![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை கலிவிருத்தம் வேத மாகமம் வேறும் பலப்பல வோதி நாளு முளந்தடு மாறன்மின் சோதி காணிருள் போலத் தொலைந்திடுந் தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே. 1 புல்ல ராயினும் போதக ராயினுஞ் சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு நல்ல வாகு நவையென் றகற்றிய செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே. 2 நாக்கி னானு நயனங்க ளானுமிவ் வாக்கை யானு மருஞ்செவி யானுநம் மூக்கி னானு முயங்கிய தீவினை தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே. 3 சாந்தி ராயண மாதி தவத்தினான் வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப் போந்த பாகத மேனும் பொருக்கெனத் தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே. 4 வில்லி தென்ன விளங்குந் திருநுதல் வல்லி பங்கன் மலரடி காணிய கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ் செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே. 5 தீய நாளொடு கோளின் செயிர்தவு நோய கன்றிடு நூறெனக் கூறிய வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந் தீய தீருஞ் சிவசிவ வென்மினே. 6 வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின் றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே. 7 முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும் வந்த தீவினை மாற்றுவ னாதலாற் சிந்தை யோடு சிவசிவ வென்மினே. 8 நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வா னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார் நீச ரேயென் றியம்புறு நின்றுப தேச நூல்கள் சிவசிவ வென்மினே. 9 எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர் வண்ண மென்பதங் கிட்டி வணங்கவு முண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன் றிண்ண மீது சிவசிவ வென்மினே. 10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங் கொலைவேட னெனினும் பொல்லாப் பழிமருவு பதகனெனி னும்பதித னெனினுமிகப் பகரா நின்ற மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென் றொருமுறைதான் மொழியி லன்னோன் செழியநறு மலரடியின் றுகளன்றோ வெங்கள்குல தெய்வ மென்ப. 11 திருச்சிற்றம்பலம் சிவநாம மகிமை முற்றிற்று |