சென்னைநூலகத்தில் உறுப்பினராக இணைந்து பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெறலாம்!
உறுப்பினர் கட்டணம் : ரூ. 590/- (5 வருடம்)
         

கட்டணம் : ரூ. 3000/- (5 வருடம்)
         
1. ரூ.500க்கான நூல்களை உடனே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
2. பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 500க்கான நூல்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
3. 5ம் ஆண்டின் நிறைவில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ. 3000 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
4. நீங்கள் விருப்பப்பட்டால் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
5. எமது www.dharanishmart.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பதிப்பக நூல்களில் எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
6. நூல்களின் முழு விலையே (MRP) கணக்கில் கொள்ளப்படும். இந்தியாவிற்குள் அஞ்சல் செலவு இலவசம்.
7. சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டுள்ள மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
கட்டணம் : ரூ. 5000/- (5 வருடம்)
         
1. ரூ.1000க்கான நூல்களை உடனே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
2. பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1000க்கான நூல்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
3. 5ம் ஆண்டின் நிறைவில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ. 5000 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
4. நீங்கள் விருப்பப்பட்டால் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
5. எமது www.dharanishmart.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பதிப்பக நூல்களில் எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
6. நூல்களின் முழு விலையே (MRP) கணக்கில் கொள்ளப்படும். இந்தியாவிற்குள் அஞ்சல் செலவு இலவசம்.
7. சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டுள்ள மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888கார்மேகக் கவிஞர்

இயற்றிய

கொங்கு மண்டல சதகம்

     கொங்குமண்டல சதகம் என்பது நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களாற் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட ஒரு நூல். இது விஜய மங்கலத்திருந்த கார்மேகம் என்னும் ஒரு ஜைன வித்துவானால் பாடப்பட்டது. இம் மண்டலத்துப் பண்டைக்கால நிலப்பரப்பு, தெய்வீக விளக்கம், சித்தர், சமயாசிரியர், முடியுடை வேந்தர், குறுநிலமன்னர், வள்ளல், புலவர் மற்றும் பலவகை மாந்தர்களின் நீதி, வீரம், கொடை, ஆண்பாலர் பெண்பாலர் கல்வி, நட்பு, கற்பு, நன்றி மறவாமை, அடக்கமுடைமை, புலவர்களை ஆதரித்து வந்த அருமை புலவர்களின் பெருமை இன்னும் பல பழக்கவழக்கங்களைச் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது.

ரிமிந்தகம்
ஆசிரியர்: அரியநாச்சி
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 140.00
தள்ளுபடி விலை: ரூ. 130.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com


தமிழில் சைபர் சட்டங்கள்
இருப்பு உள்ளது
ரூ.235.00
Buy

The Monk Who Sold His Ferrari
Stock Available
ரூ.205.00
Buy

101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

காலத்தின் வாசனை!
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

பெண்களுக்கான இயற்கை மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

உப்பு நாய்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

மலைகள் சப்தமிடுவ தில்லை
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

தாவூத் இப்ராகிம்
இருப்பு உள்ளது
ரூ.390.00
Buy

மோடி மாயை
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ஸ்ரீமத் பாகவதம்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

கல் சிரிக்கிறது
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

மெஜந்தா
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

கழிமுகம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

அயல் பெண்களின் கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

பேசித் தீர்த்த பொழுதுகள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

108 திவ்ய தேச உலா - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy
பாயிரம்

காப்பு

அறுசீரடியாசிரிய விருத்தம்

பூமலி செம்ம னத்தார் புரிவினைக் கிடர கற்றி
நாமலி தீம னத்தார் நசைவினைக் கிடரி யற்றிக்
கோமலி யுருவ முன்று கூறிருதிணைபொ ருந்தித்
தேமலி மருப்பொன்றேந்து தேவனைப் பணிகு வேமால் 1

அவையடக்கம்

கடல்சூழ் புவியிற் கண்டமற்றுங் காணுஞ் சுவரிற் கீறிமகிழ்
மடமார் சிறுவர் போற்கொங்கு வளமுஞ் சீருமோராதேன்
திடமாய் வினவி நோக்கியிசை தெளிவோர் முன்னிம் மண்டலத்தின்
அடைவாங் கதைகள் பொதிசதக மாக்கிலறிஞ ரிகழாரே. 2

ஆக்கியோன்

திருத்தகு சரித மாய்ந்து தேர்பவர் தமக்குச் சற்றும்
வருத்தமி லாது கொங்கு மண்டல சதகஞ் சொன்னான்
வரிக்குயில் கூவும் பிண்டி மரத்துமுக் குடைக்கீழ்நின்ற
கருத்தனைக் கருத்து ளுன்னுங் கார்மேகக் கவிஞன் றானே. 3

