பட்டினத்தார்

அருளிய

ஞானம் - 100

காப்பு

நேரிசை வெண்பா

நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்லபுத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே - பண்பாக
ககனமறி பதமுருவக் ககனமுட கதிர்வறுக
ககனகதிர் வேல்முருகன் காப்பு.

நூல்

நெஞ்சுடனே தான்புலம்ப நீலநிறத்தாளீன்ற
குஞ்சரத்தை ஆதரித்துக் கும்பிட்டால் - கஞ்சமுடன்
காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வாரெப் போதும். 1

எப்போ திறைவன் எழுத்தைவிட்டுத் தப்புவோம்
எப்போ யெழுத்தைரெண்டை ஏத்துவோம் - எப்போது
காமன்வலையறுப்போம் காரொளியைக் கண்டுநெஞ்சே
ஏமன்வலை அறுப்ப தென்று. 2

என்றும் பயமறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்றசிவ லிங்கத்தை நெஞ்சேகள் - உண்டுறங்கித்
தேசமெல்லாம் நின்றசைந்த தீயெழுத்தே லிங்கங்காண்
ஆசைவிந்தே நாவெழுத்தே ஆவுடையார். 3

ஆவுடையா ளோடிருந்தேன் அருளானந் தம்பெறவே
கோவுடையார் நின்றதினம் கூடிய - பூவுடையாள்
கட்டழகி யைத்தள்ளி கடந்து பெருவெளியில்
இஷ்டமுடன் நெஞ்சேஇரு. 4

இருவினைக்கு உள்ளாகாதே என்னுடமைஎண்ணாதே
பெருகுசினங்கொண்டு பினத்தாதே - மருவுமலக்
கள்ளமெலாம் விட்டுக் கரைந்து கரைந்துருகி
உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்றை. 5

ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
கருவியிற்சென்று மயங்கித் திரியாதே - நின்றநிலை
பிரியா தேநெடிய னெஞ்சே கொடிய
பலவினையும் மாத்துள் பொருள். 6

பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தாதே
இருளுறவை நம்பி இருக்காதே - பொருளுறவு
கொண்டறிவி னாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித் தேறுநெஞ்சே கரத்தை. 7

காத்துடனே சேர்ந்து கனலுருவைக் கண்டுவெளி
மாத்து இனிப்பிறக்க வாராதே - யேத்தபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப் போம்மனமே நாம். 8

நானென தென்னென்றுவினை நாடி அலையாதே
தானவனே யென்று தரிக்காய்நீ - என்மனமே
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்வாய் கருத்து. 9

கருத்து வேறாகாதே கண்டிடத்தில் ஓடாதே
விரித்துப் பலவேடம் மேவாதே - பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டு சலமறிந்து காண்மனமே
அஞ்செழுத் தாலொன்ப தடை. 10

ஒன்பது வாய்க்கூட்டை உறுதிஎன்று நம்பாதே
ஐம்புல னேயென் றணுகாதே - இன்பமுடன்
சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத்
துற்பொருளே மெய்யென் றுணர். 11

மெய்யுணர்ந்து பாராமல் விரிந்தகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டென்றறி நெஞ்சே - செய்யதொரு
ஆணெழுத்தும் பெண்ணெழுத்து மணுவாகி நின்றநடு
காணும் பொருளுரைக்குங் கால். 12

கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக்கடலில் போகாதே - எல்லாம்
செலக்குமிழி யென்று நினை செம்பொன்னினம்புலத்தை
கலக்கமறப் பார்த்தே கரை. 13

கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரைகடந்த வாழ்வைநந்தி போகாதே - உரையிறந்த
ஓசைவிந்து வைமனமே உற்சபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில். 14

பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே
தாக்குமிடி வந்தால் சலியாதே - நோக்குமே
ஒருவன் திருவிளையாட் டென்று உணரு நெஞ்சே
கருத்தாலே நின்று கருது. 15

கருதாதே மங்கையர் காமவலைக் கேங்கி
உருகாதே நெஞ்சே ஒருவன் - இருகாலை
காத்தயந்து சேர்த்துக் கனலைக்கண் காட்டித்தினகன்
போற்றிப்பார் ஒத்தநல்ல பொன். 16

பொன்னாசை மண்ணாசை பூங்குழல் ராசையெனச்
சொன்னாசை யென்றறிந்து சேராது - எந்நாளும்
ஈசன் அமைத்தபடி யிருக்குங்கா ணிம்மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து. 17

பரிந்து திரியாதே பார்வினைக்கும் அஞ்சாதே
அறிந்துருகி சிந்தித் தலையாதே - வருந்தி
நடந்துசித்திர நாடியிலே நாதமறி நெஞ்சே
உடைந்திடு முன்னேயிருந்த உடல். 18

உடம்பழிந்து பின்மனமே ஒன்றுங் கிடையாது
உடம்பழியு முன்கண் டுணராதே - உடம்பிற்
கருநிறத்தைச் சேர்ந்து கருமலச் சிற்றற்றும்
பருகுசித்திரக் கலைமதியும் பார். 19

பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
காலிடுக்கைந்தத்திக் கறையாதே - கோல்யெடுத்து
வீர மறலி வருமுன் வினையறுக்கு
பார் விழியினருளைப் பார். 20

பார்த்த இடமெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல் மண்நீர் வெளியாம் கண்டதெல்லாம் - மாத்திரண்ட
ஐம்புலனு நில்லாது ஆசைகளும் நில்லாது
செம்புடலும் நில்லாது இனி. 21

இனியசுக ஐம்புலனென்று எண்ணாதே நெஞ்சே
இனியசுக மறவாதே - இனியசுகம்
கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில்
நின்றதோ நில்லாததோ. 22

நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா
மெல்லாப் பகையா யிருக்குங்காண் - பொல்லாக்
கருக்குழியிலே பிறந்த கன்மவினையால்
திருக்கறுக்க வேணும் தினம். 23

தினந்தினைப் போதாகிலுந்தான் தீதறநில் லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் - தினந்தினமும்
ஓங்காரத் துள்ளொளியை உற்றுணர்ந்து நீமனமே
ஆங்கார அச்ச மற. 24

அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத் தால்மேய்ந்த
அச்சத்தா னிச்சயமாய் கொள்ளதே - மெச்சத்தான்
அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து
நின்ற நிலைதான் நிலை. 25

நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே
அலைமதி போலே தினமும் ஆனாய் - கலையறிந்து
மாறனையுங் கூத்தனையும் மாபுறத்தை யம்புதைத்த
வீரனையும் தேட விரும்பு. 26

விரும்பித் தனித்தனியே மெய்யுணராதமாய்கை
இரும்புண்ட நீர்போலே வேரும் - கரும்பதனைத்
தின்றாலல்லோ தெரியும் நெஞ்சே தின் ஐம்புலனை
வென்றாலல்லோ வெளிச்ச மாம். 27

வெளிச்சமில்லா வீடே விளக்கே தினவீடே
கழிச்சிறந்த நின்றதைத்தான் கார்நெஞ்சே - வெளிச்சமற
தொண்ணூத்தாறு தத்துவமும் ஒவ்வொன்றாய்த் தோன்றுங்காண்
எண்ணிலிவை காணா திருட்டு. 28

இருட்டனை மாய்கையால் யெவ்வுலகுந் தாயை
பொருட்டெனையே மூடும் ஐம்புலனான் - திருட்டுமன
வண்டருடன் கூடாதே வாழ்மனமே நாமிருவோர்
கண்டுகொள்வோம் காணா ததை. 29

காணாததைக் கண்டதெல்லாங்காணாது
வீணாவல் கொண்டு அகமெலியாதே - நாணாதே
இந்திரியத்தோடு பிணங்காத பாவிநெஞ்சே
செஞ்சொல்மறை அக்கரத்தைத் தேடு. 30

தேடினா லைந்துதிருக்கரத்தைச் சென்றுவெளி
நாடினால் நெஞ்சே நலம்பெறலாம் - வாடியே
பொல்லாப் புவிகாண் போகமதை நம்பாதே
எல்லாம் வெளியில் மஞ்சளே. 31

மஞ்சனைய கூந்தல் மடவாரைக் கண்டுருகும்
பஞ்சமல நெஞ்சே பகரக்கேள் - மஞ்சள்
மயங்காணும் இந்தவுடல் மாயவாழ் வெல்லாம்
அயன் காணழித்த சூத்திரம். 32

சூத்திரத்தா லாடும் சுழுமுனையைத் தான்திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவமெல்லாம் - சூத்திரத்தைப்
பாராமலேயிருந்து பாவிமன மேயிறக்க
வாராம லேயிருக்க வா. 33

வாசிதனைப்பிடித்து வண்கனலோ டேசேர்த்து
சீசீ யெனவே திரியாமல் - மாசி
இருளா னதைச் சேர்த்து இருந்தாயே நெஞ்சே
பொருளா னதைமறந்து போடு. 34

போட்டுவிக்கும் பொல்லாப் புழுச்சொரியு நாய்விடக்கே
கூட்டங் குலைந்து துதித்திடுமுன் - காட்டித்
தாழ்வாராய் நெஞ்சே தராதர மாயெங்கும்
முறவா னதையுயிர்போம் முன். 35

முன்னயனெழுத்தும் மூன்றுவினை கண்டுழன்று
பின்னும் தெரியலையோ பேய்மனமே - தன்னை
அறியாமலே யிருந்தால் அவனறிவானோ மனமே
குறியான புத்தியென்றே கொள். 36

கொள்ளைக்ககப் பட்டுக் குடிகேட ரோடிருந்து
கள்ளக் கருத்தால் கருதாதே - மெள்ளமெள்ள
ஆய்ந்தாய்ந்து பார்த்துநீ ஆராருக் கப்பாலே
தேர்ந்தாய்ந்து பார்த்து தெளி. 37

தெளிந்தநீர் பட்டமுதம் சேர்ந்தால் தெளியாதா
தெளிந்தநீர் காட்டா தவைபோல் - தெளிந்தால்
சகல பொருள் தோற்றும் தாழ்வுவரானா மென்றும்
பகலிர வில்லாத பதி. 38

பதிபசுபா சங்களையும் பற்றிதிலே ஊடுருவப்
பதிதனிலே தங்கிப் பவமருந்து - கதிபெறவே
வீணாமோ நெஞ்சேகேள் வேதாந்தத் துட்பொருளை
காணா மலாகுமோ கணக்கு. 39

கணக்கறியா மாயக் கருவிகா ணாதிப்
பிணக்கறியா மற்பேதை நெஞ்சே - இணக்கம்
மறிந்திணங்க வேணும் அருள்வெளியி னுள்ளே
செறிந்துவிந்து நாதத்தைச் சேரு. 40

சேராதே மாய்கைதனை சேர்ந்து கருக்குழியை
பாராதே நெஞ்சே பதையாதே - சீரான
சித்திரத்தைப் பார்த்து தினமனமே சித்திரத்தில்
சத்திரத்தைக் கொள்ளா உகந்து. 41

உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தி னாலே
அகந்தனையே சுத்தி பண்ணி யாய்ந்து - முகந்து
குடியாக லாமோ குலவுமல பான
பிடியா னதுதீர வேண்டி. 42

வேண்டுந் திரவியமும் மேலுயர்ந்து பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடு மம்மலமும் - மாண்டுபெழிங்
காடுயர்ந்தா ரேமனமே கண்டாயோ மாயநமன்
தேடரிய ஈசன் செயல். 43

செயமகா நெஞ்சே திருட்டுமலக் கோட்டை
பயமறவே வெட்டிப் பரப்பி - நயமான
வாசியினால் சுட்டொடுக்கி மதிமயக்கங் கொண்டிருப்போம்
பேசினோம் பேசா மலே. 44

பேசாத ஞானப் பெருமைக் கிடப்பதுதான்
ஆசாபா சங்களில்லா தார்க்கல்லோ - கூசாமல்
தேசமெல்லாம் ஓடித் திரிகிறாயே மனமே
ஆசாபா சங்களும் நீ யாய். 45

பாசங் களைந்து பதியி லிருந்துகொண்டு
பேசரிய காலைப் பிடித்திருக்க - நேசமுடன்
நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தை
தாமொ ருதலையிருக்கத் தங்கு. 46

தங்கு நெடுவளையல் சகலங் களுங்கடந்து
எங்குநான் றான யிருக்காமல் - மங்கு
கருவானாய் நெஞ்சே கரிக்கால தூதன்
வருவானே யென்ன வகை. 47

என்னவகை செய்வோம் எமதூதர் வந்தாக்கால்
பின்னையென்ன ஒட்டானே பேய்நெஞ்சே - சொன்ன
படியேகேள் தூதர்களும் பரிந்துவரு முன்னே
அடிதேடிக் கொண்டே அமர். 48

அமரும் மனம்புத்தி யாங்கார மோடுசித்தம்
அமரும் பொழுது வேனோர் - அமரும்
கோவென் றுரைத்தநமன் கொண்டுபோம் போதறிவு
வாவென்றால் நெஞ்சே வராது. 49

வாராது நெஞ்சே வடக்கம் வருமுன்னே
வேறா னதைப்பிடித்து மேலேறி - பாராமல்
பொய்யிலே நில்லாதே புத்திகெடா தேயிருந்தால்
மெய்யிலே நின்றறிவோ மெய். 50

மெய்யாறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாதம் பருபத்தாய் - மெய்யாகக்
கண்டதெல்லாம் நான்காண் காணா ததைத்தேடிக்
கண்டுருகி நெஞ்சே கனி. 51

கனியருந்த மாட்டாமல் காயருந்துறாய் மனமே
கனிருசிபோ லாகுமோ காய்தான் - இனியேதுகேள்
நானும் நீயும் கனிகாண் நடுவிருந்தேருசிகாண்
தேனும் பாலும் போல் சிவன். 52

சிவதலங்க ளைத்தேடி சீயெழுத்தையூட றுத்து
சிவதலங்க ளைத்தேடி சேராமல் - அபதபங்கள்
பண்ணாதே நெஞ்சேகேள் பாரவினை வந்தாக்கால்
எண்ணாதே அஞ்சாதே யேங்கு. 53

ஏங்காதே நெஞ்சேகேள் எவ்வினைகள் வந்தாலும்
ஏங்காதே சத்தும் விளையாதே - தாங்காமல்
கொண்ட வனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான்
இன்றுகுறித் துண்மையிதென் றெண். 54

என்னரிய நெஞ்சே இனியபால்தன்னை
அன்னந்தண் ணீர்நீக்கி யுண்ணும் - தன்மைபோல்
துன்பங்களைந்து தூயவெளி யூடுவருவா
இன்பங்களை சேர்ந் திரு. 55

சேர்ந்திருவோ ரும்பாலும் தேனும் போலே கலந்து
வாய்ந்ததிலே யுள்ளுரிசை யாகாபல் - போங்காமல்
தத்திமறக் காலன் வருவானே வந்தாக்கால்
ஏத்தப்படுவா னெஞ்சே யெவன். 56

எவனிருந்து நெஞ்சே யெதுப்பாரு முண்டோ
கவனமற நின்று கருதுநல்லால் - புவனமெல்லாம்
வித்துயிரெல் லாங் கழண்டு விண்ணுடைந்த தேமனமே
மற்றுடலையுண்குதே மண். 57

மண்ணெழுந்தும் நீரெழுந்தும் வாய்வெழுந்தும் தீயெழுந்தும்
விண்ணெழுந்துங் கூடி ஒரு வீடாகி - நிண்ணரிய
மாயமெல்லா முண்டாக்கி வைத்தான் காண்நெஞ்சேஇக்
காயமெல்லாம் நானானால் கருது. 58

கருவழித்தால் வித்தையில்லா காரணம் போல் நெஞ்சே
கருவழிந்த தெல்லாம் கண்டதெல்லாம் - கருதி
திரியாதே நெஞ்சே சிவன் செயலே யல்லால்
மதியாரில் லாக்கால் வந்து. 59

வந்ததுவும் நாதாந்த வாதனை கண்டே வணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் - அந்தரத்தில்
விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே
தட்டுகெட்டுப் போகாதே தான். 60

தானந் தவமுயற்சி தாடாண்மை யோடுநெஞ்சே
வானம் பிறந்து வழிகூடின் - நானுமதில்
நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறி
தோயுமதி தானே துடங்கு. 61

துடங்கு மினையறுத்து சுத்தமெல்லாங் கழித்து
அடங்கு மிடத்தில் அடங்காமல் - கிடந்து
பறந்தெடுத்த குஞ்சதுபோல் பதைக்குறாயே மனமே
அறுஞ்சுரப்புமாமிதன் னடியில். 62

மதனசரத் தால்மனமே வையகமெல்லா மயக்கி
விதனத் துறக்கமயங்குவதல்லால் வேறில்லை - யதனாலே
சத்துச் சுகத்தை நத்தி தானலைய வேண்டாங்காண்
மெத்தைச் சுகத்தை வெறுத்து. 63

வெறுத்துவெறுத்து கொண்டதுபோல் வீணிலே நெஞ்சே
பொரித்த மக்கினாய்போல் போகாதே - குறிதடுத்து
தேடியே வாசிதனை சேர்ந்து கலந்தபொருள்
கூடினா லாமா குணம். 64

குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே
வணங்குங் குணமாக வந்து - இணங்கியே
மண்டல மெலாங் கடந்து மகாவீட்டைத்திறந்து
கண்டெடுத்துக் கொள்ளவே கனம். 65

கன தனத்து மாதர் கழிகாதல் கொண்டாப்போல்
வினையருப்ப நகைக்குருக வேண்டாமோ - தினமனமே
சோதித்தா னல்லாமல் சுபகா ரியமாக
போதித்தால் கொள்விலையோ புத்தி. 66

புத்திதரும் வித்தைதரும் பொல்லாப் பில்லாமல் நெஞ்சே
சித்திமுத்திபேரின்பம் சேர்ந்திடலாம் - நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்த முண்டிருந்தக் கால். 67

கால்வழிச் சென்று கருப்பக் குழிக்கிக்கீழ்
மூலமுற்ற நல்வழியே மூழ்கினறி - மாலை
இருட்டறுத்துப் போடாமல் என்பாவி நெஞ்சே
திருட்டுவித்தை செய்கிறாய் சென்று. 68

சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு
ஒன்றுமிக வாசியைத்தான் ஓட்டாமல் - நன்றாய்
நிலையாக நில்லாமல் நீயலைகிறாய் மனமே
அலைவாயி னில்துரும்ப தாய். 69

தாய்தந்தை யென்பிள்ளை தானென் றிரங்கிநித்தம்
காய்பறிக்கி றாயே கனியிருக்க - தாய்தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
எத்தனை பேரைப்பெற்றோம் இங்கு. 70

இங்குஅங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண்
அங்கம் பொருளாய் அறிந்துகொண்டு - எங்குமெங்கும்
நாமேசிவமாக நாடினால் ஞானமொழி
தாமே அருளைத் தரும். 71

அருளில்லா தார்க்கு அருளறிவு தங்குமோ
அருளறிவு தானல்லோ ஆனந்தம் - அருளறிவு
தேடுவதுங் கூடுவதும் சிந்தையா னந்தமுடன்
ஆடுவதும் தானறி வினால். 72

நாலெழுத்து ஆறு நடுவெழுத்துயீரைந்து
ஓடினால்மூன்றி னொருபதினா லாகுமோ - ஓதாய்நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோடுறங்கி நெஞ்சமே
ஓரெழுத்தி லேசென் றுரை. 73

உரைகளத்தினாப் போலே உள்ளமலங்களெல்லாம்
அரைத்துடைத்து நெஞ்சே யருதியிலே - நித்தி
புளியம் பழத்தோடு போலிருக்க வேணும்
உடலழியுங் காலங்க ளுக்கே. 74

காலங் கழித்திடுமுன் கடைவாயில் பாலுறுமுன்
வேலங் கனைய விழிமடவார் - ஏலக்
குழியில்வைத்து மாரடித்து கூப்பிடுமுன் மாய்கை
களையெடுத்துப் போடுமுன் கண்ணால். 75

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நன்னாய் கேள்
பார்க்கவேனுந்தனையும் பத்திரை மாத்துத்தங்கம்
ஆக்காமல் போகாதோ உன்னால். 76

உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும்
எண்ணானும் பாம்பின்வாய் தேரைபோல் - முன்னாலே
அகப்பட்டுப் போகாதே ஆனந்த மெய்விளங்கு
நம்பித்துணிக்கு முற்றும் நம்பு. 77

நம்பினான் றன்னை நடுவணையி லேயிருந்து
கும்பிடா தார்க்குங் குறையுண்டோ - நம்பி
பளிங்கொலிபோல் நெஞ்சே பரந்திடலாமோ யெங்கு
மெழுகனலோ டேசேருமே. 78

ஏமன்வரு முன்நெஞ்சே யிருவினையுமே வென்று
சாம நடுவதன்னில் சார்ந்ததிலேதங்க - மானமுடனே
காலனையும் வென்று சில காமனையும் வென்றுபின்பு,
பாலிக்க லாமதுராம் பார். 79

பாரயனும் மாலும் பரவவரு சுக்கிரனும்
காரனைய வாரணத்தை தான்கண்டு - சீராய்மனமே
நக்கத் திடைநடுவே நற்கனக பொர்பதியில்
சொற்கனகத் தற்பதியில் தோன்றுமே. 80

தோன்றுமே யெல்லாச் சுகமுற்றதில் மனமே
தோன்றுமே ஆனந்தச் சுந்தரியின் - தோன்றுமே
அட்சரச் சுருக்கி னொடும் அக்கரப் பெருக்கமுடன்
உச்சரித்து ரைக்கிறதென்ற உண்மை. 81

உண்மை யிதுகாண்மனமே ஒளியிருந்த வீடதுகாண்
உண்மை சிவனிருக்கும் ஊருகாண் - உண்மை
கருமைதங்கி ஒளியெழுந்து கனத்ததந்தியுன் பாதங்கள்
மருவுதங்கியினி யுகந்த வாறு. 82

வருந்தும் பொழுதுகாண் மாயையாய் நெஞ்சே
வருந்தும் குணமாக வந்து - வருந்தும்
இருவினை துடக்கறுத்து யெழுவகைப்பிறப்பறுக்கும்
கருமலத் திருக்கறுங் காண். 83

காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை - காண்மனமே
செம்பொன் னம்பலத் துள்ளோர் செழுஞ் சொல்லென்று
மன்றிலொன்றும் அம்பலத்தில் ஆடும்நட னம். 84

நடனமது பார்மனமே நயனத் திடைநடுவே
நடனமது நாணம் பதங்காலாம் - நடனம்
பதிமதிவித் தாய் மனமே பலகெதிவித் தாயெனவே
அதிவிதசித் தாந்த மாடும். 85

ஆடும் பதிமனமே அம்பலத்தைச் சுட்டுநடனம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் - ஆடுகின்ற
கூத்தனை கூற்றிற்று கூத்தபித்த னைத்தசுத்தா
சித்தநித்திரைச் சித்தசித்தி லுத்துநில். 86

நில்லு நிலவறமாய் நேசமுடனே பதியில்
நில்லு பிறவியுற நீநெஞ்சே - நில்லு
கனல்மதியும் தருமிடரும் கதிரெழுத்துங் கலைமதியும்
புனலொடு செஞ்சடைமுடியும் போற்றி. 87

போற்றித் தினமனமே பொல்லாக் குலங்கள் விட்டுக்
காத்துக் கனலுங் கருத்துஒன்றாய்ப் - பாத்தறிவால்
சுத்தமல பித்தையத்து சுற்றஒழி சுற்றிலுதித்து
சுற்றமறித்துத்ததிலே தங்கு. 88

தங்குநீ சென்று சதாசிவத்திலே மனமே
மங்குக் கறுக்குழிகள் - வரதங்கும்
கருவும் வினலுங் கதியும் கெதியும்
விதியும் திறுத்தான் வெளி. 89

வெளியில் வெளியாகி விண்ணவன் றால்மனமே
வெளியி லொளியா யிருக்க - வெளியிரவு
கரியுறித்துப் போற்றவனைக் கதிர்மதியைச்சென் றானை
கருவறுத்துப் பார்த்தலே காண். 90

காணு மனமே கரிகாலனை வதைத்துக்
காணு முலகமெல்லாம் காணுருவாய் - தாணுவாய்
மனவிரக மானபுலி மன்றுளன்று நடனமிடும்
னகரத்தின் செயலுற்ற பாதம். 91

பாதத்தான் அஞ்செழுத்தான் பரமபதத்தான் சிங்க
நாதத்தா னென்று நெஞ்சே நன்றாக - போதத்தான்
ஆரணத்தா னோடைந்து அண்டமெல்லாம் சுட்டதிரு
நீரணிந்து கொண்டிருப்போம் நித்தம். 92

நித்தனாய் நிர்மலனாய் நின்றுலகம் மூன்றுரைக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப் - பெற்ற
குருவினிரு பாதமுனது குளிருமனமுருகி நினை
தருபனதுபற் றனமே தான். 93

தானவனே ஆகாவிட்டால் சண்டாளன் இழுத்தடிப்பான்
தானவனு மங்கே தரிக்கொட்டான் - மாமலையார்
கலங்கும் கல்வியிலே கருத்தித்தான் கொடுப்பான்
முதல்நினைக்கும்படி தேருநெஞ்சே. 94

நெஞ்சே உனக்கு நிலவரமாய்ச் சொன்னதெல்லாம்
நெஞ்சேயென் சொல்லென்று நிகழாதே - நெஞ்சே
கருத்திச்சை பிச்சைதள்ளி கருத்தென்று செப்பித்தாய்
கருத்தக்கோசலத்தள்ளி கருத்துள். 95

உள்ளிருந்து நெஞ்சே உலாவுஞ் சிவகுருவை
வெள்ளெருக்கன் பூச்சூடும் மேனியனை - உள்ளே
மனமுருகப் பார்த்தான் மலைசிலையாய்ச் சென்றானை
உனதறிவால் வார்த்து ஓது. 96

ஓதுநீ நெஞ்சேகேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை - ஓதினால்
கடியகொடு மிடியகலும் கடியகொடு மணியகலும்
கடியவிட்டணுகாமல் கார்க்கும். 97

கார்க்குந் தினமே கடியப் பிறப்பறுத்து
கார்க்கும் பலபிணிநோய் காட்டாமல் - நோக்கும்
அன்றுமிதை பகல்வெளியில் வளறாதமதனை
யுந்தியிலுணர்ந்ததில் வாழ். 98

வாழுநெஞ்சே மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை - ஏழை
வருத்தந்தீர் தனன்பன்மனசந்தில் தங்கி
பரித்தரத்தினக்காரணத்தே பணி. 99

பணிந்து துதிமனமே பல்லுயிர்கட் கெல்லாம்
அணுவிலணு வாக யிருந் தானை - துணிவாய்
பிறவா திருக்கவும் பேரின்ப வாழ்முதலை
திறமாக நம்புநெஞ்சே செலுத்து. 100

ஞானம் - 100 முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247