சென்னைநூலகத்தில் உறுப்பினராக இணைந்து பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெறலாம்!
உறுப்பினர் கட்டணம் : ரூ. 590/- (5 வருடம்)
         

1. ரூ.500க்கான நூல்களை உடனே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
2. ரூ. 500 வீதம் அடுத்த 4 ஆண்டுக்கு நூல்களை இலவசமாக பெறலாம்.
3. 5ம் ஆண்டின் நிறைவில் செலுத்திய தொகையை (ரூ. 3000) திரும்பப் பெறலாம்.
1. ரூ.1000க்கான நூல்களை உடனே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
2. ரூ. 1000 வீதம் அடுத்த 4 ஆண்டுக்கு நூல்களை இலவசமாக பெறலாம்.
3. 5ம் ஆண்டின் நிறைவில் செலுத்திய தொகையை (ரூ. 5000) திரும்பப் பெறலாம்.
4. நீங்கள் விருப்பப்பட்டால் மீண்டும் 5ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
5. எமது www.dharanishmart.com தளத்தில் உள்ள அனைத்து பதிப்பக நூல்களில் எதை வேண்டுமானாலும் பெறலாம்.
6. நூல்களின் முழு விலையே (MRP) கணக்கில் கொள்ளப்படும். இந்தியாவிற்குள் அஞ்சல் செலவு இலவசம்.
7. சென்னைநூலகம்.காம் தளத்தில் பிடிஎப் வடிவில் மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
8. எமது பழைய உறுப்பினர்கள் / புரவலர்கள் தாங்கள் ஏற்கெனவே செலுத்திய தொகை போக மீதத்தொகையினை செலுத்தி இத்திட்டங்களில் இணையலாம்.
முழு விவரம் அறிய இங்கே சொடுக்கவும்!
         
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
புதிய வெளியீடு : சிவப்பிரகாசம்

எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்


குருநமசிவாயர்

அருளிய

சிதம்பர வெண்பா

காப்பு

மன்னும் சிதம்பரதே வாவென்று வெண்பாவிற்
பன்னும் தமிழ்மாலை பாடவே - உன்னும்
கருத்தக் கணமுதவக் கண்பார்த் தருள்வாய்
நிருத்தக் கணபதியே நீ.

நூல்

முத்திக்கு மூலம் மொழியில் உனையடைந்தோர்
பத்தித் தவத்தோர் பரிவன்றோ - தித்திக்கும்
பாகா மொழியமையாள் பாகா பணியணிந்த
வாகா சிதம்பரதே வா. 1

தூக்கிய பொற் றாளிற் சுவைகாட்டித் தொல்வினையை
நீக்கியெனை யாள நினைகண்டாய் - பாக்கியமும்
மின்னார் சிவலோக வீடும் தரும்புலியூர்
மன்னா சிதம்பரதே வா. 2

அருவுருவ மாகியொளி யாகிநீ யார்க்கும்
கருவுருவ மாகியகண் காணத் - திருவுருவ
மாயம் பலத்தினட மாடுந் திறமிதென்ன
மாயம் சிதம்பரதே வா. 3

பீடேந்தி நின்னாடியைப் பேணுவார் உண்டுடுத்து
நாடேந்தி வாழ்வதற்கு நாணாமல் - ஓடேந்தி
நேயம் பெறத்துணிந்து நீசென் றிரப்பதென்ன
மாயம் சிதம்பரதே வா. 4

நாவிருக்கப் பாவிருக்க நல்லதிரு நீறிருக்கப்
பூவிருக்க வெங்கும் புனலிருக்கச் - சேவிருக்க
நீயம் பலத்திருக்க நெஞ்சொருமி யாததென்ன
மாயம் சிதம்பரதே வா. 5

சிக்கனம் சேமிப்பு முதலீடு
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
வகைப்பாடு : வர்த்தகம்
விலை: ரூ. 135.00
தள்ளுபடி விலை: ரூ. 125.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com


இருள் இனிது ஒளி இனிது
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

108 திவ்ய தேச உலா - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

மொழி பிரிக்காத உணர்வு!
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
இருப்பு உள்ளது
ரூ.900.00
Buy

