சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்டலிங்க நிரஞ்சன மாலை கட்டளைக் கலித்துறை நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின் வருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றா யருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று தருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே. 1 குருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன் றருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி யொருவாது தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந் திருவாரு மென்கைத் தவிசிடை மேவுஞ் சிவலிங்கமே. 2 என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா துன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழ றன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ பொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே. 3
மென்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப் புன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியு மன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே. 4 அங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந் திங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல் கொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து பொங்கெரி வெந்நிர யத்தூ டிருப்பப் பொருந்துவதே. 5 சித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர் நித்த வநாதி சரணன் சரணனந் நிட்களத்தே யத்தனி மாலிங்க மாதியி னானயிக் காதிகளாய் மெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே. 6 கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி யொண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி வண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தி லண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே. 7 காயங் கரணநற் பாவ மறிபவன்¢காணறிவு ஞேயங்க ளாகி முதனடு வீறி னினக்கயலே யாயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ பாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே. 8 சத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி சித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய் மெத்தன் றிலங்குநின் னானந்த மேயென் விழிகளிப்பக் கைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே. 9 வான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே யான்குறித் தெய்தப் புகுமறி வின்க ணிருத்திகண்டாய் கூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவு மான்குறிக் குங்க ணுமைபங்கனே யென்கைம் மாணிக்கமே. 10 பிரமமுந் தானு மயலனெ¢ றருச்சிக்கும் பேதநிலை தருமம் மயலற நானாகி நின்றனை தான்சிவமென் றருமை வினையி லபேதம் புகாம லருச்சிக்குமா றிருமை வடிவுகொண் டுற்றாயெ னங்கை யிறையவனே. 11 கோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா ஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன் சீலங் கொளுமரு ளாசார மாதி திகழ்ந்துநிற்கு மூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே. 12 மண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல் விண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு நண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக் கண்ணுங் கருத்துங் கலந்துநின்றாயென் கைக்கண்ணுதலே. 13 நாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினாற் சோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ யாக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே பாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே. 14 ஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை சென்றிரண் டாகிப்பின் னொன்றாகி நிற்குஞ் சிவமொடங்க மென்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண் மின்றிரண் டாலன்ன மேனிய னேயென்கை வித்தகனே. 15 உறங்குது மென்றுறங் காநிற் பவரிலையோங் கொளியாய்ப் பிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகா ணிறங்குணி போல வெனைக்கொண்டு நின்ற நிலையினின்று புறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே. 16 குரவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு திருவிற் றிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கட் பொருவிற் புருவ மடமாதர் தம்மிடைப் போக்குறுமென் கருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே. 17 துயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன் றயிலினுங் காணினுங் கேட்பினும் வாழினு மல்லலொடு பயிலினுஞ் சோரினுந் தேறினு நீக்கினும் பற்றினும்பொய் குயிலினுஞ் சோம்பினு நிற்கட வேனென்கைக் கொற்றவனே. 18 ஓடுந் தனமும் புகழும் பழியு முயர்விழிவுங் கேடுந் திருவு மமுதமும் புற்கையுங் கேள்பகையும் வீடுங் குடிலு மகளீரு மன்னையும் வேறறவே நாடுங் கருத்து வருமோ வெனக்கென்கைந் நாயகமே. 19 பாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனு நாடு மளவினி னீயன்றி வேறிலை நான்முகன்மா றேடு மருமருந் தேயமு தேயிளந் திங்கண்முகிழ் சூடு மணிவிளக் கேகர பீடத்திற் றூயவனே. 20 செல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே யெல்லா முதவுநற் சித்தத் துறைகுவை யென்கையுள்ளாய் நல்லார் புகழ்தரு மாசார லிங்கமென் னாமமுற்றே. 21 பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ டொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே யழியா துயருநற் புத்தி யெனுங்கை யமர்வைகண்டாய் மொழியா வருங்குரு லிங்மென் றேயென்கை முன்னவனே. 22 விடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி யடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெய ருடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண் புடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே. 23 நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே புல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி செல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய் கல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே. 24 உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா தடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத் தொடர்ந்து நுகருநன் ஞானக் காத்திடை தோன்றுவைமால் கடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே. 25 யானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய் நீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவு மானா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய் வானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே. 26 உலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியா யிலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கௌ¤துகொலோ சிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார் விலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே. 27 ஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப நானந்து தீவிட யந்தேடிச் சென்றுண்டு நைந்தழிதல் வானந் தமுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந் தீநஞ் சருந்துத லன்றோ நிரஞ்சன சின்மயனே. 28 உருவஞ சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு மருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றா யருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க் கருவன் றுலகம் படைத்தாடுமென் கைக்கறைக் கண்டனே. 29 விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்று நற்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க வுள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன் றுள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே. 30 அழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள் பழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க் கழியும் படிநெடு நாணீத் தமுதங் கமருகுத்தேற் கொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே. 31 இட்டலிங்க நிரஞ்சன மாலை முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சுனிதா வில்லியம்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 132 எடை: 170 கிராம் வகைப்பாடு : வெற்றிக் கதைகள் ISBN: 978-93-82577-67-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வாழ்வது ஒரு முறை அந்த வாழ்வு உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கட்டுமே என்று துணியக் கூடியவர்கள் இந்தியப் பெண்களில் அதிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பிக்க வந்திருக்கிறார் சுனிதா. தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில் தான் இடர்கள் இல்லை? அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட இந்தியப் பெண்கள் ஏராளமாக முன் வருகிறார்கள். சுட்டிக் குழந்தையிலிருந்து சுனிதா வில்லியம்ஸாக மாறியது வரை இவரது வாழ்வின் அத்தனை தருணங்களும் ஆவலை ஊட்டுபவை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|