இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 2.1. திருப்பூந்தராய் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 1 செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர் பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. 2.1.1 2 எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள் பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச் சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர் பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. 2.1.2 3 சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த் துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர் மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. 2.1.3 4 சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர் பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச் சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர் காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே. 2.1.4 5 பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த் துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர் வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. 2.1.5 6 மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம் போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச் சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர் காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே. 2.1.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 2.1.7 7 வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள் தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த் துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர் அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே. 2.1.8 8 வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம் புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச் சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர் கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே. 2.1.9 9 வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற் புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த் தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர் குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. 2.1.10 10 மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப் புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப் பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார் அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. 2.1.11 திருச்சிற்றம்பலம் 2.2. திருவலஞ்சுழி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 11 விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித் தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர் பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே. 2.2.1 12 பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும் வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர் ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே. 2.2.2 13 கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய் வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச் சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர் விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே. 2.2.3 14 கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச் சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர் நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே. 2.2.4 15 கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய் வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர் சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே. 2.2.5 16 பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர் வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர் ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே. 2.2.6 17 கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர் பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே. 2.2.7 18 தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம் வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக் கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர் ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே. 2.2.8 19 தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர் வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர் சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே. 2.2.9 20 உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள் வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப் பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர் சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே. 2.2.10 21 வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால் வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே. 2.2.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - காப்பகத்தீசுவரர் தேவி - மங்களநாயகியம்மை. 2.3 திருத்தெளிச்சேரி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 22 பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல் தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர் மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம் பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே. 2.3.1 23 விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர் வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே. 2.3.2 24 வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ் செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர் கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே. 2.3.3 25 காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந் தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர் ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே. 2.3.4 26 பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ் செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர் மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே. 2.3.5 27 தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற் றிவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர் குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே. 2.3.6 28 கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ் சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர் மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத் தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே. 2.3.7 29 கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர் சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர் வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை பத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே. 2.3.8 30 காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ் சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர் மால டித்தல மாமல ரான்முடி தேடியே ஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே. 2.3.9 31 மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர் செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர் வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள் தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே. 2.3.10 32 திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித் தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே. 2.3.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பார்வதீசுவரர் தேவி - சத்தியம்மாளம்மை 2.4 திருவான்மியூர் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 33 கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன் திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர் வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே. 2.4.1 34 சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ் சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச் சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர் அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே. 2.4.2 35 கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந் தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த் தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர் ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே. 2.4.3 36 மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச் செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர் துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர் வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே. 2.4.4 37 மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில் திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த் துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர் விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே. 2.4.5 38 போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந் தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச் சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர் மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே. 2.4.6 39 வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த் தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த் தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர் பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. 2.4.7 40 தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத் திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த் தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர் பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே. 2.4.8 41 பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால் திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர் சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர் எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே. 2.4.9 42 மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ் செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர் மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர் கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே. 2.4.10 43 மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர் ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல் நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே. 2.4.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - மருந்தீசுவரர் தேவி - சுந்தரமாது அல்லது சொக்கநாயகி 2.5 திருவனேகதங்காபதம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 44 நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல் ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம் பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 2.5.1 45 சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல் ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம் நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர் கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே. 2.5.2 46 செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர் அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங் கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே. 2.5.3 47 தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச் சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார் அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம் எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே. 2.5.4 48 பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய் உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல் அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம் இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே. 2.5.5 49 தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர் ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம் வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல் ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே. 2.5.6 50 வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங் குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள் ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம் மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே. 2.5.7 51 ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன் வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான் ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம் வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே. 2.5.8 52 கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய் எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல் அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம் நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே. 2.5.9 53 மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர் ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம் ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங் காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே. 2.5.10 54 தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன் அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ் சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே. 2.5.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் வடதேசத்திலுள்ளது. சுவாமி - அருள்மன்னர் தேவி - மனோன்மணியம்மை 2.6 திருவையாறு பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 55 கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர் ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார் பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 2.6.1 56 தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர் துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர் அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே. 2.6.2 57 கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம் ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே. 2.6.3 58 பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார் எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார் வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே. 2.6.4 59 வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார் தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே. 2.6.5 60 எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும் பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய் அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே. 2.6.6 61 ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ் சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான் வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய் ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே. 2.6.7 62 குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய் விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே. பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால் அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே. 2.6.8 63 உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன் வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார் கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான் அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே. 2.6.9 64 மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல் கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர் ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே. 2.6.10 65 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால் மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல மைகொள் கண்டத் தெண்டோ ள்முக் கணான்கழல் வாழ்த்தவே ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே. 2.6.11 66 பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக் கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன் ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய் மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே. 2.6.12 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - செம்பொன்சோதீசுரர். தேவி - அறம்வளர்த்தநாயகியம்மை. 2.7 திருவாஞ்சியம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 67 வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே. 2.7.1 68 கால காலர்கரி கானிடை மாநட மாடுவர் மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர் மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம் ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே. 2.7.2 69 மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய் நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர் தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார் பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே. 2.7.3 70 சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம் ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே. 2.7.4 71 கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல் தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர் செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத் தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே. 2.7.5 72 அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும் இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம் மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே. 2.7.6 73 விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார் பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத் தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே. 2.7.7 74 மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன் வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர் வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப் பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 2.7.8 75 செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும் நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத் தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே. 2.7.9 76 பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார் மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத் தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே. 2.7.10 77 தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத் தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால் நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ் ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே. 2.7.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வாஞ்சியநாதர் தேவி - வாழவந்தநாயகியம்மை 2.8 திருச்சிக்கல் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 78 வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள் வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே. 2.8.1 79 மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே. 2.8.2 80 நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள் வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான் பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே. 2.8.3 81 கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற் செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள் வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல் சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே. 2.8.4 82 மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள் வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே. 2.8.5 83 வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ் தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள் விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே. 2.8.6 84 முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத் துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான் செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே. 2.8.7 85 தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே. 2.8.8 86 மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங் கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ் சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான் பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே. 2.8.9 87 பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக் கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர் சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப் பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே. 2.8.10 88 கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல் செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச் சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே. 2.8.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - நவநீதநாதர் தேவி - வேனெடுங்கண்ணியம்மை 2.9 திருமழபாடி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 89 களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம் உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண் டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே. 2.9.1 90 காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள் ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான் பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின் வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே. 2.9.2 91 உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப் பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன் வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே. 2.9.3 92 பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல் வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன் வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே. 2.9.4 93 தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள் பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன் வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங் கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே. 2.9.5 94 தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன் பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான் வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப் புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே. 2.9.6 95 சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான் மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச் சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே. 2.9.7 96 இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன் வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே. 2.9.8 97 ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார் காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார் சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம் மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே. 2.9.9 98 கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும் நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும் மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே. 2.9.10 99 மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக் கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன் ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்.......உலகத்திலே. 2.9.11 இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன. திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வச்சிரத்தம்பேசுவரர் தேவி - அழகாம்பிகையம்மை 2.10 திருமங்கலக்குடி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 100 சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப் பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே. 2.10.1 101 பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே. 2.10.2 102 கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார் மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. 2.10.3 103 பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம் மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக் குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 2.10.4 104 ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர் மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. 2.10.5 105 தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள் வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக் கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார் ஊன மானவை போயறும் உய்யும் வகையதே. 2.10.6 106 வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. 2.10.7 107 பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப் புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர் மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. 2.10.8 108 ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன் மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. 2.10.9 109 மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர் பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச் செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. 2.10.10 110 மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன் சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல் முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. 2.10.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - புராணவரதேசுவரர் தேவி - மங்களநாயகியம்மை |
கல்கி கிருஷ்ணமூர்த்தி அலை ஓசை - PDF Download - Buy Book கள்வனின் காதலி - PDF Download சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book தியாக பூமி - PDF Download பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book பொய்மான் கரடு - PDF Download பொன்னியின் செல்வன் - PDF Download சோலைமலை இளவரசி - PDF Download மோகினித் தீவு - PDF Download மகுடபதி - PDF Download கல்கியின் சிறுகதைகள் (75) தீபம் நா. பார்த்தசாரதி ஆத்மாவின் ராகங்கள் - PDF Download கபாடபுரம் - PDF Download குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book நெற்றிக் கண் - PDF Download பாண்டிமாதேவி - PDF Download பிறந்த மண் - PDF Download - Buy Book பொன் விலங்கு - PDF Download ராணி மங்கம்மாள் - PDF Download சமுதாய வீதி - PDF Download சத்திய வெள்ளம் - PDF Download சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book துளசி மாடம் - PDF Download வஞ்சிமா நகரம் - PDF Download வெற்றி முழக்கம் - PDF Download அநுக்கிரகா - PDF Download மணிபல்லவம் - PDF Download நிசப்த சங்கீதம் - PDF Download நித்திலவல்லி - PDF Download பட்டுப்பூச்சி - PDF Download கற்சுவர்கள் - PDF Download - Buy Book சுலபா - PDF Download பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download அனிச்ச மலர் - PDF Download மூலக் கனல் - PDF Download பொய்ம் முகங்கள் - PDF Download தலைமுறை இடைவெளி நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) ராஜம் கிருஷ்ணன் கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book பாதையில் பதிந்த அடிகள் - PDF Download வனதேவியின் மைந்தர்கள் - PDF Download வேருக்கு நீர் - PDF Download கூட்டுக் குஞ்சுகள் - PDF Download சேற்றில் மனிதர்கள் - PDF Download புதிய சிறகுகள் பெண் குரல் - PDF Download உத்தர காண்டம் - PDF Download அலைவாய்க் கரையில் - PDF Download மாறி மாறிப் பின்னும் - PDF Download சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book கோடுகளும் கோலங்களும் - PDF Download மாணிக்கக் கங்கை - PDF Download ரேகா - PDF Download குறிஞ்சித் தேன் - PDF Download ரோஜா இதழ்கள் சு. சமுத்திரம் ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download வாடா மல்லி - PDF Download வளர்ப்பு மகள் - PDF Download வேரில் பழுத்த பலா - PDF Download சாமியாடிகள் மூட்டம் - PDF Download புதிய திரிபுரங்கள் - PDF Download புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108) மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) அறிஞர் அண்ணா ரங்கோன் ராதா - PDF Download பார்வதி, பி.ஏ. - PDF Download வெள்ளை மாளிகையில் அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) பாரதியார் குயில் பாட்டு கண்ணன் பாட்டு தேசிய கீதங்கள் விநாயகர் நான்மணிமாலை - PDF Download பாரதிதாசன் இருண்ட வீடு இளைஞர் இலக்கியம் அழகின் சிரிப்பு தமிழியக்கம் எதிர்பாராத முத்தம் மு.வரதராசனார் அகல் விளக்கு மு.வரதராசனார் சிறுகதைகள் (6) ந.பிச்சமூர்த்தி ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) லா.ச.ராமாமிருதம் அபிதா - PDF Download ப. சிங்காரம் புயலிலே ஒரு தோணி சங்கரராம் (டி.எல். நடேசன்) மண்ணாசை - PDF Download தொ.மு.சி. ரகுநாதன் பஞ்சும் பசியும் புயல் விந்தன் காதலும் கல்யாணமும் - PDF Download ஆர். சண்முகசுந்தரம் நாகம்மாள் - PDF Download பனித்துளி - PDF Download பூவும் பிஞ்சும் - PDF Download தனி வழி - PDF Download ரமணிசந்திரன் சாவி ஆப்பிள் பசி - PDF Download - Buy Book வாஷிங்டனில் திருமணம் - PDF Download விசிறி வாழை க. நா.சுப்ரமண்யம் பொய்த்தேவு சர்மாவின் உயில் கி.ரா.கோபாலன் மாலவல்லியின் தியாகம் - PDF Download மகாத்மா காந்தி சத்திய சோதன ய.லட்சுமிநாராயணன் பொன்னகர்ச் செல்வி - PDF Download பனசை கண்ணபிரான் மதுரையை மீட்ட சேதுபதி மாயாவி மதுராந்தகியின் காதல் - PDF Download வ. வேணுகோபாலன் மருதியின் காதல் கௌரிராஜன் அரசு கட்டில் - PDF Download - Buy Book மாமல்ல நாயகன் - PDF Download என்.தெய்வசிகாமணி தெய்வசிகாமணி சிறுகதைகள் கீதா தெய்வசிகாமணி சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புவன மோகினி - PDF Download ஜகம் புகழும் ஜகத்குரு விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுகள் கோ.சந்திரசேகரன் 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |