மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர் இயற்றிய மான் விடு தூது மான் விடு தூது என்பது மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர் என்பவர் இயற்றிய நூலாகும். இதனை உ. வே. சாமிநாதையர் 1936ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்நூல் 301 கண்ணிகளைக் கொண்டது. குழந்தைக் கவிராயர் மிதிலைப்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். தந்தை மங்கைபாக கவிராயர். இவர் இந்நூலைத் தவிர வேறு நூல்கள் எழுதியதாகக் குறிப்புகள் இல்லை. தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார். நூலின் பாட்டுடைத் தலைவன் தாண்டவராய பிள்ளை. இவர் முல்லையூரில் கார்காத்த வேளாளர் குலத்தில் காத்தவராய பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். சிவகங்கை சமஸ்தானத் தலைவராக இருந்த ராசபுவி வடுகநாத துரை அவர்கள் பிள்ளையவர்களின் திறமையைக் கண்டு தமக்கு மந்திரியாக அமர்த்திக் கொண்டார். மானை அம்பால் எய்த பாவத்தால் பாண்டு எனும் அரசன் இறந்த செய்தியும், மான் வாயுவுக்கு வாகனமாக இருப்பதும், கலைக் கோட்டு முனிவர் மான் கொம்பைப் பெற்றதும் ஆகிய புராண இதிகாச வரலாறுகள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 'அரியவற்றுள் எல்லாம் அரிதே' எனும் குறளை 42ஆம் கண்ணியிலும், 'பிறவிப் பெருங்கடல்' எனும் குறளை 44ஆம் கண்ணியிலும் அழகுற அமைத்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். காப்பு நேரிசை வெண்பா சங்கநிதி தென்முல்லைத் தாண்டவ ராசசெய துங்கன்மிசை மான்விடு தூதுக்குப் - பொங்கு புவிநா யகனன்பர் போற்றுங் கசமு கவிநா யகனிதங் காப்பு. நூல் மானின் பெருமை பூமேவு கோகனகப் போதி லரசிருக்கும் மாமேவு பைந்துளப மாதவனும்-தேமேவு 1 புண்டரிக வீட்டோனும் பொன்னுலகை யாள்வோனும் அண்டருந் தானவரு மங்கையினாற்-கொண்டெடுத்த 2 மந்தரமும் வாசுகியும் வாரிதியு மேவருந்த அந்தவமு தங்கடையு மந்நாளிற்-சிந்தைமகிழ் 3 சந்திரனே தேகமெனத் தண்பாற் கடன்மீது வந்துற் பவித்த மதிமானே-ஐந்து 4 தலையரையன் சென்னிகவர்ந் தாருமணஞ் செய்ய மலையரையன் பெற்றெடுத்த மாதைத்-தலைநாள் 5 ஒருகால் பிடித்திருந்தா ருன்னையுல குய்ய இருகால் பிடித்திருந்தா ரென்றும்-திருமாலும் 6 கூரங்க மானபடை கொண்டிருந்துந் தென்னிலங்கை சாரங்க மேகுரங்காச் சாதித்தான்-காரங்கம் 7 பெற்றோன் மனைவியைநீ பெற்றிருந்தா யுன்மகிமை மற்றோர்கொண் டாட வசமாமோ-பொற்றோட்டின் 8 உந்திக் கமலத்தே யுற்பவித்தோன் மாமறைகள் வந்திக்கச் செய்த மகத்துவமும்-புந்திக்குள் 9 எண்ணிச் சராசரங்க ளீரே ழுலகமெல்லாம் பண்ணிக்கை வந்திருந்த பாங்குமேல்-எண்ணுங்கால் 10 நத்திருந்த வெண்கலைமா னாவிற் பிரியாமல் வைத்திருந்த வீறன்றி மற்றுமுண்டோ-கொத்திருந்த 11 அஞ்சுதலை யோன்மதலை யாறுதலை வேன்முருகன் உஞ்சு தலையெடுக்க வுன்மகளைக்-கொஞ்சுமொழி 12 வள்ளியைக் கொண்டிருந்தான் மான்மருக னம்முறையால் வெள்ளிமலை யோனுனக்கு மெய்த்தமையன்-வெள்ளிமலை 13 தங்கமலை பெற்றுவந்த சங்கரனார் மேம்பாடும் செங்கமலை மாலிரட்சை செய்திறமும்-செங்கோலைத் 14 துன்ன நடத்துவதுந் தொக்கபடை தற்சூழ மன்னரென வந்த விறுமாப்பும்-இந்நிலமேல் 15 உன்னாமந் தானுமெத்த வுண்டுபெரு மானென்னல் தன்னாமம் பெற்றபலத் தாலன்றோ-மன்னுகலைக் 16 கோட்டு முனிவனுக்குன் கோட்டி லொருகோடு நாட்டுசென்னி மேலிருந்த நல்வரத்தால்-மோட்டு 17 மகரக் கடலுறங்கு மாலை யயோத்தி நகரிற் புகவழைத்தா னாடிச்-செகதலத்தில் 18 விள்ளுமந்தி மானென்று மிக்கசந்தி மானென்றும் வள்ளல்கட்குப் பேர்கொடுத்த வச்சயமே-எள்ளாத 19 மின்வண்ணப் பின்னலான் வேதண்ட கூடத்தே பொன்வண்ணத்தந்தாதிபோந்துரைப்போன்-உன்வண்ணப் 20 பேர்படைத்த சேரமான் பெற்றபே றிவ்வுலகில் ஆர்படைத்தார் வேந்த ரருங்கலையே-கூரும் 21 இருணாடு மூடாம லேவிளங்கச் செய்வ தருணோத யத்தினா லன்றோ-அருணமே 22 வஞ்சனை செய்காள மாமுனிவ னேவலினால் எஞ்சலில் பூத