பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

குதம்பைச்சித்தர் பாடல்

பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
     காரணம் இல்லையடி குதம்பாய்
     காரணம் இல்லையடி. 1

போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
     சாங்காலம் இல்லையடி குதம்பாய்
     சாங்காலம் இல்லையடி. 2

செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
     முத்திதான் இல்லையடி குதம்பாய்
     முத்திதான் இல்லையடி. 3

வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்
     கஸ்திசற்று இல்லையடி குதம்பாய்
     கஸ்திசற்று இல்லையடி. 4

பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
     குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
     குற்றங்கள் இல்லையடி. 5


செகண்ட் ஒப்பினியன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

தமிழ் நாவல்கள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

நாட்டுக் கணக்கு – 2
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy

சக்தி வழிபாடு
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ஆரோக்கியமே அடித்தளம்!
இருப்பு இல்லை
ரூ.180.00
Buy

காந்தியின் நிழலில்
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

தமிழரின் மதங்கள்
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

கேம் சேஞ்சர்ஸ்
இருப்பு இல்லை
ரூ.240.00
Buy

Fearless in Opposition
Stock Available
ரூ.450.00
Buy

அத்திவரதர்
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

108 திவ்ய தேச உலா - பாகம் 4
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஆன்மா என்னும் புத்தகம்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

கங்காபுரிக் காவலன்
இருப்பு உள்ளது
ரூ.630.00
Buy

தம்மம் தந்தவன்
இருப்பு உள்ளது
ரூ.235.00
Buy

மலைகள் சப்தமிடுவ தில்லை
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

எழுகதிர்
இருப்பு உள்ளது
ரூ.350.00
Buy

கோடையில் ஒரு மழை
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மன்னன் மகள்
இருப்பு உள்ளது
ரூ.490.00
Buy
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
     சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
     சூட்சியாய்ப் பார்ப்பாயடி. 6

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
     இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
     இட்டமாய்ப் பார்ப்பாயடி. 7

எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
     அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
     அங்கத்துள் பார்ப்பாயடி. 8

அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
     பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
     பிண்டத்துள் பார்ப்பாயடி. 9

ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
     சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
     சேவித்துக் கொள்வாயடி. 10

தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
     மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
     மாண்டாலும் போற்றிடுவாய். 11

அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
     தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
     தெண்டனிட்டு ஏத்தடியே. 12

விந்தை பராபர வத்தின் இணையடி
     சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
     சிந்தையில் கொள்வாயடி. 13

விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
     கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
     கண்ணொளி ஆகுமடி. 14

பத்தி சற்றில்லாத பாமர பாவிக்கு
     முத்திசற்று இல்லையடி குதம்பாய்
     முத்திசற்று இல்லையடி. 15

எல்லாப் பொருளுக்கு மேலான என்தேவைச்
     சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
     சொல்லாமற் சொல்வாயடி. 16

எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
     சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
     சந்ததம் வாழ்த்தடியோ. 17

காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
     நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
     நாணமற் ஏத்தடியே. 18

அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
     துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
     துணிவாய்நீ போற்றடியோ. 19

மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
     காணிக்கை நன்மனமே குதம்பாய்
     காணிக்கை நன்மனமே. 20

கடவுள் வல்லபங்கூறல்

தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
     மூவரும் ஆவாரடி குதம்பாய்
     மூவரும் ஆவாரடி. 21

சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய்
     வித்தாகும் வத்துவடி குதம்பாய்
     வித்தாகும் வத்துவடி. 22

உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
     திருவாகி நின்றது காண் குதம்பாய்
     திருவாகி நின்றது காண். 23

நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
     பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
     பாருமாய் நின்றதைக் காண். 24

புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
     சிவனாலே ஆகுமடி குதம்பாய்
     சிவனாலே ஆகுமடி. 25

அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
     புவனத்தில் உண்மையடி குதம்பாய்
     புவனத்தில் உண்மையடி. 26

காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
     ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
     ஆரணஞ் சொல்லுமடி. 27

காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
     தாரணி சொல்லுமடி குதம்பாய்
     தாரணி சொல்லுமடி. 28

ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று
     மேதினி கூறுமடி குதம்பாய்
     மேதினி கூறுமடி. 29

ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
     மந்திரம் போற்றுமடி குதம்பாய்
     மந்திரம் போற்றுமடி. 30

யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
     சேனையைத் தந்தானடி குதம்பாய்
     சேனையைத் தந்தானடி. 31

மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
     எண்ணளவு வில்லையடி குதம்பாய்
     எண்ணளவு வில்லையடி. 32

ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
     சோதியாய் நின்றானடி குதம்பாய்
     சோதியாய் நின்றானடி. 33

சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
     தேவன் அவனாமடி குதம்பாய்
     தேவன் அவனாமடி. 34

சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
     சத்தியம் உள்ளானடி குதம்பாய்
     சத்தியம் உள்ளானடி. 35

எங்கும் வியாபகம் ஈகை விவேங்கள்
     பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
     பொங்கமாய் உள்ளானடி. 36

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
     பார்க்கப் படாதானடி குதம்பாய்
     பார்க்கப்படா தானடி. 37

ஆத்துமந் தன்னை அரூபமா எண்ணினாய்
     கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய்
     கூத்தன் அவ்வாறு அல்லவோ. 38

அண்டத்தைத் தேவன் அளிக்க எண் ணும்போதே
     அண்டம் உண் டாயிற்றடி குதம்பாய்
     அண்டம் உண் டாயிற்றடி. 39

வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள்
     தான் அவர் செய்தாரடி குதம்பாய்
     தான் அவர் செய்தாரடி. 40

ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை
     நின்றிடச் செய்தானடி குதம்பாய்
     நின்றிடச் செய்தானடி. 41

கருவி களில்லாமற் காணும்பல் அண்டங்கள்
     உருவுறச் செய்தானடி குதம்பாய்
     உருவுறச் செய்தானடி. 42

எல்லா உயிர்களும் எந்த உலகமும்
     வல்லானைப் போற்றுமடி குதம்பாய்
     வல்லானைப் போற்றுமடி. 43

என்றும் அழியாமை எங்கு நிறைவாகி
     நின்றது பிரமமடி குதம்பாய்
     நின்றது பிரமமடி. 44

கண்டத்தை ஆள்கின்ற காவலர் போற்சோதி
     அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய்
     அண்டத்தை ஆள்கின்றதே. 45

அண்டம் உண் டாகுமுன் ஆக அநாதியாய்க்
     கண்டது பிரமமடி குதம்பாய்
     கண்டது பிரமமடி. 46

எந்த உயிர் கட்கும் எந்த உலகிற்கும்
     அந்தமாய் நின்றானடி குதம்பாய்
     அந்தமாய் நின்றாடின. 47

தணிவான புத்தியால் தாணு அறியாதோர்
     அணுவேனும் இல்லையடி குதம்பாய்
     அணுவேனும் இல்லையடி. 48

மூன்று தொழிலினை மூர்த்திசெய் யாவிடில்
     தோன்றாது உலகமடி குதம்பாய்
     தோன்றாது உலகமடி. 49

சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே
     யாரலே யாகுமடி? குதம்பாய்
     யாரலே யாகுமடி? 50

முத்திநிலை பெறும் வழி

எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
     வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
     வல்லார்க்கு முத்தியடி. 51

பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
     கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
     கற்றார்க்கு முத்தியடி. 52

பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
     சந்தத முத்தியடி குதம்பாய்
     சந்தத முத்தியடி. 53

ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
     ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
     ஊமைக்கு முத்தியடி. 54

மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு
     வந்தெய்தும் முத்தியடி குதம்பாய்
     வந்தெய்தும் முத்தியடி. 55

அந்தக் கரணம் அடங்க அடக்கினால்
     சொந்தம் பிரமமடி குதம்பாய்
     சொந்தம் பிரமமடி. 56

தாய்குச் சரியான தற்பரம் சார்ந்திடில்
     வாய்க்கும் பதவியடி குதம்பாய்
     வாய்க்கும் பதவியடி. 57

சுத்த பிரமத்தைத் தொந்தமென்று ஓட்டினால்
     சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
     சித்திக்கும் முத்தியடி. 58

கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல் வத்தை
     ஒன்றினால் முத்தியடி குதம்பாய்
     ஒன்றினால் முத்தியடி. 59

கைக்கனி போலவே காசறு பிரமத்தில்
     சொக்கினால் முத்தியடி குதம்பாய்
     சொக்கினால் முத்தியடி. 60

நித்திய வத்துவை நீங்காது நாடினால்
     முத்திதான் சித்திக்குமே குதம்பாய்
     முத்திதான் சித்திகுமே. 61

தேகத்தைப் பழித்தல்

பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
     வாசனை ஏதுக்கடி குதம்பாய்
     வாசனை ஏதுக்கடி. 62

துற்கந்த மாய்மலம் சோரும் உடலுக்கு
     நற்கந்த மேதுக்கடி குதம்பாய்
     நற்கந்த மேதுக்கடி. 63

நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
     பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
     பூச்சுத்தான் ஏதுக்கடி. 64

சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
     மேலை மினுக்காமடி குதம்பாய்
     மேலை மினுக்காமடி. 65

பீவாச முள்ளவள் பீறலு உடம்புக்குப்
     பூவாச மேதுக்கடி குதம்பாய்
     பூவாச மேதுக்கடி. 66

போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு
     நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
     நீராட்டம் ஏதுக்கடி. 67

சீயு நிணமுந் திரண்ட உடம்பினை
     ஆயுவ ஏதுக்கடி குதம்பாய்
     ஆயுவ ஏதுக்கடி. 68

காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
     வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
     வாகனம் ஏதுக்கடி. 69

கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
     பூவணை ஏதுக்கடி குதம்பாய்
     பூவணை ஏதுக்கடி. 70

பரத்தயரைப் பழித்தல்

நெடுவரை போலவே நீண்ட கனதனம்
     நடுவாக வந்ததடி குதம்பாய்
     நடுவாக வந்ததடி. 71

கையால் அழைப்பது போல் உனது கண்
     மையால் அழைப்பதென்ன குதம்பாய்
     மையால் அழைப்பதென்ன. 72

முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்தபல்
     உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய்
     உதிர்ந்து கிடக்குமடி. 73

கழறும் கிளிமொழி காலஞ் சென்றாலது
     குளறி அழியுமடி குதம்பாய்
     குளறி அழியுமடி. 74

வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
     தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
     தளர்ந்து விழுந்திடுமே. 75

பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல்
     சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய்
     சுருக்கம் விழுந்திடுமே. 76

கொள்ளை யாகக் கொழுத்தே எழுந்த கண்
     நொள்ளைய தாய்விடுமே குதம்பாய்
     நொள்ளைய தாய்விடுமே. 77

மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும்
     பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய்
     பஞ்சுபோல் ஆகிடுமே. 78

பொன்னாலே செய்யாடி போன்ற உன்கன்னங்கள்
     பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய்
     பின்னாலே ஒட்டிவிடும். 79

நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும்
     வில்லாய்ப்பின் கூனிவிடும் குதம்பாய்
     வில்லாய்ப்பின் கூனிவிடும். 80

முந்தி நடக்கின்ற மொய்ம்பும்சின் னாளையில்
     குந்தி இருக்கச் செய்யும் குதம்பாய்
     குந்தி இருக்கச் செய்யும். 81

பிறக்கும்போது உற்ற பெருமையைப் போலவே
     இறக்கும்போது எய்துவிடும் குதம்பாய்
     இறக்கும்போது எய்துவிடும். 82

நலம் நிலைமை

கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
     பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
     பாபத்துக்கு ஏதுவடி. 83

கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
     பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
     பள்ளத்திற் தள்ளுமடி. 84

பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு
     இருளாம் நரகமடி குதம்பாய்
     இருளாம் நரகமடி. 85

கற்புள்ள மாதைக் கலக்க நினைக்கினும்
     வற்புள்ள பாவமடி குதம்பாய்
     வற்புள்ள பாவமடி. 86

தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது
     கீழாம் நரகமடி குதம்பாய்
     கீழாம் நரகமடி. 87

சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு
     நித்தம் நரகமடி குதம்பாய்
     நித்தம் நரகமடி. 88

எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத்
     தப்பா நரகமடி குதம்பாய்
     தப்பா நரகமடி. 89

பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
     ஏழாம் நரகமடி குதம்பாய்
     ஏழாம் நரகமடி. 90

காயம் எடுத் தாதி கர்த்தரை எண்ணார்க்குத்
     தீயாம் நரகமடி குதம்பாய்
     தீயாம் நரகமடி. 91

அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்
     துன்பாம் நரகமடி குதம்பாய்
     துன்பாம் நரகமடி? 92

பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல்

செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
     எங்காகும் நல்வழியே குதம்பாய்
     எங்காகும் நல்வழியே. 93

மாத்திரைக் கோல்கொண்டு மாரீசஞ் செய்வார்க்குச்
     சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
     சாத்திரம் ஏதுக்கடி? 94

வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
     பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
     பெண்ணாசை ஏதுக்கடி? 95

ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக்
     கப்பறை ஏதுக்கடி குதம்பாய்
     கப்பறை ஏதுக்கடி? 96

சான்றோர் எனச் சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
     மான்தோல் ஏதுக்கடி குதம்பாய்
     மான்தோல் ஏதுக்கடி. 97

நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்
     தாடிசடை ஏனோ குதம்பாய்
     தாடிசடை ஏனோ? 98

நாதற்கு உறவாகி நற்தவம் சார்ந்தோர்க்குப்
     பாதக் குறடுமுண்டோ குதம்பாய்
     பாதக் குறடுமுண்டோ? 99

தபநிலை கண்டாதி தன்வழி பட்டோர்க்குச்
     செபமாலை ஏதுக்கடி குதம்பாய்
     செபமாலை ஏதுக்கடி? 100

பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு
     லங்கோ டேதுக்கடி குதம்பாய்
     லங்கோ டேதுக்கடி? 101

நிலையாப்பொருள்

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
     நாடி வருவதுண்டோ? குதம்பாய்
     நாடி வருவதுண்டோ? 102
போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
     சாம்போது தான்வருமோ? குதம்பாய்
     சாம்போது தான்வருமோ? 103

காசினிமுற்றாயுன் கைவச மாயினும்
     தூசேனும் பின்வருமோ? குதம்பாய்
     தூசேனும் பின்வருமோ? 104

உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
     பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
     பெற்றார்துணை யாவரோ? 105

மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
     பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய்
     பொய்ப்பணி ஏதுக்கடி? 106

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
     மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
     மண்ணாசை ஏதுக்கடி? 107

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
     யானையும் நில்லாதடி! குதம்பாய்
     யானையும் நில்லாதடி! 108

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
     தங்காது அழியுமடி! குதம்பாய்
     தங்காது அழியுமடி! 109

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
     கூடவே வாராதடி! கும்பாய்
     கூடவே வாராதடி! 110

தன்னோடு செல்பவை

நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
     செல்வன் நிச்சயமே குதம்பாய்
     செல்வன நிச்சயமே. 111

செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
     எய்த வருவனவே குதம்பாய்
     எய்த வருவனவே. 112

முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
     பத்தியும் பின்வருமே குதம்பாய்
     பத்தியும் பின்வருமே. 113

ஆசையை ஒழித்தல்

இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது
     நிச்சய மாகுமடி குதம்பாய்
     நிச்சய மாகுமடி. 114

வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
     நல்ல துறவாமடி குதம்பாய்
     நல்ல துறவாமடி. 115

ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற
     ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய்
     ஓசையைக் கேட்டிலையோ? 116

தேக்கிய ஆசையைச் சீயென்று ஒறுத்தோரே
     பாக்கிய வான்களடி குதம்பாய்
     பாக்கிய வான்களடி. 117

இன்பங்கள் எய்திட விச்சை உறாதார்க்குத்
     துன்பங்கள் உண்டாமடி குதம்பாய்
     துன்பங்கள் உண்டாமடி. 118

துறவிகள் ஆளாசை துறந்து விடுவரேல்
     பிறவிகள் இல்லையடி குதம்பாய்
     பிறவிகள் இல்லையடி. 119

தவநிலை கூறல்

கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
     நல்ல விரதமடி குதம்பாய்
     நல்ல விரதமடி. 120

தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள்
     அவநிலை யாவாரடி குதம்பாய்
     அவநிலை யாவாரடி. 121

தவமதை எந்நாளுஞ் சாதிக்க வல்லார்க்குச்
     சிவமது கைவசமே குதம்பாய்
     சிவமது கைவசமே. 122

காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
     ஏமன் பயப்படுவான் குதம்பாய்
     ஏமன் பயப்படுவான். 123

யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
     மோகந்தான் இல்லையடி குதம்பாய்
     மோகந்தான் இல்லையடி. 124

காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக்
     கோலங்கள் உண்டாமடி குதம்பாய்
     கோலங்கள் உண்டாமடி. 125

ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள்
     சம்புவைக் காண்பாரடி குதம்பாய்
     சம்புவைக் காண்பாரடி. 126

பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
     மெய்யவர் ஆவாரடி குதம்பாய்
     மெய்யவர் ஆவாரடி. 127

யான் என்ன தென்னும் இருவகைப் பற்றற்றோன்
     வானவன் ஆவானடி குதம்பாய்
     வானவன் ஆவானடி. 128

அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ் ஞானிக்கு
     நகுபிறப்பு இல்லையடி குதம்பாய்
     நகுபிறப்பு இல்லையடி. 129

பற்றறில் துன்பமும் பற்றறும் இன்பமும்
     முற்றாக எய்துமடி குதம்பாய்
     முற்றாக எய்துமடி. 130

அறிவு விளக்கம்

பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
     மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய்
     மெய்ஞ்ஞானம் வேண்டுமடி. 131

பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய
     அறிவு பெரிதாமடி குதம்பாய்
     அறிவு பெரிதாமடி. 132

தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால்
     தத்துவ ஞானமடி குதம்பாய்
     தத்துவ ஞானமடி. 133

அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டென்று
     கண்டது அறிவாமடி குதம்பாய்
     கண்டது அறிவாமடி. 134

முக்குற்றம் நீக்கமுயலும் மெய்ஞ் ஞானமே
     தக்கமெய்ஞ் ஞானமடி குதம்பாய்
     தக்கமெய்ஞ் ஞானமடி. 135

போதம் இதென்றுமெய்ப் போதநிலை காணல்
     போதமது ஆகுமடி குதம்பாய்
     போதமது ஆகுமடி. 136

சாதி பேத மின்மை

ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
     வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
     வீண்சாதி மற்றவெல்லாம். 137

பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
     தீர்ப்பாகச் சொல்வதென்ன? குதம்பாய்
     தீர்ப்பாகச் சொல்வதென்ன? 138

பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே
     தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய்
     தீர்ப்பாய்ப் படைத்தாரடி. 139

பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது
     கற்பனை ஆகுமடி குதம்பாய்
     கற்பனை ஆகுமடி. 140

சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல்
     தொட்டிடும் வத்தல்லவே குதம்பாய்
     தொட்டிடும் வத்தல்லவே. 141

ஆதி பரப்பிரமம் ஆக்கு மக்காலையில்
     சாதிகள் இல்லையடி குதம்பாய்
     சாதிகள் இல்லையடி. 142

சாதிவேறு என்றே தரம்பிரிப் போருக்குச்
     சோதிவே றாகுமடி குதம்பாய்
     சோதிவே றாகுமடி. 143

நீதிமானென்றே நெறியாய் இருப்பானே
     சாதிமா னாவாடி குதம்பாய்
     சாதிமா னாவாடி. 144

சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
     ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய்
     ஓதி உணர்ந் தறிவாய். 145

சமயநிலை கூறல்

தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்
     புன்புத்தி ஆகுமடி குதம்பாய்
     புன்புத்தி ஆகுமடி. 146

கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்
     புல்லறி வாகுமடி குதம்பாய்
     புல்லறி வாகுமடி. 147

அண்டத்தைக் கண்டு அநாதியில் என்பவர்
     கொண்ட கருத்தவமே குதம்பாய்
     கொண்ட கருத்தவமே. 148

பெண்ணின்ப முத்தியாய்ப் பேசும்பா டாண்மதம்
     கண்ணின்மை ஆகுமடி குதம்பாய்
     கண்ணின்மை ஆகுமடி. 149

சூரியன் தெய்மாய்ச் சுட்டுஞ் சமயந்தான்
     காரியம் அல்லவடி குதம்பாய்
     காரியம் அல்லவடி. 150

மனம்தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய
     இனமதி ஈனமடி குதம்பாய்
     இனமதி ஈனமடி. 151

பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
     கற்பனை ஆகுமடி குதம்பாய்
     கற்பனை ஆகுமடி. 152

நீண்ட குரங்கை நெடிய பருந்தினை
     வேண்டப் பயன்வருமோ? குதம்பாய்
     வேண்டப் பயன்வருமோ? 153

மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம்
     பொய்த்தேவைப் போற்றுமடி குதம்பாய்
     பொய்த்தேவைப் போற்றுமடி. 154

மந்திரநிலை கூறல்

நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்தெலாம்
     மேற்பற்றிக் கண்டறி நீ குதம்பாய்
     மேற்பற்றிக் கண்டறி நீ. 155

சட்கோணத்து உள்ளந்தச் சண்முக அக்கரம்
     உட்கோணத்து உள்ளறி நீ குதம்பாய்
     உட்கோணத்து உள்ளறி நீ. 156

ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே
     சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய்
     சிந்தையுள் கண்டறி நீ. 157

வாதநிலை கூறல்

ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
     வீறான முப்பாமடி குதம்பாய்
     வீறான முப்பாமடி. 158

விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால்
     வந்தது வாதமடி குதம்பாய்
     வந்தது வாதமடி. 159

அப்பினைக் கொண்டந்த உப்பினைக் கட்டினால்
     முப்பூ ஆகுமடி குதம்பாய்
     முப்பூ ஆகுமடி. 160

உள்ளக் கருவியே உண்மை வாதம் அன்றிக்
     கொள்ளக் கிடையாதடி குதம்பாய்
     கொள்ளக் கிடையாதடி. 161

பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
     மண்ணாலே இல்லையடி குதம்பாய்
     மண்ணாலே இல்லையடி. 162

ஐந்து சரக்கொடு விந்துநா தம் சேரில்
     வெந்திடும் லோகமடி குதம்பாய்
     வெந்திடும் லோகமடி. 163

வயித்தியங் கூறல்

முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்
     எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய்
     எப்பிணி தீர்ப்பாரடி. 164

எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற்
     விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய்
     விட்டோடும் நோய்கள் எல்லாம். 165

நாடி ஒருபது நன்காய் அறிந்திடில்
     ஓடிவிடும் பிணியே குதம்பாய்
     ஓடுவிடும் பிணியே. 166

சத்தவகை தாது தன்னை அறிந்தவன்
     சுத்த வயித்தியனே குதம்பாய்
     சுத்த வயித்தியனே. 167

வாயு ஒருபத்தும் வாய்த்த நிலைகண்டோன்
     ஆயுள் அறிவானடி குதம்பாய்
     ஆயுள் அறிவானடி. 168

ஆயுள் வேதப்படி அவிழ்த முடித்திடில்
     மாயும் வியாதியடி குதம்பாய்
     மாயும் வியாதிபடி. 169

கற்பநிலை கூறல்

பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்
     கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய்
     கற்பாந்தம் வாழ்வாரடி. 170

வேவாத முப்பூவை வேண்டி உண் டார்பாரில்
     சாவாமல் வாழ்வாரடி குதம்பாய்
     சாவாமல் வாழ்வாரடி. 171

விந்து விடார்களே வெடிய சுடலையில்
     வெந்து விடார்களடி குதம்பாய்
     வெந்து விடார்களடி. 172

தொல்லைச் சடம்விட்டுச் சுட்ட சடம்கொண்டோர்
     எல்லையில் வாழ்வாரடி குதம்பாய்
     எல்லையில் வாழ்வாரடி. 173

தோற்பையை நீக்கிநற் சோதிப்பை கொண்டவர்
     மேற்பைநஞ் சுண்பாரடி குதம்பாய்
     மேற்பைநஞ் சுண்பாரடி. 174

மாற்றினை ஏற்ற வயங்கும்நெடி யோர்களே
     கூற்றினை வெல்வாரடி குதம்பாய்
     கூற்றினை வெல்வாரடி. 175

தலங்களிவை எனல்

கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
     ஏயும் பலன் வருமோ? குதம்பாய்
     ஏயும் பலன் வருமோ? 176

சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற
     சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய்
     சுத்தத் தலங்களுண்டோ? 177

மெய்த்தலத்து இல்லாத மெய்ப்பொருள் ஆனவர்
     பொய்த்தலத் தெய்வத்துண்டோ? குதம்பாய்
     பொய்த்தலத் தெய்வத்துண்டோ? 178

சிற்பர்கள் கட்டுந் திருக்கோயில் உள்ளாகத்
     தற்பரம் வாழ்வதுண்டோ? குதம்பாய்
     தற்பரம் வாழ்வதுண்டோ? 179

தன்னால் உண்டாம்சிட்டி தன்னாலே சிட்டித்த
     புன்கோயில் உள்ளவன்யார்? குதம்பாய்
     புன்கோயில் உள்ளவன்யார்? 180

அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே
     இன்பான கோயிலடி குதம்பாய்
     இன்பான கோயிலடி. 181

தேவநிலை அறிதல்

தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது
     மன்னும் தலத்தெய்வதென்? குதம்பாய்
     மன்னும் தலத்தெய்வதென்? 182

இருந்த இடத்தில் இருந்தே அறியாமல்
     வருந்தித் திரிவதென்னோ? குதம்பாய்
     வருந்தித் திரிவதென்னோ? 183

காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
     ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
     ஈசனைக் காணுவையோ? 184

பூவதில் நாளும் பொருந்தித் திரியினும்
     தேவனைக் காணுவையோ? குதம்பாய்
     தேவனைக் காணுவையோ? 185

உள்ளங்கால் வெள்ளெலும்பாக உலாவினும்
     வள்ளலைக் காணுவையோ? குதம்பாய்
     வள்ளலைக் காணுவையோ? 186

போரினில் ஊசி பொறுக்கத் துணிதல்போல்
     ஆரியன் தேடுதலே குதம்பாய்
     ஆரியன் தேடுதலே. 187

சாதனை யாலே தனிப்பதஞ் சேரார்க்கு
     வேதனை யாகுமடி குதம்பாய்
     வேதனை யாகுமடி. 188

வேதனை நீங்கி விடாது தொடர்ந் தோரே
     நாதனைக் காணுவர்காண் குதம்பாய்
     நாதனைக் காணுவர்காண். 189

நாடில் வழக்கம் அறிந்து செறிந்தவர்
     நீடொளி காணுவரே குதம்பாய்
     நீடொளி காணுவரே. 190

அஞ்ஞானங் கடிதல்

மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
     நாளேது கோளேதடி குதம்பாய்
     நாளேது கோளேதடி. 191

தீட்டால் உடம்பு திறங்கொண்டிருக்கையில்
     தீட்டென்று சொல்வதென்னை? குதம்பாய்
     தீட்டென்று சொல்வதென்னை? 192

செத்தபின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால்
     சத்தம் அறிவாரடி குதம்பாய்
     சத்தம் அறிவாரடி. 193

தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
     சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
     சிந்தை தெளிந்திலரே. 194

பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க்கு உறுமென்றால்
     வெள்ளறி வாகுமடி குதம்பாய்
     வெள்ளறி வாகுமடி. 195

பந்தவினைக்கு ஈடாடிப் பாரிற் பிறந்தோர்க்குச்
     சொந்தமது இல்லையடி குதம்பாய்
     சொந்தமது இல்லையடி. 196

பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே
     தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய்
     தீர்ப்பாக எண்ணிடுவாய். 197

அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்குச்
     சொந்தமோ முத்தியடி குதம்பாய்
     சொந்தமோ முத்தியடி. 198

வேதியர் கட்டிய வீணான வேதத்தைச்
     சோதித்துத் தள்ளடியோ குதம்பாய்
     சோதித்துத் தள்ளடியோ. 199

தன்பாவம் நீக்காத தன்மயர் மற்றவர்
     வன்பாவம் நீக்குவரோ? குதம்பாய்
     வன்பாவம் நீக்குவரோ? 200

வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு
     மீள்வழி இல்லையடி குதம்பாய்
     மீள்வழி இல்லையடி. 201

வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்
     போதனை ஆகுமடி குதம்பாய்
     போதனை ஆகுமடி. 202

யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள்
     ஆகாத செய்கையடி குதம்பாய்
     ஆகாத செய்கையடி. 203

சாற்றும் சகுணங்கள் சந்தியா வந்தனம்
     போற்றும் அறிவீனமே குதம்பாய்
     போற்றும் அறிவீனமே. 204

ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல்
     ஞானம்இல் லாமையடி குதம்பாய்
     ஞானம்இல் லாமையடி. 205

அஞ்சனம் என்றது தறியாமல் ஏய்க்குதல்
     வஞ்சனை ஆகுமடி குதம்பாய்
     வஞ்சனை ஆகுமடி. 206

மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை
     தீய தொழி லாமடி குதம்பாய்
     தீய தொழி லாமடி. 207

கருவை அழித்துக் கன் மத்தொழில் செய்குதல்
     திருவை அழிக்குமடி குதம்பாய்
     திருவை அழிக்குமடி. 208

மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது
     சூரணம் ஆக்குமடி குதம்பாய்
     சூரணம் ஆக்குமடி. 209

பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே
     வெய்ய மயக்கமடி குதம்பாய்
     வெய்ய மயக்கமடி. 210

மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்குப்
     பொய்க்குறி யேதுக்கடி குதம்பாய்
     பொய்க்குறி யேதுக்கடி. 211

நாயாட்ட மாய் நகைத்துழல் மூடர்க்குப்
     பேயாட்ட மேதுக்கடி குதம்பாய்
     பேயாட்ட மேதுக்கடி. 212

மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத்
     தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
     தந்திரம் ஏதுக்கடி. 213

வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச்
     சேதம் மிகவருமே குதம்பாய்
     வேதம் மிகவருமே. 214

வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
     பட்டய மேதுக்கடி குதம்பாய்
     பட்டய மேதுக்கடி. 215

மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
     கற்பங்க ளேதுக்கடி குதம்பாய்
     கற்பங்க ளேதுக்கடி. 216

காணாமற் கண்டு கருத்தோ டிருப்பார்க்கு
     வீணாசை யேதுக்கடி குதம்பாய்
     வீணாசை யேதுக்கடி. 217

வஞ்சக மற்று வழிதனைக் கண்டோர்க்கு
     சஞ்சல மேதுக்கடி குதம்பாய்
     சஞ்சல மேதுக்கடி. 218

ஆதார மான அடிமுடி கண்டோர்க்கு
     வாதாட்ட மேதுக்கடி குதம்பாய்
     வாதாட்ட மேதுக்கடி. 219

நித்திரை கெட்டு நினைவோ டிருப்போர்க்கு
     முத்திரை யேதுக்கடி குதம்பாய்
     முத்திரை யேதுக்கடி. 220

தந்திர மான தலந்தனில் நிற்போர்க்கு
     மந்திர மேதுக்கடி குதம்பாய்
     மந்திர மேதுக்கடி. 221

சத்தியமான தவத்தி லிருப்போர்க்கு
     உத்திய மேதுக்கடி குதம்பாய்
     உத்திய மேதுக்கடி. 222

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
     வாட்டங்க ளேதுக்கடி குதம்பாய்
     வாட்டங்க ளேதுக்கடி. 223

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்கு
     சத்தங்க ளேதுக்கடி குதம்பாய்
     சத்தங்க ளேதுக்கடி. 224

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோருக்கு
     இச்சிப்பிங் கேதுக்கடி குதம்பாய்
     இச்சிப்பிங் கேதுக்கடி. 225

வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
     மோகாந்த மேதுக்கடி குதம்பாய்
     மோகாந்த மேதுக்கடி. 226

சாகாமற் றாண்டி தனிவழி போவார்க்கு
     ஏகாந்த மேதுக்கடி குதம்பாய்
     ஏகாந்த மேதுக்கடி. 227

அந்தரந் தன்னி லசைந்தாடு முத்தர்க்குத்
     தந்திர மேதுக்கடி குதம்பாய்
     தந்திர மேதுக்கடி. 228

ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு
     ஞானந்தா னேதுக்கடி குதம்பாய்
     ஞானந்தா னேதுக்கடி. 229

சித்திரக் கூட்டத்தைத் தினந்தினங் காண்போர்க்குப்
     பத்திர மேதுக்கடி குதம்பாய்
     பத்திர மேதுக்கடி. 230

முக்கோணந் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
     சட்கோண மேதுக்கடி குதம்பாய்
     சட்கோண மேதுக்கடி. 231

அட்டதிக் கெல்லால் அசைந்தாடும் நாதர்க்கு
     நட்டணை யேதுக்கடி குதம்பாய்
     நட்டணை யேதுக்கடி. 232

முத்திபெற் றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
     பத்திய மேதுக்கடி குதம்பாய்
     பத்திய மேதுக்கடி. 233

அல்லலை நீக்கி அறிவோ டிருப்பார்க்குப்
     பல்லாக் கேதுக்கடி குதம்பாய்
     பல்லாக் கேதுக்கடி. 234

அட்டாங்கயோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
     முட்டாங்க மேதுக்கடி குதம்பாய்
     முட்டாங்க மேதுக்கடி. 235

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
     யோகந்தா னேதுக்கடி குதம்பாய்
     யோகந்தா னேதுக்கடி. 236

மாத்தானை வென்று மலைமே லிருப்போர்க்குப்
     பூத்தான மேதுக்கடி குதம்பாய்
     பூத்தான மேதுக்கடி. 237

செத்தாமரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்குக்
     கைத்தாள மேதுக்கடி குதம்பாய்
     கைத்தாள மேதுக்கடி. 238

கண்டாரை நோக்கிக் கருத்தோ டிருப்போர்க்குக்
     கொண்டாட்ட மேதுக்கடி குதம்பாய்
     கொண்டாட்ட மேதுக்கடி. 239

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
     கோலங்க ளேதுக்கடி குதம்பாய்
     கோலங்க ளேதுக்கடி. 240

வெண்காய முண்டு மிளகுண்டு சுக்குண்டு
     உண்காய மேதுக்கடி குதம்பாய்
     உண்காய மேதுக்கடி. 241

மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்போர்க்குத்
     தேங்காய்ப்பா லேதுக்கடி குதம்பாய்
     தேங்காய்ப்பா லேதுக்கடி. 242

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்க்கு
     முட்டாக் கேதுக்கடி குதம்பாய்
     முட்டாக் கேதுக்கடி. 243

தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
     தேவார மேதுக்கடி குதம்பாய்
     தேவார மேதுக்கடி. 244

தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
     பின்னாசை யேதுக்கடி குதம்பாய்
     பின்னாசை யேதுக்கடி. 245

பத்தாவுந் தானும் பதியோ டிருப்போர்க்கு
     உத்தார மேதுக்கடி குதம்பாய்
     உத்தார மேதுக்கடி. 246

குதம்பைச்சித்தர் பாடல் முற்றும்
சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்