![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்டலிங்க கைத்தல மாலை ஒருவிகற்ப எதுகைக் கலிநிலைத்துறை முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர் பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன் மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 1 அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயு முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன் பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற் கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 2 தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பா னுன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 3 தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தார மன்ன வார்வய லம்பல நமன்றமர் வராமற் கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 4 கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பா னுன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி மன்னு மோர்பவப் பிணிமருந் தௌ¤துவந் திருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 5 அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளாளன பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான் றன்னை நாடொறுங் கண்டுகண் களிப்பதாச் சார்தற் கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 6 அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன் மின்னு மாமழு வலமுடை வீரன்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 7 பன்னு மாமறை தமிழினாற் பாடுநம் பிக்குப் பொன்னு மாடையு மணிகளு மூர்தியும் பொருளு மின்னு மீபவ னருளினான் மேவிவீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 8 பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப முன்ன மோர்புணை யகப்படு முறைமைபோற் பிறப்பி னின்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 9 தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித்தரைமேன் மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமற் பொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் றிருப்ப வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 10 இட்டலிங்க கைத்தல மாலை முற்றிற்று |