கடம்பர்கோயில் உலா இந்நூல் சோழநாட்டிற் காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பர் கோயிலென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தலைவராகக்கொண்டு பாடப்பெற்றது. இதனை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை. சித்திவிநாயகர் காப்பு வெண்பா பொன்மருவு தென்கடம்பைப் பூரணவி லாசருலா நன்மதுரமாகவே நவிற்றவே - என்மனத்து வஞ்சத் திருப்பதஞ்செய் மைந்து றுசித் திக்களிற்றின் கஞ்சத் திருப்பதமே காப்பு. அவையடக்கம் நன்னிலஞ்சே றாக்கிடினு நன்குமகிழ் வார்முனியார் செந்நெல்விளை வெய்துஞ் சிறப்புடையோர் - இந்நிலத்தில் என்சொலிக ழார்புலவோ ரீசனுலா வென்றுகொள்வார் புன்சொலனார் கொள்வார் பொருள். நூல் கலிவெண்பா இறைவன் பெருமை சீர்கொண்ட சத்தி சிவமா யருள் புரியும் பார்கொண்ட சோதிப் பசுபதியாய் - ஏர்கொண்ட 1 அண்டமா யண்டத்தி னப்பாலா யிப்பாலாய்ப் பிண்டமாய்ப் பல்லுயிரின் பேதமாய்ப் - பண்டை 2 அருவா யுருவா யருவுருவ மொன்றாய் மருவாய் மலரின் வடிவாய்ப் - பெருவாழ்வாய் 3 எல்லா வுயிர்களுக்கு மின்பம் புண்ர்த்திவைக்கும் வல்லான் கருணை மகாதேவன் - தொல்லைமுது 4 தல விசேடம் வானோர் துதிக்க மறைமுழங்க வானோரும் ஏனோரும் வந்துபணிந் தேத்தெடுப்பத் - தேனாரும் 5 வெள்ளி வரையின்மிசை வீற்றிருப்பப் பூங்கமலத் துள்ளிருப் போனன் புடன்பணிந்து - வள்ளலே 6 அன்பருன்னாற் பெற்ற வழியாப் பெரும்பதவிக் கென்பதவி சொல்லி னினையாமோ - மின்பருதி 7 ஒக்குமோ வென்றுற் றுணர்ந்தே னருவருத்து மிக்க சிருட்டி விரத்தியுற்றேன் - இக்கணமே 8 முத்திப் பதத்தின் முறையுரைக்க வேண்டுமென அத்த னகைத்தங் கருள்செய்வான் - பித்தொழிந்து 9 வந்தனையே முன்னாண் மறந்தனையே யஞ்சலினிச் சிந்தனையென் கேளாய் திசைமுகனே - பந்தமற்றோர் 10 இம்மை மறுமையென்ப தெல்லா மறிந்தறிவால் தம்மையறிந் தெம்மையன்றே தாமறிவார் - செம்மைமனப் 11 பக்குவத்த னல்லையினும் பாரிடத்தின் மேலான தெக்கண காசியெனுஞ் சீர்பொருந்தும் - மிக்க 12 கடம்பவன மொன்றுளது கண்டாலு முள்ள மடம்பவநந் தக்கதியும் வாய்க்கும் - இடம்பெரிதாம் 13 அத்தலத்தி னீசென் றரியதவஞ் செய்தக்காற் கைத்தலத்தி னெல்லிக் கனியெனவே - முத்தி 14 நெறியு நெறிக்கு நிலையான நந்தம் குறியு மறிவாய் குறித்தங் - குறுதியென 15 வேதன் பணிந்தெழுந்து மேவுபொன்னி நீராடி மாதவங்கள் செய்து மகமியற்றி - நாதன் 16 அருள்பெற் றணிநகரு மாலயமுஞ் செய்து மருளகற்று சித்திரையின் மன்னும் - திருவிழாக் 17 கண்டழியாப் பேறுபெற்ற காரணத்தி னாற்கொண்ட தண்டலை யென்னுந் தனிப்பெயரும் - கொண்ட 18 பிரமபுர மென்னும் பெயரும் படைத்துப் பரவு கடம்பைப் பதியான் - சுரரை 19 ஒடுக்கும் புகைக்க ணொருவா ளரக்கன் இடுக்கண் பொறாம லெதிர்த்தே - கடுத்துப் 20 பொருமையிடற் காய்ந்தடன் போர்க்குத் துனையாய் வருதிறலி னோங்குசத்த மாதர் - பெருவலியாற் 21 சாடிப் பொரலுஞ் சலித்து மருண்டுபயந் தோடிச்செலும்போ தொருவஞ்சம் - நாடியே 22 ஆதித் தனைப்பார்த் தருந்தவஞ்செய் மாமுனிபாற் பேதித் தவன்மறைந்த பெற்றிதனைச் - சோதித் 23 திடாதே யவனிவனென் றெண்ணி முனியை அடாது செயப்பிரம வத்தி - விடாது 24 தொடரப்பல் கோடிதலஞ் சூழ்ந்துந் தவிரா திடர்தொலைக்கு நீபவனத்தென்றாய் - உடனிருக்கும் 25 தன்னை யருச்சிக்கத் தான்மகிழ்ந்து நின்றிடுமேழ் அன்னையர் பாவ மகற்றினோன் - முன்னைவினை 26 மாசகலும் வேதசன்மா மாமறையோன் செய்தவமும் பூசனையுங் கண்டவன்முன் போந்தருளிக் - கேசவனை 27 ஒப்பாய் நமதன் புடைமையினால் வேண்டுவதென் செப்பா யெனவுரைக்கத் தென்மதுரை - மெய்ப்பதியில் 28 தோன்று மலயத் துவசன்மக ளாய்க்கயற்கண் மூன்றுமுலை யுற்றவண்முற் றாமுலையாய் - ஏன்றிடப்பின் 29 எந்தை மணஞ்செய் தியனறதிருக் கல்யாண சுந்தரனாந் தன்மையிங்குத் தோற்றிடென - அந்தப் 30 படியே தரிசனமும் பாலித்தாட் கொண்டோன் அடியார்க் கெளியவ னாதி - முடியாச் 31 சுகத்தியன் மாமுனிவோர் சூழ்ந்து பாவும் அகத்தியன் பூசனைசெ யையன் - சகத்தசுரச் 32 சோமகன் வேதத் துரகதத்தைப் பாதலத்தில் ஏமமுறக் கொண்டொளித்தங் கெய்திடலும் - தரமோ 33 தான்வணங்கி நின்று தவம்புரியச் சைவாத் திரங்கொடுக்க வாங்கித் திருக்கா - விரியிலவன் 34 மச்சவுரு வாயுததி மார்க்கத்திற் சென்றவன்றுஞ் சச்செகுத்து மீண்டுதிருச் சந்நிதியில் - வச்சு 35 வணங்கமறை வாயிருந்த மாமறைவாய் தோறும் இணங்குசதுர் வேதபுரி யீசன் - குணங்கடந்தோன் 36 கந்தவேண் முந்தக் கடிமலரா லர்ச்சித்துப் புந்திமகிழ் கந்த புரநாதன் - பந்தமுற 37 வல்லார்க்கு முந்துதுற வல்லார்க்கு மில்லார்க்கும் எல்லார்க்குந் தாயா யினிதளிப்போன் - தொல்லைப் 38 பலிக்குமுனந் தாருவனப் பாவையர்முன் சென்றோன் எலிக்கு மரசளிக்கு மெந்தை - புலித்தோல் 39 உடையா னெனையா ளுடையான்சொல் பூதப் படையான் கணிச்சிப் படையான் - விடையேறு 40 வானனத்தன் வானனத்தன் வந்து துதிக் குஞ்சாம கானனத்த னீள்கதம்ப கானனத்தன் - மீனவிழிப் 41 பாணிகொண்ட சென்னிப் பசுபதிபஞ் சானனத்தன் பாணிகொண்ட சென்னிப் பரமேட்டி - நாணிகொண்ட 42 மாகனக வில்லியிம வானுதவும் வல்லியிடப் பாகனக வில்லிற் பதிகொண்டோன் - யோகனகன் 43 நாவி லிரதனொரு நால்வேதத் தந்தியான் தூவெண் சரீரத் துரகத்தான் - மூவுருவன் 44 அம்பலத்து ணின்றுநட மாடும் பதாதியான் நம்பலரைப் பார்த்து நகைசெய்தோன் - செம்பொனதிச் 45 சுத்தக் கடம்பந் துறையரசன் றெய்வதமாய் வைத்தசத்த கோடி மகாமந்த்ரி - அத்துவிதன் 46 தற்பரன் பூத தளகர்த்தன் றாரணியிற் பற்பலவாந் தானா பதியினான் - பொற்புற் 47 றொருமூவ ராயசத்த னோங்குகுலத் தோரைக் கருமத் தடக்குமதி காரி - பொருகுதிறற் 48 கானு கரணிகன் பாடலிலே கற்பித்தோன் மானசச் சீர்மை மகாசனன் - தீனபிர 49 வர்த்தகன் பண்ணை வகுத்துரைக்கும் பங்காளி அத்த னமல னமரேசன் - கர்த்தன்முனந் 50 திருவிழா தோடலருங் கஞ்சன் றொகுத்துப் பணிதிருநாள் மேடமதிச் சித்திரையின் மேவுதலும் - நாடியே 51 பூணவங்கு ரார்ப்பணமும் பொற்பமைத்துக் காப்பணிந்து காணுந் தூசாரோ கணஞ்செய்து - நாணிறைய 52 ஒன்றிரண்டு மூன்றோ டொருநாலைந் தாறேழும் சென்றிடப்பி னெட்டாந் திருநாளில் - அன்றுதய 53 காலத் திருவிழாக் கண்டுவந்து வந்தருளி மாலைவிழா வீதியுலா வந்ததற்பின் - ஞாலமெல்லாம் 54 போற்றுமணி மண்டபத்திற் பொன்னனையா ராடல்கண்டு வீற்றிருந்து பொற்கோயின் மேவியே - தோற்றுருவின் 55 மன்மதனைக் கையெடுத்து மண்டலத்தோர் கொண்டாட மென்மலர்ப்பூம் பள்ளியணை மீதணைந்து - தொன்மையகி 56 லாண்டமு மீகுறமுற்றி லாமுலையென் னம்மையொடு காண்டகுசோ திக் கடவுள் கண்மலர்ந்து - நீண்டசடைக் 57 திருமஞ்சனம் கொண்டருளுதல் கங்கைக்கு மேலாகக் காவிரிமேன் மேன்மேன்மை தங்கத் திருமஞ் சனமாடி - மங்குலொத்த 58 அலங்காரம் சுத்தக் கறுப்பென்றுஞ் சொன்னீலப் புள்ளியென்றும் வத்திரங்கொள் வத்திரங்கள் வர்ச்சித்து - மெய்த்ததிக்காம் 59 எட்டாடை மின்னா ரிடைப்பட்ட வென்றொருவிப் பட்டாடை பீதாம் பரஞ்சாத்தி - இட்டமுடன் 60 ஆதியந்த மில்லா வடிக டிருமுடிமேற் சோதி மணிமகுடஞ் சூட்டியே - பூதித் 61 திரிபுண் டரமணிந்து சேணா ரிமய கிரியுதவுங் கன்னிதனைக் கெங்கா - தரனுடனே 62 கூட்டிவைக்கு மாரனைமுன் கோபித்த வக்கினிதன் வீட்டின் கதவடைத்து மேலிறுகப் - பூட்டி 63 ஒருமுத் திரிபொறித்த தொக்கவே மிக்க திருநெற்றி யிற்றிலதந் தீட்டிப் - பெருகுதவத் 64 தின்னிசை வீணை யிருவோ ரிசைந்தாடப் பொன்னூசல் போற்குழைகள் பூட்டியே - மின்னுமணி 65 மாமாலைமுத்து வடமாலை பொன்மாலை பூமாலை மாலைப் புயத்தணிந்து - தோமறுசீர் 66 இத்தலத்து மான்மியங்க ளெத்தலத்து மின்றெனத்தன் கைத்தலத்தினா லுரைக்குங் காட்சியென - வைத்த 67 வாத வபயமு மான்மழுவுங்கொண்ட கரதலங்கள் சேர்கங் கணமும் - இரவியெனத் 68 தோளணிகண் மார்பந் துளங்குபவீ தம்பதக்கம் வாளணிகண் முற்றும் வனைந்தருளி - நீளணிகொள் 69 பட்டிகையுஞ் சேர்த்தருண பாதார விந்தமிசைக் கட்டிசையுஞ் செம்பொற் கழல்புனைந்து - சிட்டர் 70 செவியி னமுதாச் சிலம்புஞ் சிலம்பும் கவினத் தரித்துக் கனிவாய்ப் - புவிபுகழும் 71 மகாபூசை அவ்வியமி னெஞ்சத்தி னாதிசைவ ராகமத்தால் திவ்வியமா பூசை செயமகிழ்ந்து - கவ்வை 72 திருவீதிக்கு எழுந்தருளல் மறைமுழங்க வந்து தொழு வார்முழங்க மூவர் முறைமுழங்கச் சங்கமுழங்கக் - குறைவிலைந்து 73 துந்துபிகல்லென்று தொனிப்பவகி லாண்டமெல்லாம் தந்தமுற்றி லாமுலைச மேதனா - எந்தை 74 உலகமெலாங் கண்டுதொழு துய்யவே செம்பொன் இலகு மணித்திருத்தண் டேறித் - திலகநுதல் 75 மின்னார்க ளாட விடையின் கொடியிலங்கப் பொன்னால வட்டமண்டம் போர்த்தாட - முன்னெடுநாட் 76 பேரரவி னுட்கிடந்த பிள்ளைமதி வாடுமென ஈர மதிநெஞ் சிரங்கியே - ஆரமுதம் 77 போதத் திரட்டிப் புகட்டுவபோல் வெள்ளியங்காற் கோதிலா முத்தின் குடைநிழற்ற - ஆதியிலே 78 ஒன்றாய் விரிவா யொடுக்கமாய்ப் பின்விரிவாய் நின்றா னிலைமையிது நீர்காணும் - என்றுசொல்லித் 79 தேவருக்கும் யாவருக்குஞ் செப்புவபோற் பஞ்சவண்ணப் பாவாடை மீது பணிமாற - ஓவாது 80 பைத்த மணியும் பனிமதியு முள்ளடங்க வைத்த கிரீட மறைத்ததனால் - மொய்த்தனங்கள் 81 கங்கை புகும்வழி காணா சுழல்வனபோல் மங்கையர்கள் வெண்சாமரையிரட்டத் - துங்க 82 மணிக்கோ புரநிரையின் வாயில் பலசென் றணிக்கோல் வீதி யணைந்து - கணிப்பரிய 83 திருத்தேரில் எழுந்தருளல் செம்பொற் கிரியோ திருவா வடுதுறையில் எம்பிரா னன்ப ரிதயமோ - கம்பைநதி 84 சேர்தொண்டைமண்டலத்தோர் செய்தபெரும் புண்ணியமோ ஈதென்னும் பொற்றடந்தே ரேறியே - நீதிநிறை 85 பாகைச் சரவணைதன் பாக்கியமேன் மேல்வளர ஓகையுடன் சிந்தை யுவந்தமைத்த - நாகரிகச் 86 சோதி நவமணியின் சுந்தரப்பொன் னாபரனச் சாதிகள்க பாய்த்தகட்டிற் றாமிலங்கக் - கோதில்லாத் 87 திண்டொழுகு பஞ்சணையுஞ் சீர்பொருந்த வெத்திசையும் கொண்ட பதாகை குடைவிளங்க - மண்டலத்திற் 88 பல்லா யிரகோடி பானு வுதித்ததென வில்லார்சிங் காதனத்தில் வீற்றிருப்ப - மல்லாரும் 89 உடன் வருவோர் தந்திமுகக்கடவுள் சண்முகத்து வேற்கடவுள் நந்திமுதற் பூதகண நாதருமை - ஐந்துருவ 90 மிக்கசிவன் போற்கடவுள் வேறிலையுண் டென்பவர்க்குத் தக்கன் மறுதலையே சாட்சியெனும் - உக்கிரனும் 91 பால நயனப் பதினோ ருருத்திரரும் மாலதிருஞ் சூல வயிரவரும் - மேலிசைத்த 92 கற்றுணையா வுற்ற கடல் கடந்து கற்பனையிற் சொற்றுணையி னாலமணர் சூழ்கடந்து - நற்றுனையாய்ச் 93 சாரத் திருப்பதிகஞ் சாத்தி மலர்க்கையுழ வாரப் பணிவிடைகொள் வாக்கிறையும் - பேரறிவால் 94 தேறுஞ் சமயஞ் சிவசமய மொன்றெனவே கூறும் பரசமய கோளரியும் - வீறொருத்தி 95 வாது நடத்தின் மகிழ்வோனை யாரூரில் தூது நடத்திவைத்த சுந்தரரும் - மேதகுபேர் 96 ஆனந்த வெள்ளமகத் தாறாக மாறாமல் ஊனந் தவிர்நயனத் தூற்றெடுக்கத் - தேனுந்து 97 பாவைதிருச் சிற்றம் பலமுடையார் கையெழுத்தாம் கோவை யுரைத்தெமையாட் கொண்டவரும் - ஓவறுசீர்த் 98 தாதை யடியைத் தடிந்தரனைப் பூசித்துத் தீதகற்றுந் தண்டித் திருத்தேவும் - மாதவனாம் 99 கார்கொண்ட மேனிக் கடவுளுமம் போருகனும் சீர்கொண்ட விந்த்ராதி தேவருடன் - ஏர்கொண்ட 100 கான வொருபனிரெண் டாதவரும் - வானகஞ்சூழ் 101 பூதலத்திற் பேறுபெற்ற புண்ணியரு மெண்ணரிய பாதலத்து மேலான பன்னகரும் - போதநிறை 102 மோனந் தவாத முனிவோரு மெய்ஞ்ஞான ஆனந்த சித்த ரனைவோரும் - வானந்தம் 103 ஏலப் புவன மிருநூற் றிருபத்து நாவிற் கடவுளரு ந்ண்னியே - கோலமணித் 104 தேர்திகழ்வி மானஞ் சிவிகைமுதற் றங்கடங்கள் ஊர்தி களிலு முவந்தேறப் - பேரொலிசேர் 105 வாத்தியங்கள் தக்கை யுடுக்கை தடாரிதவில் பேரியொரு மிக்க முழங்க விருதார்ப்ப - மிக்கதொனி 106 மத்தளங்கைத் தாளவொலி மாரி முழங்கொலிபோல் தத்தளங்கென் றேபாதஞ் சாதிப்ப - எத்திசையும் 107 துரும்பு வீணை சுரமண்டலம் பாடற் றரும்பு நாதந் தனியிசைப்ப - உம்பரல்லாம் 108 ஆர்ப்ப மறைக ளருண்மூவர் பாடலண்டம் போர்ப்பவிசைத் தன்பர் புறஞ்சூழப் - பார்ப்புறத்தில் 109 இன்று புதுத்தே ரிசைந்தழுத்திச் செல்வதனால் துன்றுபழந் தேர்வயிறு சூலுளைந்து - நன்றுதவு 110 பைஙகுழவி யொன்றீன்ற பான்மையென மேன்மைதரும் செங்கதிரோன் றேர்கீட் டிசைதோன்றப் - பஙகயப்பூந் 111 திருச்சின்னம் தாட்டுணையா ளங்கயற்கண் சார்கூட லான்வந்தான் ஆட்டை விடாப்புலியூ ரான்வந்தான் - நாட்டிவைத்த 112 சண்மதத்து மேலான தந்திவனத் தான்வந்தான் மண்பரவு புற்றிடத் தான்வந்தான் - உண்மையன்பன் 113 ஆவணத்து முற்றும்விலை யாமென் றவன்வந்தான் பூவணத்து வாசப் பொருள்வந்தான் - மேவினர்தம் 114 துன்பக் கடல்கடத்துந் தோணிபுரத் தான்வந்தான் இன்பவெள்ளத் தையாற் றிறைவந்தான் - நம்பும் 115 அருங்குமுதச் செவ்வா யறம்வளர்த்த தேவி மருங்கமருங் காஞ்சிபுரன் வந்தான் - நெருங்குசடா 116 தாரண மாமுனிவோர் தந்தந் துதிக்கைபெற்ற வாரண வாசி யான்வந்தான் - பேரணியாய்ப் 117 பாணித் தணிந்தபணிப் பைக்குளடங் காதபெரு மாணிக்க மாமலை யான்வந்தான் - தாணிறையத் 118 தேங்கோய்வில் லானந்தத் தேனையன்பர்க் கூட்டிவைக்கும் ஈங்கோய் மலையெம் பிரான்வந்தான் - தீங்கை 119 அடும்பாமன் காளத்தி யந்தாதி கொண்ட கடம்பைச் சிவசங் கரனாம் - நெடுங்கயிலைக் 120 குன்றுடையான் றொண்டர் குழாமுடையான் வந்தானென் றென்றுதிருச் சின்ன மெடுத்திசைப்ப - மன்றல் 121 இசைந்ததிருத் தேர்வீதிக் கேகவுடன் கூடி வசந்தன் றிருத்தேர் மருவப் - பசும்பொன்னிப் 122 குழாங்கள் பூதலத்துப் பூவையரும் பொன்னாட்டின் மின்னாரும் பாதலத்தி னாககன்னிப் பாவையரும் - சீதமலி 123 கொண்டன் முழக்கங் குறித்தமயிற் கூட்டம்போல் எண்டிசையுங் கொள்ளா தெதிர்நின்றே - அண்டர் 124 பெருமானை மானைப் பிடித்திடுபெம் மானைப் பெருமானைப் போர்வைப் பிரானை - ஒருமானை 125 ஆகத்து வைத்தவனை யந்தகனை யங்கணம்போல் ஆகத்து வைத்தவனை யங்கணனை - ஏகத் 126 தொருவனையான் போற்ற வுவந்தானை யென்றும் ஒருவனையான் றன்னையரு ளோனைக் - கருவிழியாம் 127 உற்பலத்தா லர்ச்சித்தா ருள்ளன் புடன்பணிந்தார் பற்பலவாத் தோத்திரங்கள் பண்ணினார் - பொற்பமரும் 128 குழாங்களின் கூற்று பாதாதி கேச பரியந்தம் பார்க்கவிழி போதாதென் செய்வோமெனப் புகன்றார் - வேதாதி 129 நூலறியா யாரு நுவலறியா நாடியயன் மாலறியாத் தேவர் வடிவழகைச் - சாலவே 130 கண்டுதவப் பேறுபெற்றோங் காதலுற்றோங் கொன்றையருள் கொண்டுதவப் பேறெமக்குக் கூடாதோ - ஒண்டொடியார் 131 எல்லார்க்கு நல்லார்களென்ப துமக்கிலையோ கல்லார்க்கு நெஞ்சு கனியாது - தொல்லுலகில் 132 தன்னுயிர்போன் மன்னுயிர்க்குத் தானிரங்க வேண்டுமென முன்ன மனுநூன் முறையுரைத்தீர் - என்னசொல்வோம் 133 மிஞ்சு மதிப்பகைக்கும் வேனிரதத் தென்றலுக்கும் அஞ்சா தரவி னணிகொண்டும் - குஞ்சரமாம் 134 கங்குலுக்கு மைந்து கணையரும்புக் கும்வேட்கும் துங்கவிழி யாமுச் சுடர்கொண்டும் - புங்கவர்க்கா 135 ஆக்கங் கருதி யமர்க்குத் துணிந்தமதன் போர்க்குனிவில் வாளி புறப்பட்டுத் - தாக்கமுன்பின் 136 பார்த்தீர் விழித்தீர் பயந்தலைக்கொண் டீருடலம் வேர்த்தீ ரொருபாதி மெய்யானீர் - தோத்திரமாச் 137 சொல்லவோ வேளுமக்குத் தோற்றானோ தோற்றீர்நீர் அல்லவோ மாலீ தறியானோ - வல்லமையால் 138 ஆண்பெண் ணிருவருமோ ராடைகட்டச் செய்ததுவும் வீண்பேச்சோ வுங்கள் விளையாட்டோ - நாண்போக்கித் 139 தானையெல்லாம் போக்கித் தரணியிலெங் கொங்கைமத யானையெல்லாம் வெட்டவெளி யாக்கியே - சேனையெல்லாம் 140 கும்பிட்டு நம்பகையைக் கும்பிட்ட தென்றுமதன் தெம்பிட்டுச் சீறிச் சினந்திட்டான் - வம்பிட்டுத் 141 தையலருந் தூற்றினார் சற்றே கடைக்கணித்தால் மையலரென் றையலர்க்கு வாடோமே - துய்யபுகழ் 142 ஈசரே யென்றென் றெடுத்துப் பலபலவாப் பேசு மவரி லொருபேதை - பூசன்மதன் 143 பேதை விற்குணத்தைக் கண்டறியா மெல்லரும்பு தானுரைக்கும் சொற்குணத்தை யோராச் சுகப்பிள்ளை - பொற்கை 144 உழையார் கடம்பலர்மட் டுண்டறியா வண்டு மழையார்ப் புணராத மஞ்ஞை - இழைபுகா 145 மாணிக்க மீசனுக்கு மாரன் பணிந்து வைக்கும் காணிக்கை யானதங் கக்கட்டி - நீணிலத்து 146 மன்னுங் கலைபொருந்தா மான்கன்று பாற்படுநீர் பின்னஞ் செயவறியாப் பிள்ளையன்னம் - புன்கவிஞர் 147 பாட்டி னெழுவாய் பயனிலைபோ லொன்றொன்று கூட்டி முடியாக் குழலினாள் - வாட்டமுறும் 148 அண்டத் தமரரைமுன் னஞ்சலெனக் காத்தசிவன் கண்டத் தமர்விடம்போற் கண்ணினாள் - மண்டுபுனற் 149 செல்லாருஞ் சோலைத் திருவால வாயதனில் வில்லாரு மிந்த்ர விமானத்துட் - கல்லானை 150 முத்துவடம் போலுமிள மூரலாள் - நத்துலவு 151 பாணிக்குட் சிற்றரும்பாம் பங்கயம்போல் வெற்றிமதன் தூணிக்கு ளக்கணையின் றோற்றம்போல் - வாணிதொழு 152 நாரிசெங்கை யான்மறைத்த நாத னிருவிழிபோல் சூரியனிற் சந்த்ரகலை தோய்த்ததுபோல் - வாரிதியில் 153 பண்டமுத கும்பம் பதித்திருந்தாற் போலவெளிக் கொண்டினிமேற் றோன்றுங் குவிமுலையாள் - தொண்டர் 154 அரகர சஙகரவென் றானந்த வின்பக் குரைகடற்கு ளாகிக் குளித்துப் - பரவசமாய் 155 ஏறுடையான் முன்ன ரிசைநாத் தழுதழுத்துக் கூறுந் துதிபோற் குதலையாள் - வீறுடைய 156 வள்ள றிருச்சடைமேல் வைத்தபிறை போற்களங்கம் எள்ளளவு மெய்தா விதயத்தாள் - உள்ளமகிழ் 157 பூவையுடன் பேசியந்தப் பூவைசொன்ன சொல்லைமரப் பாவைக்குத் தானே பயிற்றுவாள் - ஆவலுடன் 158 முத்து வயிர முழுநீலங் கோமேதம் வித்துரும மாணிக்கம் வெள்ளிசெம்பொன் - இத்தனையும் 159 அட்டி லடுகலங்க ளம்மி யுரலுலக்கை வட்டிலெனச் சோறு வகுத்தானாற் - கிட்டமுறும் 160 அன்ப ருலகத் தருந்தா தருந்திடுசிற் றின்பமெனக் கையா லெடுத்துண்டு - நன்கமைந்த 161 வீதிக் கணித்தாக மேவுதலு நூபுரங்கள் நாதிக்கக் கைத்தாயர் நற்றாயர் - பேதையுடன் 162 சென்று பரனைத் தெரிசித்தா ரவ்வளவில் இன்று புதுத் தேர்மீதி லீங்கிவரார் - என்றலுமே 163 அண்டம் புவன மருஞ்சக்ர வாளகிரி விண்டலமேழ் பாதலம்பொன் மேருவரை - மண்டலங்கள் 164 சிற்றிலா கச்சமைத்துச் செல்வவிளை யாட்டயரும் பற்றாக் குதலைமொழி பாலனென - மற்றிவளும் 165 நாடரிய பாலனுட னானிருந்து கூடவிளை யாடநம தில்லி லழையுமெனக் - கோடரத்தில் 166 மையேந்து சோலை மதுரை நகர்க்கவுரி கையேந்து பாலனருட் காபாலன் - மெய்யடியான் 167 திஙகட் சுதையெனவே செய்யுமொரு முப்பாலும் சங்கத்தி னூட்டுந் தமிழ்ப்பாலன் - அங்கசனுக் 168 காமளவு நாமத் தனங்கனெனப் பின்னுமொரு நாமந் தரித்தநய னப்பாலன் - மாமறைக்கும் 169 அப்பாலுக் கப்பால னன்பாலுன் பாலணையும் இப்பால் விளையாட்டி னெய்துமோ - செப்புகெனத் 170 தேர்திரும்ப மற்றோர் தெருவி லிவளைமட வார்திரும்பக் கொண்டு மனைபுகுந்தார் - மீதொருத்தி 171 பெதும்பை பேதைகுணம் பாதிமங்கைப் பெண்குணத்திற் பாதிகலந் தோது பருவ முறுபெதும்பை - காதலெனும் 172 வித்தங் குரித்துவளர் மென்பூஞ் சிறுகொடிக்குச் சித்தங் கொழுகொம்பாஞ் செய்கையினாள் - மெய்த்தவங்கள் 173 ஈட்டினு மீசனரு ளெய்தி முடிப்பதுபோல் கூட்டி முடிக்குங் குழலினாள் - நாட்டநுதல் 174 ஏற்குமெம்மான் கைம்மா னினமோ வெனமருண்டு பார்க்கும் புதியமருட் பார்வையாள் - சீர்க்கமலன் 175 இவ்வளவு செய்தோ மினிநிகரி லாதவெழில் அவ்வளவு பூரித் தமைப்பதனுக் - கிவ்வாறென் 176 றேலத்தன் சிந்தையுள்ளே யெண்ணி முடிக்குநிகழ் காலத் தமைந்தமுலைக் கன்னிகையாள் - சாலநிறை 177 விற்பளிங்கு மாளிகையின் மேனிலத்து மின்னனைய பொற்பளிங்கு வாருமெனப் புந்திமகிழ் - அற்புடைய 178 தன்னனைய பெண்க டனித்தனியே சூழ்ந்திருக்க வென்னனைமுற் றாமுலைபங் கீசனெழில் - மன்னுதிருக் 179 கந்தரம்போ னீலக் கழங்குங் களங்கமில்லாச் சந்திரன்போன் முத்தின் றனிக்கழங்கும் - எந்தையுடற் 180 பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற் சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும் - தாதலரும் 181 கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும் துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும் - மன்றுடையான் 182 வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம் பாணி யதனிற் பரிந்தெடுத்து - நீணிலத்துப் 183 பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத் தேகாம் பரத்தினிசைபாடி - வாகாகக் 184 கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர் தேடு மலையின் செயல்பாடி - நாடரிய 185 வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப் பள்ளியெனுந்தலத் தைப்பாடி - உள்ளமகிழ் 186 வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக் கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடித் - தோடவிழும் 187 கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப் பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே - கஞ்சவிழி 188 அத்திறத்தா லாறெடுத்தன் றாறுமின்னா ரட்டமா சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடிக் - கைத்தலத்தில் 189 ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள் - சூழுறும்பே 190 றெல்லாங் கடம்பநக ரெய்தினோர்க் குண்டெனவே எல்லா மொருமித் தினிதெடுத்துச் - சல்லாப 191 மூக்குத்தி முத்தாட முத்து வடமாட நோக்கிரண்டு மாட நுசுப்பாட - ஆக்கமகள் 192 கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே வண்டாடுங் கூந்தலனை மாரதனைக் - கண்டிங் 193 கமையு மமையுமட வன்னமே யென்னும் அமைய மதனிலெமை யாளும் - உமைபாகன் 194 அத்த னிருத்த னடிக்கண் மலர்க்கணை வைத்திட மெச்சி மகிழ்ச்சிபெ - றத்திரி 195 விக்ரம னுக்கு மிகுத்த ப்ரபைக்கன சக்ரம ளித்திடு தற்பரன் - உக்ரம 196 குக்குட முற்ற கொடிக்கர சைச்சொறு திக்கை யனைத்தரு சிட்டன - னுக்ரக 197 சச்சிதா னந்தச் சதாசிவனம் பொற்றடந்தேர் விச்சைமணி வீதிதனின் மேவுதலும் - பச்சைமயில் 198 ஆயமன்ன சாய லணியிழைமின் னாருடனே தாயரும்போற் றிப்பணியத் தான்பணிந்தாள் - தூயனத்தண் 199 மாலளந்து காணா மலையை யிருவிழிக்கோ லாலளந்தா ளந்த வளப்பறிந்தார் - பாலனைமார் 200 தன்னை மனக்குறிப்பிற் றானறிந்தாள் - மின்னெனவே 201 எண்ணிய போதி லிவர்பாகம் பச்சையாய் நண்ணியவா றேது நவிலுமெனக் - கண்மணியே 202 சூலிக்குப் பச்சுடம்புஞ் சொன்முலைப்பா லும்பெருகப் பாலிக்கு மென்றுசொல்லாற் பாராட்டிச் - சேல்விழிப்பெண் 203 மாலையிட வந்தீரிம் மாதினுக்கு நீர்வலிய மாலையிட வந்ததென்ன மார்க்கமோ - மேல்பசப்புக் 204 காட்டுமான் காட்டியிசைக் கானமறி யாதவெங்கள் வீட்டுமான் கைக்கொளவோ வீதிவந்தீர் - கேட்டீரோ 205 நன்றாச்சு தையர் நடத்தைவிடர் புல்லருமே நன்றாச் சரியமென நாடுவார் - என்றென்று 206 செப்பும் வினோதந் திறமெனக்கொண் டேயமுதம் ஒப்புமிள் மூரலுட னோர்வீதிக் - கற்புதனும் 207 செல்லக் கனிவாய்ச் சிறுகுயிலு மின்னாரும் இல்லத் திருந்தா ரினியொருத்தி - வல்லதிரு 208 மங்கை மங்கைகலை மங்கைமலை மங்கையெனு மூவருமிந் நங்கைதனைக் கண்டக்கா னம்பதிகள் - இங்குநமை 209 வஞ்சிப்ப ரென்று மனம்வாக்குக் காயத்தில் அஞ்சா திருக்கவெழி லார்மங்கை - எஞ்சாது 210 காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரு மயலென்றாற் - போலவே 211 பேதை யரும்பிப் பெதும்பையந்தப் போதாகி மாது மலர்ந்த வனப்பினாள் - சோதிமணிப் 212 பன்னாகம் பூண்டோன் பரவையிடைத் தூதுசென்ற அந்நா ளிருள்போ லளகத்தாள் - உன்னாமல் 213 அன்றுநமை வென்றகண்ணொன் றாமினிச்செய் கையிதென நின்றுநின்று பார்த்து நினைத்துமதன் - இன்றுசிவன் 214 முக்கணையும் வெல்ல முழுநீல முக்கணையா இக்கணையோ டெய்வே னெனுங்கண்ணாள் - தக்கதிறல் 215 நாண்மடமச் சம்பயிர்ப்பா நன்மந் திரர்சூழப் பூண்முலையா மாமகுடம் பொற்பமைத்து - மாணிழைமார் 216 அங்கசன் மந்த்ரமெல்லா மாக்கம் பெறவுரைப்பத் தங்குமனச் சிங்கா தனத்தேற்றி - அங்கணன்றன் 217 சீர்த்தி யபிடேகஞ் செய்து தலைமைபெறு மூர்த்திகா முண்டாக்கி மோகமெனும் - பார்த்திபனுக் 218 கிட்ட மிகுந்தநல்லா ரெல்லாருங் கொண்டாடப் பட்டந் தரித்த பருவத்தாள் - கட்டிசைந்த 219 செம்பதும ராகச் செழுமணிப்பொன் னாடரங்கில் அம்பதுமை மின்னா ரருகிருக்க - விம்பவிதழ் 220 அன்னமுன்னந் தாருவனத் தங்கனைமா ரேந்தியபால் அன்னமென முத்தினணி யம்மானை - தன்னிருகைக் 221 கொண்டா ளிசையாற் றாயினாணச் செங்குமுதம் விண்டா ளெடுத்து விளையாடல் - கண்டோர்கள் 222 துன்றனமூன் றங்கையெனச் சொல்வனசப் பூவிரண்டில் ஒன்றிருக்க வொன்றெழுவ தொக்குமென - வென்றிமழு 223 வல்லா னுருவெளியின் மாலை யெனத்திரண்டு பல்லாரங் கன்றெழுந்து பார்ப்பதென - வல்லமைசொல் 224 அம்மானை யாடிவென்ற வம்மானைப் பாடியே அம்மானை யாடு மளவிலே - எம்மானாம் 225 சீதள சோம திவாகர லோசன லேத சொரூப வினோதப - ராதன 226 மாருத பாலக மாதவ சாயக மேரு சராசன வீரச - ரோருகப்பொற் 227 பாதன் கயிலைப் பரமன் கடம்பவன நாதன் றிருவீதி நண்ணுதலும் - மாதுகரத் 228 தம்மனையை வைத்தா ளனமனையார் தங்களுடன் அம்மனைநின் றேகி யடிபணிந்தாள் - சென்மக் 229 கருவிலியைக் கண்ணாரக் கண்டாள்கண் காணா உருவிலியைக் காணென் றுறுக்கி - மருமத் 230 தொருகோல் செவிமட் டுறவாங்கி விட்டாள் குருகோ லிடுங்கரப்பூங் கோதை - வெருவியே 231 அம்புலி யென்ப தழற்க ணுறும்புலியோ வம்புரைக்கப் பெண்கண்மட மானாரோ - கும்பமுனி 232 குன்றிற் பிறந்த குழவியிளங் காலுடலம் கன்ற வுதைத்திடும்வன் காலாச்சோ - ஒன்றுகுயில் 233 ஓசையெல்லாம் காளகண்டத் துற்றதோ வுள்ளடங்கும் ஆசையினி யாசைக் கடங்காதோ - பேசுமொழி 234 அஞ்சுகமன் னீரிரவின் யாமமொரு நாலுமினி அஞ்சுகமோ வாறுகமோ வாரறிவார் - நெஞ்சுகந்து 235 கூட்டிவைக்க வல்லீரோ கூறுமெனத் தெள்ளமுதம் ஊட்டிவைத்த சொல்லா ருரை செய்வார் - கேட்டீரோ 236 பாதி யுடம்பாய்ப் பசப்பையுற்ற பெண்பாலாற் போதவன்னி யத்தமனப் போதுறலாற் - கோதிலா 237 மீனக் கொடியன் விரைவிற் பயந்ததால் ஊனக் கொடியகரு வுள்ளடையா - மோனர் 238 இமய வரையளித்த வெந்தையனை யென்னும் உமையு முமையுமே யொத்த - அமைவால் 239 இவளுக் கொருபா லிசையுமெனப் பாகத் தவளுக் கறியா தமைக்கும் - உவமை 240 அபய கரத்திலங்க வைந்தருவின் மேலாம் உபயன்மற்றோர் வீதிதனி லுற்ற - அபரி 241 மிதமான தாருவன மேவு முனிவோர் இதமா யிவண்மருவு மின்பம் - உதவாத 242 சங்கைத் தவமே தவஞ்செய்தோ மென்னமன்னும் மங்கைக்கு மேலான மாமடந்தை - பொங்குகதிர்ச் 243 மடந்தை சந்திரனாற் சூரியனாற் றள்ளுண் டுடனடந்தோடி வந்து புகுந்து மறைந்துமறைந் - துய்ந்திடவே 244 வானா ரிருட்கு மலரோன் வகுத்துணர்த்த கானா ராண்போற் கருங்குழலாள் - தேனாரும் 245 சொல்லாண் மதனனுக்குஞ் சொல்லுவாள் புத்திகொங்கை கல்லாள்கொக் கோகமுற்றுங் கற்றறிந்தாள் - எல்லாம் 246 கரும்புருவ வில்லாள் கமழ்கமல வில்லாள் கரும்புருவ வில்லாள்லேற் கண்ணாள் - அரும்பு 247 நகையா டளிரன் னகையாள் பணிமே னகையாள் புவிமே னகையாள் - சகமகிழும் 248 பூங்குமுதச் செங்கனிவாய்ப் பூவைதனித் தில்லிருந்தோர் பாங்கிதனைக் கூவியுயிர்ப் பாங்கியே - ஈங்கெழுதும் 249 ஓவியங்கை வந்த வொருவனைமுற் றாதமுலைத் தேவி மணாளன் றிருவுருவை - நீவகுப்பாய் 250 அன்னமன்ன தோழி யறிந்துசொல்வாள் - முன்னவன்றன் 251 வேணி யெழுதவல விஞ்சைகற்றா னேனுமதிற் பாணிதனை யெவ்வாறு பாணிப்பான் - மாணமைந்த 252 நெற்றி யெழுதவல்ல நேர்மைகற்றா னேனுமதில் உற்றகனற் கண்ணெழுத வொண்ணாதே - மற்றுமிரு 253 கண்ணெழுதக் கற்றானோ கற்றாலுந் தண்ணருள்கூர் வண்ண மமைக்க வசமாமோ - உண்மகிழும் 254 தோடெழுத வல்லனென்று சொன்னாலும் வீணைவல்லோர் பாடலிசைக்கப் படுவதோ - நாடி நின்று 255 செம்பவள வாய்வடுத்துச் செய்தாலு முன்னதர விம்பவள தேனருந்த வேண்டாமோ - நம்பரமன் 256 சுந்தரம்போ லேயெழுதக் கற்றானே யானாலும் முந்தச் சுருதி முழங்குமோ - வந்தவிஞ்சை 257 யாலிங்க னங்கரங்க ளாளெழுதி னாலுமுன்னை லிங்க னஞ்செயலை யாரமைப்பர் - மாலறியா 258 நித்தன் திருமார்பு நின்றெழுதி னாலுமுன்மேற் சித்த மகிழ்வதெனச் செய்யவல - வித்தகனோ 259 தாட்டுணைகள் போலெழுதித் தந்தாலுந் தான்மாறி ட்டுவிக்கப் பாண்டியனா ரல்லவே வாடங்கண் 260 மின்னே மணியே விளக்கே விலைமதியாப் பொன்னே நால்வேதப் பொருளாவான் - தன்னுருவைத் 261 தூரிகையி னாலெழுதச் சென்னதென்னே புத்தியத்த நாரிதனைக் காணிலுள நாணாதோ பேறிஞர் 262 அப்படிய னவ்வுருவ னவ்வணத்த னென்றறிவார் இப்படிய னிவ்வுருவ னிவ்வணத்தன் - ஒப்புடையன் 263 ஆமென் றெழுதவல்லா ரியாரே மலரிதழித் தாமந் தரித்தவிண்ணோர் தம்பிரான் - மான்மியஞ்சேர் 264 உள்ளத்தி னுள்ளன் புடையார் கருத்தறியும் வள்ளல் வலிய வருமென்னத் - தெள்ளமுத 265 வாரி பவள மலைபோன் மலையனைய தேரின் வரமகிழ்ந்து சென்றணைந்து - பாரினின்று 266 கண்டா டுதித்தாள் கனிந்தாள்பே ராசைமேன்மேற் கொண்டாள் பணிந்தெழுந்து கும்பிட்டாள் - எண்டிசையும் 267 கட்டிய தானைக் கருணா காநிதியே பட்டிமையில் லாருளத்தின் பாக்கியமே - புட்டிலிலே 268 ஐயம் படைத்தவனா லையா பரிகலத்தில் ஐயம் படைத்தவர்போ லாயினேன் - மெய்யணியோ 269 டென்பணியுங் கொண்டீ ரிமய மடந்தையைப்போல் என்பணியுங் கொண்டாலா ரேசுவார் - முன்புபச்சை 270 மாலையளித் தீரெனக்கு மாலையளித் தீரதற்கு மாலையளித் தீரென்றால் வாழ்த்தேனோ - சூல 271 தாரே யெனவா தரத்தா லுரைக்க வரதன் மனமகிழ்ந்து மற்றோர் - திருவீதி 272 சென்றா னிவளுந் திருமனையிற் புக்கிருந்தாள் நின்றாரிற் பின்னுமொரு நேரிழையாள் - நன்றிசைந்த 273 அரிவை மானை மருட்டிவரி வண்டைச் சிறைப்படுத்தி மீனைப் பயமுறுத்தி விண்டலர்ந்து - தேனார் 274 வனசத்தைப் பங்கமுற வாட்டிக் குவளை இனசத் துருவைவன மேற்றிச் - சினமா 275 வடுவை வடுச்செய்து வாருதியோ மேன்மைப் படுமென் றதோகதியாய்ப் பண்ணிக் - கடுவினுக்கு 276 நித்யகண்ட மேவு நிலைகொடுத்து வேன்முனைக்குச் சத்தியிலை யென்னவெற்றி தான்கொண்டு - கத்தி 277 உறையிடக் காணாதென் றுயிரின் கொலைக்கு மறலிதன்ம னாமெனப்பேர் வைத்து - விறலார் 278 உருவை யுடையா னுடைய கணைபோன் றரிவை யுறுகண் ணரிவை - பருவமுற்றும் 279 நாளிகே ரத்தினைத்தன் னல்லடிவீழ்த் திச்சக்ர வாளத்தை யோட்டிகெடு வான்புகுத்தித் - தானத்தை 280 ஒன்றொன்று தாக்கவிடுத் தோர்தாளிற் றாமரையை நின்றிடெனத் தண்ட நியமித்துத் - துன்று 281 கரியைக் கிரிவைத்துக் கன்னிகா ரத்தைத் தெரியலர்தூற் றச்சிறுமை செய்து - பரிய 282 மணிச்செப்பை வாயடைத்து வைத்த பணியுள் தணிச்சொப்பில் கூவிளத்தைச் சாலக் - கணிப்பரிய 283 வித்தையுள்ள வெல்லாம் வெளிப்படுத்தக் கண்டுசிவ பத்த ரிடத்திருக்கப் பாலித்து - மொய்த்தமலர்ச் 284 செண்டைப் புலர்த்தித் தினகரர் சூழ்ந்திடும்வே தண்டத்தைப் போரிற் றலைமடக்கிக் - கண்டித் 285 திணைத்திறுகி விம்மி யிறுமாந் திளகிப் பணைத்துத் திதலை பாந்து - துணைக்கண் 286 கறுத்து வெளியிடையிற் காணாதிடையை ஒறுத்துப் புனைகச் சுவந்து - மறுப்படரச் 287 சந்தந் திமிர்ந்து தரள வடம்புனைந்து கந்தங் கமழுங் கனதனத்தாள் - அந்தரத்தின் 288 என்றடுத்து வந்தாலு மென்றுவந்தீ ரென்றெதிர்த்து நின்றடுத்துக் கேட்குமிரு ணேர்குழலாள் - வன்றிறல்சேர் 289 அங்கோல மாரவே ளாக்கினையுஞ் சக்கரமும் செங்கோலும் போன்ற திறலினாள் - பொங்குகதிர்ச் 290 சித்ரமணி மேடைதனிற் சிங்கா தனத்திலிருந்து வித்தாரப் பாடல் விறலிக்கு - முத்தாரம் 291 பூந்துகில் சந்தம் புனைய வளித்துமகிழ்ந் தேந்திழையே முன்னா ளிசைவாது - சாய்ந்திடவே 292 எம்பிரான் கூட லிறைவனரு ளாற்செயித்த கும்பமுலை மாமயிலே கூறக்கேள் - உம்பரிலே 293 வீரங் கருணை மிகுந்த சவுந்தரமும் சேருங் கடவுளர்யார் செப்பென்ன - ஆர்வமுடன் 294 வீணை யிடந்தழீஇ மென்மா டகந்திருத்திப் பாணினியு மின்னிசையாற் பாடுவாள் - ஆண்மைமிகு 295 காமன் புரத்தைக் கருதார் திரிபுரத்தை மாமன் சிரத்தைமல ரோன்சிரத்தை - ஏமமுறா 296 அந்தகனை யந்தகனை யாதி யடையலரை முந்தத் தடிந்த முறைகேட்கின் - விந்தையாம் 297 பார்த்து நகைத்துப் பரிகரித்துக் கிள்ளியுதைத் தார்த்து வெகு ளாதவிளை யாட்டமரை - நேர்த்திடவே 298 எத்தேவர் செய்வா ரிஃதேவ ரான்முடியும் அத்தேவ ரெல்லா மடலுற்றால் - மெய்த்துணைகள் 299 கூடுவா ராயுதங்கள் கொள்வார் சமரிலுடைந் தோடுவார் மீள்வா ருடற்றுவார் - நாடரிய 300 றஞ்சுவார் வீர மறியோமோ - மிஞ்சும் 301 அரிபிரம ரேனுமுன மாணவமுற் றாரேல் அரிய னரியதவத் தன்பர்க் - குரியனென்று 302 சொல்லுவது நிற்கமுனந் தும்பி சிலந்தியரா வல்லமையில் லாதகய வாய்தமக்கும் - வெல்லமரில் 303 அன்னை யிழந்த வடலேனக் குட்டிகட்கும் என்னேயோ ரிக்கு மெறும்புக்கும் - தன்னிடத்தில் 304 அன்புதவி யென்று மழியாப் பெரும்பதவி பின்புதவி யாள்கருணைப் பெம்மானும் - நம்பான்காண் 305 பெண்கண்மயக் கற்றதவப் பேரறிவு தானிழந்து பெண்கள் வடிவெடுத்துப் பேரெழில்கண் - டெண்களிப்பி 306 னாலே யொருபதினா றாயிர மாமுனிவோர் மாலாய்ப் புணர்ந்ததிரு மாலேபெண் - பாலாய் 307 மருவி னிமவான் மருக னழகுக் கொருவரிணை யாவாரு முண்டோ - பொரும்விசய 308 வீரப் பெருக்கழகன் மென்கருணைச் சீரழகன் ஆரத் திருமேனி யாரழகன் - ஓரழகுக் 309 கெவ்வளவு மீச னிணையிலியென் றேயுரைக்கும் அவ்வளவிற் பல்லியத்தி னார்ப்பரவம் - கொவ்வையிதழ் 310 மாது செவியுறலும் வந்ததுதே ரென்றெழுந்தாள் நாத னடிபணிந்து நாடியே - சீதமலி 311 காவெல்லா மாரன் கணையே கணைமுதிரும் பூவெல்லா நாணின் பொருத்தமே - மேவுவயல் 312 மேடெல்லா மன்மதன்கை வில்லே குடியிருக்கும் வீடெல்லாஞ் சேனை விளக்கமே - கூடும் 313 இரவெல்லாம் வேள்களிற்றி னீட்டமேகொல்லைப் பரவெல்லாம் சொல்வாம் பரியே - தரணியிலே 314 எங்கெங்கே பார்த்தாலு மென்னவெளி கண்டவிடத் தங்கங்கே தேரு மவனுமே - சங்கரரே 315 தேவரீர் சித்தந் திரும்பினா லிக்கணமே யாவு முறவா யிணங்குமென்று - பாவை 316 புகலக் கடைக்கணித்துப் போந்துபின்னோர் வீதி திகழ வதிலோர் தெரிவை - மகிழும் 317 தெரிவை அயிலு மயிலு மனமுங் கனமும் குயிலும் வடமுங் குடமும் - இயலும் 318 கொடியுந் துடியுங் குளிருந் தளிரும் படியுமிசைக் காந்தளொடு பாந்தள் - அடிமையெனும் 319 மேன்மைபெறு கண்சாயல் வீதிநடை கூந்தலிசைப் பான்மை யுதரம் பயோதரங்கள் - வான்மருங்குல் 320 மெல்லடிசெங் கைநிதம்ப மிஞ்சு சவுந்தரஞ்சேர் வல்லி மதனகலா வல்லியாள் - தொல்லுலகில் 321 வீரப்ர தாப விசயமன்னர் கப்பமிடப் பாரப்ர தாபம் படைத்தமன்னர் - நேரொக்க 322 வச்ரமணி மேடைதனில் வாளரிச்சிங் காதனத்தில் இச்சையுடன் வீற்றிருக்கு மேல்வைதனில் - உச்சிதஞ்சேர் 323 அங்குறப்பெண் ணாமொருத்தி யானகுறி சொல்வனென்றே அங்குறப்பெண் ணாரமுத மாயினாள் - பங்கமுறா 324 தோர்ந்தென் மனக்குறிப்பி லொன்றுளது சொல்லெனவே தேர்ந்து மலைக்குறப்பெண் சிந்தைமகிழ்ந் - தாய்ந்துநன்றாய் 325 ஓர்வருட மோர்மாத மோர்நா ளொருவாரம் ஆர்வமுடன் சொல்லென் றவளிசைப்பச் - சீர்பொருந்த 326 உன்னும் வருட முரைக்கும் பதினொன்றாம் என்னுமுன்னே யீச்சுரன்மே லிச்சையென்றாள் - பின்னுமவள் 327 மாதமொரு நாலென்றாண் மன்றாடி தன்மீதிற் காதலுற்றாற் போலுங் கருத்தென்றாள் - பேதமில்லா 328 நாளினுமோ ராறென்றா ணன்றுதிரு வாதிரையான் தோளின்மேன் மையாலென்று சொல்லினாள் - கோளிலகு 329 வார மிரண்டென்றாள் வாழ்சோம சேகரனைச் சேர மனதிற் சிறந்ததென்றாள் - ஆரணங்கும் 330 ஆமெனது யோகத்தா லந்தக் கரணமுடன் தாம மளிப்பரோ சாற்றென்ன - மாமயிலே 331 வந்தோர் கணப்பொழுதின் மாலை யுதவுமதிற் சந்தேக மில்லையெனத் தானுவந்து - விந்தைமிகு 332 பொன்னாடை மின்னுமணிப் பூணுதவு மவ்வளவில் பன்னாகப் பூணா பரணத்தான் - தன்னெடுந்தேர் 333 மங்கலங்கள் சேர்வீதி மன்னுதலு நன்னுதலும் அங்கலங்கண் மின்னவெழுந் தாங்கணைந்தாள் - செங்கை 334 மலரைக் குவித்து வதனமலர்ந் தாண்மேல் மலரைக் குவித்துவிட்டான் மாரன் - அலரெடுத்து 335 நல்லாருந் தூற்றினார் நாண்மடமச் சம்பயிர்ப்பாம் எல்லாமோர் பக்கத் திருத்திவைத்துச் - சொல்லலுற்றாள் 336 வில்லிலே வண்டன் விடுங்கணையிற் றப்பிலிபூ வில்லிலனே யென்றாலு மெய்திடுவான் - சொல்லிலே 337 கூவென்னுஞ் சின்னமுற்றோன் கூறுமெய்யே யில்லாதோன் காவென்றால் வந்தடிக்கக் காத்திருப்பான் - தேவரீர் 338 இவ்வே டனைவிட் டெனைவருத்தி னாலெவர்க்கும் ஒவ்வாது நீதி ய்டையாரே - எவ்வுலகும் 339 போற்ற வரசுரிமை பூண்ட சவுந்தரரே ஆற்று மயலேனை யாளுமெனக் - கோற்றொடிதான் 340 பேசிய போது பெருமான் றிருவுளத்தில் நேசம்வைத்தாற் போலமற்றோர் நீள்வீதிக் - கோசைமிகு 341 தூரியம் பேரி தொனிப்பவுற்றான் பெண்மைதனிற் பேரிளம்பெண் ணானவொரு பேரிளம்பெண் - சேரும் 342 பேரிளம்பெண் இருட்டறையுட் பல்கணியி னெய்துநிலாக் கூடும் இருட்டனைநே ரூடுநரை யெய்தும் - திருக்குழளாள் 343 பூணுற் றிறுகும் புணர்முலைக்குப் பூணிலதாற் காணூறவே சாய்ந்தசையுங் காட்சியென - நாண்முதலா 344 முற்றாப் பெதும்பை முதற்பருவந் தோறும்விஞ்சை கற்றாய்ந் தமையாக் கவினமைத்துச் - சொற்ற 345 தெரிவை வரைக்குந் திரட்டிவைத்துப் பார்த்துச் சரியென்றாற் போலுந் தனத்தாள் - அரிய 346 பதுமை யனையாள் பான்சேவை யன்றிப் புதுமை விழிக்குப் பொருந்தாள் - மதுகரங்கள் 347 ஓலமிடும் பூங்காவி லுற்றெவ் வொருதருவாய்ச் சாலவெதிர் கண்டுகண்டு தான்மகிழ்ந்தாள் - கோலமிகு 348 மஞ்ஞை யனையமின்னாள் வாழைதனைக் கண்டுதிருப் பைஞ்ஞீலி யானைப் பாவினாள் - இஞ்ஞாலத் 349 துற்றார்க் குதவி யுறுபலாக் கண்டுதிருக் குற்றால நாதனென்று கும்பிட்டாள் - சுற்றியதன் 350 நெல்வேலி யீசனையே நேசித்தாள் - பல்லின் 351 மருமுல்லை வாயாள் வளர்முல்லை கண்டு திருமுல்லை வாயில்சிந் தித்தாள் - ஒருமாச் 352 செறிவுற் றிடலுஞ் சிவனை முலையாற் குறியிட் டவனைக் குறித்தாள் - முறியாரும் 353 நிம்பமெதிர் கண்டா ணிமல னிராசலிங்கச் சம்புவைமுன் கண்டதென்னத் தான்மகிழ்ந்தாள் - உம்பரிசை 354 திந்திருணி கண்டா டிருவீங்கோய் மாமலையில் எந்தைதனைச் சிந்தைதனி லேத்தினாள் - கந்தநிறை 355 வில்வமெதிர் கண்டாள் விசைந்துசொக்க நாயகிசேர் சொல்வாலி நாதனெனச் சூழ்ந்திறைஞ்சிப் - பல்லுயிர்க்கும் 356 தன்னடியி னீழ றருவாற்குத் தான்மேலாய்த் தன்னடியி னீழ றருங்கடம்பை - முன்னுறக்கண் 357 டன்பிற் குழைந்தாங் கடிபணிந்து கைகூப்பி இன்பமுட னெண்ணுவா ளிக்கடம்பின் - நம்பரமர் 358 கூடலாய் வந்திருந்து கொண்டக்கா லிவ்விடையே கூடலா மென்று குறித்திடுமுன் - நீடும் 359 கலையா னிடைபிங் கலையான் மலைய மலையான் கயிலை மலையான் - இலகியவெள் 360 ளேற்றினா னின்பமன்பர்க் கேற்றினா னென்றுயரை ஆற்றினான் காவிரிப்பே ராற்றினான் - சாற்றுமறைக் 361 காட்டினான் போற்றுநெறி காட்டினான் றன்னுரையை நாட்டினான் சோழவள நாட்டினான் - ஈட்டும் 362 துதியா னுதரத் துதியா னிடத்தம் பதியான் கடம்பைப் பதியான் - சதுர்வேதன் 363 ஆரணியன் மெய்யனடி யாரணியன் மாவிரதம் தாரணியன் பொன்னிதழித் தாரணியன் - ஓர்கை 364 உரியான் பணிவோர்க் குரியானெண் ணாரைப் பரியானால் வேதப் பரியான் - மருவுசெங்கை 365 வாரணத்தன் கோட்டுவெள்ளை வாரணத்தன் வாணிமரு வாரணத்தன் போற்றுமயி ராவணத்தன் - பாரப் 366 படியேர் பொருந்தும் படியே செயும்பூங் கொடியே புணருங் கொடியான் - நெடிது 367 வழங்கும் புவனத்து மன்னுயிர்க்குந் தானாய் முழங்குமோங் கார முரசான் - எழுங்கதிசேர் 368 சந்திரனுஞ் சூரியருந் தானவரும் வானவரும் இந்த்ராதி திக்குக் கிறையவரும் - ஐந்துபெரும் 369 பூதமும் பூதப் புணர்ப்பும் புகன்றசதுர் வேதமும் வேத விதிவிலக்கும் - போதனால் 370 தானே யமைத்த சராசரமு முற்பவத்தில் ஆன நிலைபெயரா வாணையான் - மோன 371 முனிக்கணங்கள் சூழ்கருணை மூர்த்திநால் வேதத் தனிப்பொருளெல் லார்க்குந் தலைவன் - குனிப்புடையோன் 372 வந்தா னெனவே மணிச்சின்னந் தானிசைப்பத் தந்தா ரிடையாளுந் தான்சென்று - முந்திப் 373 பணிந்தா ளெழுந்து பகருமதன் போர்க்குத் துணிந்தா ளடுத்துநின்று சொல்வாள் - அணியாரும் 374 மெய்யா நிலத்தினிற்கா வேரியம்பு பாய்ச்சியுழு தையமுறா தேபுளக மங்குரிப்பத் - துய்யதாம் 375 காமப் பயிரிலையாக் காட்சிக் கதிர்தோன்ற ஏமமுற நெல்வேலி யீசரே - சேமித்து 376 மோக விளைவு முதிரவே ளாண்மைசெய்தால் போக முமக்கே பொருந்துமே - மாகருணைச் 377 சுந்தரரே யென்னமற்றத் தோகையர்பல் லாண்டிசைப்ப அந்தரத்தோர் பாதலத்தோ ரம்புவியோர் - செந்தமிழோர் 378 தேனே கனியே செழும்பாகே தெள்ளமுதே ஊனே யுடலி னுயிர்க்குயிரே - கோனெயெம் 379 உள்ளமே யுள்ளத்தி னுள்ளுணர்வே பேரின்ப வெள்ளமே வெள்ளை விடைப்பாகா - தெள்ளுதமிழ்ச் 380 சொல்லே பொருளே துதிசே ரிருநிதியே எல்லே யஞ்ஞான விருளகற்றும் - வல்லானே 381 என்றென்று பன்முறைநின் றேத்த வருளிமதி ஒன்றொன்று செஞ்சடையா னோர்காலும் - குன்றாத 382 சீருடையான் செல்வச் சிறப்புடையான் றென்கடம்பை ஊருடையான் போந்தா னுலா. 383 கடம்பர்கோயில் உலா முற்றிற்று விருத்தம் விருப்பிருக்கு நினதடியார் செய்பணிக்கிங் கிடையூறு விளைக்கும் பாவ இருப்பிருக்கு மூடர்தம திருப்புமன முருக்கிவிடற் கியல்பாய்ச் செங்கை நெருப்பிருக்கப் படவரவத் துருத்தியுமங் கிருப்பதென்ன நினையா தென்னோ திருப்பிருக்கு மூவிலைவேற் படையுடைய கடம்பவனத் தேவர் தேவே. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |