![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சிரவையாதீனம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இயற்றிய வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா அத்திஅணி யால்அம் பரவதின்மைக் கண்டத்தால் ஒத்திறைவன் ஆகும்வெள்ளி ஓங்கலே - பத்தித் துறைமருவும் தீரத்தார் சோர்வறுக்கும் கொன்றை நறை மருஉந் தீரத்தார் நாடு. 1 குளத்தடங்கண் வாய்த்துவரங் கொண்டல் படிஓதி வளத்துமைநேர் வெள்ளி வரையே - சளத்தமயற் போகமதிப் புன்குடிலர் பொன்றுநகை யொன்றுகொன்றை நாகமதிப் புன்குடிலர் நாடு. 2 வாலிபம்மிக் கம்பரக்கண் மாதருக்கா வற்றருமால் மேலிசைந்து மால்நிகர்க்கும் வெள்ளிவெற்பே - மால் இயைந்த கொன்றைச் சடையார் குழகாவென் பார்ஏவு ஒன்றைச் சடையார்தம் ஊர். 3 நால்வாயி னங்கலைமா னாமிசைபுல் ஆர்தலிற்பூ மேல்வாழ்வான் ஒக்கும்உயர் வெள்ளிவெற்பே - போல்வார்இல் மாதவத்தர் ஆரும் மருவும் திருமறையின் போதஅத்தர் ஆகும் புகல். 4 வாஞ்சித்த சித்திபுத்தி வல்லவையோர் தோய்ந்துசுக மீஞ்சித்தஞ் செய்கரிநேர் வெள்ளிவெற்பே - காஞ்சி உதிக்கும்மரன் றான்ஆகி ஓங்கிஅருள் ஞான மதிக்குமரன் தாதை மருவு. 5 ஆறுமுகம் வேடர் அணிக்காதற் கொள்மயில் ஊர் வேறுதையும் கந்தன்ஒக்கும் வெள்ளிவெற்பே - மாறு பட்ட புரத் தானவரைப் பல்ஓர் நகையால் அட்ட புரத்தான் அமர்வு. 6 தானவரை யங்கிளைக்கத் தண்டங்கண் டம்பரந்தோய் வேனயக்கும் கையன்நிகர் வெள்ளிவெற்பே - ஞான அருட் கற்புடையாள் வான்தலத்தைக் காத்தருள்சேய் நல்குமையாள் தற்புடை யான்வான் தலம். 7 மாலணையுங் காமருவி வாரமிக்குப் பூவிழித்து மேலமையும் பொன்நேரும் வெள்ளிவெற்பே - காலன்அகம் சிந்தத் திருப்பத்தர் சீர்மார்க்கண் டன்கொள்அர விந்தத் திருப்பதத்தர் வீடு. 8 கஞ்சத் தவளமொன்றிக் கானவரம் பைப்பெறலால் விஞ்சக் கலைமானாம் வெள்ளிவெற்பே - வஞ்சத்து இருப்பு மரன்நேர் இதயரும் முன்எய்திற் றிருப்பும் அரன்நேர் செறிவு. 9 வெள்வா ரணம்கருமை மேற்கொண் டெறிந்துவைரம் விள்வா சவன்கடுக்கும் வெள்ளிவெற்பே - உள்வார் இடர்அகல நீற்றும் உமையாளின் கொங்கை படர்அகல நீற்றுவார் பற்று. 10 வேழத் திருக்கைஅம்பு மீனத் துவசத்தின் வீழ்அனங்க வேள்புரையும் வெள்ளிவெற்பே - மேழகத்தின் வத்திரத்தல் நந்தரக்கி மெய்த்துணைஆ னாரைக்கொல் சத்திரத்தன் அத்தர்அமை சார்வு. 11 ஆறுபடிந் தினனேர்அம் பிறைந்துண்டாந் தரத்தால் வீறும்அந்த ணர்க்கடுக்கும் வெள்ளிவெற்பே- சீறு அரவப் பணித்தார் அகலத் துமையாள் விரவப் பணித்தார்அம் வீடு. 12 தானக்கை வாய்த்திரட்சித் தண்டம் பலசமைந்து வேணற்கை வேந்தர்ஒக்கும் வெள்ளிவெற்பே - மீனத் துவசத்தன் அங்கண் தொலைய விழித்த தவசத்தன் அங்குஅண் தலம். 13 பத்திப் பொருள்ஏற்று பாசமுற்ற வீத்தொளியுள் வித்திசைசால் வைசியர் நேர் வெள்ளிவெற்பே - மொய்த்த பார்உரிமை வேடர் பரிவால் அமையானை ஈர்உரிமை வேடர் இடம். 14 வேளாண்மை கண்டுகளி மிக்குப் புலவர்கலி மீளா தருள்வார்நேர் வெள்ளிவெற்பே - நீளாமுடி பத்துத் தரித்தான் பவிசழித்தான் மேற்கருணை வைத்துத் தரித்தான் பதிவு. 15 நன்றமிழ்த நாவமைந்து நாகவரம் பைக்கனியை மென்றளிதோ யும்புலவர் வெள்ளிவெற்பே - ஒன்றசலம் தூக்கும் கொடியன்அகம் சோரவிரல் ஊன்றியசே ஆக்கும் கொடியன் அகம். 16 வேடுவரங்க கங்கதிர்கால் வேழமொரு வக்கணையில் வீடுறுத்தும் வள்ளிஒக்கும் வெள்ளிவெற்பே - கூடற் பதிக்கா வலன்புடையார் பார்க்கஅடி கொண்டாள் துதிக்கா வல்அன்புடையார் தோய்வு. 17 ஈரப் படர்ச்சியின்முன் எய்தவர்க்கு வான்தரலில் வீரர்க் கிணைஆகும் வெள்ளிவெற்பே - ஊரற்குச் சந்தாயும் மானார் தணியாச் சினம்தவிர்த்த நந்தாயும் ஆனார்தம் நாடு. 18 மாறா நிலையாற்கண் மாரியினாற் றொண்டகத்தால் வீறார்நா வுக்கரசேய் வெள்ளிவெற்பே - கூறார் மதிக்கோடீ ரத்தளகவான் வண்ணம்உணர் வித்தென் விதிக்கோள்தீ ரத்தகைவான் வீடு. 19 முத்தியற்பந் தற்கணிலாய் முத்தியற்பந் தர்க்கருள்மாண் மெத்தியற்சம் பந்தன்நிகர் வெள்ளிவெற்பே - சத்திக்கு இடப்பால் அளித்தார் இயன்மறைகட் கெட்டாக் கடப்பா லளித்தாரன் காப்பு. 20 மாணிக்க வாசகத்தின் மன்னிரண மாற்றிடலின் மீள்நிலைநீர் வாசகன்நேர் வெள்ளிவெற்பே - பாணித்தே யாகும் பரசு கத்தர்; ஆர்வம்மலி தொண்டர்மனம் ஆகும் பரசுகத்தர் ஆர்வு. 21 நாவல்அர சாய்இருமோ னங்கையர்ஆகம் பொருந்தி மேவழிகாற் சுந்தரன்ஆம் வெள்ளிவெற்பே - கா அகத்தர் துக்கம் இகஅயில்வான் தோன்றல்அளித் தார்கலிநஞ்சு ஒக்கமிக அயில்வான் ஊர். 22 வானத் தமைவால்விண் மாதர்உவந் தாடலினால் மீனத் தலைத்தடம்நேர் வெள்ளிவெற்பே - கான மறையோன் சிரத்தை மருள்அறச்சே தித்த நிறையோன் சிரத்தை நிலை. 23 வானரங்கு லாய்விடர்க்குள் வாய்ப்பவளம் ஆரநல்கி வேனரமா தர்க்கிணைஆம் வெள்ளிவெற்பே - ஈனர் இகத்திருப்பு மையல் இதயமு ம்வ ரிற்றாட் புகத்திருப்பும் ஐயன் புகல். 24 செய்யுள் மிகுத்தெழுந்து சீர்க்கலைமா னாட்டமுற்று மெய்உள் புலவர்நிகர் வெள்ளிவெற்பே - பொய்உலகிற் தாம்மசரம் அன்னர் தம்முள் உணர்வரிய நேமசக மன்னர் நிலை. 25 பூத்தண் டலையகலப் பொற்பாரங் காட்டியமை மேய்த்தண்கடல் புரையும் வெள்ளிவெற்பே - காத்தலம் சார் உம்பர்அமு சுற்றலைவ தோவவிடம் உண்டருளும் நம்பர்; அமு தற்றலைவன் நாடு. 26 அம்மை இடம்பெற் றமைவா னரங்குதித்து மெய்ம்மைநட ராசனிகர் வெள்ளிவெற்பே - அம்மை அலைக்கங்கை தம்தாரம் ஆக்கி உமைஅ மலைக்கங்கை தந்தார்அம் வாழ்வு. 27 சத்தவிசைப் பாடலத்திற் சாரிரத மூர்ந்தொளிக்கும் வித்தகமார் பானு ஒக்கும் வெள்ளிவெற்பே - நித்தம் வழுத்தைத் தவிரா அடியர்க்கு வேதன் எழுத்தைத் தவிரான் இடம். 28 பன்னாறங் கத்தினொளிப் பாவையர்க்கின் பந்தரலின் மின்னார் சசியைஒக்கும் வெள்ளிவெற்பே - கொன்ஆர்வை வேல்அம்கை ஏற்றான் வியன்தாதை வேதன்க பாலம்கை ஏற்றான் பதி. 29 கோவளம்கா ராமணிகள் கொள்கடலை எள்வளத்தால் மேவரிசால் முல்லைஒக்கும் வெள்ளிவெற்பே - நாவரசென் மெய்த்தாண் டகம்புகல்சீர் வித்தகரை அன்பாழி உய்த்தாண் டகம்புகலான் ஊர். 30 வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா முற்றிற்று |