திருநெல்லையந்தாதி - Thirunellai Anthadhi - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




ஸ்ரீ சுப்பைய சுவாமிகள்

அருளிய

திருநெல்லையந்தாதி

விநாயகர் வணக்கம்

கட்டளைக்கலித்துறை

சீரச் சடமக தேவருந் தேடுந் தெருட்கரியே
யீரச் சடமுடி யெந்தைநின் றாடொழு தேத்திநின்பாற்
சேரச் சடமக மற்றகண் டானந்த சேதநமாய்
நேரச் சடமறு நெல்லையந் தாதி நிகழ்ந்திடுமே.

நூல்

சிதம்பர வாரியு றுந்திருக் காசியைச் சேரினுமென்
சிதம்பர வாசமு தற்பல வாலுமென் சேய்நினதாஞ்
சிதம்பர வாரிய னன்கரு ணீணெறி சேரினல்லாற்
சிதம்பர வாழ்வடை யும்பரி சேயிலை சீர்நெல்லையே. 1

நெல்லையென் னேர்திரு நாமந் தனைநித நெஞ்சினுற்றே,
யில்லையென் னாதினி தீவையென் றேநினை யிங்கடைந்தேன்,
கல்லையென் னோர்வறுந் தீயினைத் தீர்த்தினிக் காண்பரிய,
தில்லையென் னேர்தரச் செய் திடப் பேரருட் டேவியம்மே. 2

அம்மஞ் சருகர மாதங்க மீன்ற வரும்பிடியே
யம்மஞ் சருகுனைத் தீவனத் தேயக மாயடைவான்
கம்மஞ் கருகுண வாகியுன் றாடொழு கக்கடவேன்
பொம்மஞ் சருகலை யேகவெற் பார்த்துப் புரந்தருளே. 3

அருளட்ட மூர்த்தியு மாயநின் றாட்சில ரானநல்லார்,
பொருளட்ட மாநிதி யீயெனப் பேணிப் புகழுகிற்பார்,
தெருளட்ட மாகுணத் தேனையும் யானெனத் தேறுகிற்பா,
னிருளட்ட மேயெனக் கீதியென் பேனின்ன தின்னருளே. 4

இன்னம் பயிலன நாணவைப் பார்க்குள மேங்கலல்லா,
னின்னம் பயிலன நாரசச் சேவடி நேருகில்லே,
னென்னம் பயிலன னேகநல் லோருற வென்னசெய்வேன்,
மன்னம் பயிலனல் வேல்கொண்டெ னீள்பவ மாய்ப்பதென்றே. 5

என்றுன் படிதலை யின்றியொன் றாயெனை யேங்க வைக்கும்,
பொன்றுன் படியிக ழுந்தவத் தோர்புகழ் பூன்றவொன்றா,
நன்றுன் படிவம தாகுமத் யானத்தை நானடைவா,
னென்றுன் படிதொழு தேத்துமின் சீரடி யெண்ணுவனே. 6

எண்ணும் பரம்பர வின்புமொன் றோவெனு மின்பமன்றே,
நண்ணும் பரம்பருஞ் சாலியைக் காத்தநென் னாயகியைக்,
கண்ணும் பரம்பரைக் காதியைத் தேடிடக் காரைசெல்ல,
வெண்ணும் பரம்பரைச் சோதியைப் போற்றுவ னென்றுகண்டே. 7

கண்டருங் கரியவர்க் கக்கரு ணாயுனைக் கண்டதொண்ட,
ருண்டங் கரியவ ரிங்குமுத் தீசரென் னோதிடுவர்,
பண்டங் கரியவர் நேடியும் பார்க்கப் படாதவராங்,
கண்டங் கரியவர் போற்றுமெந் தாயெனுங் கார்நெலம்மே. 8

அம்மா தவத்தைய மின்றிநின் றார்க்கன்பை யாற் றகில்லா,
திம்மா தவத்தைய கோமன்னி யேயுழன் றின்னலுற்றுப்,
பொம்மா தவத்தைதம் முட்சித்த நித்தமிப் பொங்கருள்ளே,
சும்மா தவத்தைநன் றென்று ஞற் றாநிற்பல் சோதியுற்றே. 9

உற்ற வருக்கரு ளும்பரஞ் சோதியென் றொன்ற மன்றா,
டுற்ற வருக்கரு வைத்தருந் தேவருக் கோது செங்கே,
ழுற்ற வருக்கருங் காரனற் றாயுமை யுன்பதப்போ,
துற்ற வருக்க ருரைப்பதைக் கேட்டிங் குவக்க வையே. 10

உவக்குமந் தாகினி நின்னருட் சீர்த்திகண் டுள்ள மஞ்சத்,
திவக்குமந் தாரைதந் தோங்கிடுஞ் சோலையுட் சென்றுநன்று,
சிவக்குமந் தாளெனிச் சென்னியிற் சேர்க்குமத் திங்களுண்டோ,
பவக்குமந் தாகிநற் றீவ னத் தேவளர் பண்ணவியே. 11

பண்ணவ மாக நினைத்தினம் பாடவின் பாலளித்த
தண்ணவ மாகரு ணைக்கிணை யேயிலித் தாரணியி
லெண்ணவ மாகத் தினுந்தினந் தேடினு மில்லையில்லைத்
திண்ணவமாகழ னிக்கிறை வீயெங்கள் செல்வமுத்தே. 12

முத்தே வருந்தினந் தோத்திரம் பாடியெம் மூலமென்னுஞ்,
சித்தே வருந்தினன் றாதுகுஞ் சேவடி சேர்ப்பதென்றோ,
சத்தே வருந்தினன் றாயாச் சகத்தினைத் தந்தநல்ல,
வத்தே வருந்தினஞ் செய்வனைக் கான்றொளீர் வன்னியன்னே. 13

வனிவனம் பூவளி கம்மிய மானன் மதியிரவி
வனிவனம் போலவ ளென்றுநன் னான்மறை வாழ்த்துநன்ற,
வனிவனம் போகம தேகவத் தேவியை வாய்ப்பவுன்னி,
வனிவனம் போய்த்தவ மாற்றுவம் வாருநன் மாதவரே. 14

மாதவத் தேவந் துதித்திடுங் கீர்த்தி மரகதத்தை யோதவத்
தேவருங் காணுகில் லோமென்னு முண்மை தன்னைக்,
காதவத் தேயருட் டேசிகன் கூறுங் கதிவழித்தாய்த்,
தீதவத் தேசெலுந் தீயனுஞ் சேரத் திகழ்ந்ததின்றே. 15

இன்றென்றல் வீசுறுந் தீவனத் தேயுநெல் லீசியெற்கே,
நின்றென்ற னாடுறும் போதினற் றீதினு நெஞ்சகத்தே,
நன்றென்ற லாதியிந் நாமத்தி னோடுரு நாட்டமற்றிங்,
கென்றென்ற லாதிகட் கேகசித் தாவனிங்கேதமற்றே. 16

ஏதமற் றாலுல கைப்படைத் தாயுனை யென்றுமின்பா,
லேதமற் றாவறத் தோத்திரம் பாடவெற்கேயருள்வாய்,
சீதமற் றாதபத் தேசுமற் றேதவஞ்சேர்ந்திடுங்குன்,
றாதமற் றாரொடுங் கூடவைத் தேயென்னை யாண்டவன்னே. 17

ஆண்டவ ரென்புத் திரரிரண் டேயுனக் கன்றியம்மே,
யாண்டவ ரென்புத் திரருமுண் டாலங் கவர்பதத்தைப்,
பூண்டவர் தம்பதம் பூண்டவர் தொண்டனும் போற்றுகின்றேன்,
றாண்டவர் பங்குறுந் தாயே யுனதரு டாவெனக்கே. 18

எனக்கு மணியணி தேவனைக் கூடியிங் கீன்றதென்றே,
கனக்கு மணியணி மாதநென் னாயகி காயுகில்லேன்,
சினக்கு மணியணி யாலயஞ் சேவிக்க சென்றவென்றன்,
மனக்கு மணியணி யுன்பாதம் வந்து மருவுறினே. 19

மருவத் தினமன மங்கையர் கொங்கையை மாயுமன்றி
யருவத் தினமன மென்னவுண் ணேனந்த வந்தவந்தோ
வெருவத் தினமன மென்றதட் டாமுனம் வீசுமுன்ற
னுருவத் தினமன மன்னவன் னேயென்னை யூன்றவுன்னே. 20

ஊன்றற் கருகரி யாகியெல் லாவுல குக்குரியாய்
தோன்றற் கருநம வா கனச் சூரனைத் தூளெழுப்ப
லேன்றற் கரியெனு மென்னிருட் பாலிலென் றேவினவின்
வான்றற் குறுதுய ரீருமம் மேயென் வழங்குவையே. 21

வழங்குவென் றாலெனக் காரருட் சீர்த்தி வழங்கலெங்ஙன்,
றழங்குநின் றாளிணைத் தாமரைப் போதினைத் தாளுகில்லேன்,
கிழங்குதின் றாயினும் மாதவந்தேர்ந்து கிடக்குகில்லேன்,
முழங்குமன் றாடுநந் தேவனுக் கேற்றநன் முக்கணியே. 22

முக்கண் டவன்முர னாசக னான்முகன் மூலமென்னு
மக்கண் டவறற யானறிந் தேயுனை யம்மகமாய்
நெக்கண் டவமுய லாதிருந் தேன்றிரு நெல்லெனம்மே
திக்கண் டவரிசை சேரவன் றோபவஞ் சென்றதுவே. 23

அதுவண்ட மெண்டிக்கு மேவியிங் காமங்க மாவதற்காய்,
மதுவண்ட மண்டுன்பு தீர்தடத் தேயுள்ள மாசதற்று,
முதுவண்ட வந்தனைத் தேற்றுகில் லேன்முத்தி மோகமுற்றேன்,
புதுவண்ட மர்ந்தபைந் தாரணிந் தோங்குநெற் போதவன்னே. 24

போதந் தருதிரு நெல்லையம் பாள்பதம் போற்றுமின்காண்,
மாதந் தருதிரு தந்துவந் தாளுவண் மாநிலத்தீர்,
மாதந் தருதிரு பாவதித் தாய்மன்னு மாதவத்தாற்,
றீதந் தருதிரு மாறுசெய் வாளருட் சிந்துவன்றோ. 25

சிந்துவந் தாரையுங் காதிட்ட தீவிடந் தின்றுளங்க,
சிந்துவந் தாரையுங் காந்தளின் சீர்கரஞ் சேர்த்திமுத்தஞ்,
சிந்துவந் தாரையுங் காங்கயன் சீர்த்தியுஞ் செப்பிநிற்பல்,
சிந்துவந் தாரையுங் காதலிப் பாயருட்சீர்நெலம்மே. 26

மேம்பட் டவர்புகழ் வீரநற் சேகரன் மென்மலர்த்தா,
ணோம்பட் டவர்கழ லேதொழு வானரு ணோக்குஞற்றத்,
தேம்பட் டவரனு னக்களித் தேதுயர் தீர்கவென்னச்,
சேம்பட் டவருண வீயுமன் னேபதஞ் சேர்ந்தனனே. 27

தனதத்த தானவைங் கோசங்க ணீங்கிநற் றாரகமாந்,
தினதத்த தானவின் சோதியைத் தானெனச் சேர்ந்துமெல்ல,
மனதத்த தானதன் னானந்த மோனத்தின் மன்னிநிற்பா,
னுனதத்த தானநெற் றாயெனக் கேயன்றி யுண்டுகொல்லோ. 28

உண்டண்டம் யாவினு முட்புறம் பேநிறைந் தோங்குமொன்று,
கண்டண்டர் போற்றிடக் கூவினில் யாவருங் கண்களிப்ப,
வண்டண்ட கோதினம் பாடிடுஞ்சீர்த்தநல் வல்லபத்தே,
திண்டண்ட ராநின்ற கோவிலுட் டாயெனச் சேர்ந்ததன்றே. 29

சேருஞ் சிறப்பொடுங் கல்வியு ஞானஞ் சிறந்தவன்பாற்,
றேருஞ் சிறப்புறுஞ் செஞ்சடைத் தேவனுந்தேடுகின்ற,
வாருஞ் சிறப்பறச் சாலியம் பாள்பதக் கன்புமிக்காற்,
சாருஞ் சிறப்புறும் வேலையுற் றாழ்தலுஞ்சார்தலின்றே. 30

இன்றே யெனக்கரு ளீதியென் றோதுவ னின்னெலன்னே,
மன்றே யெனக்கு மதியெனத் தேய்ந்திடை வாடநல்குங்,
குன்றே யெனக்குய மும்மையம் மேயிக் குவலயத்தே,
நன்றே யெனக்குணம் யாவையுந் தீயனு நண்ணுதற்கே. 31

நண்ணும் பரம்பொரு ளென்றெனக் கேநல்கு நாயகிநீ,
யெண்ணும் பரம்பொரு வேல்விடந் தீயெம னென்னமன்னுங்,
கண்ணும் பரம்பொருப் பன்னவன் வார்முலைக் கட்டுமெட்டும்,
பண்ணும் பரம்பொருந் தீதின்றி யேபன்னு பார்ப்பதியே. 32

பதிதந்த தாமுக மாமறைக் கோடியிற் பார்க்கிலொன்றே,
விதிதந்த தாயிட வீரநற் சேகர வித்தகத்தோன்,
புதிதந்த தாமரைப் போதினைப் போற்றிப் புகழுகிற்பான்,
றதிதந்த தாயன முண்ணுமன் னேபுந்திதாதருக்கே. 33

தருதியம் பாநின்ப தாம்புய மாமலர் தந்துவிட்டாற்,
சுருதியம் பாவந்து நாவினிற் றோன்றிடுந் தோன்றிவிட்டால்,
விருதியம் பாநிற்ப னின்பெருங் கீர்த்தியை வீறியம்பிற்,
பொருதியம் பான்மன் மதன்றருந் தீயதும் போகு மன்றே. 34

ஏசும்ப ராதியைக் காதுநின் கீர்த்தியை யின்னெலன்னே,
பேசும்ப ராமுக னாயினும் பேரருட் பேணுவன்யான்,
வீசும்ப ராசக்தி வீரநற் சேகரன் வேண்டுகின்ற,
தூசும்ப ராதியர்க் கெட்டாத தென்சிரந் தோய்தலுண்டோ. 35

தோயத்து வந்துவந் தித்துநைந் தேத்திடுந் தூயநின்ற,
னேயத்து வந்துவந் தத்தென்னு நீண்மறை நேர்சொலிற்போற்,
றேயத்து வந்துவந் த்யானித்து த்யானித்துத் தேனெலன்னே,
காயத்து வந்துவந் தொன்றிடுந் தீதினைக் காதலென்றே. 36

காதனந் தானங் கதிர்த்திடுஞ் சீர்வன்னிக் கானகக்கே,
காதனந் தாதுனிச் சேருமின் கார்வயற் காத்தவன்னை,
யோதனந் தானமக் கட்செல்வம் யாவையு மோங்கவைப்பாள்,
சேதனந் தானென்னு மாதவர்க் கேற்றவின் செல்வியின்றே. 37

செல்வந் தலைதடு மாறுமென் றேயருந் தேவிநின்னைச்
செல்வந் தலைசமி தாவமன் மாதவர் செல்வமென்ப
ரல்வந் தலையல னையவைம் பாற்சுமை யம்மவஞ்சி
வில்வந் தலைமிலைச் சும்பரன்போற்றிடும் வேதமின்னே. 38

வேதந் தருமரும் வாயா யனுதினம் வேண்டுகின்றேன்
மாதந் தருமர னாரா யணனுடன் மாதவரு
மோதந் தருமது பாதரம் புயமுல ருன்னிமன்னத்
தாதந் தருமம தேகா தொழுகுதல் சாரவெற்கே. 39

சாரங்க மங்க மடையா துலகினிற் சஞ்சரித்தே
னாரங்க மங்க வரிவையர்த் தேடி யலறுகின்றேன்
சீரங்க மங்க மதுவாகி நின்றுந் தெளியுகில்லேன்
சீரங்க மங்க ளனுதங்கை யேபதஞ் சேர்தலென்றே. 40

சேரஞ்சு கஞ்சுவைத் தாடிடக் கேட்டுச் சிரஞ்சலிப்போய்,
காரஞ்சு கஞ்சுகத் தோலுடைத் தேவனைக் காதலிப்போய்,
நேரஞ்சு கஞ்செயச் செய்திடு நீதியென் னீதியென்னே,
யோரஞ்சு கஞ்சநல் லத்தனன் னேயிங்ங னோதெனக்கே. 41

ஓதங் கயற்க ணுயர்பிடி வேடமி னொண்ணிறைக்கு
மாதங் கயற்கு மருளல்கொல் லோதயை மாசனுக்குத்
தீதங் கயற்க ணகலவைத் தேவரு டேனெலன்னே
மீதங் கயற்கொர் சிரமொழித் தான்பணி மேகமின்னே. 42

மேகம் படிதரு பொங்கருட் சேர்ந்திட்ட மெய்த்தவர்க
ளேகம் படியென வெற்கிசைத் தாரதை யேகவிட்டே
மோகம் படிமிசை யுற்றுழன் றேன்முத்தி மோதமுண்டோ
மாகம் படியெழு நாவனத் தேமன்னு மாமணியே. 43

மாமுக னுக்கருந் தங்கையு மாகியம் மாசிலவைம்
மாமுக னுக்குயிர் நாயகி யாகியு மாவலற்கு
மாமுக னுக்கெழி லம்மையு மாயவிம் மாசொருவம்
மாமுக னுக்குற வாவதென் னேதிரு வாய்மலரே. 44

மலருங் கமலமு மங்கைய ரங்கையும் வாதுசெய்யு
மலருங் குழலொடு பாசியுந் தேனுறு மந்தடத்தே
பலருங் குறையற வேய்நெல்லை நாயகி பாதநித்த
முலருங் கடுவினை யாதவி னோதுமி னோர்ந்துணர்ந்தே. 45

உணரவ ரும்பொருள் யாவையு முள்ளத் றுதித்ததென்றே
தணரவ ரும்பரந் தானாகி நின்று தவமியற்ற
வணரவ ருந்தலை மாலையற் காய்வயல் வாங்கியன்று
கொணரவ ருந்திய தாயே யருளைக் கொடுவெனக்கே. 46

கொடுமன வன்பிணி யைக்கடந் தோர்வந்று கோதறமே,
விடுமன வன்புக ழும்பதத் தோய்பதம் வேண்டினனீ,
யிடுமன வன்புமிக் காருக்கு மேர்பயனேற்பவர்க்கும்,
வடுமன வன்புரி யாருக்கு மீந்தருள் வாமமின்னே. 47

வாமஞ் சரிதிரு நெற்றங்கை யேதினம் வந்துவந்துன்
றாமஞ் சரிதர வெற்களிப் பான்றயை தானியற்றாய்
பூமஞ் சரியெரி யுற்றெனப் பூவையர் போகமுற்றே
யேமஞ் சரியெனை யாளலன் றோவளிக் கேற்றதம்மே. 48

ஏற்றங் கொடியுடை நாதனைப் பாதியி லேற்ற நெல்லாய்,
காற்றங் கொடியிடை நாரியர்க் கூடிடக் காதலித்தேன்,
கூற்றங் கொடியிட லாமுன்ன மேனுமுன் கோமளத்தாள்,
போற்றங் கொடியிடு நாரெனச் சார்ந்தகம் போக்கலென்றே. 49

போக்கு வரவரு பூரண வுன்னைநற் புந்தியுள்ளே
யாக்கு வரவரை யஞ்சலென் றேயரு ளந்நெலன்னே
நோக்கு வரவறி வேயக மாயுற நோக்குதற்காய்
நீக்கு வரவரி நீள்விழி யீமய னின்மலியே. 50

மலிதந்த செல்வநற் சீர்வல்ல பத்தினின் மன்னெலன்னே,
பொலிதந்த மொன்றுடைத் தேவனைப் போற்றிடப் புந்திதந்தா,
ளலிதந்த ருன்பதங் குஞ்சியிற் கொஞ்சவெற் காக்கலென்றோ,
பலிதந்த வந்தரும் பாடலன் றாதலிற் பாலிநன்றே. 51

பாலிக்கு மண்ணலின் றங்கையென் றாயினும் பானிறக்க,
பாலிக்கு மண்டலிக் கங்கணர்க் கன்புற்ற பாட்டிபிட்டுக்,
கூலிக்கு மண்சுமந் தாருக்கு மாலையைக் கூட்டியன்றோ,
சேலிக்கு மண்டிடுஞ் செய்யினைக் காத்திடச் சென்றதன்றே. 52

சென்றுஞ் சிறுமியர் மாயைதன் னூடனந் தேடிநைந்தும்,
பொன்றுஞ் சிறையுறு மென்மனந் தீதிதுபோதமுற்று,
நன்றுஞ் சிறையளி பாடிடும் பாதத்தை நண்ணவெண்ணி,
யென்றுஞ் சிடவரு ளெற்களிப் பாயெங்க ளேர்நெலம்மே. 53

ஏரந் தகனென யானிருந் தேயுமிங் கேநரர்க்கே
யோரந் தகனவின் யோகொன்றை யோதுவ னோதனக்காய்க்
காரந் தகனனை யாவருந் தேடிடுங் கற்பகத்தைத்
தாரந் தகனல வாலிங்க னம்புரி தாயருளே. 54

அருளுங் குருபரம் போதினுக் காளென்ன வாடலல்லாற்
றெருளுங் குருபரம் பத்தியுந் தீனனுந் தேடுகில்லே
னுருளுங் குருபரம் பைத்தடம் பாம்பிறும்பும்மருட்டு
மிருளுங் குருபரம் பற்றிட னாயினுக்கென்று கொல்லோ. 55

கொல்லமர் வந்துறி னுங்கலங் காதவக் கோவசியை
நல்லம யத்தினி லேயொழித் தோன்றிரு நாயகியைப்
புல்லம ணைப்பொரு மைந்தனை யீந்தவிப் பொற்கொடியை
யல்லம றும்படி பாடுமி னேடுமி னாரியரே. 56

ஆரிய மாமதி யார்தமி ழாமணி மாதியுமாம்
வீரிய மாமதி யாமுழ னோயறும் வீரிநெல்லை
சீரிய மாமதி தீரவி நோக்கெனச் சேகரித்த
காரிய மாமதி தேனளி மாநகர் காணுமினே. 57

மின்னே யனையநின் மேனியின் மேலிரு மேருவந்தே,
யென்னே யிருந்த தெனவிறை யேசவு மின்புறுசீ,
ரன்னே யுனதிரு பாதங்கள் பாடிமிக் கன்புசெய்யேன்,
கொன்னே கழிந்தது காலமிக் கோலமென் கோநெல்லையே. 58

கோகன கத்துறை செல்விய ரேத்துநெற் கோமளமே
பாகன கத்திய பத்திய மீதவர் பாலினிற்பக்
கோகன கத்தென பாடலு நீசெவி கோடனன்றே
யேகன கத்திறை வீம தலைத்தமி ழின்பமன்றோ. 59

இன்பம் புலினுனி நீரெனத் தேரினு மிங்கிவற்றிற்
றுன்பம் பினுகினு மேமனந் தூசுறு துத்தமெத்து
மென்பம் பினினனி தேனென நாடலி லேங்குமம்மே
பொன்பம் புரையறு பாதம தோதிமைப் போழ்தலென்றே. 60

போழும வித்தையைப் போழ்ந்தெறிந் தேசுத போதனர்க,
ளாழும வித்தையை நன்கடைந் தேதுய ரச்சமற்றா,
ரேழும வித்தையை யேபொய்யை யேயுன்னி யேக்கமுற்றேன்,
பாழும வித்தையைந் தீரைந்து மேகநிற் பற்றவுன்னே. 61

பற்றற் றவர்பணி யும்பரை யேயுனைப் பற்றிநிற்றல்
வற்றற் றவமுயல் காயமைங் கோசத்தை வாரியெற்றல்
கற்றற் றவரற நூறம்மை யேயன்றிக் கார்நெலம்மே
மற்றற் றவறினை மாற்றிவைப் பாயிந்த மாசனுக்கே. 62

மாசுட லந்தெரி யாவண மாசுச மாதிமன்னி
யாசுட லந்தனி னின்பினைச் சார்ந்தன ராசதற்றோ
ராசுட லந்தன னென்பெருந் தீமன மந்நெலன்னே
தேசுட லந்தனி யின்பசிந் தாடநிற் றேடலென்றே. 63

தேடத் திரிதரு மைந்தனன் றோதலைத் தேருகில்லா,
தோடத் திரிதரு வென்னநின் றேயுருத் தோற்றமித்தைக்,
கூடத் திரிதரு மென்னைநின் னாக்கிடக் கோறவுன்னுந்,
தோடத் திரிதரு ணந்தனைக் கூறுநெற் றூயவன்னே. 64

தூய்மையும் வாய்மையுஞ் சேய்மையெற் காமெனிச் சொன்னெலன்னே,
சேய்மையென்றாயிடச் செய்துவெங் காதலைச் சேர்சகத்தே,
மாய்மையற் றூற்றிவற்றதசித் தேவடி வாகியென்றுந்,
தோய்மையற் றாயருந் தாயுனைப் பாடலித் தொண்டனென்றே. 65

தொண்ட ரனுதினந் தோத்தரித் தேத்திடத் தோழனுற்ற
கண்ட மனையநற் கோவிலுட் சார்தத்தை கண்டுசொல்வீ,
ரண்ட மளவிடு பைந்தத்தை காளடி யன்குறையைத்,
தெண்ட முறுகுறை தீர்ப்பதன் றோபயன் றீஞ்சொலுக்கே. 66

கேத மதமனுக் கற்றலொன் றோபயன் கேள்சுகங்காள்
போத மதமனு மின்றவர்க் காநெல்லை பூவினுற்றான்
மாத மதமனு மன்றொட்டி டாப்பல மாந்துதற்கோ
சீத மதமனு முங்களுக் கேதருஞ் செல்லுமினே. 67

செல்ல லொடுபிறப் பார்தலைச் சீயெனச் செப்புகிற்பார்,
செல்ல லனையசிங் காரவைம் பாலுடைத் தேவிநின்சீர்,
சொல்ல லுறுமரும் பாடலைப் பாடிடத் தோமனுற்றா,
லல்ல லதுவல வென்றனக் கேயரு ளந்நெல ன்னே. 68

அன்னமன் னாளை யருநெல்லை யீசியை யார்வமிக்கே,
யுன்னமன் னாமன் ஞமலியைப் போற்றிரிந் துண்டணைப்பா,
னன்னமன் னாரி யவர்தமைத் தேடிவெட் கற்றலைந்தாய்,
கொன்னமன் னாடி லெதுசெய்வை யோவுளக் கோகிலமே. 69

கோகில மேககண் ணாரைவிட் டேகலிற் கூட்டினின்று
மாகில மாயைதற் காரியத் தேயிருந் தஞ்சியஞ்சி
மாகில மாகிநின் றாற்றுகில் லேமினி மாசதில்லாப்
பாகில மேதரு வானெல்லை யாள்பதம் பாடுவமே. 70

பாடுவர் சிங்கள நீலியை மீயிடைப் பாவைதன்னை
வேடுவர் சிங்கரி மாமியை நெல்லையை வேதவைப்பை
யீடுவர் சிங்கநல் வாகனி யாகிய வீசிதன்னைத்
தேடுவர் சிங்கலி லாதவர் யாமினந் தேடிலமே. 71

இலமே யிருந்தறஞ் செய்யுகில் லேன்றுற வேய்ந்துமிக்க,
நலமே புரிந்தில னல்லது வல்லலின் ஞானியல்லேன்,
மலமே யுறைதரு மாகத்தை யானென்ன மாயுகிற்பே,
னெலமே தயையொடு மாரமு தீதியிந் நீசனுக்கே. 72

நீசம டந்தைய ராசையற் றேதிரு நெல்லெனம்மே
கோசம டந்தவி ரக்கொற்ற வாளிறை கோவினல்லூர்
வாசம டந்தனி லுற்றவின் வீரவண் மாதவர்க்கே
நேசம டந்துநி தந்தொண்டு யான்செய்ய நேரவையே. 73

நேரங் கடத்தி யிடலென்கொ லோவரு ணெல்லெனம்மே
காரங் கடத்தி னுலவுநற் சீர்வன்னிக் கான்மயிலே
பாரங் கடத்தி லகமென்ன னீக்கிப் பரம்பரமா
யாரங் கடத்தி னிடமதற் றாலென்ன வாக்குதற்கே. 74

ஆக்கற் கரிதுகொ லென்னையு நின்னுரு வந்நெலன்னே
வீக்கற் கரியென வாகத்தை யான்கண்டு வீடுதற்குப்
போக்கற் கரியெனு மாயையின் மாதுயர் போக்குதற்கு
மாக்கற் கரியுண விக்களித் தோன்மனை மாறங்கையே. 75

தங்க விலங்கலை யங்கரந் தாங்கிய தாணுதன்னி
னங்க விலங்கலை யாதுறு சாலிநல் லாரமுதே
பங்க விலங்கலை யொத்தெளி யேன்படும் பாடறிவாய்
பங்க விலங்கலை யேலலொப் பாயெனைப் பண்ணலென்றே. 76

பண்ணப்ப டாநெற் பரஞ்சுட ரேதினம் பாடிநைந்தே,
கண்ணப்ப தாறென நின்றுன்னை நாயனுங்கண்டுகொள்ள,
விண்ணப்ப மானதிங் கொன்றுண் டுனதிடம் வேண்டுகின்ற,
கண்ணப்ப னாருறு மன்பெனக் கேதந்து காத்திடலே. 77

காத்தா யாதன மாதென்ன வேநின்று கார்வயற்பாற்
பூத்தா யுலகினை வாள்கள வாணியின் போகமுற்றே
தீத்தா யெனவுமுன் றன்னையின் றேசுவன் றீயனைநீ
யேத்தா யெனினுயர் முத்தியி லேமலை யீதிருவே. 78

திருவருந் தித்தனி யேதவ மாற்றிடச் செங்கமலந்
தருவருந் திம்மர்க ளாமைவென் னேறியுந் தாண்டுகின்ற
மருவருந் தித்தி மதுநதிப் பான்முந்தி வந்துதிக்கு
மொருவருந் திக்கி னெலைநகர்ப் பாடிட வொண்ணலின்றே. 79

ஒண்ணக் கமலமி வாவி சிவத்துறு மொப்பினுக்கென்,
றெண்ணக் கமலமு னக்கெனத் தேற்றுவ ரேய்வனத்தே,
யெண்ணக் கமலம தென்னவுற் றார்க்குற்ற வேர்நெலையாள்,
வண்ணக் கமலம துக்குடித் தாடுமென் வண்டுளமே. 80

வண்டுண் டயர்தரு தேனதிப் பான்மதி மான்வனத்தே,
யண்டுண் டமதுடை யானருந் தாய்நெல்லை யாள்பதத்தின்,
றொண்டுண் டுயர்பத மீவதற் கேயெனத் தூயவர்க்கு,
டுண்டுண் டுடுடென வேதங்க ளோதித் துலக்குமன்றே. 81

துலக்கு மரியினைத் தீனெனத் தாவிடுந் தூய்குலத்தே
கலக்கு மரிசெறி தீவனத் தேவந்ந்து கண்டவின்றே
நெலக்கு மரிவள தாமரைப் பாதத்தை நேரிலன்பால்
விலக்கு மரிசனி தந்தெழு நாவினில் வெந்ததென்னே. 82

வெந்தண லிற்பல யாகம தாற்றிடும் வீரவண்மை
யந்தணர் வந்தனை செய்பதத் தாய்பத மார்ந்தவெற்கோ
ரந்தண ரும்பொரு ளீதரி னாருனை யாவெறுப்பா
ரந்தண ரம்பிர மன்புரி யார்வனிக் காரமுதே. 83

தேனே யனையது நின்றிருச் சீர்த்தியென் றேவிளக்கித்
தானே யனைமது வாறுதிக் கூடுநற் றாவிவிம்மு
மானே யனையினி வேய்தரப் போற்றிடி னஞ்சுகங்கை
மானே யனைவிழி யோதியுன் றாள்வந்து மன்னுமின்றே. 84

மன்னன் றனுவணி சோர்வழித் தாய்மகிழ் மாறளைச்செம்,
பொன்னன் றனுவணி நாயகன் போற்பதம் போற்றவையா,
தின்னன் றனுவணிக் கோரிடங் காரையிற் கேகியில்லீ,
கன்னன் றனுவணி னிங்குறச் சேர்த்தெனைக் காத்தனையே. 85

தனையரு ளற்புத நெற்பரை யேயுனைத் தாழ்ந்துநின்ற
தனையரு ளற்பல மெய்ப்படு மாசது தாவினங்க
தனையரு ளற்பமி தொப்புற றாய்கடன் றானறிந்தென்
றனையரு ளற்புடன் முப்பொழு தேயுறத் தாயருணீ. 86

நீமுத் தனமுற வேநிகழ்ந் தாய்திரு நெல்லெனம்மே
யாமுத் தனவிரு மைந்தருக் கூட்டிட வாமிரண்டு
மீமுத் தனுமிவ னென்றுல கேத்திட வென்றனுக்கொன்
றோமுத் தமியுன தாட்பணிந்தேனுள்ள மோடுநின்றே. 87

ஓடரி தங்கம தொப்புறக் காண்கின்ற வொண்ட வத்தோ,
ரூடரி தங்குற னாயனு மோயென வோவு ரைப்பா,
ராடரி தங்குர லார்தடத் தாயரு ளாரழற் பேர்க்,
காடரி தங்கம ழுங்கிளி யேயளிக் கார்கடலே. 88

காரித் துலைதுடை கீணடைப் பானின்ற காமியனும்
வாரித் துவரித ணெல்லையம் மேபதம் வந்தடைந்தேன்
றேரித் துரிசற வாழவைப் பாயெனிற் றேட்டமற்றே
பூரித் துறுபுர ணத்தின்ப மாவனற் போதமுற்றே. 89

போதந் திரமுற வோர்வடி வாகியிப் பூவிலுத்
தீதந் திரமம தேகருள் வீரநற் சேகரன்பொற்
பாதந் திரணன மாதினம் போற்றிடப் பாதிகொற்றன்
மோதந் திரளுற வீயுநெல் லாயருண் மூடனுக்கே. 90

மூடத் தனமற லேற்றுவப் போடழன் மோசனஞ்செய்,
தாடத் தனமார் பேணெல்லை நாயகி யார்பதத்தைத்,
தேடத தனமனை யாதிய வாவ்றத் தேடுகில்லாய்,
கூடத் தனமல வீசன தாம்வித்தை கோடலென்றே. 91

கோடந் திடுமுட லைக்குறி யாநின்று கோகனகம்
வாடந் தியினினும் வாடிநைந் தேனெனை வாடலென்றே,
தாடந் திகழ்தர வென்மனத் தேதந்த சாலியின்னை
யோடந் தினகர னுண்ணுழை யாவன மோதுமினேன். 92

ஓதும் பலமிலை யேசிவை யாவையு மோதலற்றே
வாதும் பலமிலை யென்றொழித் தேவ்ன்னி மாவனத்திற்
போதும் பலமிலை கொண்டெழுந் தீயினைப் போக்கி நென்னன்,
மாதும் பலமிலை பலமிலை யீபதக் காந்தவ மன்னவுன்னே. 93

உன்னதி வந்துற வேட்டலொன் றேயன்றி யுற்றதற்கா,
மன்னதி வந்தில னாவதெவ் வாறினி யால்முண்டோன்,
மன்னதி வந்தனை செய்பதத் தாய்வன்னி மாவனத்தா,
யென்னதி வ்ந்தரை யாதியி லென்றெண வெற்கருளே. 94

எற்கரு ளெற்கரு ளென்னலல லாலுன்னை யெண்ணலில்லேன்,
புற்கரு ணேசமு மற்றொழி யேனிழி போகமென்றான்,
மற்கரு ஞாளியை யொத்துழல் வேன்வன்னி மாவனத்திற்,
கற்கரு மெய்யறி வைக் கற்று ளார்புகழ் கான்மயிலே. 95

கானகத் தேவருந் தித்தவத் தார்ந்தனற் காதலற்றா,
ரூனகத் தேவருந் துன்பத்தை யின்பெனிங் கோடிநைந்தேன்,
வானகத் தேவருந் தேடிநன் றேவரும் வல்லபத்தாய்,
நானகத் தேவருந் திக்கென்ன வாழ்தலு நன்றுகொல்லோ. 96

கொல்லுங் கொடுவிழி யுங்குன்ற நேர்வருங் கோடனமு,
மல்லும் பகலினு மென்மனத் தேவந்து வந்த வந்தோ,
புல்லும் பதுயர் சொல்லவற் றோவுனைப் போந்தனன்யான்,
வெல்லும் படியருளந்நெலன் னேயுயர் வேதமுற்றே. 97

முற்றுஞ் சமவறி வாமெனிற் போகமு மோகமெங்கே
யெற்றுஞ் சடவுரு மற்றது மிங்கெழ லெங்குறுங்கே
ழுற்றுஞ் சமுதுரு வாயதி னின்றிட வோமுரைத்தே
பற்றுஞ் சருதுரு மாரியை யீநெலை யாயருளே. 98

ஆயே னருமறை மாமுடி யென்னினு மார்கழற்கே,
நாயே னருகில னென்னினு மான்மன நாரியர்பா,
லோயே னருவுத லென்னினு முன்மக னோநெலன்னே
நீயே னருவரல் செய்குவை யோதரு ணின்மலியே. 99

நின்மல நிட்கள நித்திய நிச்சல நெல்லைபொற்றா
டன்மல மேயற வேதொழு வாரவர் தாடொழுதாற்
புன்மல மாமுட னானெனல் போயுயர் போதமுற்றுச்
சின்மல மாரலி லோயலில் சேர்வர் சிதம்பரமே. 100

திருநெல்லையந்தாதி முற்றிற்று




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247