பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

காளமேகப் புலவர்

இயற்றிய

திரு ஆனைக்கா உலா

     திரு ஆனைக்கா உலா என்பது, சோழநாட்டில் காவேரிநதியின் கரையில் அமைந்த ஆனைக்கா என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள வெண்ணாவலீசர் மீது காளமேகப் புலவர் பாடியது. இதிலுள்ள கண்ணிகள் 461.

காப்பு

விநாயகர் வணக்கம்

நேரிசை வெண்பா

ஏரானைக் காவிலுறை என்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரசம் பத்துவரும்
சத்திவரும் சித்திவரும் தான்.

நூல்

கலி வெண்பா

தலச்சிறப்பு

சீர்பெற்ற தற்பரமாய்ச் சிற்பரமாய்ச் சிற்பரத்து
வேர்பெற்ற நாதமாய் விந்துவாய்ப் - பேர்பெற்ற 1

சோதியாய் மும்மைச் சொரூபமாய் ஐம்பூதத்(து)
ஆதியாய் எவ்வுயிரும் ஆயினோன் - வேதத்து 2

மட்டுப் படாது வளர்ந்தண்ட வான்கனிந்த(து)
எட்டுப் பணைகொண் டெழுந்ததரு - கிட்டுபொருள் 3

ஈவானும் ஈகென்(று) இரப்பானும் ஈஎனவே
ஆவானும் தானாகும் ஆடலான் - ஓவாது 4

தானே சகமாகித் தானே படைத்தளித்துத்
தானே அழித்தருளுந் தம்பிரான் - ஞான 5

விசித வடிவாய் விளங்குஞ் சிகர
ரசித கிரியில் இருந்தோன் - வசனநெறி 6

சம்புதலத் தோன்பால் தடங்கண்டு சங்கரஎன்(று)
அம்புயன் மாதவஞ்செய் தர்ச்சிக்க - நம்பும் 7

பெருஞான பூமிப் பெயர்தலத்துக் கெய்த
அருஞான தீக்கை அளித்தோன் - இருடி 8


மாறுபட்டு சிந்தியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

நவீனன் டைரி
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

அன்பும் அறமும்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

இளைப்பது சுலபம்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

உலக இலக்கியப் பேருரைகள்
இருப்பு உள்ளது
ரூ.310.00
Buy

அறியப்படாத தமிழகம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

நேற்றின் நினைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

பொய்த்தேவு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

அபிதா
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

காந்தியோடு பேசுவேன்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

The Monk Who Sold His Ferrari
Stock Available
ரூ.205.00
Buy

கோடையில் ஒரு மழை
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

ஆயிரம் வண்ணங்கள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

நீர்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஏழாம் உலகம்
இருப்பு உள்ளது
ரூ.335.00
Buy

கிழிபடும் காவி அரசியல்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்!
இருப்பு இல்லை
ரூ.140.00
Buy

தமிழ் சினிமா 100: சில குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy
சம்புமுனி வழிபட்ட வரலாறு

ஒருவனடி சேர்வான் பொன் னோங்கல் சூழ் சம்பு
தருவின் அடியிற் றவமே - புரியக் 9

கரத்தில் தவளக் கனியொன்று வீழ
மரத்திற் கனிகருது மற்றக் - கரிக்கொத்த 10

மேனி யுளதிந்த வெண்கனிதெய் வீகத்தால்
ஆன(து) அரற்கமுதம் ஆம்என்னத் - தான்எழுந்து 11

கைக்கொண் டடக்கும் கனியைக் கயிலையிற்போய்
நக்கன் தனக்களிப்ப நன்றென்று - முக்கணான் 12

வாங்கி அருந்திவிதை மாமுனிக்கு நல்கமுனி
தாங்கி அருந்தத் தரிக்குமோ - பூங்கொன்றைத் 13

தாரான் பவளஇதட் டங்கியதன் றோஉடலில்
வேராய் முடியில் வெளிதுரந்து - தேராளி 14

மேக பதங்கரப்ப வெண்ணாவ லாய்எழுந்து
சாகை யொடுதழைப்பத் தானோங்கி - ஓகையுடன் 15

நின்று பரவ நிருத்தன் கருத்துடனே
இன்றுமுதற் சம்புமுனி இப்படிப்போய் - மன்ற 16

நளினமுனி பூசித்த ஞானபூ மிக்கண்
தெளிபிரம புட்கரணி தீரத்(து) - ஒளிர 17

இருப்பாய் உன் நீழலிலே யாமுறைவோம் என்ன
விருப்பால் அவன்வந்து விட்டான் - உருத்திரனார் 18

கற்பித்த அந்நெறியே கஞ்ச முனித்தடப்பால்
பொற்புப் புறமுறையப் புக்கதற்பின் - வெற்பிடித்து 19

அம்மை பூசித்த வரலாறு

நவ்வி அகிலாண்ட நாயகிஞா னக்கேள்வி
எவ்வழிநான் எய்தும் இயல்பென்னச்-செவ்வியாய் 20

நீயும்போய் ஞான நிலத்திலெமை அர்ச்சிஎனத்
தாயும்போய் அந்தத் தலத்தெய்தித் - தூய 21

அயன்தனை நோக்கிநாம் அர்ச்சிக்க வேதான்
இயன்றசிவ லிங்கம்ஏ தென்னப் - பயின்றரனார் 22

அங்கம் பிரியா அகிலாண்ட நாயகியே
எங்கும் சிவரூப மேஅன்றோ - செங்கையினால் 23

ஆத்திமுடி யோனைநீ ஆமென்ற பூதலத்தில்
மூர்த்திகரித் தேத்த முறைமைஎனப் - பூத்தடத்துத் 24

தண்துறையில் நின்றுமையாள் தன்கோவைக் கங்கையுடன்
கண்டுபிடிப் பாள்போற் கரபற்பங் - கொண்டு 25

திரட்டத் திரண்ட செழுநீர்த் திரளால்
அருட்டிக்க வெண்ணாவல் ஆனோன் - திருக்கோயில் 26

சேர்ந்தருளி வீற்றிருக்குஞ் சிற்சம்பு நாதரெனக்
கூர்ந்த திருநாமங் கொண்டபிரான் - சார்ந்தஉமை 27

பேருவகை தோன்றப் பிரியா தனேகநாள்
சீருள மாபூசை செய்ததற்பின் - ஊரின் 28

திருநாமந் தானும்அமு தீச்சுரமே யாகப்
பெருஞானம் போதித்த பெம்மான் - நிருதி 29

இந்திரன் பூசித்த வரலாறு

திசைதழைக்கப் பின்னிரக்கஞ் செய்யும் பெருமான்
இசைதவத்தால் எவ்விடையீண் டென்று - தசையுடலம் 30

வீங்கவரம் பெற்ற விருத்தா சுரனுயிரை
வாங்கிய வீரகத்தால் வானவர்கோன் - ஏங்கித்தன் 31

நாமத் தடங்கண்டு நாளுந் தொழப்பழைய
வாமத் துறக்கம் வழங்கினோன் - காமச் 32

அக்கினி, சூரியன், சந்திரன், அகத்தியன் பூசித்தது

சமிர மதனால் தணலிதவஞ் செய்ய
நிமிரும் ஒளிகாட்டி நின்றோன் - கமலபதி 33

புட்கரணி கண்டுதவம் பூணப் பொலஞ்சோதி
மட்கலில் லாத வரந்தந்தோன் - உட்கும் 34

மதிதனது பொய்கை மருங்குதவஞ் செய்ய
அதிகவினை தீர்த்த அம்மான் - உததி 35

பருகி உமிழ்முனிவன் பாரொக்க நிற்க
வருபொழுது பூசிக்க வாழ்ந்தோன் - பிரமகிரி 36

நின்று குறுமுனிகை நீங்கிநெடுங் காவேரி
அன்று தொடங்கி அலைக்கரத்தால் - மன்றல் 37

மலர்சிதறி வந்துதொழ வானதிமுன் னான
பலநதியும் வந்து பணிய - நிலைநின்று 38

காட்சிக் கதியருளிக் கண்டுகலந் தாடினர்தம்
நீட்சித் துயர்அறுதல் நிச்சயமே - ஆட்சிமலை 39

கோச்செங்கட் சோழர் வரலாறு

கண்ணுதற்கு விண்ணோர்தம் காவின் மலர்பறிக்க
நண்ணுதற்குப் போனகண நாதர்களில் - எண்ணும் 40

மனப்புட்ப வந்தனுடன் மாலியவான் தானும்
இனப்புட்பம் ஆறாடி ஏந்திச் - சினத்தினால் 41

தம்மைத்தாம் சாபித்துச் சார்பான சம்புதலத்(து)
எம்மைப்பூ சித்துய்ம்மின் என்றுவிட - அம்முறையே 42

வெள்வரையிற் புட்பவந்தன் வெள்ளானை யாய்ப்பிறந்து
வள்ளலைவெண் ணாவல்வாய் வந்திறைஞ்சித் - துள்ளிய 43

மாலிய வானுமுரு மாறிச் சிலந்தியாய்க்
கோலியவெண் ணாவற் குடிகொண்டு - நூலிழைத்து 44

நாதன் சடைமுடிமேல் நாவற் சருகுதிரா
ஏதங் கெடப்பந்தர் இட்டுவரப் - போதகங்கண்(டு) 45

அங்கையால் தள்ளிநீ ராட்டியருச் சித்தேகப்
பொங்கர்வா ழுஞ்சிலந்தி போதமுனிந் - தங்கொளித்து 46

யானிட்ட பந்தர் இதுவோ தவிர்ப்பதென
மாநெட்டை வேழம் வருமளவும் - தானெட்டி 47

வேய்த்திருந்த நஞ்சமென மீன்மிடற்றில் தூண்டிலெனப்
பூத்திருந்து பூட்கை புகப்பொறா - தாய்த்திறலின் 48