மெழுந்துருத்துப்-பஞ்சவரைக் 23 கொல்லவந்த போதவரைக் கொல்லாம லேபுரந்த வல்லமை மாயனுக்கும் வாராதே-சொல்லுகின்ற 24 எள்ளவரை தானடக்கி யீரக் கடலையுண்டாய் உள்ள கலைமுழுது மோங்கநின்றாய் - புள்ளிபெற்ற 25 தன்னுழையே நீபடித்த சாதளையோ - இந்நிலமேல் 26 மான்றேச மென்றுமதில் வாசிமெத்த வாசியென்றும் தான்றேசஞ் சொல்வதென்ன தப்பிதமோ - கான்றேசம் 27 சொந்தமென்று பன்மிருகஞ் சூழ்ந்தாலு மென்னதென்று வந்து மொழிய வழக்குண்டோ - சந்ததமும் 28 தேனூருஞ் சோலை செறியுங் கலையூரோ மானூரோ நீயிருக்கும் வானகரம் - கானூரும் 29 பொன்னம் பலத்தே புலிபாம் பிருத்தலினால் உன்னம் பலத்தினுக்கே யொப்பாமோ - தன்மையாய் 30 நாடுநக ரம்பலமெந் நாளுமுன்பேர் பெற்றதுபோற் கூடுமோ காவலர்க்குங் கூடாதே - நீடுசெய 31 மாதினைநீ தாங்கு மகிமையன்றி மற்றவட்கு மேதினியி லுண்டோ விசேடமே - மோதுதெவ்வர் 32 கிட்டுஞ் சமர்க்குடைந்து கெட்டோருன் பேர்கண்டால் வெட்டுந் தலையும் விலகுவார் - அட்டதிக்காம் 33 தானங்காக் குந்தேவா தாழ்குழலா ராடவர்க்கு மானங்காக் குந்துரையே வான்பிணையே - கானமுனி 34 சாபத்துக் கஞ்சுவாய் சாலமொழி வார்கண்டால் நீபத் தடிவிலகி நிற்பாயே - கோபத்திற் 35 பாண்டுவெனுஞ் சந்த்ரகுலன் பார்முழுது மோர்குடைக்கீழ் ஆண்டுபுகழ் கொண்ட வரசர்கோன் - தாண்டுகலை 36 மானையெய்த தீவினையால் வானகரி னாடிழந்து கானடைந்து வானுலகங் கைக்கொண்டான் - ஞானமுனி 37 வேத வியாசன் விரித்துரைத்த பாரதத்தில் ஓதுகதை பொய்யோ வுலகறியும் - ஆதலினாற் 38 கோல விரிப்புலியைக் குஞ்சரத்தைக் கொன்றுமுயல் காலின்மிதித் தோனுன்னைக் கைக்கொண்டான் - ஞாலத்தில் 39 சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாய்ச் சூழ்ந்து விடுமென்று - கற்றே 40 அறிதலி னாலே யபாயமா மென்று சிறிய வரையிணங்காச் செல்வா - மறியே 41 அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளலென்று - பாணித் 42 தரிய வரத்தினையுண் டாக்கும் பெரிய வரையுறவு கொண்டபுத்தி மானே - வரையாப் 43 பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தாரென்ற-முறையால் 44 துறவாகக் காயிலைக டுய்த்தே யரிதாள் மறவாத பாக வதனே-உறநாடிற் 45 கட்புலங்கா ணாரூபக் கால்வாதத் தைத்தாங்கி விட்புலமு மேழ்கடலு மெத்திசையும்-பெட்புமிகு 46 தண்டலமும் வெற்புஞ் சராசரமு நின்றசைய மண்டலமும் வீதியுஞ்செல் வாசியே-கண்டுகனி 47 பண்போன் மொழிபயிலும் பாவையர்க்கெல் லாமிரண்டு கண்போல வந்த கருங்கலையே-நண்பாகத் 48 தீராத வல்வழக்குத் தேறாக் களவுகன்னம் பேரான வெல்லைப் பிசகுமுதல்-ஆராய்ந்து 49 சுத்த னசுத்தனென்று சோதனையாய் நாக்குமழு வைத்தோதக் கற்பித்த வல்லமைகள்-அத்தனையும் 50 அன்பாகச் சொல்ல வவதரித்தாய்-இன்பாம் 51 துணையேவன் காமத் துயர்க்கடலை நீந்தும் பிணையே கருணைப் பெருக்கே-இணையான 52 காது நடந்தவிரு கண்ணார்க்கு மாடவர்க்கும் தூது நடந்தாரைச் சொல்லக்கேள்-மாதுபங்கர் 53 தூது சென்றவர்கள் சுந்தரர்க்கப் பானாளிற் றூதுசென்றார் பாண்டவர்க்குச் செந்திருமா றூதாகச் சென்றாரே-இந்திரற்கே 54 அந்தநளன் றூதுசென்றா னந்நளனுக் கோதிமந்தான் சந்து நடந்தகதை தப்பிதமோ-முந்தக் 55 குணமாலை ருக்குமணி கொண்டமய றீர மணமாலை கிள்ளைதர வாழ்ந்தார்-தணவாத 56 மற்றத் தூதுப்பொருள்களின் குறைகள் வாளகண்டஞ் செல்லும் வரிக்குயிலைத் தூதனுப்பிற் காளகண்ட நல்வசனங் காட்டுமோ-தாளமலர் 57 ஏற்கு மதுகரத்தை யேவின் மதுபானி நாக்குக் குழறுமே நவ்வியே-மூக்கிலே 58 கோபத்தைக் காட்டுமொரு கொண்டைமயில் போய்க்க லாபத்தைக் காட்டுமில்லை லாபமே-சோபத்தால் 59 அன்னத்தைத் தூதுவிட்டா லவ்வன்னம் பாலுக்கும் பின்னத்தைக் காட்டுமிதம் பேசாதே-சொன்னத்தைச் 60 சொல்லுமே யல்லாமற் றொன்ற விரித்துரைத்து வல்லமையாய்க் கிள்ளைசொல்ல மாட்டாதே-மெல்லவே 61 எத்திசையுஞ் செல்லு மிளம்பூவை தூதுசென்றால் கத்திகை வாங்கக் கலங்குமே-மெத்தவே 62 மேகங் கடுகுரலாய் விள்ளுமல்லா னின்போலப் பாகமுட னின்சொற் பகராதே-மோகமிஞ்சிக் 63 கண்டுயிலும் வேளையினிற் கண்டவனி ருத்திரனைக் கொண்டுவந்த பாங்கியென்பாற் கூடுமோ-தண்டாத 64 என்னெஞ்ச மாங்கவன்பா லெய்தி யெனைமறந்து வன்னெஞ்ச மாயிருந்தால் வாயுண்டோ-தென்மலையத் 65 தென்றலைத் தூதுவிட்டாற் றென்றல் சலனகுணம் மன்றலணி வாங்குமிங்கு வாராதே-துன்று 66 கலையே மணிமே கலையே தவிர்ந்தேன் அலையேய் துரும்பா யலைந்தேன்-மலையாமற் 67 காக்கும் பிணையேவன் காமக் கடற்கரையிற் சேர்க்கும் பிணையே செழுங்கலையே-ஆர்க்குமிகும் 68 ஆசைதந்தோன் பேருமவ னாடு மவனூரும் மாசில் புகழும் வழுத்தக்கேள்-தேசுதரும் 69 தசாங்கம் - பொதியின்மலை அம்புதமு மம்புலியு மாடரவுஞ் சென்னியின்மேற் பம்புதலா லீசன் படிவமாய்-அம்பரமும் 70 பொன்னுமணிக் கோடும் பொருந்திச் சிலைதிகிரி மன்னுதலான் மாலின் வடிவமாய்-இந்நிலமேல் 71 நான்முகஞ் சாகைபல நண்ணிப்பல் பூப்படைத்து மான்மகன் போல வளஞ்சிறந்து-மேன்மை 72 அரம்பைபலர் தற்சூழ்ந்தே யண்டருல கெய்தித் திரம்பெறலாற் றேவேந் திரன்போல்-உரம்பயின்று 73 சந்தனமுங் காரகிலுந் தம்மிற் றலைசிறந்து வந்த பொதிய மலையினான்-செந்தமிழின் 74 வைகை நதி ஏடேறச் சைவநிலை யீடேறத் துள்ளுபுனல் கோடேறக் கூடல் குடியேறப்-பீடேறு 75 மூரிக் கயன்மகர மோதித் திரையேற வாரிப் புனலும் வளர்ந்தேறப்-பாரித்து 76 மண்டு புகழேற மாறன் வியப்பேறக் கண்டு சமணர் கழுவேறத்-தண்டுளப 77 மாடேறுஞ் சொக்கர் மதிச்சடையின் மண்ணேற நாடேறும் வைகை நதியினான்-சேடேறும் 78 தென்பாண்டி நாடு பூங்காவு மாங்குயிலும் பூட்டு மொழிக்கரும்பும் வாங்காத கீத வரிச்சுரும்பும்-நீங்காத 79 வாவித் தலமும் வனச மலர்க்காடும் காவிப் புதுமலருங் கம்பலையும்-பூவைக்கும் 80 தென்மலய மாருதமுஞ் சேயிழையார் தங்குழுவும் மன்மதனார் பாளையந்தான் வந்ததென-நன்மைதிகழ் 81 தேவேந்து நாட்டினுக்குச் செவ்விதென்று பாவேந்தர் நாவேந்து தென்பாண்டி நாட்டினான்-பூவேந்து 82 முல்லை மாநகர் வாணிக்கு நாதனவை வந்திருக்க வேணுமென்று காணிக்கை யாய்ச்சமைத்த காரணமோ-வேணிக்கு 83 வேந்த னுலகம் வெளிறிடவே வேண்டுமென்று வாய்ந்தசெம் பொன்னால் வகுத்ததோ-தேர்ந்துவச்ர 84 வண்ண னுலகு வறியதென்று சொல்லுதற்குப் பண்ணிச் சிறந்த படிவமோ-எண்ணுங்கால் 85 மண்மகளுக் காக வகுத்தமணிப் பீடமோ திண்மைசெறி பேரழகு சேரிடமோ-உண்மை 86 தெரிந்துரைக்க வல்லவரார் சிற்பநூல் கற்றோர் புரிந்தசிற்ப மென்றுலகம் போற்ற-விரிந்தமணிக் 87 கூடமு மேல்வீடுங் கோபுரமு மாமறுகும் மாடமுஞ்சேர் தென்முல்லை மாநகரான் - நாடமிர்தும் 88 குவளை மாலை கண்டு நிகர்மொழியார் கண்னு மவர்மனமும் வண்டுஞ் செறிநீல மாலிகையான் - விண்டோர் 89 குதிரை மகுட முடியிடறி மாதிரமும் வானின் முகடு நிறைபடல மூட - விகடர் 90 கெடியரணு நெஞ்சிற் கெருவிதமுங் கூட்டி அடியின் குரத்துகள தாக்கிக் - கொடியவிட 91 நெட்டரவு மேனி நெறுநெறெனக் கண்பிதுங்க அட்ட கிரிநின் றசையவே - வட்டமிட்டுக் 92 காற்கதியுங் காற்கதியே காணுமென வீரிரண்டு காற்கதியி லைந்து கதிகாட்டிப் - பாற்கடலில் 93 மாதவனுங் கற்கி வடிவங் கரந்துநிற்க ஆதவ னேழ்பரியு மஞ்சவே - நாதன் 94 வலம்புரி போலவன் மானித்துப் போரில் வலம்புரியுங் கோரரண வாசியான் - சலம்புரிந்து 95 யானை திக்கயங்கண் மாதிரத்திற் சென்று புறங்கொடுப்பத் தொக்கயங்க டொக்கெனவே சூறையிட்டு - மிக்க 96 சிகர வடவரையைச் சீறித் தகர்த்து மகர வுததி மடுத்துப் - பகரும் 97 வடவைக் கனலவித்து வான்பிறையை யெட்டித் தடவிக் குணக்கெடுத்துத் தாளாற்-புடவிமன்னர் 98 கொத்தளத்தைக் கோட்டையினைக் கோட்டைக்குக் காக்கவைத்த அத்தளத்தை யெல்லா மணுவாக்கி-எத்தளமும் 99 கண்டு நடுநடுங்கக் காலனுங் கண்புதைப்பக் கொண்டலென நின்றதிருங் குஞ்தரத்தான்-மண்டலத்தில் 100 மேழிக்கொடி ஆர்க்கு மதியா தவர்பகையு மஞ்சவே பார்க்கின்ற மேழிப் பதாகையான்-நீர்க்குலவு 101 முரசு நத்தோலும் வாரியென்ன நாதரொரு மூவரென்ன முத்தோலுங் காட்டு முரசினான்-எத்திக்கும்102 வேற்படை காற்படையுந் தேர்ப்படையுங் கைக்கிரியு மாவுமாம் நாற்படையுஞ் சூழ ரணபேரி-ஆர்ப்பரித்து 103 வெற்றிசொல்லி வந்த விகட மருவலர்கள் கொற்றமுங் கொற்றக் குடையுமேல்-அற்றுவிழ 104 மாதரங்கம் போல மறுகிக் குதித்துவரு மாதுரங்க மெல்லா மறுகிவிழ-மோதிவரு 105 சிந்துரங்கள் கோட்டுச் சிரந்துணிந்து கைதுணிந்து சிந்துரங்க ளாகித் திகைக்கவே-வந்த 106 முடித்தேர்க டட்டழிந்து முட்டுந் துரங்கம் மடித்தே வலவன் மடிய-அடுத்துநின்று 107 பாரிட் டெதிர்த்த படைவீரர் சென்னிகு பீரிட் டிரத்தம் பெருகவே-தாரிட்ட 108 தோடுணிய வாடுணியத் துள்ளித் திரண்டுவரு தாடுணிய மோட்டுத் தனுத்துணியக்-கோடுணிய 109 விற்றுணியச் செங்கை விரறுணிய வெற்றிசொன்ன சொற்றுணிய நாக்குத் துணியவே-பற்றுணிய 110 ஒட்டகங்கள் கோடி யுருளச் செயபேரி பெட்டகங்கள் போலப் பிறழவே-கட்டழிந்து 111 சாளையப் பட்டுச் சளப்பட்டுத் தாமிருந்த பாளையப் பட்டும் பறிபட்டு-மூளைகொட்டக் 112 கட்டித் தயிரெனவே கண்டுசில பேயருந்தி எட்டிக் கொழுப்பை யிழுக்கவே-தட்டுசிறை 113 வட்ட மிடுங்கழுகு வந்துகுடல் பற்றியெழல் பட்ட மிடுங்கயிறொப் பாகவே-கொட்டும் 114 குருதி முழுகிநிணங் கொண்டுபருந் தேகல் கருதுங் கருடனெனக் காணப்-பெருகிவரு 115 நன்னீ ரெனவொருபேய் நாடித் தசையருந்திச் செந்நீர் குடித்துத் திகைக்கவே-துன்னி 116 வறட்டுக் கிழட்டுப்பேய் வாய்க்கொழுப்பை நோண்டிக் கறட்டுப்பேய் தின்று களிக்க-முறட்டுப்பேய் 117 வாங்கித் தினுந்தசையை வந்தொருபேய் தட்டிவிட ஏங்கிப் பசியா லிருந்தலற-ஆங்கொருபேய் 118 பேய்ப்பொட்ட லிட்ட பெருங்களத்திற் றின்றதசை வாய்ப்பட்ட தென்று மகிழவே-கூப்பிட்டே 119 அன்று கலிங்கத் தமர்க்களத்துக் கொப்பாக இன்று கிடைத்த தெனப்புகலத்-துன்றுபல 120 கூளி நடனமிடக் கொக்கரித்தே யுக்ரசெய காளி மகிழக் கவந்தமிரு-தாள்பெயரக் 121 காகம் பருந்து கழுகுநிழற் பந்தரிட மாகமின்னார் கல்யாணம் வாய்த்ததென-ஓகைபெறச் 122 சொல்லு மருவார் தொடியிடற வெந்நாளும் வெல்லுமுனை கொண்டவடி வேலினான்-ஒல்லுமணி 123 ஆணை வட்டநெடு வேலா வலயம் விளங்குபுவி அட்டதிசை யுஞ்செலுத்து மாணையான்-இட்டமிகச் 124 வடுகனாததுரையின் பெருமை சந்ததமுங் கோட்டிச் சவுமியநா ராயணரை வந்தனைசெய் தொப்பமிடு வண்கையான்-நந்துலவு 125 தென்குளந்தை மேவுஞ் செயசிங்கங் கோகனக மின்குழந்தை போலும் விசித்திரவான்-முன்குழந்தை 126 ஆமப் பருவத்தே யம்பொற் சுடிகைதந்த சோமனுக்கு நேராந் துரைராயன்-பூமன் 127 முரசுநிலை யிட்டு முடிதரித்தே சேதுக் கரசுநிலை யிட்ட வபயன்-வரசதுரன் 128 தண்டளவ மாலைச் சசிவர்ண பூபனருள் கொண்ட லுபய குலதீபன்-மண்டலிகன் 129 ராச புலிவடுக நாத பெரியுடையான் ராச னிவனாண்மை நாகரிகன்-யோசனையும் 130 தலைவன் பெருமை மந்திரமு மொன்னார் வணங்கத் தனுவெடுத்த தந்திரமு நீயோகத் தன்மையும்-வந்த 131 திரமாங் கணக்கினுட்பந் திட்ப நிதானம் பரராச வட்டமுணர் பாங்கும்-தரம்பகுத்துத் 132 திட்டவட்ட மாய்நிதியந் தேடுவதுஞ் சீமைநவ சட்டமெனக் காக்குஞ் சமர்த்துமேல்-வட்டமாம் 133 வல்லமையுங் காதல்விசு வாசமுங்கண் டேநமக்கு நல்லமைச்ச னென்று நவமணிப்பூண்-பல்லக்குத் 134 தண்டிகை யூர்கவரி தண்கவிகை காளாஞ்சி கண்டிகை முத்தங் கவனமாத்-திண்டிறல்சேர் 135 மத்தகெச மாதி வரிசைநல்கு மந்த்ரிதள கத்த னுபய கனயோகன்-நித்தநித்தம் 136 ஈகைக் கிணையென்றோ வேற்றலருந் தண்ணளியோ மேகத்தின் கால்விலங்கு வெட்டுவித்தோன்-ஆகையினால் 137 காராள னாகினான் கங்கைசுத னாயினான் பாராம னீலி பழி துடைத்தோன்-பேராகச் 138 சூலி முதுகிற் சுடுசோ றளித்துமொரு சூலி பசியாற்றத் தூங்கிரவிற்-சாலி 139 முளைவாரி யன்னமிட்டோன் முத்தமிழ்க்குப் பாம்பின் வளைவாயிற் கைநீட்டும் வள்ளல்-இளையாமற் 140 பட்டாடை கீறிப் பருஞ்சிலந்தி காட்டிவெகு நெட்டாய் விருது நிறுத்தினோன்-மட்டாரும் 141 பைந்தருவுக் கொப்பென்றோ பாலிக்கு முன்கையைச் சந்தனமாய் வைத்தரைத்த தாடாளன்-முந்தக் 142 கொடுக்குங் குணமோ குழந்தைசொன்ன தென்றோ அடுக்கு மவன்மீதி லன்போ-எடுக்கும் 143 இருநிதியு நெல்லா யிரக்கலமுந் தந்தே ஒருகவிதை கொண்டுபுக ழுற்றோன்-பெருமைசேர் 144 அவன் செய்த தர்மங்கள் கோலமிகு குன்றாக் குடியிலே நீடூழி காலமெல்லா நிற்கவே கற்கட்டிச்-சூலத்திற் 145 றன்னூற்றுக் காணத் தடாகப் பிரதிட்டைசெய்து செந்நூற் றுறையாற் சினகரமும்-பொன்னாற் 146 படித்துறையும் பூந்தருவும் பைந்தருவும் வேதம் படித்துறையு மண்டபமும் பாங்காய்-முடித்துவைத்தே 147 போற்றிய வையா புரியென்று பேருமிட்டு நாற்றிசையோர் போற்றுவள்ளி நாதருக்கே-தோற்றுதினக் 148 கட்டளையுந் த்வாதசிக் கட்டளையுந் தைப்பூசக் கட்டளையு மேநடத்துங் கங்கைகுலன்-மட்டுவிரி 149 சீதளியார் புத்தூர்த் திருத்தளியார் கொன்றைவன நாதனார் வயிரவ நாதருக்கும்-சீதமலர் 150 வல்ல திருக்கோட்டி மாதவர்க்கும்-கல்லியன்முன் 151 மண்டபமு நெய்விளக்கு மாமதிலும் வாகனமும் தண்டலையும் வில்வத் தளமலர்கள்-கொண்டதோர் 152 நித்தியநை மித்தியமு நேயமாய்த் தானடக்கப் பத்தியுட னேயமைந்த பண்பினான்-நத்துலவு 153 தென்பாக நேரிக்குச் சேர்ந்த வடபாலில் வன்பாங் கரடிபுலி மான்மரைகள்-துன்பான 154 கள்ளர் குடியிருக்குங் காட்டைவெட்டி நாடாக்கிப் புள்ளலம்பு சோலை புதுக்கியே-பள்ளநீர் 155 முன்பார் புகழ முனைவேந்தர் கொண்டாட வன்பாரை வெட்டியுநீர் மல்கவே-அன்பாரும் 156 மண்டலிகன் முத்து வடுகநா தச்சமுத்ரம் கண்டுபுகழ் கண்டமார்க் கண்டனாம்-கொண்டல் 157 அரசன் பெரியவுடை யான்மகிழ்ந்து வெற்றி புரிகின்ற சோழ புரத்தில்-திருவளரும் 158 கந்தவனப் பொய்கைக் கரையினுக்கு மேற்றிசையில் அந்தமிகு பாற்கடலி தாமென்னச்-சந்ததமும் 159 செய்கை தவறா திருந்ததிரி யம்பகப் பொய்கைதனைக் கண்டிருந்த புண்ணியவான்-செய்திகழும் 160 வைகை நதிநீர மானபரம் பைக்குடியிற் பொய்கைசெறி கூபம் புனற்பந்தல்-மைகவியும் 161 நந்தவனம் பூஞ்சோலை நன்மடமு மேயிற்றி அந்தணர் சாலை யமைத்துவைத்தே-முந்தப் 162 படிக்கட் டளையாய்ப் பசித்துவந்தோர்க் கெல்லாம் கொடிக்கட்டி யன்னங் கொடுத்தோன்-வடிக்கட்டும் 163 தன்ம சரீரன் றரும சகாயனெழில் மன்மத ரூபனடல் வாளபிமன்-நன்மைசேர் 164 தன்னை யடுத்தோரைத் தாய்போலத் தாபரிப்போன் பின்னையெண்ணா மற்கொடுக்கும் பேராளன்-பொன்னைப் 165 புதைப்பார் மணாளன் புருடமக மேரு சுதைப்பார் புகழ்விளைக்குஞ் சோமன்-சுதைப்புவியைக் 166 காக்குங் கருணா கரனா மனுநீதன் வாக்கி லிரண்டுரையா மானபரன்-ஆர்க்கும் 167 உபகாரஞ் செய்யவென்றே யோதுநூல் கற்றோன் அபகாரஞ் செய்ய வறியான்-சுபகாரி 168 துட்டருக்கு நிட்டூரன் றுட்டருக்கு மார்பாணி சிட்டருக்கு நன்மைபுரி செங்கோலான்-மட்டுவிரி 169 அவயவச் சிறப்பு மாப்பதுமன் போலவே வந்தமுனி நல்யாகம் காப்பனெனச் சென்றமலர்க் காலினான்-ஆர்ப்பரித்துச் 170 சொந்தமென விந்தையுறை தோளினான் கோகனகை வந்து குடியிருக்கு மார்பினான்-வந்தவரை 171 வங்கணங் கட்டி வசந்தத் தியாகநல்கக் கங்கணங் கட்டுமிரு கையினான்-கொங்கு 172 பரந்த மடவார் பயோதரத்தி லேந்தும் நரந்தம் பரிமளிக்கு நாசி-பொருந்தினோன் 173 ஆனவித்தை யெல்லா மறிந்தாலுங் காந்தருவ கானவித்தை கேட்குமிரு காதினான்-நானிலத்திற் 174 கீர்த்தி கரித்துக் கிளைக்கின்ற சந்த்ரவிம்பம் மூர்த்தி கரித்த முகத்தினான்-பார்த்திபரில் 175 மூவேந்தர் போலவந்து முத்தமிழை யாராய்ந்து பாவேந்தை வாழவைத்த பாக்கியவான்-பூவேந்து 176 தந்தை முதலியோர் காத்தவரா யன்பாலன் காணுமைவர் பேரிடரைத் தீர்த்தவரா யன்புபுரி சீதரமால்-பார்த்தனுக்குக் 177 காண்டா வனதகனங் காண ரதமூர்ந்தோன் வேண்டார் வணங்கவரி வில்லெடுத்தோன்-சேண்டாங்கி 178 நில்லாமற் றிக்கயங்க ணேர்ந்தாலு நல்லதென்று மல்லாட மார்புதட்டும் வல்லமையான்-நல்லாரை 179 ஆய்ந்தா தரிக்கு மறிவினான் மேருவரை சாய்ந்தாலு மீளநடுந் தந்திரவான்-ஏந்துமலர்த் 180 தேன்றொட்ட விந்திரவி தெற்குவடக் கானாலும் தான்றொட்ட வாரந் தவறாதான்-கான்றொட்ட 181 செய்க்குவளை நித்திலஞ்சூழ் தென்முல்லை யாதிபதி மைக்குவளை மாலையணி மார்பினான்-திக்கு 182 விசையஞ் செலுத்தி விருதொன்று கட்டி இசையெங்கு மேசெலுத்து மெங்கோன்-திசையாள் 183 அதுலன் குளந்தைக் கரசன் மகிழும் சதுரனாம் ராமக்ருஷ்ணன் றம்பி-மதுரமொழி 184 சொன்னவிச்வ நாதனுக்குஞ் சூரியநா ராயணற்கும் பின்னவன் கீர்த்திப் பிரதாபன்-மன்னுகலி 185 கோபன் கவிவேந்தர் கொண்டாட வந்தபற்ப நாபன் சசிவன்ன ராசனுக்கும்-சோபந்தீர் 186 சோமன் குலத்தருமன் சுப்பிர மண்யனுக்கும் சேமநிதி யான சிறுதாதை-பூமணிகா 187 உந்துதிருப் பாற்கடலி லுற்பவித்த தண்மதிபோல் முந்து வலம்புரியின் முத்தம்போல்-வந்த 188 நனையகஞ்சேர் நீலமணி ராமக்ருஷ்ண மாலைத் தனைய னெனமகிழ்ந்த தந்தை-அனகன் 189 தருநமசி வாயமன்னன் றந்தகயி லாசன் மருக னெனவந்த மாமன்-உரிமை 190 அடர்ந்த கிளையா னகந்தை யறியான் மடங்க லெனவே வயங்கொள்-படையான் 191 தொழுந்த கைமையான் சுகந்த புயவான் எழுந்த பிறையா யிரங்கள்-தொழுவோன் 192 பரதந் திரசம் பனதந் திரசிந் திரதன் சுமுகன் செனகன்-சரதன் 193 பொருமந் தரதிண் புயமண் டலிகன் தருவுங் கரமுஞ் சரியென்-றருளவரு 194 காரியுப காரியதி காரிவிவ காரிகுண வாரிநிதி வாரியருள் வாரிமழை-மாரிமத 195 வாரணங் கூப்பிடுமுன் வந்தேன்வந் தேனென்ற நாரணன் றாண்டவ ராயமன்னன்-போரளவி 196 இன்றிளைத்தாய் நாளைவா வென்றே யிராவணற்கு நன்றுரைத்த தாண்டவ ராயமன்னன்-நின்றெதிர்த்து 197 வன்மை புரிந்தோரும் வந்துசர ணென்றடைந்தால் நன்மைபுரி தாண்டவ ராயமன்னன்-சொன்மருவு 198 தாகரிகன் மாற்றலர்பாற் சங்க்ராம கெம்பீரன் நாகரிகன் றாண்டவ ராயமன்னன்-மாகனகக் 199 கோட்டிலங்கை ராவணனைக் கொன்று விபீடணனை நாட்டுதுரை தாண்டவ ராயமன்னன்-கூட்டுசுண்ணம் 200 வல்லசுர மஞ்சரிக்கு மாலைதரு கந்தபொடி நல்லதென்ற தாண்டவ ராயமன்னன்-சொல்லுநெறி 201 கோடா மனுநீதி கொண்டிருந்து வைகைவள நாடாளுந் தாண்டவ ராயமன்னன்-வாடாத 202 தலைவன் பவனி வரத்தொடங்கல் தென்னவன்போற் பூலோக தேவேந் திரன்போல மன்னு பவனி வருவதற்கு-முன்னமே 203 நித்திய தான நியம மனுட்டானம் பத்தி தரும்பூசை பண்ணியே-மொய்த்தகன 204 சுற்றம் விருந்துத் தொகுதிபல தற்சூழ உற்ற வறுசுவை சேருண்டி-முற்ற 205 அருந்திமலர் வாய்பூசி யாசார மீதில் இருந்துமின்னார் கண்ணாடி யேந்தத்-துரைவடுக 206 அணிகளை அணிதல் நாதமன்ன னுக்கன்றி நானிலத்து வேந்தைவணங் காதமுடி மேற்பாகு கட்டியே-காதிலணி 207 மாணிக்க முத்து மரகதப்பூ மூவருடல் காணிக்க வந்த கவின்காட்டப்-பூணிழையார் 208 கூடி முருகனென்று கும்பிடவே மேற்காதில் ஆடு முருகி னணியணிந்து-சேடுதிகழ் 209 வாக்கிலுறை வெண்கமல மாதுவெளி வந்ததென ஆக்கமிகும் வெண்ணீ றலங்கரித்துத்-தீர்க்கமாய்ப் 210 பார்க்கின் முகமதியின் பாற்களங்கம் வேண்டுமென்றோ சேர்க்குங்கத் தூரித் திலதமிட்டு-நீக்கமின்றி 211 இச்சைசெறி கோகனகைக் கிட்ட திரைபோலப் பச்சைவச்ரம் வைத்த பதக்கமிட்டுக்-கச்சையடர்ந் 212 தோங்கத் தனம்படைத்த வொண்டொடியார் காமசரம் தாங்கரத்ன கண்ட சரந்தாங்கிப்-பூங்கரத்திற் 213 சங்குவளை மாலைசிந்தித் தாழ்குழலார் பின்றொடரச் செங்குவளை மாலை திருத்தியே-பொங்குமுன்னீர் 214 மாகுவலை யந்தாங்க வைத்த மணிச்சுமடாம் வாகு வலைய மணிதரித்து-மாகர் 215 சுரதருவிற் காமவல்லி சுற்றியது போல விரலணியுங் கைச்சரடும் வேய்ந்தே-அரையிற் 216 சலவைகட்டி யொன்னார் தருங்குருதி மாந்திப் புலவுகக்குங் குற்றுடைவாள் பூட்டிக்-கலகம் 217 நிலவுஞ் சகட நெறுநெறென வீழக் கலகலென நீட்டுதண்டைக் காலில்-இலகுரத்ன 218 மிஞ்சியிட்டுக் கொற்றம் விளக்கு மணியோசை அஞ்சியிட்ட பேருக் கபயமென-விஞ்சு 219 வரையில் வெயிலெறிக்கும் வாறுபோற் பீதாம் பரவுத்த ரீகம் பரித்துத்-தரணிமுற்றும் 220 ஓரடி கொண்டளந்தங் கோரடி தூக்கிநின்ற ஈரடியும் பாவடியி லேற்றியே-ஏரடர்க்கும் 221 யானையின் சிறப்பு பாடகச் சீறடியார் பங்கயக்கை லாகுதர ஆடகப்பொன் கூடத் தயல்வந்து-ஓடைமின்னல் 222 கொண்டிருண்டெ ழுந்துநின்ற கொண்டலென்ற பண்புகொண்டு தண்டரங்க மொண்டகும்ப சம்பவன்றி-ரண்டவங்கைத் 223 தொண்டலங்கொ டுண்டுமிழ்ந்து தொந்தமென்று மன்றிலண்டர் கண்டபண்ட ரங்கனந்த கன்கரத்தி-ரண்டுகண்பு 224 தைக்கமொத்தி ருத்ரமிக்க தட்டியட்ட திக்கயத்தின் மத்தகத்தி னைத்தகர்த்து வட்டமிட்டெ-திர்த்தகற்கி 225 சத்திரக்க ரத்தரைத்த லத்தினற்சி-ரத்தையெற்றி 226 யுத்தரங்க மீதி லுருத்த ரணவீர பத்திரன் போன்முசலம் பற்றியே-நித்தநித்தம் 227 விந்தை கொலுவிருக்கும் வெற்பொன்று கான்முளைத்து வந்து நடைபயின்ற வாறென்ன-முந்துதெவ்வர் 228 சிந்துஞ் சதுரங்க சேனா சமுத்திரத்தை மந்தரம் போல மதித்துவெற்றி-தந்துநின்று 229 பவனிவரல் நந்தா வளக்கரட நால்வாய்ப் பனைத்தடக்கைத் தந்தா வளப்பவனி தான்வரலும்-பிந்தாக் 230 குடைநெருங்கக் கோடி கொடிநெருங்கக் காலாட் படைநெருங்கத் தாவு பரிமா-புடைநெருங்க 231 மள்ளர் குரவை மலிய மதாவளத்தின் வெள்ள மிகுதி மிடையவே-துள்ளிவிட்டு 232 மன்னிய வார்பெலமா மல்லா ரிராசவார் துன்னியவரா வுத்தரணி சூழ்ந்துவர-மின்னுவெள்ளித் 233 துப்பாக்கி யூழியத்தர் தோமரத்தர் கேடயத்தர் தப்பாது விற்காரர் தற்சூழக்-குப்பாய 234 நேரிசத்தர் வாட்காரர் நேமிதரித் தோர்களிரு பாரிசத்துங் கேப்புலியொப் பாகவரத்-தாரிசைத்த 235 வாத்தியங்கள் ஒட்டகத்தின் கூன்முதுகி னோங்குமத குஞ்சரமேற் கொட்டுநக ராபேரி கொண்டலின்வாய்-விட்டதிரத் 236 தண்டகந் தாங்குந் தகுணியுங் கோடிணையும் தொண்டகமுஞ் சல்லரியுந் துந்துமியும்-விண்டதொனி 237 மத்தள தாள வகையுங் கிடுபிடியும் தொத்திலகு நாக சுரத்தொனியும்-சத்திக்கும் 238 வாங்காவுங் கானாவும் வாங்கா மணிக்கொம்பும் பூங்காமன் றூரியத்தைப் போன்முழங்க-நீங்காத 239 தம்புரு வீணை சரமண் டலம்வரியாத் தும்புரு கானத் தொனிகூட்டப்-பம்பு 240 மற்றச் சிறப்புக்கள் பரதவிட மாதர் படிதம் பயிற்றச் சுரதவிட வாரயினி சுற்ற-உரதருண 241 கட்டியத்தர் வேத்திரக் கையாற் பராக்கென்னத் தட்டி வருஞ்சந் தடிவிலக-மட்டுவிரி 242 பொன்னடைப்பை காளாஞ்சி பூஞ்சிவிறி வீசுகுஞ்சம் சொன்னடக்கை யோரேந்திச் சூழ்ந்துவர-அன்னடக்கும் 243 சந்த்ர கிரண சமுக மிருபாலும் வந்ததென்ன வெண்சா மரையிரட்டச்-செந்தமிழின் 244 சின்னம் ஒலித்தல் நாவலர் தாருவந்தான் ராயர்மகிழ் மந்த்ரிவந்தான் பூவலரு நீலப் புயன்வந்தான்-ஆவறரு 245 பொன்னா பரணன் புகழா பரணமெனும் கன்னாவ தாரவுப காரிவந்தான்-பொன்னாரும் 246 மாதர் மடலெழுது மால்ராம க்ருஷ்ணமன்னன் சோதரனா முல்லைத் துரைவந்தான்-மேதினியில் 247 கொட்டமிடுங் கள்ளர் குறும்படக்கு வோன்வந்தான் வட்டமிடு மாநகுலன் வந்தானே-றிட்டெதிர்த்துச் 248 சீறுஞ் சமர திவாகரன்வந் தான்விருது கூறும் விகடர் குடாரிவந்தான்-வீறு 249 சரணென் றடைந்தோரைத் தள்ளாத கங்கை வருண குலதிலகன் வந்தான்-தருண 250 வரதனையன் வந்தான்வந் தானென்-றொருதாரை 251 சின்னவொலி மேருத் திரைக்கடலி னாட்டியநாள் மன்னுமொலி போல மலியவே-கன்னியெயில் 252 குழாங்கொண்ட மகளிர் செயல் மண்டபமு நந்தா வனமு மலர்வீடும் கொண்ட பெருந்தெருவுங் கோபுரமும்-மண்டிவிளை 253 யாடுகின்ற பேதையரே யாதியா யேழ்பருவ வாடுமிடை யார்கோடி மாலாகி-ஓடிவந்துட 254 கண்ட வுடன்கமலக் கைகுவித்தார் மெல்லமெல்லக் கொண்டுநட தந்தியெனக் கும்பிட்டார்-மண்டலமேல் 255 ஆணி லழகனிவ னாமென்பார் கண்காண வேணு மனந்தமென்பார் மெல்லியலார்-சேணிக்கு 256 மாரனோ விந்திரனோ மாமாலோ சூர்தடிந்த வீரனோ பாருமென்பார் மெல்லியலார்-மாரனென்றாற் 257 கன்னற் சிலையுண்டே காணரதி யோநாமும் வன்னிப் பரியெங்கே மாரனென்றாற்-பொன்னிலகு 258 விண்ணாடர் கோமானேல் வெள்ளைமத யானையுண்டே கண்ணா யிரமெங்கே காட்டுமென்பார்-எண்ணாமல் 259 முன்னகத்தை யேந்து முகில்வண்ண னாமாயிற் பன்னகத்தை யுண்ணும் பரியெங்கே-அந்நகத்தை 260 தாக்குமயில் வீரனென்றாற் சந்ததமு நீங்காமற் காக்கு மயில்வா கனமுண்டே-பார்க்கினிவன் 261 மேழி விருதால் விருதுசின்னஞ் சொல்லுவதால் வாழி குவளைமலர் மாலையால்-ஆழிதொட்ட 262 ராகவன்கைத் தாண்டவ ராயமன்ன னாமென்றே மாகவன மாகவே வந்துநின்ற-வேகமிக 263 குழாங்களின் கூற்று உன்கா லுரலா வுலக்கை மருப்பாக வன்காமன் றன்சிலையை மாட்டாயோ-நன்கானச் 264 செய்க்கரும்பு தின்னத் தெவிட்டாதோ மன்மதனார் கைக்கரும்பு தின்றாற் கசக்குமோ-மைக்களிறே 265 கொட்டமிடுந் தெவ்வர் குடையைச் சிதைப்பதலால் வட்ட மதன்குடைக்கு மாட்டாயோ-குட்டைமுனி 266 தன்கைக் கடங்குமிந்தத் தண்கடலை நீண்டிருந்த உன்கைக்கு ளேயடக்க வொண்ணாதோ-பொன்கொட்டிக் 267 கப்பமிடார் செய்குன்றைக் கட்டழிப்பாய் தென்மலையை அப்பரிசு செய்யவுன்னா லாகாதோ-செப்பும் 268 மதமோ மொழிந்திடநால் வாயிருந்துங் கூறா விதமேதோ வேழையர்கண் மீதும்-கதமுண்டோ 269 என்றார் நமதுபணி யெல்லாமுங் கைக்கொண்டால் நன்றா மமைச்சருக்கு ஞாயமோ-குன்றாத 270 வள்ளத் தனத்தியர்கள் வஞ்சரைச் சூறைகொள்வோன் கள்ளத் தனத்தையெங்கே கட்டுரைப்போம்-தெள்ளுதமிழ் 271 மல்லையான் சொல்லு மதுர கவிக்கல்லால் முல்லையா னம்பான் மொழிவானோ-மெல்லியலீர் 272 அந்தமல்லர் கோட்டைகட்டி யாளுகின்றான் பஞ்சணையில் வந்தமல்லர் கோட்டைகட்ட வாரானோ-சொந்தச் 273 செயமங்கை வீற்றிருக்குஞ் செம்பொன் மணிக்குன்றாம் புயமங்கை யாற்றழுவப் போமோ-பயமென்றே 274 ஏழையர் வார்த்தைசெவிக் கேறுமோ மேனியெல்லாம் மாழையுருக் கொண்டோமோ வாருமென்னச்-சூழநின்று 275 தலைவி தலைவனது பவனி காணவருதல் கன்னியர்க ளின்னபல கட்டுரைக்கும் வேளையினில் மன்னுமத யானையின்முன் வந்துநின்றேன்-கன்னற் 276 சிலையேந்து சிங்கார தேக மதனை மலையேந்தி யான்புரந்த மாலைத்-துலைசேர் 277 சிவிச்சக்ர வர்த்தியைப்போற் சேர்ந்தோரைக் காத்த புவிச்சக்ர வர்த்தியைமுன் போரிற்-சவிச்சக்ரம் 278 ஆதவன்மே லேவிநின்றே யாரிருள்பூ ரித்துநின்ற மாதவனை நீள்கருணை வாரிதியை-மோது 279 பரதிமிர ராசியடர் பாற்கரனை யார்க்கும் சரதகுண சந்த்ரோ தயனை-விரவு 280 காதலபங் கேருகனைக் காத்தவ ராயன் வாதனய னான மணியச்-சருவும் 281 விரவலர் கோளரியை விற்பனனை வாணர் புரவலனை நீலப் புயனை-இருநிதியைக் 282 தலைவி மயல்கொள்ளல் கண்டேன் திருவழகைக் கண்குளிரச் சேவித்தேன் கொண்டே னதிமோகங் கொண்டமயல்-விண்டுரைக்க 283 இவ்வேளை நல்வேளை யென்றுசொல்லும் வேளையினிற் செவ்வேழங் கான்மீறிச் செல்லவே-வெவ்வேல் 284 மதனம்பு பாய வரிக்கணம்பு பாய விதனமொடு சோர்ந்து மெலிந்தேன்-பதன 285 இடைதுவளக் குன்றமென வேந்துவளக் கொங்கை நடைதுவள மெல்ல நடந்தேன்-புடைதழுவு 286 விஞ்சுசகி மார்செறிந்து மேலணைத்துக் கொண்டேக நெஞ்சு சகியே னிலைதளர்ந்தேன்-பஞ்சணையிற் 287 சேர்த்தினார் பன்னீர் தெளித்தார் தழலினிடை வார்த்தவெண்ணெய் போலவுள்ளம் வாடினேன்-கூர்த்துமுகம் 288 பாராத வன்மயலாற் பாவி யுடல்வருந்தத் தேராத வன்குடபாற் சென்றொளித்தான்-பேராத் 289 துருத்திதென்றன் மாலை சுடர்மதியம் வெள்ளி உருத்தசெழுந் தீயி னுருக்கி-விருத்தமதன் 290 வாரி யிறைப்பதுபோல் வன்னிலவு வீசவிரா ஓருகமே யாகி யுடலயர்ந்தேன்-பாரறிய 291 அம்பலரும் பாரலரு மாக்கினான் மன்மதன்கை அம்பலருக் காரவமே யாக்கினான்-அன்பு 292 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூதென்-றகத்தறிந்தே 293 புத்திமான் சந்து பொருந்துவாய் நீநினைந்தாற் சித்தியா மென்றே தெளிந்துரைத்தேன்-பத்தியாய்ப் 294 தலைவி தூதுரைக்கும் சமயத்தைக் கூறுதல் பூசைபண்ணும் வேளையினிற் போகேல் சமத்தான ராசவட்ட வேளையிலு நண்ணாதே-யோசனைசெய் 295 தானாபதியர் தளகர்த்தர் காரியத்தர் ஆனாத போது மணுகாதே-தானாக 296 ஒப்பமிடும் வேளையிலு மொன்னார் திறைகொணர்ந்து கப்பமிடும் வேளையிலுங் கட்டுரையேல்-எப்புவிக்கும் 297 பேராட்டும் வாணர் ப்ரபந்தகவி வந்திருந்து பாராட்டும் வேளை பகராதே-சீராட்டும் 298 உல்லாச மன்மதன்போ லொண்டொடியார் கூட்டமிடும் சல்லாப வேளையிலுந் தானுரையேல்-வல்லாள 299 போசன் கொலுப்பெருக்கிப் போசனமுந் தான்பண்ணி வீசுமலர்ச் சப்ரமஞ்ச மீதினிலே-நேச 300 மிதசனங்க டற்சூழ வீற்றிருக்கும் வேளை மதுமலர்த்தார் வாங்கிநீ வா. 301 மான் விடு தூது முற்றும் |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |