குலசை உலா

     குலசை உலா என்பது தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூருக்குத் தெற்கே உள்ள குலசேகரப்பட்டினத்தில் எழுந்தருளியுள்ள கச்சிகொண்ட பாண்டீசுவரர்மேல் பாடியது. குலசேகரன் பட்டினம் என்ற பெயரே குலசை என்று மருவியது. இது குலசேகர பாண்டியனால் நிறுவப் பெற்ற ஊர் என்று தோன்றுகிறது. இந்நூலின் ஆசிரியர் இன்னாரென்பதும், இன்ன காலத்தில் இந்நூல் எழுந்ததும் என்பதும் தெரியவில்லை.

     காப்புச் செய்யுளாகிய வெண்பாவை முதலில் பெற்றுப் பின் 281 கண்ணிகளைக் கொண்டு இலங்குவது இந்தப் பிரபந்தம். முதல் 35 கண்ணிகளில் இறைவனுடைய பெருமையும், அதற்கு மேல் 43ஆம் கண்ணி வரையில் இறைவன் பவனிவரத் திருவுள்ளங் கொள்ளுதலும், 54ஆம் கண்ணி வரையில் இறைவன் புனைந்து கொள்ளும் அலங்காரமும், 67 வரையில் அம்பிகை அணி செய்து கொள்வதும், 70 வரையில் இறைவனும் இறைவியும் கோயிலுக்கு வெளியே எழுந்தருள்வதும், 71 முதல் 101 வரையில் நந்தி முதலியோர் உடன் வருவதும், 105 வரையில் இசைக் கருவிகள் முழங்குவதும், 111 வரையில் திருச்சின்ன முழக்கமும், 122 வரையில் தசாங்கங்களும் சொல்லப் பெறுகின்றன். மேலே 123 முதல் 150 வரையில் மகளிர்குழாம் இறைவனைத் தரிசித்து மால் கொள்வதையும், அப்பால் உள்ள கண்ணிகளில் பேதை முதலிய ஏழு பருவ மகளிர் செயல்களையும் காணலாம்.


கவிதை ஓவியம் சிற்பம் சினிமா
இருப்பு உள்ளது
ரூ.355.00
Buy

வேண்டாம் மரண தண்டனை
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

சே குவேரா: வேண்டும் விடுதலை!
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

தீட்டும் புனிதமும்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பொய்த்தேவு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

அற்புதங்கள் உங்கள் கையில்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

காதல் தேனீ
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

காலத்தின் வாசனை!
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

போர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்
இருப்பு உள்ளது
ரூ.810.00
Buy

புலன் மயக்கம் - தொகுதி - 2
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

யாமம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

அலர்ஜி
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

அம்பானி கோடிகளைக் குவித்த கதை
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

பண்டிகை கால சமையல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

வானம் வசப்படும்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

உறுபசி
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy
காப்பு

காருலாந் தென்குலசைக் கச்சிகொண்ட வீசுரர்மேல்
சீருலாப் பாடத் திறனல்கும் - மேருக்
குவடு சுவடுபடக் கொம்பா லெழுதும்
கவடுபடாக் கைக்கற்ப கம்.

நூல்

சிவபெருமான் பெருமை

சீர்பூத்த தாமரைபோற் செங்க ணெடுமாலும்
தார்பூத்த மார்பிற் சதுமுகனும் - ஏர்பூத்த

பூப்பொலிந்த சேவடியும் பொன்முடியுங் காண்பரிய
தீப்பிழம்பாய் நின்ற திருவுருவன் - கூப்புமிரு

கையுடையா ருள்ளக் கமலா லயமுடையான்
பொய்யுடையா ருள்ளம் புகுதா தான் - மெய்யுடைய

ஏக னநேக னிரண்டற் றகலாத
போக மளிக்கும் பொருளானோன் - மோகமுறும்

எல்லா வுயிர்க்கு முயிரா யவரவர்கள்
செல்லுங் கருத்திற் செறிவானோன் - வல்லார்சொல் 5

வாக்குமனா தீதன் மறைகளுக்கு மெட்டாதான்
போக்குவர வில்லாத பூரணத்தன் - நோக்கரிய

முக்குணத்தின் மூவரையுந் தோற்றிமுறை யேயவர்க்குத்
தக்கவகை முத்தொழிலுந் தானளிப்போன் - மிக்க

உருவ னருவ னுருவருவ மில்லான்
இருள னொளியனவை யில்லான் - பொருவிலா

ஐந்தொழிலுஞ் செய்தே யழகியசிற் றம்பலத்தே
நந்தலிலா ஞான நடம்புரிவோன் - அந்தமிலா

நித்த னநாதி நிமலன் பிறவாத
சுத்த னறிவன் சுகாதீதன் - அத்துவிதன் 10

வேல்போலுங் கண்ணி விமலையுடன் வீற்றிருக்கும்
பால்போலும் வெள்ளிப் பருப்பதத்தான் - மேலொழுகும்

கங்கைச் சடையான் கறைமிடற்றான் கண்ணுதலான்
பொங்கரவப் பூணான் புலித்தோலான் - பங்கமிலா

வேதப் பரிபுரத்தான் வீரக் கழலுடையான்
பூதப் படையான் பொருவிடையான் - சோதிதரும்

வெண்ணீற் றழகன் விளங்குமண்ட பிண்டமெல்லாம்
எண்ணீற்றிற் காணா திறப்பிப்போன் - வண்ணமுற

ஆக்குவோன் காப்போ னழியா மலப்பிணியை
நீக்குவோன் வீட்டி னிறுத்துவோன் - பாக்கியமாம் 15

எங்கண் மலைமடந்தை யெவ்வுயிரும் பெற்றெடுத்தும்
கொங்கை தளராக் குமரியாள் - பொங்கியசீர்க்

காஞ்சிப் பதியிலருட் கம்பைத் திருநதியில்
வாஞ்சை மிகுத்து வழிபடவே - ஆஞ்சலமாய்

வெள்ளம் பெருகிவர விம்மி விதிர்விதிர்த்துத்
தள்ள வொழியா ததுகண்டே - உள்ளணைத்துக்

கொள்ளத் திருமலர்க்கைக் கோல வளைத்தழும்பும்
வள்ளத் தனக்குறியும் வைத்திருப்போன் - எள்ளரிய

பேரருளி னாலே பெருமுத் தமிழ்கொழிக்கும்
சீருடைய பாண்டித் திருநாட்டுக் - காரிலகும் 20

கொண்ட லுறங்குங் குளிர்ந்தமலர்ச் சோலைகளில்
தண்பவள வல்லி தழைத்தேறும் - தெண்டிரைசூழ்

மாடமொடு மாளிகையு மண்டபமுங் கோபுரமும்
ஆடரங்கும் பொன்னா லமைத்திட்ட - பீடுடைய

தேராரும் வீதித் திருக்குலசை மாநகரில்
பாராருங் கீர்த்தியொரு பாண்டியன்முன் - ஆராத

ஆசையோ டுந்தவஞ்செய் தன்பா யவன்வேண்ட
மாசில்வடி வாயுதித்து வாழ்ந்திருப்போன் - பேசிலென்றும்

பூவுந் தளிரும் புதுவடுவுங் காய்கனியும்
மேவு மொருமா வியப்புடையான் - மூவுலகின் 25

எல்லா வழகு மெடுத்துத் திரட்டிவைத்த
உல்லாச மான வுருவுடையாள் - நல்லோர்தம்

கண்ணா ரமுதங் கருணைப் பெருமாட்டி
ஒண்ணீலக் கண்ணா ளொளிமுகத்தாள் - எண்ணான்

கறம்வளர்த்த நாயகியென் னம்மைமண வாளன்
பிறைமுடித்த செஞ்சடையெம் பெம்மான் - மறைவடித்த

வாயன் றிருநமச்சி வாயன் பதத்தினிற்செவ்
வாயன்பு வைத்தார்தம் வாயினான் - மேயதொரு

கங்கையா னோங்குசிவ கங்கையான் மானேந்து
செங்கையான் செங்கையான் செங்கையான் - மங்கையுறும் 30

அங்கத்தா னங்கத்தா னங்கத்தான் பூதியணி
சங்கத்தான் சங்கத்தான் சங்கத்தான் - தங்கத்

திருக்கார் முகத்தான் றிகையானன் மூன்று
திருக்கார் முகத்தான் றிகையான் - பெருத்தொலிக்கும்

ஓதப் பரவையா னுன்னுந் திருமுடிமேல்
ஓதப் பரவை யுடையபிரான் - சீதமுறப்

பொங்கு மணமும் புதுமலரும் போலுலகம்
எங்கு நிறைந்தருளு மெம்பெருமான் - தங்கும்வினை

தீண்டா வுருவன் றிருநாமங் கச்சிகொண்ட
பாண்டீ சுரனாம் பரஞ்சோதி - காண்டகுசீர் 35

பவனிவரத் திருவுள்ளம் கொள்ளுதல்

மாணிக்க முத்து வயிர மணிமுதலாம்
ஆணிப் பசும்பொ னழுத்தியபல் - தூணத்

திலங்குமணி மண்டபத்து ளெத்தேவும் போற்ற
நலங்கொ ளரியணையி னாப்பண் - வலங்கொள்

இருக்கோய் விலாமலெடுத் தேத்தவுமை யோடும்
திருக்கோ யிலுள்ளிருப்பச் செவ்வி - அருக்கனைநேர்

பாவேந்தர் போற்றும் பசும்பொற் கிரீடமுடி
மூவேந் தருநன் முனிவர்களும் - யாவர்களும்

மாட்சிக் கடல்போல வந்தீண்டி யெம்பெருமான்
காட்சியளித் தெங்களையுங் காவென்ன - ஆட்சியாய்ச் 40

சித்திரைத் திங்கட் டிகழ்வசந்த காலத்தில்
பத்தரெல்லாங் காணப் பவனிவர - அத்தன்

திருவுள்ளத் துள்ளச் சிறப்புடைய தோழர்
அருகணைந்து கைத்திறத்தி னாலே - கருணைபொழி

ஞானப் பிழம்பான நல்லதிரு மேனிதனக்
கான முறையே யலங்கரிப்பாந் மேன்முடியில்

அலங்காரம்

பொன்னின் மகுடம் பொலிவித் தழகொழுகும்
மின்னுதலில் வெண்ணீறு வேய்ந்திட்டுக் - கன்னமதில்

எண்டிசையுஞ் சோதி யெறிக்கு மிருமகர
குண்டலங்க ளிட்டுக் குவடனைய - திண்டோளிற் 45

கேயூரம் பூட்டிக் கிளரொளிச்செங் கண்டத்திற்
காயொளிசே ரக்குமணிக் கண்டிகைசேர்த் - தாயிரம்பொற்

சோதிக் கதிர்போற் றுலங்குந் திருமார்பில்
சீதத் தரளத் திருவடமும் - பேதமுறு

செம்பொற் சரப்பளியுஞ் சேர்சன்ன வீரமுடன்
பம்புப தக்கங்கள் பரப்பியே - வம்பறாத்

துய்யதிருக் கொன்றைத் தொடைமா லிகையணிந்து
கையின் மணிக்கங் கணம்பூண்டு - செய்யகதிர்

மன்னுதர பந்தனமு மாணப் பிணித்துறீஇப்
பன்னிறத்த பீதாம் பரமெடுத்துத் - தன்னிகரில் 50

சுந்தரம் பூத்துச் சுடர்பூத்த பொன்னரையின்
முந்தப் புனைந்து முழந்தாளில் - அந்தமிலா

ஏதிலுயிர்க் கெல்லா மிவனே யிறைவனென்னும்
நாதக் கழலணிந்து நற்கமல - பாதத்தில்

தக்கன் புரிவேள்விச் சாலையிற்றன் மேலெழுந்த
உக்கிர மெல்லா மொழிவதற்குச் - செக்கர்ப்

பருதி யிருகாலும் பற்றி யிரந்தாங்
கரவமணி நூபுரமு மார்த்துத் - தெரிசிப்போர்

அம்பிகைக்கு அலங்காரம்

கண்ணிற் கருத்திற் கடங்காத் திருக்கோலம்
மண்ணிப் பணிய மலைமகட்குப் - பெண்ணமுதம் 55

ஆன திருப் பூமகளு மாய்ந்தகலை நாமகளும்
ஞான மணக்கு நறுங்குழலில் - வானமுறு

கற்பகத்தின் பூமலைந்து காதிற் குழைதரித்து
விற்பொலியு நெற்றி மிசையழகாய் - அற்புதமாய்ச்

சுட்டி யணிந்து சுடர்ப்பட் டமுமணிந்து
வட்டமுறு பொட்டு மகிழ்ந்திட்டுச் - சிட்டர்க்

கருட்கடைக்க ணோக்கி யனுதினமு மின்பம்
சுரக்கு மிருவிழிக்குஞ் சுற்றித் - திருக்கிளரும்

மையணிந்து மார்பின் மணமா லிகைநிறைத்துக்
கையில் வயிரக் கடகமிட்டுச் - செய்யவொளிப் 60

பொன்னரி யாரம் புரளும் படிதரித்துப்
பன்னரிய மின்னும் பணிதரித்து - மன்னியசீர்க்

கோங்கரும்பைப் போலுங் குரும்பை தனைப்போலும்
பூங்கமலம் போலும் புணர்முலைமேல் - தேங்கமழும்

குங்குமம் பூசிக் குளிர்சாந் தமும்புழுகும்
தங்குங் களபத் தளறணிந்து - சிங்காரத்

தொய்யி லெழுதித் துணையொன் றுரையாமல்
ஐயந் தருநுசிப்பிற் கைந்தருமுன் - நெய்தளித்த

செம்பட் டுடுத்துத் திருகே கலையணிந்து
செம்பஞ் சழுத்துமலர்ச் சீறடியிற் - கம்பிவிதப் 65

பாடகமு மாற்றில் பரிபுரமுங் கிண்கிணியும்
கூடக் கலந்தணிந்து கோலமுற - நாடிமிகச்

சித்திரித்த தேவி செழிக்க வறம்வளர்த்த
உத்தமியோ டுந்திருநல் லோரைதனில் - வித்தகமாய்ப்

பூங்கோயி லுள்ளிருந்து புண்ணியனார் போதரலும்
பாங்கான நந்திப் பழவிடையை - ஓங்கியசீர்

நற்கோலஞ் செய்துபெரு நாத மணிபூட்டிப்
பொற்கோவை யாரம் புனைதந்து - முற்கொணர

வெள்ளை யிடப மிசையேறி மாதருளம்
கொள்ளையிட வாயில்வெளிக் கொள்ளலுமே - தெள்ளியசீர்ச் 70

உடன்வருவோர்

செந்தா மரைக்கைதனிற் றெய்வப் பிரம்பெடுத்து
நந்தீ சுரனார் நடுவணையப் - பந்தியாய்

வந்து வசுக்கடிரு வாயான் மறையோத
அந்தரத்திற் றுந்துமியைந் துங்கலிக்கப் - புந்தியுறு

சத்த விருடிகளுஞ் சார்ந்தா சிகளுரைக்கச்
சுத்தசிவ யோகியர்கள் சூழ்ந்துவரச் - சித்திரஞ்சேர்

எல்லாக் கலையுமுண ரீராறு சூரியரும்
பல்லாண் டெடுத்துப் படித்துவர - வல்லாண்மைச்

சாரணர் விச்சா தரரியக்கர் கிம்புருடர்
காரணர் கின்னரர்கள் கந்திருவர் - தாரமுறு 75

கின்னரியா ழேற்றியருட் கீர்த்தியெல்லாம் வாசிப்பத்
தன்னே ருருத்திரர்க டாம்பழிச்சப் - பன்னரிய

தும்புரு வீணைச் சுவையொழுக்க நாரதனார்
கொம்பு நரலக் குழலியம்ப - இம்பர்களும்

எண்ணிறந்த கோடி யிமையோர் களுந்துதிப்பக்
கண்ணிறைந்த சித்தர் கணஞ்சூழப் - புண்ணியநன்

மாமுனிவ ரெல்லாரு மங்கலச்சொல் வாழ்த்தெடுப்பப்
பூமாரி யெங்கும் பொழிந்திழியச் - சேமமிகும்

நாவாரத் தேவார நண்ணுதிரு வாசகமும்
பாவாணர் பண்ணிற் படித்தோத - ஓவாமல் 80

அங்கிபசும் பொன்னா லமைத்த மணியகலிற்
குங்கிலியத் தூபங் கொடுத்துவர - அங்கத்தின்

வண்ணங் கரிய மறலி மறவாமல்
எண்ணும் படைக்கலங்க ளேந்திவர - உண்மகிழ்ந்து

நண்ணு நிருதி நகையுமிழு மாபரண
வண்ணமணிப் பேழை மருங்கேந்த - ஒண்ணிறைந்த

சீரிணங்கு கோவருணன் சீதநீர் பூரித்த
பூரண கும்பம் புடையெடுப்பத் - தோரணஞ்சூழ்

வீதியெல்லாம் வாயு விளக்கி விரைகமழும்
சீதப் பனிநீர் தெளித்துவர - நீதியினால் 85

அம்புவியோர் போற்று மளகா புரிக்கரசன்
செம்பொன் மழைமாரி சிந்திவரக் - கம்பமிலா

ஈசானன் வந்தடப்ப மேற்ப வெழிற்சோமன்
கூசாமல் வெற்றிக் குடைபிடிக்கத் - தேசாரும்

சொற்கோ கிலம்போலச் சொல்லு மரம்பையர்கள்
பொற்காற் கவரி புடையிரட்ட - விற்காலும்

அட்டநா கங்க ளணியார் விளக்கெடுப்ப
எட்டுநா கங்க ளெதிர்முழங்கப் - பட்டின்

இடபம் பொறித்த வெழின்மிகுத்த வண்ணக்
கொடிக ளடியார்கைக் கொள்ள - வடிவுடைய 90

பாரிடங்க டாமசையப் பாரிடங்க டாமோடி
ஆடி யரகரவென் றார்த்திடவே - மாடமறு

கூடு வரும்பொழுது குஞ்சர மாமுகத்தன்
மூடிக வாகனத்தின் முன்செல்ல - நாடியசீர்

வள்ளிமண வாளன் மயில்வா கனமுகைக்கப்
புள்ளனத்தில் வேதன் புடைபடரத் - தெள்ளும்

திடக்கருட னேறித் திருமா லிறைவன்
இடப்புறத்திற் செல்ல விழியும் - கடத்தினையார்

அந்தமுறு நாற்கோட் டயிரா வதத்தேறி
இந்திரன் பின்னே யிசைந்துவர - அந்தரத்தில் 95

சாரிவரு மாவிற் றழைத்ததொரு செண்டேந்திக்
காரிக் கடவுள் களித்துவரப் - பேரழகின்

ஆலால சுந்தரரு மற்புதநா வுக்கரசும்
பாலாற வாயனெனும் பண்டிதனும் - சோலைத்

திருவாத வூரிற் சிகாமணியுந் தாதை
இருதாளுஞ் செற்ற விறையும் - அருகணையச்

சிங்கத்தி லேறித் திரிசூலி நீலிவர
அங்கன்னி மாரெழுவ ராதரிக்க - இங்கிதமாய்

மேனைமுத லுள்ளிட்ட விண்ணின் மகளிரெல்லா
நானா விதத்தி னடம்புரியத் - தூநீராம் 100

கங்கை முதலாங் கடவு ணதியேழும்
பொங்கி மகிழ்ந்து புடைசூழ - மங்களமாய்

வெற்றி முரசும் விளங்குங் குடமுழவும்
சுற்றியவார்ப் பேரிகையுந் துந்துமியும் - பற்றுதுடி

கல்லவட மொந்தை கறங்குபட கம்முருடு
சல்லரிகைத் தாளந் தழைகுணிச்சம் - கல்லெனுஞ்சீர்

தண்ணுமை சங்கந் தடாரி சலஞ்சலங்கள்
மண்ணிய கொக்கரையு மத்தளமும் - எண்ணிலா

அண்ட முகடு மதிர்ந்து கிடுகிடென
எண்டிசையு மண்டி யெழுந்தார்ப்ப - இண்டை 105

திருச்சின்னம்

தரிசித்தவன் வந்தான் சதுமறையை வாயால்
விரித்தசிவன் வந்தான்வில் வேடன் - புரத்தை

எரித்தவிறை வந்தா னெதிர்த்தகரி வேங்கை
உரித்தவிறை வந்தா னொருவன் - கரத்தை

நெரித்த வரன்வந்தா னிறுத்து திரிசூலம்
திரித்தகரன் வந்தான் செழுந்தீக் - கரத்தை

முரித்தபரன் வந்தான் முளரியயன் சென்னி
பிரித்தபரன் வந்தான் பெருநீர் - வரத்தான்

பரித்தபிரான் வந்தான் படர்புரிசை வேவச்
சிரித்தபிரான் வந்தான் சிவந்த - உருத்திகழும் 110

பொன்னின் சடாமகுடன் போந்தா னெனப்புகன்று
பன்னுதிருச் சின்னம் பணிமாறப் - பொன்னுலகத்

தண்டர் திருமுனிவ ரைம்பொறியும் பின்றொடரக்
கொண்ட வறிவுடையோர் கொண்டாடித் - தெண்டனிட்டுச்

தசாங்கம்

சங்கர னென்னத் தழைத்த திருநாமன்
மங்கலஞ்சேர் வீரை வளநாடன் - தங்கியமால்

ஆணவ மாசி னழுக்ககல நாமூழ்கும்
பேணருஞ்சீர்த் தண்பொருந்தப் பேராறான் - காணரிய

தெள்ளிய வன்பர் திருவுள்ளம் போல்விளங்கும்
வெள்ளிக் கயிலாச வெற்புடையான் - கள்ளமுறு 115

பேதப் புறச்சமயப் பித்தர் செவியடைப்ப
நாதத் தொனியெழுப்பு நன்முரசான் - ஆதரித்த

தொண்டர்க் கிரங்கித் தொடுத்து வரும்பகையை
மண்டி யறுக்கு மழுப்படையான் - விண்டலத்தில்

எல்லாக் கொடியு மிணையல்ல வென்றோங்கும்
வில்லாரும் வென்றி விடைக்கொடியான் - நல்லநெறீ

போற்றா திருந்து புரைநெறியை யுண்டாக்கும்
மாற்றாரை வெல்லு மதகரியான் - ஊற்றிதழ்த்தேன்

உண்டறாக் கீத மொழியாமற் பாடிமகிழ்
வண்டறாக் கொன்றை மலர்த்தாரான் - பண்டாய 120

ஏழுலகத் துள்ளார்க்கு மெவ்வரமுந் தானளித்து
வாழுங் குலசை வளநகரான் - வாழியென

எண்ணுந் தசாங்கமிவை யெம்மருங்குங் கோடிக்க
அண்ணலார் கோமறுகி லாங்கணையக் - கண்ணார்

குழாங்கள்

கருப்புச் சிலையுடைய காமன் படைகள்
அருப்பம் பெடுத்தோட வாங்கே - விருப்பமிகும்

சீரியத்தி னோசை யமுதஞ் செவிதேக்கச்
சூரிய காந்தச் சுடர்மணியும் - நீர்பிலிற்றும்

சந்திர காந்தத் தடமணியுங் கொண்டிழைத்த
மந்திரங்க டெற்றி மணிவாயில் - பந்தியுறு 125

மாளிகையிற் சூளிகையின் மாடகூ டப்பரப்பில்
சாளர வாயிற் றலங்களிலும் - மீளரிய

பத்தி முதிர்ந்து பரமனுக்காட் பட்டவர்போற்
சித்தஞ் சிவனிடத்திற் சென்றேற - முத்தம்

பவளவள் ளத்திற் பதித்ததுபோற் செவ்வாய்த்
தவள நகையுடைய தையல் - மடவார்கள்

காலிற் சிலம்பு கலகலெனக் கைவளைகள்
ஓலிட் டகல்வார்போ லுக்கிடவே - மாலளிக்கும்

கொங்கைக் குடங்குலுங்கக் கொப்புக் குழைக்காது
பொங்கு மணியூசல் போலாடச் - சிங்கவிடைக் 130

கூறை யவிழக் குழலவிழ மாதவரும்
வீறழிய மின்னுக் கொடிபோல - ஏறியெங்கும்

அன்னங் கிளிபோலு மாடு மயில்போலும்
பன்னு மெழுபருவப் பாவையரும் - துன்னியே

கண்ணிறையைக் கண்டு களித்துமலர்க் கைகூப்பி
உண்ணிறைந்த நாணமெல்லா மோட்டெடுப்ப - நண்ணி

உடையவரே யென்பா ரொருத்தியிடங் கொண்ட
சடையவரெ யென்பார் தளர்வார் - நடைபெயராச்

சித்திரம்போ னின்று திகைப்பார் நகைப்பார்கள்
அத்த னழகே யழகென்பார் - எத்தவமுன் 135

செய்திருந்தோ மென்றுசிலர் சிந்திப்பார் வந்திப்பார்
வெய்துயிர்த்து விம்மி விழுவார்கள் - ஐயனே

சற்றே திருக்கடைக்கண் சாத்தீ ரெனப்பகர்வார்
குற்றேவ லெங்களையுங் கொள்ளுமென்பார் - பற்றினிமேல்

உம்மைவிட வில்லை யொருவரெமக் கென்றுரைப்பர்
கொம்மைமுலை காட்டிக் குழைந்திடுவார் - வெம்மையுறும்

அக்கினியைக் கண்ட வரக்கா யுருகியிவர்க்
கொக்குமோ நம்மழகு மோவென்பார் - திக்குலவும்

கண்முத்தஞ் சிந்திக் கலுழ்வார் வலம்புரியின்
வெண்முத்தம் போன்மெய் வெளுத்தயர்வார் - ஒண்மொய்த்த 140

எவ்வனமு நீருடையீ ரானக்கா லெம்முடைய
எவ்வனத்தை வவ்விடுவ தென்னென்பார் - திவ்வியமாம்

காஞ்சி யுடையவரே காணாம லிவ்விடையிற்
காஞ்சியுடை கொள்ளல் கரவென்பார் - வாஞ்சைக்

கரவளையீர் நீரென்றுங் காத லுடையேம்
கரவளையைக் கொள்ளைகொள்ளுங் காதல் - உரையுமென்பார்

எற்பணியு மக்குணத்தீ ரென்றக்கா லெம்முடைய
பொற்பணியை யேன்கவர்ந்து போதிரென்பார் - முற்பணிய

ஆர்க்குவத மெங்கட் களியாம னீரருள்வ
தார்க்குவத னாம்புயத்தீ ரங்கென்பார் - பார்க்குங்கால் 145

நாண்மதியங் குள்ளவரே நாடிவரு மெம்முடைய
நாண்மதியை நீர்கவர்த னன்றென்பார் - நாணிக்குக்

கைச்சாபங் கொண்டவனைக் கண்ணா லெரித்ததுபொய்
மெய்ச்சாப மிட்டவனை வெல்லுமென்பார் - இச்சைமிகத்

தூண்டா விளக்கனைய சோதிப் பிரானழகை
வேண்டுமட்டுங் கண்ணால் விழுங்குவார் - ஆண்டவனே

எப்போ திரங்குவீ ரென்பா ரிரங்கிவிடின்
தப்பாமோ நும்பெருமை தானென்பார் - இப்படியாய்த்

தேங்கமழும் பூங்குழலார் செப்பியிரு பாலுமுறப்
பாங்கியர்க ளெல்லாம் பரிவெய்த - ஆங்கொருத்தி 150

பேதை

எண்சுவையுந் தோற்று மியற்சுவைபோற் கொண்டாடும்
பெண்சுவையாள் பேதைப் பிராயத்தாள் - கண்சுவையாய்ச்

சிற்றி லிழைத்துச் சிறுசோ றடுவாள்போற்
கற்றி லொழுக்கமெல்லாங் கைக்கொள்வாள் - மற்றறிவில்

பேதையர்போ லன்றிப் பெருந்தகைமை யுள்ளுறுத்த
கோதி லமுத குணத்தினாள் - காதரஞ்சேர்

ஆல முறாத வராப்பணம்போ லல்குலாள்
நூலனைய சிற்றிடைநோ னாதென்றோ - சாலப்

பெரியோர் தவம்பிழைக்கு மென்றோ பிறப்பில்
உரியோ ருடைவரென வோர்ந்தோ - தெரியாது 155

மந்தரவெற் பின்முயல வல்லோன்கைச் செப்பிலுறை
பந்தின் மறைந்த பயோதரத்தாள் - சந்தமலர்

வாரிமுடியா மலர்க்குழலாள் மையறரு
வேரி யுருவதர விம்பத்தாள் - நாரியர்கள்

கொண்டாட லன்றிக் கொழுநருளங் கொள்ளாத
ஒண்டொடியாள் சூளு முரைசெய்யாள் - கெண்டையங்கண்

நோக்க மிருநோக்க நோக்காதா ளாடவரை
ஏக்கழுத்தஞ் செய்யாத வின்னுரையாள் - வாக்கிளைய

நாப்பயிலும் பூப்புலவர் நற்கவிபோற் சொற்பொருள்கள்
ஏற்ப முடியாத வேந்திழையாள் - வாய்ப்பவே 160

கத்தூரி சாத்திக் கமழ்பட் டெடுத்துடுத்து
முத்தணிந்து முல்லை முகையவிழும் - கொத்தணிந்து

பொன்னரியா மாலைகைக் கொண்டுபுறம் போதரலும்
அன்னமே யார்க்கணிவா யென்றொருத்தி - பன்னுதலும்

எல்லா வுயிர்க்கு முயிரா யெமையாள
வல்லான் குலசை வளர்கடவுள் - நல்லாய்கேள்

பாலவிழிக் கச்சிகொண்ட பாண்டீசர்க் கென்றாளவ்
வேலையிலே யெம்மான் விடைதோன்றக் - கோலத்

தெழினோக்கிக் கைதொழுதா ளிம்முறைமை நோக்காள்
வழிநோக்கி னாண்மதன னூற்குப் - பழியார்க்கும் 165

பூங்குழலா ளாங்ககலப் பொற்கொடிபோற் பொற்பினாள்
தேங்கொள் கமலத் திருவன்னாள் - பாங்கர்

பெதும்பை

பெதும்பைப் பிராயம் பிரியாதாள் சொல்லும்
அதும்புங் கடலமுத மன்னாள் - விதம்பெறவே

சித்திரித்த தெய்வ வுருவா ளிளைஞர்பாற்
பத்திசெய்யுஞ் சாயற் பசுங்கிள்ளை - நத்தனைய

கந்தரத்தாண் மஞ்ஞைக் கவின்சேருஞ் சாயலாள்
சிந்துரந் தீட்டுந் திருநுதலாள் - கொந்தளப்பொன்

ஓலை யணிகாதி லொண்கொப்புச் செஞ்சுடர்கள்
போல வணிந்த பொலங்கலத்தாள் - நீல 170

விடமு மமிர்தும் விரவ விரவிக்
கடலுவர்த்துக் காமர்க் கிலாத - உடலிதுவென்

றாடவர்க ளுன்னநிறை யஞ்சனஞ்சேர் வேல்விழியாள்
ஏடவிழும் பூங்கொத் தெழிற்சுட்டு - ஆடகத்தால்

செய்ததலைக் கோலஞ் சிறந்தகுழற் காரிருளைப்
பைய வகற்றப் பதிவிருந்த - மையறுசீர்த்

திங்க ளெனுமுகத்தாள் செந்துவரு முத்தமும்
தங்கிய வாம்பற் றனிவாயாள் - சங்கனைய

கண்டத்திற் சாந்தணிந்து கைக்கு வளைபூட்டித்
துண்டத்தின் மூக்குத்தி தோற்றுவித்துக் - கெண்டையங்கட் 175

கஞ்சனமுஞ் சாத்தி யணிகிளரும் பூங்கச்சைக்
கஞ்சமுகைக் கொங்கைக் கலங்கரித்து - நெஞ்சகத்தில்

உண்மை மறையிரண்டி லொன்றுதுணி வொண்ணாத
வண்மையிடை பட்டான் மறைப்பித்துக் - கண்ணெகிழாக்

கிண்கிணி தாட்கணிந்து கேயூரந் தோட்பூட்டிப்
பண்கிளரு மேகலையும் பாரித்து - விண்கவின்செய்

தாரகைசூழ் மேருத் துணைபோற்றண் முத்துவடம்
வாரார் முலைமேன் மகிழ்ந்தணிந்து - நேராய

தோழியர்க டற்சூழச் சோலைமலி பூங்காவிற்
பாலனைய சொல்லாள்பந் தாடுதலும் - மாலுக்கும் 180

மாலளிப்பான் வந்தான் மலரயற்கு மேலான
ஆலமுண்ட பெம்மா னணைந்தானென் - றோலமிடும்

சின்னத்தி னோசை செவிவார்ப்பச் சென்றோடிப்
பொன்னொத்த கொன்றையனைப் போற்றினாள் - மின்னொத்த

இட்டிடையிற் பூந்துகிலு மேரார் மணிவண்டும்
விட்டறிவு நாண்டோற்று மெய்விதிர்த்தாள் - வட்டமுலை

மங்கை

மங்கைப் பிராய மருவியதோர் மானனையாள்
பங்கயமும் பாதிச் சிறுமதியும் - துங்கமலி

நற்காம ரூபி கவிர்முல்லை நாளாம்பல்
ஒக்க வமைத்தமதி யொன்றென்ன - எக்காலும் 185

செந்தமிழோர் கட்டுரைக்குந் தெய்வத் திருமுகத்தாள்
கந்துகத்தைச் செற்ற கவின்முலையாள் - சந்தமலர்ச்

சூற்கொண்ட கொண்மூச் சுரிகுழலாள் சொல்லினால்
பாற்சுவையுங் கீழ்ப்படுத்தும் பைந்தொடியாள் - காற்றுணைக்குச்

செம்பஞ் செழுதிச் சிலம்பு கலந்தொலிப்பக்
கொம்பன்ன நுண்ணிடையிற் கோசிகத்தைப் - பம்ப

அலங்கரித்துக் கச்சிறுக்கி யாரம் புனைந்து
புலம்புமணி மேகலையும் பூட்டி - இலங்குமணிச்

சூடகமுங் கங்கணமுந் தோள்வளையும் பூட்டியபின்
பாடகமுந் தாண்மேற் பரிபுரமும் - ஆடகத்தால் 190

செய்தபணி யெல்லாஞ் சிறக்க வணிந்துதரத்
தையலர்க ளோடுந் தனியிருந்து - பைய

மிழற்றுகிள்ளை யோடு வியந்துரைக்கு மேல்வை
அழற்படைய மூவிலைவே லண்ணல் - தொழப்பவனி

வந்தான்வந் தானென்று வண்சின்னம் வாழ்த்தெடுப்ப
அந்தர துந்துமிக ளார்ப்பொலிப்பச் - சந்ததமும்

பாற்கடலிற் றோன்றூம் பருதியு மப்பருதி
மேற்பிறங்கு வெண்மதியும் வெல்லவே - நாற்பதமும்

வேத வடிவான வெள்விடைமேல் வெண்குடைக்கீழ்ச்
சோதிச் சடாமவுலி தோன்றுதலும் - நாதனே 195

என்றென் றுருகி யிடைநுடங்க மெய்வியர்ப்பத்
தன்றுணையில் லாத தனிக்கொடிபோல் - நின்று

துவண்டு துவண்டு சுருண்டு சுருண்டு
கவன்ற மனத்தாற் கழறி - அவன்றாரைக்

கொள்ளைகொண்டாள் போற்சுணங்கு பூத்துக் குலக்கொழுந்து
பள்ளமடை போலுருகிப் பாங்ககன்றாள் - ஒள்ளியாள்

மடந்தை

மற்றொருத்தி பொற்பார் மடந்தைப் பிராயத்தாள்
கற்றவர்க்குங் காம நூல் கற்பிப்பாள் - வெற்றிமதன்

சேனைக்கு வாய்த்த திருவீர லட்சுமியாள்
மானொத்த வஞ்ச மதர்விழியாம் - பானற்பூப் 200

பூங்குமிழ் தொண்டை புணர்முத்தம் பொன்னூசல்
வாங்குவிற் சாணை வளர்மதியம் - ஓங்கிய

கோணமும் பாலிகையுங் கோதின் மணிநகையும்
பூணணியுங் காதும் புரூரமும் - மாணமைந்த

கஞ்சனை போன்ற கபோலத் துணையிரண்டும்
வஞ்சமில்லா வானனமு மாய்வயங்க - மஞ்சனைய

கூந்தற்கு வெண்மலர்கள் கொண்டணிந்த தோற்றமறல்
பாய்ந்ததிரண் முத்தப் பரப்பொப்பச் - சாந்தணிந்து

குங்குமந் தோய்ந்த குவிமுலைகள் கோங்ககற்றிப்
பங்கயத்தின் செவ்வியாய்ப் பாரிப்ப - மங்கலநாண் 205

தோய்ந்தகளம் பூங்கமுகின் றோற்றந் தரவிணைத்தோள்
வாய்ந்த மணிக்கிளையின் வண்மைத்தாப் - பாந்தட்

கடிதடத்திற் செம்பட் டுடுத்தரைநாண் கட்டி
அடியிணைகட் கம்பொன் குயின்ற - வடிவுடைய

பாதசரந் தண்டை சதங்கை பயில்வித்துச்
சீதமுத்து மாலை தெரிந்தணிந்து - மாதரார்

கைதொட் டமைத்த களபவண்டன் மட்டித்து
மையிட்டு வாட்க ணலங்கரித்துப் - பொய்யிட்ட

சிற்றிடையார் சூழத் திருந்தமளி மேலிருந்து
வெற்றியா ழங்கே விரித்தேந்தி - மற்றுமோர் 210

வீணையிசை கூட்டி விமலை யொருபாகன்
தாணுவின்மேற் செந்தமிழாற் சந்தவிசை - ஏணவிழப்

பாடிய வெல்லை பரமன் சடாதாரி
நாடரிய மால்விடைமே னண்ணுதலும் - மாடகயாழ்

கைவிட்டு வாயிற் கடைகழிந்து கண்ணுதலை
நெய்விட்ட கூந்தலா ணேர்தொழுதாள் - மெய்விட்டுக்

கண்முத்துந் தார்முத்துஞ் சிந்தக் கலைகலைய
எண்முத்தஞ் சேர்ந்த விதழ்துடிப்ப - வண்ணப்பூ

மேனி விதிர்ப்பமொழி விம்மப் பரவசமாய்க்
காணிவரும் பூங்கொன்றை கைக்கொண்டாள் - மானொருத்தி 215

அரிவை

ஆயிழையார் போற்று மரிவைப் பிராயத்தாள்
பாயொளிசேர் பங்கயமு நீலமும் - வாய்விரியும்

ஆம்பலுஞ் செங்கிடையுஞ் சைவலமு முண்மையால்
தேம்புணரும் பூம்பழனச் செவ்வியாள் - காம்பிணையும்

வெற்பும் விடவரவும் நீர்ச்சுனையு முண்மையாற்
பொற்பார் குறிஞ்சித் திணைபோன்றாள் - கற்பரும்பும்

பூங்குமிழுங் கொவ்வையு முண்மையால் போதலர்ந்து
தேங்கமழு முல்லைத் திறம்போன்றாள் - வான்றிறல்சேர்

பஞ்சா னனமும் பகைத்துடியுங் காளையர்கள்
நெஞ்சம் பதைத்தழிய நேர்நின்று - வஞ்சகமாய்ப் 220

பற்பகல்கொள் சூறையு முண்மையாற் பாலையெனும்
சொற்பொலியு நற்றிணையாய்த் தோன்றினாள் - விற்பொலியும்

வித்துருமஞ் சங்க மிளிர்தவள வெண்முத்தம்
ஒத்த கயலினமு முண்மையால் - நத்தூரும்

நெய்தலே போல்வா ணெறித்த கருங்குழலாள்
கொய்தளிர்செம் மேனிப்பூங் கொம்பனையாள் - வையகத்தை

அல்குலால் வென்றா ளரைநாண் கலைதிருத்தித்
தொய்யின்மேற் பூந்தொத்துச் சூழ்தந்து - தையலாள்

சந்தனத்தின் மட்டித்துச் சாந்தங் குழைத்தணிந்து
கந்த மலரலங்கல் கைபுனைந்து - செந்தழலின் 225

மின்னுமணி யாபரண வெய்யிலிருள் கால்சீப்ப
அன்ன மனையா ரலங்கரிப்பப் - பொன்னனையார்

கூட விருந்து குரல்விளரி கொண்டிசைக்கும்
மாடகயாழ் வாங்கியிசை வாசிப்பத் - தோடவிழும்

ஆர்க்குவதம் பூண்ட வழக னணிவிடைமேற்
கார்க்குவளைக் கண்ணா ளொடுங்கலந்து - பார்க்கெல்லாம்

போகமுத்தி தந்து புரக்க வெழுந்தருளும்
வாகனத்திற் பூண்ட மணியேறுண் - டாகம்

குழைந்துமறு கூடேகிக் கோலமணித் தேர்முன்
விழுந்தெழுந்து விம்மிதமாய் நின்று - தொழுந்தகையாள் 230

அன்னைமீர்க் கெல்லாம் புராரி யெந்தளவும்
கன்னற் சிலைக்களித்த கையாளன் - என்ன

மிழற்றுமலர்க் கூந்தல் விரிக்கு முடிக்கும்
இழக்குங் கலை திருத்து மேங்கும் - பழஞ்சுவையும்

கந்தமும் பூவு மெனக்கலந்த காட்சியாள்
சிந்தை யவிழ்ந்து திகைத்தொழிந்தாள் - இந்த

தெரிவை

அரிவைப் பதம்பிரியா வந்நலார் போற்றும்
தெரிவைப் பிராயத்துச் சேயிழையாள் - வரிவண்டார்

காரிருளி னாலே கடக்களிறுங் கட்டுரையாற்
சார வரும்பரியும் தாபித்தே - ஏர்மருவும் 235

முத்த நகையின் முகமதியின் மான்விழியின்
வைத்தகணை யாயம் மருவியே - வித்தகமாம்

மேனிதனு வத்தாணி மெல்லியவல் குற்றடமாய்
வானிவருங் கேதனமுன் கைவடிவாய் - ஞான

விழியழலான் மாயும் வியன்மதன னாகம்
அழியா திருத்து மழகாள் - எழிலாரும்

பாதலத்தி னின்றெழுந்த பையரா வந்தரத்தின்
மீதேறி மேரு முடிமறைத்த - நீதிதர

உந்தி யெழுந்த வுரோமவல்லி யோடொன்றிப்
பந்தித்த கச்சின் பணைமுலையாள் - வந்திக்கும் 240

இந்து வமுதந் துளித்தாங் கெழின்முகத்தின்
முந்தவொளிர் கோணத்தோர் முத்தினாள் - சந்ததமும்

அவ்வமுத முண்ண வரும்புலவர் போலயலே
செவ்விதரு மாரத் திரள்வடத்தாள் - கொவ்வை

இதழமுத மாறாத வேரா னனத்தாற்
சிதைவு படமதியைச் செய்வாள் - விதவிதமாய்ப்

பட்டெடுத்துச் சூழ்ந்து பரும வணிபுனைந்து
கட்டழகின் மேலழகாய்க் கண்களிப்ப - வட்டமிடும்

பூந்தார் அணிந்து புனைசந்த மட்டித்துச்
சாந்தந் திமிர்ந்து தவத்தோர்க்கும் - வாய்ந்தவுளம் 245

பற்றிப் பிரியாத பண்பினாள் செய்குன்றின்
முற்றிழையா ரோடு முறுவல்செய்து - கற்றையந்

தோகை மயிலாடல் கண்டுதுணர்ப் பூக்கொய்து
பாகுண்டு வல்லுப் பரப்பியதில் - மோகமாய்

ஆடும் பொழுதி லரனரண் மூன்றெரித்துக்
கூடலரைச் செற்றபிரான் கொல்லேற்றான் - ஏடவிழ்பூங்

கொன்றை யணிந்த குழகன் வரும்பவனி
இன்றுணையா மாதரார் வந்திசைப்பத் - தன்றொழிலாம்

கோட்டி யொழிந்து விரைந்து குலமடந்தை
தாட்டுணைப் பூங்கமலந் தாழ்ந்திறைஞ்சி - நாட்டார்கள் 250

காணவே வண்டுங் கலையு மடியுறையாய்
நாணாம லிட்டு நலந்தோற்றாள் - மாணமைந்த

பேரிளம்பெண்

முற்றிய தெய்வக் கனிபோன் முதுக்குறைந்த
பெற்றிமைசேர் பேரிளம் பெண்மையாள் - கற்றுத்

திருந்தினர்க்கே நல்லமுதாய்ச் சேர்வாளல் லார்க்கு
வருந்த வணங்காய் வதிவாள் - கருந்தடங்கண்

அம்பரத்தை யுண்பா னயலிறங்குங் கார்க்குழுப்போற்
பம்பிவளர் கேசப் பரப்பினாள் - வம்புலாம்

கூந்த லயலணிந்த வாரவடங் கொண்மூவும்
வாய்ந்த வதன்றுளியு மாய்வயங்கச் - சாந்தத் 255

திலகம் பருதிபொரத் திங்களிடை வான்மீன்
உலவுவது போன்முத் தொளிரச் - சலசத்தில்

நித்திலமே யன்றியிரு நீல நிரைப்பவளம்
வைத்தன போலு மலர்முகத்தாள் - சித்தசன்போர்

வென்றூதும் வெற்றி வியன்சங்கம் போற்களத்தாள்
மன்றற் களபம் வனைந்ததன்மேல் - ஒன்றவணி

கச்சறுத்து விம்மிக் கதிர்த்திறுமாந் தாடவரை
அச்சுறுத்துங் கொங்கை யமுதகடம் - வெச்செனவும்

தண்ணெனவுங் காட்டித் தனக்குவமை யில்லாத
பெண்ணரசுக் காமகுடம் போற்பிறங்க - வண்ணவளை 260

முன்கைக் கணிந்து முதாரிகட கம்பூண்டு
தங்கத்திற் றண்டை சதங்கையிட்டுப் - பொங்கொளிசேர்

பன்மணியாற் செய்த பரும மரைக்கசைத்து
வன்னப்பூம் பட்டுடுத்து மையெழுதி - மின்னொளிசேர்

பொற்கலன்க ளெல்லா மவயவந்தோ றும்புனைந்து
பற்பலரா மங்கையர்கள் பாங்கிருப்பப் - பொற்கவரி

கொந்தளத்தின் மீதேற வீசல் குணகடலின்
வந்துதித்த வெண்டரங்கம் போல்வயங்கச் - சந்தனப்பூங்

காவி னடுவண் கதிர்ப்படிகங் கொண்டிழைத்த
ஓவிய மண்டபத்தி னொண்ணுதலார் - மேவிவைத்த 265

சிங்கஞ் சுமந்த திருந்தமளி மேலேறிப்
பங்கயப்பூம் பாவையன்னாள் பண்ணமைந்த - மங்களமாம்

மூவரொருவர் பலரொருவர் முன்னோர்கள்
யாவர் செழுந்தமிழு மேத்தெடுத்துத் - தேவன்

சிவனிறைவள் கச்சிகொண்ட பாண்டீசன் சேர்ந்தார்
பவமகலச் செய்யும் பரமன் - தவம்வளர்த்த

மங்கையிடங் கொண்ட வரதன் வரதனென்றென்
றங்கங் குளிர்ந்திருக்கு மவ்வேலை - சங்கமொடு

சின்னங்கள் பேரி தடாரி திசைதிசையே
மன்னுமொலி கேட்டு மகிழ்வெய்தி - அன்னைமீர் 270

யாமே தவஞ்செய்தே மென்றென் றுரைத்துவந்து
கோமறுகி லீசன் குலவிடைமேற் - சேமமுடன்

வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டவன்றாள்
போற்றி யிறையே பொலந்தொடியார் - மாற்றமெல்லாம்

செஞ்செவியிற் சேராமற் சேமித்தாய் மும்மைவிழிக்
கஞ்சத்தால் வவ்வுங் கருத்தெவன்கொல் - நஞ்சணிந்த

கண்டனே யென்று கசிந்தா ளகங்குழைந்தாள்
தொண்டை யிதழுந் துடிதுடிப்பக் - கொண்ட

புளகத்தார் வேர்வை பொறிப்ப வவிழ்ந்த
அளகத்தாண் மால்கொண் டகன்றாள் - உளமுற்று 275

வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோளென்னும் - பாட்டின்

பொருளுக் கிலக்கியமே போல்வார்க ளீசன்
அருள்போலு மாறா வழகார் - புரளும்

ஒருகுடங்கைக் கண்ணா ரொளிவளரு மார்பில்
இருகுடங்க ளேந்து மிடையார் - திருமகட்கும்

மாலாக்குங் கோமளஞ்சேர் மங்கைநல்லா ருள்ளமெல்லாம்
கோலா கலமாகக் கொள்ளைகொண்டு - வேலா

வலயஞ்சூழ் வீரை வளநாட்டிற் செல்வக்
குலசா புரியுறையுங் கோமான் - அலகில் 280

கருவிடைமேற் செல்லாமற் காட்சியளித் தியார்க்கும்
ஒருவிடைமேற் போந்தா னுலா. 281

குலசை உலா முற்றிற்று
சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்

எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
திருமால் வெண்பா - Unicode - PDF

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF
மதுரை மாலை - Unicode - PDF
அருணாசல அட்சரமாலை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF
சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF
சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF
சித்தாந்த சிகாமணி - Unicode - PDF
உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF
உபதேச வெண்பா - Unicode - PDF
அதிசய மாலை - Unicode - PDF
நமச்சிவாய மாலை - Unicode - PDF
நிட்டை விளக்கம் - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF
நல்லை வெண்பா - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF
முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF
கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
கடம்பர்கோயில் உலா - Unicode - PDF
திரு ஆனைக்கா உலா - Unicode - PDF
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF
திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF
திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
திருவிடைமருதூர் உலா - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
மேகவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF
சீகாழிக் கோவை - Unicode - PDF
பாண்டிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF
கதிரேச சதகம் - Unicode - PDF
கோகுல சதகம் - Unicode - PDF
வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF
அருணாசல சதகம் - Unicode - PDF
குருநாத சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode


சிறையில் விரிந்த மடல்கள்

ஆசிரியர்: வைகோ
வகைப்பாடு : அரசியல்
இருப்பு உள்ளது
விலை: ரூ. 500.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00
அஞ்சல் செலவு: ரூ. 70.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

Buy

நேரடியாக வாங்க : +91-94440-86888