உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஆர். சண்முகசுந்தரம் நூல்கள் |
ஆர். சண்முகசுந்தரம் (1917-1977) தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிய தமிழக எழுத்தாளர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் செல்வாக்கும், வசதியும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் சண்முகசுந்தரம். இவரது தாயார் ஜானகி அம்மாள், தந்தை பெயர் எம். இரத்தினாசல முதலியார். சண்முகசுந்தரத்தின் மனைவி பெயர் வள்ளியம்மாள். இளம் வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் இவரும் இவர் தம்பியும் வளர்ந்தனர். மணிக்கொடி இதழில் சிறுகதை எழுதத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை "பாறையருகே". பி. எஸ். ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்தபோது இது வெளிவந்தது. "நந்தா விளக்கு" என்ற மற்றொரு கதையையும் மணிக்கொடியில் எழுதினார். வசந்தம் என்னும் இதழைத் தம் தம்பியுடன் இணைந்து பல ஆண்டுகள் நடத்தியுள்ளார். இவ்விதழின் கௌரவ ஆசிரியராக பொருளாதார நிபுணர் ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்தார். ஆர்.சண்முகசுந்தரத்தின் பல சிறுகதைகளும், வசன கவிதைகளும் அதில் வெளிவந்தன. நாகம்மாள் என்னும் நாவலை எழுதி 1942 இல் வெளியிட்டார். இந்நாவலுக்குக் கு. ப. ராஜகோபாலன் முன்னுரை எழுதியுள்ளார். தமிழகத்தின் மேற்குப் பகுதியான கொங்கு வட்டார வழக்கில் அமைந்த அந்நாவலையே க. நா. சுப்பிரமணியம் தமிழின் முதல் வட்டார நாவல் என்று குறிப்பிடுகின்றார். ஆர். சண்முகசுந்தரம் புதினத்துறையில் மட்டுமின்றி சிறுகதை, நாடகம், கவிதை, மொழியெர்ப்பு தளங்களிலும் படைப்புகளைத் தந்துள்ளார். சண்முகசுந்தரம் 18 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை பூவும் பிஞ்சும், தனிவழி, அறுவடை, சட்டிசுட்டது ஆகியவை. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் ஆகியவை குறுநாவல்கள். இவை இரண்டும் ஒரே நூலாக வெளியாயின. பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க புதின ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆனந்த விகடனில் இவர் மொழிபெயர்த்த "சந்திரநாத்" என்ற சரத் சந்திரரின் புதினம் தொடராக வெளிவந்தது. பதேர் பாஞ்சாலி இவரது மொழிப்பெயர்ப்பில்தான் தமிழுக்கு வந்தது. ஆர். சண்முகசுந்தரம் எழுதியுள்ள நூல்கள்: புதினங்கள் அறுவடை 1960 இதயதாகம் 1961 எண்ணம் போல் வாழ்வு 1963 விரிந்த மலர் 1963 அழியாக்கோலம் 1965 சட்டிசுட்டது 1965 மாலினி 1965 காணாச்சுனை 1965 மாயத்தாகம் 1966 அதுவா இதுவா 1966 ஆசையும் நேசமும் 1967 தனிவழி 1967 மனநிழல் 1967 உதயதாரகை 1969 மூன்று அழைப்பு 1969 வரவேற்பு 1969 சிறுகதைகள் நந்தா விளக்கு (சிறுகதைத் தொகுப்பு) மனமயக்கம் (சிறுகதைத் தொகுப்பு) நாடகங்கள் புதுப்புனல் (நாடகத் தொகுப்பு) மொழிபெயர்ப்புகள் 1.பதேர்பாஞ்சாலி 2.கவி 3.சந்திரநாத் 4.பாடகி 5.அபலையின் கண்ணீர் 6.தூய உள்ளம் |