மிக்க களிறலறி வீழச் சிலந்தியும்அங்(கு)
ஒக்க இறக்க உமைபாகர் - அக்கணமே 49

வாரு மெனஎழுப்பி வாரணத்துக் கப்பொழுது
சேருஞ் சிவலோகச் சீரருளி - ஊரின் பேர் 50

ஆனைக்கா ஆக்கி அருளச் சிலந்திஅடி
யேனைக்கா பின்புநான் இப்புவிக்குக் - கோனாகி 51

நின்னடிமை செய்யஅருள் நீஎன்ன மாலியவான்
சொன்னபடித் தில்லைவாய்த் தொல்லைமுடிச் - சென்னி 52

இனிய சுபதேவன் எண்டொடித்தோள் தோய்ந்த
வனிதையரிற் புட்பவதி வாழத் - தனிமகவாய்ப் 53

போதுவித்துச் செங்கண்ணார் என்னும்பேர் பூண்பித்துச்
சோதி மணிமகுடஞ் சூட்டுவித்துக் - காதலாய்த் 54

தன்னூலிற் பந்தரிட்ட தானத்தில் தாணுவுக்குப்
பொன்னினாற் கோயில் புதிதமைப்பித்(து)- இன்னமொரு 55

தந்திபுகா வாயிலுந் தக்கநவ தீர்த்தமுங்கண்(டு)
அந்தண் மடவார் அனவரதம் - சிந்தித்துச் 56

சேவிக்கு மெல்லைத் திருச்சா லகநலமும்
மாவித் தகநிருத்த மண்டபமும் - நாவல் 57

தருமுனிக்குச் சுற்றெல்லாந் தங்கு கடவுட்
டிருவிருப்புந் தேருந் தெருவும் - அரணும் 58

திருக்கோ புரநிரையுஞ் செய்யக்கண் டுய்ய
அருட்கோலி முத்தி அளித்தோன் - விருப்பஞ் 59

சுரந்த சிலந்திமுடி சூட்டும் பெருமான்
பெருந்திருவெண் ணாவற் பெருமான் - கருந்துளவோன் 60

இராமன் பூசித்த வரலாறு

சேதுவிற்றான் செய்த சிவபூ சையில்அகன்ற
பாதகத்தில் ஒன்றுகால் பாறாது - போதுதலும் 61

தன்நாமத் தாற்ப்ரதிட்டை சன்னிதியிற் செய்திறைஞ்ச
அன்னான் வினைதீர்த் தருளினோன் - இந்நகரின் 62

வேறு சிறப்புக்கள்

மண்ணுஞ் சிவலிங்கம் என்றெண்ணி வாராமற்
பண்ணுந்து சொல்மூவர் பாங்காகக் - கண்ணுற்று 63

நின்றேத்தும் பாக்கொண்டோன் நீடென்பு பொன்மலராய்
நன்றேத்தும் ஞான நகரினோன் - அன்றுரகன் 64

சோழன் ஆரஞ்சாத்திய வரலாறு

மங்கைக் களித்த மணியாரம் காவைஉமை
பங்கற் கழகன் பரிக்கவென - நங்கை 65

பொருந்தா திருப்பதுவும் பொன்னிநீர் ஆழத்
திருந்தார் தொழுங்கழற்காற் சென்னி - பரஞ்சுடரே 66

கொண்டருளு நீஎனப்பொற் கும்ப நீ ரோடுவரக்
கண்டருளித் தாமணிந்த காரணத்தால் - எண் திசையோர் 67

ஆரம்பூண் டாரென் றழைக்கும்பேர் பூண்டார்வில்
நாரம்பூண் டார்பன் னகம்பூண்டார் - பாரிற் 68

வேறு சிறப்புக்கள்

பணிவார் பிறப்பறுக்கும் பாதத்தான் வெண்ணீ(று)
அணிவான் அனைத்துலகை ஆள்வான் - இணையில்லான் 69

தேவர் குலக்கொழுந்தா திப்பெருஞ் செல்வனியல்
நாவலன் தூதன் நடப்பெருமான் - சேவுடையான் 70

சோமநா தப்பெருமான் சோதிமறை தேடரிய
காமன் ஆகங்கடிந்த கண்ணுதலான் - சேமமாம் 71

திக்காடை யான்சந்த்ர சேகரன் தில்லையுளா
டிக்காட் டியபின் னிணையழகன் - அக்கு 72

மணியி லழகன் வசந்த னழகன்
அணியும் பணியி லழகன் - துணரான் 73

சரனழகுக் காகந் தழலாகப் பார்த்த
அரனழகுக் காருமொவ் வாதான் - பரமன் 74

சிறக்குந் திருச்சா லகத்தொளிர்தே வேசன்
கறைக்கண்டன் என்னானைக் கன்று - நிறக்கின்ற 75

மாபெருவெண் ணாவல் வடநாவ லிற்கிளர்ந்த
கோபுர மேருநெடுங் குன்றேய்ப்பத் - தீபவொளி 76

சீரா லயமும் திருநீறிட் டான்மதிலும்
ஊரான துங்கயிலை ஒப்பாகப் - பேராது 77

தன்னிருபாற் பொன்கொழித்துத் தாவுங் கனதரங்கப்
பொன்னிந்தி சம்புநதி போலோங்கத் - தன்னகர்சூழ் 78

இப்பதியும் இந்நகரும் இந்த்ரபத முன்னான
அப்பதியும் அச்சுரரும் ஆமென்ன - மெய்ப்புலவோர் 79

மேதகு வித்யா தரரின் மிகவிளங்க
மாதர் அரம்பையரின் வாழ்வுபெறப் - பாதவங்கள் 80

அண்டர்தரு விற்றோன்ற ஆடகப்பொற் றெய்வீக
மண்டலமொப் பான மழைநாடன் - திண்திறலான் 81

மிக்க விழவறா வீதி வளநாடன்
செக்கர்வான் திங்களணி சேகரத்தான்- தக்கதிரு 82

(தொனிகள்)

ஆதிரையான் மூல மறையத்தத் தான்மகத்தான்
ஓதமெறி நாகைக்கா ரோணத்தான் - சோதியான் 83

கெச்சைதனி லாடியான் கேதகையொன் றாவணியான்
அச்சமனை யன்றுபுரட் டாசியான் - பிச்சை 84

அடர்ந்திட்ட மாமுனிவர் ஆச்சிரமந் தோறும்
படர்ந்திட்ட மையற் பசியான் - கொடுங்கூற்(று) 85

எடுக்கைக்கு வந்துபிறந் தேங்காத் திகையான்
கடுக்கைத் தொடைமார் கழியான் - பொடிச்சுதையான் 86

வன்னி வளர்க்குஞ்சோ மாசியான் வஞ்சகமே
பன்னுமவர் நெஞ்சத்தற் பங்குணியான் - நன்னீரால் 87

தீவணத்தங் குஞ்சித் திரையான் சிறுவனையாள்
காவணத்தி லேனோர்வை காசியான் - மூவரைவிட் 88

டப்புரத்தா னார்க்கும் அளித்தஉயி ரானியான்
மைப்புரத்தான் தங்கை வலத்தினான் - செப்பரிய 89

(மடக்கு)

அம்பர அம்பரத்தான் அம்பொற் சிலைச்சிலையான்
பைம்பணியி னான்பைம் பணியினான் - செம்பொறியின் 90

கோவான் கோவான்மேற் கொள்ளு மவையவத்தான்
மாவா ரணத்தான்மா வாரணத்தான் - காவாசன் 91

கங்கையினான் கங்கையினான் காசியிலான் காசியிலான்
பைங்கடல்சூழ் பாரிடத்தான் பாரிடத்தான் - செங்கமல 92

(அடிமடக்கு)

அத்த னகத்திருக்கா ளத்தியான் கங்குறைத்த
அத்த னகத்திருக்கா ளத்தியான் - எத்திசையும் 93

வாவிச் சுவேத வனத்தினான் தேடரிய
வாவிச் சுவேத வனத்தினான் - சேவைக் 94

கரிய கமலா லயத்தானாய் வேதற்
கரிய கமலா லயத்தான் - வருக 95

நவிலு மாணிக்க நகத்தான் வலாரி
நவிலு மாணிக்க நகத்தான் - பவளமணிப் 96

பண்ணதி ரேகாம் பரத்தினான் அந்தமறைப்
பண்ணதி ரேகாம் பரத்தினான் - நண்ணி 97

நவமணிய பஞ்ச நதியானென் றேத்து
நவமணிய பஞ்ச நதியான் - எவரையும்வந் 98

திக்காமன் சோதிச் சிராமலையான் ஈன்றசெவ்வந்
திக்காமன் சோதிச் சிராமலையான் - மைக்கோல 99

வாமத்தா னீலி வனத்தினான் நல்கியமெய்
வாமத்தா னீலி வனத்தினான் - நாமத்தா 100

னாலு கவியுடைவெண் ணாவலா னேவலா
னாலு கவியுடைவெண் ணாவலான் - கோல 101

(வேறு)

மருத வனத்தான் மழவை வயித்யன்
அருண கிரிக்கோன் அமலன் - மருகல் 102

பறியல் கொறுக்கை பழனம் இவற்றுள்
உறையும் நிருத்தன் ஒருத்தன் - மறைகொள் 103

அடவி யகத்தில் அவியும் விளக்கை
முடுகும் எலிக்கு முடியும் - குடையும் 104

அவனி யனைத்தும் அரசும் அளித்த
சிவனிசை நெக்குஞ் செவியன் - அவனடியின் 105

மெய்க்கணிட்ட அர்ச்சனைக்கு மெத்தமெச்சி விட்ணுவுக்கோர்
சக்கரத்தை யுற்றளித்த தத்துவத்தன் - மிக்கதத்வம் 106

எட்டிரட்டி முப்பதிற்றி ரட்டிபத்தி ரட்டிதப்பு
சிட்டரெட்டு சித்தசுத்த சிற்குணத்தன் - வட்டமிட்ட 107

