக் கருள்வ தென்றோ?
     தேவுரைக்கும் புகழானே! தேய மீதில். 8

தேயங்கள் அனைத்தினுக்கும் தேவாய் நிற்கும்
     மெய்த்தேவே! தெளிந்தோரின் தெளிந்த சிந்தை
நேயங்கள் முற்றிலுநின் றொளிரும் சீர்த்தி
     நின்மலனே! கதிரேசா! பிறவி தோறும்
காயங்கள் எடுத்ததினிப் போதா தோ,நின்
     கடைக்கண்ணால் அடியேற்குப் பிறவி யற்ற
தாயங்கண் நறுமலர்த்தாள் கூடும் பேற்றை
     அருளுவையேல் அதுவே யென் வீடதாமே. 9

“அதுவதுவாந் தன்மை” யெனச் சாத்தி ரத்தே
     அமைவுடன் நிலைகேட்பேன்; ஆன்றோர் கூடி
அதுவதுவாந் தன்மை பெறல் வீடே யென்றிங்(கு)
     அலசுகின்ற ஆராய்ச்சி தனையும் கேட்பேன்;
எதுவதுவாந் தன்மையென உலகம் தன்னை
     என்னுள்ளே மன்னுவிழி தன்னாற் கண்டே
இதுவதுவாந் தன்மையென உணரும் வாய்மை
     எழிற்கதிரே சா,இளையேற் கருளுவாயே. 10

எழிலுக்கோ ரிணையில்லாய்; இளையாய்! வானில்
     இருநிலத்தில் இணைகின்ற வனப்பிங் கெல்லாம்
எழிலொழுக ஒருங்கொளிரும் கதிர்வேல்! நின்னை
     இருகண்ணாற் கண்டுளத்தாற் பருகி நின்றால்
பொழிலானால் என்?உலகம் புரண்டா லும்என்!
     பொலிவற்ற பாலையென்! நன்மை தீமை
அழிகுவதும் ஆவதுவும் ஆனா லும்என்?
     அந்நிலைமை இந்நிலைமை அருள்க நன்றே. 11

“நன்றேசெய் பிழையேசெய் நானோ ஒன்று!
     நலிந்திடுவ னோ” வென்று வாச கத்தே
இன்றேன்செய் மொழியாலே உரைத்த வந்த
     ஈடற்ற நிலைமையெனக் குறுவ தாமோ?
இன்றேசெய் அருளுறுதி கதிரே சா,என்
     இனிவாழ்வு இனியவாழ் வாகும் வண்ணம்
ஒன்றேசெய், அதுபோதும் உடையாய்! என்னை
     உதவியது நின்னடிக்கிங் கியற்று மாறே. 12

இயற்றிடினும் பிறர்துன்பம் பொறுத்தொ துக்கும்
     இதயவெழில் எனக்கொன்றும் இணைய வேண்டும்;
முயற்றிடினு நெறிமாறா முயற்சி மேவி
     முழுவெற்றி நற்றுறையிற் பெறலும் வேண்டும்;
அயற்றுறைக ளனைத்தினையும் மதிக்கும் உள்ளம்;
     அணுவளவும் சிதையாமை அருள வேண்டும்;
புயற்றொழிலாற் போற்றிசெயும் கதிர்கா மத்துப்
     புண்ணியனே! இவ்வரங்கள் அருள்க நீயே. 13

நீயாத நெஞ்சகத்து நின்றன் கோலம்
     நீடுகின்ற திறம்வேண்டும்; நெடுவே லா,வாய்
ஓயாத புகழ்மாலை தமிழில் பாடி
     உனக்களிக்கும் உரம் வேண்டும்; கண்ணீர் சிந்திப்
பாயாத மனம் கெட்டே அருவி யாகப்
     பாய்ந்தொழுகுங் கண்வேண்டும்; எதிர்ப்புக்கெல்லாம்
சாயாத தெளிவுடைய உள்ளம் வேண்டும்,
     தலைவ! நின் மறவாமை வேண்டு வேனே. 14

வேண்டாதார் தமைக்கண்டும் வேட்கை மிக்கு
     விருப்பினொடு மருவுகின்ற வெற்றி வேண்டும்;
வேண்டாதார் வேண்டுவதார் பேதமின்றி
     விரும்பு சைவ நெறியோங்கும் நிலைமை மாறி
ஈண்டாதார் யார் எல்லாம் துணைவர் என்றே
     இருநிலத்திற் பரவுகின்ற ஏற்றம் வேண்டும்;
தூண்டாத விளக்கேபோற் காட்ட கத்தே
     துலங்குகின்ற கதிரேசா! தொழுகின் றேனே. 15

தொழுகின்றே எந்நாடு சென்றா லும்என்
     தொல்தமிழர் திருநாட்டை மறந்தி டாமல்
விழைகின்ற மனம்வேண்டும்; உலக வாழ்வில்
     வேற்றுமொழி கற்றாலும் தமிழே எண்ணி
ஒழுகிடுநல் உளம்வேண்டும்; உன்னை யன்றி
     ஒருதெய்வம் தொழினும் உனை உள்ளம் உள்கி
அழுகின்ற திறம் வேண்டும்; கதிரேசா,நின்
     அடிவணங்கிக் கிடத்தலையே வேண்டு வேனே. 16

அடியேனுன் னடிமையென அவனி யெல்லாம்
     அறிகின்ற நாள்வருமோ? அவலம் எல்லாம்
பொடியாகி நின்னடியே போற்றி செய்யும்
     புண்ணியநன் னாள்வருமோ? பொல்லாங் குக்கே
குடியிடமாய் நிலவிடுமென் நெஞ்சம் நின்னைக்
     குறிக்கின்ற நிலைபெறுமோ கதிரே சா,இவ்
வடியவனின் குரல்கேட்டிங் கருள்க இன்றே
     ஆரிருளாம் நெஞ்சிருளை அகற்று வாயே. 17

ஆரொடுநான் கூறிடுவேன்? அறிவ ழிந்தே
     அகங்கெட்டுத் துயருற்றே அலந்து நிற்பேன்;
ஆரொடுநான் பேசிடுவேன்? அப்பா! என்னை
     ஆண்டருள ஈண்டுகநின் னருளி னோடே!
வேரொடுவீழ் மரம்போலே உலக வாழ்வில்
     வீழ்ந்திடு நாள் வருமுன்னே கதிரே சா,இப்
பாரொடுவிண் ணானவனே! அருள் மணக்கும்
     பதமலரைப் பற்றவுளம் பற்றுவாயே. 18

“பற்றற்றால் பற்றிடலாம் பரமன் பாதம்
     பற்றுக” என்றுரைக்கின்ற குறளைக் கற்றும்
பற்றற்ற பாடில்லை; பற்றி நிற்கும்
     பற்றுகள்தாம் இற்றிடவோர் வழியும்சொல்வோர்
பற்றற்றாரில்லை யிவண்; கதிரே சா,நீ
     பற்றறுத்துப் பழனிமலை முற்றி நின்றோன்;
பற்றுபவர் துயரறுப்போ னாதலாலே
     பரமனுனைச் சரணடைந்தேன் பாவி யேனே. 19

ஏனெடுத்தே னிப்பிறவி? கடலே யன்றோ?
     இனிப்பிறப்பும் உண்டேகாண்; இருநி லத்தே
நானெடுத்தேன் நச்சரவை; கடித்தே தீரும்;
     நமன் வருவான், அந்தோஇப் பொல்லா யாக்கை
ஊனெடுத்தேன்; உனையெண்ணிக் கதிரேசா! நான்
     உருகிடவோர் நல்லுளத்தை யெடுத்தே னில்லை!
மீனெடுத்தோன் கொடுமையிலே மிதந்து நாளும்
     மெலிவுறுவேன் பொலிவுறநீ அருளு வாயே. 20

அருளுற்றார் போனடிப்பார், அகத்தி னுள்ளே
     அணுவளவுந் தெளிவில்லார்; அகன்ற பாரில்
தெருளுற்றார் எனத்தாமே கூவி நின்று
     திரிந்திடுவார்; பலநிதியம் தாங்கி மாயப்
பொருளுற்றார் ஆயிருப்பர்; கதிரே சா,இப்
     புல்லர்தமைப் புல்லாமல் புண்ணி யத்தால்
வெருளுற்று நின்னடிக்கே நெஞ்சு வைக்கும்
     விழுப்பமுற வேண்டுவன் யான் வியனி லத்தே. 21

நிலத்தாசை பிடித்தபெரும் பேயே யன்னார்;
     நினைப்பெல்லாம் பிறர் மண்ணை அணைத்த லாக
நிலத்துள்ளார் சிலரெண்ணிச் சிந்தை கெட்டு
     நிலைதிரிவர், ஐயோஇவ் வற்ப மாந்தர்
நிலத்திருந்து பிரியுங்கால் சேர்த்து வைத்த
     நீள்பொருளும் பிறவுந்தாம் வருமோ? எண்ணார்!
தலத்துயர்ந்த கதிரேசா! இன்னோர் தம்மைத்
     தகுகருணைத் திறத்தால் நீ திருத்து வாயே. 22

திருத்தமிலா ஓவியத்தை வெறுப்பார்; கூடித்
     தரளுகின்ற சோலையிலே திருத்தம் இன்றேல்
திருத்தமிலாச் சோலையென இகழ்வார்; வாழும்
     திருமனையிற் செப்பமின்றேல் உவர்ப்பார்; ஆனால்
திருத்தமில்லாச் சிந்தையெனில் உவர்ப்பார் இல்லை;
     தினந்தினமும் இனந்தூய்மை தவறிச் சாவார்;
திருத்தமுடைக் கதிரேசா! இன்னோர் தம்மைத்
     தெளிவுறுத்த நின்னருளே தேவை யாமே. 23

‘யாமேயாம் கடவு’ளென யாண்டும் கூவி
     யதிர்க்கின்ற சிறியமனப் பான்மை கொண்டோர்
யாமேஇவ் வுலகத்துச் சிறந்தோ ரென்று
     யாண்டுபல வாகிடினும் தெளித லின்றிப்
போமேயிவ் வூனென்ற உணர்வு மின்றிப்
     புலம்புவன கெட்டிடவும், கதிரே சா,நின்
தோமேயில் திருவடியில் சிந்தை யொன்றித்
     தோய்ந்திடவும் நின்னருளே துணைய தாமே. 24

துணையென்று கொண்டாலே உய்தி யுண்டு;
     துலக்கமுண்டு; விளக்க முண்டு; தூய்மை யுண்டு!
துணையென்று கொண்டாலே இன்பம் உண்டு;
     துகளற்ற நெஞ்சுண்டே; அன்பும் உண்டு!
துணையென்று கொண்டாலே வாழ்க்கைக் காட்டில்
     துணையுண்டாம் இணையற்ற உரமும் உண்டு!
பிணையொன்றுங் கதிர்காமக் கதிரேசன்றாள்
     பெருமலர்கள் இருநிலத்தென் இதயத் துள்ளே. 25

இருநிலத்துள் ஒருபொருளை மூன்று போதும்
     ஈரிரண்டு கரணங்கள் ஒன்றி நின்று
மருவுதலே அறமாகும்; மன்னும் நெஞ்சில்
     மாசற்றுத் தேசுபெறல் மனித நீதி!
ஒருவிநின்றூ தீநெறியே உள்ளம் போக்கி
     ஒளிகெடுவோர் தம்முள்ளே ஒன்றா வண்ணம்
திருநலமே ஈந்திடுவாய் கதிரே சா,உள்
     தெளிவற்றேன் மிளிர்ந்திடவும் அருள்க தேவே. 26

தேவருக்கும் தேவன் நீ; தீண்டும் நெஞ்சைத்
     தெளிவாக்குஞ் சுடரோன் நீ; சூழ்ந்து நிற்கும்
மூவருக்கும் முதலோன் நீ; மூர்த்தியும் நீ;
     முழுதுணர்வும் முழுதறிவும் முற்றுமே நீ;
யாவருக்கும் தலைவன் நீ; யாவை யும்நீ;
     யாண்டும் நீ என்றுணர்ந்தே உருகிப் போற்றி
நாவுருக்கும் வரமீவாய் கதிரே சா,இந்
     நானிலத்தி லிவைகுறித்து வாழ்வேன் நானே. 27

கதிரும் நீ; காற்றும் நீ; கனலும் நீயே;
     கவலை நீ; இன்பம் நீ; களிப்பும் நீயே;
புதிரும் நீ; விடையும் நீ; புனிதம் நீயே;
     பொருளுக்குப் பொருளான பொருளும் நீயே;
அதிரும் வெம் புயலும் நீ; தென்றல் நீயே;
     ஆகாயம் மண்ணுலகம் எல்லாம் நீயே;
உதிரும்பூத் தெரியலுடைக் கதிரே சா,நின்
     ஒளிர்பதமே உள்ளத்தில் சூடு வேனே, 28

சூடுகின்ற சொன்மாலை பயிலக் கொண்டாய்;
     சுடருருவாய்த் தண்மைநலம் விரியக் கொண்டாய்
ஆடுகின்ற தென்றலிலே கோயில் கொண்டாய்
     ஆற்றருகே வீற்றிருந்திங் காட்சி கொண்டாய்
பாடுகின்ற பாடலிலே பண்ணைக் கொண்டாய்;
     பழகுகின்ற உள்ளுணர்வில் உணர்வைக் கொண்டாய்;
நாடுகின்ற நன்மருந்தே கதிரே சா,நீ
     நலம் பொலியத் தலம் பொலியச் சிறக்கின்றாயே. 29

நாடாதார் யாரே நல் லின்பம் தன்னை;
     நவிலாதார் யாரேநின் நாமம் தன்னைத்
தேடாதார் யாரேநின் தெளிந்த பாதம்;
     தெளியாதார் யாரேநின் கருணை வெள்ளம்;
பாடாதார் யாரேநின் அழகுச் செவ்வேல்;
     பயிலாதார் யாரேநின் அருளார் பாடல்;
கூடாதார் கூட்டத்தே கதிரேசா, யான்
     குலவிடுவே னெனைக் காச்சக் குறிக்கொள் வாயே. 30

குறிகாணேன்; குணம் காணேன்; கூடி நின்றும்
     குவிகின்ற மனம் காணேன்; உய்ய லாகும்
நெறிகாணேன்; நீணிலத்தே நேயம் பேணேன்;
     நிலைகெடுவேன் அந்தோ நான் என்செய் கேனே?
பொறிகாணாப் புது நலத்துட் புகுந்து நின்று
     போக்கறுத்து வரவறுத்துப் புண்ணியன்றாள்
கிறியேறப் பெறுவேனோ கதிரே சா,இக்
     கீழோனை மேலுயர்த்தக் கிளத்து வாயே. 31

கிளத்தலிலாப் பேரின்பம் கிளைத்து நிற்கும்;
     கேடில்லாப் பெருநிலையே நிலைக்கும்; பாரில்
அளத்தலிலா வானந்தம் பொங்கும்; ஆவல்
     அடங்காத வேட்கையுடன் மூளும் என்றே
உளத்தெழும்பும் காதலுடன் உன்றாள் போற்றி
     உரைமாலை சூடிநிற்கும் ஏழை யேனை
அளத்துரும்பாம் நிலைநீக்கிக் கதிரே சா,நின்
     ஆனந்தமாக் கடலில் அமிழ்த்து வாயே. 32

அமிழ்தேயென் னாருயிரே! தேனே! இன்பம்
     அளிக்கின்ற கன்னனறும் பாகே! எங்கும்
கமழ்கின்ற நறுமணமே! காத லிக்கும்
     கனிவுடைய அடியருளக் கரும்பே! சூழும்
இமிழ் கடலின் அலைபோ லென் நெஞ்ச கத்தே
     எழுச்சிதரும் இன்கனியே! இருளைச் சாய்த்தே
உமிழ்கின்ற ஒளிவேலாய்! கதிரே சாஇவ்
     வுலகினுக்குள் உயிரானாய் என்றன் அன்பே. 33

அன்புருவாம் பரசிவமே! உலகையீன்ற
     அருட்தாயே! வேழமுகக் களிறே! இந்த
மன்பதையைப் புரக்குமொரு மாலே! வையம்
     மலிகின்ற நான்முகனே யாகி நின்றே
என்புருக்கி இதயவெழில் பெருக்கு கின்ற
     எந்தாய்! நின் இணையடிகள் ஏத்தி நிற்போர்
முன்பொளிரும் முருகோனே! கதிரேசா! சீர்
     முழங்குகின்றாய் திருவருளே வழங்கு வாயே. 34

வழங்கிடவோ பொருள்வளமும் பெற்றே னில்லை;
     வையகத்துள் அறம்பயிலக் கற்றே னில்லை;
வழங்கிடவோ ஞானவளம் உற்றே னில்லை;
     வறுமையொடு தீக்குணங்கள் செற்றே னில்லை;
வழங்கிடவோ நல்லழகைக் கண்டே னில்லை;
     வள்ளலுன தருள்வெள்ளம் உண்டே னில்லை;
தழங்குகின்ற மாணிக்கக் கங்கை நேயா!
     தகுகதிரே சா,விங்கே அழுகின் றேனே. 35

அழுதாலும் உன்னருளே கூடு மோதான்?
     அறியாதேன் புறவுலகச் சூழல் புக்குத்
தொழுதாலும் பெறலரிய உனது பாதம்
     துணைக்கொண்டே னில்லையிவண் துயர முற்றேன்;
எழுதாத ஓவியமே! இன்பத் தேனே!
     இன்னருளார் கதிரேசா! இரங்கி வந்து
பழுதான என்னுடலங் காத்துத் தூய
     பரகதியே நண்ணுதற்கு முன்னி டாயே. 36

முன்னிருக்குங் காலமெலாம் என்செய் கேன்யான்?
     மூத்தாலும் நின்னறிவிற் குருட னாகி
முன்னிற்கும் நலங்கண்டு முறுவ லிக்கும்
     முழுத்திறமும் இழந்தேனை நெறியுங் காட்டிக்
கன்னிற்கும் என்னெஞ்சை மலரே யாக்கிக்
     கனிவித்துக் கதிரேசா! புனித மாக்கிப்
பொன்னிற்கும் பணிகொள்வாய்! போற்று கின்றேன்.
     புவியகத்துக் கவியிசைத்துப் புகன்று நானே. 37

கவியென்பார் கருத்தென்ற கிளையில் தாவிக்
     கமழ்கின்ற உலகியலாங் கனியே கொள்வார்;
கவியென்னில் தடையிலையாம்; ஆனால் அந்தோ!
     காசினியி னியல்போடு கலந்து நின்று
புவியியக்கும் அருளியலாங் கனியைக் கொள்ளார்;
     புசியென்றாலும் புசியார்; வாணாள் தன்னை
அவித்தொழிவார் கதிரேசா! அவருள் நாயேன்
     அணுகாத வரமெனக்கிங் கருளு வாயே. 38

அணுகுகின்ற துன்பங்கள் பொடியாய்ப் போக
     அடைகின்ற துயரங்கள் துகளாய் மாற
அணுகுகின்ற பகைவரெல்லாம் அன்பாய் மாற
     அடுக்கின்ற வாழ்வெல்லாம் தவமே யாக
அணுகுகின்ற பொருளெல்லாம் அருளாய் மாற
     அருளுகின்ற திறமேவும் கதிரேசா! யான்
அணுகுகின்றேன் நின்னடியே அழைத்துக் காப்பாய்;
     ஆருயிராங் குழவியல்ல னோயான் இங்கே. 39

இங்கிருப்பார் எல்லாரும் இறைவ! நின்னை
     இதயத்தே மறவாது போற்றல் வேண்டும்;
பங்கிருப்பார் இருமகளிர் பாதம் ஏத்திப்
     பாமாலை பலவும்யான் பாட வேண்டும்;
தெங்கிருக்கும் தீவினிலே கான கத்தே
     தெளிந்திடுவோர் நெஞ்சகத்தே தேவு செய்து
தங்கிருக்கும் கதிரேசா! தனியே நீயும்
     தளர்குவதேன்? எனையழைத்துத் துணையாக் கொள்ளே. 40

கொள்வோனும் கொடுப்போனும் ஆனாய் நீயே;
     குறிப்போனும் குறிக்கோளும் ஆனாய் நீயே;
விள்வோனும் விழுப்பொருளும் ஆனாய் நீயே;
     வியனுலகம் அமருலகும் ஆனாய் நீயே;
எள்மேவும் நெய்போல நிறைவோன் நீயே;
     எழிற்கதிர்கா மத்துறையும் இறையோன் நீயே;
உள்மேவும் கதிரேச! ஒளியும் நீயே;
     உவந்துநடம் எங்கெங்கும் பயில்கின் றாயே. 41

பயில்கின்ற கலைஞானம் ஆனாய் நீயே;
     பாட்டிடைநற் பண்ணாகி நின்றாய் நீயே;
வெயிலாகிச் சுடுவோனும் ஆனாய் நீயே;
     வெண்ணிலவாய்க் குளிர்வோனும் ஆனாய் நீயே;
துயில்கின்ற போதினிலும் நெஞ்சி னின்று
     துலங்குகின்ற கதிரேசத் தூயோன் நீயே;
மயிலேறி விளையாடு முருகோன் நீயே;
     மாநிலத்தி லெங்கெங்கும் மன்னு வாயே. 42

மன்னுகின்ற பொருளாகி மறைவு மாகி
     மாநிலத்து ளறிவாகி இன்மை யாகித்
துன்னுகின்ற கடலாகிச் சோலை யாகித்
     துகளறுவோர் நெஞ்சத்துச் சுடரு மாகி
உன்னுகின்ற உத்தமர்க்குத் துணையு மாகி
     உயிராகி உணர்வாகி உள்ள மாகி
முன்னுகின்ற வினைதீர்க்கும் கதிரே சா,நின்
     மொய்ம்மலர்ச்சே வடியிணையே முடிக்கொண்டேனே. 43

முடித்திடுவேன் நின்னருளால் பாரில் யாவும்;
     முகிழ்த்திடுவேன் பாரின்பம்; வேலா! உன்னைப்
பிடித்திடுவேன் சிக்கெனவே; பேசும் போதும்
     பித்தாஎன் றேநின்னைப் பேசி நிற்பேன்;
நடித்திடுவேன் நின்னைமனக் கோயி லுள்ளே
     நாட்டிவிட்ட உறுதியினால் கதிரே சா! யான்
ஒடித்திடுவேன் இருவினையைக் கடைக்கண் ணால் நீ
     ஒரு கணத்தி லெனக்கருளை உணர்த்தி னாலே. 44

“ஏட்டாலே பயனுண்டாம் எழுச்சி யுண்டாம்”
     என்றெண்ணிக் கிடப்போரே! இங்கே வம்மின்!
பாட்டாலே இசைத்தாலும் பரி மளிக்கும்
     பண்புடையோன் கதிரேசன் முன்பு நின்றான்;
கேட்டாலே பயனுண்டாம் கிளர்ச்சி யுண்டாம்
     கிறிதொலையும்; அறிவெழும்பும்; கீர்த்தி யுண்டாம்;
வேட்டாலே போதுமவன் திருவடிக்கே
     விழைந்தளிப்பீர் உள்ளமலர் தம்மை யின்றே. 45

இன்றேன்செய் கொன்றையினான் இதயம் பூத்த
     இருங்கருணைத் தண்மலரால் எழுந்து தோன்றி
நின்றேனாம் கதிரேசன் நீணி லத்தே
     நெடுவினைகள் போக்குதற்கு நிமிர்ந்து தோன்றும்
மன்றாகக் கதிர்காமந் தன்னைக் கொண்டு
     மலிந்தனனால்; மாநிலத்தீர்! மகிழ்ந்து வம்மின்!
ஒன்றாகப் பணிந்தெழுந்தே உலகம் வாழ
     உள்ளொளியால் வள்ளல் தனைப் பணிகு வோமே. 46

பணிவார்க்குப் பரநிலையே அருளிச் செய்யும்
     பரமன்காண்; வரமருளும் தேவன் றான்காண்!
துணிவார்க்குத் திருவடியே சூடப் போக்கும்
     தூயோன்காண் நேயத்தோர்க் கருளி னான்காண்!
அணிவார்க்குத் தன்னடிகள் அருளி னோன்காண்;
     ஐயன்காண்; கதிரேச மெய்யன் றான்காண்!
மணிவார்க்குங் குமமார்பின் வள்ளி தேவி
     மணவாளன் றனவனெம் மனத்தி னானே. 47

மனத்தினிடை விளக்கனையான்; மார்பி னுள்ளான்;
     மாசற்ற பொன்னனையான்; மாரி போன்று
கனத்தவருள் தலைப்பெய்யும் முகிலே யானான்;
     கண்ணியவர் எண்ணமதில் கனிந்து நிற்பான்;
புனத்தினிடைக் குறத்தியவள் தோளைக் கூடிப்
     புதுமைமணம் புவிபெருகச் செய்த வேலன்;
அனத்தினடை சேர்தீர்த்த மருங்கு நின்ற
     அருட்கதிரே சப்பெருமா னவன்கண் டீரே. 48

கண்டனவே கருதிடுவீர்; கதைத்தல் செய்வீர்;
     காதலிப்பீர்; அறிவு நலம்பேத லிப்பீர்;
உண்டனவே உண்டிடுவீர்; புதுமை காணீர்;
     உவர்க்கடலாம் பொய்யுரையே பெருகச் செய்வீர்!
கொண்அனவே கொண்டிடுவீர், குறிக்கோள் இல்லீர்;
     கூறுமினோ, கதிரேசன் கழல்கள் போற்றி!
விண்டனவே விண்டு நிதம் வீணா காமல்
     விண்ணுலகை மண்ணுலகில் காணு வீரே. 49

விண்ணேது மண்ணேது வான மேது
     விளங்குகின்ற பொருளேது இருளுமேது
பண்ணேது பாட்டேது நயமு மேது
     பாரேது ஏரேது பரிவு மேது
கண்ணேது ஒளியேது கவலை யேது
     கனிவேது முனிவேது வாழ்வு மேது
எண்ணேது எழுத்தேது கதிரே சன்றான்
     எழுந்துலகி னருள்நாட்டம் வையாக் காலே. 50

காலேநின் கடன்கேளாய்! கதிர்கா மத்தே
     கதிரேசன் திருக்கோயில் வலநீ கொள்வாய்!
மேலேநின் றொளிகாட்டும் கண்ணே! நீதான்
     மிக்குயர்ந்தோன் கதிரேசன் உருவே காணாய்!
நூலேநின் றோதிடுமென் வாயே! நீதான்
     நுண்கதிரே சன்புகழே நுவலாய்! என்றன்
பாலேநின் றெய்த்திடுவாய் பகையே! யானும்
     பரமனவன் கதிரேசன் வரம்பெற் றோனே. 51

வரம்பெறுவா ரெல்லாரும், வைய மீதில்
     வளம்பெறுவார்; நிமிர்ந்திருக்கும் உளத்தினூடே
உரம்பெறுவார்; நிமிர்ந்திருக்கும் உளத்தி னூடே
     ஒளிபெறுவார்; அளிபெறுவார்; கேடொன் றில்லாத்
தரம்பெறுவார்; சிரங்குவிவார்; தக்கோ ராகும்
     தவம்பெறுவார்; அவம்பிரிவார் கதிரேசன்றாள்
அறம்பெறுவார் திறம்பெறுவார் அவற்காட் பட்டே
     அவனியினிற் பவனிவரப் பெறுவார் தாமே. 52

தாமேயாம் நல்லனவும் தீய தாமும்
     தகுதியுமற் றின்மையுமாந் தகவு வல்லோர்!
தாமேயாம் ஆற்றலது தம்கண் ணேயாம்;
     தம்மனையாம்; தம்மகவாம்; தமது சொத்தாம்
போமேயிவ் வித்தனையும் போங்கா லத்தே;
     புண்ணியமொன் றொண்ணாமல் தொடர்தல் காண்பீர்
ஆமேநல் லின்பெல்லாம் கதிரே சன்றாள்
     அடைவீரே அருள்வெள்ளம் குடைகுவீரே. 53

குடைவிரிப்பீர்! நடைபயில்வீர்! குறிப்புச் செய்வீர்!
     குடல்சரிக்க விரைந்திடுவீர்; வயிறு நோக்கி
எடைவிரிப்பீர்! எடுப்பார்கைப் பிள்ளை யாவீர்!
     இருநிலத்தீர்! மறுநிலத்தில் நிலைப்ப தற்காம்
கொடைவிரிப்பீ ரானீரேல் உய்வாம் கண்டீர்;
     குவலயத்தில் வாழ்க்கையெனும் சகடந் தானும்
குடையடித்தல் செய்யாமுன் கதிரே சன்றாள்
     குறித்திடுவீர்! வாழுநெறி யதுவே யாமே! 54

வாழுநெறி தனையறியும் வகையும் இன்றி
     வனப்பினிலே மனப்பயலை வளரவிட்டுப்
போழுநெறி யறியாதே புல்லர் தம்மைப்
     பொருந்திப்பின் வருந்துவதில் பயனு மில்லை;
வீழுநெறி யோநீர்தாம் விழைந்தீர்; அன்றே;
     விரைந்திடுவீர் கதிரேசன் தாள்தான் உண்டே!
ஆழுநெறி தனையகற்றி வாழ்வில் இன்பம்
     அலைமோத மலைமீது அமர்ந்தோன் றானே. 55

தானேயும் தாளடையும் இன்பம் செல்வம்
     தகுதிவரும் பதவிவரும் தாவொன் றில்லாத்
தேனேபோ லினிக்கின்ற தேவர் தேவன்
     தெள்ளியவர் உளக்கோயில் தேடிக் கொண்டோன்
கோனேயாம் கோட்டமில்லார் குழுவுக் கெல்லாம்
     கூறுகதிர் காமத்துக் கதிரே சன்றாள்
நானேயென் றிடுஞ்செருக்கு நீங்கு தற்கு
     நல்லமருந் ததுபோலிங் கில்லை தானே. 56

இல்லையென்று சொல்லும்பால் இல்லை யாகி
     உள்ளதென்று சொல்லுமக்கிங் குரிமை யாகத்
தொல்லைநின்ற பிறவிவலை தூளாய்ப் போகத்
     துகளற்ற ஆன்மிக ஒருமை சேர
நல்லையென்று நானிலத்தோர் நாவாற் கூற
     நாகரிகப் பெருவாழ்வு நண்ணல் செய்ய
எல்லை நின்ற கதிர்காமக் கதிரே சன்றாள்
     ஏத்திடுவீர்! கூத்திடுவீர், இதயத் தாலே. 57

தாலசைத்துப் பாலூட்டித் தவழக் கண்டு
     தன்னுயிரா மென்றணைத்து முத்தம் ஈந்து
நாலெழுத்துக் கற்றவுடன் நனிம கிழ்ந்து
     நல்லுணவு தானீந்து நன்மை யீந்து
மேலெழும்பும் உணர்ச்சியினால் மேவும் அன்னை
     மெல்லன்பி னும்மினிக்கும் அன்பு கொண்டோய்!
ஓலெடுத்தே மறைபுகழும் கதிரே சா,நின்
     ஒளிர்பதமே கண்குளிர ஏத்து வேனே. 58

ஒளிர்கின்ற நின்னடியில் பூவாய் நின்று
     உவக்கின்ற பேறுமிங்குப் பெற்றே னில்லை;
மிளிர்கின்ற நின்வேலில் மெருகாய் நின்று
     மேவுகின்ற புண்ணியமும் உற்றே னில்லை;
குளிர்கின்ற நின்கடைக்கண் வெள்ள நீந்திக்
     குடைந்தாட மெய்யடிமை கற்றே னில்லை;
நளிர்கின்ற மாணிக்க கங்கை நாதா!
     நற்கதிரே சா,வென்னை நயந்து கொள்ளே. 59

நயப்பறியேன் நலமறியேன் நாவில் இன்சொல்
     நலந்தழுவும் தன்மையிலேன் நண்ணு வோர்க்குப்
பயந்தறியேன் பணியறியேன் பண்பி னின்று
     பகர்கின்ற பாங்கறியேன் பாரில் நின்னை
வியந்தறியேன் என்னுடலை வியந்து நிற்பேன்
     வெம்பிடுவேன் தீயனவே நம்பி நிற்பேன்
கயந்தழுவு செங்கழுநீர்த் தொடையே வேய்ந்த
     கதிரேசா! சிறியேனைக் கடைக்கண் செய்யே. 60

செய்வினையும் செயப்பாட்டு வினையும் கற்றுச்
     செகத்துயர்ந்த திணைமேவி, வினையும் முற்றிக்
கைவினையும் மெய்வினையும் கருத்தி னுக்குள்
     கமழ்வினையும் தலைப்பாட்டுப் பயனில் நின்று
மெய்வினையும் உயிர்வினையும் ஒன்றாய்ச் செய்து
     மிளிர்வினையே தலைக்கூடி வினையேன் றானும்
உய்வினையே காண்பதற்குக் கதிரே சா,நீ
     உறுதுணையா யிருப்பதனை உணர்த்து வாயே. 61

உணர்வதற்கு முன்னருலே புணர வேண்டும்;
     உரைப்பதற்கு முன்னருளே உதவ வேண்டும்;
இணர்க்கடம்பு பொதிகின்ற தெரிய லோனே!
     இருப்பதற்கு முன்னருளே இருக்க வேண்டும்;
புணர்ப்புதற்கும் பிரிப்பதற்கும் புவியி னுள்ளே
     புண்ணியனே! உன்னருளே நண்ண வேண்டும்!
உணர்ச்சியிலே இவைநண்ணி நன்றே யுற்ற
     உனதடியே கதிரேசா! உன்னி னேனே. 62

உன்னுதற்குத் தக்கோனே! உயர்ந்தோ னே,நின்
     உள்ளொளியாம் நல்லொளியை அடியேன் றானும்
பன்னுதற்குத் திருவருளாந் துணையைத் தந்து
     பரிவினொடு வாராயோ? அழுது நின்று
முன்னுருகும் சிறுகுழவி அழுதல் கண்டும்
     முகம் பார்த்திங் கணையாத தாய ருண்டோ?
என்னுயிரே! என்னழகே! கதிரே சா,நின்
     இணையடிகள் புணையாக்கி உய்வே னானே. 63

அழகென்ற வித்தாகி முளைத்து நின்றே
     அண்டத்தில் பிண்டத்தில் அனைத்தி னுள்ளும்
பழகுகின்ற பரம்பொருளே! பழமை தன்னுள்
     பதிகின்ற உயிர்ப்பதிவே! பார கத்துள்
உழக்கின்ற துயர்மாற்றி உலகி னோர்கள்
     உவப்புறவும் அமைதிநலம் செழித்து நின்று
பழக்கிடவும் நினதருளே பரவி நின்றேன்
     பகர் கதிரே சா,என்னைப் பரவக் கொள்ளே. 64

பரவுதலென் றால்அவனைச் சிந்தை செய்து
     பழகுதலென் றேபொருளாம்; பாரீர்; வாரீர்;
விரவுதலென் றோதிடலாம்;மனித நெஞ்சு
     வேலனுடன் விரவிநின்றால் ஒளிதா னுண்டு!
கரவுறுவார் நெஞ்சகத்துக் காண்ட லில்லான்
     கதிரேசன் பொருளீகைப் புனித ரானோர்
உறவுடையான் வையத்து விளக்கே யானான்
     உணர்ந்திடுவீர் உளத்தவனைப் புணர லாமே. 65

விளக்கேற்றிக் கொண்டிடுவீர்; மறுக ணத்தே
     விழுமோ இவ்வுடற் கூடிங்கி யாரே கண்டார்?
மளக் கென்று முரிகின்ற கிளையே போல
     மடிந்திடலாம்; காலனெனும் காலிற் பட்டே!
உளக்குமுறல் என்செய்யும்; ஓடி வாரீர்;
     ஓர்வழிதா னதற்குண்டு கதிர்கா மத்தே
துளக்கமறத் திருவிருக்கும் கதிரேசன்றாள்
     துணையெனக் கொண்டா லுமக்குத் துயரம் போமே. 66

துயரறுக்க வழிதேடும் வழியுமின்றித்
     தூங்குகின்றீர்; பொருள் பொருளென் றேங்குகின்றீர்
கயிறறுந்து விழுமுன்னே பற்றுக் கோட்டைக்
     கண்டெடுத்தும் பாரீரோ! அந்தோ உங்கள்
மயலறுக்க வியலீரோ? மாநி லத்தீர்!
     மயிலமரும் பெருமானாய்க் கதிர் காமத்தே
முயலுயிருக் கருள்செய்யக் கதிரே சன்றான்
     முறுவலுடன் கரங்காட்டி விள்க்கின் றானே. 67

விளியாத இன்னலுக்கும் விடிவிங் குண்டு;
     வேண்டாமைச் செல்வமுற விழுப்ப முண்டே
அளியாத மனந்தனையும் அளிய வைக்கும்
     அருளுண்டு; கதிர் வேலும் காக்க உண்டு;
களியாத நெஞ்சகத்துக் கால எல்லைக்
     கட்டுப்பா டின்றி பெருங் களிப்பே யுண்டு;
தெளியாத நோய்க்குமொரு தெளிவே உண்டு;
     சீர்க்கதிரே சன்னடியே நினைந்தோருக்கு. 68

நினையத்தான் இயலாமல் வாடி நின்று
     நெருங்கத்தான் கல்லாமல் சேய னாகிப்
புனையத்தான் வாயின்றிப் புவியி னுள்ளே
     புகழத்தான் சொல்லின்றி நெஞ்ச கத்தே
வனையத்தான் திறனின்றி வாழ்வி னுள்ளே
     வழுத்தத்தான் அழுத்தமின்றிக் கண்ணீ ராலே
நனையத்தான் நலமின்றிக் கல்லா னேனை
     நற்கதிரே சா,நின்பால் புல்லச் செய்யே. 69

புல்லாலும் பூவாலும் உன்னைப் போற்றிப்
     புன்மையினேன் மென்மைபெற அருளல் வேண்டும்;
சொல்லாலும் பொருளாலும் உன்னைப் பாடிச்
     சோர்வுடையேன் உறுதிபெற அருளல் வேண்டும்.
வில்லாலும் அம்பாலும் வாழும் வேடர்
     விழுக்கொடியை விழைந்தவனே! வேலா! நின்னை
எல்லாலும் பகலாலும் ஏத்து கின்ற
     இயல்பதனைக் கதிரேச! அருளு வாயே. 70

வாயிருந்தும் மூங்கையென வாழ்வீ ரோநீர்?
     வலுவிருந்தும் வாளாதே ஆழ்வீ ரோநீர்?
தாயிருந்தும் மனமுருகித் தவிப்பீ ரோநீர்?
     தணலிருண்டும் குளிராலே உழப்பீ ரோநீர்?
சேயிருந்தும் துயராலே சிதைவீ ரோநீர்?
     சிறப்பிருந்தும் சிதடரெனத் திரிவீரோர்நீர்?
போயிருந்து விண்ணெட்டுங் கதிரை மேவும்
     புண்ணியன்றான் முன்னிருக்கப் புலம்ப லேனோ. 71

ஏனோநீர் வாழ்வென்னும் கடலிற் பட்டே
     இருவினையாஞ் சுழிச் சிக்கி ஆழ்ந்து போதல்!
வானோநீர் கனலெங்கும் அருளாய் நின்று
     வழங்குவனே நற்காட்சி! சிந்தை செய்து
மானேஎன் றோதிடுநல் மங்கை பங்கன்
     மலரடியே எந்நாளும் நினையப் பெற்றால்,
தானோடிப் போகாவோ வினைக ளெல்லாம்
     தகுகதிரே சன்கைவேல் வலத்தினாலே. 72

வலம்புரிபோய் விண்ணளவும் முழக்கி நிற்கும்;
     வந்துநிற்கும் அடியவர்கள் ஒலிமு ழக்கம்;
நலம்புரியும் மனமெல்லாம் எதிரொ லிக்கும்;
     நலிவெல்லாம் சேய்மையிலே மெலிந்து சாம்பும்;
குலம்புரிந்த கொள்கையினால் கோட்ட மின்மை
     குதிகொள்ளும்; முருகனெனும் நினைவே நிற்கும்;
தலம்புரிந்த கதிர்காமத் தலமே வாய்த்தால்
     தரணியினி லிக்காட்சி தப்பா தன்றே. 73

அன்றென்பார்; இன்றென்பார்; சான்றே தென்பார்;
     அழகென்பார்; அழகற்ற தென்று ரைப்பார்;
நன்றென்பார்; தீதென்பார்; நலமில் லாத
     நலமென்பார்; பொலமென்பார்; நாட்ட கத்தே
இன்றிவ்வா றுரைக்கின்றார்; இதயத் துள்ளே
     எழுச்சியிலார்; புறவாழ்வே நிலையென் றெண்ணித்
தின்றிவ்வா றொழிக்கின்றார் நிலைகள் தம்மைத்
     திகழ் கதிரே சா,இங்கே ஒருவிப் பாயே. 74

ஒருநாட்டை ஒரு நாடிங் கடக்கி விட்டால்
     உலகிலுறும் பயன்கிட்ட் விடுமோ? அன்றிப்
பெருநாட்டைப் பெருநாடு பிணைத்து விட்டால்
     பின்னிந்த வையகத்துக் குறுக்கோ ளாமோ?
அருநாடிங் கிந்நாடாம் ஆயு தத்தால்
     அணுகுதலு மரிதென்றால் பெருமை யீதோ?
திருநாடு நல்லுள்ளச் செம்மை யன்றோ?
     தெளிவன்றோ? கதிரேசா! தெளிவிப் பாயே. 75

செம்மைநல மறியாத சிதடர் கூடிச்
     சிரித்திடுதல்; வருந்திடுதல் வீணே வாழ்தல்
அம்மைநலம் குறியாதே அழிந்து போதல்
     அதுவேயோ இவ்வாழ்வு? அறியா தாராய்
மும்மைநெறி உணராது முடுகி நின்று
     மூழ்குதலோ துயர்க்கடலில் உலக வாழ்வு!
தம்மையிவன் உணராமை தருக்கே யன்றே
     தகுகதிரே சா,எந்நாள் தழைப்ப தேயோ? 76

ஓதாதே உணர்ந்தவர்க ளுள்ளத் துள்ளே
     உள்ளொளியாம் ஒருபொருளே உவப்பி னோடு
வாதாடும் நெஞ்சகத்து வழக்கைச் சாய்த்து
     வழங்குகின்ற பேரருளின் பிழிவே! பாரில்
சூதாழத் தீதான நெறியில் நிற்போர்
     சுகம்பெற நின் திருவடியே சூழ்ந்து நின்றேன்;
கோதான நீக்கியரு ளளிக்கும் தோன்றல்!
     குளிர்கதிரே சா,நின்னைக் குறித்து நானே. 77

நானேமெய் எனநினைந்து நாட்டிற் பன்னாள்
     நலிவயர்ந்து மெலிவுறுவேன் பொலிவுறாமல்
கானேயிங் கடைந்திடுவேன் துயரில் வீழ்ந்து
     கதியின்றித் துதிபாடும் நெஞ்ச மில்லேன்
கோனேயிவ் வையகத்துக் குறிப்பி லோங்கும்
     குணமிலியே! நின்னடியே குலவி வாழ்ந்து
தேனேயென் றிடுமின்பம் தேரக் காண்பாய்;
     தெளிகதிரே சாவிதுவே வேண்டி னேனே. 78

வேண்டுபவர் வினையறுக்கும் வேலா! நின்னை
     வென்றபுலப் பகைநெஞ்சில் விளக்கு வோரை
ஆண்டருளும் பெருவண்மை உரிய தேவே!
     அடியேனை ஓர் பொருளாய் ஆக்கி வைத்துத்
தூண்டிமனச் சுடரதனைத் துலக்க மாக்கித்
     தொன்னெறியிற் றிறம்பாத திறமுமாக்கி
ஈண்டுகஎன் றேத்தினனிவ் வேழை தன்னை
     இரங்கியருள் கதிரேச! ஏந்தால், ஏந்தால்! 79

ஏந்துபுகழ் வேந்தரவர் மாந்த ரானோர்
     இவ்வுலகை நெடிதாண்டு பூழ்தி யாகிக்
காந்துமிவ் வுலகிடையே வாழ்ந்தா ரேனும்
     கண்மூடி நெடுந்தூக்கம் கொண்ட போது
போந்தனரென் றுரைபேசி நீரில் மூழ்கிப்
     போக்குமவர் நினைவேபோல் உலக வாழ்க்கை
சாந்துயரு நிலையாமை சான்ற தன்றோ?
     சற்குருவே! கதிரேசா! சாற்று வாயே. 80

சாற்றுகவி பலபெற்றுச் சொல்லின் பத்தால்
     சதுரான கவிகடமை விழைந்து பாடிப்
போற்றிடவும் புனைந்திடவும் புகழே பேணிப்
     பொன்னாடை தனைவிரும்பிப் போலித் தன்மை
ஏற்றுலவி நாகரிக மயலிற் பட்டிங்
     கிவ்வுலகில் நடிக்கின்ற புலவோர் கூட்ட
மேற்றெனது வாழ்வென்னாத் தகவு மீந்து
     மேன்மையருள் கதிரேச! மிக்கோய் நீயே. 81

மிக்குயர்ந்த அறிவின்றி பண்பு மின்றி
     மிளிர்கின்ற நலமின்றி மிகுதி யின்றித்
தொக்குயர்ந்த கேள்வியின்றித் துலக்க மின்றி
     தூய்மையின்றி வாய்மையின்றித் தோன்றும்வண்ணம்
நக்குயர்ந்த ஆற்றலின்றி நாவு மின்றி
     நானிலத்தில் நடைப்பிணமாய், வாழ்வே யின்றிப்
பக்குயர்ந்தோர் பக்கநின தருளைத் தாராய்
     பகர்கதிரே சப்பெரும! பாரில் இன்றே. 82

இன்றேபோய்ப் பரவிடுவீர்; ஏத்தி நின்றே
     இதயமெனும் பூப்பறித்தே இருகண் சோர
இன்றேபோய் வழிபாடு இயற்று வீரே!
     எழுமைக்கும் விழுப்பமுண்டாம் இயம்பக் கேளீர்!
குன்றேபோய் விண்முட்டும் கதிரைக் கோமான்
     கொங்கவிழும் கடம்பணிந்த கதிரே சன்தாள்
நன்றேசெய் தாலும்மை நணுகி நிற்கும்
     நம்பெருமான் திருவடியே நவிலு வீரே. 83

நவிலற்கே இனிமைதரும் நன்மையான்காண்
     நாவாழும் தேவானான் நலத்தினான் காண்
அவித்தமனப் பேயுடையார் அகத்தி னுள்ளே
     ஆநந்தத் திருக்கூத்திங் காடுவான் காண்
புவித்துறைகள் அனைத்துள்ளும் பொருந்தி னான்காண்
     பொன்னவன்காண் மண்ணவன்காண் பெண்ணவன்காண்
தவிக்கின்ற மனத்துக்கே அமைதியான்காண்
     தலைவன்காண் கதிரேசத் தாதை தானே. 84

தானேயென் னையழைத்துப் பணிகள் கொண்டான்
     தமிழ்பேசச் சொல்லிமனத் துவகை தந்தான்
தானேயென் னையழைத்துப் பாடச் சொன்னான்
     தக்கவர்பால் மிக்கொளிர வகையும் தந்தான்
தானேயென் னுட்புகுந்தே அருளை ஈந்தான்
     தாரணியில் என்வாழ்விற் தவறு றாமல்
தானேயென் செயல்காப்பான் சிந்தை காப்பான்
     தண்கதிரே சப்பெருமான் தரணி மீதே. 85

தேம்பொலியும் கடுக்கையினான் தேவ தேவன்
     தேடாதமா நிதியே! முருகே! தேனே!
நாம்பொலியும் வகைநாடி நெஞ்சகத்தே
     நலம்பெருக்கும் பெருங்கருணை தழைத்த ஊற்றே!
பாம்பொலியும் பகையொலியும் கேட்கு மென்றன்
     பக்குவமில் லாமனத்தைச் சோலையாக்கிக்
காம்பொலிக்கும் தோட்குறத்தி யோடே இன்றே
     கடிதுறையக் கதிரேச! தந்தாய் நீயே. 86

தந்தாய்என் மனத்துறுதி தந்தா யின்றே!
     தவிராதென் னுள்ளமெனும் கோயில் நின்றே
வந்தாய்என் நெஞ்சவெழில் வயங்கும் வண்ணம்
     வான்குறத்தி வானொருத்தி கோலத் தோடே
கந்தாய்என் குடிகாத்து நாட்டைக் காத்துக்
     கமழ்கின்ற மொழிகாத்துக் கருத்தும் காப்பாய்!
தோந்தோமென் றிடிமுழக்கும் கதிரை மேவும்,
     தூயோனே! கதிரேசா துடிக்கின்றேனே. 87

துடிக்கின்றீர் உலகென்று வாழ்நா ளெல்லாம்
     துவள்கின்றீர் மனையறத்திற் றுவக்குண் டேநீர்
பிடிக்கின்றீர் புளிங்கொம்பை விடுத்து நாணல்;
     பேதுறுவீர், பெருநிலத்தீர்; பெண்மை தன்னில்
நடிக்கின்றீர்! முருகனையே காண்பீர்; ஆங்கே
     நானற்றுத் தானற்றே இறைமை காணில்
முடிக்கின்றீர் துயரநெறி; கதிரே சன்றான்
     மூதுலகில் அருள் வழங்கித் திகழ்கின்றானே. 88

திகழ்ந்திடுவான் பரங்குன்றில் ஏர கத்தில்
     திருவாவி னன்குடியில் சிகரக் குன்றில்
திகழ்ந்திடுவான் பழமுதிருஞ் சோலை தன்னில்
     திருச்செந்திற் றிருத்தலத்தில் அடியார் நெஞ்சில்
புகழ்ந்திடுவீர் எப்போதும் புந்தி யுள்ளே
     பொருந்திடுவீர் ஆணவமாம் வேரைக் கிள்ளி
அகழ்ந்திடுவீர் விண்ணேற வழியு மீதே
     அருங்கதிரே சன்னருளின் நெறியீதாமே. 89

மேன்மைதருந் துணையாக அருளா ளர்தாம்
     மேதினியிற் றந்தஅரு னூல்க ளுண்டு;
பான்மைதரும் ஆலயங்கள் பலவும் உண்டு;
     பச்சிலையும் குளிர்நீரும் பரக்க உண்டு;
கோன்மைநெறி குறையாமல் பாரிலுண்டு;
     கோட்டமிலா நெஞ்சுண்டே; உண்டுண் டென்றும்
வீண்மைபுரி வீர் நீவிர் கதிரே சன்றாள்
     வீடுண்டு; நாடுதற்கும் மனமுண் டாமே. 90

மனம்போன வழியெல்லாம் போக லாமோ?
     மருளுற்றுக் கிளைவிட்டுக் கிளைகள் தாவி
இனம்போன குரங்கினத்தை யொப்ப விங்கே
     இதயத்தை அறிவாலே தீர ஆய்ந்து
கனம்போன வழிச்செலுத்தி உயர்த லன்றோ
     கற்றவர்க்குக் கடனாகும் தமிழ் நாட்டீர்!
தினம்போன வீணெறியைத் தவிர்க்கு வீரே
     தெளிகதிரே சன்றாளே பரவு வீரே, 91

பரவையிடைப் படுமூத்தும் வேழக் கொம்பிற்
     படுமுத்தும் கரும்பிடையே வீழ்ந்த முத்தும்
குரவையிடும் கொண்டலிடைத் தவழு முத்தும்
     குளிர்முருகா! உன்முத்தம் ஒப்ப வாமோ?
உறவையளித் துள்ளேநின் றோங்கி யென்றன்
     உணர்வையெலாம் தழைவிப்பாய் பொய்யா னாகும்
கரவையொழித் தறவுணர்ச்சி தவிர்ப்பா யென்றே
     கதிரேசா! நின்னடியே மதித்தேன் நானே. 92

மதியொத்த முகமென்றும் மானை யொத்த
     மருணிறைந்த விழியென்றும் இனிய பண்ணின்
சுதியொத்த குரலென்றும் சோர்வில் லாத
     சுகமொத்த மொழியென்றும் சுழியிட் டோடும்
நதியொத்த உந்தியென்றும் நவ்வி யென்றும்
     நலமான பிடியென்றும் மயில்தா னென்றும்
கதியொத்த வருணனைகள் தலைப்பட் டீரேல்
     கதிரேசன் றாணலத்தைக் காண லாமோ? 93

காணுதற்குத் தக்கபொருள் கதிரை மேவிக்
     கனிவுடைய திருவுளத்தாற் கமழ்தல் காணீர்!
பூணுதற்கே ஒத்தகலம் கதிரை மேவிப்
     பொலிந்தே நல்லாறெழுத்தாய்ப் புகலக் கேளீர்!
பேணுதற்கே அரியபொருள் கதிரை மேவிப்
     பிறங்கிடுதல் உள்விழியாற் பெருகக் காணீர்!
சேணுயர்ந்த வீட்டுநெறி செகத்தி லின்றே
     சேர்ந்திடலாம் கதிரையனைச் சிந்தித் தாலே. 94

சிந்திக்கத் தித்திக்கும் சேவ லோன்றாள்
     சேர்ந்திடுவீர் செந்தமிழீர்! ஒன்றி நின்று
வந்திக்க முந்துமருள் வைய மெல்லாம்
     வழிப்படுவீர் வாய்மையிது; கதிரை மேவிச்
சந்திக்கப் பரவசமாம்; முருகா வென்று
     சாற்றிடிலோ மும்மலங்கள் சரிய லாகும்;
புந்திக்குள் ளேபுதிய இன்ப மூறும்;
     போதுகநீர் கதிர்வேலன் பொன்ன டிக்கே. 95

பொன்னெல்லாம் பொருளெல்லாம் புந்தி யெல்லாம்
     போகமெல்லாம் தாகமெல்லாம் புணர்ப்புமெல்லாம்
முன்னெல்லாம் பின்னெல்லாம் முழுது மெல்லாம்
     மோனமெல்லாம் தானமெல்லாம் மோக மெல்லாம்
மின்னெல்லாம் இருளெல்லாம் மேன்மை யெல்லாம்
     மெலிவெல்லாம் நலிவெல்லாம் மிகுதி யெல்லாம்
என்னெல்லாம் எங்கெல்லாம் உலக மெல்லாம்
     இருக்கின்ற கதிரையடி தலைப்பட் டார்க்கே. 96

தலைப்பட்டால் உய்வுண்டு தகவே யார்த்த
     தமிழ்ப்பாடித் திருவடியே தூய்மை யோடே!
வலைப்பட்டால் வாழ்வில்லை வைய கத்து
     வஞ்சகர்தம் கொஞ்சுமொழிக் கூட்டத்தோடே
சிலைப்பட்டா னில்லையவன்; சிந்தை யுள்ளே
     சிறைப்பட்டான் செவ்வேலோன்; மாசில்லாத
கலைப்பட்டான்; கதிரேசன் தானே யென்றும்
     கருதிடினும் நலம்பெருகும் இன்பம் தானே. 97

தானேயாய்ப் பார்முழுதும் தழைத்த வன்காண்;
     தமிழ் மாலை பலசூடிச் செழிந்த வன்காண்;
கோனேயாய்க் குறைபலவும் ஒழித்த வன்காண்;
     கோட்டமிலா நெஞ்சதனைத் தெழித்த வன்காண்;
தேனேயாய் இன்பமளித்துச் சுழித்த வன்காண்;
     திகழ்கின்ற பொய்ம்மைகளைக் கழித்த வன்காண்;
வானேயாய் மண்ணேயாய் வழங்கு வன்காண்;
     வயங்குகதி ரேசனெனப் பெயர் பெற்றோனே. 98

பெற்றாலும் பெருநலங்கள் பேசிப் பேசிப்
     பிறழ்ந்தாலும் உறழ்ந்தாலும் பேசாப் பேச்சைக்
கற்றாலும் பலநூல்கள் கல்லாக் காலும்
     களித்தாலும் கவன்றாலும் வையகத்தே
செற்றாலும் சினந்தாலும் தெளிந்திட்டாலும்
     சிரித்தாலும் அழுதாலும் கதிரேசா என்(று)
உற்றாலும் மனம்வேண்டி உழலுமென்றான்
     உறுதிதனக் கின்பமதே உதவுவாயே. 99

இன்பத்துள் இன்பமதாய் இருந்தான் தன்னை
     எழிலுருவாய்த் தழலுருவாய் இலங்கி னானை
மன்பதையி னறவாழ்வை மாண்பு தன்னை
     மனத்துறுவார் இனத்துறுமா மணியான் தன்னைத்
துன்பமெனுந் தொடக்கறுக்குந் தூயான் தன்னைத்
     தொல்லிலங்கைக் கதிரேசத் துகளற் றானை
அன்புருகி அடியேனைப் பாடு வித்த
     அப்ப னையிங் கில்லாதே துலகந் தானே. 100

கதிரேச சதகம் முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247

நூல்
விலை
தள்ளுபடி
விலை
அஞ்சல்
ரூ. 211.00
ரூ.200.00
இலவசம்
ரூ. 244.00
ரூ.230.00
இலவசம்
ரூ. 650.00
ரூ.600.00
இலவசம்
ரூ. 270.00
ரூ.255.00
இலவசம்
ரூ. 500.00
ரூ.480.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 199.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 433.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 411.00
ரூ. 390.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 580.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 160.00
இலவசம்
ரூ. 380.00
ரூ. 360.00
இலவசம்
ரூ. 165.00
ரூ. 150.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 205.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 165.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 610.00
இலவசம்
ரூ. 288.00
ரூ. 270.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 325.00
ரூ. 310.00
இலவசம்
ரூ. 333.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 425.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 360.00
ரூ. 340.00
இலவசம்
ரூ. 190.00
ரூ. 180.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 275.00
இலவசம்
ரூ. 425.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 600.00
ரூ. 500.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 430.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 470.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 525.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 299.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 588.00
ரூ. 540.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 250.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 350.00
இலவசம்
ரூ. 230.00
ரூ. 220.00
இலவசம்
ரூ. 790.00
ரூ. 740.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 215.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 180.00
ரூ. 170.00
இலவசம்
ரூ. 1800.00
ரூ. 1600.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 120.00
ரூ. 110.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 177.00
ரூ. 155.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 80.00
ரூ. 75.00
ரூ. 30.00
ரூ. 144.00
ரூ. 135.00
ரூ. 30.00
ரூ. 111.00
ரூ. 100.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 125.00
ரூ. 115.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 90.00
ரூ. 30.00