நூல்

நாடு

கட்டளைக்கலித்துறை

பொற்பு மிகுகொங்கு நாடு செழித்திடப் பூமியெங்கும்
நற்பய னுற்றுச் சுகித்திடு மென்ன நவிற்றுபழஞ்
சொற்பெற வெல்லா வளமும் பொருந்திச் சுரபியொடு
வற்சக மோங்கி வளர்வதன் றோகொங்கு மண்டலமே. 1

எல்லை

மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே. 2

நாடு - இணை நாடு

நாலா கலையலை வாரிதி மாந்தி ஞயம்பொருந்தத்
தோலா மொழிக டிகழ்நா வலர்கள் சுகம்பொருந்த
நாலாறு நாடு மிணைநாட்டுங் குஞ்சரி நாதனுடன்
மாலால கண்ட ரமர்பதி சேர்கொங்கு மண்டலமே. 3

தலம்

செஞ்சொற் கரைசை திருவானீ கூடல் திருமுருகர்
தஞ்சத்தென் புக்கொளி பேரூர் குரக்குத் தளியுடனே
வெஞ்சனற் கூடல்செங் குன்றூரறப்பள்ளி வெண்ணெய் மலை
மஞ்சு திகழ்கரு வூர்சேர் வதுகொங்கு மண்டலமே. 4

மலை

கொல்லியும் வைகை யலைவாய் பழநிபொற் கொங்கணவர்
வில்லியு மோதி வராகந் தலைமலை வெண்ணெய் மலை
அல்லியை சென்னி கிரிகஞ்ச வெள்ளி யரவகிரி
வல்லியு ளானை மலைசூழ் வதுகொங்கு மண்டலமே. 5

நதி

திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி
தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்
குருமணி பாலை நதிவாழை +காரி குடவனதி
வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே. 6

குடிவளம்

நீடுந் தமிழ்மன்னர் மூவர்க்கு மம்பொனெடு மகுடஞ்
சூடும் பெருமை படைத்துயர் மக்களின் சோர் வகற்றிக்
கூடும் பலவுண வூட்டுவே ளாளக் குடிசிறந்து
மாடும் பெருகி வளர்வதன் றோகொங்கு மண்டலமே. 7

காவிரி உற்பத்தி

சீரார் வளவ னிலம்புன னாடாச் செழிப்புறவும்
பேரார் வரநதி பெய்துறு பாவம் பிரிந்திறவும்
ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி
வாரார் பெருமை படைத்தது நீள்கொங்கு மண்டலமே. 8

ஆனைமுகனைத் தொழுவோர் குட்டிக்கொள்ளல்

ஐங்கைப்புத் தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து
செங்கைத் துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற்
றுங்கப் பணிவிடை முற்றோன்று தானஞ் சுரர்மகிழு
மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு மண்டலமே. 9

வெஞ்சமாக் கூடல்

கிழவே தியவடி வாகி விருத்தையைக் கிட்டியென்றன்
அழகாகு மக்க ளடகுகொண் டம்பொ னருடியேன்றேற்
றெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொரு
மழுவேந்தியவிகிர்தேசுரன் வாழ்கொங்கு மண்டலமே. 10

திரு ஆநிலை

வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலை
சூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்க நீ
ராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழ
வாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே. 11

திருப்பாண்டிக் கொடுமுடி

நந்து படித்துறை சூழ்கறை யூர்தனி னம்பரைப்பூத்
தந்து படித்தருச் சிக்கவொட் டாத்திருத் தார்முடியும்
முந்து படிக்கு ளடங்கக் குறுமுனி முன்கையினால்
வந்து பிடிக்கு ளடங்கிய துங்கொங்கு மண்டலமே. 12

திருச்செங்கோடு அர்த்தநாரீச்சுரர்

நெடுவா ரிதிபுடை சூழல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே. 13

வானிகூடல் திருநண்ணாவூர்

காலி லரவ மிருசுட ரைப்பற்றுங் காலத்திலே
மேலுல கம்பெறு வோர்புனல் மூழ்க விரும்ப துவுங்
கோல மிகுந்தப வானீயும் பொன்னியுங் கூடுதுறை
வாலிப காசிநண் ணாவூர் பயில்கொங்கு மண்டலமே. 14

திருமுருகன் பூண்டி

கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்
சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற் றமிழ்க்கா
அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்
வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே. 15

அவிநாசி

பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு
வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே. 16

பேரூர்த் தாண்டவ மூர்த்தி

பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்
போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொது நடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே. 17

பட்டிப்பெருமான் பள்ளனானது

கடுவாள் விழியிணை யாரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்
நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே. 18

நந்திக்கு மறுமுகம் வளர்ந்தது

நறைவயல் வாய்ச்சுந் தரர்க்கொளித் தாரதை நந்தி சொலப்
பிறைமுடி வேணியர் பட்டீச் சுரர்பெரு மண்வெட்டியாற்
குறைபட வெட்டி விழுமுக நந்திசெல் கொள்கையினால்
மறுமுக மீண்டு வளர்ந்தது வுங்கொங்கு மண்டலமே. 19

அகத்திய முனி

வாதாபி வில்வல னான துணைவர் மடியவிசை
தீதாற வேகும்ப சம்பவ னன்று சிவக்குறிகண்
டேதாளி லர்ச்சனை செய்து தொடர்பவ மேகமகிழ்
மாதா மதர்நிறை சூழ்தான முங்கொங்கு மண்டலமே. 20

துடியலூர் - சுந்தரருக்கு விருந்து செய்தது

வேட்டுவ வேட மெடுத்து வழித்துணை மேவியளங்
காட்டு முருங்கை யிலைகாய் நெய் பெய்து கறி சமைத்துப்
பாட்டு முழக்குவன் றொண்டருக் கன்னம் படைத்து நரை
மாட்டுதிப் போன்றுடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே. 21

பழநி

தீத்திகழ் மேனி சிவன்கையில லோர்கனி தேவர்மெச்சி
ஏத்திய நாரதர் நல்கக்கண் டேயிப மாமுகத்து
மூத்தவன் கொள்ள விளையோனை யீசன் முகந்திருத்தி
வாய்த்த பழநியென் றோதின துங்கொங்கு மண்டலமே. 22

இடும்பன்

அலைகொண்ட பாற்கடற் சற்ப சயனத் தரியயனுந்
தலைகொண்டி ரைஞ்சும் பதாம்புயத் தாருக்குச் சற்குருவாய்
நிலைகொண் டிருக்குஞ்செவ் வேளுக் கிடும்பன் முனீண்டசிவ
மலைகொண்டு வந்ததும் வைகாவூர் சூழ் கொங்குமண்டலமே. 23

மொக்கணீசுரர்

ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சி கற்றோன்
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப் புதைக்க
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே. 24

கொல்லிப் பாவை

தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்
பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவை முல்லை
வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே. 25

கொல்லி மலை

முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்
தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரக்
கொத்தீட் டியபுதுப் பூத்தேனு முறுங் குறிஞ்சி யின்றேன்
வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்க மண்டலமே. 26

எறிபத்தர்

நதிசூடும் வேணிக் கருவூர்ப் பசுபதி நம்பருக்குப்
புதுமாலை கட்டுஞ் சிவகாமி யாண்டவன் போந்தெருவின்
மிதமீறிப் பூவினைச் சிந்துகை யான்விறன் மீறவெட்டி
மதயானை யைக்கொன் றெழுப்பிய துங்கொங்கு மண்டலமே. 27

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்

நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே
புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை
குலவு மதுரைத் தமிழா சிரியர் செங் குன்றூர் கிழார்
வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே. 28

கனகசபையாக்கப் பொன் கொடுத்தது

பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே. 29

கம்பர்

கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச் செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே. 30

கொங்குப் புலவர் சபை

வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி
தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயு முரிமை
கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு
வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே. 31

ஆட்கொண்டான்

துன்னு மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து
பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னுமப் பாரதத்தைத்
தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்
மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்கு மண்டலமே. 32

கரிகாலன்

நீரமை காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்
பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி
ஏருறு சிங்கா தனமேறக் கையா லெடுத்துமத
வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே. 33

கரூர்ச்சித்தர்

வாய்த்தம் பலவெச்சி லாலட்ட பந்தன மாண்புறமீன்
காய்த்து மரஞ்சொரி யச்செய்து பத்தி கனிந்து செந்தேன்
தோய்த்த திருவிசைப் பாப்பா டொருசித்தர் தோன்றிவர
வாய்த்த கருவூர்ப் பதிசேர்வ துங்கொங்கு மண்டலமே. 34

கஞ்சமலைச் சித்தர்

பஞ்சமுகத்தி லுதித்திடு மாகம பரகமெலாஞ்
செஞ்சொற் றிருமந் திருமுரை மூலர் திருமரபிற்
கஞ்ச மலைச்சித்தர் வாழ்வு மிரதங் கரணிவளர்
மஞ்சு திகழ் கஞ்ச மாமலை யுங்கொங்கு மண்டலமே. 35

போகநாதர் புலிப்பாணி

யோக வயித்தியஞ் சொல்ரச வாத மெலாக்கலையுந்
தேக நிலைபெறுங் காயகற் பங்களெண் சித்தியுஞ்சொல்
போக ருடன்புலிப் பாணி முதலிய புண்யரெலா
மாக முறவமர் வைகா நகர்கொங்கு மண்டலமே. 36

கொங்கணச் சித்தர்

தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்
சாற்றுட னாக ரசங்கத் தகமிட்டுத் தந்திரமாய்
தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து
மாற்றுரை கண்டது பொன்னூதி யூர்கொங்கு மண்டலமே. 37

இடைஞானி

ஒருவிதையைத்தட்டு மாயர் மதலை யுவமையிலா
அரியஞானங் கொளச் சென்னியிற் செந்நீ ரருவியெனச்
சொரியநின் றன்னான் றனையாண்ட முக்கட் சுயம்பு வென்று
மருவி வளர்தென் கரைநாடு சூழ்கொங்கு மண்டலமே. 38

முத்தரசர்

சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே. 39

கோசர்

பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச
இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்
கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்
மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங்கொங்கு மண்டலமே. 40

குமணன்

நாட்டினைத் தம்பி கொளக்காடு சென்று நலிவுறுநாள்
பாட்டிசைத் தோர்புல வன்வேண்ட வென்றலை பற்றியறுத்
தீட்டியென் றம்பி யிடத்தீயிற் கோடிபொ னெய்து மென்று
வாட்டங் கைத்தரு மக்குமணன் கொங்கு மண்டலமே. 41

அதிகமான்

சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொ லௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவ துங்கொங்கு மண்டலமே. 42

ஓரி

வினரயார் தொடையணி மூவேந்த ராசை மிகுந்துநச்சத்
தரைமீ தெலாவள முஞ்செறி கொல்லித் தடவரையாள்
துரையாய்த் தமிழ்மொழிக் கல்லும் பகலுஞ் சுரந்து செம்பொன்
வரையா தளித்தநல் லோரிவள்ளல் கொங்கு மண்டலமே. 43

வையாவிக் கோப்பெரும்பேகன்

கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்க மருள்
செய்யாண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தருமவ்
வையாவிக் கோப்பேரும் பேகனெனும்பெரு வள்ளறங்கு
வையா புரியெனுங் கோநக ருங்கொங்கு மண்டலமே. 44

அசதி

தெய்விக மான தமிழ்ப்புல வோர்கள் தினமுளங்கொள்
பொய்தீ ருரையெம் பிராட்டியா ரௌவை புனைந்துபுகழ்
செய்கோவை யேற்ற திறலோ னசதி செழித்துவளர்
மைதாழ் பொழிறிக ழைவேலி யுங்கொங்கு மண்டலமே. 45

சீயகங்கன்

சொல்காப் பியத்தின் குண்தோடந் தேர்ந்து சொலுவதற்குத்
தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை
யொல்காப் பெரும்பவ ணந்தீயென் றோதி யுபகரித்த
வல்கா வலன்சீய கங்கனுந் தான்கொங்கு மண்டலமே. 46

பவணந்தி முனிவர்

கங்கக் குரிசி லுவக்கநன் னூலைக் கனிந்துபுகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றிவளர்
கொங்கிற் குறும்பு தனிலாதி நாத குருவிளங்கு
மங்குற் பொழிற்சன காபுர முங்கொங்கு மண்டலமே. 47

நளிர் சுரம் நீங்கியது

திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின
பெருக்காக "வல்வினைக் கிவ்வினை யாமெனப்" பீடுபெறத்
திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேய
முற்றும் வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே. 48

சிவப்பிரகாசர்

பண்பார் சிவப்பிர காசனைத் துட்டர் பழிக்கவவர்
கண்பார்க்க 'வில்லார் பொதுச்சபை யின்வித்த கா'வென்வோர்
வெண்பா சொலக்கல் லிடபங் கடலையை மென்று தின்னும்
வெண்பா வலர்வரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே. 49

வேலவன் மேய்ப்போனாக வந்தது

பெருமை மிகு ‘மர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ்
வரவு படம்விரித் தடாததென்’ னென்றகத்துனுமோர்
கருவி வெருக்கொள வாமேய்ப் பவனாக் கனிந்துதிரு
மருகன் மயில்கொத்து மென்றெனச் சொல்கொங்கு மண்டலமே. 50

ஆணூர்ச் சர்க்கரை

திருத்து புகழ்பெறு மாணூரிற் சர்க்கரை செந்தமிழோன்
விருத்தமுட னன்னை மேலேறத் தாய்வெகு ளாமலெனைப்
பொருத்த முடன் பத்து மாதஞ் சுமந்து பொறை யுயிர்த்தாய்
வருத்த மிதிலென்ன வென்றா னவன்கொங்கு மண்டலமே. 51

ஆணூர்ச் சர்க்கரை காய்ச்சிய நெய்யிற் கையிட்டுச் சத்தியஞ் செய்தல்

முகஞ்சோர்ந் தகன்றிடு மேகாலிப் பாவலன் முன்ன நின்றே
யிகழ்ந்தே னிலையைய வென்று சுடுநெ யினிற்கை யைவிட்
டுகந்தே யுணுமெச்சில் வாயைக் கழுவி யுவப்பியற்றி
மகிழ்ந்தே புகழ்பெறு சர்க்கரை யுங்கொங்கு மண்டலமே. 52

சவுக்கடி பெற்றது

மீறு முலகிலெட் டுத்திக்குஞ் சொட்டையில் வெல்ல வல்லோன்
கூறுந்தென் காரையிற் சர்க்கரை வேந்தன் கொழுந் தமிழாற்
பேறும் புகழும் பெறவேண்டி நாவலன் பெற்றகையான்
மாறுஞ் சவுக்கடி பெற்றது வுங்கொங்கு மண்டலமே. 54

சூரிய காங்கேயன்

வில்லாள ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து
நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்
கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட
வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே. 55

ஆதிசைவர்கள்

குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தர் கண்டு
நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு
வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே. 55

பூந்துறை - குப்பிச்சி

தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்
வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்
டேசற் படுமசமாவினை யாட்டி யெவருமெச்ச
மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே. 56

சர்க்கரை, சோழனை வெருட்டியது

பொருனையும் பொன்னியு மோங்கிப் பெருகிப் பொசிந்து மிகப்
பெருமை யுறுகொங்கிற் சென்னி யிடர்செயப் பெருஞ்செழியன்
அருமை யுளத்தெரிந் தன்னோன் மூதுகிட் டகலவிசை
வரும முறுகாரை மன்றாடி யுங்கொங்கு மண்டலமே. 57

அகளங்கன்

கருவித் தடிப்படி யாதம ராற்றிடு கம்பணனைச்
செருவிற் படவென்ற தீரனை நோக்கியச் செம்பியனுஞ்
சுரிகைப் படையினில் வல்லோ னகளங்கச் சோழனென
வருபட்ட மீயப் பெறுராசை யோன்கொங்கு மண்டலமே. 58

கோபண மன்றாடி

தென் பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச் செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம் பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங் களந்தை
மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே. 59

வேதாந்த தேசிகர்

படிபுகழ் தேசிகர் கச்சியி னொந்து பகரவொண்ணா
வடகொங்கு வானி நதிதீரச் சத்திய மங்கலத்திற்
குடிபுகுந் தாய்ந்து பரமத பங்கங் குலவுவொண்ணூல்
வடிதமி ழாற்சொலத் தேறிய துங்கொங்கு மண்டலமே. 60

இளங்கோவடிகள்

உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற் கோர்துணையாம்
இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத் தேவமுதங்
கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங் கோட்டுவேற் குமரனமர்
வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு மண்டலமே. 61

கபில தேவர்

செய்தவ மோங்கிய சீரார் கபிலநற் றேவரன்பிற்
பெய்த வமுத சுவைகொ ளந்தாதியிற் பீடுபெறச்
செய்தவ மாச்சிவன் மேயசெங் குன்றூர் செபிக்குமெனு
மைதவ ழப்பதி யோங்குவ துங்கொங்கு மண்டலமே. 62

சித்தன் வாழ்வு

நெல்லுங் கரும்புங் கமுகும் பலன்றர நேர்பருவச்
செல்லம் பரத்திதிசைப் துப்பொழிந் தோங்கிடு சித்தனல்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியிடைத் தென்ன வெலாக்கலையும்
வல்லதனியௌவை கூறிய துங்கொங்கு மண்டலமே. 63

நல்லதம்பிக் காங்கேயன்

அம்புவி மெச்சுகுன் றத்தூரி லாயரி லாய்கலைதேர்
எம்பெருமானைக் கொடுதக்கை யென்னு மிசைத்தமிழால்
நம்பு மிராம கதையையன் பாக நவிலவிசை
வம்பவிர் தார்ப்புய னல்லயனுங்கொங்கு மண்டலமே. 64

பூங்கோதையார்

குறுமுனி நேர்தமி ழாழியுண் வாணர் குழாம் வியப்ப
அறிவி லிளைஞரே யாண்மக்க ளென்ன வறுதியிட்ட
சிறிய விடைச்சியெம் பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுவறு சங்க கிரிசேர் வதுகொங்கு மண்டலமே. 65

சம்பந்தச் சர்க்கரை - தமிழ்ப்புலவனுக்குத் தாலியைக் கொடுத்தது

சங்க கிரிதுரு கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்
சங்கையி லாதொரு பாவாணன் சென்று தமிழுரைக்க
அங்க ணிருந்துத னில்லாள் கழுத்தி லணிந்திருக்கும்
மங்க லியந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே. 66

ஒருபுலவன் ஆணூாக்காமிண்டனை விற்க விலை கூறியது

கொடையிற் பெரியோ யுடனே யெனக்குக் கொடாமையினாற்
கடையிற் பெறநினை விற்றென் கலியைக் கழிப்பனென
மடியைப் பிடித்திழுத் தேவிலை கூறிய வாணன்மிடி
வடியப் பொருடந்த காமிண்டனுங் கொங்கு மண்டலமே. 67

இராமநுஜர், கொங்குப் பிராட்டியார்

சிவனே பரம்பிறி தில்லையெ னாதாற் சிரந்துணிக்க
உவந்தனன் சோழ னெனமறு வேடமா யோடிவந்து
கவன்றிடி ராமா நுஜன்றனைத் தேற்றியுங் காத்தளித்த
மவனகைக் கொங்குப் பிராட்டிய ருங்கொங்கு மண்டலமே. 68

விருத்தன் குமரனானது

உலையி லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்
தலையின் மயிருங் கருக்கக்கண் டேயவன் சற்குருவும்
நிலையுடன் கக்குவித் துண்டடைந் தானன் னெறியிற் கஞ்ச
மலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே. 69

காளிங்கராயன்

காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர்
பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை
தேவர்கள் சாம்பவர் பாவாண ரெல்லாந் தினமகிழ
மாவிச யம்பெறு காளிங்க னுங்கொங்கு மண்டலமே. 70

தொண்டை மான்

பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்
திண்டிறல் காட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்
தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருந் துரைத்தனமு
வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே. 71

மும்முடிப் பல்லவராயன்

திரிபுவ னச்சக்கர வர்த்தி வளவன்றன் சிந்தைகொளுஞ்
செருவிற் படையைச் செலுத்திச் சயங்கொ டிறலறிந்து
விருதுப் பெயர்மும் முடிப்பல் லவவடல் வீரனென்றே
வருபட்டம் பெற்றவன் வாழ்சிங்கை யுங்கொங்கு மண்டலமே. 72

பல்லவராயன் சிறுவன்

சங்கிராம சோழன் மரகத முத்தொடு தங்கிரதஞ்
சிங்கையிற் பல்லவன் செல்வனுக் கீயச் சிறுவன்மனம்
புங்கம தாகச் சிறுதே ருருட்டிப் புலவனுக்கு
மங்கள மேவிக் கொடுத்தவன் னான்கொங்கு மண்டலமே. 73

முதலிக்காமிண்டன்

புதுமைப் படைவேட் டுவர்சூழத் தாரா புரத்துடனே
சதுர மிகுபடை யாற்சம ராற்றிச் சயம்பெறவே
முதலிக்கா மிண்ட னெனக்கிருஷ்ண ராயர் மொழிவிருதை
மதிகொள் பருத்திப் பளிச்செல்ல னுங் கொங்கு மண்டலமே. 74

காடையூர்க் காங்கேயன்

காடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து
மேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல்- வேப்பமலர்த்
தோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்து பெற்று
மாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே. 75

கட்டி முதலி

கற்றார் வியப்புறு கற்பணிக் கோயில் கமலநன்னீர்
வற்றா துயரட்ட கோணக் குளமும் வகுத்ததன்றிச்
சுற்றார் சதுரங்கம் வில்கயல் வேங்கை தொடர் கொடிகள்
மற்றார்க் கிலையெனக் கொள்கட்டி யுங்கொங்கு மண்டலமே. 76

அன்னத்தியாகி

பன்னப் படாதருந் தப்புன லற்றிடோர் பஞ்சமுற்றுங்
கன்னித் துறைப்பாண் டியன்படைக் கெல்லாங்
களித்தமுதிட் டன்னத்தியாகி யெனவச் செழிய னழைக்க வுயர்
வன்னப் பரிவேன் முளசையுஞ் சூழ்கொங்கு மண்டலமே. 77

காழிப்புலவன்

பரந்த கடலுல கெல்லா மறியப் பரமசிவ
னிரந்தர மாயருள் சண்முக வேலனன் னேயத்தினாற்
புரந்தரன் போற்றும் நெருவூரிற் காழிப் புலவன்பட்ட
மரந்தழை யக்கவி பாடிய துங்கொங்கு மண்டலமே. 78

அல்லாளன் இளையான்

வடமுக நின்று வருகா விரியின் வனத்தை யென்றுந்
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைத்துவளர்
வடகரை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே. 79

அதியேந்திர விஷ்ணுக்ரஹம் - நாமக்கல்

புதிதாய் மலையைக் குடைந்துநற் சிற்பப் புலவரைக்கொண்
டிதிகாச மானகதையைச் செதுக்குவித் திம்பர்மகிழ்ந்
ததியேந்த்ர விஷ்ணுக் கிரகமென்றேத்த வமைத்தவனாம்
மதியூகி யான வதிகனும் வாழ்கொங்கு மண்டலமே. 80

நெற்போர் வேவப்பாடியது

போயா தரவுட னெற்போர் கிடந்திடப் புற்றிரைச்சற்
றீயார வெந்து பொடிபட வென்றன்று செந்தமிழால்
ஓயாத வாக்கிதென் மங்கைச் சுவாமியென் றோர்புலவன்
வாயார வங்கதம் பாடின துங்கொங்கு மண்டலமே. 81

விஜயமங்கலம் உலகுடையான்

சொல்லிக் கனைய வகத்துறைக் கோவை சொனபுலவன்
பல்லக் கெடுத்துக் கழனியும் பொன்னும் பரிசளித்த
வெல்லப் படைத்தலை வீரனுலகுடை வீரனமர்
மல்லர்க் கினிய குறும்பணை நீள் கொங்கு மண்டலமே. 82

பூந்துறை வாரணவாசி

வாரண வாகன னோவென மன்னர் மனமதிக்குங்
காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடை
பூரண வாகினி யுஞ்சிரத் தாழப்பொருது வென்ற
வாரண வாசி வளர்பூந் துறைகொங்கு மண்டலமே. 83

பயறு மிளகானது

அணித்திகழ் சேர்தென் கரைநாட்டி லப்பிர மேயருக்கு
பணித்தொழி லான தளர்ச்சியி னால்வெறுப் பாயொர்செட்டி
எணித்தொலை யாத மிளகைப் பயறென வெம்பெருமான்
மணிப்பய றாக்கின தும்புகழ் சேர்கொங்கு மண்டலமே. 84

இம்முடி மசக்காளி மன்றாடி

நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை
யெல்லாஞ் சொலிநிலை நில்லாமற் பல்லக் கிரவை பற்றிச்
சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி
வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே. 85

இம்முடிச் சோழி யாண்டான்

பாயு மணைநிற்க வேண்டி மகளைப் பலிகொடுத்துந்
தோயுந் திருப்புக் கொளிக்கோயிற் கற்பணித் தொண்டுமிசை
ஆயும் பொருளந்தை யிம்மூடிச் சோழியாண் டானளியின்
மாயன் வடபரி சாரநா டுங்கொங்கு மண்டலமே. 86

உத்தமச் சோழன்

இத்தரை மீதினிற் சேனா பதியா யிருந்து வெற்றி
யொத்து வரப்பெற்ற தற்காத் தனக்கிங் குறுபெயராம்
உத்தமச் சோழனென் றன்பாத் தரப்பெறு மோங்குபட்ட
வர்த்தனன் வாழ்வுறு மாணூர் திகழ்கொங்கு மண்டலமே. 87

ஆகவ ராமன்

ஏய்ப்பொடு மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்
கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே
வேப்பலர் மாலையு மீனப் பாதாகை விருதுமற்றும்
வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே. 88

கொங்குக்குயவன்

கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு
மெரியா மூடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்
பரிபா லனஞ்செய மட்பாவை யிய்குறி பார்த்துச்சுட
மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே. 89

விசுவகன்மியர் சாசனம்

இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக்கொள்ள விரண்டுசங்கு
விருப்புற்ற வாழ்விலுஞ் சாவிலு மூத வெளிநடை காற்
செருப்பிட்டுச் செல்லப் பெறுவீர்களென்னவச் செம்பியனால்
வரைப்பத் திரம்பெற்ற கம்மாளருங் கொங்கு மண்டலமே. 90

காங்கேயன்

அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்
நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே
இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி னிசைத்தகலை
வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே. 91

மருத்துவி

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொருநல்
லிறைமக ளார்மக வீனப் பொறாதுட லேங்கவகிர்
துறைவழி யேற்று மகிழ்வூட்டு மங்கலை தோன்றிவளர்
மறைவழி தேர்நறை யூர்நாடு சூழ்கொங்கு மண்டலமே. 92

செய்யான் பல்லவராயன்

தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்த ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் சூளசீர்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப்படை செலுத்த
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே. 93

வேணாவுடையான்

கொற்றையில் வீற்றரு ளப்பர மேயர் கொடிஞ்சி செலப்
பெற்றதன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற
உற்றுள ராயர்பொற் சிம்மா தனத்தி லுவந்து வைத்த
மற்றெறி நீள்புய வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே. 94

அடியார்க்கு நல்லார்

குருவை யுணர்ந்த விளங்கோ வடிகளுட் கொண்டு சொன்ன
தருவை நிகருஞ் சிலப்பதி காரத் தனித்தமிழுக்
கருமை யுரைசெ யடியார்க்கு நல்லா ரவதரித்து
வருமைப் பொழினிரம் பைப்பதி யுங்கொங்கு மண்டலமே. 95

வாணராயன்

தொங்கவைத் துள்ள பனையேட்டில் வாயிற் சொலாதெழூதி
யங்குவைத் தாலதிற் கண்டதை யன்பி னரிதினல்கி
யிங்குமற் றும்வரு வீர்புல வீரென் றிசைபவள
வங்கிசத் தார்வாண ராயனும் வாழ்கொங்கு மண்டலமே. 96

முட்டை என்ற முருகவேளும் பொய்யா மொழிப்புலவரும்

முட்டையென் பேர்சுரம் போக்கா வொருபா மொழியெனக்கேட்
டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்
சுட்டழகில்லையீ தென்று விழுந்த துளியென்றுநன்
மட்டவிழ் தார்முரு கோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே. 97

பாரியூர், செட்டி பிள்ளையப்பன்

கலியின் மெலிந்து புகல்கவிக் கீயக் கயிலின்மையால்
புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை
மலிய வெடுத்துப் புலவனுக் கீந்த வடகரையான்
வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே. 98

கொங்குவேளிர்

நீதப் புகழுத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேளடிமை
மாதைக் கொண்டுத்தரஞ் சொன்னது வுங்கொங்கு மண்டலமே. 99

அவநிதன்

தவநித நோற்கு மறவாணர் மேவத் தழைகுடிகள்
தவநிதி யோங்கத் தரியலர் தாழ நலம் பொருந்தி
அவநித னாதியரசர் வடக்கு மடங்க மணி
மவுலி தரித்துப் புகழ்நீண் டதுகொங்கு மண்டலமே. 100

கொங்கு மண்டல சதகம் முற்றிற்று
சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode - PDF
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode - PDF
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode
ரேகா - Unicode

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி - Unicode

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF

ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
திருமால் வெண்பா - Unicode - PDF

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF
மதுரை மாலை - Unicode - PDF
அருணாசல அட்சரமாலை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF
சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF
சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF
சித்தாந்த சிகாமணி - Unicode - PDF
உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF
உபதேச வெண்பா - Unicode - PDF
அதிசய மாலை - Unicode - PDF
நமச்சிவாய மாலை - Unicode - PDF
நிட்டை விளக்கம் - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF
நல்லை வெண்பா - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF
முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF
கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
கடம்பர்கோயில் உலா - Unicode - PDF
திரு ஆனைக்கா உலா - Unicode - PDF
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF
திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF
திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF
அருணகிரி அந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
திருவிடைமருதூர் உலா - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
மேகவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF
சீகாழிக் கோவை - Unicode - PDF
பாண்டிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF
கதிரேச சதகம் - Unicode - PDF
கோகுல சதகம் - Unicode - PDF
வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF
அருணாசல சதகம் - Unicode - PDF
குருநாத சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode