வெ. ப. சுப்பிரமணிய முதலியார்

இயற்றிய

நெல்லைச் சிலேடை வெண்பா

விநாயகர் துதி

எல்லைவெண் பான்மதியை யேர்நயன மாவுடையார்
நெல்லைவெண் பாவை நிகழ்த்தவே - சொல்லருள்வா
ராரும்பொல் லாப்பிள்ளை யாலெனுமெ னுள்ளத்து
மாரும்பொல் லாப்பிள்ளை யார்.

சமயாசாரியர் துதி

என்புசிலை செங்கனரி யேழைபுணை பொன்பரியாக்
கன்பர்பதப் போதெனெஞ்சத் தார்ந்தொழுக்கு - மின்பருட்டேன்
பொங்கியெழீஇ வாயுமுற்றென் புன்கருத்துஞ் சொல்லும்விரா
யங்கவைதித் திப்பிக்கு மால்.

அவையடக்கம்

உமையாளின் வாயமுத முண்பான்பாம் பின்வா
யமையாலந் தன்னையு மார்வா - னமையாளு
ஞானசம்பந் தன்முதலோர் நற்பாக்கொள் வான்கொள்வா
னூனசம்பந் தத்தென்பா வும்.

நூல்

ஆடகஞா யில்சூ ழகழு மகழ்ப்புறமு
நீட வளவனஞ்சேர் நெல்லையே - சேடுமிகு
செவ்வேள்வி நாயகன் சேயராப் பெற்றபிரான்
செவ்வேள்வி நாயகன் சேர்வு. 1

கோலமுறு வாவிகளுங் கொங்கார் நெடும்பொழிலு
நீலமணி வானந்தேய நெல்லையே - பாலுறவேய்த்
தோளியுட னாடினான் றொந்தோ மெனமுன்பு
காளியுட னாடினான் காப்பு. 2

மல்லற்பூஞ் சோலையினு மள்ளருழு பண்ணையினு
நெல்லிக்காய் மேன்மையுறு நெல்லையே - வெல்லற்காம்
வேலேறு கைக்குமரன் வேழமுகன் றந்தைவெள்ளை
மாலேறு கைக்குமரன் வாழ்வு. 3

கூர்வெங் கடகரியுங் கோதையர்பூங் கொங்கைகளு
நேர்கந் துகத்தாக்கு நெல்லையே - நார்கொளன்ப
ராலியம திக்குறையா ராகச்செய் வார்சடைமேல்
வாலியம திக்குறையார் வாழ்வு. 4

சேடேய் சுரும்புமவை சேர்பொழிலும் வான்வாச
நீடே டுடைக்கவுறு நெல்லையே - பீடேறுஞ்
சக்கரக்கஞ் சக்கரத்தான் றாதாமுன் னோர்வினைகண்
மிக்கரக்கஞ் சக்கரத்தான் வீடு. 5

சுத்தசைவர் நாவினுக்குஞ் சூரரிரு தோளினுக்கு
நித்தனைந்தெ ழுத்தேயு நெல்லையே - கைத்தலத்து
மாதர்மா னங்கெடுத்தார் வண்டாரு காவனத்து
மாதர்மா னங்கெடுத்தார் வாழ்வு. 6

ஆதிபர்கள் பாலர்களு மாயர்கள்சி றாருநவ
நீதமின்பால் வாய்க்கவரு நெல்லையே - சோதிக்
கருடத் துவசுநத்தன் காணாக் கழலா
னருடத் துவசநத்த னார்வு. 7

தேரார் வயவர்களுஞ் செந்நீதி மன்றுகளு
நேரார் மனனடுக்கு நெல்லையே - யேரார்
தொடிவா ளிடத்தான் றுவக்கிச் சுவடீ
வடிவா ளிடத்தான் மனை. 8

ஆர்க்குறூஉ மாடல்புரி வாருஞ்சீ ரும்பொய்கை
நீர்க்கிரீ டிக்குறூஉ நெல்லையே - பார்க்கப்
புவிய கழுமுளத்தன் பூக்கண் புனைந்தான்
செவிய கழுமுளத்தன் சேர்வு. 9

முற்றலில்காய்க் காசையுற்றோர் மூத்தோர்த்தாழ் வோர்கழனி
நெற்றி கழலுறூஉ நெல்லையே - உற்றபத்த
ராயவ லம்புரியா ராயவ லம்புரியா
ராயவ லம்புரியா ரார்வு. 10

சீறுமத னும்மலைத் தீர்திறம்போய்ச் செய்திறமு
நீறுதைய லர்குளத்தேய் நெல்லையே - கூறுமிக்கை
வண்ணித்த கல்யாணர் மால்யானைக் கூட்டினா
ரொண்ணித்த கல்யாண ரூர். 11

ஆர்வமிஞ்சி நோற்பார்க்கு மாண்மைவிஞ்சி யேற்பார்க்கு
நேர்வரஞ்சித் திக்கையுறு நெல்லையே - நீர்வளைந்த
பூத்தூ விரதத்தார் பொன்னடியன் பார்க்கருளு
மாத்தூ விரதத்தார் வாழ்வு. 12

ஏர்வாய்மின் னார்கண் ணிகற்கும் விடநோய்க்கு
நேர்வா ளமருந்தீ நெல்லையே - சீர்வாணி
மங்களங்கொண் மூக்கறுப்பார் வாட்டுவிட முண்டொளிருந்
தங்களங்கொண் மூக்கறுப்பார் சார்பு. 13

தேறுசைவ ருங்கணவர்த் தீர்ந்தோரும் வெண்ணிலவி
னீறு புனைந்திடூஉ நெல்லையே - மாற
னடிச்சுவடு வேய்ந்தா ரடியார் சிரமே
லடிச்சுவடு வேய்ந்தா ரகம். 14

ஏத்துமின்னா ரும்மவர்முத் தின்வடம்பூண் கொங்கையுமின்
னீத்த வரையேய்க்கு நெல்லையே - மாத்தவத்தோர்
மாதருக்க கற்றுவார் மையலினை மற்றவர்த
மாதருக்க கற்றுவார் வாழ்வு. 15

சீர்செய்வய னத்தினமுஞ் சிற்சபையு ருத்திரனு
நேர்சின்முத்தி ரைக்கையுறு நெல்லையே - நார்செயுநெஞ்
சேயவயங் காவலா னேர்மதுரைச் சுந்தரனா
மேயவயங் காவலான் வீடு. 16

கோடாத வாய்மையினார் கூற்றும் பொருநையும்
நீடாக மங்கடக்கு நெல்லையே - சேடா
ரிலக்குமினா ராயண ணெண்கண்ண னாவி
னலக்குமினா ராயண னாடு. 17

கார்ச்செறிவார் மாதர்குழற் கற்றையுமெய்ப் பத்தருநன்
னீர்ச்சைவ லக்கணமேய் நெல்லையே - தேர்ச்சியிலா
மக்கடமைப் பாட்டான் வழுத்தார்க்கே முத்திநல்கு
மக்கடமைப் பாட்டா னகம். 18

வார்சந் தவிர்முலையார் வாயு முயிர்நூலு
நேர்செந் துவர்க்கமொழி நெல்லையே - சீர்செயிடப்
பாகத் திருந்திழையார் பாவனத்தைத் தாள்பற்றார்க்
காகத் திருந்திழையா ரார்வு. 19

கைதயங்கு வேலுமயற் காளையரு நெய்வோரு
நெய்தலைக்க ணெய்தலுறூஉ நெல்லையே - பைதன்முன்பின்
னின்றென்றற் காற்றகில ரின்றென்றற் காற்றகில
ரின்றென்றற் காற்றகில ரில். 20

போராம்ப னேர்முலையார் பூவாயுந் துர்க்கையுஞ்செந்
நீராம் பலியையுறு நெல்லையே - யாரூரர்
தூதுவிடப் போனகத்தன் சோதிமதி போனகத்தன்
காதுவிடப் போனகத்தன் காப்பு. 21

பொன்மயினேர் வார்முலையும் போற்றடியார் நெஞ்சகமு
நின்மலையங் கங்கடுக்கு நெல்லையே - முன்முவ்
வெயிலு முருத்தெரிப்பா ரேத்துநர்முன் பூதி
பயிலு முருத்தெரிப்பார் பற்று. 22

சேர்ந்துபல தேயத் தினரு மடந்தையரு
நேர்ந்திங் கணுதலையேய் நெல்லையே - வார்ந்து
குணக்கோடு மாற்றினான் கோலவரா கத்தின்
றிணக்கோடு மாற்றினான் சேர்வு. 23

வாசித் தவர்சபையின் மன்பிடா ரன்குழலி
னேசிக்கப் பாப்பாடு நெல்லையே - பேசைங்
கிருத்தியன டத்தினான் கேடிலா யோகர்
கருத்தியன டத்தினான் காப்பு. 24

தீர்கணவர் மாதர்நெஞ்சிற் றேங்கொன்றை யாலத்தில்
நேர்கனவில் வந்தழைக்கு நெல்லையே - வார்கவளின்
மன்மதனால் வாயார் மகனார் மயற்றுன்பு
மன்மதனால் வாயார் மனை. 25

பாலர்தலை பத்தான் படத்தைமய லோர்மதனை
நீலங்கை யேந்தலெனு நெல்லையே - கோல
முதுவையை யாற்றினான் முன்னிமய மீது
வதுவையை யாற்றினான் வாழ்வு. 26

சிற்குருசீ டற்குநோய் தீர்ப்போனூண் வேண்டாற்கு
நிற்குணசை வந்துறுமென் னெல்லையே - யெற்குவினை
யோடு தரித்திரந்தா னோட்டினன்வே தாதலையி
னோடு தரித்திரந்தா னூர். 27

ஏர்வைத்த மள்ளருநா ணேற்றிடுவின் மள்ளர்களு
நேர்வைக்கோற் போர்புரிய நெல்லையே - சார்வுற்ற
வொற்றைக் கலைத்தலையா ருள்ளன்பி லார்முமலப்
பற்றைக் கலைத்தலையார் பற்று. 28

கார்ச்செயங்கொள் பூங்குழலார் கைகளுநாற் பாலுநறு
நீர்ச்செயகஞ் சங்கடுக்கு நெல்லையே - சீர்ச்சைவ
ருச்சிப் பதிக்கத்த னொண்பூம் பதநல்குங்
கச்சிப் பதிக்கத்தன் காப்பு. 29

ஏர்புணரு மேகலையு மில்லமும்பந் தாடிடமு
நேர்புனிதம் பந்துறவா நெல்லையே - யோர்பைங்
கனிபுணர் கையார் கனிபுணர் கையார்
கனிபுணர் கையார் களன். 30

வாடுமிடை யார்தனத்து மாயோ கியர்மனத்து
நீடவம்ப டர்ந்திடூஉ நெல்லையே - கூடற்
றெருவருத்து வர்த்தகத்தன் தேமலரோன் பொய்ச்சொ
லருவருத்து வர்த்தகத்த னார்வு. 31

கோதாரீ யாரைக் கொடுப்பாரை யாசகர்க
ணீதாதா வாவென்னு நெல்லையெ - தூதாவோர்
மாதங் கடைவரலார் வந்தவலி தீரவுமை
பாதங் கடைவரலார் பற்று. 32

கோலமனை கொண்கனையக் கொண்கனில்லை முன்னிலையி
னீலவண னேர்வையெனு நெல்லையே - நாலிரண்டாத்
தொக்கவிருந் தோடிரண்டார் தூமுகமொவ் வொன்றனினு
மிக்கவிருந் தோடிரண்டார் வீடு. 33

தேர்திப் பியமணியுந் தீங்கீத வாணர்களு
நேர்செப்பி னாப்பணுறு நெல்லையே - நீருற்ற
மின்ப வளத்தாழ்வார் வேணியார் சத்திமுலை
யின்பவளத் தாழ்வா ரிடம். 34

காயத் திடங்கொண்மைந்தர் காலையினு மாலையினு
நேயத் திரியணைக்கு நெல்லையே - வேய்வெட்டப்
புத்திரத்தத் தம்பணானான் புத்திரனில் கண்ணனுக்குப்
புத்திரத்தத் தம்பணானன் பொற்பு. 35

ஆக்கமுன்னிச் சேணெறிச்செ லன்பர்களு ஞானியரு
நீக்கமுன்னி னைந்திடூஉ நெல்லையே - தேக்குபுக
ழோதியன்ப ராயினா ரூறொழிப்பார் மாலோடு
வேதியன்ப ராயினார் வீடு. 36

ஊடாப் புணர்வார்க் குறுமிரவுந் தாமரையு
நீடாக் கணங்கடுக்கு நெல்லையே - பீடார்
பொருநைத் துறையார் புரியார்த நெஞ்சிற்
கருநைந் துறையார் களன். 37

ஏர்நிறைகன் றுக்கிடைய ரின்செயுட்குப் பாவாணர்
நேர்நிரையின் பாலூட்டு நெல்லையே - சீரடிக்க
ணன்புதுக்கச் சார்வா ரமைக்க வருள்வார் வாமத்
தின்புதுக்கச் சார்வா ரிடம். 38

தூத்துறவோர் செம்மனமுந் துங்கநறும் பூஞ்சுனையு
நீத்துவல்லார் வந்தடுக்கு நெல்லையே - கூத்தன்
பழுதா வெழுத்தான் படப்பணையெண் டோளா
னெழுதா வெழுத்தா னிடம். 39

ஆர்பிழியுண் போருந்தோப் பாக்குநரு நீத்தோரு
நேர்பழங் கணட்டிடூஉ நெல்லையே - சூர்படுத்தோண்
மாதுருக்கங் காதரனார் மாதுருக்கங் காதரனார்
மாதுருக்கங் காதரனார் வாழ்வு. 40

தூவாச் சிரமத்துத் தூதுணமுங் குப்பைகளு
நீவார மேய்தரூஉ நெல்லையே - மேவூர்தி
யோதிமத்தி யாந்தமிலா ரொண்ணாவார்க் கண்ணாதார்
ராதிமத்தி யாந்தமிலா ரார்வு. 41

இச்சையற்ற யோகர்மனத் தின்மனவர் முன்றிலி
னிச்சலத்தி யானமுறு நெல்லையே - மெச்சுகர்மந்
தேவென்ற மையலார் தீமுனிவர் விட்டமத
மாவென்ற மையலார் வாழ்வு. 42

ஏரிலகு பூங்கொம்பு மெண்ணில் பலதீங்கு
நேரிழை யார்க்கடுக்கு நெல்லையே - சீரியகான்
மாறியபண் பாடினான் மாமரை யூரினிற்றே
னூறியபண் பாடினா னூர். 43

தேடுகுரு வைப்பணியுஞ் சீடர்களு மூர்நடுவு
நீடலைவாய்க் காலுறூஉ நெல்லையே - யாடுந்
திருப்பாப் பரசினார் சேரார்த்தெற் கன்றித்
திருப்பாப் பரசினார் சேர்வு. 44

கூர்செல் வருஞ்செல்வங் கூட்டுபொரு நைப்புனலு
நேர்செம் பியனண்ணு நெல்லையே - தேர்பல்
விதநோன் புணைதருவார் வெம்பவநீர் நீந்தப்
பதநோன் புணைதருவார் பற்று. 45

மைகுறித்துத் தீட்டிய கண் மாதருக்கு நெய்வோர்க்கு
நெய்குழல்வாய்ப் பெய்திடூஉ நெல்லையே - கைகுவித்து
வாயின்முத்த மானார் வணங்குகங்கா ளர்கோயில்
வாயின்முத்த மானார் விருப்பு. 46

கூர்வாஞ்சை வள்ளல்கைக்குங் கோதையர்கள் மென்றோட்கு
நேர்வே யெழிலினையும் நெல்லையே - நேராரைக்
கோலியிட்ட வித்தகத்தன் கூற்றுதைத்தோன் செந்நெலுக்கு
வேலியிட்ட வித்தகத்தன் வீடு. 47

பாரிற் சிவனைவந்திப் பாரும்வெய்யோ னுங்காலை
நேரத் துதிக்கையுறு நெல்லையே - சூரற்கொல்
செவ்வே ணுவனத்தன் சேய்மைத் துனனெனக்கொள்
செவ்வே ணுவனத்தன் சேர்வு. 48

ஓதறிஞர் வேந்தைமின்னா ருண்மனைவி யல்லாரை
நீதங்கை யாயென்னு நெல்லையே - நாதன்
அவிருத் தமனித்த னாய்க்குமரன் சேயாய்
அவிருத் தமனித்த னார்வு. 49

மாரனு மம்பிகையும் வாலியுஞ்சி வந்துதைய
னேரங்கஞ் சம்பூக்கு நெல்லையே - வாரள்ளிற்
செய்யக லாதனத்தன் செய்யக லாதனத்தன்
செய்யக லாதனத்தன் சேர்வு. 50

சீருறுமில் லங்களினுஞ் செய்யவளச் சோலையினு
நேருறுசெல் வந்துறூஉ நெல்லையே - பாரதனிற்
சுற்றுக்கோ டானான் றுயரா வணமெனக்குப்
பற்றுக்கோ டானான் பதி. 51

ஈரருத்த மாமயல்கொ ளேழை யவன்மேவ
நேரொருப்ப டுக்கீரென் னெல்லையே - மேரு
விவர்புடைவை யங்களிப்பா னேழையர்க்கு மால்போற்
கவர்புடைவை யங்களிப்பான் காப்பு. 52

நேர்வா யமுதமெனு நேயன் றனைமனையா
ணீர்வேட்கை மிக்கீரென் னெல்லையே - ஏர்வா
யுருவரக்கொன் றிட்டா ருடல்பவர்ப்பேய்க் கூணா
வெருவரக்கொன் றிட்டார் விருப்பு. 53

சித்திரமன் றிற்பத்தர் தேனாரில் லிற்றூதந்
நித்த னடந்திளைக்கு நெல்லையே - சித்தமதிற்
காமத் திகைக்கையார் காணார்வே தப்பரிமே
லாமத் திகைக்கையா ரார்வு. 54

சீர்தங் கிளைஞர்கணெஞ் சிற்செய் சிராத்தத்தி
னேர்தென் புலத்தாரேய் நெல்லையே - யாதினொடும்
வித்தியா சம்பன்னன் மேவா தெனநின்றான்
வித்தியா சம்பன்னன் வீடு. 55

வாளாளார் கார்க்கலவை மார்டள்ளு மேலுநேர்
நீளா சலமரூஉ நெல்லையே - கேளார்ச
மூகமொழிப் பித்தனத்தன் மோகினியா கப்புணர்ந்த
வேகமொழிப் பித்தனத்த னில். 56

தேறுசிவ பூசைசெயுஞ் சிட்டருமன் னோர்வினையு
நீறுபட்டு டையுறூஉ நெல்லையே - வீறுசடை
யந்தரப்பே ரம்பெய்தா ராலவாய்க் கண்மேனாள்
சுந்தரப்பே ரம்பெய்தார் சூழ்வு. 57

தேரிவரும் வீரர்களின் றெவ்வருமின் னார்நகையு
நேரினிலாத் தோற்றிடூஉ நெல்லையே - வாரியொடு
விந்தமடக் கங்கையார் மெச்சுபுக ழார்சடையிற்
சந்தமடக் கங்கையார் சார்வு. 58

பாரேத்தில் லங்கொல்லைப் பான்மடவார் நாயகர்பா
னீராவி யென்றுமுறு நெல்லையே - சீராரு
மாலவாய்க் கூடலா ரவ்வணிக மாதரார்
மேலவாய்க் கூடலார் வீடு. 59

வாடைகொய்வா ழைபார் மகளா ரமராடி
நீடமுது காற்றுறூஉ நெல்லையே - கூட
லிடையரைய ரானா ரிடையரைய ரானா
ரிடையரைய ரானா ரிடம். 60

ஆதிபனை வாதியுமா திபன் வாதியையு
நீதிகைப் பற்றுறுகென் னெல்லையே - ஓதிக்
கரிக்குருவி கற்பித்தார் கார்நிறநாற் கோட்டுக்
கரிக்குருவி கற்பித்தார் காப்பு. 61

ஆரமுலை யாலிடையில் லாள்புலப்பாற் கேண்மிகவெந்
நேரமுனை யுற்றிடத்தாழ் நெல்லையே - நீரொடுபுல்
கல்லேற்றுக் கூட்டினார் காற்கணன்ப ரைப்புகழுஞ்
சொல்லேற்றுக் கூட்டினார் சூழ்வு. 62

மாரிவரு முன்வருகேள் வன்றேரு மக்கேளு
நேரி யனைப்பொருவு நெல்லையே - சேரனுக்கு
மாதுரி யங்கடந்தார் வண்பா சுரமுய்த்தார்
மாதுரி யங்கடந்தார் வாழ்வு. 63

மேய விருந்தினரு மேதக்க நண்பினரு
நேய மனமடுக்கு நெல்லையே - காய்விற்
செருவுள்ளம் பற்றார் சிவணவன்பற் றார்க்குத்
திருவுள்ளம் பற்றார் செறிவு. 64

என்றும்விருந் தேற்பாரு மேழையர்கா தும்மளவா
நின்றவிருந் தோடுவந்தார் நெல்லையே - துன்றும்
புரிவார் சடையார் புரிவார்க்கின்பென்றும்
புரிவார் சடையார் புரி. 65

நீர்நசையுந் தெவ்வருயிர் நீங்காமை யுந்தோற்ற
நீரிற்புல் வாய்க்கவியா நெல்லையே - சேரும்
பொருப்புக் கொடிச்சியான் போற்றுதந்தை பொல்லார்
விருப்புக் கொடிச்சியான் வீடு. 66

தேர்சித்தர் வேட்டனவுந் தேமொழியார் கூட்டமது
நேர்சித் தினியையுறு நெல்லையே - காருற்
பலக்கணுடைப் பார்வதியார் பாகரன்பி லார்நெஞ்
சலக்கணுடைப் பார்வதியா ரார்வு. 67

தெய்வீக வாலயத்துத் தீபந் தறியுடைமை
நெய்வார்த் தெரித்திடூஉ நெல்லையே - செய்ய
குளக்கண் முளரியார் குற்றால வாணர்
குளக்கண் முளரியார் கோடு. 68

நாரியர்சீர் தேர்ந்துமண நாடுநர்க்கு மிந்நூற்கு
நேரிசைவெண் பாவைதுறு நெல்லையே - யேரிசைவெள்
அன்னஞ்சு னைத்தலையா ராரூரர்க் கன்பர்வெய்ய
அன்னஞ்சு னைத்தலையா ரார்வு. 69

நாரியரும் யாசகரு நாமகள்கச் சுங்கஞ்ச
னேரக் கழல்கையுறூஉ நெல்லையே - நாரணன்கண்
ணப்பனக னாரி யனப்பனக னாரிய
னப்பனக னாரிய னார்வு. 70

தின்னப் புதுக்கனியே தேடுநருங் கூர்விளைவு
நென்னற் பழனத்தா நெல்லையே - முன்னொர்
பெருவருத்தப் பாட்டினான் பேணச்சொல் கொங்கென்
றிருவருத்தப் பாட்டினான் சேர்வு. 71

போரி னணையிற் புறங்கொடுப்பா ரைக்குமரர்
நீரினுரை நேர்விரெனு நெல்லையே - பாரிமுலை
மாவடு வைத்தகத்தன் மார்பின்வைத்தான் வன்னியின்முன்
மாவடு வைத்தகத்தன் வாழ்வு. 72

தேர்கலைகற் பார்நெஞ்சுந் தேம்பொழிலின் மீமிசையு
நேர்கருமஞ் சாடியுறு நெல்லையே - கூர்கரிய
மேதிக் கடாவினான் வெம்பவன்பற் செற்றதென்னென்
றோதிக் கடாவினா னூர். 73

தேர்புலவோ ருங்குருடாற் றீக்கைசெய்து கொள்வோனு
நேர்புதனை யுங்கொடுக்கு நெல்லையே - சோர்பின்றி
வாகாய கங்கையினார் வன்னியுடை யார்சடையா
ராகாய கங்கையினா ரார்வு. 74

நார்சேர்கௌ மாரருக்கு நற்சைவர்க் கும்மனத்தே
நேர்சே வலவனுறு நெல்லையே - நீர்சோறுண்
டூன்றுறுகோ லங்காவா ரொண்பதமே போற்றிடுவார்க்
கூன்றுறுகோ லங்காவா ரூர். 75

ஏற்றுசைவா சாரியரு மில்லஞ் சமைப்பவரு
நீற்றிற் சுவர்க்கநல்கு நெல்லையே - நோற்றுக்
கணித்திரைம யக்கமுற்றார் காண்பவர்சென் னிக்கண்
மணித்திரைம யக்கமுற்றார் வாழ்வு. 76

ஐதமரும் வாச்சியசா லையிலன்ன சத்திரத்தி
னெய்தனிலத் தியாழுறூஉ நெல்லையே - கைதங்கி
வீணாகா நத்தன் விழியணிவான் கூடலிற்செய்
வீணாகா நத்தன் விருப்பு. 77

வீரருக்குப் போரினும்பாய் மீதினுமின் னார்செவ்வாய்
நேரமுது கிட்டிடூஉ நெல்லையே - பாரக்
கடலைக் கடைகையார் காவெனக்காத் தாடச்
சுடலைக் கடைகையார் சூழ்வு. 78

நண்டகையாண் ஞண்டும்பூ நாகமும ரும்பேட்டு
ஞெண்டுடம்ப டுத்தணையு நெல்லையே - தொண்டர்க்
கினிதவநி வந்தவ ரெண்கணன்கா ணாமே
நனிதவநி வந்தவர் நாடு. 79

நாரியர்க வானு நகிலுநெஞ்ச மும்மாலை
நேரம் பிடிக்கையுறு நெல்லையே - யாரணத்தி
னந்தரங்கத் தானனத்தா னந்தரங்கத் தானனத்தா
னந்தரங்கத் தானனத்தா னார்வு. 80
காமனுமே வேட்குமணங் காருமவர் கண்களு
நேமவுணர் வைப்படுக்கு நெல்லையே - தேமலரோ
னுச்சிதா னந்த னுயர்பதந்தான றேடநின்ற
சச்சிதா னந்தன் றலம். 81

ஏர்மிக்க கேளையில்லு மில்லவளைக் கேள்வனுமுன்
னீர்முத்தந் தாரீரென் னெல்லையே - சேர்முத்தி
மாசுபத வம்படையார் மாட்டுநல்கா - ரர்ச்சுனற்கீ
பாசுபத வம்படையார் பற்று. 82

போர்நவில்க ளத்தின்மயிர் போற்றுமபி மானிநெஞ்சி
னேர்நரைவாட் டாக்கழிக்கு நெல்லையே - கார்நஞ்சுண்
வாய்ப்ப வளத்தத்தன் மாயவற்குத் தங்கையென
வாய்ப்ப வளத்தத்தன் வாழ்வு. 83

மெச்சு முனிவரரு மெய்ஞ்ஞான தேசிக்கு
நிச்சத்த போதனஞ்செய் நெல்லையே - யிச்சை
யுளத்திருத்தஞ் செய்வார்க் குடல்பொடித்தா ரென்னை
மௌத்திருத்தஞ் செய்வார்க்கு வீடு. 84

தாரார் வயவர்முனுந் தன்பாற் பலவையினு
நேரார் மறுகுறூஉ நெல்லையே - சேர்தாள்
மனத்தெழுதப் பட்டார் வழுத்துவந்தன் னார்க்குக்
கனத்தெழுதப் பட்டார் களன். 85

தேர்காட்டு சேனையுமச் சேனையினெ ழுந்தூளு
நேர்காற் றுவசமுறு நெல்லையே - வார்காதிற்
றோடலங்கம் பைக்கத்தன் றோய்வார் பவமொழிக்கும்
பாடலங்கம் பைக்கத்தன் பற்று. 86

தையலரு மெய்யறிவாற் சாரங்கொள் ளார்மனமு
நெய்யரியிற் கோதையுறு நெல்லையே - மையலையோர்
வேதியன்றீ ரப்பணினான் வேணியில்விண் ணின்றும்மண்
மீதியன்றீ ரப்பணினான் வீடு. 87

கோடீர்க்குங் கல்விகற்றுக் கொள்ளுவோர் பொற்றூலி
நீடேர்ச் சிகைக்கணுறு நெல்லையே - பீடார்ந்த
செவ்விசா லாட்சியார் சேர்பாகர் கூடலிற்செய்
செவ்விசா லாட்சியார் சேர்வு. 88

ஓர்சொல்லி னோர்தங்க ளுண்மையும்வ யல்வளமு
நேர்சொல்லிக் காக்குறூஉ நெல்லையே - சீர்சொல்லி
வாழ்த்து முழுவலார் மார்க்கண்டிக் காவெமனைத்
தாழ்த்து முழுவலார் சார்பு. 89

ஓடையினீ ருந்தருங்கை யுங்குறங்குங் கற்பினரு
நீடருந்து திக்கையமேய் நெல்லையே - நாடுசங்கை
யாலமண்டை யோட்டத்த னாலமண்டை யோட்டத்த
னாலமண்டை யோட்டத்த னார்வு. 90

சர்வா பரணமினார் தம்மனமும் பாதுகையு
நிர்வா கனன்புணரு நெல்லையே - சர்வேசர்
மாசன்மார்க் கத்தர் வணங்கொன் பதிற்றேழு
தாசன்மார்க் கத்தர் தலம். 91

மெச்சுசிவ பூசைசெய்வோர் மெய்யுணர்வா னூலுணர்வோர்
நிச்சந்தே கப்பயன்கொ ணெல்லையே - முச்சகமு
முய்கை வரப்படைத்தா ரோர்வந்தி பிட்டுக்கு
வய்கை வரப்படைத்தார் வாழ்வு. 92

போரா டுடிகளத்தும் பூங்கழனிக் கப்புறத்து
நேரா ரணியங்கூர் நெல்லையே - காரார்
பொதியவரைச் சாரலார் போற்றாத பொல்லா
மதியவரைச் சாரலார் வாழ்வு. 93

தேடுபொரு ளாதிமேற் செல்வோரும் பூம்பொழிலு
நீடமது வைப்பொழியு நெல்லையே - நாடுமையைப்
பங்கி னிருத்தத்தன் பங்கயத்தை யொத்தகைக்க
ணங்கி னிருத்தத்த னார்வு. 94

வீறுசிவ பூசையைமா மெய்யரைத்துன் பட்டுப்பை
நீறுளிப்பூ சித்துவக்கு நெல்லையே - யீரிலா
வெட்டான திக்குடையா ரின்கங்கை யாம்வேதற்
கெட்டான திக்குடையா ரில். 95

ஆர்ந்தபகற் றேர்விருந்தங் காவணற் சாருறலு
நேர்ந்தழைக்கப் பெற்றிடுஉ நெல்லையே - தீர்ந்தமைக்காத்
தண்டமிழைப் பாடுறுவான் றன்பங்கு கொள்ளுமைகோன்
றண்டமிழைப் பாடுறூவான் சார்பு. 96

தேர்மாண் கலைகளாய் தேத்தினுந்தோப் பின்கண்ணு
நேர்மாந் தருவகையேய் நெல்லையே - கார்மேய்
நெடுங்காத் தடமார்ப னீள்பூ வண்பு
மொடுங்காத் தடமார்ப னூர். 97

வார்பொருநை யுஞ்சிவனை வந்திக்கு மன்பர்களு
நேர்பரசு கங்கையுழறூஉ நெல்லையே - யேர்கொ
ளுபய வரதனவல் லொத்தமுலை பாக
னபய வரத னகம். 98

காரிகையா ரல்குலுங்கொங் கையுமவர் பெண்மையதும்
நேரரசி லையென்றார் நெல்லையே - ஓரன்னற்
செந்தலையப் பண்ணினான் செந்தலையப் பண்ணினான்
சந்தலையப் பண்ணினான் சார்பு. 99

மாடார் பொருநையும்பா வாணரும்ப ழக்கடையு
நீடாம் பிரபலஞ்சேர் நெல்லையே - தோடார்
நளினா தனத்த னளினா தனத்த
னளினா தனத்த னகர். 100

நெல்லைச் சிலேடை வெண்பா முற்றிற்று