திருவிடைமருதூர் உலா ஆண்டபிள்ளையார் துதி சீருலா வான்றோர் செவிக்க ணிடைமரு தூருலா வேற வொளிதரும்பை - யேருலவப் பூண்டமா தங்கமதுப் பூங்கொன்றை யாரளித்த வாண்டமா தங்க மது. நூல் கலிவெண்பா பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமல மாமேவு மார்பமணி மாயவனுங் - கோமேவு 1 மிந்திரனும் வானோரு மேனோரு மின்பமுற வைந்துதொழி லாற்று மருட்கொண்மூ - வைந்துதொழில் 2 சந்ததமுஞ் செய்துந் தனக்கோர் தொழிலில்லா னந்த மலையரைய னன்கீன்ற - சுந்தரப்பொற் 3 கன்னி யொருபாற் கலந்தும் விகாரமிலான் றுன்னியெவற் றுந்தோய்ந்துந் தோய்விலான் - முன்னியமண் 4 ணாதியுரு வெட்டுமத்து வாவுருவோ ராறுமிருண் மோதிய வைந்தொழிற்கு மூலமாய்ச் - சோதி 5
மறுவின்மறை யாதி வகுத்தோன் - பெறுநெறியே 6 யாமுயிர்க்கே யின்ப மருத்தி நெறிதப்பிப் போமுயிர்க்கே துன்பம் புணர்த்துவோ - னாம 7 விருள்கே வலத்தி னிணர்த்தருவிற் றீயாய்த் தெருள்சே ரிடையிற்கற் றீயா - யருள்சேருஞ் 8 சுத்தத்திற் காரிரும்பிற் றோய்தீயே - யாய்நிற்போ னெத்தத் துவங்கட்கு மெட்டாதான் - முத்தன்றன் 9 வாமத்தைப் பூமேவு மாதர்கடொட் டுப்புனைய நாமத்தைச் செய்விடமுன் னாள்யின்றோ - னேமத்தண் 10 சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோ - னல்லற் 11 சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னங் குறுகியிருள் கூடவைத்த கோமான் - றெறுபசியால் 12 வந்தழுத சேயின் வருத்தந் தெரிந்தமுது தந்தமடைப் பள்ளி தனைக்கொடுத்தோன் - கந்த 13 மலர்மலரென் றுன்னா மதன்மெய் குளத்து ளலர்கட் கமலத் தழித்தோன் - பலர்வெருவத் 14 தோற்று தொழினஞ் சுதந்திரமன் றென்றெண்ணாக் கூற்றுயி ருண்ட குரைகழலான் - சாற்றும் 15 பிரணவத்துண் மேயோர் பிரமன்மா லென்பார் முரணவிக்குங் கொன்றையந்தார் முன்னோ - னரணவரை 16 மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால் கண்வைத்துங் காணாக் கழலினா - னெண்வைத்துக் 17 கண்கை யிடந்துகொலை கண்ணுபு கொள்ளாமல் வண்கையிடங் கொண்டவசி வாய்ப்படையா - னெண்கவினார் 18 தன்னிரதம் பாதலத்துத் தான்புக் கழுந்தாமன் மன்னிரத நீர்வேணி வைத்தபிரான் - றுன்னுகணை 19 வாளியெளி தீர்தரப்பின் வாளிலங்கை மன்னனைமுன் றாளின் விரனுதியாற் றானடர்த்தோ - னாளும் 20 புணரு மடியார் புரிபிழையு மேனோர் குணமு மிகந்தகுணக் கோமான் - மணமலிபூங் 21 காவின்மயி லேத்தவரு கண்ணரைமா லென்றுநினைத் தோவினடஞ் செய்கயிலை யோங்கலிடை - மேவிநல 22 மாவித் தகத்து வயங்கா கமமுழுதுந் தேவிக் குபதேசஞ் செய்தருள - மாவிற்கண் 23 ணன்னமயின் மண்ணுலகை யான்றெரியு மாகாட்டி யின்னலற நீவிற் றினிதிருக்கு - நன்னயவி 24 சேட தலமுந் தெரித்தருள வேண்டுமெனச் சூடகச் செங்கைத் துணைகூப்ப - வாடமைத்தோ 25 ணங்காய்நன் றென்று நரையேற்றின் மீமிசைமற் றங்கா தலியோ டமர்ந்தருளிப் - பங்காளுங் 26 கோதாய்காண் கென்று குவலயமுற் றுந்தெரித்து மேதா வியர்புகழு மேன்மைபுனை - போதாருங் 27 காவிரியுங் கோட்டுவளக் காவிரித்தென் பாற்பொலியும் வாவி யிடைமருதூர் வாய்மேவ - வோவியநேர் 28 தலவிசேடம் மின்னையு மாதவனும் வேதனுங் காணாத தன்னையு நாடிவந்த தன்னைபோற் - பன்னுபுகழ் 29 வாகீசர் போல வருந்தித் தமிழ்நாட்டீ ரேகீ ரெனவந் திறுத்ததுபோல் - வாகார் 30 திருப்புவன முற்றுஞ் செழுமறைகள் யாவும் விருப்புமிக நின்றேத்தும் வெள்ளிப் - பொருப்புப் 31 பெருவளவர் நாட்டின் பெரும்புண் ணியத்தா லொருமருத மாகியவ ணுற்ற - தருமையத 32 னன்னிழற்கண் வானி னரையேற் றிணைநிறுவித் தன்னிட நீங்காத் தலைவியைப்பார்த் - தின்னகையாய் 33 மேவுறு நன்பூ மிகவுகுத்து விண்ணுலகைப் பூவுல காக்கும் பொழில்பாராய் - தாவிமிசைப் 34 பொங்கவுரி ஞிப்பொற் பொடிவீழ்த் துபுமண்ணைப் பங்கமில்பொன் னாக்கும்விட பம்பாரா - யெங்குநின்மெய்க் 35 காமரொளி பாய்தலிற்கார் கால மெனக்கருதி மாமையினன் காடு மயில்பாராய் - பூமருநஞ் 36 சேயொளியாற் பைந்தழைகள் சேப்புற வேனிலென்று கூயமருந் தேமாங் குயில்பாராய் - மேயவிரு 37 நம்மேனி யொன்றியென நன்கொருபாற் சேந்தொருபாற் பைம்மேனி யாமாம் பழம்பாரா - யம்புலிக் 38 கான்முனிதன் மைந்தன்முதற் காணு முழுமுனிவர் மான்முதனீத் தாற்றிடுத வம்பாராய் - பான்மொழியே 39 யென்றுகாட் டத்தனிகா ணெவ்வுலகு மீன்றளுக் கொன்றுமகிழ் வாற்க ணுறைதுளிப்ப - வன்றதுமுற் 40 காணுந் திசையோடிக் காருணி யாமிர்தமென் பூணும் பெயரிலகப் பூண்டதன்மேற் - கோணிலவு 41 சூடியதன் கண்கள் சொரிநீ ரிருகூறா யோடி வடமேற் குதக்கெதிருங் - கூடுதடத் 42 துட்போய் விழமு னுலர்ந்த சலசரங்கா னட்பாம் விதிக்கு ந்றுந்தடத்துப் - பெட்பா 43 முருத்திர ராகியெழுந் தொண்மலர்த்தாள் போற்றிப் பெருத்தசிவ லோகமுற்ற பின்னர்த் - திருத்தவண்வாழ் 44 தண்முனிவர் முன்பு தமிழ்மணக்குஞ் செங்கனிவாய் வண்முனிவன் வந்துதவ மாமுனிவீர் - கண்ணொருமூன் 45 றுற்றபுகழ்ச் செய்யகரும் புங்கையுறும் பைந்தோகை பற்றி முயலுமென்றப் பாற்போக - வெற்றி 46 முனிவரரவ் வாறெம் முதல்வியை நோக்கிப் புனித தவம்புரியும் போது - நனிமகிழ்ந்து 47 தன்னே ரிலாத தலைவியை முன்புகுத்த வன்னேர் குழலு மவணடைந்து - பொன்னேர் 48 வளவர்பெரு மானாடு மாதவத்த தென்ன வளவிலா மாதவமங் காற்ற - வுளமகிழ்வுற் 49 றெம்மா லயன்முன்போ லின்றுஞ் செருக்கடைந்தா ரம்மாவென் றியாரு மதிசயிப்ப - விம்மாநன் 50 சோதியுருக் கொண்டெழுந்து தோன்றினோன் - றீதிலரு 51 ளானேயென் றேத்து மவர்தெளியு மாறுதன்னைத் தானே யருச்சித்த தம்பிரான் - வானாட 52 ராதியர் காமிகமுன் னாமா கமத்தின்வழி யோதியருச் சிக்க வுவந்தருள்வோன் - போதியனீர் 53 காகம் படியக் கனகவுரு நல்கிப்பி னேக வுருத்திரமெய் யெய்தவைத்தோன் - கோகநக 54 மாண்டமல ராதிகொடு மன்னா கமத்தின்வழி யாண்டமத வேழ மருச்சித்தோன் - பூண்டதவத் 55 தோதை கெழுசீ ருரோமசற்கு வெற்பீன்ற கோதையொடு காட்சி கொடுத்தபிரான் - மேதை 56 யொருவீர சோழ னொளிரா லயமும் வெருவா நகரமுஞ்செய் வித்துத் - திருவார்தைத் 57 திங்கட் டிருநாளுஞ் செய்வித்துப் போற்றிசெய வங்கட் கருணை யருளியகோ - னங்கண்மிரு 58 கண்டு மகன்பணியக் கண்டொரு பாற்பசுமை கொண்டுமிளிர் காட்சி கொடுத்தகோன் - றண்டாப் 59 புரவுக் குறுமுனியெப் போதுறுமென் றன்னான் வரவுக் கெதிர்பார்க்கும் வள்ளல் - பரவுற்ற 60 பூசைவினை முற்றுவந்து புண்ணியச்சு கீர்த்திதனக் காசில்வினை யெச்ச மளித்தபரன் - காசிபன்றான் 61 கண்ணனிள மைக்கோலங் காணத் தவம்புரிய வண்ணலது காட்டுவித்த வைம்முகத்தோன் - வண்ணக் 62 குமரன் முனிவரொடுங் கூடியரன் றிக்கி லமர நதியை யமைத்துத் - தமரமிகப் 63 பூசிக்கப் பெற்றோன் புகழிட்ட ரோமன்சு கேசிக் கினிய கிளர்மதலை - வீசி 64 யனையமகன் கங்கைபுகுந் தாடுறுபோ தந்த நினையுநதி யோரா நெறிக்கொண் - டினையலென 65 வென்னைப் புரப்பாள்க ணீர்ம்புனல்வா விக்குள்வரக் கொன்னைக் குழமகனுங் கூடவந்து - முன்னையொரு 66 வாவிபடிந் தையாற்று வாவியிடைச் சொல்லரசர் மேவியெழுந் தென்ன வெளிவந்து - கூவிவரு 67 மத்தனொடு கூடி யடிபோற்றி யேத்தெடுப்பச் சித்த மகிழ்ந்தருளிச் செய்தபிரா - னுத்தமச்சீர் 68 வாய்த்த தசரதற்கும் வண்பூவைப் பூவைநிறஞ் சாய்த்தவுடற் கண்ணனுக்குந் தானுவந்து - பூத்த 69 மதலைபல நல்கி வழிபட்டா ரென்று மதலைபல நல்கிய வள்ளல் - சுதமில் 70 புகழிரா மன்கணையாற் பூந்தடமொன் றாக்கித் திகழ வழிபாடு செய்ய - மகிழ்சிறந்தோன் 71 மச்சகந்தி யைப்புணர வந்த வருவருப்பை மெச்சும் பராசற்கு வீட்டினோ - னச்சமிலா 72 தாசா னிலாட்புணர்ந்த வாசுங் கலைக்குறைவுந் தேசார் மதிவணங்கத் தீர்த்தருளு - மீச 73 னினைத்தொருதீர்த் தத்தி னிமிமகன்க ண்டப்பு ணனைத்தவுடன் காயவைத்த நாதன் - வினைத்திறனோ 74 ரைவரு நீர்தோய்ந் தடிபணிய மண்ணளித்த தெய்வப் பெருமான் சிவபெருமான் - குய்யம்வைத்து 75 வேந்தன் வலற்செகுத்த வெம்பழிக்கும் பாகனைக்கொன் றேந்துபழிக் கும்பழிச்ச வீறுசெய்தோன் - போந்துதழல் 76 காண்ட வனத்தைக் கலந்தவுயி ரோடுண்ண வீண்டரின்முற் றும்பரவ வீடழித்தோன் - மாண்ட 77 குறுமுனி கண்களிக்கக் கூற்றாவி மேவி மறுவி லகோரவுரு வாய்ந்தோ - னுறுசீர் 78 நிருதிதடந் தோயு நியதியரைப் பேய்முற் கருதியடை யாவண்ணங் காப்போன் - சுருதி 79 நடையார் வருண னறுநீர் படியக் கடையார்சோத் தீப்படியக் கண்டோ - னடையுங் 80 கிருகலன்கா னீர்மூழ்கிக் கேடிலா முத்திப் பெருமுழுநீர் மூழ்கவைத்த பெம்மான் - வருமொருதன் 81 றோழன் றடம்படியுந் தூயோரை மற்றவனுந் தாழ வுயர்த்துந் தனிமுதல்வன் - வாழ்வடைவா 82 னேகாமார்க் கண்டமுனி யீசான நீர்மூழ்கச் சாகா வரங்கொடுத்த தண்ணளியோன் - வாகான 83 கண்ணன்கூ வத்துக் கருதிமழைக் கோண்மூழ்கக் கண்ணன் களித்தருளுங் காபாலி - கண்ணுவணம் 84 பண்ணிய தீர்த்தமுதற் பத்துந்தோய் வார்பிறப்பை மண்ணி யருளு மகாலிங்கம் - புண்ணியமே 85 மேவவளர் கச்சபனா மெய்ம்முனிவன் முன்வாம தேவவுருக் கொண்டெதிர்ந்த தேவர்பிரா - னோவறமுன் 86 கோதமதீர்த் தந்தோய் குணத்தா லகலிகைக்கு வாதனைப்பா டாணவுரு மாற்றுவித்தோன் - போதலர்கல் 87 யாணதீர்த் தங்கார்க்கோ டன்படிய முன்பரிச்சித் தேணறத்தீண் டிக்கொள்பழிக் கீறுசெய்தோ - னீணிலஞ்சே 88 ரந்த நறுந்துறைபுக் காடுநள னுக்குச்சி வந்த கலியைக்கறுத்து மண்கொடுத்தோ - னந்துமதில் 89 வெள்ளை முழுகவொரு வேதியனைக் கொன்றபழிக் கள்ளக் கறுப்பகலக் கண்சிவந்தோன் - றள்ளரிய 90 சீர்த்திப் பகீரதனத் தீர்த்தம் படியநலங் கூர்த்தவான் கங்கை குவலயத்தி - லார்த்துவரச் 91 செய்தோ ரறுப தினோயிரரு முத்தியுல கெய்தா விருக்க வினிதளித்தோன் - வையகத்துப் 92 பொல்லா னொருவன்வந்தப் பூசத் துறைபடிய வல்லார் மெய்க்கூற்றவனுக் கஞ்சவைத்தோன் - சொல்லுமந்நீர் 93 வல்லா னெனச்சேடன் வந்தாட மண்சுமக்கும் வல்லா னெனச்சொல் வலியளித்தோ - னல்லார் 94 திகழத் துறைகந்த தீர்த்தமெனக் கந்தர் புகழுற்றா டக்கருணை பூத்தோ - னிகழ்வற்ற 95 வத்துறையில் வேந்த னயிரா வதமுனிவன் வைத்தசா பங்கழுவ வைத்தவருண் - முத்த 96 னொருகோட் டியானை யுவந்தாடித் தன்பே ரிருகோட் டதற்கிடவுள் ளேய்ந்தோ - னொருவீர 97 சேனன் படியச் செறிபிர மக்கொலைதீர்த் தீனமிலா வான்கைலை யேற்றினோன் - மானமிகு 98 சித்திர கீர்த்தி செறிந்துபடிந் தர்ச்சிக்கப் புத்திரனை நல்கும் புகழாளன் - சுத்த 99 மறையோன் கனகதடம் வந்து படியக் குறையார் குருடொழித்த கோமா - னிறையோனோய் 100 விண்ணுலகை யாளமரர் வேந்தன் முடிதகர்த்து மண்ணுலகை யாளும் வயவேந்தன் - றண்ணளிசேர் 101 வரகுணபாண்டியதேவர் வழிபாடு மன்னன் மதுரை வயங்கு வரகுணத் தென்னன் பெருங்கானஞ் சென்றொருநாண் - முன்னுகடு 102 மாவேட்டஞ் செய்துவய வாம்பரிமேன் மீள்பொழுதோர் தீவேட்ட வேதியனச் செல்வழியின் - மேவி 103 மயங்கிக் கிடந்துகன வட்டத் தடியா லுயங்கிக் கழிய வுணரா - னயங்கெழுசீர் 104 பெற்றதன்னூர் மேவப் பிரமக் கொலைதொடர வுற்றதெவை யாலு மொழியாம - னற்றவர்சூ 105 ழாலவா யண்ண லடிபோற்ற வக்கடவு ளேல விடைமருதூர்க் கேகென்னச் - சாலமகிழ் 106 பூத்தனையான் வந்து புகுபோதே யப்பழியைத் தீர்த்தருளிச் செய்திடவத் தென்னவனு - மாத்தலமா 107 மித்தலத்தை நீங்கே னெனவங் குறைந்திடுநா ளத்த கொடுமுடி யாவரணம் - வித்தகமாய்ச் 108 செய்துசூ ழென்று திருவாய் மலர்ந்தபடி செய்துசூழ்ந் துங்கரவு தேரொருவன் - செய்யநுதல் 109 வெண்ணீறு கண்டு விசித்தகடுங் கட்டவிழ்த்து நண்ணீ றிலாதபொரு ணன்களித்து - மெண்ணிநரி 110 யுள்ளன வெல்லா முடையானைக் கூவியவென் றெள்ளரிய வாடை யினிதளித்தும் - விள்ளாத் 111 தவளை யரமுழக்கந் தான்செய்த தென்று திவண்மணிபொன் வாரிச் சிதறி - யுவகையுற்று 112 மெள்ளுண் டவன்வா யிசைத்தமொழி கேட்டனையான் றள்ளுண்ட வெச்சி றனைநுகர்ந்துங் - கொள்ளா 113 விழிகுலத்தோன் சென்னியவ்வூ ரெல்லைகிடக் கக்கண் டிழிகணீ ரோடுகரத் தேந்திக் - கழிவுற் 114 றடியேன் றலையுமிவ்வா றாகியிவ்வூ ரெல்லைக் குடியாமோ வென்றிரக்கங் கொண்டும் - படர்தளிமுற் 115 புன்குல நாய்மலந்தன் பொற்பூங்கை யாலெடுத்து நன்குறவேம் பிற்குவிதா னஞ்சமைத்து - மன்புமுதிர் 116 பொன்னு நிகராப் புணர்முலைத் தேவிதனை மன்னு மியற்பகைக்கு மாறாக - முன்னு 117 முயர்மருத வாணா வுவந்தடி யேனுய்ந் தயர்வறநீ கொள்கென் றளித்தும் - பெயர்வரிதா 118 வின்னும் பலபணிசெய் தின்புறுமக் கோமாற்கு மன்னுபுகழ் முத்தி வழங்கினோ - னன்னிலைமைத் 119 தொல்லை யுவனாச் சுவன்வயிற்று மாறாப்புண் வல்லை வலஞ்சூழ மாற்றினோன் - வெல்லுமவன் 120 மைந்தன் புறங்கொடுத்த மாற்றானைக் கொன்றபழி முந்தவலஞ் சூழ்முன் முருக்கினோ - னந்துவசு 121 மான்வந்து சூழ்போது மற்றவன்ற னாடவனைத் தான்வந்து சூழத் தலையளித்தோ - னீனந்தீ 122 ரஞ்சத் துவச னடைந்துசூழ் முன்பவற்சூழ் வஞ்சப் பிரமகத்தி மாய்த்தபிரான் - விஞ்சுபுகழ்ப் 123 பூசத் துறைபடிந்த புண்ணியர்கால் கைப்புனறோய்ந் தாசற் றிரண்டுயிர்வா னண்ணவைத்தோன் - மாசற்ற 124 நாரத மாமுனிவ னண்ணிவிழாச் சேவிக்க வாரம் படுகருணை வைத்தபிரான் - வார்மீ 125 னுணங்க லுயிர்பெற் றுருத்திரர்க ளாகி யிணங்குலகத் தெய்தவரு ளேந்த - லுணங்கன்மீன் 126 கொண்டபொதி யிட்டிகைகள் கொண்ட வொருவனுக்குத் தண்டலில்பொன் னாகச் சமைத்தபிரா - னண்டர்தொழப் 127 பொன்னுருவத் துட்டான் பொலியுமுரு வொன்றியைத்துத் தன்னுருவி லாவுருவந் தான்றெரித்தோன் - பன்னுபொரு 128 ளோர்வளவற் கீந்தனையா னொண்பொருள்வீ சிப்பணிக ளார்தரச் செய்ய வருள்வைத்தோ - னோரு 129 மணங்கனுக்கு மின்னா யவதரிக்கச் செய்தோர் சுணங்கனுக்கு முத்திதந்த தூயோ - னிணங்குபொடி 130 மெய்ப்பூ சவர்கேட்ப மேவுதிரி யம்பகன்றான் றைப்பூச மாடத் தகுமென்றோ - னெப்பேது 131 மில்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர் 132 தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக வண்மாந் துறையிரவி வைப்பாக - வெண்மாறா 133 நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணுந் 134 தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர் மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - வுன்னிற் 135 றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக விடைமருதில் வீற்றிருக்கு மீச னடைதருசீ 136 ரேற்ற வுருத்திரர்க ளேகா தசரும்வந்து போற்றவருள் செய்த புகழ்ப்பெருமான் - மாற்ற 137 மிணங்குமணி பொன்னாதி யிட்டமர ரென்றும் வணங்கு மருதவன வாண - னணங்கயர்புற் 138 றோலுடையான் காதில்வளைத் தோடுடையா னீடமர்கல் லாலுடையான் யாவரையு மாளுடையா - னூலுடையார் 139 நாடுவோன் பற்றாத நாயே னிதயத்துங் கூடுவோன் பொன்செய் குளிர்மன்றத் - தாடுவோ 140 னோராழித் தேரோ னுதீசித் திசையென்னுஞ் சீராழி யங்கைமகட் சேருவா - னேராகச் 141 சென்மதியுண் முன்மதியிற் றேய்மதியில் பக்கத்து நன்மதிகொ டன்வத னத்தொகைகொ - டுன்னுதிதிப் 142 புட்கொடி யைக்கொண்டு பொறிக்கொடி மார்பிற்கொண்மரைக் கட்கொடி யேற்றிக் களிசிறப்ப - விட்குலவு 143 குன்றுபுரை தோளாருங் கோற்றொடியா ரும்புவனத் தொன்று பலரு முடனெருங்க - வன்றுமுதற் 144 காலையினு மாலையினுங் காமர்பல தூரியமும் வேலையினு மார்ப்ப வியன்மறுகின் - மாலைபெற 145 வெற்பு நிகர விளங்குபல வூர்தியினும் பொற்பு மலிபவனி போந்தருளி - யற்புமுதி 146 ரின்பதா மென்ன வெவருந் தொழச்சேரு மொன்பதா நாளென்னு மொண்டிருநாண் - மின்பயில்பூண் 147 வாய்ந்த பெருநல மாமுலை யோடியற்று மேய்ந்த துயினீத் தினிதெழா - வாய்ந்தசெழும் 148 பைம்பொற் றகட்டிற் பலமணியுங் கால்யாத்த வம்பொற் றிருமண் டபமணுகி - நம்புற்ற 149 வீறுதரு மாகமஞ்சொன் மிக்க விதிப்படியே கூறு மபிடேகங் கொண்டருளி - நாறுகுழற் 150 மைவளையு நீல மலர்நோக்கான் - மெய்வளைத்த 151 பேரழகு நோக்குதலாற் பேதையவணயனக் காரழகு மேனி கலந்ததென - வீரமலி 152 காத்திர கும்பக் கருமலையிற் கொள்போர்வை போர்த்தி யிருந்த பொலிவென்னச் - சீர்த்திமிகு 153 பன்முகத்து முள்ள பலவண் ணமுமறையத் தென்முகத்து வண்ணமெங்குஞ் சேர்ந்ததெனத் - துன்னுபிறர் 154 தப்பார் தருக்கொழிதல் சான்றிதென மால்கொடுத்த குப்பாய மெய்ப்புனைந்து கொண்டதென - வொப்பேது 155 மில்லாத் திருமேனி யேந்தழகைச் சாந்தமுலைப் பல்லாருங் கண்டு பசப்பெய்திப் - புல்லாளப் 156 பெட்டாவி மாழ்காமற் பெய்வளைக்கை யம்மைகரும் பட்டான் மறைத்த படியென்னக் - கட்டார்கொ 157 ளோதிமுடி யாள்சமழ்ப்ப வோங்கற் புதல்விமற்றோர் பாதியுரு வுங்கவர்ந்த பான்மையெனத் - தீதின்மணம் 158 பொங்குநீ லோற்பலப் பூமலர்த் தாளன்றி யெங்குநெருக் குற்றே றியவென்னத் - தங்கு 159 மணமாரும் பஞ்ச வடியொளிபாய்ந் தென்னத் தணவாத் திருச்சாந்து சாத்தி - நிணமலிவாய் 160 வேங்கை கொடுத்தகலை வீக்கு மிடத்தொளிரும் வேங்கை கொடுத்தகலை வீக்கியே - யோங்குபய 161 னாய்ந்தவொரு பெண்ணுமற்றோ ராணு மனமகிழச் சாய்ந்து நிமிர்ந்த தனியிடத்து - வாய்ந்தபுனற் 162 பெய்வளை மாதைப் பெருநல மாமுலைதன் மைவிழிகா ணாமன் மறைத்ததெனக் - கைவல்லா 163 ராற்று மணிமகுட மம்பவள வோங்கன்மிசைத் தோற்றுகதி ரென்று சொலக்கவித்துப் - போற்றுபுக 164 ழாற்றன்மிகு கண்ணப்ப ரன்பிற் சொலுமுகம னேற்றுமகிழ் பூத்த வியலிடத்துச் - சாற்றுபுனன் 165 மங்கை யுரைக்குமொழி வந்து புகாதுமையாள் செங்கை புதவஞ் செறித்ததெனப் - பங்கமிலா 166 மாமணிசெய் தோடும் வயிரஞ் செயுமம்பொற் றூமகர குண்டலமுந் தொட்டணியா - வேமவரை 167 யொன்று படவிறுகி யோங்கன்மகண் மார்பில்வளர் குன்றுபட மெல்கிக் குழையிடத்து - நன்றுதரு 168 போகுசுடர்ப் பன்மணியும் பொங்கியெழக் கால்யாத்த வாகு வலயம் வயக்கியே - மாகவின்செய் 169 கஞ்சக்கண் மாயனயன் கற்பகக்கோ னாதியர்கூற் றஞ்சச் சிறைவைத்த வவ்விடத்தே - விஞ்சுபுகழ் 170 மின்னுமுல கங்களெலாம் விற்றாலு மீடாகா மன்னுமணிக் கட்டு வடமணிந்து - பன்னுமுமை 171 வட்ட முலைக்குமணி வாரா மிடத்தண்ட மட்டினிலா விற்றரள மாலையிட்டு - முட்டரிய 172 தாவின் மணிவீர சங்கிலிம தாணிபல மேவிய வாயிடைமேன் மேற்புனைந்து - தாவா 173 மடங்கீண்ட தொண்டருத்த மாங்கந்தாங் கக்கல் லிடங்கீண் டெழுந்த விடத்தே - மடங்காக் 174 கருவி தனக்குக் கருதுபிற வேண்டா விருமை மணிக்கடக மிட்டுக் - கருது 175 மலரோன் முடிதுணித்த வைவாட் குறையா யிலகுமிடத் தாழிபல விட்டு - நலமருவு 176 பொன்னுக்குப் பின்னிருந்து பொங்குவெள்ளி தங்கிடத்து மன்னுதர பந்தம் வயக்கியே - துன்னியொரு 177 பன்றி தொடரமற்றோர் பன்றி தனைத்தொடர்ந்து சென்ற விடத்துச் சிலம்பணிந்து - நன்றவற்றுட் 178 கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன் கண்ட விடத்துக் கழல்கட்டித் - தண்டாத 179 மாதங்க வுத்தரிய மன்னு மிடத்தொளிசெய் மாதங்க வுத்தரிய மன்னுவித்துத் - தாதுவிரை 180 தாவாத கொன்றையந்தார் சர்ப்பப் பிராந்தியிட மோவாதாண் மேவ வுவந்தணிந்து - பூவார்கை 181 கொண்டகருப் புச்சிலையான் கோலத் திருமேனி யுண்ட கடுங்கூற் றுறையிடத்தே - தண்டலில்பா 182 லேறு கடலலைமா லேய்நீற்றுத் தூளனமே னாறுதிரி புண்டரநா னத்திலகம் - வீறுகொள 183 விட்டுமதிப் பாதி யெடுத்துமுடி மேற்கவிய நட்டினது வைத்த நயமென்ன - வெட்டுணையு 184 மாசுசா ராத வயிரமுழுக் கச்செறித்த தேசு மிகுவா சிகைசேர்த்துப் - பேசுபுக 185 ழிட்டநமக் கோரிளவ லின்றுவரு மென்றுமலர் மட்டுறுதா ராரூரன் மன்னுவகை - யுட்டுளைய 186 நின்வலப்பா கத்தொருத்தி நீங்கா திருப்பதென்னென் றென்மலர்வா மத்தா ளிசைத்தூட - நன்மைதிக 187 ழம்மதியை யிவ்வரவு மவ்வரவை யிம்மதியுஞ் செம்மை யுறவுகொண்டு சீர்படைப்ப - மும்மைப் 188 புவனத்துந் தான்றோய் பொலிவுணர்த்த லேய்ப்பப் பவளக்காற் கண்ணாடி பார்த்துத் - திவள்பருப்புப் 189 பொங்கல்பான் மூரல் புளியோ தனங்குளஞ்சேர் துங்கமடை நெய்மிதக்குஞ் சொன்றியளை - தங்கயினி 190 பாகு கருனை பகரும் வறையறுவை யாகு மிலட்டுகமெல் லாவியப்பம் - போகுசுவை 191 நோலை யடைநன் னுவணை முதற்பலவுஞ் சோலை யுதவு சுவைக்கனியுங் - காலை 192 யிளநீர் குளநீ ரியன்மோ ரளாய வளநீர் கனிபிழிந்த மாநீ - ரளவா 193 வெவையுஞ் சுவைதேர்ந் தியலவாய் பூசிக் குவைகொள்விரைப் பாகடையுங் கொண்டு - நவையரிய 194 மேதகுதூ பந்தீப மிக்க விவைமுதற்செ யோதுபசா ரங்க ளுவந்தருளிக் - கோதறுசீர் 195 வாய்ந்தவொரு தானும் வயங்கு தனதருளிற் றோய்ந்தவடி யாருஞ் சொலவந்த - வாய்ந்த 196 வெழுதா மறையு மெழுது மறையும் வழுவாது கேட்டு மகிழ்ந்து - தொழுவார் 197 நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய வயங்கு மொருகோட்டு மாவுஞ் - சயங்கொள்சத 198 கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத் தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும் -பாடியலா 199 வோட்டை மனத்தக்க னோம்பரணிச் சோதிமகங் கேட்டை யுற்ச்சிவந்த கேடிலியு - நீட்டுமொரு 200 வைத்தலைநெய்த் தோரேற்ற வானவனு - நித்தமுந்தன் 201 னாய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத் தாய்மனை யென்றழைக்கத் தக்கோனுந் - தூயவையை 202 நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை யோரும் படியருள்கொ ளொண்மழவுந் - தீராத்துன் 203 பாய கடலமண ராழ வரையொடலை மேய கடன்மிதந்த வித்தகனு - மாயவன்கண் 204 காணாக் கமலநடுக் கங்குலினா ரூர்த்தெருவின் மாணாகப் பூத்துழல வைத்தோனுங் - கோணாது 205 மூகைவாய் பேச முழுப்பேச்சு வாய்மூகை யாக வியற்றிய வாண்டகையும் - பாகமிலாத் 206 தாதையிரு தாடடிந்து தாயையொரு பாகங்கொ டாதையிரு தாளடைந்த சான்றவனு - மோதைகெழு 207 கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை 208 யாய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய வாய்நீர் பொழியன்பு மாமுகிலும் - பாய்மை 209 தகவரிந்தூட் டாது தலையிழந்தா னாண மகவரிந் தூட்டியசீ மானு - நகமறைக 210 ளீன்றதன்வா யென்று மிசைத்தறியா வம்மையெனு மான்றசொல்லி சைக்க வமைந்தாளுஞ் - சான்றதிரு 211 மங்கலப்பொம் கொண்டுமனை வாய்மொழிசொற் கொள்ளாது குங்கிலியங் கொண்டுவந்த கொள்கையனும் - வெங்கொடியோன் 212 கோச மறைத்தவாள் கொண்டுதகா தாற்றவுந்த னேச மறைத்தறியா நீதியனும் - வாசமுறத் 213 தோய்ந்தபுக ழாரூரன் றொண்டத் தொகையுணிலைத் தாய்ந்தபுகழ் மற்றை யடியாரும் - வாய்ந்த 214 வலர்துழாய் நாறு மகன்றளியைக் கொன்றை மலர்துழாய் நாறவைத்த மானு - நிலவு 215 முலகுண் டுமிழ்ந்த வொருவனைப்பா லுண்போ துலகறிய வுண்டுமிழ்ந் தோனு - மிலகுநடங் 216 கண்டே பசிதணிக்குங் காமர் விரதமொன்று கொண்டே விளங்கு குணத்தவருந் - தண்டேறல் 217 பெய்தவர் பெய்யலர் பேசல ரேயாகச் செய்தவ ரென்னுமற்றைச் செய்தவருங் - கையிற் 218 குடவளை கொண்டுங் குடவளைக்காய்ப் பாடி வடவளை கட்டுண்ட மாலு - மிடவளையப் 219 பூமேலெஞ் ஞான்றும் பொலிந்தும்புத் தேளாய்ச்செந் நாமேல்வெண் மாதுவைத்த நான்முகனு - மாமே 220 வொருசுவர்க்கங் கைக்கொண் டுவந்தயி ராணி யிருசுவர்க்கம் வைகு மிறையும் - பொருவரிய 221 வெற்பகநா ணப்பொலிந்து வீங்குதோண் மேற்புனைந்த கற்பக மாலைக் கடவுளரும் - பொற்பகலாத் 222 தேந்தா மரைமலர்த்துஞ் செங்கதிரும் பூவினுக்கு வேந்தா மதுகுவிக்குவ் வெண்கதிருங் - காந்தாப் 223 பொலிபடைகொண் டாசை புரப்போருஞ் சீர்த்தி யொலிபடைத்த பூதகணத் தோரு - மலியுமிசை 224 பத்தர்பதி யாழ்கொண்டு பாடுந் தொழிலவருஞ் சித்த ருரகர்முதற் செம்மையரு - முத்தமமீ 225 தெண்போ தெனவொருவ னெள்ளெச்சி லுண்டவிமற் றுண்போர் பலரு ளுயர்ந்தோனும் - பண்போ 226 ரணிக்கோவை தீட்டி யகமகிழ்தற் கோர்மும் மணிக்கோவை சூட்டியகோ மானும் - பிணிக்கோதி 227 லாதிசைவ ராதி யணியா லயத்தொண்டிற் கேதிலரா காதியற்று மெல்லோரு - நீதிநெறித் 228 தக்கபெருஞ் சீர்ச்சுத்த சைவசித்தாந் தத்திருவின் மிக்க திருக்கூட்ட மேன்மையரு - மொக்கவரப் 229 பண்பார்கை லாய பரம்பரை மெய்கண்டா னண்பார்சந் தான நனிதழைக்க - விண்பார் 230 புகழ வருங்குரவர் போரேறு ஞானந் திகழவரு மானந்தச் செல்வ - னிகழ்வி 231 றுறவுபூண் டோர்பலர்க்குஞ் சூளா மணிமிக் குறவுபூண் டெவ்வுயிரு முண்மை - பெறவுவக்கு 232 ஞான விநோதனுயர் நாவலர்தம் போரேறு சான முடையார் தனித்துணைவன் - மானத் 233 திருவா வடுதுறைவாழ் செல்வன் கருணை மருவா வருநமச்சி வாயன் - பொருவா 234 வரமணியென் றெல்லோரும் வாழ்த்தப் பொலிசுப் பிரமணிய தேசிகனெம் பெம்மான் - பரவுமுண்மை 235 தாங்குபெருஞ் சித்தாந்த சைவக் குழாங்களென வோங்குதிருக் கூட்டத் துடன்மேவ - வீங்குசெம்பொற் 236 றேரும் பரியுஞ் சிவிகையும் யானையுமற் றூரும் பிறவுமுவந் தூர்தருபல் - லோருள்ளு 237 முன்னூர்வோர் பக்கத்து மொய்த்தூர்வோ ரோர்தனக்குப் பின்னூர்வோ ரம்முறையே பெற்றூரப் - பொன்னூரு 238 மின்பணியும் வேத்திர மென்மலர்க்கை கொண்டசைத்துத் தன்பணியி னந்தி தலைநிற்பக் - கொன்பரவு 239 வாரி யுடுத்தபெரு மண்ணொருதாட் குள்ளடக்கு மூரி விடைக்கொடி முன்போத - வேரிவரு 240 மாலவட்டஞ் சாமரைசாந் தாற்றி யொலியன்முதன் ஞாலவட்டஞ் சொல்பலவு நண்ணிமொய்ப்பக் - கோல 241 முழுவெண் மதியு முடிமேற்கொண் டென்ன வெழுவெண் குடைமே லிலகப் - பழுதில் 242 பதலை முழவம் படகந் திமிலை முதல முகிலின் முழங்க - நுதலினொளிர் 243 கண்ணுடையான் வந்தான் கருது மொருபாகம் பெண்ணுடையான் வந்தான் பிரான்வந்தா - னெண்ணினருக் 244 காய்தந்த வன்பருளி யாட்கொள் பவன்வந்தான் றாய்தந்தை யில்லா தவன்வந்தான் - பாய்தந்த 245 நல்லா ரணியேக நாயகன்வந் தான்புலமை வல்லா ரணிமருத வாணன்வந்தான் - புல்லார் 246 நயந்தபுரம் வேவ நகைத்தபிரான் வந்தான் வயந்தழைவெங் கூற்றுதைத்தான் வந்தா - னயர்ந்தயன்மால் 247 சாவாம னஞ்சுண்ட தம்பிரான் வந்தானெம் மூவா முழுமுதன் மூர்த்திவந்தான் - றாவாத 248 பொன்னம் பலத்தாடும் புண்ணியன்வந் தானென்று சின்னம் பலவுமெதிர் சேவிப்ப - வன்னமணி 249 யாத்த வொளிமண் டபநின்று தேவியொடு மேத்திமறை வாழ்த்த வினிதெழுந்து - தாத்திரிநின் 250 பைம்பொன்மணி வாய்தல் பலகடந்து - செம்பொன்மலர் 251 தூற்றியெல் லோருந் தொழநடைக் காவணத்தி னேற்ற வழியே யெழுந்தருளித் - தோற்றத் 252 தலங்குதிரு வீதி யணுகியம்பொன் வெற்பி னிலங்கு திருத்தேர்மே லேறி - நலங்கொளரி 253 யாதனத்து மேவமுடி யாரும் புனற்றுறைகண் டாதரத்து மேவவந்த வன்னமெனச் - சீதநிழல் 254 வாழ்மருத வாழ்க்கை மதித்துறவு கொள்ளவந்த கேழ்கிளர்செந் தார்ப்பசுங் கிள்ளையெனத் - தாழ்சடைமேன் 255 மின்னு முகிலின் விளக்க முணர்ந்துவந்த மன்னு கலாப மயிலென்னப் - பொன்னிறங்கைத் 256 தாய்க்கு முனமளித்த தண்ணருள் கண்டுவந்த கூய்க்குலவு தேமாங் குயிலென்னச் - சேய்க்குமுன 257 மேவுமொரு பெண்கொண்ட மெய்யுறவு கண்டுவந்த வாவு மிளமட மானென்னத் - தாவாத 258 வொண்டரு வென்றுதனை யுள்கிப் படரவாக் கொண்டருகு வந்த கொடியென்ன - மண்டு 259 சடையையின மென்று தவக்கருத்திற் கொண்டா யிடையடைய வந்தமின லென்ன - வுடையதனைக் 260 கோணில் பிரணவ குஞ்சர மென்பதுளம் பேணி யடைந்த பிடியென்ன - வாணிலவு 261 விண்ணுலக மேயபல மின்னாரும் வாரிதிசூழ் மண்ணுலக மேய மடவாரு - நண்ணுபெரும் 262 பாதலத்து மேய பலமா தருமாட மீதலத்துஞ் செய்குன்ற மேனிலத்தும் - பூதலத்துஞ் 263 சோதிமணிச் சாளரத்துஞ் சூழ்பசும்பொன் மன்றிடத்தும் வீதியிடத் துஞ்சதுக்க மேவிடத்து - மோதிமநேர் 264 மாடமலி சோபான வைப்போ டரமியத்து மாடகஞ்செய் வேதி யதனிடத்தும் - பாடமையு 265 மின்னென்று சொல்சடையீர் வின்மா ரனையெறித்த தென்னென்று கேட்க வெழுந்துநிற்ப - தென்னக் 266 குருமுடிக்கா ரோடுறவு கொள்ளவிழைந் தென்னப் பெருமுடிக்கா ரோதி பிறங்கத் - திருமுடியில் 267 வாழும் பிறைவடிவும் வண்ணமுமொத் தேமென்று வீழும் பொடிநுதன்மேன் மேல்விளங்கப் - போழுங் 268 கருவிழிச்சேல் கங்கை கலப்பமுயன் றென்னப் பொருவிலிரு பாலும் புரள - வொருவின்முடி 269 யவ்வாய் மதிநட் பமைந்தவரக் காம்பலெனச் செவ்வாய் மலர்ந்துசுவைத் தேனூற - வொவ்வா 270 வலக்கணுற வுற்று வயங்குகம லம்போ னலக்க முகம்பொலிவு நண்ண - நிலக்கண் 271 டனைவேய்கொண் டாங்குறவு தாங்கொளவுற் றென்னப் புனைவேய் வளைத்தோள் பொலிய - வனையும் 272 வரையைக் குழைத்த வரைகுழைக்கு மாபோல் விரையக் குவிமுலைகள் விம்மப் - புரையறுதன் 273 கண்ணெதி ராகாக் கணைமதவே ளன்றென்னு மெண்ணெதி ராகா விடைதுவள வண்ணவரைத் 274 தன்பணியை வெல்லத் தருக்கியெதி ருற்றெனச்செம் பொன்பணி யல்குல் புடைவீங்க - நன்புவியோ 275 ரெண்ணியறேர் யாத்த வெழிலரம்பை முற்றும்வெலக் கண்ணியடைந் தாங்குக் கவான்பொலியப் - புண்ணியத்தன் 276 பாடியறேர் மேவப் பழகுதல்போற் றன்பழைய நீடியறேர் மேவுபத நேர்சிறப்பக் - கூடி 277 யெழுகடலு நாண வெழுந்தபெரு வெள்ள முழுகு நெடியசடை மோலி - யொழுகழகும் 278 வையமிகழ் தக்கன் மகக்கூற் றவதரித்த செய்யவிழி நெற்றித் திருவழகு - முய்யப் 279 பகலிரவு செய்யம் பகத்தழகும் வேத மகலரிய செவ்வா யழகும் - பகரடியார் 280 மெய்த்தசுவைச் சொல்லமுதே வேட்ட செவியழகு மொய்த்த கருணை முகத்தழகு - மொத்துலகங் 281 காத்தமணி கண்டக் கறுப்பழகு மேருவலி தேய்த்த தடந்தோட் சிவப்பழகும் - வாய்த்தசிவ 282 ஞானங் குடிகொ ணகுபூண் முலையுழக்குந் தானமெனு மார்வத் தனியழகு - மானகுநீ 283 ரோடையெனுந் தன்முகத்தி னொண்கணெனும் பூவமைக்குங் கூடையெனுஞ் செந்தாட் குலவழகும் - வாடையுத 284 வெண்ணுற்ற வில்லோ வெனும்வா சிகையழகு நண்ணுற்ற புன்மூர னல்லழகுங் - கண்ணுற்றார் 285 மாலானார் கண்ணிமைப்பு மாறினா ரோவியமே போலானார் நெஞ்சம் புழுங்குவார் - சேலான 286 கண்முத்தஞ் சூடிக் கதிர்த்தமுலை மேற்பழைய வெண்முத்தம் போக்கி வெதும்புவா - ரொண்மைச் 287 சுரிகுழ றாழ்ந்திடையைச் சூழ வுடுத்த விரிகலை போக்கி மெலிவார் - பிரிவரிய 288 நன்னா ணெடுகதிரு நாணுமணி கோத்தபல மென்னாணும் போக்கியுளம் விம்முவார் - பொன்னான 289 கன்று கழன்றகறல் காணா ரிளந்தென்றற் கன்றுகழ லாதடைதல் கண்டயர்வார் - நன்றுநன்று 290 பொன்செய்த செஞ்சடையார் போற்றியா - நோக்கியதற் கென்செய்தா ராலென் றிரங்குவார் - மின்செயொரு 291 பங்காட்டி செய்தவமே பாடுற் றதுவீணே யங்காட்டி நாம்பயில்வ தம்மவென்பார் - செங்காட்டுப் 292 பிள்ளைப் பழிகொண்டார் பெண்பழிக்கு நாணுவரோ கொள்ளைப் பழிகொள் கொடியரென்பார் - வள்ளைப் 293 பயம்பணையார் கூடற் பழியஞ்சி யாரென் றியம்பு வதுமுகம னென்பார் - நயம்படரப் 294 பொங்கரவப் பூணுவந்தீர் புன்க ணுதவுமக்குச் சங்கரென் னும்பேர் தகாதென்பார் - துங்கமிகு 295 வேய்வன மேவல் விரும்பீரெம் பொற்றொடித்தோள் வேய்வன மேவல் விரும்பீரோ - காயரவின் 296 வாயமுது கொண்டு மகிழ்வீரஞ் செம்பவள வாயமுது கொண்டு மகிழீரோ - மேயமலர்க் 297 கொங்கைச் சிலம்பு குழைத்தீரெம் மார்பிடங்கொள் கொங்கைச் சிலம்பு குழையீரோ - பங்கமிலிப் 298 பொற்றேர் விரும்பிப் புண்ர்ந்தீரெம் மல்குலெனும் பொற்றேர் விரும்பிப் புணரீரோ - கற்றலஞ்சேர் 299 வாழை யடவி மருவினீ ரெங்குறங்காம் வாழை யடவி மருவீரோ - தாழ்விழியாச் 300 சீத மதியைமுகஞ் சேரீரோ - நாதவரு 301 டாவென்ற வோரன்பர் தம்பாற்சென் றுன்மனையைத் தாவென்ற தூர்த்தருநீர் தாமலவோ - மாவென்றிப் 302 பூதஞ் செயும்படையீர் பொன்னனையாள் பாலிரத வாதஞ்செய் தன்புற்றார் மற்றெவரோ - சீதமலர் 303 மட்டார் புனன்மதுரை வாழ்வணிக மின்னார்கை தொட்டாரும் வேறுமொரு சுந்தரரோ - கட்டார்கொ 304 ளோதியமைப் பாராநீ ரோரரசன் முன்கொடுத்த மாதினையெவ் வேதுவினுள் வைத்திருப்பீர் - மோது 305 புரத்தை யெரித்ததுமெய் போர்புரித லால்வேள் புரத்தை யெரித்ததுநீர் பொய்யே - சிரத்தையின்மாற் 306 காழி கொடுத்தநுமை யாதரித்த நாங்கள்கைப்பல் லாழி யிழப்ப தழகாமோ - வாழ்தேவூர்க் 307 கன்றுக் கிரங்குங் கருணையீர் தீருமெங்கைக் கன்றுக் கிரங்காவன் கண்மையெவ - னன்றோர் 308 நகரி லமண்சுருக்கி நங்கூறை தீர்த்திந் நகரி லமண் பெருக்க னன்றோ - புகரில் 309 கருங்குயிலும் பாலடக்கக் கற்றீர் வருத்துங் கருங்குயிலெம் பாலடக்கக் கல்லீர் - நெருங்குமுலை 310 யுள்ளிடத்தும் வைத்தீ ரொருத்தி கவர்ந்துகொண்டு தள்ளிடத்து மெம்மைவைத்த றாஞ்சகியீர் - வெள்ள 311 மடக்குந் திறலீரெம் மம்பகம்பெய் வெள்ள மடக்குந் திறல்சற்று மாளீர் - கடுப்பின் 312 மதிமயங்கா வண்ணமுடி வைத்தீர் பரவெம் மதிமயங்கா வண்ணம்வைக்க மாட்டீர் - புதியகரு 313 மஞ்சமையு மெங்கண் மணிக்கூந்தற் கட்டவிழ்ப்பீர் பஞ்சவடிக் காங்கொலெனப் பார்த்தீரோ - வஞ்சம் 314 பயில்கொக் கிறகு படர்சடைவைத் தீர்வெங் குயில்பற் றிறகெவனீர் கொள்ளீர் - வெயிலின் 315 மணியுடைநும் பூணுணவு மாற்றும் விரத நணியனகொ றென்ற னடுக்கும் - பிணிதவிர்மெய் 316 யந்திவா னென்றே யமைத்தோ மமைப்பதற்கு முந்திக் குவிந்த முககமல - நந்திப் 317 பரவு சடைமுகிலைப் பார்த்தவுடன் சொல்லாய் விரவு குயிலொடுங்கி விட்ட - வுரவிற் 318 றிகம்பரரா நும்மைத் தெரிந்தடைந்த யாமுந் திகம்பரரே யாகிச் சிறந்தோஞ் - சகம்பரவு 319 மத்திக் கருளி யறங்கொண்டீ ரெங்கண்முலை யத்திக் கருளி யறங்கொள்ளீர் - பத்தியருக் 320 கேற்று வருவீ ரிடர்க்கடலுண் மூழ்குமெமக் கேற்று வராமை யியம்புவீர் - போற்றியனும் 321 மேனிதழ லென்றுரைப்பார் மெய்யே யருகடைந்தே மேனிதழ லாய விதத்தென்பார் - மேனா 322 ளுணங்கன்மீன் றுள்ள வுவந்தீர்நீர் கண்மீ னுணங்கன்மீ னாக வுவப்பீ - ரிணங்கு 323 மிடைமருதா னந்தத்தே னென்பா ரருளா வடைவினிம்ப நெய்யென் றறைவோ - முடையவரே 324 கோதை தரினுவப்புக் கூடு மறுக்கின்மிகு வாதையுறு மென்னுமட வாருளொரு - பேதை 325 பேதை விடராய வாடவராம் வெவ்வரவம் பற்றத் தொடரா மதிப்பிஞ்சு தோலா - நடமுடையார் 326 தேறுந் திறத்தமருந் தெய்வமரு திற்பறந் தேறுஞ் செயலி லிளங்கிள்ளை - மாறுபடு 327 சூர்மாவென் றுள்ளந் துணிந்ததோ நாமறியோ மூர்மா விவர்ச்சி யுறாதகுயி - றார்மார் 328 படலுடைய மார னவாவியினி தேறத் திடமருவு றாதவிளந் தென்றல் - படம்விலக்கிவ் 329 யென்மார்பி னில்லா விரண்டு புடைப்பன்னாய் நின்மார்பி லுற்றமைசொ னீயென்பாள் - பொன்மார்பத் 330 தேறுகைத்தா ரன்ப ரிதயம்போல் வஞ்சமுதன் மாறு விளையா மனத்தினா - டேற 331 நடந்தனேன் யானீ நடந்திலைபொற் பாவாய் கிடந்தகுறை யென்னென்று கேட்பா - ளுடைந்திடுமுன் 332 வல்லையே பாலிம் மரப்பாலைக் கூட்டமுலை யில்லையே யார்கொடுப்பா ரென்றழுவாள் - வல்லா 333 ரெழுதுமொரு பூசையைக்கண் டின்றே கிளிக்குப் பழுதுவரு மென்றோட்டப் பார்ப்பா - டொழுகுலத்தின் 334 முற்று தமிழ்விரகர் முன்னமணர் வாதம்போ லுற்றுமுடிக் கப்படா வோதியாள் - பற்று 335 குடியிற் பொலிமாதர் கொண்டநாண் போலக் கடியப் படாக்குதம்பைக் காதாள் - படியி 336 லடுக்கும்விடங் கொள்ளா வராக்குருளைப் பல்லே கடுக்கு மெனப்புகலுங் கண்ணாண் - மடுக்குமுயி 337 ரொன்று கழிதரமற் றொன்றுபுகு மூலருடம் பென்ரு கரையு மெயிற்றடியா - டுன்று 338 வினைபெற்ற மேருவல்லா வெற்பினங்கள் போனாண் டனையுற் றறியாத் தகையாள் - வனையுங் 339 குழலும்யா ழுங்கைப்புக் கொண்டடீமென் றெண்ணி யுழலுமா றோர்சொ லுரைப்பா - ளழகு 340 பருவ மிரண்டுட் பருவமே யொப்பப் பெருக வளைந்த பிணாக்க - டெருவி 341 னெருங்கப் புகுந்து நிறைகல்வி யான்றோர் சுருங்கச் சொலன்முதலாத் தோற்றி - யொருங்கு 342 பொருள்புணர்த்திப் பாடப் பொலிசெய்யுண் முன்னந் தெருளுணர்ச்சி சாலாச் சிறியர் - மருள்வகையிற் 343 பாடுகின்ற செய்யுளெனப் பற்பலவாஞ் சிற்பமெலாங் கூடுகின்ற மாடக் குலமுன்னர் - நீடுபெரு 344 வீடுசிறு வீடென்று மேன்மே லுறவியற்றிக் கூடு மவர்புனையுங் கோலமென - நாடுவிரற் 345 கோலம் புனைந்து குலாவி யவருவக்குஞ் சீல மெனவுவக்குஞ் செவ்வியிடைச் - சாலு 346 மருவு முருவு மனலும் புனலு மிருவுங் கொடையு மிரப்பு - மொருவா 347 விரவும் பகலு மினனு மதியும் புரவு மழிப்பும் பொருந்திப் - பரவுசிறப் 348 பாணுருவும் பெண்ணுருவு மாலா லமுமமுதுங் காணு மரவுங் கலைமதியும் - பேணுதிறல் 349 யோகமும் போகமு முள்ளா ருரைபலவு மேகமு மாய விடைமருதர் - மோகப் 350 வருந்தேர் தொழுதற் கடைந்து - திருந்துமனை 351 மார்வணங்கும் போது வணங்கினாண் மான்முதலோர் நேர்வணங்குந் தெய்வவுரு நேர்கண்டாள் - காரும் 352 வணங்கோதி யன்னை வதனமலர் நேர்பார்த் திணங்கோ திவர்யாவ ரென்றா - ளணங்கே 353 யிடைமருது வாழீச ரெல்லா வுலகு முடையர் நமையா ளுடைய - ரிடையறநன் 354 றூரும் விடைகருட னூர விடைகொடுத்தார் சாருந் தமைப்புணர்ந்து சாத்தனையீன் - றாருங் 355 கொடிபுணரச் செம்பொற் கொடிகொடுத்தார் மூன்று கடிமதிலும் வேவக் கறுத்த - வடியுடைப்பே 356 ரம்புசுமந் தெய்வ வகத்தியனார் தம்மைக்கொண் டம்பு கொடுத்த வழகரென - நம்புமிவ 357 ரித்தெருவிற் றேரேறி யேன்வந்தார் சொற்றியென முத்தமொளிர்ந் தென்ன முகிழ்நகைசெய் - தத்தரிவர் 358 நம்மையெலா மாட்கொண்டு நாம்வேட் டவையளிக்க வம்மையொடும் வந்தா ரறியென்னச் - செம்மைமயி 359 லப்படியா னானன்றே யையர்முடி யம்புலியென் கைப்படியு மாறு கரையென்னச் - செப்புமஃ 360 தந்த விடம்பெயர்ந்தா லந்தோ வுருக்காண லெந்த விடத்து மிலைகண்டாய் - முந்த 361 முனிதக்கன் சாப முராரிமுத லோருந் தனிதக்க தென்னத் தகுமோ - வனிதா 362 யெனவதனைக் கூவமன மில்லையெனிற் கைம்மான் றனையெனக்கு வாங்கித் தருதி - யனையேயென் 363 றோத விஃதென்னென் றுண்ணகைத்தம் மான்முழக்கஞ் சாத மெவர்செவிக டாமேற்கும் - போத 364 வொருமுழக்கஞ் செய்யி னுதிருமே யண்ட முருமுழக்கம் யாவுமிதற் கொப்போ - திருவே 365 யடங்குகென மற்றதுவு மப்படியே லாட றொடங்குமரப் பாவைக்குச் சூட்டத் - தடங்கொளிவர் 366 தோண்மே லணிந்த தொடையா வதுவாங்கென் றாண்மேற் கலைதொட் டலைத்திடலும் - வாணெடுங்க 367 ணன்னை முனிவாள்போ லாங்கு முனிந்தொருநீ பின்னையெச்ச தத்தர்தரு பெண்ணல்லை - முன்னைத் 368 தவம்பெரிது வேண்டுவாய் தன்னை யடக்கென் றவஞ்சிறிது மில்லாதா ளாற்ற - நிவந்த 369 திருத்தேரை யப்பாற் செலுத்துதரங் கண்டு திருத்தே ரனையொடுமிற் சென்றாள் - பொருத்துசிலை 370 கோட்டாது வண்டுநாண் கூட்டாது வாளியொன்றும் பூட்டாது வேடேர்ப்பின் போயினான் - மீட்டுந் 371 பெதும்பை ததும்பு மணிக்குழைதோ டாம்வருடி யாடத் ததும்புகொடி போலுமொரு தையற் - பெதும்பை 372 யலரும் பருவ மடுத்ததென்று மைந்தர் பலருமெதிர் பார்க்கவொளிர் பைம்போ - திலகுமெழின் 373 மாட மிசைத்தவழு மாமுகிலின் றோற்றங்கண் டாடமனங் கொள்ளு மழகுமயி - னீடுகடல் 374 கூடிக் கடைநாள் குடநின்றுந் தேவர்கலந் தேடிப் புகுதாத தெள்ளமுத - நீடுசண்பை 375 நாட்டிறைவ னாரெண் ணகத்தமண ரைச்செயல்போற் கூட்டிமுடித்த குழலினாள் - வேட்டுவஞ்ச 376 முந்து களவு முனிவுங் குடிபுகுத வந்துவந்து பார்க்கும் வரிவிழியா - ணந்து 377 கறியமைத்தார் தள்ளுங் கருவேப் பிலைபோ லெறிகுதம்பைக் காதி னியலா - ளறிகயத்தின் 378 கொம்பு வெளிப்படன்முற் கூர்முனை தோற்றுதல்போல் வம்பு முலைதோற்று மார்பினா - ணம்புபல 379 பூமாலை சூடுதற்கும் பூணாரம் பூணுதற்கு மாமாலை தாக வமைந்துள்ளாள் - காமரசப் 380 பேறுங் குலமாதர் பேணும்பூ ணென்னுநாண் வீறுஞ் சிறிதரும்பு மெய்யினா - டேறுசிலை 381 வேளா கமத்தின் விதம்புகல்வார் வார்த்தைசற்றுங் கேளா தவள்போலக் கேட்டமர்வா - டாளாம் 382 பெரும்பகையெண் ணாதுவரை பேர்த்தான்போற் கொங்கை யிரும்பகையெண் ணாத விடையா - ளரும்புபெருங் 383 காதலுடைத் தோழியர்கள் கைகலந்து சூழ்தரமிக் காதலுடை வாவி யணைந்தாடிச் - சீதப் 384 பலமலருங் கொய்து பனிமாலை கட்டி நிலமலரு மாதவிநன் னீழல் - குலவுபளிங் 385 காரப் படுத்தெழின்மிக் காக்கியதா னத்தமர்ந்து சேரப் படைக்குந் திறல்படைத்தா - னோர்தான் 386 படையா தமைந்த பரிகலநல் கூரு முடையா தெதிர்ந்தமத வோங்கல் - புடையாருங் 387 கொம்புபட்ட போர்வை கொடுத்த தனியூரு மம்புவிட்ட தின்மை யதுதெரிந்துஞ் - சம்பு 388 விடாதுவா ழூரும்விதி வீநா ளரசு படாதுவா ழூருமருட் பற்றுக் - கெடாது 389 பதியே பசுவாய்ப் பயங்கொடுத்த வூரும் விதியேமே னோக்குதிறம் வெய்ய - கொதிதழலுக் 390 கன்றிப் புனற்கென் றதிசயிப்பச் செய்யூரு மன்றிமதன் றீக்குவிருந் தாமூரு - நன்றிதரு 391 தண்டீசர்ப் போற்றியடி தாழ்ந்தபின்னும் வேறோருவர்க் கண்டாய்விற் போற்றவருள் காலூரு - மண்டிப் 392 பிறந்தார் பிறவாத பேரூரு நாளு மிறந்தா ரிறவாத வூருஞ் - சிறந்தநலத் 393 தாட்டை விரும்பி யடுபுவியு மாடரவு மோட்டை படாம லுறையூரு - மேட்டைதவிர் 394 கன்னியொரு பாற்கலந்து காலில்கட கம்புனைந்து மன்னியிட பத்து வரைத்தனுக் கொண் - டுன்னியொரு 395 தம்பத் துதித்தசிங்கந் தான்றருமுட் சாத்தணிவார் கும்பத் துதித்துக் குலவூரு - நம்புபொறை 396 யாதியடை யானு மரிக்கரிய செங்கமலப் போதியைய மார்பேற்கப் பூட்டூருஞ் - சோதிமணி 397 வாய்திறந்து பாடி மணியம் மனைகொண்டு தாதியரோ டாடுஞ் சமயத்தி - லோதி 398 மழையனைய வோரணங்கு வந்து பணிந்து கழையனைய செஞ்சொற் கனியே - விழையு 399 மொருபாற் பசப்பா யொருபாற் சிவப்பா யிருபாலு மொன்றி னியையும் - பெருமான் 400 விடுங்கோ ளிலியுமமர் மேலோ - னொடுங்கா 401 விடைச்சுரத்து வாழ்வா னிடைமருத மேயா னடத்துதிருத் தேரணித்தே நண்ணிற் - றடத்தியெழு 402 சேவிக்க வம்மெனச்சூழ் சேடியர்க ளோடெழுந்தா ளாவிக் கினியான்மு னண்மினா - டேவியொடு 403 வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டுவளை யேற்றிருக்கு மங்கை யிணைகுவித்தா - ளூற்றிருக்கு 404 முள்ளங் குழைய வொருத்தியிவர் பாலமர்ந்தாண் மெள்ள வவளார் விளம்பென்றாள் - கள்ளமில 405 மாதே யனைத்தும் வருந்தாது பெற்றவணா மாதேய மற்றவளே யாதாரங் - கோதேயா 406 வன்னையவ ளேயுலகுக் காக்க மெனக்கோடி பின்னையது நாம்பெற்ற பேறுகா - ணென்ன 407 வெனையு மருகே யிருக்கவைப்பீ ரென்னப் புனையு மலர்க்குழலார் பூவாய் - நினையுந் 408 தரமோவத் தாயர் தமக்கேயல் லாதப் புரமேவ யார்க்குப் பொருந்து - முரமேவ 409 நீயருகு மேவுவையே னீடுலகி னாகமெலாம் போயவர்பூ ணாகிப் பொலியுமே - தூயமன 410 மானக்கஞ் சாறர் மகள்கோதை யன்றிமற்றோர் தேனக்க கோதைகளுஞ் சென்றேறி - மேனக்க 411 பஞ்சவடி யாமே பரவொருத்தர் கல்லன்றி விஞ்சவெவர் கற்களுமெய் மேவுமே - துஞ்சு 412 மிருவ ரெலும்பன்றி யெல்லா ரெலும்பும் பொருவரிய மேனி புகுமே - மருவுசிலை 413 வேடனெச்சி லல்லாது வெங்கா னுழலுமற்றை வேடரெச்சி லும்முணவாய் மேவுமே - நாடுமறை 414 நாறும் பரிகலம்போன் ஞாலத்தார் மண்டையெலா நாறும் பரிகலமா நண்ணுமே - தேறுமொரு 415 மான்மோ கினியாய் மணந்ததுபோன் மற்றையரு மான்மோ கினியாய் மணப்பரே - நான்மறைசொல் 416 வல்லா னவனையன்றி மாலா தியபசுக்க ளெல்லாம் பிரம மெனப்படுமே - வல்லார் 417 திருவருட்பா வோடுலகிற் சேர்பசுக்கள் பாவுந் திருவருட்பா வென்னச் செலுமே - பொருவா 418 வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப் பிரமணிய தேசிகன்போற் பேண - வுரனமையா 419 வெல்லாரு மெய்க்குரவ ரென்று வருவாரே நல்லாயென் சொன்னாய் நகையன்றோ - சொல்லாதே 420 யோலையிட்ட வள்ளை யொருத்திபோன் மாதவத்தான் மாலையிட்டாய் கொல்லோ மறவென்ன - மாலை 421 யிடுவேனிப் போதென் றெழலு முருகர் தொடுமாலை யன்றே சுமக்க - வடுமாறில் 422 வேழஞ் சிதைத்ததுகொன் மேதகுமூக் கோர்மயிற்குத் தாழவரி வித்துச் சமைந்ததுகொல் - வாழி 423 திருமான் முகத்திற் றிருக்கா யதுகொல் பொருமானின் கைத்தொடையிற் பூண்பூ - வெருவாத 424 கண்ணப்பர் பாதங் கமழ்செருப்புத் தோயுமென வெண்ணப் படுவ திதற்குண்டோ - கண்ணன்முழந் 425 தாளில் விசயன்முன்னாட் சாத்தியபூ வோவிந்த நாளினின்கை மாலை நறியபூ - வாளா 426 விருத்தியென்றா ளெண்ணியது மிப்படியோ வென்று விருத்தியுற சென்றமன மீட்டாள் - பொருத்தி 427 மடக்கினான் வின்னாண் மதவேள் சினத்தை யடக்கினான் றேர்ப்பி னடைந்தான் - விடற்கரிய 428 செங்கைநடத் தாரப்பாற் றேர்செலுத்தல் கண்டந்த நங்கைமனை நோக்கி நடந்தாளோர் - மங்கை 429 மங்கை திரையிற் பிறவாத தெள்ளமுத மோங்கல் வரையிற் பிறவா வயிரந் - தரையிற் 430 பிறந்த மதியமைந்தர் பேராசை கொள்ளச் சிறந்த பசுங்காம தேனு - வுறந்த 431 புரிகுழல் கட்டவிழ்க்கும் போதா டவர்த மரிய மனமுங்கட் டவிழ்ப்பா - டெரியமுடி 432 செய்துமலர் சேர்த்துச் செருகும்போ தேபனித்தல் செய்யுயிருஞ் சேர்த்துச் செருகுவாள் - வெய்யவிட 433 முண்டா னுமிழ்ந்தான்கொல் லோவென்று மால்பிரமன் கண்டா னடுங்குமிரு கண்ணினா - டண்டாமை 434 கொண்டமைந்தர் நெஞ்சங் குடிபுகுந்தா டப்பொன்னாற் கண்டதிரு வூசலெனுங் காதினா - ளண்டம் 435 வளைத்தாள் கதிர்மதிய மாக்களங்க மாற்றி முளைத்தா லனைய முகத்தா - டிளைத்தபெருங் 436 காமரச மெல்லாங் கமழ வடைத்தசிறு தாமச்செப் பென்னுந் தனத்தினா - ணாமமறத் 437 தன்னை யறிந்துபரந் தானேயென் பான்பொருவத் தன்னை யறிந்து தருக்குவாள் - கொன்னே 438 பெருத்து முலைகணமைப் பின்பு வருத்தத் திருத்துமெனத் தேர்ந்த விடையாண் - மருத்துப் 439 பொதியமலை நின்றுவரப் போயேற்பாள் பின்ன ருதியமைதீப் போல்வ துணராண் - மதிய 440 மெழுந்துவரக் கண்டுவப்பா ளீதே வடவைக் கொழுந்துபொரு மென்றுட் குறியாள் - செழுந்தரளக் 441 கோவை புனைந்து குவட்டருவி யொத்ததென்று பூவை யொருத்திசொலப் புந்திசெய்வா - டாவிக் 442 கரைகட வாத கடல்போல வன்னை யுரைகட வாமே யுறைவாள் - வரையின் 443 பகையிந்தி ராணி பணைமுலைதோய் காலந் தகையினுளங் கொள்ளுந் தகையா - ணகைசெய் 444 மனைமுகப்பி லெண்ணின் மடவாரோ டெய்தி நினையு நிலாமுற்ற நின்று - புனையு 445 முலைப்பகை யாகி முளைத்த துணர்ந்து தலைப்பகை கொண்டுசெங்கை தாக்கு - நிலைப்பென்னப் 446 பந்தடித்து முத்தம் பலமுகத்து நின்றுதிரச் சந்தத் தனத்துமுத்தந் தாம்பிறழ - நந்த 447 விளையாடு போதில் விரும்புதாய் வந்து வளையாடு செங்கைமட மாதே - யிளைய 448 ரியங்கு தலைமாற்று மெண்ணமோ மேலாய் வயங்கு துறவுமடி யாதோ - பயங்கொள் 449 கருப்புவில்லி காணிற் கனகமய மான பொருப்புவில்லி யோடு பொரவோ - விருப்பார் 450 மருமங்கை யாதன் மதித்தோ - வருமந்த 451 பொன்னே மணியே புறவே பசுமயிலே மின்னேயிவ் வாடல் விடுகென்ன - வந்நேர 452 மண்டம் புவன மனைத்தும் விளராமற் கண்டங் கறுத்த கருணையான் - பண்டு 453 வெருவருமா லாதிவிண்ணோர் மெய்வலியெ லாஞ்சிற் றொருதுரும்பு கொண்டளந்த வும்பன் - பெருவரையைப் 454 பண்டு குழைத்த படிகருதா தம்மைசெங்கை கொண்டு தழுவக் குழைந்தபிரான் - மண்டுபுலா 455 லேங்கொடுக்க மாட்டாதென் றெங்கட் குரைத்தொருவர் தாங்கொடுக்கும் போதெல்லாந் தானுண்டா - னீங்கிடுமின் 456 பொன்மேனி மாதர் புணர்திறத்தை யென்றுரைத்துத் தன்மேனி யோர்பாலோர் தையல்வைத்தான் - பன்மாடக் 457 கூடல் வழுதியடி கொண்டு பலவுயிர்க்குஞ் சாட லமையாத் தழும்பளித்தா - னாடு 458 மொருவன் றலையை யுகிராற் றடிந்து பொருவில்கழு வாயெவர்க்கும் பூட்டுந் - திருவ 459 னறிந்தடிமை செய்வார்பொன் னாடை யுடுக்கச் செறிந்தசிறு தோலுடுக்குஞ் செல்வ - னறந்தழைய 460 வெல்லா முடையா னிறத்தல் பிறத்தலிவை யில்லானென் றெல்லாரு மேத்தெடுப்பான் - வல்ல 461 விடைமருத வாண னிமைக்குந் திருத்தே ரடையவணித் தேகண் டணைந்தாள் - புடைவிரவு 462 தையலா ரோடு தடங்கைகுவித் தாண்மாலு மையலார் மேனி வனப்புணர்ந்தா - ளையோ 463 முளையாத காம முளைத்ததுசெங் கைவில் வளையா மலர்சொரிந்தான் மார - னிளையா 464 ளுடுக்கை நெகிழ வுறுவளைகை சோர விடுக்கை யடைந்து மெலிந்தாள் - கடுக்கை 465 புனைவான் கடைக்கண் பொருத்தினான் போல நினைமூர றோற்றி நெடுந்தேர் - தனையப்பா 466 லுந்தினான் வேளுமுடன் றொன்றுபத்து நூறுமேற் சிந்தினா னாகிச் செருச்செய்தான் - முந்தித் 467 தலையமைந்த தோழியர்கைத் தாங்கத் தளரு தலையடைந்தாண் மாளிகையுட் சார்ந்தா - ணிலைநின்று 468 காதள வோடுங் கருங்கண்ணா ரெல்லாருஞ் சீதள மெல்லாஞ் செயப்புகுந்தார் - போத 469 வவைக்குப் பொறாளா யயர்தல்கண்டு காமச் சுவைக்குத் தகுதோழி சொல்வா - ளெவைக்குந் 470 தகச்செய்தா னீங்குந் தகாமை செய்தாற் பெண்கா ணகச்செய்வ தாகு நலமோ - மிகப்படுத்த 471 மாந்தளிரை நீக்கி மகாலிங்க மேயமரு தாந்தளிரைச் சேர்த்தா லறமுண்டே - காந்த 472 வணிதரளம் போக்கி யமரர்பெரு மான்கண் மணிபுனையிற் சாந்தம் வருமே - பிணிசெய் 473 பனிநீரைப் போக்கிப் பரமர்சடை மேய பனிநீரைப் பெய்தல் பயனே - கனிசந் 474 தனம்போக்கி யையர் தவளப் பொடியின் மனம்போக்கு மின்மறுக்க மாட்டாள் - சினந்த 475 பலமொழியா லென்ன பயன்மருத ரென்னு நலமொழியே யென்று நவில்வீர் - குலவிசெய்ய 476 வாம்பன் மலரை யகற்றி யமையமரு தாம்பன் மலரை யணிந்திடீர் - மேம்படிவை 477 யல்லாற் பிறிதுசெய லத்தனையுந் தக்கன்மக மொல்லாதே யாயதிற மொக்குமே - யெல்லா 478 மறிவீரென் றோத வறைந்தமொழி யெல்லாஞ் செறிநோய் மருந்தாய்த் திருந்த - வெறியார் 479 தடந்தார்க் குழலியுயிர் தாங்கி யமர்ந்தாள் விடந்தா னெனப்பொலியும் வேற்கண் - மடந்தைவலி 480 மடந்தை முற்றிச் சிலைவேண் முதுசமரா டற்குயர்த்த வெற்றிக் கொடியின் விளங்குவாள் - பற்றுமல 481 ரைங்கோ லுடையா னரசு நடாத்திக்கொள் செங்கோ லனையபெருஞ் செவ்வியா - டிங்கட் 482 குடையான் மகுடமெனுங் கொங்கையளன் னானே யுடையா னெனப்புகறற் கொத்தா - ளிடையா 483 வனைய னினிதமரு மத்தாணி யென்னுந் தனைநிகரி லல்குற் றடத்தாள் - புனையுங் 484 கிழக்குமுத லெத்திசையிற் கிட்டினுஞ்சோர் வித்தாள் வழக்கறுக்கும் பார்வை வலியாண் - முழக்கறிவி 485 னேய்ப்பெய் துறாமுனிவ ரெல்லார் தவங்களையும் வாய்ப்பெய் திடுங்கவவு வாணகையாள் - பார்ப்பினிய 486 வோதியாஞ் சைவலத்தா லொண்முகமரந் தாமரையாற் கோதியலா மைக்கட் குவளையா - லாதரச்செவ் 487 வாயாங் கழுநீரால் வண்காதாம் வள்ளையா னேயார் கபோலமெனு நீர்நிலையா - லேயு 488 மதரமாஞ் செங்கிடையா லங்கழுத்தாஞ் சங்கால் பொதியுமுலை யாம்புற் புதத்தா - லிதமாய 489 வுந்தி யெனுஞ்சுழியா லொத்தமடிப் பாமலையாற் சந்தி பெறுமுழந் தாண்ஞெண்டா - லுந்துகணைக் 490 காலாம் வராலாற் கருதப் பொலிந்தபுறங் காலா மொளிர்பொற் கமடத்தா - லேலாவெங் 491 காமவிடாய் பூண்டு கலங்கா டவர்மூழ்கி யேமமுறும் வாவி யெனப்பொலிவா - டாம 492 மணிநிலா முற்றத் தளவிலார் சூழ மணிநிலா வெண்ணகையாள் வைகிக் - கணிதமறத் 493 துன்றுபன்மே லண்டத் தொகையுங் கடந்தப்பாற் சென்று பொலியுந் திருமுடியு - மொன்றுதிற 494 லென்று மதியுமிவை யென்னப் பகலிர வென்றும் விளைக்கு மிருவிழியு - நன்றமைய 495 மும்மை யுலகு முகப்பவே தாகமங்கள் செம்மை யுறவிரித்த செவ்வாயு - மம்ம 496 வடுக்கு மிரவு மவிரும் பகலு முடுக்கும்வளி வீசுமென் மூக்குந் - தடுப்பரிதா 497 யெந்தப் புவனத் தெவர்கூறி னாலுமஃ தந்தப் பொழுதேயோ ரஞ்செவியு - முந்தவரு 498 காவருநங் கூற்றடங்கு காரா கிருகமென்று தேவர் பரவுந் திருக்கழுத்து - மேவு 499 பெருந்திசைப்போக் கன்றிப் பிறிதில்லை யென்னப் பொருந்தி வயங்கும் புயமுந் - திருந்திய 500 மண்ணுலக மேயாய் வயங்கரையு - நண்ணு 501 மெழுபா தலமு மிகந்துமால் கண்டு தொழுமா றிலாத்தாட் டுணையு - முழுதாள்வோன் 502 மன்னு மிடைமருத வாண னருட்பெருமை யுன்னுந் திறத்தா ளொருத்தியைப்பார்த் - தென்னே 503 யிடைமருதென் றோது மிதன்பெருமை யாரே யடைய வகுப்பா ரணங்கே - யுடையவரே 504 பேணு மருதின் பெருமை யெவருரைப்பார் காணுந் தரமில் கயிலைகாண் - பூணுமன்ப 505 ரெல்லாரு நாவரச ரென்ன வடநாட்டிற் செல்லா திருக்கத் திருந்தியதா - னல்லா 506 யிதுகண்ட நாமற் றெதுகாண்டல் வேண்டு மதுகண் டவரா யமைந்தேஞ் - சதுர 507 ருருத்திரர்க ளோர்பன் னொருகோடி யாரும் பொருத்த முறவந்து போற்றுந் - திருத்தகுசீ 508 ரிந்தத் தலமேய தித்தல மான்மியமற் றெந்தத் தலத்திற் கியைந்துளது - நந்த 509 விழிதலை யொன்றனைக்கை யேந்தியொரு வேந்த னழிதுயர் பூண்டதெங்கென் றாயா - யிழிதருநாய்க் 510 கட்டந் திருமுற் கலப்பதோ வென்றிறைகை யிட்ட முடனெடுத்த தெத்தலத்தில் - வட்டமதில் 511 சூழுமது ராபுரியிற் றொட்ட பழிநீக்கி வாழும் படிபுரிந்த மாத்தலம்யா - தேழுலகும் 512 போற்றுமொரு தன்னுருவைப் பொன்னுருவி னிற்புகுத்தி யேற்றும் பெருமையுற்ற தெத்தலங்காண் - கூற்றமஞ்சு 513 மிந்தத் தலத்துதிக்க வெத்தவஞ்செய் தோமென்று சந்தக் குயின்மொழியா டானுரைத்து - நந்தக் 514 களிக்கும் பொழுது கசிந்தார்க்கே யின்ப மளிக்கும் பிரான்றே ரணுக - வெளிக்கணந்த 515 மாதரொடும் வந்து வணங்கினாள் காண்பார்க்கு மோத மளிக்கு முகங்கண்டாள் - காதற் 516 றிருத்தோளுங் கண்டா டிருமார்புங் கண்டாள் பெருத்தாண் மயக்கம் பெருவே - ளுருத்தான் 517 பலகணைதொட் டெய்தானப் பைங்கொடிதான் சோர்ந்து சிலதியர்மேல் வீழ்ந்து திகைத்தா - ளலமருவா 518 ளென்னை யுடையா னிவள்செய்கை நோக்கானாய் நன்னயத்தே ரப்பா னடத்தினான் - பின்னைத் 519 தொடர்ந்து செலுமதனன் றோகைமேற் பல்லே வடர்ந்து செலப்பெய் தகன்றான் - கிடந்தவளாய்ச் 520 சோருங் கருங்குயிலைத் தோழியர்கள் கைத்தாங்கிச் சாரு மனையிற் றகப்புகுத்தி - நேரு 521 மலரணையின் மேற்கிடத்தி யான்ற பனிநீ ருலர்தர மேன்மேலு மூற்றிக் - குலவுநறுஞ் 522 சாந்தமுங் கோட்டித் தகுசிவிறிக் காற்றெழுப்பக் காந்துவது கண்டு கலங்கினாண் - மாந்தளிர்மு 523 னாயவுப சார மனைத்துஞ் செயலொழிமி னேயமுள தேலென்பா னீவீரென்று - தூய 524 மணிவாய் திறந்தாண் மருதரே யும்மைப் பணிவாருக் கீதோ பயன்கா - ணணியல் 525 சடைமே லதுகொடுத்தாற் றத்துதிரைக் கங்கை விடைமேலீர் நும்மை வெறுப்பா - ளடையு 526 மிடத்தோ ளதுகொடுத்தா லெவ்வுலகு மீன்ற மடப்பாவை கோபநுமை வாட்டு - மடுத்த 527 வலத்தோ ளணியன் மருவ வளித்தாற் சொலத்தா னொருவருண்டோ சொல்லீ - ருலத்துயர்தோள் 528 வெய்ய சிலையாரூன் மென்றுமிழ்வ தாயிருந்தாற் செய்ய மணிவாய் திறந்தருள்வீ - ரையரே 529 யார்த்தார் கழைவண் டமைத்தொரு பூத்தொடுக்கப் பார்த்தா லலவோகண் பார்த்தருள்வீர் - சீர்த்தகதிர் 530 பன்மோதி னீருயிரைப் பாற்றிடுவ லென்றுதலை கன்மோதி னாலன்றோ கைதருவீர் - நன்மையெனுங் 531 கோளெறிந்த தந்தை கொடுவினையை நோக்கியவன் றாளெறிந்த போதன்றோ தாரருள்வீ - ராளும் 532 பிரியமுடை யீரென்று பேரருள்செய் வீரென் றிரியுமுயிர் தாங்கி யிருந்தா - ளரிவை 533 அரிவை யிளையான் குடிமாற ரெய்ப்பொழிப்பான் சென்று முளைவாரும் போதுநிகர் மோகம் - விளைகுழலா 534 டேவர்க்கூ றாக்கினரைத் தேர்வலெனுங் கண்ணப்பர் கோவச் சிலைநேர் கொள்ளுநுதலாள் - காவற்செய் 535 நெல்லுண்டாள் பாலுண்சேய் நீக்கலற மென்றேற்றார் கொல்லுண்ட வாள்போற் கொடுங்கண்ணாள் - சொல்லரசர் 536 பேராலப் பூதிப் பெயரா ரமைத்ததடத் தேராரும் வள்ளை யெனுஞ்செவியாள் - சீரார் 537 கணநாதர் நந்தவனக் கட்சண் பகம்போன் மணநாறு நாசி வடிவாள் - புணருமருள் 538 வாயிலார் தொன்மயிலை வாரித் துறைப்பவளச் சேயிலார்ந் ?தோங்குகுணச் செவ்வாயா - ணேயமுற 539 முன்னங்கண் ணப்பர் முறித்தமைத்த கோற்றேனி லின்னஞ் சுவைகூரு மின்மொழியா - ளன்னம் 540 பயில்கட னாகையதி பத்தர் துறையிற் பயில்வெண் டரளமெனும் பல்லா - ளியலருளப் 541 பூதியார் முன்னம் புரிந்த தடக்கமலச் சோதியா மென்னச் சுடர்முகத்தா - ளாதியருட் 542 சம்பந்த மேவவொரு தண்டீச னார்நிறைத்த கும்பந்தா மென்றேத்து கொங்கையாள் - வம்பவிழ்தா 543 ரானாயர் முன்ன மரிந்தெடுத்துக் கொண்டவே யேநாமென் றோது மி?ணைத்தோளா - ளானாத 544 மூல ருறையநிழன் முற்றக் கொடுத்துவப்பி னாலரசின் பத்திரம்போ லல்குலாண் - மேலா 545 யிலகியசம் பந்தரோ டேற்ற வமணர் குலமெனத் தேயுமருங் குல்லா - ணலவரசாஞ் 546 சிட்ட ரமுதுசெயத் திங்களூர் நாவரசு தொட்ட கதலித் துடையினா - ளிட்ட 547 மடுத்த வதிபத்த ரங்கை யெடுத்து விடுத்தவரால் போற்கணைக்கால் வீறாண் - மடுத்தவருட் 548 கண்ணப்பர் கையிற் கலந்ததவ நாய்நாவின் வண்ணப் பொலிவின் வருபதத்தாள் - வண்ணஞ் 549 சிறக்கு மொருசித் திரமண்டப பத்தி னிறக்குங் குழலார் நெருங்கப் - பறக்கு 550 களிமயிலிற் சென்று கலந்து - தெளிய 551 விருக்கும் பொழுதோ ரெழில்விறலி வந்து பருக்குமுலை யால்வளைந்த பண்பின் - முருக்கிற் 552 சிவந்ததா டாழ்ந்து திருமுன்னர் நிற்ப நிவந்த கருணையொடு நேர்பார்த் - துவந்து 553 வருபாண் மகளே வடித்தகொளை வீணை யொருவாது கொண்டருட்பே றுற்றார் - திருவாய் 554 மலர்ந்ததிருப் பாட்டனைத்தும் வாய்ப்பப்பா டென்ன வலர்ந்த முகத்தி னவளு - நலந்தழையும் 555 பத்தர்யாழ்ப் போர்வையப்பாற் பாற்றி யெதிரிருந்து வைத்த நரப்பு வளந்தெரிந்து - புத்தமுத 556 வெள்ளம் படர்ந்தென்ன வேணுபுர நின்றெங்க ளுள்ளம் படர்ந்த வொருதமிழும் - பள்ளப் 557 பரவை சுமந்தமணர் பாழியிற்கல் வீழ்த்தா தரவை யடைந்த தமிழு - முரவங் 558 குரித்தவா ரூர்த்தெருவிற் கூற்றுதைத்த கஞ்சஞ் சரித்திடச் செய்த தமிழும் - பரித்தவுயிர் 559 தன்னடியே வேண்டத் தருபரமற் கோர்வழுதி தன்னடி வாங்கித் தருதமிழு - மன்னுபொது 560 வாடி யருளி னமர்தலங்கட் கொவ்வொன்றாப் பாடி யருளியவெண் பாத்தமிழு - நீடியதோர் 561 பேயேயென் றோதப் பிறங்கியு நம்பெருமான் றாயேயென் றோதத் தருதமிழு - மாயோர்பா 562 னீங்க லரிய நெடுந்தகைநீங் காதமரு மோங்கன் மிசையே றுலாத்தமிழுந் - தேங்கரும்பி 563 னுற்றோ தரிதா முறுசுவையோ பற்றறுப்பார் பற்றோவென் றோதுமிசைப் பாத்தமிழு - முற்றுமருள் 564 பூண்டுவாழ்த் தோறும் புராணன் விருப்புறப்பல் லாண்டுவாழ்த் தோது மருந்தமிழும் - வேண்டு 565 பிறவுமெடுத் தோதப் பெருமருத வாணற் குறவு நனிசிறந் தோங்கத் - துறவு 566 சிதைக்கும் விழியாள் சிறந்தமருங் காற்கூற் றுதைக்குந் திருத்தா ளுடையான் - பதைப்புற் 567 றதிரோதை யிற்பல் லனைத்துங்கொட் டுண்ணக் கதிரோன் முகத்தறையுங் கையா - னெதிராநின் 568 றெள்ளுந் திறம்படைத்த தென்னென் றொருதலையைக் கிள்ளுந் திறம்படைத்த கேழுகிரான் - றுள்ளுமொரு 569 மீனவிழி சூன்ற விரலான் றிரிபுரங்கள் போன வெனப்புரியும் புன்னகையான் - வானம் 570 வழுத்து மிடைமருத வாணன்றேர் தேமாப் பழுத்து விளங்குமவட் பம்ப - வெழுத்து 571 முலையா ளெழுந்துதிரு முன்ன ரடைந்தாண் மலையா ளெனுந்தாயை வாமத் - தலையாள் 572 பெருமான் றிருவுருவம் பெட்புற்றுக் கண்டா டிருமா னொருத்திகொலோ செய்தா - ளருமைப் 573 பெருந்தவ மென்றாள் பெருமூச் சுயிர்த்தாள் வருந்தமத வேள்விடுக்கும் வாளி - பொருந்தாளாய் 574 நேரே தொழுது நிலாவை வருத்துகவென் றாரே சுமப்பா ரறைதிரே - பாரறிய 575 வன்றுதேய்த் தாரென் றறைவா ரதைப்புதுக்க வின்றுதேய்த் தால்வருவ தெப்பழியோ - குன்று 576 குழையக் குழைத்ததிறங் கொள்ளமுலைக் குன்றுங் குழையக் குழைக்கினன்றோ கூடுங் - கழைமதவே 577 ளங்க மெரித்தீ ரவன்சிலைநா ணம்பாய வங்க மெரிப்பதனனுக் காற்றீரோ - பொங்குவளி 578 யம்பு புணர வமைத்தீர்தென் காற்றைமத னம்பு புணர வமைத்திலீ - ரம்பு 579 புணரினது வேறாகிப் போழுமோ மேனி யுணரி னஃதெவருக் கொப்பாங் - குணமிலா 580 வந்தக் குரண்டத் திறகமைத்தற் காயசடை யிந்தக் குயிலிறகை யேலாதோ - முந்தத் 581 தனிநீ ரடக்குங் சடாமுடியில் வெய்ய பனிநீ ரடக்கப் படாதோ - முனிவிடமா 582 மன்ன விருளை யடக்குந் திருக்கண்ட மின்ன விருளடக்க வெண்ணாதோ - சொன்னமைக்கு 583 வாய்திறவீர் பூம்புகார் வாழ்வணிக ரில்லத்து வாய்திறவீ ரென்னின் வருந்தேனே - மாயவனார் 584 கண்ணைச் சுமந்த கழற்காலீர் சென்னிமேற் பெண்ணைச் சுமந்ததென்ன பேதைமைகாண் - மண்ணைமுழு 585 துண்ணும்விடை யீரென் றுரையாடி நிற்கும்போ தெண்ணு முடையா ரிளநகைசெய் - தண்ணுகன 586 கத்தேரை யப்பாற் கடாவினா ரப்போது முத்தேர் நகைமாது மூர்ச்சித்தாள் - சித்தம் 587 பருவந் தழிதருங்காற் பாங்கியர்க டாங்கித் திருவந்த மாளிகையிற் சேர்த்து - மருவந்த 588 பாயற் கிடத்திப் பசுஞ்சாந் தளாய்ப்பனிநீ ரேயப் பொருத்தியிருந் தெல்லோரு - நேயத் 589 திடைமருத வாண னிடைமருத வாண னிடைமருத வாண னெனலு - மடையு 590 மரிவை யுயிர்தாங்கி யாற்றியொரு வாறு பரிவை விடுத்தமர்ந்தாள் பைம்பூட் - டெரிவைமறை 591 தெரிவை வாசியான் கண்டம் வதிவதைநூற் றேமணநெய் பூசிமுடித் தன்ன புரிகுழலாண் - மாசிலொளிப் 592 பாதி மதியம் படர்சடைநீத் திங்கமரு நீதி யெவனென்னு நெற்றியா - ளாதிநாள் 593 விண்ட கமருள் விடேலென் றொலிதோற்றக் கொண்ட வடுவகிர்போற் கூர்ங்கண்ணா - ளண்டமுழு 594 தீன்றவொரு பாற்கை யெடுத்தமல ரைந்துளொன்றாய்த் தோன்ற விளங்குஞ் சுடர்முகத்தா - ளான்ற 595 நெடிய கடற்புகுந்து நீள்வலைவீ சிக்கொள் கடிய சுறாத்தலைபோற் காதாண் - முடிவிற் 596 குருவடிவங் கொள்ளக் குறித்தடியர் சாத்து மருமலரே போலுஞ்செவ் வாயா - ளொருவரிய 597 தன்போல் வெறாதுமதன் றன்னாணொன் றேவெறுத்த கொன்பூ வனைய கொடிமூக்கா - ளன்பர்வரு 598 நாண்முன் குருகாவூர் நன்கமைத்த நீர்நிலையே காணென் றுரைக்குங் கபோலத்தாள் - யாணரிசை 599 மூட்டு மிருவர் முயன்றமர்தா னத்தழகு காட்டுங் குழைபோற் கழுத்தினா - ணாட்டுமொரு 600 யொத்த தெனவுரைக்கு மொண்டோளா - ளத்தவுடம் 601 பேத்தமிளிர் பச்சை யினிதளித்த தானத்துப் பூத்தசெய்ய காந்தள் பொரூஉங்கையாள் - கோத்தபெரு 602 வெள்ளத்துத் தற்றோற்ற மேன்மிதந்த கும்பமென்றே யுள்ளத் தகும்பொ னொளிர்முலையாள் - வள்ளற் 603 றரத்தின் மரீஇய தனக்குநிழ னல்கான் மரத்தினிலை போலும் வயிற்றாள் - புரத்தின் 604 மடங்கூர் முனிவர் மடிக்கவிட்ட பாம்பின் படம்போ லகன்றநிதம் பத்தா - டடங்காமர் 605 வாழ்வளங்கூர் நீலி வனத்தி னிழல்கொடுத்துச் சூழ்கதலி யென்று சொலுந்துடையா - ளாழ்கடல்சூழ் 606 வையம் புகழ்காஞ்சி வைப்பினிழற் றுஞ்சூதச் செய்யதளிர் போற்சிவந்த சீறடியாள் - பையரவ 607 வல்குன் மடவா ரளவிலர் தற்சூழ்ந்து புல்கும் வகையெழுந்து பொம்மன்முலை - மெல்கு 608 மிடைக்கிடுக்கண் செய்ய விலங்குமணிப் பந்தர் படைத்தநிழ லூடு படர்ந்து - புடைத்த 609 விளமாம் பொதும்ப ரிடைக்கனகத் தாற்செய் வளமாருங் குன்ற மருவி - யுளமார் 610 விருப்பி னமர்ந்துவளை மின்னாருட் கொங்கைப் பருப்பதத்தோர் தோழிமுகம் பார்த்துத் - திருப்பதத்தான் 611 முன்ன மரக்கன் முடிகணெரித் தார்பச்சை யன்னங் கலப்புற் றமரிடத்தார் - சொன்ன 612 வரைகுழைத்தா ராடல் வரம்பில்லை யேனு முரைசிறக்குஞ் சில்ல வுரைப்பா - மரைமலர்க்கண் 613 விண்டு பணிந்திரப்ப வேதாவைக் காதலனாக் கொண்டு மகிழ்தல் குறித்தளித்தார் - வண்டு 614 படுமலரோன் றாழ்ந்திரப்பப் பைந்துழா யண்ண னெடுமகவாய்த் தோன்றுவர நேர்ந்தார் - வடுவின் 615 மலரொன் றெடுத்திட்ட மாரவேண் மேனி யலர்செந் தழலுக் களித்தார் - பலக 616 லெடுத்துநா டோறுமெறிந் திட்டுவந்தார்க் கின்ப மடுத்த பெருவாழ் வளித்தார் - கடுத்த 617 சிறுவிதி யென்பவன்முன் செய்புண் ணியத்தைத் தெறுதொழின்மா பாதகமாச் செய்தா - ருறுதிபெறக் 618 கண்ணியதண் டீசர்புரி கைத்தமா பாதகமா புண்ணியமே யாகப் பொருத்தினார் - திண்ணியமா 619 வென்றிக் கனக விலங்கல்குழைத் தாரொருபெ ணொன்றித் தழுவ வுரங்குழைந்தார் - நன்றா 620 மொருபா லொருவடிவ முற்றாரென் னேமற் றொருபா லொருவடிவ முற்றார் - வெருவாத 621 வெய்ய பகையாம் விடவரவு மம்புலியுஞ் செய்ய சடாடவியிற் சேரவைத்தார் - வையம் 622 பழிச்சுபெரு வாழ்வு பழிச்சற் களிப்பா ரிழிச்சுதலை யோடேற் றிரப்பார் - வழுத்துசித 623 நல்லாடை யும்புனைத னாட்டுவார் மற்றுஞ்செங் கல்லாடை யும்புனைதல் காட்டுவார் - பொல்லாத 624 மாலூரு மூன்றூர் மடிய வளங்கெடுத்தார் நாலூர் பெருகுவள நன்களித்தார் - மேலா 625 ரருத்தி செயப்பொலியு மையா றிகவா ரிருத்திய வாறா றிகப்பார் - விருத்தி 626 மணம்வீசு கைதை மலரை மலையார் மணமி லெருக்கு மலைவார் - குணமாய 627 பொன்னு மணியும் புனையார் நரம்பெலும்போ டின்னும் பலவு மெடுத்தணிவார் - முன்னமா 628 றேடப் பதங்காட்டார் தேடிப்போ யாரூரன் பாடற் றலைமேற் பதித்திடுவார் - நாடுமிவ 629 ராட லெவரா லறியப் படுமென்று நாட லுடையா ணவின்றிடுங்கா - னீடு 630 மலைவந்தா லென்ன மருதர்திருத் தேரத் தலைவந் ததுகண்டா டாவா - நிலைவந்த 631 வண்ணமடைந் தாரின் மகிழ்ந்தாள் விரைந்தெழுந்தா ளண்ணன்மணித் தேர்மு னணுகினா - ளெண்ணம் 632 பதிக்குந் திருமுகமும் பாரத்திண் டோளுங் கதிக்கு மகன்மார்புங் கண்டாள் - விதிக்க 633 முடியா வனப்பு முழுதுந் தெரிந்து கொடியா யிடைகை குவித்தா - ணெடியானு 634 நான்முகனு மின்னு நணுகருமெய்ப் பேரழகைத் தான்முகந் துண்ணத் தலைப்பட்டாண் - மான்முகந்தா 635 ளந்தப் பொழுதே யடல்வேள் கழைச்சிலைநாண் கந்தப் பகழிபல காற்றியது - முந்தத் 636 தடுமாற்றங் கொண்டா டவாமயக்கம் பூண்டா ணெடுமாற்றம் பேச நினைந்தாள் - கொடுமை 637 மடுத்தசெய லின்மருத வாணரே நும்மை யடுத்தவெமக் கென்னோ வளித்தீ - ரடுத்தநுமைக் 638 கும்பிட்ட கைம்மலர்கள் கோலவரி வண்டிழத்த னம்பிட்ட மாமோ நவிலுவீர் - நம்பிநுமைக் 639 கண்ட விழியழகு காட்டுங் கரியழியக் கொண்டன் மழைபொழிதல் கொள்கைகொலோ - தண்டலின்றிக் 640 காணும் விருப்பங் கடவ நடந்தபதம் பூணு நடையிழத்தல் பொற்பாமோ - பேணு 641 முமைப்புகழ்ந்த செவ்வா யுறுகைப்பு மேவி யமைத்தவுணா நீங்க லறமோ - வமைத்தடந்தோள் 642 செய்ய நிறநுந்தோள் சேர நினைந்ததற்குப் பையப் பசந்த படியென்னே - யையரே 643 வேய்முத்தா நும்மை விரும்பியவென் கொங்கைகட லாய்முத்தஞ் சூட லடுக்காதோ - வாய்தோ 644 ணிதிய மலையை நினைத்தவெனை யிந்தப் பொதியமலைக் கால்வருத்தப் போமோ - துதியமைநும் 645 பார்வையடைந் தேற்குப் பனிமதியம் வேறுபட்டுச் சோர்வையடை யத்தழலாய்த் தோன்றுமோ - நீர்செ 646 யருள்யா வருக்கு மருளாய் முடிய மருளா யெனக்கு வருமோ - தெருளாமற் 647 காதலித்த தன்றே கருணையீர் நும்மழகின் காத லொருத்திக்கே காணியோ - வாதலுற 648 வொன்று முரையீ ருரைத்தால் வருபழியென் னென்று பலவு மெடுத்தோதிக் - கன்று 649 கழலவிழி முத்தங் கழல மனமுஞ் சுழல விழுந்து துடித்தா - ளழலொருகை 650 வேந்தினா ராகி யிகுளையரிற் - போந்தார் 651 விருப்ப வமளி மிசைக்கிடத்தி வெய்ய வுருப்பந் தவிர்த்திடுத லுன்னிப் - பொருப்பா 652 மிடைமருதின் சீரு மிடைமருத மேவ லுடையதலச் சீரு முவந்து - புடைவிரவு 653 தீர்த்தப் பெருஞ்சீருஞ் சேவுகைக்கு மாமருத ரேர்த்தபெருஞ் சீரு மெடுத்தியம்பப் - போர்த்தமயல் 654 வாரிக் கொருபுணையாய் மற்றவைவாய்ப் பச்சற்றே மூரிக் குழலாண் முகமலர்ந்தாள் - பேரிளம்பெ 655 பேரிளம்பெண் ணென்பா ளொருத்தி யிளம்பருவத் தாரனையென் றன்பா லழைக்க வமைந்துள்ளா - ணன்புவியோர் 656 நாடு கதிருதய நாழிகையைந் தென்னுங்காற் கூடுமிருட் டன்ன குழலினா - ணீடு 657 கதிருதய மாதல் கருதி யடங்கு முதிரு மதிபோன் முகத்தாள் - பிதி?ர்வறவெங் 658 கண்ணார்மை தீட்டுகென்று கைகளுக்கோர் வேலையிட லெண்ணா திருக்கு மிணைவிழியாள் - பண்ணார்பொன் 659 னோலையன்றி வேறுவே றுள்ளனவெ லாமணிதன் மாலை மறந்த வடிகாதாள் - சாலுமடைப் 660 பையேந் துவமென்று பண்பினுமிழ் காற்சிலர்தங் கையேந்து செய்ய கனிவாயாண் - மெய்யே 661 முடியவுத்த ராசங்க முன்னுவ தல்லாது தொடியில் விருப்பமுறாத் தோளாள் - கொடியிடைக்குச் 662 சேர வருத்தந் திருத்தியதா லுட்பெருநாண் கூர முகஞ்சாய்த்த கொங்கையா - ளாரமுலை 663 தாந்தளர்முற் சோராது தாங்குஞ் சலாகையென வாய்ந்த வுரோமமணி வல்லியா - டோய்ந்தமையக் 664 கூடுமோர் பேழை குறித்துத் திறக்கவெழுந் தாடுபாம் பின்படம்போ லல்குலா - ணீடுகண்டை 665 யொன்றேகொள் வீர ரொளிர்கால் பொருவப்பூ ணொன்றே யுவக்கு மொளிர்தாளாள் - குன்றே 666 யிணையுமுலைத் தோழியரெண் ணில்லார் நெருங்க வணையுமொரு வாவி யருகே - பிணையுங் 667 குளிர்பந்தர் சூழ்ந்து குலவ நடுவ ணொளிர்மண்ட பத்தே யுறைந்தாள் - களிகூரச் 668 செவ்வாய் திறந்தாளோர் சேடி முகம்பார்த்தா ளெவ்வாயும் வாயான்சீ ரேத்தெடுப்பா - ளொவ்வா 669 மருதவ னத்தன் மலைமகட்கு மாற்கு மொருதவ னத்த னுடையான் - கருது 670 திருத்தவ னம்பன் சிலையெடுத்தான் றேம்ப விருத்தவ னம்ப னிறைவன் - பெருத்த 671 பருப்பத முள்ளான் பணியார்க்குக் காட்டத் திருப்பத முள்ளான் சிவன்மால் - விருப்பன் 672 றுருத்தி யிடத்தான் றுணையாக மேய வொருத்தி யிடத்தா னொருவன் - விருத்தியற 673 லாலங்காட் டத்த னடல்காட்டி னான்வளங்கூ ராலங்காட் டத்த னருட்பெருமான் - சீல 674 விருப்பத் தவரான் மிகப்புகழ்வான் மேருப் பொருப்புத் தவரான் புராணன் - கருப்புவயற் 675 கச்சிப் பதியான் கனிந்துருகார் செய்பூசை யிச்சிப் பதியா னிலையென்பா - னச்சன் 676 வெருவா விடையான் விரியும் படப்பாம் பொருவா விடையா னுயர்ந்தான் - மருவாரூ 677 ரெற்றம் பலத்தா னெனக்கொண்டா னேத்துதில்லைச் சிற்றம் பலத்தான் சிவபெருமா - னுற்ற 678 விடைமருத வாணனுல கெல்லா முடையா னடைய விருப்ப மமைத்த - மிடைசீர் 679 மருதவட்ட மான்மியம்போன் மற்றொன்றுண் டென்று கருதவட்ட ஞாலத்துக் காணேன் - கருதின்பால் 680 வந்து புகுந்தபதம் வான்பதமெல் லாம்புகுது முந்துதெரி கண்ணிரண்டு மூன்றாகு - நந்திதனைக் 681 கும்பிட்ட கையிரண்டுங் கூடவொவ்வோர் கைமேவ நம்பிட்டம் வாய்க்கும்வகை நான்காகும் - பம்பிதனா 682 லித்தலத்து மான்மியமற் றெத்தலத்து மில்லைபயன் கைத்தலத்து நெல்லிக் கனிகண்டாய் - முத்தலமு 683 நாடு மிதிற்பிறந்த நம்மா தவம்பெரிதாக் கோடுமினி யென்ன குறையுடையோர் - மாடும் 684 படியெடுத்த பாதமலர் பற்றிநாம் வாழ்தற் கடியெடுத்த பேறீ தலவோ - தொடிபுனைகை 685 யாவியன்னாய் மேலுலக மாதரிப்பா ரித்தலத்து மேவி யமர்கை விரும்பாரோ - நாவிகமழ் 686 வாசத் துறைமேலை வானதிதோய் வாரீங்குப் பூசத் துறைதோய்தல் பூணாரோ - நேசமிக 687 மான்றுற்ற நெஞ்சமின்றி வாழ்சூழ்தல் காதலிப்போர் தோன்றித் தலமொருகாற் சூழாரோ - வான்றவிண்ணின் 688 முந்திருக்கை வேண்டி முயலுவா ரித்தலத்து வந்திருக்கை யோர்நாண் மதியாரோ - நந்துதமை 689 வானாடி யம்ப மதிப்பார் மருதாவென் றேநாடி யோர்கா லியம்பாரோ - மானேயென் 690 றோது மளவி லுடையான்பொற் றேர்வரலு மாதுபல ரோடு மகிழ்ந்தெழுந்தா - ளோது 691 பெருமான்முன் சென்றுமிகு பெட்பிற் பணிந்தா ளொருமான் மதித்தபுர வோவித் - திருமலர்மே 692 னான்முகன்றோற் றாத நலமார் திருமேனி யூன்முகமாங் கண்ணா லுறக்கண்டாண் - மான்முகந்தா 693 டுள்ளி மதவே டொடுத்தான் பலகணையஃ துள்ளி வருந்தி யுயிர்சோர்ந்தாள் - வள்ளலெனச் 694 சொற்ற நமைத்தொழுவார் சோர வருத்துகென்றோ வுற்ற மதனுக் குயிரளித்தீர் - செற்றகுயில் 695 காதுமெனி னீர்முன் கடிந்ததுபொய் யென்பார்மற் றேது புகல்வா ரிறையவரே - யோதுவீர் 696 மோது கடல்விடத்தை முன்னடக்கி னீரதற்கம் மோதுகட லென்னை முனியுமோ - போதுமதன் 697 கைதை மலர்நீர் கடிந்தா லதற்காக வெய்தெனவந் தென்னுயிரை வீட்டுமோ - பையரவுன் 698 காதன்மதி நுஞ்சடிலக் காட்டிலிருந் தாலென்னை வேத லியற்ற விதியுண்டோ - மீதார்ந் 699 துறுமலைதீப் போற்கா லுடன்றுவீ சற்கோ சிறுமுனியை வைத்தழகு செய்தீர் - மறுவிலா 700 வேய்முத்த மாகி விளங்கினீர் - தாயிற் 701 சிறந்தபிரா னென்றும்மைச் செப்புவார் தீயிற் சிறந்தபிரா னென்றென்னோ செப்பா - ரறந்தழுவும் 702 வேயிடத்து நீர்முளைத்து மேம்பா டியற்றினந்த வேயெழுமோ ரோசை வெதுப்புமோ - நாயகரே 703 யேறுநுமைத் தாங்குறினவ் வேற்றின் கழுத்துமணி மாறுபுரிந் தென்னை வருத்துமோ - தேறும்வகை 704 யந்தி நிறநீ ரடைந்தா லதற்காவவ் வந்திநிற மென்னை யடர்ப்பதோ - முந்தவொரு 705 வாழை யடிநீர் மருவி னதுகுறித்தவ் வாழைமுடி யென்னை வருத்துமோ - காழ்பகையின் 706 வாசநீ ரென்னை வருத்துமெனின் மற்றதற்காப் பூசநீ ராடப் புகுவதோ - மூசு 707 மயக்க மிதுதெளிய மாண்பார்கோ முத்தி நயக்குங் குருநமச்சி வாயன் - வியக்கும் 708 வரமணியென் றேயறிஞர் வாஞ்சித் திடுஞ்சுப் பிரமணிய தேசிகன்பாற் பேணித் - திரமடைவே 709 னன்னவனு நீரேயென் றான்றோ ருரைத்தக்கா லென்ன புரிவே னிறையவரே - யன்னவன்போல் 710 யோகி யெனநீ ருறைந்தீரல் லீர்சிறந்த போகி யெனவே பொலிந்துள்ளீர் - போகியெனற் 711 கென்னோ வடையாள மென்றானும் பாகத்தாண் மின்னோ வலங்கரித்த வேறொன்றோ - முன்னவரே 712 விண்ணைக் கடந்தமுடி மேலா னுமைப்போலோர் பெண்ணைச் சுமந்தமரும் பித்தரா - ரெண்ணேன் 713 வலியவந்து மேல்விழுந்து மார்பி லெழுந்து பொலியு முலைஞெமுங்கப் புல்வேன் - பொலிய 714 வொருத்தியிடப் பாக முறவைத்தீ ரற்றால் வருத்தி யதுபுரிய மாட்டேன் - றிருத்தி 715 புரிந்தன்றிப் போகிலீர் போவீரேன் மேன்மேல் விரிந்தபழி வந்து விளையுந் - தெரிந்தவரே 716 யென்று புகல்போ திடைமருத வாணரவ ணின்று கடவ நெடுமணித்தேர் - துன்று 717 நிலையுற் றதுதெரிந்து நெட்டுயிர்த்துக் கோடுஞ் சிலையுற்ற கண்ணிமனைச் சென்றா - ளுலையுற்ற 718 தீயின் வெதும்பித் திகைத்தாண் மருதரரு ளேயி னுயலாகு மென்றமர்ந்தா - ளாயுமிளம் 719 பேதை முதலாகப் பேரிளம்பெ ணீறாகக் கோதையெழு வோருங் கொடிமறுகில் - வாதை 720 மயலடைந்து தேம்பி மறுகிச் சுழலுற் றுயலடையப் போந்தா னுலா. 721 திருவிடைமருதூர் உலா முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |