![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்டலிங்க அபிடேக மாலை பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் பந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு பதினொருவர் மிளிர்பீடமேற் படியிலை யைவகைபி படுமீசர் தாநிதம் பத்திலெண் வித்தையிறைவர் சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா தாக்கியம் மூர்த்திவதனந் தட்டற்ற வட்டத்தி லொட்டற்ற சிற்சத்தி தாளுற்ற நாடுத்திலே நந்தலற வருகோள கந்திகழ் சிதம்பர நற்சிகையி னிற்சூனிய நட்டமற வமைகின்ற விட்டவடி வொடுநின்ற ஞானமய மோனநடுவோ டந்தமற முந்துபர மானந்த நீநந்த வபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 1 நாடரிய சத்தியோ சாதத்தும் வாமத்து நன்றா மகோரத்தினு நவையற்ற புருடத்து மாகமமொ ரவ்வைந்து நல்கியீ சானத்திலே பீடுதரு மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல் பெருமைபெறு மருமைவிதியிற் பேசரிய பூசைசிவ கோசரியெ னப்புரிதல் பெற்றிலேன் மற்றடியனேன் வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன் வேட்டொருவர் மாட்டருளினான் மீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின் வேண்டல்வேண் டாமையிலையா லாடுநின் பால்வேறு பாடொன்றி லாமையா லபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 2 நவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ நடுவுபிர மப்புழையெனு நல்லிடத் தகராதி கிரியாதி மனமுதல நண்ணிய மைம்மூவகை யிவற்றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர் வின்றிச்சி வாகாரமா யெதிருநன வுஞ்சோக மென்றுபா வித்தலுறு மென்கனவு ஞாதுருவொடே யுவப்பறிவு ஞேயமென வுற்றனுப வித்திடு மொண்சுழுத் தியுஞானமே யொளிர்துரிய முந்திளைத் துயர்சிவா னந்தநுகர் வுறுமதீ தமுமாகுநல் லவத்தைகள் கடந்தவற் றப்புறப் படுமமல னபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 3 ஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந் தோகைபெறு மன்றியுடைமை யுதவுறா வமையத்தி லுதவினுந் தன்னிடத் துள்ளதிற் பெரிதளிக்கும் பொருளதா யினுமதனி னினியதா யினுமவன் புந்திமகிழ் வுற்றிடுவனால் புனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு புண்ணியத் தெய்வநதிதான் மருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை மற்றென்முடி யிற்றெறிப்பின் வைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுநினை மக்கணினை வுற்றுய்ந்திட வருளினான் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந் தபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 4 கருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர் களம்வாழ்வு மேவவணிவாய் கடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி கதிர்போல வேயுநெடுமா லொருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற முடையார்மு னோடிவருவா யுலகத்தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை யுமைகாண வாடல்புரிவாய் மருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குதொழ மணவாள னாவியுதவா மயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ ழுந்துவர வருவாயெ னாமுனழையா வருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவர னபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 5 ஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு முயர்புரா தனசரிதமோ டொக்குநடை வருவிக்கு முவமையுந் தன்மகனை யொண்சுவத் திகமேற்றுபு சோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு சுவத்திகா ரோகணமுநூல் சொல்லிய விடங்களிற் றூயநீ றணிதருந் தொல்விபூ திப்பட்டமு மாகலச நீராட்டு கலசாபி டேகமு மருவுசிவ நோக்குவிக்கும் வயங்குலிங் காயதமு மன்னுசிவ லிங்கமுரு வனைசுவா யதமுமெனுமே ழாகுநெறி தான்மருவி யாகமிசை யிலகுமர னபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 6 போயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும் பொன்றுலகம் விட்டமலனார் பூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய பொன்பெண்மண் ணாசைநெறியிற் பாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப் பத்தாறு தத்துவமறப் பகுதியொடு ணர்த்துதத் துவமுமிறை யஞ்சனீ பாரென்னு மான்மிகமுமே மேயசடு லிங்கமுட னாறங்க மாகுமொரு மெய்யனுக் கிரகநிலையும் விமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு மிக்கசத் தியசுத்தமு மாயவெழு வகைநெறியி னாவியிடை யிலகுமர னபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 7 கிடைத்தசிவ லிங்கமன் றுணராத வேகாக் கிரசித்த மென்னும்விரதங் கெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குதவு கின்றவிந் திரியார்ப்பித முடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ னுண்மைகொ ளிலிங்கநிசமே யுயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி லொன்றாகி நின்றுபேதம் விடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு மிக்ககுரு வருள்புரியவே மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும் வேதமுடி யாவுமுணரா தடுத்தமன மொழியுடற் கப்புறப் படுமமல னபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யவிடேக மாடியருளே. 8 நல்லதில நெய்யாடி யானிடத் தைந்தாடி நவையிலை யமுதமாடி நல்குகா ரணகாரி யம்முறையி னன்றியே நறுநெய்பா றயிராடியே மெல்லமலர் மதுவாடி யின்கழைள் சாறாடி மென்பழச் சாறாடியே விழையுமிள நீராடி யாரக்கு ழம்பாடி விதியினமை நபனமாடி யொல்லைநகு வெண்டலைப் புழையினிடை யோடிநல் லுத்திகொடு பைத்ததலைய வுரகநுழை வுறவிளங் குழவிமதி யொருவுடை யொதுங்கவிட மின்றியசைய வல்லலற நிறைகங்கை யசையாது நிற்பைநீ யபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 9 நரர்கடமி னரசரவர் தமினினிய திவவியாழ் நண்ணுநர கந்தருவர்தா நவிலுமவர் தமினமர கந்தருவ றவர்தம்மி னாடரிய தேவரவரிற் சுரரதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன் சொன்முறையி னூறுமடிமேற் றுன்னுசுக மொருதிவலை யளவுமின் றாகமிகு சுகவேலை புகலீகுவாய் தரைமுதற் பூதங்கள் புத்திகுண தத்துவந் தகுதிபெறு பகுதிபுருட தத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலறு சமயரென வெமைவிடாம லருளினினை யடைதலுறு மரியபத மருளுமவ னபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே. 10 இட்டலிங்க அபிடேக மாலை முற்றிற்று |