![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் |
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள் (1981) |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காடை - (Quail) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : நூல்கோல் - Knol Khol |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 6 |
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை நங்குற்றந் தீர்க்கும் பழமலை நாதர்க்கு நற்பலிகொண் டங்குற்று மென்றுகில் போக்கினள்வெற்றரை யாகியந்தே விங்குற் றனையென வெம்பெரு மானிவ் விருநிலத்திற் றங்குற்றம் பார்க்கு மவருள ரோவெனத் தாழ்ந்தனளே. 1 குன்றா முதுகுன் றுடையா னிலாதவெண் கோவணத்தான் றன்றா மரைக்கை விரன்மூன்று காட்டித் தனங்குறித்து நன்றாக வித்தனை பிச்சையுண் டோசொன் னுறுநுதலா யென்றா னிரண்டத் தனையுள கோடியென் றிட்டனளே. 2 இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னைமுனந் தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலாள் செப்பார் பணைமுலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டா யெப்பாத் திரத்திலு மிட்டறி யாய்கொன்முன் னென்றனரே. 3 வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்பலி யோட்டினை நீதொட லாமோ வெனவுமை யுந்தொடலாம் வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்டுவைகொல் யாட்டினின் பாலென மூலமு மாமென்ப தென்றனரே. 4 மாண்ட வெலும்பணி கோலமொ டேபலி வாங்கிடுதற் கீண்டு வருமுது குன்றுடை யீருமை யான்மிடற்றி னீண்ட வுகிருறுத் தாதனை வேனென்று நீர்தலையைத் தீண்ட வுமது பலிப்பாத் திரமென் சிரிக்கின்றதே. 5 வானோர் கொழுநின் பலிப்பாத் திரத்தை வனைந்ததுநீ தானே வெனச்சக் கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி யானோர் குயவன்மெய் யென்றே முதுகுன் றிறையியம்ப நானோ வொருசிற் றிடைச்சியென் றாளந் நறுநுதலே. 6 பங்கய மன்ன விழியார் முதுகுன்றர் பாத்திரத்தி லங்கையி லைய மொடுவண்டு வீழநல் கையவென வெங்கையில் வந்த தெமதாக லேவழக் கென்றுசெட்டி மங்கையர் தங்கட் கிருங்கூ டலிலிட வைத்தனரே. 7 நீருக்குத் தக்க சடையார் முதுகுன்றச் நேடியுங்க ளூருக்குட் பிச்சையென் றுற்றோமுண் டாயி னுரைமினென வாருக்குத் தக்க முலையா ரதற்குளர் மற்றொருவர் யாருக்குக் கிட்டு மதுசோறு நீர்கொளு மென்றனரே. 8 முழங்குந் துடியொடு பிச்சையென் றேமுது குன்றர்வரச் சழங்கு முலைமுதி யாளென் பலியெனத் தம்மனையில் வழங்கு மனமென் றனர்புறம் போந்து வளர்முலையாள் விழுங்கு மனம்பகற் போதுகொள் வாயென்று வேண்டினளே. 9 சிறப்புப் பாயிரம் பிச்சா டனநவ ரத்தின மாலையைப் பீடுபெறத் தைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரணம் பொய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனித னற்சார்பு சார்ந்த சிவப்பிர காச நவமணியே. 10 சிறப்புப் பாயிரம் பிக்ஷாடன நவமணி மாலை முற்றிற்று |