பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

பதினொன்றாந் திருமுறை

சேரமான் பெருமாள் நாயனார்

அருளிய

திருக்கைலாய ஞான உலா

கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அங்கண்
அருமால் உற;அழலாய் நின்ற - பெருமான் 1

பிறவாதே தோன்றினான்; காணாதே காண்பான்;
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் 2

ஆழாதே ஆழ்ந்தான்; அகலா(து) அகலியான்;
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல் 3

ஓதா துணர்ந்தான்; நுணுகாது நுண்ணியான்
யாதும்அணுகா துஅணுகியான்; - ஆதி 4

அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான்;
அரனாய் அழிப்பவனுந் தானே - பரனாய 5

தேவர் அறியாத தோற்றத்தான்; தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான்; - ஓவாதே 6

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்; - எவ்வுருவும் 7

தானேயாய் நின்றளிப்பான்; தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான்; - ஆனாத 8

சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப - ஆராய்ந்து 9

செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப - அங்கொருநாள் 10


Great Failures Of The Extremely Successful
Stock Available
ரூ.270.00
Buy

வெட்டுப்புலி
இருப்பு இல்லை
ரூ.220.00
Buy

ஆயிரம் சூரியப் பேரொளி
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

ஆறாம் திணை
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

கலிலியோ மண்டியிட வில்லை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

காதல் தேனீ
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

திசை ஒளி
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

உண்மைக்கு முன்னும் பின்னும்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

கால் முளைத்த கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

வாரன் பஃபட் : பணக் கடவுள்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

நிலம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

கொலையுதிர் காலம்
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

வெஜ் பேலியோ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சிங்களன் முதல் சங்கரன் வரை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

நிழல் இராணுவங்கள்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

வெக்கை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy
இறைவன் கோலம் கொள்ளல்

பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள் 11

ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில்சீர் 12

நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தாவ்13

வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள் 14

குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த 15

கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும் 16

சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா 17

மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்(கு)
அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய 18

ஆரம்அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன
வீரந் திருமார்பில் வில்இலக - ஏருடைய 19

எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் - கொண்டு 20

கடிசூத் திரம்புனைந்து, கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு - அடிநிலைமேல் 21

இறைவன் புறப்பாடு

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர் 22

எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாம்உணர்த்த - ஒண்ணிறத்த 23

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் - பொன்னியலும் 24

அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண் 25

நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏத்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் - தெருவெலாம் 26

வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர் 27

ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய 28

உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த 29

கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடைஇரட்டத் - தங்கிய 30

பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக 31

மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத்(து) உருமு முரசறையப் - போகம்சேர் 32

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான் 33

விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு - எண்ணார் 34

கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் - செருக்குடைய 35

சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத 36

அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் - மன்னிய 37

மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் - ஏல்வுடைய 38

சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான் 39

காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் 40

வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்தச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல் 41

மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய 42

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் - எச்சார்வும் 43

சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லிலயத் 44

தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 45

குடமுழவம் கொக்கரை, வீணை, குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் - இடவிய 46

மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு)இவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப, - ஒத்துடனே 47

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய 48

ஆறாம் இருதுவும், யோகும், அருந்தவமும்
மாறாத முத்திரையும், மந்திரமும், - ஈறார்ந்த 49

காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை 50

இமையோர் பெருமானே போற்றி! எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமைஆளும் 51

தீயாடி போற்றி! சிவனே அடிபோற்றி!
ஈசனே, எந்தாய், இறைபோற்றி! - தூயசீர்ச் 52

சங்கரனே போற்றி! சடாமகுடத் தாய்போற்றி!
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி! - அங்கொருநாள் 53

ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - தூய 54

மலைமேலாய் போற்றி! மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி! - நிலைபோற்றி 55

போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக, - ஏற்றுக் 56

கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் - கடிகமழும் 57

பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே 58

மகளிர் குழாங்கள்

வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்) 59

வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ(டு)
ஊனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா 60

வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய 61

மாட நடுவில் மலர்ஆர் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில் 62

சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும் 63

கூழைபின் தாழ, வளைஆர்ப்பக், கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் - சூழொளிய 64

கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழ்நற் 65

பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகைப்புனைந்து - பொற்புடைய 66

பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர் 67

சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின் 68

மேல்ஏறி நின்று தொழுவார்; துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் - நூலேறு 69

தாமமே தந்து சடாதாரி நல்கானேல்,
யாமமேல் எம்மை அடும்என்பார் - காமவேள் 70

ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார்; கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார்; - பூமன்னும் 71

பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார்; - முன்னம் 72

ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா தோடித்
தெருவம் புகுவார்; திகைப்பார்; - அருகிருந்த 73

கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார்; - அண்ணல்மேற் 74

கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார்; - ஒண்ணிறந்த 75

1. பேதை

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள்; - தீதில் 76

இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள்; நலஞ்சேர்
உடையாலும் உள்உருக்க கில்லாள்; - நடையாலும் 77

கௌவைநோய் காளையரைச் செய்யாள்; கதிர்முலைகள்
வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள்; - செவ்வன்நேர் 78

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்; - பூங்குழலும் 79

பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள்; - நாடோறும் 80

ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினளாஞ்சேயிழையாள் - நன்றாகத் 81

தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்தெடுத்துக் கோலஞ்சேர் 82

பந்தரில் பாவைகொண்(டு) ஆடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர் 83

ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் - தாய்சொல் 84

இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய 85

2. பெதும்பை

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் - சீரொளிய 86

தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டை,ஓர் செந்தொண்டை, - தூமருவு 87

முத்தம் முரிவெஞ் சிலை,சுட்டி, செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த 88

கங்கணம் சேர்ந்திலங்கு கையாள், கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழ்நல் 89

அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள், ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் - வந்து 90

திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள், - மடல்பட்ட 91

மாலை வளாய குழலாள், மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள், - சாலவும் 92

வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்(கு)
அஞ்சனத்தை யிட்டங்(கு) அழகாக்கி - எஞ்சா 93

மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணிஆர் வளைதோள்மேல் மின்ன - மணியார்ந்த 94

தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரவெழுதிக் - காமன் 95

கருப்புச் சிலையும் மலர்அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் - விருப்பூரும் 96

தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர 97

நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் - நன்றாகக் 98

கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட 99

3. மங்கை

மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய 100

அங்கை கமலம்; அடிகமலம்; மான்நோக்கி
கொங்கை கமலம்; முகம்கமலம் - பொங்கெழிலார் 101

இட்டிடையும் வஞ்சி; இரும்பணைத்தோள் வேய்எழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு - மட்டுவிரி 102

கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர் 103

வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள் 104

காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து, - மாதராள் 105

பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏவ்வைக்கண் - நற்கோட்டு 106

வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர் 107

தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான் 108

தார்நோக்கும் தன்தாரும் நோக்கும்; அவனுடைய
ஏர்நோக்கும்; தன்ன தெழில்நோக்கும்; - பேரருளான் 109

தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும்; அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண்நோக்காது 110

உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய 111

4. மடந்தை

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர் 112

ஈசன் சிலையும், எழில்வான் பவளமும்,
சேய்வலங்கை வேலும், திரள்முத்தும் - பாசிலைய 113

வஞ்சியும், வேயும், வளர்தா மரைமொட்டும்,
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப் 114

புருவமும், செவ்வாயும், கண்ணும் எயிறும்
உருவ நுகப்பும்மென் தோளும், - மருவினிய 115

கொங்கையும், வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள்; - ஒண்கேழல் 116

வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள்; - ஊழித் 117

திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய 118

முத்தாரம் கண்டத் தணிந்தாள்; அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்பெருகி - வித்தகத்தால் 119

கள்ளுங், கடாமுங், கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய 120

காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும் 121

தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்(கு) - ஒண்ணுதலாள் 122

தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து - மன்னும் 123

விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு - அடல்வல்ல 124

வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல 125

மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணிஏறு தோளானைக் கண்டாங்(கு) - அணியார்ந்த 126

கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள் 127

எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று - மெல்லவே 128

செல்ல லுறும்;சரணம் கம்பிக்கும்; தன்னுறுநோய்
சொல்லலுறும்; சொல்லி உடைசெறிக்கும்; - நல்லாகம் 129

காண லுறும்;கண்கள் நீர்மல்கும்; காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது; - பூணாகம் 130

புல்லலுறும் ‘அண்ணல்கை வாரான்’என் றிவ்வகையே
அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள் 131

தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி 132

5. அரிவை

செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழ்நல் 133

திங்களும், தாரகையும், வில்லும், செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் - பொங்கொளிசேர் 134

மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்ஆவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் 135

“இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்”பென்னும் - சொல்லாலே 136

அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர் 137

இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள்; - அடியிணைமேல் 138

பாடகம் கொண்டு பரிசமைத்தாள்; பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள்; - கேடில்சீர்ப் 139

பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள்; - பொன்னனாள் 140

இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் - முன்னமே 141

பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய 142

இன்னிசையும், இப்பிறப்பும், பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையையுங் கைவிட்டுப் - பொன்னனையீர் 143

இன்றன்றே காண்ப(து) எழில்நலங் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்(கு)என்று - சென்றவன்தன் 144

ஒண்களபம் ஆடும்; ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழ்நல் 145

கூந்தல் அவிழ்க்கும்; முடிக்கும் கலைதிருத்தும்;
சாந்தம் திமிரும் முலையார்க்கும் - பூந்துகிலைச் 146

சூழும்; அவிழ்க்கும்; தொழும்அழும் சோர்துயருற்(று)
ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழொளிய 147

அங்கை வளைதொழுது காத்தாள்; கலைகாவாள்;
நங்கை இவளும் நலம்தோற்றாள்; - அங்கொருத்தி 148

6. தெரிவை

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள்; - ஓரா 149

மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்தீர் புலரியே ஒப்பாள்; - அருளாலே 150

வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு)
ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்(து) 151

அந்தளிர்போற் சேவடியும், அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள்; - அந்தமில் 152

சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள்; - சீராரும் 153

கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள்; - வண்ணஞ்சேர் 154

மாந்தளிர் மேனி; முருக்கிதழ்வாய்; ஆதலால்,
வாய்ந்த இளவேனில் வண்மையாள்; - மாந்தர் 155

அறிவுடையீர் நின்மின்கள்; அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு - முறைமையால், 156

சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று - சீராலே 157

அந்துகிலும், மேகலையும், சூழ்ந்தாள்; அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே 158

பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர் 159

நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும் 160

காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும் 161

ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா - ளாகிப் 162

பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய வாகிக் - கலைகரந்(து) 163

உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் - தெள்ளொளிய 164

செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் 165

பொற்கவற்றின், வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகரும் 166

தோளான், நிலைபேறு, தோற்றம், கேடாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும், - கேளாய 167

நாணார் நடக்க; நலத்தார்க் கிடையில்லை;
ஏணார் ஒழிக; எழிலொழிக; - பேணும் 168

குலத்தார் அகன்றிடுக; குற்றத்தார் வம்மின்;
நலத்தீர் நினைமின்நீர் என்று - சொலற்கரிய 169

தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது - போவானேல், 170

கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாங்கு 171

7. பேரிளம்பெண்

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் - மண்ணின்மேல் 172

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று - பண்டையோர் 173

கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம் 174

அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் - எஞ்சாத 175

பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
வைத்தன போல வளர்ந்தே ந்தி - ஒத்துச் 176

சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்(கு)

அணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த 177

கொங்கையாள், கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
நங்கையாள், நாகிளவேய்த் தோளினாள்; - அங்கையால் 178

காந்தட் குலம்பழித்தாள்; காமவேள் காதலாள்;
சாந்தம் இலங்கும் அகலத்தாள்; - வாய்ந்துடனே 179

ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்தச் செழும்பவளம் - காய்ந்திலங்கு 180

முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து 181

வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய 182

தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த 183

குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப 184

யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள்; - மாசில்சீர்ப் 185

பாதாதி கேசம் பழிப்பிலாள்; பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள்; - மாதார்ந்த 186

பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழ்நல் 187

கண்அவனை அல்லாது காணா செவியவன(து)
எண்ணருஞ்சீர் அல்ல(து) இசைகேளா - அண்ணல் 188

கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் - றெழிலுடைய 189

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் 190

அரிஅரணஞ் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் 191

ஆடும் இறைவன், அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் 192

வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே 193

வந்தாய்; வளைகவர்ந்தாய்; மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று - நொந்தாள்போல் 194

கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் 195

பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி 196

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு. 197

காப்பு

பெண்ணீர்மை காமின்; பெருந்தோளி ணைகாமின்;
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

திருச்சிற்றம்பலம்

திருக்கைலாய ஞான உலா முற்றிற்று




சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்