தூவானம்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy

வாழ்ந்தவர் கெட்டால்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

கடலுக்கு அப்பால்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

வினாக்களும் விடைகளும் - கண்டுபிடிப்பு களும் கண்டறிதல் களும்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

அம்பானி கோடிகளைக் குவித்த கதை
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

கங்காபுரிக் காவலன்
இருப்பு உள்ளது
ரூ.630.00
Buy

Great Failures Of The Extremely Successful
Stock Available
ரூ.270.00
Buy

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy

வினாக்களும் விடைகளும் - அறிவியல்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சிங்களன் முதல் சங்கரன் வரை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

புலன் மயக்கம் - தொகுதி - 2
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

திராவிடத்தால் எழுந்தோம்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

புத்ர
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ரிமிந்தகம்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

காலை எழுந்தவுடன் தவளை!
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy
தொளைத்தமணி முத்திலகு துய்யபணி பூட்டி
உளத்தினிமை யானவெல்லா மூட்டி வளர்த்தெடுத்த
காயங் கிடக்கவுயிர் காணாமற் போனதென்ன
மாயம் சிதம்பரதே வா. 6

தழைத்திடுசீ ராளன் தனைக்கறிக ளாக்கி
விழைத்தலினா லேபடைத்து மீள - அழைத்திடவே
காயங் கொடுநடந்து கண்காண வந்ததென்ன
மாயம் சிதம்பரதே வா. 7

மாறுபடு மாடகனை வல்லுகிரி னாற்கிழித்துக்
கூறுபடக் கொன்றுகடுங் கோபமாய் - வீறுபடும்
சீயம் தனையடக்கச் சிம்புள்வடி வானதென்ன
மாயம் சிதம்பரதே வா. 8

பங்கயமின் சேரும் பகீரதனென் பான்புரியும்
துங்கமிகு நற்றவத்தால் தோன்றவே - கங்கைநதி
தோயும் சடைக்கே சுவறக் கரந்ததென்ன
மாயம் சிதம்பரதே வா. 9

தன்றகப்ப னென்றுமொரு தன்மையுமி லாமறையோன்
என்றுசற்று நெஞ்சகத்தில் எண்ணாமல் - கொன்றவற்கு
நீயங் கவற்குரிய நீடுதந்தை யானதென்ன
மாயஞ் சிதம்பரதே வா. 10

சாதல் பிறவி தனிலிளைத்த நாயேற்குன்
பாத மலர்வீடு பாலிப்பாய் - நாத
முடிவே யழியா முழுமுதலே முத்தி
வடிவே சிதம்பரதே வா. 11

எப்போது நாயடியேன் இந்தவுடல் போடுவேன்
அப்போது முன்னின் றருளுவாய் - முப்போதும்
பொன்னாடர் வந்திறைஞ்சிப் போற்றும் கனகசபை
மன்னா சிதம்பரதே வா. 12

மோகக் கடல்கடந்து முத்திக் கரைகாண்கைக்
கேகப் புனைபெறுவ தெந்தநாள் - நாகப்
பணியே அணியும் பரஞ்சுடரே கண்ணின்
மணியே சிதம்பரதே வா. 13

தானவரும் மாலும் சதுமுகனும் மற்றுமுள்ள
வானவரும் தேடி மயங்கவே - ஞானமுடன்
நேயம் பெறுமடியார் நெஞ்சினுள்ளே நிற்பதென்ன
மாயம் சிதம்பரதே வா. 14

குலங்கடந்து முன்னைக் குணங்கடந்து பொல்லாச்
சலங்கடந்து தர்க்கங் கடந்து - மலங்கடந்து
நின்றார் கருத்திலுறை நித்தனே நீள்கனக
மன்றார் சிதம்பர தேவா. 15

அங்கப் பலுக்குவிலை அங்கனையார் அல்குல்மலப்
பங்கத் தழுந்துவதோ பாவியேன் - சங்கக்
குழையாய் பழையாய் குளிர்கருணை வெள்ள
மழையாய் சிதம்பர தேவா. 16

இன்றுன் பதங்ககண்டேன் ஈடேறி னேன்பிறந்தே
பொன்றும் துயரனைத்தும் போக்கினேன் - என்றும்
திரனே பரனே தெரிசனா முத்தி
வரனே சிதம்பரதே வா. 17

வஞ்சத் தமியேனின் வாய்த்தமலர்ச் சேவடிக்கே
நெஞ்சிற் கனிவாய் நினைந்திடேன் - பஞ்சாக்
கரனே யரனே கருதரிய முத்தி
வரனே சிதம்பரதே வா. 18

பச்சிலைக்கு நேரான பங்கயக்கண் மாலறியா
நிச்சயத்தைப் பாலிக்கும் நேசமாம் - இச்சை
தருவாய் உனைவணங்கச் சங்கரியோ டிங்கே
வருவாய் சிதம்பரதே வா. 19

வெந்நிட்டுத் தோற்றபடை வெல்லுமே யேதுமுனை
முன்னிட்டுக் கொண்டான் முடியுமே - நின்னிட்டம்
அல்லா ரறிவதனுக் கப்புறத்தே நின்றுவிட
வல்லாய் சிதம்பரதே வா. 20

பேறிளமை இன்பம் பிணிமூப்புச் சாக்காடென்
றாறினையும் மாற்றியெனை ஆளுவாய் - ஈறு முதல்
இல்லாப் பொருளினுமுண் டில்லையுமாய் நின்றுவிட
வல்லாய் சிதம்பரதே வா. 21

வன்பு செயுமறலி வந்தழைத்த போதமும்
அன்பும் உயிர்த்துணையே அல்லாமல் - இன்பம்
தருமோக மாதும் தமனியமும் கூட
வருமோ சிதம்பரதே வா. 22

ஆரணமும் போற்றி அளவிட் டறியாத
பூரணமெய்ஞ் ஞானநெறி போதிப்பாய் - நாரணனும்
காணா மலரடியைக் காட்டும் கனகசபை
வாணா சிதம்பரதே வா. 23

பொய்யென்று சொல்லாமல் பொல்லாப் புலாலுடம்பை
மெய்யென்று பேரிட்டார் வீணிலே -மையொன்று
கண்ணாள் ஒருபாகம் கைக்கொண்ட செம்பவள
வண்ணா சிதம்பரதே வா. 24

என்றுனது தில்லைநகர் எல்லைதனில் எய்துவேன்
என்றுனது முன்புமின் றேத்துவேன் - என்றுனது
பொன்னார் சபைகுறுகிப் போற்றுவேன் பூதியணி
மன்னா சிதம்பரதே வா. 25

சந்ததமும் நின் பாத தாமரையைச் சிந்தித்துச்
சந்ததமும் பாடவரம் தாகண்டாய் - சந்ததமும்
பன்னாக மும்புலியும் பார்த்துநிற்கக் கூத்தாடும்
மன்னா சிதம்பரதே வா. 26

நாடி யுனைப்பு காலம் நல்லோரை யும்பொதுவில்
ஆடி மகிழ்னையும் அல்லாமல் - கூடி
இணங்கேன் பிறரோ டினியொருதெய் வத்தை
வணங்கேன் சிதம்பரதே வா. 27

செற்றம் பகையாசை தீராத நாயேன்றன்
குற்றம் பொறுத்தடிமை கொள்ளுவாய் - நித்தம்
பரிந்தே நினைவார் பவப்பிகைக்கு வாய்த்த
மருந்தே சிதம்பரதே வா. 28

பற்றியயா வக்கடலுள் பாவமெனும் சம்பரனைச்
சுற்றிய காகம்போல் தோன்றினேன் - வெற்றியுற
முன்னாள் அவுணர்புரம் மூன்றும் சிரித்தெரித்த
மன்னா சிதம்பரதே வா. 29

விரித்த சபாடவியும் வெண்ணீறும் மெய்யும்
தரித்த சிலம்புரிரு தாளும் - சிரித்த
திருவாய் முகிழ்மலரும் தீவினையேன் காண
வருவாய் சிதம்பர தேவா. 30

மேதி யுடன்மீது வீறுந் தறுவாயில்
காதல் பெறுமடியேன் கண்காண- ஓதும்
குருமா னெயா கண்ட கோலமே கொண்டு
வருவாய் சிதம்பரதே வா. 31

துன்மதனுக் கின்பம் தொலையாக் கதிகொடுத்த
நன்மைதனைக் கண்டடியேன் நம்பினேன் - மன்மதனைக்
கண்ணால் எரிந்துவிழக் காய்ந்தருளும் செம்பவள
வண்ணா சிதம்பரதே வா. 32

அன்றுமா லானார்க் கரிதாகி நீயுலகில்
இன்றுமா லானார்க் கெளிதன்றோ- கொன்றைசேர்
பொன்னார் சடாமகுடப் புண்ணியா பொற்சபையின்
மன்னா சிதம்பரதே வா. 33

ஐயா உனையடியேன் ஐயா வெனவழைத்தால்
ஐயா வெனைநீ அழைகண்டாய் - மெய்யாம்
சரதா அனவரத தாண்டவா ஞான
வரதா சிதம்பரதே வா. 34

செஞ்சடையில் திங்கட் சிறுகுழவி சிந்துகின்ற
அஞ்சுதலைப் பாம்பினைக்கண் டஞ்சாத - கஞ்சமலர்த்
தாளா மலைபயந்த சங்கரிக்கு வாய்த்தமண
வாளா சிதம்பரதே வா. 35

தனக்குவமை இல்லாநின் தாளிணையைச் சேர்ந்தேன்
மனக்கவலை மாற்றினேன் வாழ்ந்தேன் - எனக்குலகில்
உன்னா விரந்துகொள்ள ஒன்றுமினிக் கண்டிலேன்
மன்னா சிதம்பரதே வா. 36

நேசமுடன் பல்கால் நினைந்துருகி நின்னுடைய
வாசமலர்த் தாளிணையை வாழ்த்தியே - பூசனையுஞ்
செய்வேன் எனக்கருளைச் செய்யாத போதுனையான்
வைவேன் சிதம்பரதே வா. 37

கறுத்த முழு நீலக் கடுமிடறன் பிள்ளை
அறுத்தகறி தன்னைவிருப் பானோன்- ஒறுத்தசிலைக்
கைவேள் வடிவழியக் காய்கண்ணன் என்றுனையான்
வைவேன் சிதம்பரதே வா. 38

தேரத் தெளியத் தெரிந்துன் றிருவருளைக்
சாரத் தவசித்தி தாகண்டாய் - மேருச்
சிலையால் புரமெரித்த சேவகா வெள்ளி
மலையா சிதம்பரதே வா. 39

என்பு தசைதோல் இவையால் எடுத்தவுடல்
வன்பு தருஞ்சுவையை மாசறுவாய்- அன்பர்
இனாத்தாய் பெரியோர் இனதுறையும் தில்லை
வனத்தாய் சிதம்பர தேவா. 40

வெள்ளை எருத்தின் மிசையே உனைக்காண
உள்ளி ஒருத்தி உருகுவாள் - தெள்ளி
அறிவால் அறியும் அரும்பொருளே செங்கை
மறியாய் சிதம்பர தேவா. 41

வெள்ளிமலை மீதே விளங்குஞ்செம் பொன்மலைமேற்
துள்ளுமெரு தேறிவந்து தோன்றுவாய் - உள்ளமுறப்
பன்னாள் நினைந்துருகிப் பாடுவார் பங்கிலுறை
மன்னாசிதம்பரதே வா. 42

காவென் றுனையடைர்ந்து கண்டுகொண்ட நாயேனை
வாவென் றருகழைத்து வாழ்விப்பாய் - சேவொன்று
மின்னாள் தவளவுரு வெள்ளிமலை மேலுறையும்
மன்னா சிதம்பரதே வா. 43

உறையும் பதியே துரைத்தருள வேண்டும்
நிறையந் தவத்தோர் நினைவோ - மறையின்
தலையோ கனகசபை தானோ கயிலை
மலையோ சிதம்பரதே வா. 44

வீடு புகுத வினையேற்கு வெம்பிறவிக்
காடு கடக்கநெறி காட்டுவாய் - தேடும்
விதியால் அறிவரிய வேணியா பாதி
மதியா சிதம்பரதே வா. 45

கண்ணுடையர் உன் கோலங் காணுஞ் சிவஞானக்
கண்ணுடையார் தாமன்றோ காணுங்கால் - மண்ணுலகுஞ்
சேணா டரும்புகழுந் தில்லைக் கனகசபை
வாணா சிதம்பரதே வா. 48

பெறுவானும் பேறுமுயர் பேரின்ப வீடும்
உறுவானும் உன்னையன்றி உண்டோ - மறவாமல்
எந்நாளுஞ் சொல்வார்இதயந் தனிலுறையும்
மன்னா சிதம்பரதே வா. 47

அறியும் அறிவாம் அரும்பொருளாம் உன்னை
அறியும் அறிவே தறியேன் - மறையின்
முடிவா முகுந்தனுக்கும் முண்டகற்கும் எட்டா
வடிவாஞ் சிதம்பரதே வா. 48

சும்மாடு கட்டிச் சுமந்துழலு வார்சிலரை
இம்மா நிலத்தினிலே எண்ணுங்கால் - அம்மா நின்
பொன்னார் அடிமுடியைப் போற்றாத பேரன்றோ
மன்னா சிதம்பரதே வா. 49

ஐந்து புலனும் அடையப் பொறிகலங்கி
முந்து வினைத்துயர மூடியே - சிந்தை
அறவே தளர்ந்தவத்தை ஆனாலும் உன்னை
மறவேன் சிதம்பரதே வா. 50

ஆன பெருந்துறையில் ஆயிரக்கான் மண்டபத்தின்
ஞான முனிவருடன் நண்ணியே - மோனம்
உறவே கருதி உனைப்புகழ்வேன் என்றும்
மறவேன் சிதம்பரதே வா. 51

மாத்திரைப்போ தாயினுநின் வாய்த்தமலர்ச் சேவடிக்கே
நேத்திரத்தை நெஞ்சில் நிறுத்தாமற் - சாத்திரத்தை
எல்லாம் அறிந்து பயன் ஏதுமினிக் கண்டிலேன்
வல்லாய் சிதம்பரதே வா. 52

செப்பையொத்த பூண்முலையார் சிங்கிதனி லேயகப்பட்
டிப்பிறப்பும் வீண்போகு தென்செய்வேன் - எப்பிறப்பும்
பெண்ணான் அலியாகும் பெற்றியா செம்பவள
வண்ணா சிதம்பரதே வா. 53

சேரின்ப மாகவுனைச் சிந்தைசெயும் இன்பம் போல்
ஓரின்பம் உண்டோ உணருங்கால் - பேரின்பத்
தேனே அமுதே திருவம் பலத்தாடு
வானே சிதம்பரதே வா. 54

மாதர் தமக்குருகும் மாப்போல நின்னுடைய
பாத மலர்க்குருகேன் பாவியேன் - வேத
முடிவே உரைக்கரிய மோனஉப தேச
வடிவே சிதம்பரதே வா. 55

அஞ்செழுத்தை ஓதாமல் அன்பாய் அனுதினமும்
நெஞ்சகத்திற் சற்று நினையாமல் - வஞ்சமுற்ற
இன்னா வினைப்பிறவி எப்படிப்போம் இப்புவிமேல்
மன்னா சிதம்பரதே வா. 56

இந்த வுலகத் தொழுந்தருளி என்னுடைய
சிந்தை குடிபுகுந்த தேசிகா - பந்தம்
அறவே கருணை அளித்தாண்ட உன்னை
மறவேன் சிதம்பரதே வா. 57

துன்ப நெறியைத் தொலைத்துச் சிவஞான
இன்ப நெறிதந் திரட்சிப்பாய்-அன்பர்
இனத்தாய் பெரியோர் இனிதுறையும் தில்லை
வனத்தாய் சிதம்பரதே வா. 58

வெத்தருடன் கூடும் வினையேன் எழுபிறப்பை
முத்தருடன் கூட்டி முனிகுவாய் - பத்தரிட
நேசா விசும்பவளவாய் நீளுங் கயிலாச
...சா சிதம்பரதே வா. 59

சத்தவித பாதாளம் தானுந் தரைவானும்
அத்தனையு மின்மேனி ஆனக்கால் - நித்தமிடப்
பொன்னார் சபையுனக்குப் போதுமோ பொற்புலியூர்
மன்னா சிதம்பரதே வா. 60

மோனமுற நின்பாத முண்டகத்தே தூங்குமொரு
ஞானவரம் என்றனக்கு நல்குவாய் - வானமுகில்
ஏழும் பயில்பொழில்சூழ் இன்பப் புலியூரில்
வாழுஞ் சிதம்பரதே வா. 61

ஒருத்தியுடன் சால உயர்ந்ததொரு வெள்ளை
எருத்தின்மிசை வந்தெனைவா என்பாய் - கருத்திசைய
உன்னுந் தவமுடையோர் உள்ளமே ஆலயமாம்
மன்னுஞ் சிதம்பரதே வா. 62

அளிக்குமொரு பல்கோடி அண்டாண்டம் எல்லாம்
விளிக்குமொரு மாத்திரையின் மீள - அளிக்குமொரு
சித்தா புலியூர்ச் சிவகாம சுந்தரிவா
மத்தா சிதம்பரதே வா. 63

தழைத்த திருப் பாற்கடலைச் சந்நிதிக்கே உள்ளங்
குழைத்தமுனி பாலகன்பால் கொள்ள - அழைத்துதவும்
அத்தா புலியூர் அமர்ந்தருளுங் கொன்றைத்தா
மத்தா சிதம்பரதே வா. 64

படுத்தமக மேருவுடன் பாம்புசிலை நாணாத்
தரித்தநெடு மாலே சரமாச் - சிரித்தருளி
ஒன்னார் புரமூன் றொருநொடியி லேயெரித்த
மன்னா சிதம்பரதே வா. 65

சற்குருவைப் போற்றாமற் சற்குருவைச் சாற்றாமல்
சற்குருவைச் சந்ததமுஞ் சாராமல் - சற்குருவை
நின்றா தரியாமல் நீள்பிறவி நீங்கிடுமோ
மன்றா சிதம்பரதே வா. 66

சங்கமத்தை நின்கோலந் தன்னைக் குருபாத
பங்கயத்தை நம்பாத பாவியேன் - பங்கிலுறை
இன்னாப் பிறவியொழித் தெப்படிஈ டேறுவேன்
மன்னா சிதம்பரதே வா. 67

எந்தவகை யாலுலகில் ஈடேறு வேன்அடியேன்
பந்தமற நின்பாதம் பற்றியே - சிந்தையுற
நாட்டேன் பலகாலும் நாமந் தனைத்துதிக்க
மாட்டேன் சிதம்பரதே வா. 68

குருபதத்தை நம்பிக் குறித்துருகுந் தொண்டர்
இருபதத்தை யான் பெறுவ தெந்நாள் - ஒரு பதத்தைத்
தூக்கா நடம்புரியுஞ் சோதியே தாயமறை
வாக்கா சிதம்பரதே வா. 69

தேடிப் பலகாலுஞ் சிந்தித் துனைப்புகழ்ந்து
பாடிப் பரவவரம் பாலிப்பாய்-நாடித்
தொழுவார் வினையைத் துணிக்குமொரு வென்றி
மழுவா சிதம்பரதே வா. 70

பன்றிவடி வாகிப் படியிடந்து மாலறியா
நன்றிபுனை தாளெனக்கு நல்குவாய் - வென்றிபுனை
ஆனேறு வந்தேறும் அத்தனே அண்டர் பெரு
மானே சிதம்பரதே வா. 71

அன்னைவயிற் றின்னம் அடையாமல் அம்புவிமேல்
என்னையினிக் கண்பார்த் திரட்சிப்பாய் - பொன்னிதழித்
தாமா சிவகாமித் தாயார் தமக்களித்த
வாமா சிதம்பரதே வா. 72

அண்டமுழு துந்தாக்கி அம்பரத்தி லேமிதித்த
புண்டரிகச் சீர்பாதம் போற்றிலேன் - கொண்டபடி
செப்பா யன திரண்டு சேவடியி லேதிலனை
வைப்பாய் சிதம்பரதே வா. 73

அனவரதங் கண்டடியேன் ஆதரித்துப் போற்றில்
அனவரதம் முன்னின் றருள்வாய் - அனவரதம்
பொன்னார் சபைக்கே புனித நடம்புரியும்
மன்னா சிதம்பரதே வா. 74

பொன்னான சேவடியைப் போற்றாமற் பாவியேன்
எந்நாளும் பாழுக் கிறைத்தேனே - மின்னாளும்
பாகா பிறப்பறுக்கும் பால்வெள்ளை நீறுபுனை
வாகா சிதம்பரதே வா. 75

மறையவரைத் தேசிகரை மாதவத்தோர் தம்மைக்
குறையமதிப் பாரையினிக் கொள்ளேன் - இறையிழித்
தாராய் திருநாமஞ் சாற்றுமடி யாரிடத்து
வாராய் சிதம்பரதே வா. 76

யானோர் பொருளாக என்றும் பழவடிமை
ஆனோ ருடன்கூட்டி ஆண்டவா - வானோர்
பலரா தரித்திறைஞ்சும் பங்கயப்பொற் பாத
மலரா சிதம்பரதே வா. 77

விழியிரண்டுந் துஞ்சி வெளுத்துடலுங் கூனி
மொழி தளர்ந்து கோலூன்று முன்னம் - பழிதவிர்ந்து
நின்னாமம் உச்சரிக்க நேயந் தரவேண்டும்
மன்னா சிதம்பரதே வா. 78

சிந்தை களிக்கத் தெரிசிக்கக் கண்ணினைவாய்
வந்தவடி வைப்புகழ்ந்து வாழ்த்தவே - என்றன்
கரந்தா மரைத்தாளைக் கற்பொடுபூ சிக்க
வரந்தா சிதம்பரதே வா. 79

ஒன்றோடுங் கூடா துனைக்கருத்தி லேகூடி
நின்றால் ஒழிந்துவினை நீங்குமே - மன்றா
பரதா சரதாப வானியிடப் பாகா
வரதா சிதம்பரதே வா. 80

என்றும் பெருந்துறையில் ஏழையேன் கண்காண
நின்றஞ் சிவலோக நித்தனே - என்றும்
தரையா னது தழைக்கத் தானுயர்ந்த வெள்ளி
வரையாய் சிதம்பரதே வா. 81

திருப்பா திருப்புலியூர்ச் சென்றடைந்து நின்னை
விருப்பாய் அடிவணங்க வேண்டுங் - கருப்புச்
சிலையான் தனையெரித்த சேவகா வெள்ளி
மலையாய் சிதம்பரதே வா. 82

ஓகைவந்த சோணகிரி ஓம்நமசி வாயகுரு
ஆகிவந்து நாயேனை ஆண்டவா - பாகுவந்த
சொல்லாள் உடனேயும் தோன்றிக் கருணை செய்ய
வல்லாய் சிதம்பரதே வா. 83

உனையடைந்து பாவியே னோகெட்டேன் ஐவர்
தனையடைந்து மாயத் தகுமோ - மனையடைந்து
முன்னாள் அறுபத்து மூவர்க்கு முன்னின்ற
மன்னா சிதம்பரதே வா. 84

வாவா சிதம்பரதே வாவாஎன அழைத்தால்
வாவா எனஅழைத்து வாழ்விப்பாய் - வாவா
குருவே உருவே குணங்குறிகள் இல்லா
வருவே சிதம்பரதே வா. 85

உண்டு துணையருணை யோநமசி வாயகுரு
மண்டு மறலிபடை வந்தாலுங் - கண்டு
வெருவேன் இனியுலகில் வெறொருதெய் வத்தை
மருவேன் சிதம்பரதே வா. 86

காம வெகுளியைக் கங்கடமை வேரறுத்துன்
நாம எழுத்தோதி நாள்தோறும் - சேம
நிதியாம் உனைக்காண நேயந்தா வேணி
மதியா சிதம்பரதேவா. 87

ஐந்துவித்துக் காமாதி அற்றுன் அடியிணைக்கே
சிந்தைவைத்து வாழும் திரமென்றோ-சுந்திரப்பொன்
தாளா மலையந்த சங்கரிக்கு வாய்த்தமண
வாளா சிதம்பரதே வா. 88

என்னநெறி சென்றாலும் என்ன நெறி நின்றாலும்
என்ன மொழி பேசி இருந்தாலும் - உன்னுடைய
தாளே நினைவேன் தரைமேல் இனிப்பிறந்து
மாளேன் சிதம்பரதே வா. 89

எடுத்தபிறப் பெல்லாம் எனக்கு வந்து தாய்மார்
கொடுத்தமுலைப் பாலனைத்துங் கூட்டில் - அடுத்தவிரற்
பன்னா கணைத்துயின்மால் பாலாழி யுஞ்சிறிதாம்
மன்னா சிதம்பரதே வா. 90

துய்ய திருநாமஞ் சொல்லித் தொழுதேத்தி
மையல் உறு வேனை வாவென்று - செய்ய
திருவாய் மலர்ந்தருளித் தேவியுடன் சேவில்
வருவாய் சிதம்பரதே வா. 91

பரிவாய்உனைப் புகழ்ந்து பாடுவார் பங்கில்
திரிவோம் எனவருளிச் செய்தாய் - குருவாய்
எனையாள் அருணகிரி எந்தாய் அமுதம்
அனையாய் சிதம்பரதே வா. 92

எந்த வடிவாய் எனைவந் திரட்சிப்பாய்
அந்தவடிவை அசையாமல் - சிந்தை
இணங்குந் தவமே எனக்களிப்பாய் வானோர்
வணங்குஞ் சிதம்பரதே வா. 93

அருண கிரிக்குகையில் ஐந்தெழுத்த னாகிச்
சரணமலர் தந்தருளிச் சார்வாய் - கருணை புரி
எந்தாய் புவிமேல் எனையோர் பொருளாக
வந்தாய் சிதம்பரதே வா. 94

நரம்புதிரந் தோலெலும்பு நாறுதசை மூளை
இரம்புவினை சுக்கிலத்தோ டேழுங் - குரம்பையுறு
காமந் தனிலடைத்துக் கண்கலக்கஞ் செய்ததென்ன
மாயஞ் சிதம்பரதே வா. 95

துன்னிமித்தஞ் செய்யினுநின் தொண்டருக்குத் தொல்லுலகில்
நன்னிமித்தம் ஆகுமே நாடுங்கால் - வன்னிமத்தம்
புன்னாகங் கொன்றைதும்பை பூளையெருக் குப்புனைந்த
மன்னா சிதம்பரதே வா. 96

சமையக் கவலை தனையொழித்துச் சிந்தை
சமையத் தவநெறி தந்தாள்வாய் - இமையக்
கொடிவாள் நுதல்பாகங் கொண்ட பரஞ் சோதி
வடிவா சிதம்பரதே வா. 97

நற்றியனைச் சிந்தையுற நாடுமடி யாருளத்தின்
மற்றுமொரு தெய்வ மதிப்பரோ- நெற்றிதனிற்
கண்ணா திருநீல கண்டா கனிபவள்
வண்ணா சிதம்பரதே வா. 98

பொன்றுந் தசையுடலம் போடுந் தறுவாயில்
அன்றுன் பதந்தந் தருளுவாய் - என்றுஞ்
சிரத்தா திருப்புலியூர்த் தேசிகா வெற்றி
வரத்தா சிதம்பரதே வா. 99

உரையிறந்த மெய்ஞ்ஞான உண்மையார் அன்றோ
கரையிறந்த பேரின்பங் காண்பார் - புரையிறந்த
வேதா கமப்பொருளே மெய்தா னொருபாதி
மாதா சிதம்பரதே வா. 100

சிதம்பர வெண்பா முற்றிற்று
சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode - PDF
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode - PDF
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode
ரேகா - Unicode

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி - Unicode

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF

ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
திருமால் வெண்பா - Unicode - PDF

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF
மதுரை மாலை - Unicode - PDF
அருணாசல அட்சரமாலை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF
சிவப்பிரகாசம் - Unicode - 

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF
சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF
சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF
சித்தாந்த சிகாமணி - Unicode - PDF
உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF
உபதேச வெண்பா - Unicode - PDF
அதிசய மாலை - Unicode - PDF
நமச்சிவாய மாலை - Unicode - PDF
நிட்டை விளக்கம் - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF
நல்லை வெண்பா - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF
முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF
கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
கடம்பர்கோயில் உலா - Unicode - PDF
திரு ஆனைக்கா உலா - Unicode - PDF
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF
திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF
திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF
அருணகிரி அந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
திருவிடைமருதூர் உலா - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
மேகவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF
சீகாழிக் கோவை - Unicode - PDF
பாண்டிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF
கதிரேச சதகம் - Unicode - PDF
கோகுல சதகம் - Unicode - PDF
வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF
அருணாசல சதகம் - Unicode - PDF
குருநாத சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode