உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
எங்களைப் பற்றி |
அன்புடையீர்! 2006 செப்டம்பர் 25ஆம் தேதி உதயமாகியுள்ள எமது இந்த சென்னைநூலகம் (www.chennailibrary.com) இணையதளம் தமிழ் நூல்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். முன்பு எமது சென்னைநெட்வொர்க்.காம் இணைய தளத்தின் ஒரு பகுதியாக இயங்கி வந்த தமிழ் சேவைகள் அனைத்தும் இந்த புதிய இணையதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சென்னைநெட்வொர்க்.காம் தளத்திலிருந்து பிரித்து தமிழ் நூல்களுக்கென தனியாக இணையதளம் துவங்கவும், பின்னர் அவ்வாறு தனி இணையதளம் துவங்கிய போது அதற்கு ஏற்ற பெயரினை தேர்வு செய்யவும், இந்த தளம் செயல்படத் துவங்கியதும், அதற்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளைக் கூறியும், வழிநடத்தியவர் தேன்கூடு நிறுவனரும், தமிழ் ஆர்வலருமான காலஞ்சென்ற திரு சாகரன் என்னும் கல்யாண் (ஜூலை 22 1975 - பிப்ரவரி 11 2007) ஆவார். இந்த தளம் அவர் விருப்பம் போல் ஆல் போல் பெருகி வளர்ந்துவரும் நிலையில் அதைக் கண்டு மனங்குளிர அவர் இவ்வுலகில் இல்லை என்பது நமக்கு மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் என்னுடைய தனிமனித ஆர்வத்தின் பேரிலும் உழைப்பின் பேரிலும் வெளியிடப்பட்டவையே ஆகும். 2009 அக்டோபர் 1ஆம் தேதி முதல் சென்னைநெட்வொர்க்.காம் இணையதளத்தின் கீழ் இயங்கி வந்த சென்னைநூலகம்.காம் உள்ளிட்ட எமது அனைத்து இணையதளங்களும், எம்மால் புதிதாக துவங்கப்பட்டுள்ள "கௌதம் வெப் சர்வீசஸ்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயல்படுகின்றன. நிர்வாக வசதிகளுக்காக இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடரும் எமது முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் அன்பன் கோ.சந்திரசேகரன் |