செஞ்சடையன் சிங்கவுரஞ் சிந்துகொடுஞ் சிம்புளினன்
பஞ்சமுகன் சங்கணியும் பைங்குழையன் - செஞ்சரணங் 108

குஞ்சிதவங் கங்கொள்மினன் கொம்புவிரும்புந் திறல்கண்
டஞ்சனடந் தந்துவிளங் கம்பலவன் - நெஞ்சிலுறை 109

நாதன் பிறந்துழலும் நாயேனை ஆட்கொண்ட
பாதன் பரமன் பரஞ்சோதி - ஆதவன்சூழ் 110

ஆசைகொண்ட சம்புவின்கீழ் ஆறெண் சதுரியுகம்
பூசைகொண்ட சம்புவிறற் பூதேசன் - தேசு 111

திருவிழா

குலவும் இடபக் கொடியேற்றி வீதி
உலவுதிரு நாள் தனில் ஓர்நாள் - தலவலயம் 112

திருப்பள்ளி யெழுச்சி

மூடும் இருள்தீர முறைசெய்வான் மூரித்தேர்
ஊடு பரிதி உதயமெழ - ஆடகக்கால் 113

செச்சைப் பவளச் செழுந்தரள மாணிக்க
வச்சிரப்ர வாளசித்ர மண்டபத்துப் - பச்சை 114

மயிலை வடிவுடைய மங்கையை இன்சொற்
குயிலை அணைந்து குலாவும் - துயிலை 115

மணத்தகடம் பன்கொடியும் மாயோன்கைச் சங்கும்
உணர்த்த உணர்ந்தமளி யோவித் - தணப்பிலாக் 116

கன்னி முகங்கருகக் கங்கை உடல்வெளுப்பப்
பொன்னி தனையழைத்துப் புல்லியபின் - முன்னிகழ்ந்த 117

போதக மேன்மையாற் போகத்தால் இவ்வூரில்
வேதியர்கள் பூசிக்க வேகொண்டு - சீதப் 118

பனிமண் டலமதியை பைம்பொற் பதியில்
தனிமண் டபத்தில் தவிசின் - இனிதிருந்து 119

வேதமும் மூவர் விளம்பிய வித்தார
நாதமும் கேட்டு நடங்கண்டு - சோதிப் 120

திருவலங்காரம்

புகையழலில் தந்த புலிபட் டிருக்கத்
தகைய கலைமருங்கில் சாத்திப் - பகுவாய் 121

அரவமணிக் கச்சை அதன்மேல் இசைத்துச்
சரண பரிபுரமும் சாத்திக் - கரதலத்தில் 122

காகோ தரகங் கணங்கவினக் காண்டகுதோள்
மாகோ மளவலைய மாட்சிதர - நாகேசன் 123

அன்றளித்த பேராரம் ஆகத் தழகெறிப்ப
மின்றளிர்த்த பொற்றோடு வீறுபெறத் - துன்றிய 124

நட்சத்ர மாலை நவசந்த்ர மாலையுடன்
அட்சத் திரமாலை ஆங்கிலங்க - வட்சத் 125

தலத்துத் திருமேனித் தாழ்வடங்கள் தாழ
மலர்க்கொத் திதழித்தார் வாய்ப்ப - மலர்க்குவளைத் 126

தாமம் கமழச் சடைநீர் அருவிநிரை
யாமென்ற முந்நூலும் ஆங்கிலங்கச் - சோமக் 127

கிரணாபி டேகம் கிளரக் கரமான்
தருணா மிருகமதம் தாவப் - பரிநாமச் 128

செக்கர் விசும்பில் செறிந்தசிறு காரென்னத்
தக்க கருஞ்சட்டை சாத்தியபின் - சொக்கத் 129

திருச்சாந்து அணிதல்

தருணிய செங்கட் சகோரம் படுப்பான்
உருவிலியோ டங்கிரதி ஒப்பப் - பெருவரையின் 130

மங்கை முயக்கத்து மாமுலைமேல் கத்தூரி
பங்க மடங்கப் படிந்ததெனத் - தன்கருணை 131

அன்பர் உளத்திலிருள் வாங்கியன்பு செய்யாத
வன்பர் உளத்தில்விடம் வைத்ததெனத் - தன்கண்கள் 132

மூன்றினுக்கு மாறாத மூடிருளைக் கேடகற்றத்
தான்தரித்து வைத்த தகைமையெனத் - தோன்றச் 133

சிவந்த திருமார்பில் திருச்சாந்து சாத்திக்
கவின்றரச வாசம் கமழப் - பவங்கொள் 134

தணிமா லயனார் தலைமாலை பொற்கிண்
கிணிமாலை தம்மிற் கெழுமப் - பணியின் 135

நிழல்பூத்த வேணியான் நெற்றிக்கண் ஈன்ற
தழல்பூத்த நீறு தயங்க - எழில்பூத்த 136

செவ்விக் கமலத் திருமுகமும் சோதிதரக்
கைவைத்த வீரமழுக் காட்சிதர - எவ்வழகுக் 137

குண்ணாடும் அன்ப ருளத்தில் தியானம்போல்
கண்ணாடி காட்டுவதும் கண்டருளி - வெண்ணாவல் 138

திருவீதியில் எழுந்தருளல்

மாமுனியும் தாமும் வருவதெனத் தண்தரளத்
தாம மணிக்கவிகை தானிழற்றச் - சேமத் 139

திருவாடு தண்டில் சிறந்தேறித் தேவர்
மருவா டகவாயில் வந்து - சுரலோக 140

உலா வருதல்

ஆனென்னப் பூலோக மங்கை தவப்பேறு
தானென்ன மேருவென்னத் தாருவென்ன - ஞானக் 141

கடற்கானச் சோங்கென்னக் காட்டுகதி யென்னத்
தடக்கா சினிதவப்பே றென்ன - விடைக்கொடிநின்(று) 142

ஆடுநவ ரத்ன அலங்கார ஆடகத்தேர்
ஊடு கவுரி உடனேறி - நீடுதிருக் 143

கொற்றக் குடைசதுக்கம் கோலநிலாப் பந்தரின்கீழ்
நற்றுப் பணிசத்ரம் நன்கமைய - முற்றுகமழ் 144

மந்திர வட்டத்து மாயன்தன் வந்தனைபோல்
சந்திர வட்டங்கள் தாந்தயங்கச் - சிந்துரமேல் 145

பிச்ச மனேகம் பிறங்கப் பெருங்கடல்சூழ்
வைச்ச தரங்க வகைமான - மெச்சுவார் 146

ஆசி புடைசூழ ஆலால வட்டமிட
வாசமுறு முத்தின் அடைப்பைவரப் - பாசமும் 147

உடன் வருவோர்

அங்குசமும் கோடுங்கொண் டைந்துகரத் தண்ணலார்
வெங்கண் அடல்ஆகு மீதேறச் - செங்கண்மால் 148

கந்தன் விரிஞ்சன் ககவா கனத்தேற
இந்திரன் சாத்தன் இபத்தேறச் - சந்திரனும் 149

சங்கநிதிக் கோவும் தரளவிமா னத்தேறச்
செங்கதிர்கள் ஆறிரண்டும் தேரேறப் - புங்கவங்கம் 150

ஏறும் உருத்திரர்கள் ஏறவே தோகையன்னத்
தேற வசுக்கள் எரிக்கடவுள் - மாறி 151

ஒருமையில் ஏற ஒலிகலை ஏற
எருமையில் ஏற இயமன் - வருணன் 152

சுறவேறக் கோளரியில் துர்க்கைஇனி தேற
வெறிசூல வைரவனாய் ஏறத் - திறல்படைத்த 153

காளி கடியேறக் கந்திருவ ருஞ்சுரரும்
மூளும் எழிலி முதுகேற - நீளருகர் 154

சேரக் கழுவேறத் தென்மதுரை ஏறினோன்
ஆரச் சிவிகை அதிலேறப் - பூரிக்கப் 155

பாடும் புலவர் பரியேறப் பாணியிற்றூ
ணோடு திறம்பா உரைத்தோனும் - கூடலிலே 156

சம்பு பரியழைத்த தக்கோனும் தண்டேறச்
செம்பொற் றடமவுலிச் செங்கணான் - வெம்புரவி 157

மேவிவர மீனவரும் வில்லவரும் மெய்த்தவத்தோர்
யாவரும் ஏத்தி இறைஞ்சிவரப் - பூவில் 158

குழாங்கள்

எதிரின் றியநாற்பத் தெண்ணா யிரரும்
பதினெண் மடத்திற் பயிலும் - முதலிகளும் 159

வேழஞ்செய் பூசைபுரி வேதக் கவுசிகரும்
சோழன் கொணர்ந்தநதிச் சோழியரும் - ஆழிசூழ் 160

தந்த்ரப் பெரிய சரணம் அறைவோரும்
மந்த்ரச் சிவமா மறையோரும் - எந்தைமுடிக் 161

கங்கா சலமரபில் வந்துசிவ காரியத்தைத்
தங்காத லால்புரியும் தக்கோரும் - பைங்காதல் 162

ஆரியப் பட்டரும் அன்பால் அகங்குழைந்து
சீரியப்பாட் டோதும் திருப்பெயரும் - நேரிலான் 163

சுந்தரனை யாண்டநாள் தொல்லா வணவோலை
வந்தவையில் வாசிக்கும் மந்திரிகளும் - இந்துநுதல் 164

கன்னலுரை கொவ்வையிதழ் காரளக பாரதனத்(து)
அன்னநடைத் தேவ ரடியாரும் - கன்னிக் 165

குமாரராங் கோயில்கைக் கோளக் குழாமும்
உமாமதியாம் கண்காணி யோரும் - சமுகப் 166

படைவயி ராவிப் படையும் பரன்தாள்
அடையும் அகம்படி யாரும் - கடலுலகத் 167

துள்ள தபோதனரும் உட்சமயத் தோர்யாரும்
தெள்ளிய பாவலரும் சென்னியரும் - வெள்ளமென 168

சின்னங்கள்

எங்கும் திரண்டுவர ஏற்றுக் கொடியீண்டச்
சங்கும் குழலும் தடமுரசும் - வங்கியமும் 169

மத்தளமும் பேரிகையும் மண்முழவும் விண்முழவும்
எத்திசையும் ஒத்திசைப்ப யாழின்முரல் - மெத்து 170

சகமேவு தேவர்கள் தம்பிரான் வந்தான்
மகமேரு வில்வளைத்தான் வந்தான் - பகஇப் 171

படியிடந்து மாலறியாப் பாதத்தான் வந்தான்
வடிவழகுக் காருமொவ்வான் வந்தான் - விடுநூல் 172

சிலந்திமுடி சூட்டும்சிவன் வந்தான் செவ்வி
மலர்ந்த முகமுடையான் வந்தான் - தலமளந்த 173

தாளுயர்க்கும் புள்ளூர்தி தம்பிரான் வந்தானென்(று)
ஆளுமொற்றை எக்காளம் ஆர்ப்பெடுப்பக் - கூளிகுறள் 174

சுற்றும் கவர்ந்துவரத் துள்ளுமக ரத்துவசன்
வெற்றிச் சிலைக்கொடிசே வித்துவரப் - பொற்றொடியார் 175

குழா மகளிர்

தோரண வீதிதனில் தோன்றினார் தோன்றுதலும்
ஆரண நாட்டின் அரம்பையரும் - நாரணனார் 176

வைகுண்ட லோகத்து மங்கையரும் வாகனமாம்
பெய்கொண்ட லோனுலகில் பெண்படையும் - மொய்கதிரின் 177

மண்டலத்துக் கன்னியரும் மாநாக மங்கையரும்
எண்டிசை வெற்பிலுள்ள ஏழையரும் - கண்டுருகி 178

மானிட மங்கையராய் மண்டபத்தும் கோபுரத்தும்
மீனுடைய விண்தோய் விடுதளத்தும் - ஏனைக் 179

கடையினும் முன்றிலினும் கற்புரிசை சூழ
விடையினும் வீதியினும் எய்தி - மடவீர் 180

குழா மகளிர் கூற்று

விருதேற்ற வேள் பரவும் வெண்ணாவ லீசர்
வருதேர்ப் பவனி தொழ வாரீர் - எருதேறித் 181

தும்பைச் சடைப்பிறையைச் சூழ்செக்கர்வான் போலும்
செம்பொற் றிருவா சிகைபாரீர் - வெம்பணத்தில் 182

அங்கணுல கெல்லாம் அடக்கும்அரா இவர்க்குக்
கங்கண மான கவின்பாரீர் - தங்கைக்கு 183

வாய்த்தமண வாளனார் என்றறிந்து மைத்துனனார்
சாத்தியவங் கண்மணித் தார்பாரீர் - நேத்திரங்கள் 184

மூன்றினிடை யூடே முயங்குமிருள் மாறிப்போய்த்
தோன்றும் புருவத் துணைபாரீர் - வான்தரளத் 185

தோடிருந்து காதுறைவார் யாழிசைக்கோர்
சோதிகரத் தூடிருந்துதாவும் உழைபாரீர் - தாள் தொழுது 186

சேகரத்தா ரானார்தம் சென்மவினைக் கோள்தீர
மாகரத்தில் ஏந்தும் மழுப்பாரீர் - பாகத்தில் 187

நன்றாய்க் குடியிருந்து நாதனையும் கங்கையையும்
ஒன்றாக்கி விட்ட உமைபாரீர் - நின்றேத்தும் 188

தையலார் மேனியெலாம் தன்னிறமாய்த் தோற்றுவிக்கும்
துய்யபூங் கொன்றைத் தொடைபாரீர் - பையவெனச் 189

செல்வார்தம் காதலெலாம் தென்னானைக் காவார்க்குச்
சொல்வார் எமக்கருளாய் தோளென்பார்- வில்வாங்கி 190

எண்கொண்ட பூங்கணைவேள் எய்தவடுத் தேவரீர்
கண்கொண்டு பாரீர் கடிதென்பார் - ஒண்கண்கள் 191

செங்காலில் சாத்தித் திருந்துமா லாமெமக்குச்
சங்காழி தாரீர் தனித்தென்பார் - வெங்காதல் 192

பேதையர்மாட் டில்லையோ பின்னிரக்கம் செய்வாரென்(று)
ஓதுதிரு நாமமுமக் கேதென்பார் - தாதிதழித் 193

தேமாலை மார்பீர் செழுநீர்த் திரளாகில்
யாமாட வொட்டாத தென்னென்பார் - கோமானே 194

வெங்கைவே ழம்செய்த பூசைபோல் வெவ்வினையேம்
கொங்கைவே ழம்செய்யக் கொள்ளென்பார் - எங்கள் 195

செழுநீர்த் திரளாம் திருமேனி எல்லாம்
கழுநீர்த் திரளாகக் காண்பார் - அழுநீர் 196

கடலிற் றனிமையினா கத்தைக்காண் பார்பூ
மடலிற் கைவைப்பார் மகிழ்வார் - வடிவழகர் 197

உற்றார் எமக்கென் றுருவெளியில் ஓடிப்போய்
முற்றா முலையின் முயங்குவார் - சொற்றான் 198

அயர்வார் கலைநாண் அகல்வார் அறிவு
பெயர்வார் அவரிலொரு பேதை - கயிலைக் 199

பேதை

கடவுட் பகவன் களவுநூல் தன்னை
அடிவரவு தீட்டும் அலேகம் - புடவிபுகழ் 200

சீரானைக் காவான் திருக்கொணாச லப்புரத்துப்
பேரானை யீனாப் பிடிக்குருளை - சூராலங் 201

காட்டில் பயில்நடத்தோன் கச்சியே காம்பரத்தில்
கோட்டில் பயிலாக் குயிற்பிள்ளை - மூட்டமரின் 202

மண்டலகைச் சேனையோன் மாணிக்க மாமலைசூழ்
கொண்டலிடிக் காடாக் குழாமஞ்ஞை- முண்டகக்கண் 203

என்னானைக் கன்றார் இமையத்தார் கைத்தலத்து
மன்னா துலவு வனக்கன்று - தன்னேர் 204

அடியார்க் கெளியான் அனமேவு பொய்கை
படியாக் களியன்னப் பார்ப்பு - விடையான் 205

சடையி லடங்கும் சலம்போற் றடத்தூண்
இடையி லடங்கும் இறைபோல் - வடதருவின் 206

வித்தி லடங்கும் விதையைப்போல் மேகசரீ
ரத்தி லடங்கும் அசனிபோல் - அத்தி 207

உழையி லடங்கிய ஓங்கல்போல் ஊதுங்
கழையி லடங்கும் கனல்போல் - விழைபொய்கைத் 208

தோயத் தடங்கும் துணைத்தா மரைமுகைபோல்
காயத் தடங்கும் கனதனத்தாள் - தாயிற் 209

சிறந்தபிரா னல்லாத தெய்வங்கள் போலே
இறந்து பிறக்கும் எயிற்றாள் - நறுங்கொன்றை 210

நீரங்கொள் வேணியர்பைஞ் ஜீலி வனத்திலதி
காரங்கொள் ஏமன்போல் கண்ணினாள் - தேரில் 211

பருதி அகன்றகலாப் பக்குவத்தில் கங்குற்
குருதி யனைய குழலாள் - கருதில் 212

பெரிய வடநூற் பிரகிருதர் பாடைக்
குரிய குதலை உரைப்பாள் - எரிகின்ற 213

நந்தா மணிவிளக்கை நாடும் குறளிபோல்
செந்தா மரையென்னச் சிந்திப்பாள் - முந்துகதிர் 214

துன்றிச்சூ ரக்கடவுள் தூரத் தெழுந்தோறும்
குன்றிச்சூ டென்றள்ளக் குந்துவாள் - அன்றி 215

மகத்தில் எழும்பிறையை வாவென் றுரைப்பாள்
அகத்தி முகைகண் டயர்வாள் - மிகுத்த 216

செழுங்கமுகின் செந்தாதைத் தீயென்று வண்டற்
குழந்தையைக்கொண் டேகக் குறிப்பாள் - முழங்கும் 217

ஒருவர் இதற்குள் உளரென்று மென்தோற்
கருவி உடைக்கும் கருத்தாள் - நிரைமகுட 218

மாட மணிமுகட்டில் கார்கண்ட வண்ணமயில்
ஆட வளைக்கைவிரித் தாடுவாள் - கூடல்வாய்த் 219

தொல்லானைக் காவுடையான் சூழ்ந்தவிளை யாடல்போற்
கல்லானை முன்னம் கரும்பளிப்பாள் - முல்லைக் 220

கொடிக்குயின்ற பந்தல்தனைக் கோட்டிக் குழிசி
யிடைப்புளின அரிசியுலை ஏற்றி - அடர்தரளச் 221

சிற்றி லகத்தில் சிறுசோ றமைத்தருந்தச்
சுற்றில் விருந்தழைப்பாள் சோதிமணி - முற்றத்து 222

வந்தனள் அவ்வளவில் வாய்த்தசிறுத் தொண்டர்பால்
முந்த விருந்துண்ட மூர்த்தியான் - தந்திவனத்(து) 223

உள்ளான்மண் காக்கைக் குரியா னிலும்வலியான்
அள்ளா விடமுன் அருந்தினான் - வெள்ளானை 224

பூசிக்க வீடளித்துப் புன்சிலந்தி சூட்டுதற்கு
மாசித்ர மௌலி வழங்கினோன் - தேசுதிகழ் 225

தீத்திரள் எங்கள் செழுநீர்த் திரள்தேவர்
பூத்திரள் சிந்திப் புடைசூழ - ஏத்துமறை 226

நாற்றுரகத் தேற்றதலம் ஞாலத்து நாணாகித்
தோற்றுரகத் தேற்றுத் துவசத்து - வேற்றுச் 227

சுடருருளைத் தேரின்மேல் தோன்றுதலும் ஈன்றோர்
வடமணியல் குற்றேரில் வந்தாள் - உடனே 228

தொழத்தொழுது பூசித்துத் தூவி மடமாதர்
நிழற்குநிழல் தானாக நின்றாள் - தழற்கரத்தோன் 229

கொன்றைச் சடாமுடிமேல் கொக்கிறகும் நக்கறுகும்
கன்றுகதிர் வாளரவும் கச்சபமும் - சென்றசென்ற 230

எல்லா உகாந்தத்தும் ஈசற் கொருதிவசம்
செல்லாது காட்டும் சிறுபிறையும் - நல்லிசையின் 231

வாணர் படைவீடும் முச்சுடரின் மண்டலமும்
காணரிய நீலமணிக் கந்தரமும் - மாணிக்கக் 232

கேயூர வாகும் கிரிதனையும் மானுமொரு
மாயூரம் நீங்காத வாமமும் - சேயவொளித் 233

தெக்கண பாகமும் செங்கைத் தமருகமும்
அக்கணியும் அக்கினியும் ஆகமும் - ஒக்கச் 234

செழியா விருமென்று சேர்க்குமடி யார்க்கு
வழியான உந்தி மடுவும் - உழுவை 235

அதளுடையும் அம்பலத்துள் ஆடிச் சிவந்த
சததளமும் கண்டுருகித் தானே - புதிய 236

இவரை விருந்தழைமின் என்றாள் அதுகேட்(டு)
உவகைமிகுந் தன்னைமார் உன்போல் - தவமுனிவர் 237

மாதரிட அறிந்தார் இல்லையோ மால்கொண்ட
ஆதரவால் நீயமைத்த ஆரமுதம் - மேதினிதான் 238

அன்றோ அதுபரமர்க் காகா தவர்விடைக்காம்
என்றோத ஏதிவர்க்காம் என்றாளை - நின்றோர்பார்த்(து) 239

ஆலால முண்டுகளித் தாரமுதம் உண்டுபதி
னாலாநா ளுள்ளும் நவமதியின் - மேலான 240

ஆதிப் பெருஞ்செல்வர்க் கன்னமே ஏதரிது
பேதைப் பருவம்போய்ப் பேரணங்காம் - போதழைத்து 241

வேண்டிய இன்ப விருந்திடுநீ என்றளவில்
காண்டகுதேர் வீதி கடந்ததால் - ஆண்டவர்க்கிங்(கு) 242

ஊட்ட நினைப்பாள் உமைபோலும் என்றுவந்து
வாட்ட நினையா மதன்சென்றான் - கூட்டகத்து 243

வல்லியார் எங்கட்கு மானே விருந்திடென
இல்லிடைகொண் டேகினார் ஈண்டொருத்தி - அல்லி 244

பெதும்பை

உறங்குகணை வேளார்க் கொருநாட் கொருநாள்
பிறங்குகரும் பன்னாள் பெதும்பை - நிறைந்தபொருள் 245

வித்தைபோ தாதெனினும் வேள்நூலி லேசிறிது
தத்தைபோல் கற்றுத் தனித்துரைப்பாள் - மெத்த 246

நிரம்பாச் செயலால் நெகிழ்ச்சியால் முக்கண்
அரன்பாதத் தம்புயப் போதன்னாள் - திருந்தஇவள் 247

ஆலிங் கனமே அமையும் எனத்தேவர்
மாலிங் குறலா வனப்பினாள் - மேலன்பு 248

மையொத்த கண்டன்பால் வையா தவர்மனம்போல்
மெய்யொப் பனைதான் விரும்புவாள் - மையல் 249

தருசுரத மும்பிறவும் தான்வளர்த்த வேட்டுக்
குருகுகளில் கண்டறிந்து கொள்வாள் - அரனார் 250

சகங்காயும் கூத்துச் சமைந்துதிரை நின்று
முகங்காட்டு மன்ன முலையாள் - அகங்கைப் 251

பலியுகந்த தம்பிரான் பத்தியர்போல் இன்பம்
கலியுகந் தட்டாத கண்ணாள் - சிலைமகரம் 252

காட்டுதுலை மீனலவன் கன்னியிலுண் டானமழை
கூட்டரவில் கூட்டுங் குழலினாள் - வீட்டடுத்த 253

கழங்காடுதல்

சீதளக் காவில் சிறுதென்ற லூடாடும்
மாதவி நீழலிலே வந்திருந்து - தூதியரும் 254

பாங்கியரும் அன்னையரும் பார்க்கவொரு பாவையுடன்
யாங்கழங் காடுதும் என்றமைந்து - வாங்கினாள் 255

ஒன்பான் மணியதனில் ஓரேழ் மணிதிரட்டி
இன்பான கோளேழ் எனத்திகழத் - தன்பாணிப் 256

பல்லவத்துள் எல்லாம் பவளமா ணிக்கமொழிந்
தில்லை யெனவிளங்க ஏற்றெறிந்து - தொல்லோன் 257

படர்கயிலை வெற்பெடுத்த பத்திருதோள் வீரன்
உடல்சரிய ஊன்றியதா ளொன்றும் - மடலவிழ்பூந் 258

தேங்காவி சூழும் திருவானைக் காவிலுறை
ஓங்கார மூர்த்தி உருவிரண்டும் - ஓங்கற் 259

கொடிக்கன்பு கொண்டபிரான் கோலமூன் றாக்கி
முடிக்கும் திருக்கருமம் மூன்றும்- அடைக்கலமென்(று) 260

ஏத்தெடுக்கும் எம்மை எழுபிறப்பின் வீழாமற்
காத்தெடுக்கும் நாதன் கரம்நான்கும் - பூத்தொடுக்கும் 261

தார்காக்கும் செஞ்சடையான் சங்கரிக்குநாள் வரைமால்
பார்காக்கத் தந்த படைஐந்தும் - போர்காட்டும் 262

திண்பினா கப்படையான் சேவடிசே ரத்தவம்செய்
பண்பினார் வெல்லும் பகையாறும் - ஒண்பார் 263

திருந்து விடங்கரெனத் தேற்றும்பா ரேத்த
இருந்த இடங்கள்தாம் ஏழும் - மருந்தனையாள் 264

பாடிவிளை யாடும் பருவத் துருவத்துக்
கூடிவிளை யாடுமலர்க் கொம்பினாள் - நீடு 265

வலியைக் கருதாமல் மாதவத்தோர் விட்ட
புலியைக் கலையாப் புனைந்தோன் - உலகனைத்தும் 266

ஆண்டவன்கா கோதர ஆபரணன் ஆனந்தத்
தாண்டவன் சிந்தூரச் சரணத்தான் - நீண்டவனுக்(கு) 267

எட்டாத நீளத்தான் எள்ளெண்ணெய் போலுடலின்
உட்டான் உயிராய் உறைகின்றான் - புட்டாவு 268

விண்தடவு கோடரத்து வெண்ணாவல் வாய்ச்சிலந்தி
கண்ட நிழலிலுறை கங்காளன் - அண்டர் 269

அடிபரவும் ஆதிப் பெருஞ்செல்வன் அத்தன்
வடிவழகுக் காரும் ஒவ் வாதான் - சுடருருளைச் 270

செம்பொற் றிருத்தேர்மேல் தோன்றுதலும் சேயிழையும்
அம்பொற் கழங்காடல் ஆங்கொழித்துத் - தம்பிரான் 271

சேரும் திருவீதி சென்றாள் திரண்மாதர்
யாரும் இறைஞ்ச இறைஞ்சினாள் - தாரும் 272

திரண்ட சதுர்ப்புயமும் செம்முகமும் கண்டாள்
இரண்டு விழிக்கடங்கா தென்றாள் - மருண்டுதொழு 273

தாதரித்துத் தாயரைப்பார்த் தன்னைமீர் என்னையிவர்
மாதரித்த திண்தேரில் வைம்மினென - நாதனார் 274

தாமேறும் தேரில் சதுமுகவற் கல்லாது
யாமேறப் போதா தெளிதன்றே - யாமெல்லாம் 275

தீண்டற் கரியதுகாண் தெய்வத் திரட்சிகாண்
காண்டற்கு வாய்த்தசங் கற்பங்காண் - ஆண்டவர்கைத் 276

தீயுளது காண்சடையிற் செங்கண் அரவுகாண்
பாயும் எருதுளகாண் பைந்தொடியே - நீயடர்ந் 277

தேகத் தொழாயென்றார் என்சொன்னீர் தேறிலிவர்
பாகத் திருப்பாளைப் பாருமென - மோகம் 278

குடிபுகுந்த தென்றெண்ணிக் கோதையர்கொண் டாடி
வடிவுடைய மங்கைக்கு மாறா - யடியிட்டாள் 279

ஆகா வெனநகைக்கும் அவ்வளவில் ஆடகத்தேர்
ஏகா அயல்வீதி எய்திற்றால் - மாகாமன் 280

இப்பாவை யையெய்ய எண்ணுவன்எண் ணானாகி
ஒப்பாரிலாதா ருடன் சென்றான் தப்பியே 281

நிற்கின்ற மானை நிரைவளையார் தாம்பூரை
இற்கொண்டு சென்றார்பின் ஈண்டொருத்தி - பொற்குன்று 282

மங்கை

அனசம்பு நாதன் அயன்மேவு பொய்கை
வனசம் பொருமங்கை மங்கை - தனதிடப் 283

பங்குமைக் கீந்தோன் பதியைத் தனதாக்கும்
குங்குமக் கொங்கையாள் கொங்கையாள் - பைங்கயிலை 284

ஆதியான் காவேரி யாற்றில் அறல்போலும்
ஓதியாள் காமகலை ஓதியாள் - பாதியாம் 285

பெண்ணினான் ஆதிப் பெருஞ்செல்வன் ஆனைக்காக்
கண்ணினாள் வேலனைய கண்ணினாள் - நண்ணியசீர்த் 286

தந்தியரா மத்தனார் தாமச் சடாடவியில்
உந்தியா ளச்சுழிபோல் உந்தியாள் - எந்தை 287

இணங்கிய வெற்பின்கீழ் எதிர்ந்ததோர் காலன்
வணங்கிய ரோம வலியாள் - அணங்கனைய 288

பந்தாடுதல்

தன்பருவ வல்லியரும் தானுமணிச் சாளரத்துப்
பொன்புனையும் ஆடரங்கில் புக்கிருந்து - மின்பந்து 289

மின்னிடை தாங்குவன வித்தாரம் மெத்துவன
மன்னிய முத்துநவ ரத்தினவாய் - தன்னிரண்டு 290

கொங்கையுடன் மாறுகொண்ட கோட்டுப் பிழைக்கவற்றை
அங்கையினால் வாங்கி அறைந்தெறிந்து - சங்கரனைச் 291

சொல்லார் எழுபிறப்பும் சுற்றித் திரிந்ததென
எல்லா அவையவத்துள் எய்துவித்தும் - நில்லா(து) 292

எழுவித்தும் வெள்ளியில் அக்கினி கால்வீழ்
பொழுதொக்க நிற்குமயில் போன்றும் - செழுமை 293

திருந்திய கொம்பிற் செறிகனிக்குப் புட்கள்
பொருந்தி எழுந்தகல்வ போன்றும் - சுரும்பு 294

மருமுளரிக் காட்டிணங்கு மாபோன்றும் மாரன்
பொருபுரிந்து சூழ்கதண்டு போன்றும் - ஒருதன் 295

மிகுவினைகள் கண்டோர் விழிக்குலமும் நெஞ்சும்
புகுவன போவன போன்றும் - திகழ்தரவே 296

நின்றாடி னாளை நிரைவளையார் தாம்பூரை
என்றாகம் புல்லி இலங்கிழையாய் - உன்தொழிலை 297

யாமோகொண் டாடுவோம் ஆனைக்கா ஈசனார்
தாமே அறியத் தகும்என்ன - ஆமே 298

அவரறிவா ராமாகில் அவரே எனக்கா
னவர்வதுவைக் கென்று நவின்றாள் - சிவரூபம் 299

காண்டற்கு வேண்டிக் கவின்திருத்திக் காரிகையார்
ஈண்டிப் புடைசூழ இல்நின்று - நீண்ட 300

கனகநிலை ரத்னக் கதவுகடை நீக்கி
இனிய தெருமருவும் எல்லை - புனிதன் 301

திருந்து செழுநீர்த் திரளான் தெய்வீகப்
பெருந்திருவெண் ணாவற் பெருமான் - அருங்கொல்லி 302

நேரி மலையுடையான் நீலநெடுங் காலனுடல்
சோரி முடைநாறும் சூலத்தான் - பேரிமய 303

மாதக லாதுறையும் வாமபா கத்தினான்
சீத கலாச்சந்த்ர சேகரத்தான் - போதன் 304

சுரபேத வேதத் துரகத்தேர் தூண்டி
வரவே பவனி வரலும் - புரிகுழலாள் 305

சென்றாடி வேதச் செழுநீர்த் திரள்வந்தான்
என்றாடிப் பாடி இறைஞ்சினாள் - கொன்றை 306

அலங்கல் அழகர் அடியேற் கிரங்கி
இலங்கு புயமளித்தால் என்னாம் - கலங்கினேன் 307

என்னைஇடப் பாகத் திருத்தினால் யானவள்போல்
உன்னை இரந்துழல ஒட்டேனே - கன்னியைப்போல் 308

மேதகு முப்பத் திரண்டறத்தை வீசியுனக்(கு)
ஓதக் கடல்நஞ்சை ஊட்டேனே - கீதவிதம் 309

சீராகப் பாடித் திருக்கூத்தி லுந்துணையாய்ப்
பேராது நிற்கப் பெறுவேனே - வாராய்என்(று) 310

ஓது மளவில் உமையாள் முகம்நோக்கி
ஆதி முறுவல் அரும்பினான் - மாதை 311

எவரும் நகைத்தார் இரதிபதி யேதான்
அவிருமணித் தேர்கண்ட தப்பால் - இவளொருத்தி 312

மடந்தை

அந்நாள் உததிதரும் ஆரமுதுக் காரமுதாம்
பொன்னா பரணத்தின் பூணாரம் - அன்னாள் 313

விழிவேளைத் தந்தானை வில்வேளை மெய்யே
வழிவேளை யாளும் மடந்தை - எழில்மேனிக்(கு) 314

அன்றன் றணிந்த கலந்தோறும் ஆதுலருக்(கு)
என்றும் கொடுக்கும் இயல்பாளை - நின்றொருநாள் 315

கீதம் விரவி ஒருத்தி கிளர்கீர்த்தி
ஓத அமைந்தெதிர்நின்(று) ஓதிமமே - மாதர்க்(கு) 316

அரசே மணியே அமுதே அனங்கன்
சிரசே கரமே திருவே - கருணைக்கு 317

நீயே உமையென்றாள் நேரிழையும் நானுமையேல்
தூயோனைக் சேரேன் கொல் என்கின்றாள் - ஆய அருட் 318

கங்கைநீ என்றாள் அவளாகில் கண்ணுதல்மேல்
தங்குவ னேஎன்று சாற்றினாள் - கொங்கை 319

பொருப்போஎன் றாள்அப் பொருப்பாகில் ஈமத்
திருப்போன் இருக்குங்காண் என்றாள் - இருப்புருவம் 320

பொற்றனுவோ என்றாள் அஃதாகில் புராரிகரம்
பற்றிவளை யாதோ பகர்என்றாள் - நெற்றி 321

பிறையோஎன் றோதினாள் பெய்வளையும் அப்போ(து)
இறையோன் முடிக்குமே என்றாள் - நறைமலர்க்கண் 322

மானோ விடமோ எனவுரைத்தாள் மன்றாடி
யானோன் தரிக்குமே ஆங்கென்றாள் - தானதும் 323

ஆராமல் தன்னை யறிந்து சிவன் ஆகத்துக்(கு)
ஏரா தவளோ நீ என்றேத்தப் - பேராசை 324

வல்லியும் வந்து மணிப்பூ டணமெறிந்து
புல்லி விடஅவளும் போந்தோறும் - சொல்லுதலும் 325

தன்காதல் தானே தனக்குத் துணையாக
மின்காமன் அம்பினால் வெம்பினாள் - நன்காஇப் 326

பாய லதனைப் பணியென்றாள் பாவைநோய்
தாயர் அறிந்தணுகித் தையலே - நீயஞ்ச 327

வேணுமோ உன்னை வினவியே வெண்ணாவல்
தாணுமோ கங்கொண்டு தானாளைக் - காண 328

எழுந்தருள்வன் நின்வாசல் என்றுமத வேளும்
அழுந்தண் சமீரனா வோனும் - செழுஞ்சடையில் 329

தாங்கிய சந்திரனும் தாமூர் மழவிடையும்
ஈங்குவரக் காட்டினார் என்றேத்த - ஆங்கவளும் 330

கங்குற் கடல்நீந்திக் காலை அவன்வருமென்(று)
அங்கத்தைப் பூணால் அலங்கரித்துத் - தொங்கல் 331

அளக முடித்திடையில் ஆடை இறுக்கி
வளைகள் திருத்திவிழி மையிட்(டு) - ஒளிர்திலகம் 332

நெற்றிக் கெழுதி நெறிமேல் விழிவைத்து
மற்றொப் பிலான்மேல் மனம்வைத்து - முற்றாத் 333

தனத்தியர் சூழ எதிர்கொண்டு நின்றாள்
அனத்தினூ ருந்தேரி னானும் - தனத்தினனும் 334

மாலும் மகவானும் வந்திப்பத் துந்துமிஎப்
பாலும் அதிரப் பவனிவர - வாலிபத்தாள் 335

அன்னையர் சொன்ன தறுதி யெனவியந்தாள்
கைந்நிறைபொன் னாலத்தி காட்டினாள் - சன்னிதிநின்(று) 336

எண்ணார் புரமெரித்த என்னானைக் காவாரே
வெண்ணாவல் நீங்கா விமலரே - தண்ணறுந்தார் 337

சென்னியுடன் முற்றும் செழுநீர்த் திரளாரே
பொன்னிவரும் ஆரம் பூண்டாரே - என்னிதயத்(து) 338

உம்மை நினைந்தளவே உண்டிகடு வாயினேன்
அம்மதிப்போல் மெய்பாதி ஆயினேன் - வெம்மதன 339

வேளும் பகையாகி விட்டான்விட் டேனாடை
நாளுந்துஞ் சாத நலம்பெற்றேன் - ஆளநீர் 340

என்னைநினைந் தெய்தினால் ஏதோ உமக்கரிதென்(று)
அன்னம் உளப்பா டறிவிப்பப் - பின்னிரக்கம் 341

செய்திலன் வேள்பூசல் தீர்த்திலன் செங்கணருள்
பெய்திலன் ஆதிப் பெருஞ்செல்வன் - மொய்தன் 342

தொடைவழங்கி னானோபொற் றோௗளித்தா னோமின்
கொடைவிரும்பித் தூசுவளை கொண்டான் - கடைவழிபோய்த் 343

திண்தேரும் தானும் தெருவகன்றான் சீராக
வண்டேர் இதழியாள் மற்றொருத்தி - அண்டர் 344

அரிவை

விபரம் செறிமடவார் வேற்றுருவில் தோன்றும்
அபரஞ்சி அன்னாள் அரிவை - தபனன்சீர் 345

பொற்றரளத் தோடாகிப் பொங்குபூ ணாரத்தின்
உற்ற வொளியாய் உடன்மேவ - நற்றுளவோன் 346

ஓதியில் வண்டாய் உறையவொளி ஓதிமமாய்
ஆதி அயனார் அடிதொடரச் - சோதி 347

மயிலாய் வலாரி மகிழநடங் காட்டப்
பயில்வாயுச் சாமரையில் பாயத் - துயிலா 348

அளகா புரேசன் அடிச்சிலம்பாய் நிற்ப
இளகாத மால்தந் திடுவாள் - கிளர்காவில் 349

பத்துமரம் அத்தனையோ பட்டமர மும்கிரியும்
சித்திரமும் ஆவிபெறும் செஞ்சொல்லாள் - அத்திகிரி 350

வெற்பாம் தனியுலையும் மேகத் துருத்திகொடு
கற்பாம் அனிலக் கனலூதப் - பொற்பான 351

எண்டிக்கை முட்டும் இருட்கிரியில் ஈசனார்
கண்டக் கடுஇரும்பு காய்ந்ததனை - அண்டம் 352

பரிக்கும் அராக்குறட்டில் பற்றிவட வெற்போன்
இருக்கும் அடைகல்லில் இட்டு - மருத்துளவோன் 353

ஏனை இடிக்கூடம் எடுத்தெற்றி எமக்கொல்லன்
தானமைத்த வேல்போல் தடங்கண்ணாள் - வானவர்கோன் 354

மேவாரில் அந்த விருத்தா சுரன்மெய்போல்
பூவானம் முட்டப் புடைத்தோங்க - ஓவாது 355

தாரா கணந்தரளத் தாராகிப் பேரண்டம்
வாராகி அற்றைக்கு மற்றைநாட் - கேராது 356

போகப் பொழுதிற் புடைத்துப் பொருமிமிக
மோகத்தை நல்கும் முலையினாள் - மேகத்துக்(கு) 357

அம்மனை யாடுதல்

அப்பாலும் நீண்ட அதிரேகை மேனிலத்தில்
எப்பா வையரோ டினிதிருந்தே - ஒப்பிலா 358

மாணிக்க அம்மனையேழ் வாங்கிஎறிந் தேற்பளவில்
சேணிற் புயலிலவை சென்றொளிப்பக் - காணாள் 359

திகைத்துமட வீரிதுநாம் தேடுவதெங் கென்றாள்
வகைக்குடக வெற்பின் மழையோ - டுகுப்புண்டு 360

காவிரியில் சேருங்காண் காவையர னார்க்கன்று
நீர்விழுந்த ஆரம்போல் நேருங்காண் - நாவலர் 361

அன்றாற்றில் இட்டபொருள் ஆரூர்க் குளத்துவர
என்றாற் கிதுவும் எளிதென்ன - நன்றென்(று) 362

உவந்து பரவி உடனேசோ திப்பாள்
நவங்கொள் தலம்நின்று நண்ணிச் - சிவன்கோயில் 363

எய்தஅமைந் தாளவ் வெல்லைக்கண் தில்லைக்குள்
செய்த நிருத்தத் திருத்தாளான் - மெய்தனைப்போல் 364

நந்திக் கினியபிரான் நாரணரும் நாகருமுன்
சந்திக்க வாங்கியபொற் சாபத்தான் - வெந்த 365
சுடலைதனி லாடியும்தான் சுத்தனா கைக்கோர்
சடிலமிசைக் கங்கை தரித்தோன் - உடலில் 366

நிறைந்த பணியழகன் நீலக் கிரீபன்
சிறந்த செழுநீர்த் திரளான் - பிறங்கற் 367

குமரிக் கொருபாகன் கோடூர் குழகன்
தமரித்து வேதம் தயங்க - நிமிர்சிகரப் 368

பாரமணித் தேரில் பவனிவரக் கண்டளவே
ஒருநினை வொன்றுசெயல் ஒன்றாகி - ஆரத் 369

தழுவுவாள் போற்செல்லும் தன்தனபா ரத்தைக்
கழுவுவாள் போற்கண்ணீர் காலும் - நழுவும் 370

குருகும் கலையும் குவலயத்தார் கொள்ள
உருகும் தளரும் உயிர்க்கும் - சருகுபடும் 371

நெஞ்சோ டயருமிவள் நேர்கண்டும் காணாஅம்
பஞ்சோ னுடன்சென்றான் ஆதியான் - செஞ்சோதி 372

தெரிவை

சித்ர மணிமகுடத் தெய்வத் திருத்தேரில்
அத்திரு வீதியகன் றாங்கொருத்தி - சுத்த 373

தெரிவை புவனத் திலோத்தமை வெள்ளிக்
கிரியின் மருவாத கேகை - கரிவனத்தின் 374

அத்தற்கு நஞ்சை அளித்தபிழைக் கம்போதி
மெத்தப் பயந்துபயன் வேறுதவி - சித்தத்தை 375

அன்புறுத்த வேண்டிஇரண் டாவ தொருபிறையும்
முன்படைத்த தொவ்வாத முண்டகமும் - மின்பரப்பும் 376

வித்துருவும் ஒப்பிலா வெண்முத்தும் மேலான
புத்தமுதும் சஞ்சரிக்கப் புஞ்சகமும் - கைத்தலத்தின் 377

முன்னிரக்கம் செய்யும் முதல்வனா ரைப்போலப்
பின்னிரக்கம் செய்யும் பெருவிடமும் - இன்னிசையைத் 378

தானே முரலுமணிச் சங்கும் கிளைத்தருவும்
வானே பெறாதோங்கும் வாரணமும் - மானத் 379

தனிமையெழில் வல்லி சாதகமும் போத
இனிய அரம்பை இனமும் - புனிதமாம் 380

அல்லலளி ஞெண்டும் வராலும் கமடமும்
நல்லனமும் சேர்த்துமலர் நாரிநிகர் - அல்லவெனப் 381

பெண்ணுருவ மாகிப் பிறங்குமணி பாரித்துக்
கண்ணுதல்முன் விட்டனைய காட்சியாள் - வண்ணமலை 382

ஈசனார் வேண்டி இருந்தவஞ்செய் யாநின்ற
ஊசிஅனைய உரோமத்தாள் - ஆசை 383

பகலுமிரு ளாகாமல் பாதுகாத் தோதி
முகிலின் விதுவை முடிப்பாள் - மகரம் 384

உகளுததி சூழ்ந்த உலோகரையும் லோக
மகளிரையும் மாலாக்க வல்லாள் - சகல 385

வனிதையர் சூழ மதனா லயத்தில்
இனிதுமலர்ப் பீடத் திருந்து - தனதருகு 386

சேவித்து நிற்குஞ் சிலைவேளைப் பார்த்(து)உன்னை
ஏவிப் பணிகொண்டோம் இன்றளவும் - நீவிரும்ப 387

யாஞ்செய்யும் கைம்மா றியம்புவாய் என்பாளைப்
பூஞ்செய்ய தாள்பணிந்து போர்மாரன் - ஈஞ்சைஎமக்(கு) 388

ஈந்தான் இபக்கா இறையவ னைச்செயிக்க
ஆய்ந்தாய்ந்து பார்ப்பேன் அறிகிலேன் - வாய்ந்த 389

படைத்துணையாய் நீவந்தால் பஞ்சசரத் தாலே
விடைத்துணையா னைப்பொருது வெல்வேன் - தொடுத்ததொடை 390

வாகை எனக்காம் வலப்பாகம் அக்கணமே
தோகை உனக்காம் தொடங்கென்ன - ஓகையுடன் 391

ஈதோ அரிதென் றெழுந்தாள்மெய் யில்லானை
நீதேரில் வாவெனப்பின் நேர்கொண்டு - வீதிதனில் 392

சென்றாள் விழிவேல் திருப்புருவ விற்கோலி
நின்றாளல் குற்றேர் நிறுத்தினாள் - குன்றை 393

முறிக்கு முலையானை முன்னணியும் மொய்கார்
நெறிக்குழல்மாப் பின்னணியும் நிற்பக் - குறிக்கைவளைத் 394

தானை மருங்கு தழைப்ப அணிவகுத்தாள்
யானைவனத் தானும் எளியனோ - சேனைக் 395

கணந்தொடர வன்னியார் கைமுயன்று போத
வணங்கு மயில்வடிவர் வாழ்த்த - இணங்குமுடி 396

அம்புருவஞ் சீதரனே யாகச் சிரமேரு
இன்பச் சிலையாய் எதிரேந்த - உம்பர் 397

கரபத் திரம்பொழியக் கல்லார வாகு
வரையிற் பணிவலைய மன்ன - வரியின் 398

முடுகு சினத்துரகன் முன்கை செறிய
அடுதிறற்கை மாமணிநின் றார்ப்பக் - கொடிய 399

துடியதிர நெற்றிக்கண் சோதிதர வேத
வடிவமுறுந் தேரேறி வந்தான் - பிடிநடையாள் 400

கண்டாள் நினைந்த கருமமறந் தாள்காதல்
கொண்டாள் உடல்புளகம் கூட்டினாள் - புண்டரிக 401

அம்பரா ஆதிப் பெருஞ்செல்வா ஆனைக்காச்
சம்புநா தாசந்த்ர சேகரா - பைம்பவள 402

வண்ணா வசந்த அழகா மதனையடு
கண்ணா அடியேனைக் காவென்றாள் - ஒண்ணுதலாள் 403

போற்றுவது கேட்டுப் பொறானாகி எம்மையலர்
தூற்றுவளோ என்றலரைத் தூற்றினான் - கூற்றுதைத்தோன் 404

தன்னை யடைந்தோர்க்குத் தவறுவர வொட்டுமோ
மின்னை யுவந்து விழிவைத்தார் - பின்னை 405

உருவிலியாங் கென்செய்தான் ஒத்தவா றொத்துச்
செருவிலியாய் ஈசன்பின் சென்றான் - வருதெருவில் 406

பேரிளம் பெண்

பொற்புற் றவளொருத்தி பொன்னாட்டின் மின்னார்க்குப்
பிற்பட்டு முற்பட்ட பேரிளம்பெண் - வெற்பின்மதில் 407

காவைச் சிவனாரைப் போலே கரடதட
மாவைப் பணிவிக்கும் வார்த்தையாள் - ஆவிவதை 408

பண்ணுதலால் பேணுதலால் பாகீ ரதிமுடித்த
கண்ணுதலான் இன்னருள்போற் கண்ணினாள் - வண்ணவழ(கு) 409

எல்லாஞ் சுமந்துகனத் தேயோ இனியதன(து)
அல்லாது மாறில்லை ஆகியோ - நில்லாக் 410

கிளரத் திசையிலிடங் கிட்டாத வாறோ
தளர்சிற் றிடைக்கிரங்கித் தானோ - கிளர்சிற் 411

றிடையரிகண் டானை எதிர்ப்பதோ இந்த்ரன்
படையிலடி சாயற் பதமோ - விடையோன் 412

அழுந்துவளை ஆகத் தணையப் பெறாதே
எழுந்துவளர்ந் தென்னபயன் என்றே - செழுங்கடலில் 413

ஆங்கால காலங்கண் டஞ்சியநாள் அண்டரெல்லாம்
வாங்காது கைவிட்ட மந்தரமோ - நீங்கா(து) 414

அடிமுடிவு காணா தரியயன் அஞ்சிப்
படிமிசையின் வீழ்ந்திறைஞ்சும் பண்போ - விடையோனைப் 415

பைஞ்சிலந்தி நூலைப் பறித்தகற்றி யேபணியும்
குஞ்சரமோ என்னவிழுங் கொங்கையாள் - அஞ்சிஉமை 416

காணா தரன்கலந்தால் காயத் திவையழுந்தில்
வீணார வாரமா மேயென்றோ - சேணாடர் 417

வீடார மானதனி வில்லா ளனைத்தழுவக்
கூடாத காதற் கொடுமையோ - நீடறிவான் 418

மாணிக்க முன்னா மணியொன் பதுமகத்தில்
ஏணிப் பசுவுறுப்பென் றெண்ணியோ - காணும் 419

அவையவத்தின் தொல்லை அபிராம மெல்லாம்
இவைகரக்க லாவதென் னென்றோ - கவினிசைத்த 420

நாணாகி யாபரணம் நான்கெய்தி யோநவமாம்
பூணாரம் அத்தனையும் பூணாதாள் - பாணிஉழைக் 421

கன்றேந்தி யைத்தழுவக் கண்டகன் வைப்பிரிந்த
அன்றே விழிக்கெழுதா அஞ்சனத்தாள் - தென்திசையில் 422

ஓடாத காற்றேர் ஒழிந்தால் உருவிலிக்கு
நீடாழித் தேராம் நிதம்பத்தாள் - ஓடாத 423

கங்குற் களிறு கருப்புச் சிலைமலர்க்கோல்
திங்கட் கவிகைகுயிற் சின்னமீன் - தங்குகொடி 424

கட்டாண்மை வேளுக்குக் காலமலாக் காலத்தும்
முட்டா துதவிவினை மூட்டுவாள் - எட்டான 425

தோளானை யாறு பருவத்தி லுந்தொழுது
நீளா தரங்கூரும் நெஞ்சினாள் - கேளார்சொல் 426

கேளா தனவரதம் கேதித் திருப்பாளை
வாளார் தடங்கண் மயிலொருத்தி - வேளாளர் 427

பாணம் உதவுபொழில் பார்க்கவா என்றழைப்ப
வாணுதலும் போதகற்று வான் சென்றாள் - நீணிலத்தில் 428

ஐந்து நிலமும் அமைந்து கிளர்காவின்
வந்துவளர் தேமாவை மாமகிழை - முந்தியகல் 429

லாலை வடத்தை அருச்சுனத்தை ஆத்திதனைப்
பாலையை வேயைப் பலாத் தன்னை - நீலியைப் 430

புன்னையைக் கூவிளையைப் புன்கைப் புனக்கடம்பை
வன்னியைக் கொன்றையை மாதளையைத் - தன்னைச் 431

சினைதரு பாதிரியைத் தில்லையைக் காயாப்
பனையை இலந்தையைப் பராயைப் - புனைகுருந்தை 432

நெல்லியை நோக்கினாள் நித்தருறை நீழலெனச்
சொல்லி யவற்றைத் தொழுதிட்டாள் - எல்லை 433

மாதர் பலரும் மயங்கி மடலேற
மேதகு திண்தேரில் வீதிதொறும் - பூதரமாம் 434

நன்னாவல் கண்டாள்வெண் ணாவ லாய்க்கொண்டு
தன்னாவல் தீரத் தழுவினாள் - என்னாயன் 435

தானன்றோ நீயென்றும் சம்புவே என்றேத்தி
ஆனந்த மாகும் அவசமுறும் - ஏனென்னும் 436

பங்கிற் பசுங்கொடியைப் பாவிக்கும் சேவிக்கும்
செங்கைச் செழுநீர்த் திரள்திரட்டும் - சங்கரனே 437

என்னும் சிவமருள் கொண் டிப்பாவை நிற்பவளை
அன்னம் தொடர்நடையார் ஆவாளைத் - துன்னறிவு 438

போந்ததோ மின்னேநம் பெம்மான்வெண் ணாவலிடம்
சேர்ந்ததோ ஆங்கவரைச் சென்றுதொழ- நேர்ந்ததென்(று) 439

ஆற்றி அணைத்துவரும் அவ்வளவில் அண்டரெலாம்
போற்றி செயசெய போற்றியென - நாற்றிசையும் 440

சேணோர்மண் ணோராய்த் திரண்டுவரக் கல்லாரப்
பூணோன் கயிலைப் பொருப்பினோன் - வாணன் 441

குடமுழவும் நாரதனார் கோதிலா யாழும்
இடமுடைய மூவர் இயலும் - படரும் 442

திருச்செவியில் நாயேன் தெளிவிலாப் புன்சொல்
இருத்தி யருள்கைக் கிசைவோன் - வரத்தில் 443

சிறக்கும் அயனாற் செருக்கியே செத்துப்
பிறக்கும்தெய் வங்கள் பெருமான் - நிறக்குமுரண் 444

சேவினான் கூடற் றிருவீதி யில்விறகுக்
காவினான் றென்னானைக் காவினான் - பூவினான் 445

சம்பு முனிகவுரி தந்தி சிலந்திகனல்
வெம்பு பரிதிமதி விண்ணவர்கோன் - கும்பன் 446

அறிந்தா றறிதுமோ அப்பதிகள் தோறும்
செறிந்தால் எனக்களித்தாள் சித்தம் - புறந்தழைத்த 447

தீர்த்த மகளிர் திருமால் பரவ அருள்
மூர்த்தி அவனி முழுதாள்வோன் - மாத்தேரின் 448

வந்தான்மற் றவ்வளவின் மாதரார் வீதியிற்கண்(டு)
இந்தா தொழுபவனி என்றுரைப்பச் - சந்தாபம் 449

ஆறினாள் பேரழகுக் காருமொவ்வா தீரென்று
கூறினாள் கைதலைமேற் கூப்பினாள் - தேறினாள் 450

பித்தரே ஆதிப் பெருஞ்செல்வ ரேமடவார்க்(கு)
எத்தரே வெண்ணாவல் ஈசரே - நித்தம் 451

புதியவரே ஓராரம் பூண்டபெரு மானே
அதிவிரகம் ஆனேன் அணையீர் - மதனன்என் 452

ஆருயிரைக் காய்ந்தால் அனைத்துலகாள் வாயென்று
பேருமக்குண் டாமோ பெருமானே - நீருருவால் 453

உம்மை வகுத்த முறையால் உமக்குமையாள்
அம்மைகண்டீர் எம்மையிடத் தாளுவீர் - இம்மையில்யான் 454

தானும் அவள்போல் தவத்திகண்டீர் தாழ்ந்தசடை
காணுமிமை யாதகண்ணுங் கண்டீரே - யானுநெடு 455

மாலுடனே வந்தேன் மலைவேளைப் பெற்றேனத்
தாலுமவ ளாகும் நான் தப்பாதே - ஏலுமவட்(கு) 456

ஒற்றைப்பா கந்தான் உதவியது வாங்கரிதேல்
மற்றைப்பா கந்தரினும் வாழேனோ - கொற்றவரே 457

என்று மதியா திசைத்தாள் இறையோனும்
மன்றல் மலர்த்தார் வழங்கினனோ - குன்றளித்த 458

வல்லிக்காய்த் தானஞ்சி மாரனைவாட் டேலென்று
சொல்லிக்காத் தானவ ளுஞ்சோராள் - எல்லையிலா 459

வில்லைக் குனித்தான்வெண் ணாவனிழல் வீற்றிருந்து
தொல்லைச் சிலந்திமுடி சூட்டினோன் - தில்லைச் 460
சிவாவனத்தான் எங்கள் செழுநீர்த் திரளான்
உவாவனத்தான் போந்தான் உலா. 461

நேரிசை வெண்பா

மெய்த்திறலோன் வில்லடியும் மீனவன்கை மாறடியும்
புத்தனெறி கல்லும் பொறுத்தநீ - முத்தமிழோர்
செஞ்சொல் தனைவிரும்புஞ் செம்புநா தாஅடியேன்
புன்சொல் தனையும் பொறு.

திருச்சிற்றம்பலம்

திரு ஆனைக்கா உலா முற்றிற்று
சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்