சிந்நயச் செட்டியார் இயற்றிய அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை காப்பு ஞாலத் தருணை நலிவகற்று நாயகற்குச் சீலத் தருணை சிலேடை வெண்பா - மாலைசொல யானை திறை கொண்ட தெனாதிதயக் கார்வரையில் யானை திறை கொண்ட விபம். நூல் மாகவிஞர் நூன்முகத்தில் வைணீகர் யாழிசையில் ஆக ரிவரும் அருணையே - நாகர் மெயிலாய வெற்பினான் மேம்படுதார் வேய்ந்த கயிலாய வெற்பினான் காப்பு . 1 முப்பொருளிற் றாபதரு மொய்தெருவிற் கந்துகமும் அப்பிரிய முந்தும் அருணையே - யொப்பரிய மாதார கத்தன் வயன்றுதித் தாரகத்தன் கேதார கத்தன் கிரி. 2 சீரங் கனையார் திருக்குஞ் சுரிகுழலும் ஆரம் பரிக்கும் அருணையே- யீரிரண் டாரண வாசிய னங்கண வாசியன் வாரண வாசியன் வாழ்வு . 3 நித்த விரதர் நியதியும் மாதவமும் அத்த மனத்தாம் அருணையே - பத்தரது மாச யிலத்தன் மனமாந் தனியிலத்தன் சீச யிலத்தன் சிலம்பு . 4 தேறு கலைப் பயில்வுந் தேங்குமுயிர் நீங்குநரும் ஆறுதலை யாக்கும் அருணையே - மாறனடித் தேக ரணத்தான் செலாத கரணத்தான் கோக ரணத்தான் குடி . 5 ஆத்தி கரைத்தீர்க்கும் அருணையே - மூத்தமக னாங்கானை மாடத்தா னாகட்பெற் றூர்ந்தபெம்மான் றூங்கானை மாடத்தான் றோய்வு . 6 மேதகுகல் லூரிகளின் மெய்யுணர்ந்தார் பொய்யுடம்பில் ஆதரங் கூரா அருணையே - மோதகழி நீடலை யாற்றிருந்தார் நில்லாமே யோட்டேடுக்குங் கூடலை யாற்றிருந்தார் குன்று. 7 மேவாப் பெய் யென்றஞ்சி வேந்துமுரு விற்சுரரும் ஆவா கணிமே வருணையே - யேவாய் நதிணகத் தலத்தா னகுகைத் தலத்தா னதிகைத் தலத்தான னகம். 8 வேக வமர்க்களமு மேலோ ரவைக்களமும் ஆகமங்க ணாடும் அருணையே - யாக கருத்தா சலமுற்றான் காதலன்பர் தம்பால் விருத்தா சலமுற்றான் வீடு . 9 ஒற்றரொன்னா ரூரி லொருவெள்ளம் யூபத்தில் அற்ற மறியும் அருணையே- தெற்றலுற்ற வேணி குழியான் வியோ மகங்கை பாய்ந்துமன்று மாணி குழியான் மனை . 10 காமருப டப்பைகளிற் கார்குலங்கள் சீர்க்கிடங்கில் ஆமலக மாரும் அருணையே - சாமத்தை மெச்சியே கம்பத்தான் மேலொழித்த கம்பத்தான் கச்சியே கம்பத்தான் காப்பு . 11 சாற்றுமட வார்வயிறுஞ் சார்ந்தவரைத் தேர்ந்தவரும் ஆற்றுப் படுக்கும் அருணையே - கூற்று வருமேற் றளியார் வதைப்பரவ ராய திருமேற் றளியார் சிலம்பு. 12 உத்தமகு லச்சேயு மொண்குமுதப் பூந்தடமும் அத்துவரி நேரும் அருணையே - பத்தர் சினேகதங் காவதத்தார் தேவனென்பார்க் காக்கு மனேகதங் காவதத்தா ரார்பு. 13 மாதரெழிற் செய்குன்றும் வாயிலின் கண்வேரமுஞ்செய் யாதவரை யேய்க்கும் அருணையே - யேதங் குறிக்காரைக் காட்டான் கொடுங் காலனுக்கு நெறிக்காரைக் காட்டா னிலம் . 14 முத்தருள நிந்தனைக்கு மொய்குழலார் நீள்விழிக்கும் அத்தியந்த மாறும் அருணையே - சத்தி கரங்கணின்முட் டத்தான் கருளுலகுக் காக்குங் குரங்கணின்முட் டத்தான் குடி. 15 மங்குலொலி யாலளையின் மண்புரப்பார் திண்புயத்தில் அங்கதம லங்கும் அருணையே - கங்குலிற்றீஞ் சொற்கோல மாதேவன் றொண்டனை முயங்குகென்ற விற்கோல மாதேவன் வீடு . 16 பற்கல் வரநதியும் பண்பிகவாச் சாற்றோரும் அற்பரவைக் கோடும் அருணையே - பொற்பக் கருவாலங் காட்டினான் கண்டமட்டுந் துய்த்துத் திருவாலங் காட்டினான் சேர்பு. 17 கொம்பனையார் நம்புகற்பில் கோயிலின்றி வீற்றிடத்தில் அம்ப லமலா அருணையே -யும்பருய்ய உண்பாக்க மைந்தனுசி தநஞ்சு முண்டமைந்தன் வெண்பாக்க மைந்தன் விருப்பு. 18 காட்டிற் கடுந்தரக்குங் கண்ணார் கவினரங்கும் ஆட்டைக் கலக்கம் அருணையே - கேட்டெழும்பூ பாளத் திநகரன் பன்மாந் தினகரன் காளத் திநகரன் காப்பு. 19 இல்லவர்க்கு வள்ளியோ ரீகையுமா னார்கதுப்பும் அல்லகண்ட மாற்றும் அருணையே - நல்லமுது நீதி புரியார் நினைத்த படியுரியா ராதி புரியா ரகம் . 20 போற்றலர்கண் றேண்ணவரும் பொற்புணையை நீவாரும் ஆற்றலைத்து கைக்கும் அருணையே - யேற்ற புலிதாய வாசன் புலிதாய வாசன் வலிதாய வாசன் மனை 21 மேயோர்க்குச் சத்திரமும் வேழக்கு மீளிகளும் ஆயோ தனமூட் டருணையே - தீயோர் திடமுல்லை வாயிலார் சிந்தைபலி கொண்ட வடமுல்லை வாயிலார் வாழ்வு. 22 பூவையர்தோள் புல்லினரும் போர்க்களத்திற் பேய்க்கணமும் ஆவலங் கொட்டும் அருணையே - தாவி வருவிடைச்சு ரத்தன் மதுக்குழலி பாகன் றிருவிடைச்சு ரத்தன் சிலம்பு. 23 சேண்டொடவேள் கோட்டத்திற் றேனிசை கேட்டீர்ம்பொழிலில் ஆண்டலை யசைக்கும் அருணையே - வேண்டுநரை நோத கிரியா னுவலருஞ்சீ ரங்கிரியான் வேத கிரியான் விருப்பு. 24 கார்க்கு நிகர் தடக்கைக் காவலருங் காவலரும் ஆர்க்கு மளிகூர் அருணையே - போர்க்குநவை யிச்சிறுபாக் கத்தன் பிலிக்கு மிரங்கியரு ளச்சிறுபாக் கத்த னகம். 25 ஆயத் தியங்கா அருணையே - மாயன் றுருவக் கரையான் றெழார்க்குக் கரையான் றிருவக் கரையான் சிலம்பு . 26 வேய்ந்தபுகழ் நாற்சாதி மேவகத்துங் காவகத்தும் ஆந்தருமஞ் சாரும் அருணையே - காந்தள் பொரும்பைமா காளத்தார் பூண்டு களிக்கு மிரும்பைமா காளத்தா ரில் . 27 தக்கவர்சார் மற்றையருஞ் சால்பரத்தி மார்கலனும் அக்கதை யேற்கும் அருணையே - பிக்கை யுணாவிற் கலந்தா னுடைதலைக லந்தா னணாவில் கலந்தா னகர். 28 தாவற்றோர் தாழ்ந்தாரைத் தையலர்கால் சஞ்சலத்தை ஆவத்துக் காக்கும் அருணையே - தேவியொடு கொஞ்சமாக் கூடலான் கொஞ்சியங்ஙன் கூடலான் வெஞ்சமாக் கூடலான் வீடு 29 வாரா வருந்தவர்க்கு மைந்தருமின் னார்விழியும் ஆரா தநஞ்செய் அருணையே - போராற்றி யாண்டிக் கொடுமுடியா னாய்முடிய வேளைவென்ற பாண்டிக் கொடுமுடியான் பற்று. 30 நம்பினார்க்குச் சித்தியொரு நாலிரண்டு மீராறும் அம்பிகைவ ழங்கும் அருணையே - வெம்பியெழு நஞ்சைக் களத்தா னராயணன்கா னாக்களத்தா னஞ்சைக் களத்தா னகம் 31 மையுண்கண்ணார் நுசுப்பும் வண்டலையுந் தண்டலையும் ஐயம் புகுக்கும் அருணையே - வையைமண்முன் கல்லைச் சிற்றம்பலத்தன் கௌரியெச் சிற்றம்பலத்தன் றில்லைச் சிற்றம்பலத்தன் சேர்பு 32 வாக்கியத் தான்றோரு மாலை யினைஞருஞ்சை யாக்கிரக மண்ணும் அருணையே - நோக்கி னுருக்கழிப் பாலையா னுற்றிடப்பு ரிந்த திருக்கழிப் பாலையான் சேர்பு. 33 பூசா கிரியைகளைப் புங்கவர்துன் னாரைமன்னர் ஆசாரத் தாக்கும் அருணையே - மாசா மவேதகா னத்தான் வழுத்தலர்கா னத்தான் சுவேதகா னத்தான் றொடர்பு. 34 செவ்வியோர் நெஞ்சிற் சிறப்புறா வீதிகளில் அவ்வியமு ழக்கும் அருணையே - தெவ்வை யுழுமலவி ருப்பா னுளத்தகவி ருப்பான் கழுமலவி ருப்பான் கலப்பு . 35 தீனமைந்தர் மொய்ம்பாற் றெருவுதொரு மங்கலத்தால் ஆனகந்தி ளைக்கும் அருணையே - நானத் தொடைமுடி வள்ளல் சுரிகுழலாள் பங்கன் கடைமுடி வள்ளல் கலப்பு . 36 மன்னியவேழ் மஞ்சினொடு மால்வரையு மாண்டவரும் அன்னியமஞ் சாடும் அருணையே - துன்னுபிலம் விண்ணிப் படிக்கரையன் வெம்பவவே லைக்கரையன் மண்ணிப் படிக்கரையன் வாழ்வு . 37 கங்கணக ரத்தியர்கண் கண்டாருங் கைரவமும் அங்கணம் பூக்கும் அருணையே - தங்கண் விருப்பனந் தாளார் விரவரிய தாளார் திருப்பனந் தாளார் சிலம்பு . 38 சோதித் தருவுந் துரிய நிலையினரும் ஆதித் தனைத்தே றருணையே - வேதியர்க ளோம்பழ னத்தினா ணொண்பழ நத்தினான் பூம்பழ னத்தினான் பூ. 39 பூமாண் பொழிலிற் புறவத்தில் வேங்கையால் ஆமா விரியும் அருணையே - சாமாந்தர் மையாற்றி னையன் மறுத்தஞ்ச லென்றருள்செ யையாற்றி னைய னகம். 40 தப்பருநீள் காவுந் தளிதொறும்வி நாயகரும் அப்ப மிசையும் அருணையே - யொப்புயர்வின் மெய்த்தான மாட்சியான் மேவாத மாட்சியா னெய்த்தான மாட்சியா னேர்வு. 41 பேசுபுல வோர்மனைப்புன் பேதையரும் வாவிகளும் ஆசிரியம் பாடும் அருணையே - நேச மருவானைக் காவான் மருந்தெனக் காவான் றிருவானைக் காவான் சிலம்பு. 42 இம்மையொடு ஞானியரு மேற்பாருக் கீவாரும் அம்மை கடுக்கும் அருணையே - யெம்மையாள் மைஞ்ஞீலி யத்தன் மழுமா னணியத்தன் பைஞ்ஞீலி யத்தன் பதி. 43 மாசறக்கற் றோர்வாக்கின் மாதரார் பார்வைகளின் ஆசு கமழும் அருணையே - தேசுடையைந் தேச்சிலாச்சி ராமமத்தா ரீர்ஞ்சடையா யென்னவருள் பாச்சிலாச்சி ராமத்தார் பற்று . 44 காசினதி தோய்ந்தவர்க்குங் காரிகையார் தோய்ந்தவர்க்கும் ஆசை யகற்றும் அருணையே - பேசளவி னாட்போக்கி யம்மா னளித்தான் றேடும்மம்மான் வாட்போக்கி யம்மான் மனை. 45 மெத்துகுணத் தார்முனிவும் வேண்ட லர்கண் மாரதரும் அத்திரமேவும் அருணையே - துத்தி யராப்பள்ளிக் கண்வளர்வா னம்புயத்தான் போற்றச் சிராப்பள்ளிக் கண்வளர்வான் சேர்பு. 46 மந்திரிகள் வேறிசைந்த மந்திரத்திற் பொய்கைகளில் அந்தரங்கஞ் சூழும் அருணையே - நந்த மடுங்கள வண்ணலா ராசையற்றாற்க் குற்றார் நெடுங்கள வண்ணலார் நேர்வு. 47 நாயகருடன் சென்ற நல்லாரை வேய்ங் குழலை ஆயர் குறிக்கும் அருணையே - நேயந்தஞ் சாந்துருத் திக்கண்ணார் தாமுணர்சோ திக்கண்ணார் பூந்துருத் திக்கண்ணார் பூ. 48 செம்பவள வாய்ச்சியர்கள் சிற்றிடைக்குங் கட்கடைக்கும் அம்பர மழுங்கும் அருணையே - தம்புகழ்ச்சிப் பாற்றுத் துறையார் பவமகலப் பாராத சோற்றுத் துறையார் தொடர்பு. 49 தேடவருங் கேயமுந் தீர்ந்தொருவா றாற்றுநரும் ஆடவரைக் கண்ணும் அருணையே - சாடுவிட முன்குடித் திட்டையன் முன்னோர்க்காத் திட்டையன் றென்குடித் திட்டையன் சேர்பு . 50 அல்குலைத் தூற்றும் அருணையே - பல்கலைதேர்ந் துள்ளமங்கை யுள்ளா ருணர்விற் புணர்வரியார் புள்ளமங்கை யுற்றார் புரம் . 51 புங்கவர்கள் பூசனையைப் பூதவேள் விச்சமித்தை அங்கி கரிக்கும் அருணையே - திங்களணி நக்கரப் பள்ளியார் நான்முகிலை வேணிவைத்த சக்கரப் பள்ளியார் சார்பு . 52 கண்டுமொழி யார்மருங்குங் காப்பமைந்த நீண்மதிலும் அண்டந் தரிக்கும் அருணையே- மண்டுபவ வேலைத் துறையான் விழாமே யெடுத்தாண்ட பாலைத் துறையான் பதி. 53 தம்மிலமின் னார்மனையிற் சத்திநிபா தத்தருள்ளில் அம்மனை யாடும் அருணையே - தம்மிடத்துப் பத்திமுற் றத்திருப்பான் பாவியர்கள் பாழ்மனத்தைச் சத்திமுற் றத்திருப்பான் சார்பு. 54 சுத்தமறைக் கந்தணருந் துன்றுகல்லில் வாணிபரும் அத்த முரைக்கும் அருணையே - சித்தசற்சொல் கட்டீச் சரத்தான் கருத்திற் கசோசரத்தான் பட்டீச் சரத்தான் பதி. 55 சந்ததந்தொ ழும்பரன்புந் தாயாரை நந்தனரும் அந்தரியா கத்தாழ் அருணையே - முந்த நலஞ்சுழிச் சம்பு நடைத்துரகம் விற்ற வலஞ்சுழிச் சம்பு மனை. 56 போகுயர்காப் பூந்துணரும் புக்கறியாக் காலனெஞ்சும் ஆகுல மேயும் அருணையே - யோகை நடமூக் ககத்தார் நணுக வெளியார் குடமூக் ககத்தார் குடி. 57 தாரிளைஞர் மார்பகமுஞ் சைவவிபூ திப்பொலி ஆர மணக்கும் அருணையே - மாரனெய்த வில்லம் புணர்ந்தான் விழித்தவனைக் கண்டிலா னல்லம் புணர்ந்தா னகர். 58 தேநந்து செய்யிற் சிவஞா னியருளத்தில் ஆநந்த மண்டும் அருணையே - தாநவனும் வேழம்ப மாதரித்தான் வெண்பொடியும் மாதரித்தான் கோழம்ப மாதரித்தான் குன்று . 59 பெண்மைமிக்கார் கண்ணும் பிறங்கு பொன்னாட்டிற் பரியும் அண்மைய வாவும் அருணையே- வண்ம நிறைசை யமலர் நெடுநீர்கொண் டான்றாழ் துறைசை யமலர் தொடர்பு. 60 மாசில் சுளையினறா வார்கனியை வண்மையரை ஆசினிதந் தீண்டும் அருணையே - மாசுணத்த கேயூர வாகரன் கேடிலருட் சாகரன் மாயூர வாகரன் வாழ்வு . 61 தொக்கவடி யார்மனமுந் தூயதுரு நீற்றுடம்பும் அக்கவட மல்கும் அருணையே - மிக்கவரா லெள்ளாறு வந்தா ரிழிகுழிபு கச்சிவந்தார் நள்ளாறு வந்தார் நகர். 62 ஏரியுறீஇ நீரை யெழுபுயலும் விப்பிரரும் ஆரியமு கக்கும் அருணையே - பேரியம்பி யும்பர்மா காள னுவந்தூது மாகாள னம்பர்மா காள னகம் . 63 எஞ்சுதலில் வேட்டத் திறைவருஞ்சை வக்குழுவும் அஞ்சுமா னூக்கும் அருணையே - நெஞ்சி னலதைப் பதியார் நணுகாப் பதியார் திலதைப் பதியார் சிலம்பு . 64 மாண்டவெழிற் கன்னிமட வாரு மடிமைகளும் ஆண்டவரை நாடும் அருணையே - நீண்ட வுருப்பாய் புரத்தா னுமைசேர் புரத்தான் றிருப்பாம் புரத்தான் சிலம்பு .65 வேலைதோ றன்பினரு மிக்க சுவைக்கரும்பும் ஆலைய ருமரும் அருணையே - பாலுருவத் தாழி மிழலையா னம்பகங்கொண் டாழிநல்கு வீழி மிழலையான் வீடு . 66 சாகாதி யைக்கரியுந் தாம்பரித்தே ரைக்கிரியும் ஆகார மொக்கும் அருணையே - மோகப் பெருக லுடையார் பெறாத்தோ லுடையார் மருக லுடையார் மனை. 67 காண்டகுகி ழாரிலிளங் காலுமெய்யைத் தாபதரும் ஆண்டுபல வாட்டும் அருணையே - யீண்டுவையை நீத்தமங்கை யார்வா னிகழ்த்து குறட்களித் தான் சாத்தமங்கை யார்வான் றலம். 68 கல்லிதய நல்லார் கருங்குழலுஞ் செவ்வாயும் அல்லி குவிக்கும் அருணையே - மல்லிரித்த வாகைக்கா ரோணத்தான் மாலுநிரு வாணத்தா னாகைக்கா ரோணத்தா னாடு. 69 சேமவெண்ணீ றக்குநருஞ் சிற்பரந் தேர்ந்தாருளமு ஆமய மாயும் அருணையே - வாமத் தமலா லயத்தா னகநி லயத்தான் கமலா லயத்தான் கலப்பு . 70 பார்வருமா யுள்வேத பண்டிதரு நீத்தாரும் ஆர்வ மொழியும் அருணையே - கார்வல் லிரவையுண் மண்டளியா ரீர்ங்கோதை பாகர் பரவையுண் மண்டளியார் பற்று. 71 சீலத்தின் வேந்தர் திருப்பவனி யிற்பொழிலில் ஆலத்தி சுற்றும் அருணையே - சால வளம ரமருவா ரன்றெயின்மூன் றட்டார் விளம ரமருவார் வீடு. 72 தீரவுயர் சோலைகளிற் றேசிகர்தம் பொன்மனையில் ஆரவிட்ட மாட்டும் அருணையே - யேர மரவீர மாநகரன் மாயமதி லெய்த கரவீர மாநகரன் காப்பு. 73 கச்சுவிடா தாய்க்குலமுங் கற்பத்தால் யோகிகளும் அச்சுதனைப் போற்றும் அருணையே - நச்சி தலையாலங் காட்டா ரருச்சியார்க் கெட்டாத் தலையாலங் காட்டார் தலம் . 74 விற்பனர்வாய்ச் சொற்பொருளு மெய்யடியார் கண்ணிணையும் அற்புத மடுக்கும் அருணையே - வெற்பின் மடவாயி னம்பன் மணிநகைகாட் டென்னுங் குடவாயி னம்பன் குடி . 75 ஆலமர மானும் அருணையே - கால விரிதிநிய மத்தா னெமைத் தொழுவார்த் தீர்ந்தென் பரிதிநிய மத்தான் பதி . 76 திண்டடந் தோட்காவலருஞ் சேதாவின் சிஃறுயரும் அண்டரண்ட மாளும் அருணையே - தொண்டராய் மற்றோம மன்னன் மறுத்தடைந்தாரைப் புரக்குஞ் சிற்றேம மன்னன் சிலம்பு . 77 பூதரநேர் போதகமும் பொன்றாக் கொடை முரசும் ஆதரிக்க வேங்கும் அருணையே - வேதன் மருவுசாத் தாநத்தன் வாஞ்சாதா நத்தன் றிருவுசாத் தாநந்தன் சேர்பு . 78 சாடமரில் யானைகளுஞ் சால்வினைப் பொற்கம்மியரும் ஆடகமு ருக்கும் அருணையே - தோட மடும்பா வனத்தா னழல்போல் வனத்தா னிடும்பா வனத்தா னிடம் . 79 வாம்பரியோ டுந்தெருவின் மைந்தருந்தேனைச் சுரும்பும் ஆம்பல்வாய்த் துய்க்கும் அருணையே - வேம்பன் றருக்கடிக்கு ளத்தான் றழற்கடிக்கு ளத்தான் றிருக்கடிக்கு ளத்தான் சிலம்பு . 80 விஞ்சுற்ற தந்நிழன்மேல் வேழமுமே தக்காரும் அஞ்சக் கரமோ தருணையோ - கஞ்சனுயிர் வீட்டியத் தான்குடியான் வெய்யவிட மல்லவற்றை நாட்டியத் தான்குடியா னாடு. 81 ஊக்கமுளார் யாரு முறுகொலையை நுண்ணறிவும் ஆக்கத் தடுக்கும் அருணையே - பூக்கும் பெருவலிவ லத்தான் பிரியாவ லத்தான் றிருவலிவ லத்தான் சிலம்பு . 82 கத்திதீர் கானகத்திற் கற்றவர்செய் காவியத்தில் அத்தியா யஞ்சேர் அருணையே - பத்திமரீஇ மைச்சின மாண்டார் மனநச் சினமாண்டார் கைச்சின மாண்டார் கலப்பு . 83 யாகமனு விண்ணவரை யேற்றத்தார் சீற்றத்தை ஆகருட ணிக்கும் அருணையே - நாகத்து மின்றிருவாய் மூரன் மெலவரும்ப நோக்கிமகிழ் தென்றிருவாய் மூரன் சிலம்பு . 84 மங்கையர்கள் கொங்கையிலும் வான்றுறவர் செங்கையிலும் அங்கசனம் பெய்யும் அருணையே - நங்கைதும்பைப் போதா ரணியத்தன் பொன்முடி வளைத்த பிரான் வேதா ரணியத்தன் வீடு . 85 பம்பிசைக் காரளியும் பஃறொடையைக் காளையரும் அம்புயத்தி லார்க்கும் அருணையே- யெம்பாற் றவாதசாந் தத்தான் றகித்தசாந் தத்தான் றுவாதசாந் தத்தான் றொடர்பு . 86 துச்சரிகட் கான்றோருந் தோகையன்னார் கந்தரமும் அச்சங் கவிக்கும் அருணையே - நிச்சன் மனவாயி லுள்ளார் மதிவெறுத் தென்னுள்ளார் புனவாயி லுள்ளார் புரம் . 87 கஞ்ச முகத்தியர்கள் கையின் மலர்த்தடத்தில் அஞ்சங் குலாவும் அருணையே - விஞ்சுபய மற்றால மேயா ரமுதாக்கித் தாமேயார் குற்றால மேயார் குடி. 88 மின்னனையார் மென்னடைக்கு மேவு மதிதியர்க்கும் அன்ன மருளும் அருணையே - தன்ம வுருவாப்ப னூரா னுடையான் சடையான் றிருவாப்ப னூரான் சிலம்பு. 89 சிந்தனையின் மிக்கீவார் சீர்த்தியும டந்தையரும் அந்தரதிக் கேயும் அருணையே - சுந்தரர்க்கா வாடக மேவினா னாற்றிலிருந் தாவிபுக வேடக மேவினா னில் .90 மைவனத்த வேட்டுவரும் வாரணத்தைக் கேசரியும் ஐவனம டிக்கும் அருணையே - வைவளரும் வல்வே லிவருமான் வாகுதந்த சாமிதந்தை நெல்வே லிவருவா னேர்வு . 91 மிக்கார்வ நீடுதொண்டர் மெய்யைமட வார்மொழியை அக்கார மூடும் அருணையே - யெக்காலு நேவைத் திருப்பதியார் நெஞ்சோ வதிலுறையுந் தேவைத் திருப்பதியார் சேர்பு . 92 ஓங்கார மோர்ந்தா ருளத்திலிளை யார்தோளில் ஆங்காரந் துஞ்சும் அருணையே - பூங்கணைக்கை வேடானை வாழ்வான் விழிமுளரி சற்றலர்த்தி யாடானை வாழ்வா னகம் . 93 மாலதா மாடுகண்ட வெம்புலியுந் தண்பணையும் ஆலவா லங்காட் டருணையே - சீலத் தரங்குன்ற வாணர் தமைப்புரியா ரென்றும் பரங்குன்ற வாணர் பதி . 94 நிட்டா பரருமன்பர் நீடநின்றார் பான்மதனும் அட்டாங்கஞ் செய்யும் அருணையே - யொட்டாக் கழியற் பரமா கடியரணங் காய்ந்த சுழியற் பரமர் தொடர்பு . 95 பாடினர்க்குப் பார்த்திபரும் பலகதியிற் பாய்பரியும் ஆடிக் களிக்கும் அருணையே - மூடர் திருப்பத்தூ ரத்த னிடபத்தூ ரத்தன் திருப்பத்தூ ரத்தன் சிலம்பு. 96 போரரசர் பாழிமொய்ம்பிற் பூசுரச்சிறார் கிடையில் ஆரணங் கற்கும் அருணையே - கூருகிரி லூனப்பே ராளி யுரங்கிழித்துக் கொக்கரித்த வானப்பே ராளி கலப்பு. 97 மாண வுயர்ந்தோர் மனத்திலறச் சாலைகளில் ஆண வமிகும் அருணையே - வாணியைநீ மூக்கொடுங் குன்றன் முரணறவென் றஃதரிந்த மாக்கொடுங் குன்றன் மனை. 98 மானவய வீரர் மகாரினமும் வேதியரும் ஆனைவலங் கொள்ளும் அருணையே - வானக்கொண் மூவண வேந்தன் முளரியினான் காண்பரிய பூவண வேந்தன் புரம். 99 வாகைத்தார் மன்னவரும் வாச்சியமுந் தேங்கமலை ஆகத்து வைக்கும் அருணையே - பாகத்திற் காண மலையான் கருமலையான் செம்மலையான் கோண மலையான் குடி . 100 அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை முற்றிற்று |