உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரட்டைப்புலவர் இயற்றிய ஏகாம்பரநாதர் உலா திருச்சிற்றம்பலம் காப்பு நேரிசை வெண்பா சாற்றரிய வாயிரக்கான் மண்டபத்தின் சார்வாக ஏற்ற முடனே யினிதிருந்து - போற்றும் விறல்விகட சக்ர விநாயகனை யேத்துந் திறல்விகட சக்ரா யுதம். கலிவெண்பா ஏகாம்பரநாதர் இயற்பெருமை நிலம்போற்றும் பைந்துளப நீலப் பொருப்பும் பொலம்போற்றும் போதிற் பொருப்பும் :- நலம்போற்றும் 1 மேருப் பொருப்பொருதன் வெள்ளிப் பொருப்பிலிரண் டாரப் பொருப்புடைய வன்னமுடன் :- சேர 2 விருந்து மனமகிழ்வுற் றெப்போது மின்பம் பொருந்தி யுறைகின்ற போதிற் :- கரந்தையினி(து) 3 தேந்துமுடி யோனுடனே யின்பநகை யாடிவளைக் காந்தளிணை கொண்டுதிருக் கண்புதைப்ப :- வாய்ந்த 4 படியும் விசும்பும் பரிதிமதி காணா(து) அடையு மிடையிருளே யாகி :- நெடிதூழிக் 5 காலஞ் சிறிது பொழுதிற் கழிதலாற் சீல முனிவர்க்குந் தேவர்க்குஞ் :- சால 6 மறையவர்க்கும் வேதம் வகுத்த தொழிலெல்லாங் குறைவுபட்ட தென்றிறையுட் கொண்டு :- செறியளக 7 ஓவியமே நின்னா லுலக நெறிமுறைமை யாவுங் குறைவுபட்ட தீங்கதற்கு :- மேவியநல் 8 “அம்பிகை செய் பூசனை” வேதா கமத்தில் விதித்தபெரும் பூசைதனைப் போதார் குழலாய் புரிகென்ன :- வீதெமக்கு 9 வாய்த்த தெனவிரும்பி வானோரை நஞ்சுண்டு காத்தபெருமான் கழலிறைஞ்சி :- யேத்தி 10 மடமாது நின்னை வழிபடுவதற் கான விடமாவ தேதருள் செய்கென்ன :- விடையோனுந் 11 தென்பால தான திசையிற் றிரைவீசு நன்பாலித் தண்டகநன் னாட்டகத்து :- முன்பாக 12 வோது திருநகரி யோரேழி னுஞ்சிறந்த ஆதி நகர்காஞ்சி யந்நகரிற் :- போதநலம் 13 மன்னி வளர்வதொரு மாவுண்டு அதன்நிழற்கீழ்க் கன்னி யெமையுனக்குக் காணலாஞ் :- சொன்னபடி 14 யாகம பூசை புரியவினி தவ்விடத்துப் போகவென வமரர் போற்றிசைப்ப :- வேகிப் 15 பொருப்பரைய னேவலொடு போந்துபல கோடித் திருத்தகு மாதருடன் சேர :- விருப்புடனே 16 தென்றிசையிற் சென்று திருவாய் மலர்ந்தவுயர் நன்றுதிகழ் காஞ்சி நகரெய்தி :- வென்றியிபம் 17 ஒன்று குறுமுயக் கோடு மிடம்பார்த்து நின்றுவிடுங் காஞ்சி நிழல்பார்த்து :- சென்றடைந்தோர் 18 தாம்பிறரைக் காணலாந் தம்மையவர் காணாமல் ஆம்பரிசு நல்கு மகம்பார்த்துக் :- காம்பொன்றின் 19 மூன்று முளரி முகிழ்க்குந் தடம்பார்த்துத் தோன்றுமலர்த் தீபச் சுடர் பார்த்துத் :- தான்றன் 20 இடத்து நிழனோக்கி யாவருங் காணாப் படுத்து மொருகிணறு பார்த்துக் :- குடக்கோடிக் 21 காண வரிதாய்க் கரக்குநதி பார்த்தமரர் பேணுலகத் துய்க்கும் பிலம்பார்த்துக் :- காணரிய 22 செம்பொனிற நல்குஞ் சிலைபார்த்துத் திண்காரி வெம்பரியூர் செண்டு வெளிபார்த்துக் :- கொம்பிற் 23 கடிக்கமலப் போதுங் கழுநீருஞ் சேரப் படைக்குமொரு பாடலமும் பார்த்து :- நடுப்புகுந்தோர் 24 தோற்றங் குரங்காக்குந் தொல்லையிடம் பார்த்ததனை மாற்றுங் கடவுண் மடுப்பார்த்துக் :- கூற்றால் 25 இறவா இடம்பார்த் திறந்தவர் பின்வந்து பிறவா விடம்பார்த்த பின்னர் :- செறிதரங்கக் 26 கம்பை நதியின் கரையணுகிக் காண்டகைய பைம்பொழில்சூழ் எம்மருங்கும் பார்த்தருளி :- யெம்பிரான் 27 யாமா தரவோ டிருப்போ மெனச்சொன்ன தேமா வடிநிழலைச் சேர்ந்தருளிக் :- கோமானை 28 நாமினிது பூசிக்க நல்லவிட மீதென்று பூமருவு தெய்வப் புனலாடித் :- தாமாகக் 29 கம்பை மணலைக் குவித்துக் கசிந்துள்ளம் எம்பெரு மாட்டி யினிதிறைஞ்சித் :- தம்பழைய 30 சேடியர்க ணிற்பத் திருச்சூ டகக்கையாற் றோடவிழ்பூக் கொய்து தொடுத் தணிந்து :- கூட 31 விரவுந் திருவுருவில் வெண்ணீறு நெஞ்சிற் றிருவஞ் செழுத்துந் திகழ :- வுரிமையுடன் 32 அந்தமில் பூசையின்மே லாளுடைய நாயகிக்குச் சிந்தை யொருப்படவே செல்லுநாள் :- இந்துநுதல் 33 “தழுவக்குழைந்த பிரான்” ஆதிக் குலமடந்தை யன்புடைமை முன்புபோற் சூதத் திருநிழலோன் சோதிப்ப :- மோதிக் 34 கரைபொருது கம்பைநதி கற்பாந்தந் தன்னில் விரிகடல் போற்றரங்கம் வீசி :- யிருசுடரும் 35 விண்ணும் பொலன்சக்ர வெற்புங் குலகிரியு மண்ணும் புதையவரப் பண்ணி :- யெண்ணிறந்த 36 வாரிடத்து மெவ்விடத்து மெப்போது முள்ளபிரா னோரிடத்துத் தாமு மொளித்திருப்பப் :- பாரிடமு 37 மேனை யமர்நாடு மேகோ தகமாக வானபெரும் பெருக்குக் கஞ்சாதே :- வானவர்கோன் 38 செச்சை நிகருடம்பிற் செம்பாதி யாகியதன் பச்சை யுடம்பருமை பாராதே :- யிச்சையுடன் 39 றேசுதரும் பழைய திவ்யா கமப்படியே பூசைதனை யொழிந்து போகாதே :- மாசிலா 40 வன்புடைமை தன்னை யகன்றா லரன்மேனி யென்படுமோ வென்பதனை எண்ணியோ :- தன்பழைய 41 பெண்மையோ வன்போ பிறப்போ பெருங்காதற் றிண்மையோ கற்போ தெரிகிலேம் :- உண்மை 42 மறைபடைத்த மேனி வளையான் முலையாற் குறிபடுத்தி மார்பு குழைய :- நறைபடைத்த 43 தாழ்ந்த புரிகுழலா டானாக வம்மணல்மேல் வீழ்ந்து தழுவ வெளிப்பட்டோன் :- சூழந்தமரர் 44 மீளா வடிமை விலையா வணங்கொடுக்குந் தாளான் அரிபிரமர் தம்பிரான் :- ஆளாய 45 “அருளழகன்” தொல்லைத் திருக்குறிப்புத் தொண்டன்றலைமோதக் கல்லிற் புறப்பட்ட கையுடையோன் :- வில்லால் 46 வசையின் முடிமேன் மதியாமன் மோத விசையனோடு பொருத வீரன் :- பசியாற் 47 பதறியொரு சிறுவன் பால்வேண்டப் பாலின் உததி கொடுத்த வுதாரன் :- துதிபெருகத் 48 தேவர் நெருங்குந் திருப்பங் குனித்திருநாண் மேவிய வேத விழாவொலியிற் :- றாவிக் 49 குலாவு பலபொற் கொடிவீதி யெங்கும் உலாவிவரு நாளி லொருநாள் :- நிலாவியசீர் 50 எவ்வா னவரு மிறைஞ்சும் பெரும்பூசை திவ்யா கமப்படியே செய்ததற்பின் :- மைவானி 51 லாறு தொடவுயர்ந்த வாயிரக்கான் மண்டபத்தி லேறி யருளி யினிதிருந்து :- சீறியெழக் 52 காணுந் தொறுமொருதன் கண்மூன் றினிலிரண்டு நாணுந் திருக்காப்பு நாணணிந்து :- சேணுலவு 53 மைவாரி மேகம் வளரும் பிறைபடைத்த செவ்வான மீது திகழ்ந்ததென :- வெவ்வாயுந் 54 தோடு விரியிதழிச் சூழறனிற் பல்கோடிப் பாட லளிகள் படிந்ததென :- நீடுமிரு 55 பாலும் வெயிலுதவு பத்மரா கக்கிரிமே னீல வொளிபோய் நிறைந்ததெனக் :- கோலமுடன் 56 அன்றுதிருச் செங்காட் டணிந்ததிருச் சட்டைதனை யின்று மணிந்தா ரினிதென்ன :- வொன்றாக 57 வெம்மை யுடையா னிருபா கமுமெங்கள் அம்மை திருமேனி யானதெனத் :- தம்மின் 58 முயங்கக் கிரிமான் முலைகுழைத்த மெய்யிற் றயங்கத் திருச்சாந்து சாத்தி :- யுயர்ந்த 59 நனைத்தண் டுழாய்மௌலி நாபியில்வா ழன்ன மெனைத்து மறியா விடத்தே :- தனக்கடையச் 60 சம்பு குலத்தொருவன் சாத்துகைக்கா மென்றளித்த செம்பொன் மணிமகுடஞ் சேர்வித்துத் :- தம்போ 61 னிகரற் றவரிவர் நீங்கா விடத்தே மகரக் குழையங்கு வைத்துத் :- திகழமரர் 62 சாத லொழித்தற்குச் சான்றிருக்கு மவ்விடத்தே சோதிமணிக் கட்டுவடஞ் சூழ்வித்துப் :- போதப் 63 பதும வளைத்தழும்பு பட்ட விடத்தே புதுவயிரக் கேயூரம் பூட்டித் :- திதலை 64 பரந்து வளர்கடவுட் பச்சைக் குரும்பை யிரண்டுகுறி யிட்ட விடத்தே :- குனிப்பின் 65 காணிப் பிறைநிலவோ கங்கா நதிப்புனலோ வேணிப் புரையிருபால் வீழ்ந்ததெனச் :- சேணிற் 66 பனித்தா ரகையின் பரிசன்ன முத்தின் றனித்தாழ் வடம்விளங்கச் சாத்திக் :- குனிப்பில் 67 தீதிருந்து மபினயமுந் தெய்வத் துடியு மிருங்கனலும் வாழு மிடத்தே :- பொருந்தப் 68 பிறந்த விளம்பரிதிப் பேரழகு மட்கச் சிறந்த கடகஞ் செறித்து :- நுறுங்கப் 69 பிசைந்துபிசைந் துண்ணவொரு பிள்ளையறுத் தாக்க விசைந்துபசி தோன்று மிடத்தே :- விசும்பின் 70 முதிரு மிருளை முனிபதும ராகக் கதிருதர பந்தனமுங் கட்டி :- மதுரைப் 71 புரவி திகழிடத்தே பொற்பதும ராகத் திருவுடை யாடை திருத்தி :- பரதவிதக் 72 குஞ்சிப்பும் நல்லநிலைக் கூத்துந் திகழிடத்தே செஞ்சித்ர ரத்னச் சிலம்பணிந்து :- துஞ்சிச் 73 செலவுற்ற வானோர் சிரந்தொடுக்கு மாலை யிலகிக் கிடக்கு மிடத்தே :- குலவு 74 மதுமிக்க கல்லார மாலை யுடனே யிதழித் திருமாலை யிட்டு :- மதில்பொருத 75 தம்பொற் சிலையைத் தலைக்கொண் டனரென்னச் செம்பொற் றிருவா சிகைசேர்த்து :- விம்ப 76 விரவி யிடைதா னிலங்குவதே யென்னப் பரவுமணிக் கண்ணாடி பார்த்துச் :- சுருதியினான் 77 “இசைப்பா விருப்பன்” மூவாத பேரன்பின் மூவர் முதலிகளுந் தேவாரஞ் செய்த திருப்பாட்டும் :- பாவனையாற் 78 போதவூர் கண்ணீர் புளகத் துடனணிந்த வாதவூ ராளிதிரு வாசகமும் :- பாவனையாற் 79 வேட்டென் றெழுதா விருபிறப்போர் கற்கத்தான் பாட்டுண்ட நாலு பழங்கவியுங் :- கேட்டருளி 80 “சூழவருந்தெய்வத்தொளி” ஐங்கைப் பவளநிறத் தானைப் பெருமானுஞ் செங்கைச் சுடர்வடிவேற் சேவகனு :- மெங்கு 81 நிறைபூதஞ் சூழ நிலமெல்லாங் காப்ப மறைஞாளி யேறிவரு வானும் :- நிறையருளாற் 82 றுண்ணெனத்தே வர்க்குச் சுதைபகுத்த மோகினியாம் பெண்ணிடத்தில் வந்து பிறந்தோனும் :- பண்ணுமக 83 மங்கும் படிக்கழற்கண் வாய்ந்திலங்குந் தம்முடைய திங்கணுதல் வேர்விற் செனித்தோனுந் :- துங்கமுடி 84 கொண்ட கடவுட் குளிர்கொன்றைத் தாருமுடித்து உண்ட பரிகலத்தி லுண்டோனுந் :- தண்டமிழான் 85 மண்புகழப் பாடி மறையூரி லாண்பனையைப் பெண்பனை யாக்கிய பிள்ளையுந் :- திண்பிடித்துப் 86 பாழி யமணரிடும் பாரச் சிலையுடனே யாழி தனின்மிதந்த வன்பனுஞ் :- சூழுமிருட் 87 பாதி யிரவிற் பரவைக்குஞ் சங்கிலிக்குந் தூது நடப்பித்த தோழனுந் :- தீதில் 88 வழுக்கில் பெருந்துறையில் வாழ்வித்த கோலங் கழுக்குன்றிற் கண்ட கவியும் :- வழுத்துநர்க்குப் 89 போத வினியதொரு பொன்வண்ணத் தந்தாதி யாதியுலாவோ டமைத் தோனுஞ் :- சோதிமணி 90 மன்றி னருகு மலர்த்துழாய் நாறுமிடங் கொன்றை கமழ்வித்த கொற்றவனு :- மென்றும் 91 புடைமருவு தன்னிழலிற் போகாத பேயை யிடைமருதி லிட்ட விறையு :- மடையத் 92 துயர்கடந்த தொண்டத் தொகையதனி லேனைச் செயல்சிறந்த தொண்டத் திரளுங் :- கயிலைதனிற் 93 றந்தாள் படாமற் றலையால் நடந்துபோ யந்தாதி யாற்புகழ்ந்த வம்மையு :- மிந்தநிலங் 94 கோட்டி வளைத்தெடுத்துக் கூட்டிக் குலைத்தடுக்கிக் காட்டவல்ல பூத கணவரு :- மீட்டுநல 95 மெண்ணு மொருநாற்பத் தெண்ணா யிரவரெனும் புண்ணிய வேடப் புனிதரு :- நண்ணரிய 96 வோரா யிரத்துத் தொளாயிரரென் றூழிமுதற் பேரா நிமந்தப் பெருமையருஞ் :- சேர 97 வுரிய விதிமுறையோ டுள்ள முருகிப் பொருவரிய வன்புடனே போதச் :- கரரைத் 98 “வாசலில் நந்தி” திருவா சலினந்தி செங்கைப் பிரம்பால் நிரையாக வெங்கு நிறுத்தி :- வருவார் 99 கழற்சே வடிபணிந்து கண்களிப்ப முன்னே யெழச்சே வியுநீங்க ளென்ன :- முழக்க 100 விருப்பதுவும் வெள்ளிமலை யென்னாமற் செம்பொற் பொருப்பினும் மேறினார் போல :- விருப்பால் 101 “திருத்தேரில் மேவினார்” வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லி நாதன் கொடுத்த திருத்தேர்மேற் கொண்டு :- முடித்தநதி 102 யாடும் விசையி லலையெழுந்து தன்மீதில் நீடும் வகைசுழித்து நின்றதெனக் :- கூட 103 விருகதி ரஞ்ச வெறிக்கு நிலாவின் ஒருதனி வெண்குடை யோங்க :- விருபாலுங் 104 கங்கை நதியிற் கரைபுரண்ட சீகரம்போன் மங்கையர்கள் வெண்சா மரையிரட்ட:- வெங்களையும் 105 இட்டாலோ பூணாக வென்றுரக மாடுவபோற் பட்டால வட்டம் பணிமாற :- விட்ட 106 வெருது மராமரமு மெவ்வேழுஞ் சாயப் பொருத விடைக்கொடிமுன் போத :- வருவதொரு 107 மேருக் கிரிதொடரும் வெள்ளிக் கிரியென்ன மூரிவிடை யெம்பிரான் முன் போதப் :- பேரிகை 108 “பல்லியம் முழக்கம்” சல்லிகை மத்தளி தண்ணுமை பண்ணமை பல்லிய மெங்கும் பரந்தார்ப்ப :- வல்லபடி 109 வாணன் குடமுழா வாசிப்ப மாமதுர வீணை யுததி மிகவுயிர்ப்ப :- பேணும் 110 பரிசி றமதுசெவிப் பாண்சேரி பெற்ற விருவ ரிசைபாடி யேத்தச் :- சுருதியெழு 111 மின்னரம் பேழு மிசை ததும்ப வெம்மருங்குங் கின்னரர் தங்கள் கிளைபாட :- முன்னரிடும் 112 பேரிகை யோசை பிறங்கமிகத் தாரையுடன் மூரி வலம்புரி முன்முழங்க :- வாரங் 113 “திருச்சின்னம் முழக்கம்” குளித்தவதி பாரக் கொங்கைத் தழும்பும் வளைத்தழும்பும் பெற்றபிரான் வந்தான் :- கிளைத்தசடை 114 யேகாம் பரநாதன் வந்தா னிகல்விடையின் பாகாம் பழையபரன் வந்தான் :- மாகத் 115 தெழுமிரண்டு பேரொளியு மெப்போது மஞ்சி வழிவிலங்கு மூருடையான் வந்தான் :-சுழிகொண் 116 டலையும் பகீரதிநின் றார்க்கின்ற சென்னி மலையன் றிருமருகன் வந்தான் :- கலைதேர் 117 பரிசிலிரு வர்க்கும் பகல்விளக்குங் கண்ணும் வரிசையுட னளித்தான் வந்தா :- னொருவயிற்றில் 118 வாரா வுடம்புடையான் வந்தா னெனமறுகிற் சீரார் திருச்சின்னஞ் சேவிப்ப :-வேரிமிகத் 119 “தேவர் தம் ஊர்திமேல் சூழ வந்தல்” தேங்கு மலரோன் சிறையோதிம மீது மோங்கு திருமா லுவணத்துந் :- தாங்குபடை 120 வாசவன் வெள்ளைமத வாரண மீது மீசர்பதி னொருவ ரேறிடத்துந் :- தேசுதரு 121 மாறிருவ ரெவ்வே ழடர்புரவித் தேர்மீதும் வேறிருவ ரெண்மர் விமானத்துஞ் :- சீறியடுங் 122 கூற்றுக் கடவுள் கொடிய கடாமீதும் போற்று மளகேசன் புட்பகத்துங் :- காற்றுறவாம் 123 வேகமிகு தழலோன் வெற்றித் தகர்மீதும் வாகை வருணன் மகரத்து :- ஆகமத்தின் 124 நீதி தெரியு நிருதிநர வாகனத்துங் காது பனவன் கலைமீதுஞ் :- சோதிதிகழ் 125 சீதமதி முத்தின் றேர்மீது மோரேழு வேத முனிவர் விமானத்தும் :- போதவுயர் 126 விஞ்சையர் சாரணர் சித்தர் வியன்கருடர் செஞ்சுடிகை நாகருடன் சேவிப்ப :- மஞ்சுகவித் 127 தாடுங் கொடிக ளருக்கன் பரிதடுக்க மாட நெடிய மணிமறுகி :- னீடருளாற் 128 “சூழவருந் தெய்வக் குழாங்கள்” பொன்னான சூடகக்கைப் போதன்ன மும்புனலு மெந்நாளு மெவ்வுயிர்க்கு மீந்தருளி :- மன்னு 129 மறச்சாலைப் பெண்டி ரருகுவரக் கங்கை புறக்காவற் பெண்டிருடன் போதச் :- சிறக்கும் 130 வரையர மாதரும் வாரா கரத்திற் றிருவுடன் வந்த திரளுந் :- திருவுங் 131 கலையை யகலாத கன்னிமட மானு மலையை யகலா மயிலுங் :- கலைமகளும் 132 பொன்னி னுலகாளும் பூவையரு மாநதிக ளென்னு மடவா ரெழுவரு :- மன்னமயில் 133 சீறும் விடைகளிறு சேனங் கடாயாளி யேறு மடவா ரெழுவருங் :- கூறுங் 134 குலநாக மாதர் குழாமும் பணிந்து பொலமாட வீதி புகுத :- நிலமாதர் 135 “திருவுலாக்காணும் திருமகளிர்” தாணு நுதல்விழிமேற் றாவடிபோ கத்திரண்ட பாண மலரோன் படையென்னப் :- பூணரவஞ் 136 சூடுந் தரங்கச் சுரநதியிற் றோய்ந்துவிளை யாடும் படிதிரண்ட வன்னமெனப் :- பாடலினாற் 137 றம்பெருமை பாடுந் தமிழோன் றனக்களித்த வெம்பகலிற் சேர்ந்த விளக்கென்ன :- நம்பருறை 138 சூதத் தெழுந்த துணர்ப்பல் லவப்படலங் கோதத் திரண்ட குயிலென்னத் :- தீதற்ற 139 வெந்தைபெரு மான்கரத்தி னேந்துமிள மான்கண்டு வந்து திரண்டசில மானென்னச் :- செந்தமிழின் 140 பாட்டுக் குழல்வோன் பசும்பாதி யின்வார்த்தை கேட்டுத்திரண்ட கிளியென்னக் :- கூட்டகிலார் 141 தாழ்ந்த சடைமுடியோன் றன்னுடம்பைக் காரென்று வாழ்ந்து திரண்ட மயிலென்னச் :- சூழ்ந்தரன்பால் 142 நன்புதிய தூதுக்கு செல்வேனான் செல்வேன் என்பனபோன் மென்குழல்வண் டெங்குமெழ :- நின்புயமேல் 143 எங்கள் தழும்பணிந்தா லென்செய்யு மென்பனபோற் செங்கை வளைகள் சிறந்தார்ப்பச் :- சங்கரன்மேற் 144 றள்ள வரியகுறித் தாமுமிடத் தாயங் கொள்வனபோற் கொங்கைக் குவடசைய :- வுள்ளமகிழ் 145 செம்பதுமைக் கேள்வன் றிருமல்லி நாதனுயர் சம்புபதி நல்குந் தடந்தேர்போல் :- கம்பரே 146 யித்தேருங் கண்டாலோ வென்பனபோ லல்குலெனு மத்தேரின் மேகலைக ளார்ப்பரிப்ப - வித்தெருவிற் 147 சீற்ற விடையோனைச் சேவிக்கப் பெற்றபதம் போற்றுவபோற் பொன்னூ புரஞ்சிலம்ப :- மேற்ககன 148 கூடம் வெளியடைத்த கோபுரத்துங் குன்றனைய மாட நெடுமத்த வாரணத்து :- மோடுகதிர் 149 விஞ்சு கொடிதடுக்கு மேனிலா முற்றத்து மஞ்சுதவழ் கங்கைகொண்டான்மண்டபத்தும் :- வெஞ்சமரிற் 150 றத்துபரி பல்லவன் சம்பு குலப்பெருமான் வைத்த துலாபார மண்டபத்துஞ் :- சித்ரமணிச் 151 சூளிகையின் மீதுஞ் சுறைநிலா முற்றத்து மாளிகையின் மீதும் மறுகிடத்தும் :- யாளி 152 செறியுமணித் தெற்றியினுஞ் செய்குன் றிடத்து நிறைய எவரு நெருங்க :- இறையவனை 153 “திருக்காட்சியும் காண்மகளிர் காதலும்” வந்து வணங்கி மதிக்கொழுந்துஞ் செஞ்சடையுஞ் சிந்தைகவர் கண்மலருஞ் செவ்வாயு :- மெந்தைபிரான் 154 தெய்வப் புரிநூலுந் திண்டோளு மார்பகமுஞ் சைவத் திருவான தாழ்வடமு :- மெய்வழியக் 155 கொண்ட திருநீறுங் குழைதுரந்த செங்கழுநீர் மண்டு திருக்கொன்றை மாலையு :- மெண்டிசையுந் 156 தாவில் சுருதித் தமருகமுந் தம்முடைய தேவி யறியுந் திருக்கூத்தும் :- யாவையுந்தம் 157 உள்ளத்தே கொள்ளா வுருக்காப் பெருகின்ப வெள்ளத்தே வீழா மிகவுயிராத் :- தள்ளியுறை 158 விட்டவாள் போல்விழியீர் மென்சுணங்கின் பொன்முலைமேற் பட்டவா பாரீர் பசப்பென்பார் :- கட்டழகன் 159 கோதை யகன்மார்பங் குழைவிக்க மாட்டாதால் ஏது படிலென் இவையென்பார் :- போத 160 நெருக்கி யரிதிட்ட நிரைவளைக ளெல்லா மிருக்கை யரிது கரத்தென்பார் :- நிருத்தன் 161 பரிக்குந் தழும்பு படுத்தா வளைகள் இருக்கிலென் போகிலென் என்பார் :- திருக்கண்கள் 162 வையார்நம் மேலென்பார் வைப்பா ரவர்கருணை மெய்யானவ ளொருத்திமே லென்பார் :- ஐயோ 163 வருள்படைக்க வேண்டி யருமந்த கண்ட மிருள்படைத்த தேனிங்ங னென்பார்:- இருள்படைத்த 164 தின்றாகில் வானோ ரெனுஞ்சாதி யத்தனையும் பொன்றாதோ வென்று புகலுவார் :- வென்றிமதன் 165 ஏவானோ மேலென்பார் ஏவினால் இன்னமுந்தான் போவானோ போய்த்தோ விழியென்பார் - மேவனிலம் 166 செல்லாதோ மீதென்பார் சென்றால் வரவிடுமோ நல்லார் திருக்காப்பு நாணென்பார் : புல்லத் 167 திருக்கொன்றை மாலைபெறிற் சிந்தை குடியேறி யிருக்கின்ற மாலொழியு மென்பா :- ரொருத்திகுறி 168 யிட்டதிவர் மார்புபிற ரெய்துவதின் மாலுழன்று பட்டதமையும் படவென்பார் :- மட்டவிழும் 169 அம்பதுமப் போதி னயன்மா லறியாத வும்ப ரறியா வொருகிரியைச் :- செம்பவளப் 170 பாதி யுடம்பு பசப்பித்தாள் பைங்களபக் கோதை முலையாற் குழைவித்தா - ளாதலா 171 லுண்மை தனக்கிந்த வுமையாள் பிறந்ததற்பின் பெண்மைதனக் கேற்றம் பெரிதென்பார்:- பெண்மைக்கு 172 இறையா ளிவளன்றோ வென்பார்மற் றிங்ஙன் மறுகி லெதிர்வந்த மாத :- ரறுசமய 173 அண்டருக்குந் தாயா ரறச்சாலை யிப்படிபெற் றுண்டிருக்கு மூதூ ருடையானே:- கொண்டவிருட் 174 காவி விழியொருத்தி கட்டிக் குறியிட்டு மாவடியில் வைத்த வயிரமே :- தேவிமுகஞ் 175 செவ்வி பெருகத் திருச்சூ டகக்கையாற் றவ்வி பிடித்துச் சமைத்தன்ன :- மெவ்வுயிர்க்கு 176 மாரச் சொரிதருநெல் ஆட்டைக் கிருநாழி சேரப் படியளக்குஞ் சீமானே : மார்புபோற் 177 கண்ணுஞ் சிலர்படைத்த காணியோ காமவேள் பண்ணுந் துயர்தீரப் பார்த்தருளீர்:- வெண்ணிலவோடு 178 ஈரும் மிளந்தென்றல் ஈராமல் உம்முடைய வாரம் பசிதணித்தா லாகாதோ :- வாரவுளம் 179 வேவக் கறங்கும் விடைமணியை யும்முடைய சேவுக் கினிதளித்தாற் றீதாமோ :- மேவியவிக் 180 கொக்கி னிறகுடனே கூவுங் குயிற்சிறகை யொக்க வணியவுமக் கொண்ணாதோ :- மிக்க 181 வறஞ்செய்யு மூருடையீர் ஆகாது காணு மறஞ்செயல் என்று மயங்கா :- நிறந்திகழும் 182 விண்ட குவளைக்கும் விள்ளாத தாமரைக்குந் தண்டரள மும்பொன்னுஞ் சாத்துவா:-ரொண்டொடியீர் 183 பாகம் பிரியாத பச்சைமயில் காணாமல் ஏகம்பர் பார்த்தா ரெமையென்பார் :- ஆகமதன் 184 காதன் மலர்சொறிந்து கைசலிப்ப விவ்வண்ண மாதர் பலர்மயங்க மற்றொருத்தி :- பேதை 185 பேதை திரையுதவு பேரமுதின் சிற்றரும்பு முற்றி வருமுகைய தானதொரு வல்லி :- சுருதியளி 186 யூத மலரா வொருதா மரைமுகிளங் காத லுதவாத காமசரம் :- வேதத் 187 துழையா னகலா துறைகின்ற சூதங் குழையாத தென்றற் கொழுந்து :- பழைதாகக் 188 கம்ப ருறையுங் கடவுளிளஞ் சூதத்தின் கொம்பி லுறையாக் குயிற்பிள்ளை :- யின்ப 189 வலையா ரமுதத்தின் ஆரம்ப வித்து தொலையாத காமத்தின் றோற்றம் :- உலகிற் 190 சிறந்தபிரா னல்லாத தேவர்களைப் போல விறந்து பிறக்குமெயிற்றாள் நிறைந்துமைப்போல் 191 முத்தாரம் பூண முலையெனக்குச் சூட்டுமென்று கைத்தாயர் முன்னின்று கண்பிசைவாள்:- சுத்த 192 வியல்பு தனையொழிய வேதும் பிறழாக் கயலை யனையவிரு கண்ணாள் :- புயல்வரினு 193 மாடாத தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதுங் கூடாது மான குழலினாள் :- நீடிமிக 194 வோங்கி வளர்தன் னுரியபரி ணாமமெல்லாந் தாங்கியவித் தன்ன தனத்தினாள் :- நீங்காத 195 வேகம்ப மென்னீ ரிமவான் மகள்தழுவ வாகங் குழைந்த வரனென்னீர் :- மாகம்பை 196 யாறென்னீ ரம்மை யறச்சாலை யென்னீர்நம் பேரென்னீ ரென்றுதமைப் பேசுவித்த :- வாறெல்லாம் 197 பாவைக் குரைத்தந்தப் பாவைபக ராததெல்லாம் பூவைக் கழுது புகலுவாள் :- மேவுபல 198 தீவிற் பிறந்த செழுமணியுந் தம்மூரின் வாவி பிறந்த மணிமுத்துங் :- காவிவிழி 199 யம்மை முதனா ளரனாரைப் பூசித்த கம்பை மணலுங் கலந்தெடுத்துக் :- கொம்பனையா 200 ளொண்டொடி மாத ருடனே கரஞ்சிவப்ப வண்ட லிழைத்து மகிழ்போதிற் :- பண்டொருநாள் 201 தெண்டிரையிற் பெற்ற திருவமுதச் செவ்வாயும் பண்டுகிராற் கொண்ட பரிகலமு :- மண்டுமெரி 202 தாழுஞ் சினத்துழுவை தான்கொடுத்த வுட்சாத்தும் வேழங் கொடுத்ததொரு மேற்சாத்துஞ்:- சூழ்பனியின் 203 ஓங்கல் கொடுத்த வொருபா கமுமுடையார் தாங்கு மணிமறுகு சாருதலு :- மாங்கவளும் 204 வண்ட தனையொழிந்து வந்தணுகிச் செந்துவர்வா யொண்டொடி மாத ருடனிறைஞ்சி :- யண்டருறை 205 நாகஞ் சிலையாக நண்ணார் புரமெரித்த ஏகம்பர் தம்பெருமை யெண்ணாதே :- கோகநகச் 206 வுந்திக் கணையோ னொருபாக முஞ்சடையு மந்தப் புரமென் றறியாதே :- யிந்தப் 207 பெருத்த மணக்கோலப் பிள்ளையுடன் றேர்மேல் இருத்து மெனைக்கொடுபோ யென்ன:- வொருத்தியிவர் 208 பூணத் தவரிருவர் பொன்முடியுஞ் சேவடியுங் காணக் கிடையாத கம்பர்காண் :- வாணுதலாய் 209 பாய வுலகம் பதினாலையும் பரந்தொன் றாய பெருமா னருகிருக்கத் :- தோயுமகிற் 210 பச்சைக் கிரியாற் பவளத் திருமார்பி லச்சிட்ட வர்க்கொழிந்துண் டாகுமோ :- வச்சமுடன் 211 மீதெடுத்துக் கம்பை மிகுபெருக்குக் கஞ்சாத மாதவத்தாட் கன்றியிது வாய்க்குமோ :- மூதண்ட 212 மெல்லாம் பெறநெல் லிருநாழியால் வளர்க்க வல்லாள் தனக்கன்றி வாய்க்குமோ : சொல்லாய் 213 குறைவின் மடமயிலே கூசாதே யாமே யிறைவரரு கேறி யிருப்போம் :- மறவிதனை 214 யென்ன இளையா ளிருகண்கள் முத்தரும்ப வன்னையர்தங் கையா லணைத்தாற்றி:- மின்னேபோ 215 தென்று பகர்வதன்முன் ஏகம்பர் தேருடனே தென்றலந் தேருந் தெரிவித்து :- வென்றி 216 மதன்கை வரிசாபம் வாங்காமல் வாசம் பொதிந்தகணை பூட்டாமற் போந்தான் :- பெதும்பை 217 பெதும்பை யிவண்மற் றொருத்தி யெவர்க்குந் தெரியாப் பவளத் தமுதுதரும் பாவை :- தவளத் 218 திருப்பாற் கடற்பிறந்து செந்தா மரைமேல் இருப்பார்க்கு நேரே யிளையாள்:-விருப்புடனே 219 ஆர்க்கும் அளிகள் அவிழ்பத மீதென்று பார்க்குமுகை போலும் பருவத்தாள்:-ஆக்கமுடன் 220 போராக்கு மாமதனன் போதும் பவனிக்குத் தேராக்க வெண்ணுஞ் செழுந்தென்றல் :- வேரிநறு 221 போது புனைவதற்கும் பூணாரம் பூண்பதற்கும் ஆதரவு வைக்கு மளவினாள் :- ஆதிமதன் 222 பேறும் மடநாணும் பெண்மைப் பெருமிதமும் வீறுஞ் சிறிதரும்பு மெய்யினாள் :- சீறியெரி 223 யூட்ட மதின்மூன் றுழிநிகழ்ந்த வண்ணம்போற் கூட்டி முடிக்குங் குழலினாள் :- வேட்டவர்தம் 224 புந்திகவர் வஞ்சனையும் பொய்யுங்கொலையுமிடம் வந்துவந்து பார்க்கு மதர்விழியாண் :- மைந்தர் 225 உகமை யழகோடே யுள்ளரும்புங் கஞ்ச முகையின் முகைபோல் முலையாள் :-இகுளையர்தம் 226 மீளாத காதல் விழைவுரைக்கும் போததனைக் கேளா தவர்போலக் கேட்டிருப்பாள் :- கேளாய 227 மாதரு மானு மயிலும் பசுங்கிளியும் ஓதிமஞ் சூழ வுடன்போத :- மாதவிப்பூம் 228 பந்தரிட்ட நீழற் பளிக்குச் சிலாதனத்து வந்திருப்ப வெற்றி மடமாதர் :- உந்திக் 229 குவளை மலரிருகண் கொங்கைக் குறியிட்ட பவள மலையினையும் பாடித் :- தவளநகை 230 யன்னை யறஞ்செய் அறச்சா லையும்பாடிக் கன்னி யினிதாடுங் கழங்கென்னக் :- கன்னிதனக் 231 காழி தருமுத்த மாகாதென் றவ்வூரில் ஏழுநதி முத்த மினிதெடுத்துச் :- சூழ்தேரிற் 232 றட்டு நிகரல்குற் சங்கிலிபாற் றூதுதமை விட்டவர்பாற் பெற்ற விழியொன்றும் :- வட்டித்துப் 233 பாத மலர்துதித்த பட்டவா ணன்றனக்குக் காத லுடனளித்த கையிரண்டும் :- பூதத்து 234 இகலொழிய நின்று மிருந்துங் கிடந்து முகிலுறையுந் தானங்கண் மூன்று :- நகிலால் 235 இலங்கு வரிவளையா லிவ்விரண் டாய்த்தம்மேல் நலங்கொள் தழும்பொரு நான்குந் :- துலங்க 236 வுமைக்கமைத்த பொற்கோயி லூழி முதல்நாள் அமைத்தன கோணங்கள் ஐந்தும் :- அமைத்தோள் 237 இளைக்கு மருங்குல் ருநாழி நெற்கொண் டளிக்குஞ் சமயங்க ளாறுங் :- குளிப்பார் 238 செறியும் பவக்கடலைச் சிந்தித் திரையால் எறியும் புனிதநதி யேழும் :- பிறைநுதலாள் 239 அன்பொடுபா டிக்கழங்கை யாடுகின்ற வெல்லைக்கண் என்பொருபெண் ணான வெழினகரும்:- அன்பனுளம் 240 அன்றொருத்திக் குண்மை யறிவித்துத் தாமகிழ்க்கீழ்ச் சென்றொளித்து நின்ற திருநகருஞ் :- சென்று 241 முதுககன கோளத்து முற்பட்ட கூத்தின் பதும மலர்ந்த பதியுங் :- கதிராழிக் 242 காவித் திருநிறத்தோன் கைகுவித்து நின்றெதிரே சேவித்து நிற்குந் திருப்பதியுந் :- தாவுபரி 243 மல்லற் றொடைத்தொண்டை மான்கடவுந் தேரையொரு முல்லைக் கொடிதடுத்த மூதூரு :- நெல்விலைக்குச் 244 சற்றளந்த நாட்புகலிச் சைவப் புலவனுக்குக் கொற்றளந்த மாடக் கொடிநகரும் :- பெற்றதொரு 245 தாயுமிலை யென்னுந் தமது குறையையொரு தூய கழைதவிர்த்த தொன்னகரும் :- வாய்கலசம் 246 ஆட்டி யினிமை யறிந்தவூ னெச்சிறனை யூட்டிய வேட னுறைபதியுஞ் :- நாட்டிலுள 247 வெண்ணி லமணரெலா மேறக் கழுவிலொரு பெண்ணை யியலறிந்த பேரூரும் :- விண்ணவர்தஞ் 248 சாத லுறைநாளுஞ் சாகாத புள்ளிரண்டுந் தீதகல வாழுந் திருமலையுந் :- தூதுதமை 249 யோட்டுந் திருநாவ லூராற் கிரந்திட்டுப் பாட்டுண்ட வூரும் படைத்துடையான் :- சூட்டு 250 வெருவும் வரியரவும் வெண்டலையு மாறு மருவு முடிக்கம்ப வாணன் :- ஒருபுத்தன் 251 செங்கல் லெறிக்குச் சிவலோக மீந்தபிரான் றுங்க மணிமறுகு தோன்றுதலும் :- பைங்கொடியும் 252 ஆடுங் கழங்குதவிர்த் தாயத் துடன்கனக மாட நெடுவீதி வந்தணுகிக் :- கூடப் 253 பணிந்து பரவிப் பகுவா யரவ மணிந்த திருத்தோ ளழகு :- மணங்கமழும் 254 பொன்னான மார்பும் புனையும் புரிநூலு மன்னான காதல் வரநோக்கி :- மின்னுந் 255 திருந்திழையீ ரிந்தத் திருமேனி தன்னில் இருந்ததழும் பென்னதழும் பென்றாள் :- புரிந்தவரும் 256 மின்னே கிளியே விளங்கிழையே யன்னமே யன்னே யிதனை யறியாயோ :- தன்னருளாற் 257 பாராட்டி வையம் பதினாலையும் வளர்க்கும் பேராட்டி மாதவத்தின் பேறுகாண் :- வாரிதிசூழ் 258 வைய முழுதறிய வாங்குஞ் சிலைமாரன் எய்யுங் கணைபடைத்த வேற்றங்காண் :- துய்யகுழற் 259 பண்பிறந்த சொல்லாய் பலசொல்லி யேனிந்தப் பெண்பிறந்தார்க் கெல்லாம் பெருமைகாண்:-மண்பரவி 260 யேத்து மிறையா ளிருகொங்கை யால்வளையாற் சாத்திய கோலத் தழும்புகாண் :- பார்த்தருளாய் 261 என்னு மளவி லிலங்குமனத் துட்காதல் பொன்னனைய மெய்யிற் புறம்பொசியக்:-கன்னிவெயில் 262 தீண்ட மலர்வதொரு செந்தா மரைமுகைபோற் காண்டகைய செவ்விக் கவின்படைத்தாண்:-மீண்டரனுங் 263 கோல மயிலைக் குறிப்பாற் கடைக்கணித்தாற் போல முறுவலுடன் போயகன்றான் :- மாலைமதன் 264 செங்கை வரிசிலையைச் சேரத் தொடைமடக்கி யெங்கள் பெருமானோ டேகினான் :- மங்கை 265 மங்கை புடையோத ஞாலமெலாம் போர்மதனன் வேதக் கிடையோதி விக்குமொரு கிள்ளை :- விடமும் 266 வளருங் கொடுங்கொலையும் வஞ்சனையும் பொய்யுங் களவுங் குடிபுகுதுங் கண்ணாள் :- தெளிதேனுஞ் 267 சீல வுததி யமுதுஞ் செழும்பாகும் பாலு முதவும் பனிமொழியாள் :- மாலுதவு 268 மிக்க திருவழகின் வெள்ளத் தெழுந்தவிரு மொக்கு ளனைய முலையினாள் :- மைக்குழலிற் 269 பூவின் மிகுபொறையாள் பூணார மென்முலையாள் நோவ வடியிட்ட நுண்ணிடையாள் :- ஆவிபெற 270 வார்வ முளதாக வாடவர்தன் மேல்வைத்த பார்வை யறியும் பருவத்தாள் :- சேரச் 271 சுடருற்ற பூவளைக்கைத் தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று :- விடையோன்பால் 272 அன்னத்தைத் தூதுவிடவங்கையிற் கொண்டனள்போற் பன்னித் திலநிரைத்த பந்தேந்தி :- யன்னதுதான் 273 பாவை யொருபாகன் பாலணுக மாட்டாமற் போவதுவு மீள்வதுவும் போற்றோன்ற :- மேவி 274 நெறிந்திருள் கொண்டை நெகிழ்ந்து ததும்ப நறும்புழு கின்கண் நனைந்து :- செறிந்து 275 சுரும்பி னினங்கள் சுழன்று சுழன்று நரம்பென வெங்கு நணுங்க :- விரும்பி 276 யிடுங்குழை யஞ்ச வெறிந்திரு கண்கள் நெடுங்குமி ழின்க ணெருங்க :- வடங்கொள் 277 மனங்கமழ் குங்கும வண்ட லணிந்து கணங்கணி கொங்கை துளங்க :- வணங்கி 278 மருங்கு தளர்ந்து வருந்த வருந்த இருங்கலை கொஞ்சி யிரங்க :- நிரம்பி 279 யிலங்கு பதங்க ளிடுந்தொறு நின்று சிலம்பு சதங்கை சிலம்ப :- நலந்திகழும் 280 வல்லியினி தாட மடவா ரணைந்துமலர் வில்லி புரிவித்த மெய்த்தவமே :- நல்லமட 281 மானே கலாப மயிலே மலர்பொதியாத் தேனே திரையளித்த தெய்வமே :- கானேயுங் 282 கோதை யிதழ்வாய்க் கொடியே நமக்கிந்தப் பாவியிடை செய்த பகையுண்டோ :- மேவியுடன் 283 மன்னுஞ் சிறையன்றின் மன்றிற் பனைமடன்மே லின்னஞ் சிலநா ளிருந்தாலோ :- முன்னமே 284 வென்றே யிருக்கும் விழியுடனே யுள்ளபகை யின்றே மதன்முடிக்க வெண்ணமோ:-வென்றிமதன் 285 சேரும் வளைமலராற் றீண்டப் பெறும்வாழ்வில் ஆரமணிப் பந்துக் கமையாதோ :- பாருலகில் 286 தாவில் தகைமைத் தபோதனர்தங் காலத்தே யாவி யுடனிருந்தா லாகாதோ :- பாவா 287 யமையும் மையுமெனு மவ்வளவிற் றேர்மே லுமையொரு பாக முடையோன் :- சமரமுக 288 வீரனுக்கு மெய்யன்பான் மேவுந் திருநீற்றுச் சேரனுக்குஞ் சோழனுக்குந் தென்னனுக்கும்:-ஊரனுக்கும் 289 ஆரணற்கும் வாசவற்கு மல்லாத தேவருக்கு நாரணற்கும் மேனோர்க்கும் நாதனார் :- போர்முகத்தி 290 லாமநாட் கொண்டதலை யாட்டுத் தலையாக மாமனார்க் கீந்த மருகனார் :- தாமாக 291 விங்கெமையாட் கொள்ள வெழுந்தருளப் பெற்றோமென் றங்குளமின் னார்கண் டகமகிழச் :- செங்கேழ் 292 வயங்கு மணிமாட மாமறுகிற் றோன்ற வியந்தமணி பந்தாடல் விட்டு :- நயந்தணுகித் 293 திண்டோளு மார்புந் திருநீல கண்டமுங் கண்டோரை வாழ்விக்குங் கண்மலருங்:-கண்டிறைஞ்சித் 294 தூய பவளந் துவளுற்றா டோழியருந் தாயரு நிற்கத் தலைப்பட்டாள் :- தீய 295 வெறியு மழுவுடையா ரிம்மாதின் காதல் சிறிது முணரார்போற் செல்லக் :- குறைவில் 296 மறை புகலும் பூசை மனுவா லயத்தி லுறைதிரு வேகம்ப முடையீர் :- செறியிருளிற் 297 பந்தணுகுஞ் செங்கைப் பரவைபாற் சங்கிலிபால் வந்துழலுந் தூது மறந்தீரோ :- நொந்தொசியுஞ் 298 சிற்றிடை புல்லத் திருமார் பகங்குழைந்தீர் நெற்றி விழியுடையீர் நீரன்றோ :- வொற்றியூர்ப் 299 பெண்ணோ வறிவார்தம் பேரின்று தொட்டுமக்கு விண்ணோர் பெருமானே வேண்டாவோ:-வண்ணம் 300 அமைந்தாரார் காதலினா லார்தலையிற் பெண்ணைச் சுமந்தாரார் மற்றுமைபோற் சொல்லீ :- ரமைந்து 301 துகைத்து மதுகரத்தாற் றோடுழுதார் தந்து நகைத்துமுகம் பார்த்து நடவீர் :- முகத்திலிவை 302 கண்ணன்றோ வெப்படியுங் காதலித்தா டானுமொரு பெண்ணன்றோ கச்சிப் பெருமானே :- யெண்ணில் 303 இருக்கிலறஞ் சொன்னீ ரெனுமாதை விட்டுத் திருக்கடைக்கண் வைத்தவர்போற் செல்ல:-வொருக்காலு 304 மேவுண் டறிகிலளென் றெண்ணாதே யேவுண்டால் ஆவி படுவ தறியாதே :- பாவி 305 விறல்வேள் சிலையம்பு விட்டான்றன் னம்பின் மறல்வேல் விழியாண் மனத்தே :- பிறைமுடியார் 306 பாதி கருகப் படுபஞ்ச பாணமதிங் கேது படுத்தா திளையாளைக் :- காதலுக்குச் 307 சங்கம் விழுமென்றுந் தாழ்கலைநில் லாதென்றும் அங்கம் பசலைநிற மாமென்றுந் :- திங்கணிலா 308 ஈரஞ் சுடுமென்று மேழிசைவேய் தீயென்று மாரஞ் சுடுமென்று மன்றறிந்தாள் :- சோர்வுற் 309 றடங்கு மறிவினளா யன்னையர்தந் தோண்மேற் றடங்கண் மயிறளர்ந்து சாய்ந்தாள் :- மடந்தை 310 மடந்தை இளையார் மனம்வளைய வெய்யுமதன் செங்கோல் வளையா வகையசையும் வல்லி :- யளகநறை 311 தேங்கு கருமுகிலுஞ் செவ்வாய் முருக்குமொளி தாங்குபுரு வத்திந்த்ர சாபமு :- மாங்கழையும் 312 வாய்ந்த மொழிக்குயிலு மைக்கட் கருவிளையும் பூந்தரளஞ் சேர்கழுத்துப் பூங்கமுகு :- ஏய்ந்தநகை 313 முல்லை நகையு முலைக்கோங்குங் கைக்காந்தள் மல்லல் மலரும் வரிச்சுணங்கா :- மல்லிமல 314 வேங்கையுஞ் சாயல் மயிலும் வியனழகுந் தாங்கு திருநிறத்த சண்பகமும் :- வாங்குமிடை 315 மின்னும் பதச்சூத மென்குழையுங்கொண்டொன்றாய் மன்னியகார் வேனிலுடன் வந்ததென:-மின்னுசுதை 316 பக்க நிலவெறிக்கப் பத்மரா கத்துவெயின் மிக்க வரங்கத்து மேனின்று :- முக்கணனைத் 317 தேவர் நெருங்குந் திருமயா னம்பார்த்துத் தாவில் திருமேற் றளிபார்த்து :- மேவி 318 யரன்விடா தாளு மனேகதங்கா பார்த்துப் பரவுங்கா ரைக்காடு பார்த்துப்:-பெரிதிறைஞ்சிக் 319 கங்கைகொண்டான் மண்டபமுங் கண்டு மனமகிழந்து மங்கைகொண்டான் வாழு மனைபார்த்துத் :-திங்கண் 320 முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன் படைத்துலா மண்டபமும் பார்த்து:-விடைக்கொடியோன் 321 கச்சா லையும்பார்த்துக் கம்பர்தம் பாடியெனும் பொற்சா லையும்பார்த்துப் பூவைமொழிப் :- பச்சைநிறச் 322 சைவ முதல்வி தவஞ்செய்யப் பெற்றதொரு தெய்வவுல காணித் திருக்குளமுந் :- துய்ய 323 வறச்சாலை யும்பார்த் தறுசமயம் வாழும் புறச்சாலை யும்பார்த்துப் பூவை :- சிறப்புடைய 324 விந்நகர்போ லெந்நகரு மில்லையிமை யோர்பதியு முன்ன வரிதிதனுக் கொப்பென்ன :- வன்னநடை 325 மானே யிதன்பெருமை வல்லவரார் சொல்லுகைக்குத் தானே யுவமை தனக்கல்லான் :- மானார்கட் 326 பொற்றொடியாள் கண்ணுதலைப் பூசித் தறஞ்செய்யப் பெற்ற திதுபோற் பிறிதுண்டோ :- மற்றிவளுக் 327 கந்தமுத லில்லாத வாதியொரு மாவடிக்கீழ் வந்துவெளிப் பட்டநகர் மற்றுண்டோ :- நந்தா 328 மருக்காவின் மூன்று மணிவிளக்கு மன்னி யொருக்காலு நீங்கா துறையுந் :- திருக்காமக் 329 கோட்ட மெனிலிங்கே குலவுங் கனகமழை யீட்ட முகில்பொழிந்த திவ்விடத்தே :- கூட்டியபே 330 ராசையுடன் மால்பத் தவதாரந் தம்மிலும்வந் தீசனைப் பூசித்த திவ்விடத்தே :- பேசுநல 331 மொன்று புரிந்த தொருகோடி யாகுமிதில் என்று மொழிகின்ற வெல்லைக்கண் :- மன்றற் 332 றிருக்கொன்றை மாலையளி செவ்விமண முண்டு தருக்கிய நாதந் ததும்ப :- வெருக்கமலர் 333 பாயுஞ் சடாடவிமேற் பாகீ ரதிமுகங்க ளாயிரமும் வீசி யலையெடுப்ப :- வோயா (து) 334 அருகிலிரு பாலு மருமறைக ணான்கும் பரிகலமு மாலையுடன் பாட :- வொருதன் 335 றிருக்கைத் தமருகத்துத் தெய்வச் சுருதி பெருக்கத் திசைமுகத்திற் பெய்ய :-விருப்பொடரி 336 தேடுந் திருவடியிற் செம்பொற் சிலம்போசை யூடுங் ககனத் துலாய்நிமிர :- நீடு 337 நடஞ்செய் தருள்காக்கு நாயகரும் வானந் தொடும்பொன் மணித்தேருந் தோன்ற:-கொடுங்குழையாள் 338 கோதை யசையக் குழலசையக் கோல்வளைக்கை மாதர் பலருடனே வந்திறைஞ்சிச் :- சோதி 339 மிகக்கருணை யெப்போதும் வீற்றிருந்த செவ்வி முகத்தழகைக் கண்ணால் முகந்தாள் :- நிகர்ப்பில் 340 தவளத் திருநீறுஞ் சந்தனமுந் தோய்ந்த பவளத் திருத்தோள்கள் பார்த்தா :- ளிவளும் 341 மலர்மார்பி லாசையெலாம் வைத்தாள்மைக் கண்ணீர் புலராம னெஞ்சம் புலர்ந்தா :- ளுலகுண்ட 342 திண்பால் விடையீர் திருத்தோ ணலங்கண்ட பெண்பாவி யாவி பெறுமாறு :- கண்பாரீர் 343 என்றபொழு திற்கச்சி யேகம்ப ரேகுதலு மன்றன் மலர்சொரிய மாரவேள் :- நின்றயர்ந்த 344 தத்தை மொழிக்குயிலைத் தாய ரெடுத்தணைத்துச் சித்ரமணி மண்டபத்திற் சேர்வித்து :- முத்தினொரு 345 பந்தரு மிட்டார் பனிநீ ரையுஞ்சொரிந்தார் செந்தளிரின் பாயலின்மேற் சேர்த்தினார் :- சந்தனமும் 346 பூசினார் கொண்டமயல் போமோவென் றாயிரமும் பேசினார் தாயார் பெரிதிருந்து :- கூசாதே 347 தண்ணென் கழுநீருஞ் சாத்தினார் பார்த்தயலார் எண்ண முமக்கொன்று மில்லையோ :- வொண்ணுதலீர் 348 முத்தினொரு பந்தன் முழுநிலா வீசுநிழல் நித்தருறை தேமா நிழலாமோ :- பித்துளதோ 349 வாசப் பனிநீர் மணலை யவராகப் பூசித்த வாற்றின் புனலாமோ :- பாசிழைக்குப் 350 பாயல் குளிரி படுத்தாலப் பாய்விடையோன் கோயிலிள மாவின் கொழுந்தாமோ :- நேயமுள 351 பொற்றொடி நல்லீர் புனைசந் தனச்சேறு நெற்றி விழியவர்த னீறாமோ :- கற்றறிவி 352 னூற்றா யிரநீர் நொடித்தா லவையிவளுக் கேற்றார் திருவஞ் செழுத்தாமோ :- மேற்றான் 353 பிணைந்த வணிகழுநீர் பெய்வளைக்குக் கம்ப ரணிந்த திருக்கொன்றை யாமோ:-வணங்கனையீ 354 ரென்று மொழிய இவையவை யாயினபோல் நின்றதிவ ளாவி நீங்காம :- லன்றே 355 தெரியவே யாவர்க்குஞ் சிந்தா குலமு முரையுந் தெளிவுதர லுற்றாள் :- அரிவை 356 அரிவை கமல மலர்சுமந்தாள் கட்டழகு மேனாள் அமுதமுடன் வந்தா ளழகுஞ் :- சிமயமிசைக் 357 கூசி மழைதவழுங் கொல்லிக் கிரிபடைத்தாள் பேச வரியதொரு பேரழகும் :- வீசுமிளந் 358 தென்றலும் வென்றிச் சிலைமாரன் னைங்கணையு மன்றலுமொன் றான வடிவினாள்:-பொன்றுமொரு 359 காலமும் பர்த்துக் கயிறும் பிடித்தொருவன் சூலமு மேந்திச் சுழலாமன் :- மால்செய்(து) 360 உலவா நகையா வொசியா வசையா குலவா வுயிருண்ணுங் கூற்று:-தலைவிக்கைங் 361 கோணம் பெறவகுத்த கோயில்போல் யாவரையுங் காணுந் தொருமயக்குங் காட்சியாள் :- பேணி 362 மகிழ்வுற்ற வாயமுடன் வண்டரள மாலை திகழ்சித்ர மண்டபத்திற் சேர்ந்து :- மகர 363 விடந்தோய் விழியங் கெழுதி யவையெல்லாம் நெடும்போது பார்த்தகலா நிற்ப:-வடைந்தெவரு 364 மின்ன திதுவிதுவென் றெங்களுக்குக் காட்டியரு ளன்ன நடையா யடைவிலென :- மின்னிடையீர் 365 வெள்ளிமலை நீங்கி விண்ணோரு மண்ணோரு முள்ளும் பிரானை யுமையாள்போ :- யுள்ளமிகத் 366 தாங்காத பூசைக்குத் தக்கவிட மீதென்று நீங்காது நின்ற நிலைபாரீர் :- தேங்கமழும் 367 காவி புடைசூழ்ந்த கம்பா நதிப்புனலிற் பாவை படியும் படிபாரீர் :- கோவையிதழ் 368 ஓசை யளிக ளுலவம்பி காவனத்தில் வாசமலர் கொய்யும் வகைபாரீர் :- பேசரிய 369 வாதி யமர ரறியா வவராக மாதுகுவித்த மணல் பாரீர் :- கோதை 370 யணியு மிருளோதி யன்பொடு பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர்:- இணையிலிமுன் 371 மேவு புளகமுடன் வெண்ணீறு மெய்க்கணிந்து தேவி யிருந்த செயல்பாரீர் :- பூவிற் 372 கரந்து மழைபொழியாக் காலத்தே கம்பை பரந்து வரும்பெருக்கைப் பாரீர் :- விரிந்தபுனல் 373 மாகம் புதைய வரப்பண்ணித் தம்மையொளித் தேகம்பர் நின்ற விடம்பாரீர் :- தோகை 374 யரும்புனல்கண் டஞ்சியவ ராகமுறச் சென்று பரிந்து தழுவியது பாரீர் :- புரிந்து 375 மலைக்கு மகடன் வழிபாடு வந்து பலித்த பெரும்பேறு பாரீர் :- கலப்பொற் 376 றெரிவையுட னிந்தத் தேமா னிழலிற் பரம னிருந்தவிடம் பாரீர் :- பொருவில் 377 றிருக்கைவளை யான்முலையாற் றிண்டோளு மார்பும் பரித்த திருத்தழும்பு பாரீர் :- விரித்தசடை 378 யண்ணல் வெளிப்பட் டருள்வரங்கள் பாரீரென் றெண்ணும் புதுமை யிவையெல்லா:- மொண்ணுதலாள் 379 காட்ட வவருங் களிகூர் பொழுதிலொரு தேட்ட முளதாய சிந்தையளாய்க் :- கூட்டி 380 கிளியிடம் வேண்டினாள் இருங்கரத் தேந்தி இருந்த கிளியை வருந்திவினை யேன்பெற்ற வாழ்வே :- யருந்தவமே 381 தேமென் குதலைதருந் தெள்ளமுதே கம்பரணி தாமந் தருவாய் தவிருவா :- யாமெல்லாஞ் 382 சூழு நிலவிற் சுதைநிலா முன்றிலின்யான் வாழும் படிநினைக்க மாட்டாயோ :- வேழந் 383 திகழும் வரிசிலையான் சேவகங்கள் காட்டும் பகழி நறும் பூவாகப்பண்ணா :- யிகழ்வார்முன் 384 என்னன்னை யேது மிரங்கா ளிரவுபகல் உன் அன்னை யுன்னை யொறுக்குமோ :- தென்னன் 385 பொருப்பிற் பிறந்து புகையாக வீசு நெருப்பு குளிர நினையாய் :- நிரைத்தளரத் 386 தாருங் கழுநீருஞ் சந்தனமுந் தோய்ந்தபனி நீருங் குளிர நினைத்திடாய்:- பேரரவச் 387 சேவின் மணிவருத்தந் தீர்த்தருளா யென்றிருந்து பூவை யினிதுரைக்கும் போதின்கண் :- டேவருய்ய 388 ஆலமினிய வமுதாக வுண்ட பிரான் கோல மறுகு குறுகுதலு :- நீலவிழி 389 தூதுவிடக் கிள்ளைக்குச் சொல்லுவதெல் லாமறந்து காதலுடன் வந்தவனைக் கைதொழுது :- நீதிபுரி 390 ஏகம்பரை வேண்டுகின்றாள் யிந்தமலைப் பாவை யிடப்பாகங் கொண்டுமக்குத் தந்தவலப் பாகந் தரலாமோ :- வெந்தைபிரான் 391 கங்கைத் திருமுடிமேற் கண்ணியலால் வெண்ணீறு தங்குபுயக் கொன்றை தரலாமோ :- சங்கரா 392 வெம்பாக நீரணைந்தா லிவ்வுடம்பிற் பச்சென்ற செம்பாகம் வந்து சிவக்குமோ :- நம்பாநின் 393 சோதி மணிமுடிமேற் சோமப் பனிக்கொழுந்தை மோது முதுதரங்க மோதாதோ :- வோதாயென் 394 றாதியுடன் சொல்ல வறம்வளர்க்கு மூருடையா னேது முரையா னெழுந்தருள :- மாத 395 ரறிந்து மகவை யளித்தவர்க ளாக்கிச் சொரிந்த கறியமுதுஞ் சோறு :- மருந்தா 396 விருப்பினொடு செங்காட்டில் வேண்டும் பொழுதோ திருப்பவளச் செவ்வாய் திறப்பீர் :- விருப்பால் 397 வளைந்த திரிபுரத்தை மாள்விக்கும் போதே குளிர்ந்த திருமுறுவல் கொள்வீர் :- துளங்குநில 398 முத்த வரிசிலையான் மொய்ம்பூங் கணைபுகுந்து தைத்தபொழு தோதிருக்கண் சாத்துவீர் :- மெய்த்தக் 399 கொடிய விடஞ்சுரரைக் கொல்லும் பொழுதோ வடைய வருளுடையீ ராவீர் :- மடமாத 400 ருற்றதுயர் கேட்பதற்கொன் றோதாது போகின்றீர் கற்றதிது வோகள்ளக் கம்பரே :- பெற்றவர்தாள் 401 வீசுமழு வாற்றுணிய வெட்டுமவர்க் கல்லாது வாசமலர்க் கொன்றை வழங்கீரோ :- பூசித்து 402 வல்லபங்கள் செய்து வழிபடுவார்க் கல்லாது புல்ல வொருவர் பொருந்தீரோ :- சொல்லீர் 403 ஒருவா சகமென்ன வோராது போலப் பொருமா ரனைநிறுத்திப் போனார் :- தெரிவை 404 தெரிவை யொருத்தி தவக்குறும்பை யோட்டியுல கெல்லாந் திருத்தி மதனடத்துஞ் செங்கோ :- னிருத்தனார் 405 தூதுவிடச் சங்கிலிபாற் றோழனுக்குத் தாமுழன்ற போதிதுவென் றெண்ணும் புரிகுழலாள்:-ஆதிரையான் 406 வெண்டிரைநீர் வேணிக்கு வேறுமொரு திங்கணமக் குண்டெனவென் றெண்ணு மொளிநுதலாள்:-துண்டமதி 407 வேணி யுடையோன் மிடற்றி லடக்குதற்கும் பாணி மிசையசையப் பண்ணுதற்கும் :- பாணந் 408 தொடுப்பதற்கும் பார்ப்பதற்குஞ் சூழ்கழற் காலன்மேல் விடுப்பதற்கு மெண்னும் விழியாள் :- விடைக்கொடியோ 409 ராய பிறப்பை யணுகா தவருடைய தூய பிறப்புணர்த்துந் தோளினாள் :- நாயனார் 410 சேமச் சிலையுஞ் சிலையு மிவையென்று தாமுட் குறிக்குந் தனத்தினாள் :- மாமழுவோன் 411 தென்றல் படக்குழைந்த தேமாவின் கொம்பரிது வென்று திருவுள்ளத் தினிதெண்ண :- வொன்றாகத் 412 துய்யவளைக் கையுந் துவர்வாயுஞ் சோதிதிகழ் மெய்யு நிறமும் விளங்குவான் :- மொய்யமரிற் 413 றாவும் விடையுடையான் றன்மேன் மலர்வாளி யேவுமதனை யெரித்த நாண் :- மேவுற் 414 றெழும்புகையும் வானமு மென்ன வுரோம வொழுங்கு மிடையு முடையாள் :- தொழுஞ்சுரரைக் 415 காக்கு மிடற்றார்க்குக் கச்சாதல் காப்பாதல் ஆக்க நினையுமக லல்குலாள் :- நோக்கிதய 416 தூவி மயிலனையார் சூழ வொருகமல வாவி யருகு மகிழ்ந்திருப்ப :- மேவியயில் 417 உண்கண் விறலி யொருத்தி செழுங்களபக் கொங்கை யிணைப் படைத்த கூற்றமே:- யெங்குமளி 418 நின்றோ லிடுகின்ற நீள்வனசக் கோயிறனக் கின்றோ குடிபுகுத விட்டநாள் :- ஒன்றாக 419 விஞ்ச வழகுடையார் வீற்றிருப்ப தல்லாது கஞ்ச மலரொருத்தி காணியோ :- வஞ்சாதே 420 யிந்த வழகல்லா லேந்துமோ கஞ்சமலர் தந்த வழகு தனையென்று :- செந்திருமுன் 421 சென்று பணியத் திருவால வாயுமணி மன்றுமொரு கடவுண் மாநிழலும் :- என்றும் 422 விரும்பி யுறைமழுவாள் வீரன் றசாங்கம் இருந்து விறலிபா டென்னத் :- தெரிந்தபெரும் 423 பாகுபல வுடையான் பாட்டுக் கொருவடிவான் றியாக முதவுந் திருமலையு :- மாகம் 424 பெருக்கு மறுகும் பிறைக்கொழுந்தும் பாம்பும் எருக்கு முடித்தமண லியாறும் :- விருப்பொடர 425 னந்தண் பெருந்துறையி லாளுடையா ரம்மணலில் வந்து சிறந்த வளநாடுஞ் :- சந்தும் 426 வடங்கொ ளிளமுலையால் வானோ ரறியா வுடம்பு குறிபெற்ற வூரும் :- தொடர்ந்தவரி 427 நீலம்போற் கண்ணார் நிறமெல்லாந் தன்னுடைய கோலம்போ லாக்குங் குளிர்தாரும் :- ஆலிலையிற் 428 சேக்கைப் புயலின் றிருநாபி யிற்பனவன் வாக்கிற் பிறந்த வயப்பரியு :- நோக்கித் 429 திரண்டா யிரங்கயிலை செல்வதெனத் தோன்று மிரண்டா யிரங்கோட் டிபமும் :- நெருங்கு 430 கடிக்கற் பகவனத்தைக் காசினிமே லாயர் கொடிக்குக் கொடுத்த கொடியுங் :- துடிக்கண் 431 தழங்கு சதியுடையான் றாண்டவத்துக் கேற்ப முழங்கு திருக்கை முரசுந் :- தொழும்பா 432 லடுத்து சுரர்பரவ வண்டாண்ட மெல்லாம் படுத்ததிரு வாணையுமே பாடத் :- துடிக்கவிதழ் 433 நெஞ்சு தளர்ந்து நெறிமயங்கி நீடுயிர்த்து வஞ்சி யறிவழிந்து மாலாகி :- யஞ்சாதே 434 ஆகம் பிரியா வவளை யறியாமல் ஏகம்பர் தாமேவந் தெய்திலேம் :- மோகங்கொண் 435 டார மருவி யகன்மார்பி லென்னையவர் சேர வரவணைக்கத் தேடிலேம் :- பாரடையத் 436 தாவும் விடையுடையோன் றன்மேற் றனத்தழும்பு மேவுங் கலவி விளைக்கிலேம் :- பூவின்றும் 437 பாகி லணுநலம் பாராட்டி யென்னையவர் ஆராய புலவி யகற்றிலேம் :- நேயமுடன் 438 போக வுததியினிற் புக்கழுந்தி நெக்குருகி யாக மிருவருமொன் றாகிலேம் :- ஆகத் 439 தணைத்த தறிய வவரணிந்த நீறென் பணைத்த முலைமேற் படிலேம் :- மணிக்களத்தா 440 ரின்று மணந்தபடிக் கென்னுடம்பு சான்றாகக் கொன்றை மணநாறக் கூடிலேம் :- என்றிருந்து 441 வாழும் படிதன் மனத்திற் பிறந்ததெல்லாந் தோழி யுடனிருந்து சொல்லுங்காற் :- சூழு 442 நெருக்கார மாலை நெடுநிலா வீசுந் திருக்காவண நிழலிற் சேயுந் :- திருத்தாள்சேர் 443 சீலம் படைத்துத் திருநீ றிடவயிற்றிற் சூலை கொடுத்தாண்ட தொண்டனும் :- ஓலையுடன் 444 சென்று தடுத்து திருவெண்ணெய் நல்லூரி லன்று படைத்த வடியானுங் :- கொன்றை நறுந் 445 தேன்பாய் முடிமேற் றிருச்சேய்ஞலூர் தன்னி லான்பால் சொரிந்தாட்டு மந்தணனுந் :- தேன்போலத் 446 தித்திக்கு மாறு திருவா சகஞ்சொன்ன பத்திப் பெரும்பெருக்குப் பாலனு :- மெத்திசையுஞ் 447 செல்ல வரிய சிவதத் துவமல்லா தில்லையென வெழுதி விட்டோனு :- நல்லதவஞ் 448 சூழ்வாருஞ் சூழ்ந்துவரச் சூதத் திருநிழலின் வாழ்வோன் மணிமறுகில் வந்தணுகத் :- தாழ்குழலு 449 முற்ற நினைந்தவெல்லாம் முன்வந்து கைபுகுதப் பெற்றவள்போல் வந்து பெரிதிறைஞ்சி:-பொற்றொடியாள் 450 துய்ய புரிநூலும் தோளும் திருமார்பும் மையல் பெருக வரநோக்கித் :- தையலாள் 451 ஈசன்தன் மார்புநல் எண்தோளும் நீங்காத வாச நறுங்கொன்றை மாலையே :- பாசறையில் 452 வீசு பனிநீரும் மிக்க அகில் சந்தனமும் பூச உனக்குப் பொறுக்குமே :- வீசிவரும் 453 போதாரும் தென்றல் புகுதுகைக்கு மாளிகையின் வாதா யணந்திறந்து வைப்பையே :- நாதம் 454 அளவே அளவேயென்(று) ஆயரிரா ஏதும் துளைவேய் உனக்குச் சுடாதே :- குளிர 455 அடுத்த செழுங்கரீ ராலே படுத்த படுக்கை சருகு படாதே - கடக்கவரி (து) 456 ஆயவிரி கங்குல் அடல்மா மதன்சொரியும் சாயகங்கள் உன்மீது தையாவே :- மாய இரா 457 வெண்ணிலா ஊழி எரித்தாலும் இங்குனக்குத் தண்ணிலா ஏதுந் தழலாதே :- நண்ணுமயல் 458 அய்ய விடையாரும் அன்னையரும் தாமொறுக்கும் வெய்ய உரைகேட்க வேண்டாவே :- பையவரும் 459 சேவின் மணியிசைக்கும் தீரா அலைகடற்கும் கூவும் குயிலுக்கும் கூசாயே :- மேவியநின் 460 முன்றில் உயர்பனையின் மூரி மடற்குடம்பை அன்றில் அரிக்குரற்கும் அஞ்சாயே :- என்றாலும் 461 வெய்ய பசலை விளைவானேன் மேனியெங்கும் துய்யமலர்க் கண்ணீர் சொரிவானேன் :- செய்யவங்கை 462 வண்டு விழுவானேன் மற்றெனக்குச் சொல்லென்று கெண்டை விழிமாது கேட்பளவில் :- திண்டிறல்வேள் 463 காவி ஒழிந்த கணைசொரிந்தான் அவ்வளவில் தேவர்கள் நாதன் தெருவகன்றான் :- பாவைமேல் 464 ஆர வடமும் அணிந்தார் குளிர்ந்தபனி நீரும் மடவார் நிரப்பினார் :- பேரிளம்பெண் 465 பேரிளம்பெண் திண்மை மதனன் செலுத்துகின்ற பேராண்மை பெண்மை யழகின் பெரும்பெருக்குத் :- தண்மலரோன் 466 நாவுமளவிறந்த ஞானத்தாற் பேரழகாற் பூவுமரசாளப் போதுவாள் :- தேவர் 467 அரச னிமையாத வாயிரங்கண் சூழத் தருநிழலில் வாழத் தகுவாள் :- விரவி 468 யினிய கலவி நலமெல்லா மதனன் மனைவியையுங் கற்பிக்க வல்லாள் :- கனைகடல்சூழ் 469 பாரைப் பெரிதுழைக்கப் பண்ணிப் பழையசுர ரூரைப் பெரிதுழைக்க வொட்டாமல் :- வாரிட்டுக் 470 கட்டுண் டனமென்று நாணிக் கவிழ்ந்துதலை யிட்டனபோற் சாய்ந்த விளமுலையால் :- கிட்டரிய 471 சைவப் பெருமை தமிழ் நாடறிவித்த தெய்வப்புலவன் றிருமுறையுஞ் :- வெவ்வமணர் 472 ஈருமத யானைக் கிடும்போது மஞ்செழுத்தைத் தேருமரசன் றிருமுறையுஞ் : சேரனுடன் 473 அன்று கயிலைக் கதிமதவெள் ளானையின்மேற் சென்றபெருமான் றிருமுறையுந் :- தென்றிசையின் 474 மாடப் பெருந்துறையில் வந்த வருட்கோலந் தேடித் திரிந்தோன் றிருமுறையுங் :- கூடவினி 475 தோதி யவர்கரு வுள்ளக் கருத்தினுள கோதி னிலைமையெல்லாங் கும்பிட்டுச் :- சோதிதிகழ் 476 அஞ்செழுத்தும் ஏகம்ப ராடுந் திருக்கூத்து நெஞ்சழுத்தி வைக்கு நிலைமையாள் :- மஞ்சு 477 பொருந்துமணி மாளிகையிற் பூங்கவரி வீசு விரும்புமணி யாசனத்தின் மீதே :- யிருந்தெவரும் 478 பேச வரிய பிரானார் திருவார்த்தை யாசையுடன் கேட்புழிவந் தாங்கொருத்தி :- வாசலின்க 479 நின்றா னொருமறையோ நீறணிந்த கோலமுடன் என்றாள் வரவிடுவை யென்றுரைத்துச் :- சென்றெதிர்கொண் 480 டங்கை குவித்தோ ரரியா சனத்தில்வைத் (து) எங்கடவம் வந்தவா ரென்றுரைசெய்து :- அங்கமுடன் 481 முன்னை மறைநூல் முதலாய வெக்கலையு நின்னி லறிவார் நிலத்தில்லை :- மின்னுசடை 482 மீச னிலைமைக்கு மேனையிமை யோர்நிலைக்கும் வாசி யுரைதெளியும் வாறென்னப் :- பூசுரனும் 483 என்னிலைமை சோதிக்க வென்றோ விதுசொன்னாய் நன்னுதலே யென்று நகைசெய்யா :- வுன்னி 484 யிதனை யிதனுடனே யெண்ணலா மென்னு மதனை வினவுதலே யன்றி :- மதியதனில் 485 எண்ணமிலா தார்போல வெல்லா மினிதுணர்ந்த பெண்ணமுதே கேட்கப் பெறுதியோ :- மண்ணுலகிற் 486 குன்றி தனையொருபொற் குன்ற முடனிகரும் என்று திரிவாரை யென்செயலாந் :- துன்றிருள்போம் 487 விஞ்சு சுடருடைத்தாய் மின்மினியே வந்துதிக்குஞ் செஞ்சுடரி னென்பாரைச் செய்யுமதென் :- றஞ்சமென 488 கல்லா னிழலிருந்த கண்ணுதலார் தம்முடனே எல்லா ரையுந்தேவ ரென்றுரைத்த :- னல்லாயொப்(பு) 489 ஏதும் நிகரா விரும்பினையும் பொன்னினையுந் தாது வெனவுரைக்குந் தன்மைகாண் :- மீதுலவு 490 நீடு சுடராழி நிலத்தேரி லீரிரண்டு பாடு சுருதிப் பரிபூட்டித் :- தோடார் 491 நளினத்துப் பாக னடத்த வெரிவாய்த் துளவப் பகழி தொடுத்துக் :- கொளுவியநாண் 492 மூரி யரவாக மூதண்ட முந்தாங்கு மேரு வெனுஞ்சயிலம் வில்லாக :- வார்வமுள 493 மூவ ருயிர்வாழ முப்புரமு நீறாக யாவர் பொருதா ரிமையோரிற் :- றேவர் 494 பழித்த பெருவேள்வி பழாக வாள்விட் டழித்த விமையவர்வே றார்தான் :- இழைத்து 495 வதைப்பான் வருங்கூற்றை மார்க்கண்டர்க் காக வுதைத்தா ரிவரல்லா துண்டோ :- வெதிர்த்த 496 கழற்கான் மதன்மாளக் கண்மலரால் வெய்ய வழற்றானை யேவினா ரார்தான் :- நிழற்பொற் 497 கலையா னிடந்திட்ட கண்ணுக்கோ ராழி விலையாக நல்கினார் வேறார் :- நிலையாகத் 498 துன்னு மொருசிலந்தி சோணாடுங் காவிரியு மன்னி யரசாள வைத்தவரார் :- பன்னெடுநாள் 499 தேடி யிருவர் திரியத் தெரியாமல் நீடு சுடர்வடிவாய் நின்றவரார் :- ஆடலென 500 வுங்காரஞ் செய்தே யுலகுண்ட மாலயனைச் சங்காரஞ் செய்துபின்னுந் தந்தவரார் :- பங்கயன்மால் 501 வீந்த சுடலை விபூதி தரித்திருவர் ஆர்ந்ததலை மாலை யணிந்தவரார் :- மாய்ந்திடவே 502 நாரா யணருடலு நாலுமுக னாருடலுங் கூராய சூலமிசைக் கொண்டவரார் :- சேர 503 வெரிந்த பிறையெயிற்றி னீரைந்து வாயும் பரந்து செழுங்குருதி பாய :- நெரிந்தொருவன் 504 மான்று கிடக்க மலையான் மகளுடனே யூன்று விரலொன் றுடையவரார் :- தோன்றியடல் 505 ஓத விடமுன் டுபயநிறத் தாமரைமேற் கோதையர்க்குத் தாலி கொடுத்தவரார் :- மாதவனைக் 506 கூடி யயனைக் கொடுத்தவரார் மோகினிபால் நாடுமெழிற் சாத்தனைமு னல்கினரார் :- பாடார்ந்த 507 புத்தேளி ரென்பைப் புனைந்தவரா ரல்லினுமை கைத்தாளங் கொட்டநடங் காண்பவரார் :- மத்தமுறும் 508 ஆதிநெடு மாலுதிர மத்தனையுங் கைக்கலத்திற் பாதிதனி லேநிறையப் பண்ணினரார் :- வேதமுடன் 509 றுண்ணெனவே யாழிபுகுஞ் சோமுகனைச் செற்றிடுமீன் கண்ணை யுகிறாற் களைந்தவரார் :- கண்ணனார் 510 ராமைவடி வந்தனிலு மாதிவரா கந்தனிலு மாமுதுகோட் டைக்கரத்தால் வாங்கினரார்:- தூமறையும் 511 பேசரிய சிம்புளாய்ப் பேரா டகனையடுங் கேசரியை வள்ளுகிறால் கீண்டவரார் : கூசா(து) 512 தடருஞ் சலந்தரனை யன்றாழி சூட்டி யுடலம் பிளந்தவர்வே றுண்டோ :- படிவிண் 513 முழுதளந்த மாயன் முதுகெலும்பைச் செந்நீ ரொழுகவே வாங்கினர்வே றுண்டோ:- பழுதென் 514 தடமலரோ னுச்சித் தலையை யுகிரால் உடனே குறைத்தவர்வே றுண்டோ :- நெடுவிசும்பு 515 முற்றும் புதைத்தலையான் மோதுஞ் சுரநதியைச் சுற்றுஞ் சடையிற் சுவறுவித்து :- மற்றும் 516 பகீரதனின் றூழிநாட் பாதமலர் போற்ற மகீதலத்தே போதுவித்தார் மற்றார் :- புகழைச் 517 செலுத்தச் சிறுத்தொண்டர் தேவியறுத் தாக்கிக் கலத்திற் படைத்த கறியைத் :- தலைக்கிட்ட 518 சுட்டியு மாலைச் சுரிகுஞ் சியுமுத்துங் கட்டியை நல்குங் கனிவாயு :- மிட்டதொரு 519 வாளியுங் காது மருங்கும் மணிவடமுந் தாளிணையஞ் செம்பொற் சதங்கையுமாய் :- மீளப் 520 பிறப்பித் தவர்தம் பெரும்பிறப்பை யெல்லா மறுப்பிக்க வல்லவர்தா மற்றார் :- நறைக்கொன்றை 521 யாதி தனையொழிய வாறாறு தத்துவத்தின் மீது மகிழ்ந்திருக்கும் விண்ணவரார் :- மாதிற் 522 பொருந்தி விடையாகப் பூந்துழாய் மாலை விரும்பு நடத்தினார் வேறார் :- அரன்பெருமை 523 யின்னம் பலகோடி யில்லையோ யாமிருந்து சொன்ன பொழுதே தொலையுமோ :- வுன்னரிய 524 மூவா முதலா முதல்வனையு மூவுலகிற் சாவார் பிறப்பார்கள் தங்களையுந் :- தேவாக 525 வொக்க நினைவாருக் கல்லவோ வோரேழு மிக்க நரகம் விதித்ததுகாண் :- மைக்கண் 526 மருவார் குழலியென மற்றவளு மந்தப் பெருவாழ் வுடைய பிரானைப் :- பரவியவர் 527 தெய்வ வெழுத்தைந்து மோதித் திருநீறு மெய்யி லணிய விதியற்று :- மையறரும் 528 எட்டெழுத்தை யோதி யிடுவார்மண் ணெப்பொழுதுங் கட்டுரைக்க வென்னக் கவுதமனா :- ரிட்டபெருஞ் 529 சாபத் தியல்பு தருமா மறையோர்செய் பாபக் கலிகாலப் பண்புகாண் :- கோபவிதழ் 530 மின்னே யெனச்சிறந்தும் வேதியரா கிப்பிறந்தும் என்னே பெருமை யிருந்தவா :- முன்னை 531 மறையினெழுத் தைந்தும் வாயார வோதி நிறைய வணிந்துதிரு நீறும் :- பிறவிதனை 532 வாட்ட வறியாமல் வாளாப் பிறவிதனை யீட்டுவதே பாவ மெனவுரைத்து :- வேட்டவெலா 533 மொண்டொடியும் வேதியனுக் குள்ள மகிழ்ந்தளித்து வண்டணையும் பூவணைமேல் வந்திருப்ப :- பண்டுவிட 534 முண்ட பிரான் பாகத்தொருத்தி முலைத்தழும்பு கொண்ட பிரானாடக் குழுவெல்லாந் :- தண்டகமா 535 நன்னாட்டுத் தேவர்க ணாயகனார் சோணாட்டின் முன்னாட்டு மன்றின் முதலியார் :- தென்னாட்டிற் 536 சூடு மபிடேகச் சொக்கனார் துங்கமணி மாட நெடுவீதி வந்தணுக :- வாடகப்பூஞ் 537 சோதிச் சிலம்புக்குஞ் சூழ்பா டகத்துக்கும் பாதத் தழகைப் பகிராதே :- மோதிளநீர் 538 ஆன முலையழகை யாரவிள வண்டலுக்கும் நானநறுந் தொய்யலுக்கு நல்காதே :- வானநிலா 539 ஆர மணித்தோ ளழகைக் கரும்புக்கும் ஈரமிலா வல்லிக்கு மீயாதே :- தாரைப் 540 பலவுநிரைத் தன்னதொடைப் பாளைக் களகம் குலவு மழகைக் கொடாதே :- கலவிநலம் 541 கொண்டதிரு மார்புங் குளிர்ந்த திருச்சாந்தும் வண்டணியுங் கொன்றை மலர்த்தாரும்:- தொண்டருள 542 அந்தா மரைமலரை யானந்தத் தாண்டவஞ்செய் செந்தா மரையுந் திருச்சிலம்பும் :- சிந்தை 543 மகிழ மகிழ வணங்கிவளை யெல்லாம் நெகிழ நெகிழவெதிர் நின்று :- சகமேற் 544 பிறவாம லெண்ணிறந்த பேரண்டம் மாய்ந்தும் இறவாத மேனி யிறைவா :- உறவாய்ச் 545 சிரித்து முகம் பார்த்துத் திருக்கொன்றை மாலை தரித்ததிருத் தோளழகைத் தாரீர் :- ஒருத்திகுறி 546 ஆக மிசையில்லை யாமாகி லிப்பொழுதே ஏக வுமைவிட் டிருப்பேனா :- ஆகிலுநான் 547 கட்டி யிறுகக் கலந்துருகி ஒன்றாகி இட்ட குறியழித்தால் யார்தவிப்பார் :- பட்டதுபண்டு 548 ஆவல்கெடப் புல்லி அகலாமல் யான்வளைத்தால் ஏவரெனைத் தள்ளியுமை ஏகுவிப்பார் :- மேவியெனைப் 549 புல்லி ஒருக்காலும் போகா வகைபிணித்து வல்ல படிகாண மாட்டேனோ :- நல்லமட 550 நாண்கொண்ட தாருவன நங்கையரைப் போலமனம் வீண்கொண்டு போக விடுவேனோ :- மாண்கொண்டு 551 பூத்ததிரு நீறும் புயமும் திருமார்பும் ஏத்து மவர்க்கருளீர் என்னென்று :- வாய்த்தசொலால் 552 ஆவதெல்லாம் பார்த்தால் அவளும் தழுவுகைக்கங்(கு) ஆவதெல்லாம் பார்த்தால் லவைவருமோ :- ஆவி 553 உருகும் வகைகாதத் துண்டாக நோக்கி விரவுநகை கொண்டேகி விட்டார் :- தரளம் 554 இடையும் நகையார் வரெழுவர் ரிங்ஙன் கொடிய பெருங்காதல் கொள்ள :- முடிமேல் 555 நிலாவுடையான் தேமா நிழலுடையான் சேரன் உலாவுடையான் போந்தா னுலா. 556 முற்றும். |