![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சேறைக் கவிராசபிள்ளை இயற்றிய வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா திருச்சிற்றம்பலம் விநாயகர் காப்பு சீர்உலா வீதிச் சிவாய நகர் ஆள்வார்தம் பேர்உலா நாளும் பிறங்கவே - நேரலார் ஆர்க்குஞ் சரமுகன்நேர் ஆன அரிவரிசேர் கார்க்குஞ் சரமுகனே காப்பு. நூல் சீராரும் ஞானச் சிறப்பின் கதிர்படைத்த பாராருந் தெய்வ பராபரமாய் - யாராலும் 1 காணா வடிவமதாய்க் காண்பானும் காட்சியுமாய்ப் பூண் ஆபரணப் பொருளேயாய்ச் - சேணாகி 2 ஆனந்தம் ஆகி அறிவாய் அளவுபடாத் தான்அந்தம் இல்லாத் தனிமுதலாய் - வான்அந்தம் 3 இல்லா நிலையத் (து) எழுந்துபரி பூரணத்தின் சொல்லாய் அகண்ட துரியமதாய் - எல்லாம் ஆம் 4 காலத்தின் எல்லை கடந்துபர நாதத்தின் மூலத்தே மன்னும் முதற்பொருளாய் - ஞாலத்துள் 5 ஓங்காரம் ஆகி உணர்வாய் உணர்வதற்கு நீங்காத சோதி நிருமலமாய்ப் பாங்கான 6 தற்பரமாய் வேறாய்ச் சகளமதாய் நிட்களமாய்ச் சிற்பரமே ஆன சிவபெருமான் - கற்பனையால் 7 உன்னும் அளவில் உயர்குடிலைப் பாற்றோன்றி மின்னும்நா தத்திடை விந்துதித்தே - அன்னதுதான் 8 சாருமிடத் (து) ஓங்குபஞ்ச சாதாக்கி யத்துள்ளே ஓரு மகிமை உருத்திரர்கள் - மேருமுதல் 9 தலச் சிறப்பு வெற்பெல்லாம் நோக்கியந்த வெற்பிலுயர்வெற் (பு) எதுவென்று அற்புதமாய் நோக்கும் அளவிலெதிர் - கற்பமொரு 10 காலத் தெழும்பரிதி கால்வீசி மண்டலமேற் சீலத் திருந்த செயலெனவே - பாலுற்றோர் 11 தன்மயம (து) ஆகத் தயங்குகதிர் வீசி நின்ற மின்மயமாம் மாணிக்க வெற்பணுகிப் - புன்மையெலாம் 12 மாற்றிஅடி யார்க்கருள வாட்போக்கி யாம்எனவே ஏற்றமுறு நாமம் இசைந்தபிரான் - கூற்றுலகுஞ் 13 செல்லாப் பிரேதகனாய்ச் செல்கென் (று) ஒருமுனிவன் சொல்லாற் பணியுந் துரந்தரனை - வல்லாளன் 14 ஆக்கியே சின்னாள் அரசுசெய்வித் (து) அந்தியத்தில் நோக்குசிவ லோகமுற நோக்கினோன் - தாக்கமரில் 15 உள்ளங் குலையா (து) உயர்மறையோர் சந்தியின் நீர் வெள்ளம் பெருகி விலக்கவே - தள்ளிவரும் 16 செங்கதிரோன் தானவர்செய் தீமை தனையொழியச் சங்கரவென் றேத்துந் தகைமையான் - பொங்குகனல் 17 ஆனஇடி யேறும் அபிடேகஞ் செய்யவரந் தானருளி நின்ற தலைமையான் - வானவர்கோன் 18 அன்றுமுனி யாற்படைத்த ஆயிரங்கோ சங்களும்மெய் துன்றியகண் ணாகத் தொகுத்திட்டோன் - ஒன்றிவரும் 19 கும்பயோ னிக்கெதிர்போய்க் கூறியபஞ் சாக்கரத்தின் விம்பமாய் என்றும் விளங்குவோன் - அம்புயம் நேர் 20 கையதனால் மாணிக்கம் காமித் (து) எடுக்கவரும் வெய்யவனாம் ஆரியன்முன் மேவியிதை - அய்யநீ 21 வேண்டினையேல் பொன்னியறல் மிக்ககுடம் ஆயிரந்தான் ஈண்டு தருதியேல் ஈவமென - ஆண் (டு) அவன் போய்க் 22 கொண்டுவரும் ஆயிரத்தைக் கூறுந்தொள் யாயிரமாய்க் கண்டுபொசி வாசிக் கணக்குரைத்தே - மிண்டுகள் போற் 23 பன்னுநூ றாங்குடத்திற் பத்திலதாய் வாங்கியதில் உன்னுகுடம் ஒன்றில் உழக்கில தாய் - அன்னது நீ 24 தாவெனவே உள்ளம் தரியாமல் வாளுருவி ஆவெனவே வெட்டும் அவனெதிரே - சேவினொடு 25 காணவந்து முத்திக் கபாடந் திறந்தருளிப் பூணு முடித்தழும்பு பூண்டபிரான் - வேணபடி 26 சொன்ன பொசி வாசியறி தூநலத்தால் எவ்வுலகும் மன்னுபொசி வாசியென வைகினோன் - கன்னிமார் 27 எண்ணினது தான்முடிக்க ஏமவடி வாளெதிரே நண்ணி அருளும் நலத்தினான் - புண்ணியமெய்த் 28 தொண்டர் குழாமிருந்து தூயதவம் செய்வதற்கே கண்டதெனும் பஞ்சாக் கரக்குகையான் - அண்டியே 29 பேதலிக்கும் நேரியர்கோன் பெண்டிர் உளங்கனிந்து காதலிக்கும் பொன்னாரம் காட்டினான் - தீ (து) அகல 30 வந்திக்கும் மாருதத்தை மன்னுநிச ரூபமதாய்ப் பந்திக்கும் நீர்மை பகர்ந்திட்டோன் - சிந்தித்தே 31 வேண்டாது வேண்டி விரும்புமுரு கேசனிட்ட தூண்டா மணியின் சுடர்விளக்கோன் - சேண் தாவு 32 தீர்த்தச் சிறப்பு தன்மலையின் கீழ்பால் சதாகதியின் தீர்த்தம்அயல் நன்மை தரும்குலிச நற்றடமும் - தன்மமிகும் 33 தென்றிசையி லேநாக தீர்த்தமுடன் தென்மேற்கே துன்றுகதிர் வீசும் சுடர்த்தடமும் - என்றுமுயர் 34 மேற்றிசைக்குப் போதகமும் மேவுவட மேற்குமறை சாற்றும் உரோமசரன் சார்தடமும் - சீற்றம் 35 பொருதவட பால்விந்தைப் பொய்கையும் ஈசானம் தருபரத்து வாசத் தடமும் - பெருகியே 36 அட்டதிக்கும் மேவஅணுகினோர் பாவமெலாம் கட்டறுக்கும் பஞ்சாக் கரச்சுனையும் - தொட்டவுடன் 37 வல்வினையை நீக்கி மறுசென்மம் ஆக்கியருட் செல்வநல்கும் தெய்வத் திருச்சுனையும் - தொல்லைநாள் 38 ஓங்குகடல் ஆழ்ந்த உலகையொரு கோட்டதனால் தாங்கும் வராகத் தடஞ்சுனையும் - பாங்குறவே 39 சூழ்ந்துதனை வாழ்த்தும் சுரும்பார் குழலியிடம் வாழ்ந்து பிரியா மகிமையான் - தாழ்ந்தவர்க்கே 40 தானிழலாய் நின்றார் தமக்கும் ஒருநிழலாய் மாநிழல்செய் நிம்ப வனத்தினான் - பானுகுலம் 41 தோன்றுதிரு நீலகண்டச் சோழன் பணிவிடைக்கே ஏன்றுகதி நல்கும் இயற்கையான் - மூன்றுலகும் 42 மேயதவத் தோரெண்மர் வேண்டியே பூசிக்கத் தூயவரம் ஈய்ந்தருளும் தோன்றலான் - சேயினையே 43 தங்கைக் களித்தால் தலையளிப்பேன் என்றவன்பால் அங்கத் தியாகம் அருளினோன் - பங்கயத்து 44 வேதா அமைப்பும் விலகுமெனச் சார்ந்தவர்க்கு மாதானம் முற்றும் வழங்குவோன் - தாதாரும் 45 தசாங்கம் கிரி ஆகமெலி ஆயனுக்காய் அன்றெரித்த நாள்முதலாய்க் காகம் அணுகாக் கனகிரியான் - மாக நிறை 46 ஆறு கற்பகப்பூங் காவெனவே காமித் ததுகொடுக்கும் அற்புதமாங் காவேரி யாற்றினான் - பொற்பமரும் 47 நாடு கோட்டினால் ஓங்கு குலவரையைக் காலிடந்தே நாட்டியிடும் குன்றுசூழ் நாட்டினான் - வாட்டினார் 48 நகர் கற்கரைய வீசுசந்த்ர காசவாள் பெற்றதனால் துற்கைதான் மாறித் தொடர்ந்தெதிரே - நிற்கும் 49 வரமந் திமமா மயிடா சுரன் மெய்ப் பிரமத் தியானை பிளிற - உரமுற்று 50 மண்ணஞ்ச வீட்டுநாள் வானோர் சிவாயவென நண்ணும் சிவாய நகரினான் - விண்ணவர்க்குள் 51 குதிரை வாசியான் எவ்வுயிர்க்கும் மன்னுமிடை பிங்கலையூர் வாசியான் என்றுரைக்கும் வாசியான் - பாசநிலை 52 யானை சேதிக்கும் நாற்கரணத் தின்முடிசேர் மெய்ஞ்ஞான ஆதிக் கடக்கமதத் (து) ஆனையான் சோதிக்கும் 53 மாலை மாலயனும் காணா வடிவில் புனைந்தருளும் மாலையினும் பொன்னிதழி மாலையான் - காலதென 54 முரசு மூலத் திடைகிளைத்து மும்மண் டலங்கடந்துள் ஆலிக்கும் நாதத் (து) அணிமுரசான் - ஞாலத்தைச் 55 கொடி சுட்டழல தாக்கும் சுடலையினும் தற்பிரியாக் கொட்டமிகும் ஏற்றுக் கொடியினான் - மட்டலாப் 56 ஆணை பிண்டமும் நாதாந்தப் பெருவெளியும் பல்கோடி அண்டமுமாம் அஞ்செழுத்தின் ஆணையான்-ஒண்டொடியார் 57 இரத்தினகிரியீசனின் பெரும்புகழ் ஆர்க்குமா ணிக்கமலை ஆகத்தான் - போற்றுமிசை யார்க்குமா ணிக்கமலை யாகத்தான் - பார்க்குள் 58 மதிக்கவரு மாறு மலையான் சடையில் மதிக்கவரும் ஆறு மலையான் - துதிக்கவரும் 59 கண்டங் கரிய கரியுடையான் நீலமணிக் கண்டம் கரிய கரியுடையான் - தொண்டின் 60 அமலையொரு பாகத் (து) அணைவான் பிறவா தமலை யொருபாகத் (து) அணைவான் - சமரமுக 61 வீரன்மார்த் தாண்டன் விதிமுதலோர் போற்றுதிதி வாரன் சிவயோக மாகரணன் - ஓருமனக் 62 கேத்திரன்பஞ் சாங்கன் கிரீசன் அம ரேசனென்று தோத்திரஞ்செய் வேதத் துழனியான் - பாத்திரங்கம் 63 பாணியான் வேணியான் பாணிச் சடைமுடியான் காணியான் வாணியான் காணியான் - மாணிக்கக் 64 கூத்தன்மா சித்திரையான் கூறினவை காசியான் ஆத்தன் நமனுக்கே ஆனியான் - ஏத்துசபை 65 ஆடியான் ஆவணியான் ஆன புரட் (டு) ஆசியான் மூடிமால் ஐப்பசியான் முத்தமிழ்க்கே - நாடிவருங் 66 கார்த்திகையான் கொன்றையினுங் காமிக்கும் மார்கழியான் வார்த்தை மிகுதையான் மாசியான் - மூர்த்திகமாம் 67 விம்பங் குனியான் விரும்புபல மாதத்தான் நம்பு வருட நகுமுகத்தான் - பம்பு 68 சொரூபநி தான சுதான மகேச விரூபக ணேச விநோத - அரூப 69 நிரம்பிய கண்ட நிறைந்து பரந்த அரன்பரன் அம்பலவன் அன்று - திருந்தலரை 70 வாட்டுஞ் சுவா யம்பு மனுச்சித் திரைமாதம் ஓட்டு திரு நாளில் உகந்தொருநாள் - நாட்டியபூ 71 பவனி காப்பணிதலும் கொடியேற்றமும் மண்டலமே லுற்றிரவி மண்டலம்புக் காமெனவே விண்டலந்தோய் மண்டபத்தில் வீற்றிருந்தே - தொண்டருக்கு 72 மெய்க்காப் பருள விரும்புசிவா யந்நகரில் கைக்காப் பணிந்து கருணையுடன் - மிக்க 73 கொடியேற்றி வீதி குலவியபின் அந்தப் படியே யெழுந்தருளிப் பானு - நெடிதான 74 கேசாதி பாதமாக அணிகள் அணிந்த வகை மாணிக்க வெற்பை வலஞ்செய்து பொன்மலையைப் பூணிக்கை யாய்த்தொழவே போனதற்பின் - காணிக்கை 75 வாங்குமணி நீலம் மலர்க்கரத்தி லேயிருந்து வீங்குசுடர் மேலுற்ற விம்பமென - ஓங்கு 76 முடித்தழும்பின் சோரிதுள்ளி முன்னுறைந்த தென்ன அடுத் (து) எதிரே நின்றங் கழகாய் - மடுத்தவினை 77 நீத்தபுரு கூதன் நிழலெனவே வானவரைக் காத்தமறு மேல்போய்க் கசிந்ததெனப் - பார்த் (து) எரிசெய் 78 காகமே லின்னங் கனற்கண் புகைந்ததெனப் பாகபரஞ் செவ்வி படிந்ததென - மேகமுடன் 79 தெள்ளு திருச்சாந்து திலகமணிந் தேகொடிய புள்ளுலவா முன்றிலிடை போய்த்திரும்பி - வெள்ளியென 80 மின்னும் பசுங்கிரண வெண்பட்டு மேற்சாத்தித் துன்னுங் கடுக்கைத் தொடைசாத்தி - மன்னுங் 81 கலவைக் குளிர்சாத்திக் கற்பூரஞ் சாத்திச் சலவைச் செழுஞ்சாந்து சாத்தி - உலகுதொழு 82 மாமுதுவர் வெண்சா மரையிரட்ட வாணு தலார் தாமும் பலகீதந் தான்பாடக் - காமருபூந் 83 தென்றற் கொழுந்துலவச் செந்தீப ராசியுடன் நின்றுச்சி விண்ணின் நிலவெறிப்ப - முன்றிலிடைப் 84 புங்கவர்கள் சூழ்ந்து புகழ்ந்துவரப் போந்தழகாய் அங்கண் இனிதுற் (று) அருளியபின் - பொங்கியெழும் 85 அவ்வியந்தீர் சைவத்து அருமறையோர் ஆகமத்தின் திவ்வியமாம் பூசை செலுத்துதலும் - எவ்வமதன் 86 அம்பஞ்சும் அஞ்சா (து) அடல்புரிய அஞ்சுவர்போல் செம்பொன் செய் பள்ளியறை சேர்ந்தணுகி - வம்பஞ்சும் 87 அம்மை முலை புல்லி அகிலாண் டமும்புரக்குஞ் செம்மை யொடுங்களபச் சேறாடி - மும்மையுந்தான் 88 சீலித் தறியுஞ் சிவயோகம் உட்கிளர ஆலித் துறங்கும் அனந்தலினைக் - காலத்தே 89 வந்தெழுப்பு மாயிரவி வானவன்கை நீட்டுதலுங் கந்தமல ரோதியுடன் கண்மலர்ந்தே - அந்தரத்துக் 90 கங்கைநீ ராதிக் கடவுளர்போய்க் கொண்டுவருஞ் செங்கை நீர் மல்குந் திருச்சடைமேல் - முங்கினோர் 91 துக்க மயலகற்றும் தூயபொன்னி நீராடி மிக்க நவ பூசை விதிகொண்டு - திக்குடைதான் 92 கட்டுண்டு மாவின் கலைகரிய (து) ஆய்ப்பொறிமேற் பட்ட புலியாடை பழுதென்றே - விட்டெறிந்து 93 செம்பொற் கலையுடுத்தே தேசு பெறுமகிலங் கம்பித் திடாதமரும் கச்சசைத்தே - உம்பருக்குள் 94 ஓங்குபொருள் மூன்றும் ஒருபொருளாய் நின்றதென வாங்கும் உபவீதம் மார்பணிந்து - பாங்குடனே 95 கேசாதிபாதம் எல்லா நிறைபொருளும் எய்தி முடிவிடத்தே வில்லார் மணிமகுடம் வேய்ந்தருளிக் - கல்லாரம் 96 மிக்கமா ணிக்கமலை வேழத்தின் ஓடையெனத் தக்கநுதற் பட்டம் தரித்தருளி - எக்கியபண் 97 பாடும் இருவர் பயிலிடத்தே பொற்குழையும் தோடும் அணிந்து துலங்கவே - ஓடியதன் 98 மங்கை விடத்தால் மணிக்கந் தரம்பிடித்த செங்கையிற்பொன் மாலை சிறக்கவே - அங்கணுயர் 99 வேய்முத்துக் கண்டசரம் வேண்மார்பி லேயிலக வாய்முத்த மிட்டு வசீகரிக்க - சேய்முத்து 100 கந்தரநீ லத்தையொளி காணப் புறமொதுங்கி வந்ததெனக் கேயூரம் வாள்விதிர்ப்ப - மந்தரமாய்த் 101 தொக்கமணி ஒன்பதினாற் சூழ்ந்துசுடர் கால்துருவச் சக்கரநேர் தோள் வலையந் தான்பிறங்க - மிக்க 102 உருக்கொண்டு பல்கதிரும் ஒன்றான தென்னத் தருக்கு மணிப்பதக்கந் தாழ - நெருக்கியணி 103 பொற்பாந்தள் ஈன்ற புதியமணி மாலிகையும் வெற்பாந் தகைய வெயிலெறிப்பக் - கற்பாந்த 104 வெள்ளந் தனையுறிஞ்ச வெம்பசிகொண் டேயிருந்த கள்ளமழு வோர்செங் கரமருவத் - துள்ளுசடைத் 105 திவ்வியமாம் பச்சைச் செழும்புற் கொழுந்ததனைக் கவ்வுவபோல் ஓர்கைக் கலைகுதிக்க - எவ்வுயிர்க்கும் 106 புண்டரிகத் தாளே புகலிடமாம் என்பதனைக் கண்டறியும் ஈங்கென வோர் கைநீட்ட - எண்டிசைக்கும் 107 காட்சி தருஞ்சமையங் காணிதுவென் றேயுணர்த்துஞ் சூட்சியொடு செங்கைத் துடிதுடிக்க - மாட்சி 108 வலம்புரிகைக் கொண்டோன் மலர்க்கணுறு தாள்மேற் சிலம்பலம்பி மோதிச் சிலம்ப - அலம்பு 109 தலைமாலை யாடச் சடையும் பிறையும் அலைமோதி யாட அணியும் - மலரிதழி 110 மாலை துவண்டாட மாமறைகொண் டாடவன்பர் வேலை பரந்து மிடைந்தாடப் - பாலனைய 111 சங்கம் அதிரத் தடாரி முழவதிரத் துங்க முரசத் தொகையதிர - எங்களம்மை 112 காவிக் கிரணமலர்க் கண்ணுகந்து காக்கவே தாவித் திருவாடு தண்டேறி - மூவுலகும் 113 உற்றமதன் ஆடற் குதவிசெய வேநிலவும் கொற்ற மதிவெண் குடைநிழற்றச் - சுற்றியெழுந்(து) 114 இன்னமுநா டன்னம் எதிர்வந்து காண்பதென வன்னமலி வெண்சா மரையசையத் - தன்னையே 115 மோசமறக் கண்டோர் முடியா வினையகல வீசுவபோல் ஆலவட்டம் வீசவே - தேசுலவும் 116 விம்பமணிக் காளாஞ்சி மிக்க அடைப்பைவரச் செம்பொற் பிரம்பு சிலரேந்த - அம்பரமும் 117 பொன்னிடுபாறைக்கயலே வந்து மணித் தேர் ஏறுதல் மன்னுமணிக் கோபுரத்தின் வாசல் பலகடந்து பொன்னிடுபா றைக்கயலே போந்தருளி - முன்னொருநாள் 118 கூட்டுபதி னொன்றான கோநகரத் தார்முன் போய் நாட்டுமிதி னாமோர் நகரமெனத் - தேட்டமதாய் 119 ஈசனார் சொல்ல இசைவுகொண்ட நாள்முதலாய் மாசிலாது ஓங்கு மகிமையுடன் - தேசமேற் 120 பன்னிருவ ராகிப் பல திசையுங் கீர்த்திசெல மன்னியே வாழும் வணிகரன்பால் - பின் இயற்றும் 121 ஆதவனும் சந்திரனும் ஆழி வடிவமதாம் மாதம் அயனம் வருடமுதல் - ஓதுபல 122 உம்பர்களும் மெய்யாம் உலக ரதமனைய செம்பொன்மணித் தேரேறித் தேவியுடன் - பம்பை 123 வாத்தியங்களின் முழக்கம் தடாரி துடிதிமிலை தண்ணுமை கைத்தாளம் விடாத முரசுமணி மேளங் - குடமுழா 124 சங்கு திமிரி தவில்பட நாகசுர மங்கல கீதமுதல் வாத்தியமும் - பொங்கியெழ 125 பிச்சம் முதலிய சின்னம் சூழ்ந்து வரல் மாமணிக்காற் பிச்ச வணிகள் பிறங்கியிடத் தூமணிவெள் ளேற்றுத் துவசமுறச் - சோமனெனும் 126 வெண்சந் திரவட்டம் மேலசைந்து தாழ்வதெனத் தண்சந் திரவட்டை தான்சுழற்றப் - பண்சருவிப் 127 பிரமன் முதலியோர் தத்தம் வாகனங்களில் வருதல் பாடுமறை யோனனமும் பாற்கடலோன் புள்ளேறும் நாடுமுனை வீரன் நவில்விடையும் - நீடொளியாய் 128 விண்டவழு மிக்கோர் விமானமணித் தேர்மிசையின் அண்டவி நாயகன் சேய் ஆகுமயில் - எண்டிசையோர் 129 மாமறிக டாப்பூத மச்ச மிரலைநகு தேமருவு புட்பரதஞ் சேவினிலுந் - தாமுறவே 130 காளி வடுகன் கனலனைய சாத்தனிவர் ஆளி ஞமலி யடுகளிறும் - வாளியங்கட் 131 சத்தகன்னி மாரெண்மர் சாற்றும் பதினொருவர் நித்திய மாமிருவர் நீதியொடுந் - தத்தம் 132 விமான மிசையேற விஞ்சையர் கந்தர்ப்பர் உமாபதியென் றேத்தி உவப்பக் - குமாரியென 133 அத்தியை யும்பாவை யாக்கினார் பண்பாடி முத்துச் சிவிகையின் மேல் முன்னடக்க - எத்திசையுங் 134 [போற்றும்அப் பூதி புதல்வன் அராவிடமே
பாற்றும்அவர் தேவாரம் பாடிவரச் - சாற்றும்] கராநுங்குஞ் சேயினையுங் காமித் தழைத்தார் இராசசின்ன மோடுற் றிறைஞ்சத் - தராபதிமுன் 135 வாம்பரிய தாக வனநரியைக் காண்பித்தார் காம்பினர வாகனத்(து) அணுக - ஏம்பலுடன் 136 தந்தையிரு தாள்தடிந்த சண்டேசன் கேடகத்தில் வந்தருள அன்பர் வணங்கவே - எந்தை 137 ஆதிசைவக் குருமார் முதலியோர் ஏத்திச் சூழ்ந்துவரல் பரவைமனைக் கேகப் பரவுதமிழ் வேந்தன் மரபதனி லுதித்து வந்தே - குருவடிவு 138 கொண்டு சிவாயநகர்க் கோயி லிடத்துறையும் பண்டிதராம் வாட்போக்கிப் பண்டிதரும் - எண்டிசைமேற் 139 செல்லும் புகழ்சேர் தியாகவிநோ தக்குருவுஞ் சொல்லும் பழைய சுருதியுணர் - வல்லமையான் 140 மண்டலஞ்சேர் மாணிக்க வாசகநற் றேசிகரும் முண்டகனேர் தட்சணா மூர்த்தியெனும் - பண்டிதருஞ் 141 சைவ சிவாகமத்துத் தாநிகராம் வேதியரும் தெய்வ மறையோரும் திரண்டேத்த - வையமெலாம் 142 பேரான கீர்த்திப் பெரியோர்பாற் கம்பையனும் சீரான செங்கோல் செலுத்திவரப் - பாரோரும் 143 விண்டாரும் மாதவரும் வேலா யுதமுகிலும் பண்டார நாமம் பரித்தோரும் - கொண்டாடிக் 144 கொத்தடிமை யானோருங் கோயிற் கணக்கருடன் உத்தமமாங் கூல முடையாரும் - நித்தியமும் 145 கல்லுங் கரையக் கனிந்தவிசை பாடிவரும் முல்லை நகையார் முதல்அடிமை - எல்லவரும் 146 திருச்சின்னங்கள் கட்டியங்கூறல் சூழ்ந்து வரவே சுருதிமுடிக் கெட்டாமல் வாழ்ந்தசிவன் வந்தான் வழிவிலகித் - தாழ்ந்தகுறை 147 தீரவே நாளுந் தினகர்சகா யன்வந்தான் ஆரியன்முன் னான அரன்வந்தான் - பார் அறிய 148 வந்தமா ணிக்க மலைக்கொழுந்தன் வந்தான்மெய் தந்த முடித்தழும்பன் றான்வந்தான் - எந்தமெதிர் 149 சென்றபிரான் வந்தான் சிவாயநக ராதிவந்தான் கொன்றையணி பார்வைக் குளன்வந்தான் - என்று திருச் 150 மகளிர் குழாங்கள் சின்னங்கள் ஆர்ப்பத் திகந்தமட வாருடனே மன்னுங் ககன மடந்தையருங் - கின்னரர்தம் 151 கன்னியரும் நாகரிளங் கன்னியரும் விஞ்சையர்கள் கன்னியரும் சித்தரிளங் கன்னியரும் - மின்னனைய 152 மாநிலமின் னார்தம் வடிவமெடுத் தேகனக மேனிலை மாடத்து மேடையினும் - வானளவு 153 மண்டபத்தும் சாளரத்தும் மாளிகையும் சூளிகையும் விண்டடவு கோபுரத்தும் மெய்த்ததேப் - புண்டரிக 154 வல்லி யனைய மடவார் மகமேரு வில்லி யெதிரேபோய் விரகமதாய் - நில்லுமென 155 ஓடுமணித் தேர்மேல் உமாபதியைப் பார்த்(து) எவருஞ் சூடுமலர்க் கையாற் றொழுதிடுவார் - தேடரிய 156 மாணிக்கக் கூத்தரே மாரா வளிமுத்தங் காணிக்கை யோசொற் கடிதெண்ணீர் - பூணுற்ற 157 பச்சை வடிவம் பசலை நிற மாமெமைப் போல் இச்சையிற்பூண் டீரோ வெனக்கேளீர் - கச்சரவப் 158 பாம்பை யணைவீர் பகருமல்குற் பாம்பணையச் சோம்ப லேதென்று துதித்திடீர் - வீம்பின் 159 விட நுகர்வீர் காம விடமகற்ற வேறோர் இடமறியீ ரோவென் றிசையீர் - சடையிலொரு 160 மானைச் சுமந்தீர் மடமா னனையார்முன் ஏனிச்சை யில்லார்போல் எய்தினீர் - போன 161 பொசிவாசி கொள்வீர் புனலுகவே கண்கள் கசிவாசி தீரக் கருதீர் - இசையும் 162 முலைத்தழும்பு பூண முயங்காமல் வீணே தலைத்தழும்பு பூண்பாரோ சாற்றீர் - கலைச்சியெதிர் 163 மெய்வளையக் கூடலிலே மேவி வளை பகர்வீர் கைவளையை வாங்கக் கடவீரோ - பொய்வளையா 164 வாட்போக்கி யானால் மதன்போர் களையாமல் நாட்போக்கி வீணை நவிற்றினீர் - தீட்பினுடல் 165 வெண்ணீற தாக வெளுப்பான தென்மடவார் கண்ணேறு பட்டதோ காணென்பார் - புண்ணேறி 166 எய்த்தாரைக் காப்பீ ரெனவந்தும் எம்மிடத்தில் கைத்தாய ரால்வீணை கற்பித்தீர் - பைத்த 167 பணியா பரணம் பதைக்க வந்தார் மாலால் தணிவாரோ வென்று தளர்வார் - மணிவண்ணன் 168 கண்ணிடந்தும் நெஞ்சங் கனியா (து) இருந்தவர்க்குப் பெண்ணிடத் (து) ஏதன்பென்று பேசுவார்-விண்ணவர்க்கு 169 மெய்ப்பாக வேம்பை விரும்புவார்க் குக்கரும்பு கைப்பாகு மோவென்று கண்பிசைவார் - எய்ப்பை 170 அறியார் கரத்தூசல் ஆட்டுவர்போல் ஓடிப் பிறியார் அவரிலொரு பேதை - வெறிகமழும் 171 பேதை கற்பகப்பூங் காவீன்ற காமக் குருத்தெனலாம் அற்புதமாய்த் தோன்றும் அபரஞ்சி - தற்பரனைக் 172 கண்டுவலஞ் செய்யக் கருதுமுகி லைக்குறித்து மண்டலமே லாடா மடமஞ்ஞை - தொண்டருக்குள் 173 நேசம் பெருக நிமலருல காம்பரத்து வாசந் தொடுக்கா மலர்க்கண்ணி - மூசு நிழற் 174 சாலை நிகர் ரத்னா சலக்குருவின் அங்கைசேர் மாலை புகுதா மருக்கொழுந்து - கோலமதன் 175 தேடா வசந்தத் தியாகரா சர்க்கெதிர்போய்க் கூடா (து) உலவும் குளிர்தென்றல் - பாடாமுன் 176 பாவலர்க்கே செம்பொனிடு பாறையிடஞ் சென்றபிரான் ஆவற் கடல்படியா ஆரமுதம் - யாவர்க்கும் 177 தாயிற் சிறந்தார்தன் தாயகமாய் வந்துதித்த வேயிற் பிறவா விளைமுத்தம் - நாயனார்க் (கு) 178 ஆட்டுபுனற் காவேரி யாற்றின் அறலெனவே கூட்டி முடியாக் குழலினாள் - மேட்டிமையாய்ச் 179 சம்பந்த னோடெதிர்த்தே தாழ்ந்துகழு வேறு தற்கு வெம்பந்த மானோர் விரதம்போல் - எம்பிரான் 180 தத்துவநீத் தோன்மகத்தில் சாரும் சுரர்வீர பத்திரன்முன் ஏந்தும் படையெனவும் - அத்தனார் 181 எல்லாம் ஒருவடிவாம் என்னக் கொலைசிறிதும் கல்லா நிலைபடைத்த கண்ணினாள் - செல்லாகத் 182 தாங்குசடை யோன்உகந்து தானிருக்கும் கம்பைநதி மாங்குயிலும் ஒவ்வா மழலையாள் - ஈங்(கு) அமலன் 183 சேல்வாய்த் திடாதமரும் தெய்வங்கள் போல் இறந்தே ஏல்வாய் முளைக்கும் எயிற்றினாள் - மால்வாய்வைத் (து) 184 உண்டபகி ரண்டமதாய் ஓங்கும் திருக்குறிப்புத் தொண்டர்க்(கு) அடங்குந் துணைக்கரமாய்த் - தெண்டிரையுள் 185 மோது சுதைக்குடமாய் முன்வந் தெழுந்தினிமேல் சூதுபெறத் தோன்றும் துணைமுலையாள் - தாதுசெறி 186 செந்தா மரைமலரும் செந்தீபம் ஆமெனவே நொந்தாங் (கு) அணுகி நுவலுவாள் - நந்தாத 187 அன்னையரை நோக்கி அணிபுனைய வேயெனக்கு வன்னமுலை காட்டுமென மாழ்குவாள் - தன்னுருவம் 188 நேராய் அணுகு நிழலையொரு பாங்கியெனச் சீரார் மனைபுகுந்து தேடுவாள் - பார்ஏழும் 189 மின்னும் மணிக்கிரணம் மிக்க மணி ஆடரங்கில் தன்னைநிகர் ஆயம் தழுவவே - பொன்னுமணி 190 யால்அமைத்த சிற்றிலிடை ஆர்க்குமணற் சோறருந்த வாலமதி யால் விருந்தை வாவெனுமுன் - சீலமிகும் 191 அண்ட கடாகத் தவர்முழக்கும் மானதஞ்சேர் புண்டரிக வேதன் புகல்முழக்கும் - பண்டை 192 மறைமுழக்கும் பேரி மணிமுழக்கும் வானோர் முறைமுழக்கும் முன்னே முழங்க - நிறைதவத்தால் 193 கோலும் சுரும்பார் குழல்பால் இருந் (து) எவரும் மாலும் தெரியா வடிவத்தான் - சூலப் 194 படையான் விடையான் பவளச் சடையான் அடையா தவர்பால் அடையான் - இடையிலும்பர் 195 அத்தி தரித்தான் அதிரநகு வெண்டலையான் தத்தி முயலகனைத் தான்மிதித்தான் - கொத்தவரும் 196 கொக்கிறகு சூடினான் கூர்மத்தின் ஓடணிந்தான் மிக்கமாணிக்கமலை மேவினான் - திக்கெலாம் 197 கொண்டாடும் பன்னிருவர் கூட்டம் பணிசெய்யக் கண்டோர் சரணங்காண் என்னவே - விண்தாவு 198 வெற்றிமணித் தேர்மீதில் மேவுதலும் ஈங்கிவளும் சிற்றில் ஒழிந்து தெருவணுகிச் சுற்றிவரும் 199 அன்னையர்போல் தானும் அடியில் பணிந் (து) அமலன் பொன்னுருவை நோக்கிப் புதுவிருந்தாய் - என்னருகில் 200 வாராரோ இந்த மலைக்கொழுந்தர் தாம் எனலும் ஆரா வமுதே அமரருக்கும் - பேரான 201 விண்விருந்து செய்தார் விடைக்கலது நீசமைத்த மண்விருந்து தேடி வருவாரோ - கண்விருந்து 202 செய்வதே போதுமெனச் செம்பொன்மணித் தேர்கடவி மைவளரும் கண்டர் மறைந்திடலும் - பெய்வளையைத் 203 தாங்கியகைத் தாயர் தமதகம்புக் கார்மதனும் பூங்கணையை ஏவாமல் போயினான் - பாங்கொருத்தி 204 பெதும்பை மன்னும் எழிற்பெதும்பை வைகறையில் பக்குவமாய்ப் பன்னுமுகை யன்ன பருவத்தாள் - முன் உதய 205 வெய்யோன் அகலநிலா வேட்டெழுமுன் பார்க்கின்ற மையார் சகோரத்தின் வண்மையாள் - தொய்யாத 206 சித்தசன் செங்கோல் செலுத்தற் (கு) இளவரசாய் வைத்தபிடே கஞ்செய் வனப்பினாள் - நித்தியமும் 207 போற்றியே தான்வளர்த்த புட்களினால் காமரசம் தோற்றியே சொல்லும் துழனியாள் - சாற்றியசெம் 208 பொன்னா பரணம் புழுகுசவ்வா (து) இன்னதெனத் தன்னால் அறியத் தகும் வாயாள் - முன்னான 209 கும்பமுலை மாதர் குறிப்பறிந்து கூடுவள் போல் விம்பவிதழ் நோக்கும் விரகினாள் - நம்பரால் 210 வந்தமுனிக் (கு) அஞ்சி மறைந்தெட்டிப் பார்க்கின்ற விந்த மொசித்தெழுந்த மென்முலையாள் - செந்தமிழ் நாட்(டு) 211 ஆடலார் ஏவுமுகில் அன்று நான் மாடமேற் கூடல்போற் கூடுங் குழலினாள் - நாடியினி 212 மேலமலன் ஏவ வெளியிலுறா ஆழியெனக் கால நிலையறியும் கண்ணினாள் - பாலனைய 213 கன்னியிளம் பேட்டெகினக் காலின் நடைசிறிது தன்னடையிற் காட்டும் தகைமையினாள் - தென்னவர்கோன் 214 ஏற்கைமணம் நாட எழுந்தென்றல் வந்துலவிக் காக்க நறைகமழ்பூங் காவனத்தே - தீர்க்க 215 மயில்கண்டு சாய மழலைக் (கு) ஒதுங்குங் குயில்கண்டு கூவக் குலாவி - அயல்வண்டும் 216 வாஞ்சித் (து) அணுக மணிக்கிரணம் ஊடாடும் பூஞ்சித்ர மண்டபத்தில் போய்ஏறிக் - காஞ்சிபுனை 217 சிற்றிடை ஆயஞ் செறிய இருந் (து) அதிலோர் பொற்றொடியை நோக்கிப் புரிகுழலே - வெற்றிபெற 218 ஆடும் கழங்கினை நாம் ஆடுதுமென் (று) அங்கையினால் நாடும் கிரண நவமணியும் -தேடி 219 எடுத்திமையோர் வேள்வி இருந்த வலன் அங்கம் தடுத்தமணி ஈதெனவே தள்ளி - அடுத்துவளர் 220 மாமலைமா ணிக்க மலையதனில் ஏழுமணி தாமலையா (து) ஏந்திச் சராசரமும் - காமுறவே 221 ஒன்றென் (று) அகில உகாந்தத் தினுங்கிளைத்து நின்றபெரு வேம்பின் நிழல்பாடி - ஒன்றும் 222 இரண்டென் (று) இருவகையாய் எய்து பிரமத்தி பரந்ததனை வீட்டினது பாடி - இரங்குதற்கே 223 மூன்றென்று நாவலர்சொல் முத்தமிழ்கேட் (டு) அம்பொனிடத் தோன்றிய பொன்பாறைத் தொழில்பாடி - அன்றவற்கு 224 நாலென்று நாலாய் நகுபதமும் ஈவமினி மேலென்று நின்ற விதம்பாடிச் - சீலமுடன் 225 அஞ்சென்று மேனாள் அமைத்ததொழில் ஆற்றுதற்கே பஞ்சகர்த்தா ஆன பயன்பாடி - இன்சொல்லால் 226 ஆறென்று காவேரி யாறதனை யேவிரும்பும் மாறிலா நேச வளம்பாடி - வீறுடனே 227 ஏழென்று (று) அடியார் எழுபிறப்பும் மாற்றியருள் ஆழியென வைகும் அவைபாடித் - தோழிமார் 228 முன்னமே ஆட முகமலர்ந்து போதுமினி அன்னமே என்னும் அளவிலே - சொன்னநவ 229 கோட்டையான் அன்பர் குறிப்பின் நிலையகழான் தாட்டியவான் விண்கொத் தளத்தினான் - காட்டியசீர் 230 நீங்காத கொம்மையான் நீண்ட அலங்கத்தான் ஓங்காரம் மூழ்கலார் உட்படியான் - பாங்கான 231 திண்ணகத்தான் ஞானத் திருவாச லான்சலதிக் கண்ணகத்தான் ஒல்கு கபாடத்தான் - எண்ணரிய 232 கோபுரத்தான் ஆடுங் கொடியந் திரமுடையான் தாபதற்குள் எட்டாத் தடமதிலான் - மாபுலவன் 233 முற்றுமாள் ஆவணத்தான் முத்திதர மறுகான் சற்று நயந் தோரைத் தான்முடுக்கான் - பற்றிலர்முன் 234 சந்தியான் ஓதும் சதுக்க மனையிலக்காய்ச் சிந்தியான் பாகத் தெருவையான் - வந்தியார் 235 மாடத்தான் எல்லாம் மருவி வளரண்ட கூடத்தான் தென்சிவதைக் கோயிலான் - நாடித்தான் 236 இம்பர் அணுகும் இலகுமணித் தேர்கடவி உம்பரொடு மேவ உடனெழுந்தே - அம்புயநேர் 237 கைக்கழங்கை மேலோர் களங்கம் எனவெறிந்தாள் மெய்க்களங்கம் நீத்தமதி விம்பமெனத் - திக்களந்த 238 மூர லொடுமடவார் முன்போய்த் தொழத்தொழுதாள் வேரல் மணிமுகத்தாள் விண்மணியை - நேரலர்க்கே 239 சேயான தெய்வச் சிகாமணியை அன்பரைக் காயா (து) அருள் பொழியும் கண்மணியை - வாயால் 240 வழுத்தினாள் மாணிக்க மாமணியின் மார்பில் அழுத்தமுலை போதாதென் (று) ஆய்ந்தாள் - விழுத்தகைய 241 அன்னையரை நோக்கி அழகுமணித் தேர்மீதில் என்னையிவர் பாகத் (து) இருத்துமென - முன்னம் 242 மலையா னவர்க்கு மலைகொடுத்த மான்போல் நிலையா னவளோ நிகழ்த்தாய் - குலமயிலே 243 என்பாரை நோக்கிநீர் ஏதறிவீர் சென்னியிலோர் மின்பாரீர் என்று விளம்புதலும் - முன்பாகச் 244 சென்றமணித் தேரின் சிரோமணியைப் பார்த்தெவரும் ஒன்றியபே ராசை யுடையீரே - இன்றெமது 245 கையதனை நீங்காத கன்னிக்கும் பேராசை செய்யவோ வந்தீர் சிவனேநீர் - துய்ய 246 வடிவாள் இடத்திருந்தும் வாளுருவி வெட்ட முடிதாழ்த் திருந்த முறையோ - அடலைமிகுங் 247 காடேறிக் கூத்தாடிக் கண்ட விடநுகர மாடேறி யோடு மதியோதான் - கோடேறி 248 ஏசு கபாலத் (து) இரந்தடியான் சேயிறைச்சி கூசியிடா துண்ணக் குறித்ததோ - காசினிமேல் 249 என்சொல்வோ மானாலும் எத்தவே கற்றீரென் (று) இன்சொலா ளோடுமனைக் (கு) எய் தினார் - வஞ்சமதன் 250 கண்டுமறி யாதவன்போல் கைக்கரும்பை உள்ளடக்கி விண்டகல்வான் போலயலே மேவினான் - மண்டலத்தில் 251 மங்கை எல்லா உயிர்க்கும் இறையைத் திறைகொள்ள வல்லாள் எனவுதித்த மாமங்கை - உல்லாச 252 மங்கையர்கட் (கு) எல்லாம் மனோரதமாய் உற்பவித்த செங்கமலம் மேவாத் திருமங்கை - இங்கிதத்தால் 253 வீறும் பெருமிதமும் மிக்ககல்வி நன்னலமும் கூறுமநு ராகக் குறிப்பினாள் - மாறிலாக் 254 கைவலனோர் பஞ்சாக் கரமடுவில் வந்துதித்த சைவலத்தை ஒப்பான தாழ்குழலாள் - மெய்வலத்தால் 255 அன்றிருபால் ஆன அமுதம் விடம் இரண்டும் இன்றொருபால் உற்ற (து) எனுங்கண்ணாள் - கொன்றையணி 256 மாலையான் கூத்தில் மருவுவான் தாளத்தின் கோலம் அனைய குவிமுலையாள் - ஞாலமெல்லாம் 257 சேமித் திடமருட்டும் திவ்வியம்போ லேயிளையோர் காமித் திடநடக்கும் காட்சியாள் - வாமத்தின் 258 அந்தரங்க மான அடல்மதன நூல்படிக்க வந்தரங்கில் ஏறி வயங்குவாள் - முந்தி 259 மறம்பொசிந்த பார்வை வகுக்காமுன் காமம் புறம்பொசிந்து காட்டும் புதியாள் - நிறம்பொசிந்து 260 வீசு கதிர்பரப்பி விண்ணும் புவியுமொரு தேசு பெறமணியாற் செய்குன்றில் - நேசமுடன் 261 வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே அந்த மிகுமதுரை அம்மானைச் - சொந்தமதாங் 262 கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே ஆட்டுத் தலைபடைத்த அம்மானை - வீட்டி 263 அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும் மலைக்கே துறையாம் அம்மானை - நிலைப்பாய் 264 அட்டி புரிபாச்சி லாச்சிரமத் தேபுணரக் கொட்டமிகு மானைக் கொடுத்தருளும் - செட்டியெனும் 265 அம்மானை யும்படைத்த அம்மானைப் பாடியிவள் அம்மானை யாடும் அளவிலே - பெம்மான் 266 கரதலமார் சூலன் கபாலன்கல் லாலன் வரதன்நா கீசன் மகேசன் - பரதநவில் 267 பாதன் அபேதன் பழைய மறைக்கீதன் நாதனுயர் வேதாந்தன் நாதாந்தன் - போதமிகும் 268 பன்னிருவ ரீசன் பகரு மலைவாசன் மின்னிருவர் மோகன் விடைப்பாகன் - மின்னும் 269 அமலனருள் நேயன் அடியர் சகாயன் விமலன் அரூபன் விரூபன் - திமிலமிகு 270 கூத்தாடல் கொள்ளுங் கொடிநெடுந்தேர் மீதுறலும் பார்த்தாடல் விட்டிவளும் பாங்கணுகிப் - பூத்தூவி 271 வந்தித்தாள் அங்கே மதிமருட்ட வேமதனும் சந்தித்தான் அந்தச் சமையத்தே - முந்தித்தான் 272 மாதா யரைப்பார்த்து மற்றிவர்தாம் மங்கையரை ஏதால் அணைவார் இசையுமெனக் - கேதாரி 273 மங்கைக்கே மோக மயலகற்றி னாரதுவுஞ் செங்கைப்பூ வாலே தினம்பரவிச் - சங்கையுடன் 274 வாழ்த்தியிடுங் கன்றாப்பூர் மங்கைக்கே அன்றுசெவி தாழ்த்திருந்தார் அந்தத் தகைமையும் - வீழ்த்தி 275 வருமுத் தரகோச மங்கைக் கயலே தருபட்ட மங்கை தனக்கும் - நிருமித்த 276 வண்ணமும் நீகேட்டு மங்கையே யானாலுன் எண்ணம் முடித்தி எனலுமெதிர் - நண்ணும்அரன் 277 ஆழிமணித் தேர்கடவி ஆங்ககன்றான் அவ்வளவில் வாழி மதன்பகழி மாரிபெய்ய - ஊழிநாள் 278 வந்ததோ என்ன மயங்கிமட வாருடனே இந்துதோய் மாடத் தினிற்புகுந்தாள் - சந்ததமும் 279 மடந்தை மோகரச தாழிமுளைத் (து) அதனி லேகனிந்த நாகரிக யோகம் நவில்மடந்தை - வாகுடனே 280 பின்னிவிட்ட கூந்தல் பிறையுந் திகழுமுகில் மின்னிவிட்ட தான வினோதத்தாள் - தன்னுதலில் 281 இட்டபொட்டை நோக்கி இளையோர்கள் வந்துதினம் வட்டமிட்டுப் பார்க்கும் வனப்பினாள் - துட்டமதன் 282 கைச்சிலையில் பூட்டுங் கணையெனவே வையமெலாம் நச்சி அளக்கும் நயனத்தாள் - உச்சிதமாம் 283 போர்க்குமதன் ஏந்திப் புடைவிதிர்க்குங் கேடகநேர் காக்குமணித் தோடிட்ட காதினாள் - சேர்க்கும் 284 புதியமணி மூக்குத்தி பொற்குமிழின் வந்து பதியுநிலா வீசப் பயில்வாள் - மதியனைய 285 முல்லைநகை யீன்ற முளரிக் கலங்கரித்த மெல்லிதழ்ச்செவ் வாய்மலரின் மேன்மையாள் - வல்லபஞ்சேர் 286 புட்குரல்கள் ஓரெட்டும் பூணா பரணமெனக் கட்குலவு பூகநேர் கந்தரத்தாள் - உட்கனிவால் 287 எம்பிரான் நாமம் இசைத் தபசுங் கிள்ளைசேர் செம்பொனார் சூடகத்தின் செங்கையாள் - பம்பிப் 288 புடைபரந்து விம்மியே பூரித் திறுகித் தடையிலா (து) ஓங்கும் தனத்தாள் - மடமையற 289 ஓங்கும் இளைஞர் உயிர்சுழிக்க வேசுழித்துள் வாங்கியிடும் உந்தி வலஞ்சுழியாள் - தாங்கரிய 290 காமநூல் அன்ன கனகமணி மேகலையின் சேமநூல் பூணுற்ற சிற்றிடையாள் - தாமரையின் 291 வட்டமதாய் ஆடரவ வாயென வேயுலகைத் தெட்டியிடும் அல்குற் சிறப்பினாள் - கட்டுபசும் 292 பொற்கதலி நேராய்வெம் போர்மதனன் மண்டபஞ்சேர் சொற்கவினும் மோகத் துடையினாள் - கற்கடக 293 மேலாம் வராலடியில் மின்னுமணி நூபுரத்தின் பாலான செம்பொற் பதாம்புயத்தாள் - மாலாதி 294 இந்திரரும் மோகித் (து) இனிதிறைஞ்ச வாள்விதிர்க்குஞ் சந்திர காந்தத் தலத்தினிடை - வந்திருந்தே 295 ஆங்கு மணிமகதி யாழ்வீணை மீட்டியெதிர் பாங்கியர்பண் பாடப் பரவசமாய்ப் - பூங்குழலீர் 296 விண்ணுக்கும் மண்ணுக்கும் வேறாம் உலகுக்கும் கண்ணுக் (கு) இனிதான காவலரை - எண்ணித்தான் 297 சொல்லுவீர் என்னத் துணைவிக்கா ஈமத்தைப் புல்லுவான் ஆண்மை புகலவோ - இல்லவள் தன் 298 மூக்கிழந்தும் வாழ்தன் முகமிழந்தும் மோகிக்கும் வாக்கிளையான் மேன்மை வகுக்கவோ - நோக்கரிய 299 அங்கமெலா மாதர் அழகுகுறி பூண்டதனாற் பங்கமுறு வானைப் பகரவோ - செங்கைபோய் 300 இன்னமுநாம் மேவி யிடக்குளிகை யாய்த்திரட்டிப் பன்னியைவைத் தான்மகிமை பன்னவோ -முன்னியற்றும் 301 மாமகத்தில் தேய்ந்தானை மன்னியபல் போனானைத் தாமுரைக்க லாகுமோ தாரணியில் - காமமிகும் 302 பெண்ணுக்கும் ஆணுக்கும் பேரழகன் என்பதுதான் எண்ணிற் சிவனே காண் ஏந்திழையே - கண்ணுக் (கு) 303 இனியவாட் போக்கியான் இன்பநலம் எய்தக் கனிவுசெய் யாயெனலும் காலால் - முனியுநமன் 304 ஆகத்தி லேயுதைத்தான் அண்டர் தமைச்சிதைத்தான் மாகத் தெழுந்தான் மலைக்கொழுந்தான் - நாகத்தின் 305 பூசை உகந்தான் புரிசடையின் நீர்முகந்தான் ஆசை யுடையான் அருட்கொடையான் - தேசு 306 பெருங்கனகத் தேர்மேல் பிரான் பவனி எய்த இருமருங்கி னாரோடும் எய்தி - விருந்தினையே 307 சாதிக்கும் பாத சரோருகமும் மாமுடியும் சோதிக்கு மாறு தொழுதிட்டாள் - நீதிக்குள் 308 நீங்கா நிலையீர் நிறைகவர்வ தென்னெனவே பூங்காவி பாயப் புழுங்கினாள் - பாங்காக 309 ஆறு தலையுடையீ ரானால் இனியெனக்கோர் ஆறுதலைச் சொல்ல லாகாதோ - வீறுடனே 310 சார்ந்தாரைக் காத்தவரே சஞ்சலத்தால் வந்தருகு சார்ந்தாரைக் காக்கத் தயவிலையோ - நீந்தாமல் 311 முன் பார்த்த கண்ணால் முனிமதனை இன்றடக்கப் பின்பார்த்தல் ஒண்ணாதோ பேசுமென - அன்பால் 312 பரவும் அளவில் பராபரன் பொற்றேரும் தெருவகல மாதர் செறிந்தே - உருவிலிகைத் 313 தூற்றும் பகழித் தொடைமடக்கி உள்வாங்கப் போற்றுமணி மாளிகையில் புக்கினார் - ஆற்றலுடன் 314 அரிவை மேனாள் அமைத்த வினோத வடிவமெலாந் தானாதிக் கந்தான் தனிசெலுத்த - மானார்தம் 315 அங்கமெலாம் நோக்கி அலங்காரத் தூரியத்தைச் செங்கையிலே ஏந்தித் திசைமுகத்தோன் - சங்கை 316 பிதிரா (து) எழுதிப் பிரமிக்க விட்ட அதிரூப மான அரிவை - மதிதிறம்பா 317 வேதன் முதலனந்த விண்ணவரும் பல்லுயிரும் பாதத் (து) அடங்கப் பரிந்தொடுக்கி - நாதனார் 318 ஏகீ பவித்தாடும் எல்லை யிருட்பிழம்பின் வாகீன் றனைய மலர்க்குழலாள் - ஆகாயம் 319 முற்றும் அளவாக முன்னோன் வளைத்திட்ட பொற்றனுவே அன்ன புருவத்தாள் - வெற்றிபெறச் 320 சங்கார காலந் தனித்திருந்து தூண்டுமரன் உங்கார மேபோன் றொளிர்கண்ணாள் - மங்காத 321 முப்புரமு நீறாக முன்னகைத்தார் மூரலெனச் செப்புரமே செய்யுஞ் சிறுநகையாள் - துப்புரவு 322 மூட்டுபகி ரண்ட முகட்டையிடித் தேபொருப்பை வாட்டும் புளக வனமுலையாள் - தீட்டியபொன் 323 தூரியத்தில் வாயாத் துடியைத் துடியெனவே வாரியற்கை பூண்ட மருங்குலாள் - நீரணியைப் 324 பூசித் திடநேர் புகழ்சே டனும்பதறி ஆசித் திடமருட்டும் அல்குலாள் - தேசத்தோர் 325 பூவுலகம் என்பதனைப் பூவாம் எனச்செறிந்து பாவுமர விந்தநேர் பாதத்தாள் - யாவருக்கும் 326 அற்புதம தான அனங்கள் அதிகாரம் கற்பிக்கும் மோகக் கருத்தினாள் - பொற்பமரும் 327 காமா லயம்போல் கனகமணி மண்டபத்தில் மாமாத ரோடு மகிழ்ந்திருந்தே - பூமானாம் 328 மாணிக்கச் கூத்தனைநாம் மைய லிடைப்படுத்தப் பாணித் (து) உபாயம் பகருமெனப் - பேணிப் 329 பொசிவாசி கொள்வார்க்குப் பூவையர்க ணீரே விசுவாசம் என்றும் விடாதே - அசைவிலா 330 வேதண்டமும் பணியும் வெண்பிறையும் அங்கமதாய்த் தீதண்டா மேனித் திருவழகை - மூதண்டம் 331 காணநீ காட்டினால் காமித் (து) அணைவரெனப் பூணிளையார் தேற்றும் பொழுதவளும் - நாணினால் 332 மேருச் சிலைவளைத்தார் வேதத் தலைகிளைத்தார் பாருக் கிடைமுளைத்தார் பாம்பணைந்தார் - ஆரியற்கு 333 முத்தி கொடுத்தார் முனியா(து) எனையடுத்தார் நித்த விதான நிதானத்தார் - பத்திமையால் 334 வாம்பரித்தேர் தூண்டி வரலுமட வாருடனே பூம்பரித்தேர் அன்ன புரிகுழலாள் - சாம்பசிவன் 335 கண்பட்டாற் போதுமெனக் கைவசம தாக்குதற்கே பெண்பட்டங் கட்டிப் பிறப்பட்டாள் - பண்பட்ட 336 பின்னணியாய்க் கூந்தல் பிறழஅல்குல் தேரதனை முன்னணிய தாக்கி முலையானை - அன்னவர்பால் 337 தாக்க மதமீறித் தானை கொடுநடந்து தாக்கினாள் அந்தச் சமருக்கே - நோக்கினாள் 338 மன்மதனைக் காய்ந்தார் மலைப்பரோ செங்காட்டில் பின்மகவைக் கொன்றார் பிதற்றுவரோ - வன்மனத்துச் 339 சிங்கத்தைக் கண்டார் திகைப்பரோ வெம்புலியின் அங்கத் தினையுரித்தார் அஞ்சுவரோ - பொங்கியெழு 340 மாவைச் செகுத்தார் மயங்குவரோ மானேயுன் ஆவல் அணிவகுப்பால் ஆவதென்ன - வாவெனவே 341 சொல்லும் அளவில் சுரும்பார் குழலிபுணர் வல்லவன்தேர் அங்கே மறைந்திடலும் - அல்லென்னும் 342 நீல நெருப்பும் நிலாச்சொரியும் வெண்ணெருப்பும் மேலணுக வீணே வெளி நின்றாள் - சால 343 தெரிவை அலங்கார மான அலைகடலில் மெய்யாம் நலங்காணும் மந்தரத்தை நாட்டி - நிலஞ்சிறந்த 344 பேரழகி னால்கடையப் பெண்ணமுதாய் வந்துதித்த ஆரமுதம் வாய்மை அறிதெரிவை - சாரும் 345 சுரதரதி கேளி சுகோதயம தானா விரத வடிவேல் விழியாள் - சரசகுண 346 சல்லாப லீலா சனமருவு சையோக உல்லாச மானஒயில் நடையாள் - கல்லார 347 மாமாலி காபரண மண்டலஞ்சேர் கொண்டலெனக் காமா லிகைசேர் கருங்குழலாள் - பூமேவு 348 வச்சிரவேள் சூடா மணிமகுட மாங்கனகக் கச்சறவே விம்மும் கனதனத்தாள் - பச்செனவே 349 மன்னி உலகை மருட்ட ஒளித்திருந்த மின்னனைய சூட்சி வெளியிடையாள் - பொன்னவிரும் 350 தட்டெனலாய் ரோம சலாகைக் கெதிர்விரக நிட்டை புரியும் நிதம்பத்தாள் - அட்டதிக்கும் 351 மோகிக்க வேதன் முடித்த திலோத்தமையும் தாகிக்க ஊன்றும் சரணத்தாள் - மேகத்தின் 352 வண்ணமால் மோகினி யாய்வந்து வளைந்ததெனக் கண்ணுதலார் முன்னடக்கும் காட்சியாள் - நண்ணும் 353 அவயவமும் பூணும் அலங்கரித்தே நாளும் நவவடிவம் ஆன நலத்தாள் - சிவபெருமான் 354 கீர்த்தி புகலெனவே கிள்ளை உரைக்கும்அந்த வார்த்தை வினவி மலரணைமேல் - மூர்த்தமொன்றில் 355 எண்ணில் உகாந்தம் இறந்ததென வேயிருந்தாள் பண்ணறிந்து பாவலர்போல் பாடினாள் - அண்ண லெதிர் 356 வந்தருள்வார் என்ன மகரயாழ் கைக்கொண்டு சந்தவிசை பாடும் சமையத்தே - அந்தரமேல் 357 ஆடு பதத்தழும்பர் ஆரணநூல் வாய்த்தழும்பர் ஏடெதிரே செல்ல எதிர்வைகை - நாடன்கை 358 மாற்றினால் அன்று வகுத்த திருத்தழும்பர் கூற்றை யுதைத்த குலைத்தழும்பர் - போற்றுமுமை 359 கம்பா நதியில் கலந்தணைத்த மெய்த்தழும்பர் உம்பர் முடிவைத் துறைத்தழும்பர் - அம்புவிமேல் 360 எத்தழும்ப ரேனும் இறைவனிடி நாகத்தால் முத்தழும்ப ரான முடித்தழும்பர் - சித்ரமணித் 361 தேரதனில் ஏறித் தெருவணுக மற்றிவளும் தாருலா வீணை தனையெறிந்தே - காரிருளில் 362 பாடியபாணற்கே பலகையிட்டார் முன்னணுகி நாடியே மூவர் நவில்வதற்கே - தேடரிய 363 பொன்னிடுவீர் ஆனால் புளகமுலைப் பொன்னழிக்கப் பின்னிடுவ(து) என்ன பிரானேமுன் - பன்னுதமிழ்ச் 364 சங்கத்தோன் வேண்டச் சரீரத்தை யேயுதவித் துங்கத் தியாகியெனத் தோன்றுமக்குச் - செங்கனிவாய் 365 மாதர் மொழிகேளா வகையே(து) எனலு(ம்)மதன் தீதிலா நோக்கம் சில கொடுத்தே - சோதியாம் 366 மாமணித்தேர் வீதி மறைய இவளுமொரு பூமருபொன் மாடம் புகுந்திட்டாள் - காமருபூம் 367 பேரிளம் பெண் பொன்னுதிக்கு மாறுதித்த பொன்னாட்(டு) அரம்பையரும் பின்னுதிக்க முன்னுதித்த பேரிளம்பெண் - நன்னயஞ்சேர் 368 பாகு மொழியும் பல நடையும் கூட்டியொரு வாகு புரியும் வசீகரத்தாள் - நாகரிக 369 வல்லி முதிர்ந்து மலரத் தழைந்ததென மெல்ல அழகெறிக்கும் மெய்யினாள் - சொல்லும் 370 கலையும் மதியும் கலைபற்றி நின்ற நிலையும் பிரியா நிலையாள் - மலையமெனத் 371 தானே வளர்ந்தால் சரிவும் தகுமெனவே மேனாள் சரிந்து விழுந்ததோ - நானாவாம் 372 நூலிடையாம் சிங்கத்தை நோக்கி வணங்குதற்கே கோலி மதயானை குறித்ததோ - மேலெல்லாம் 373 கட்டுண்டு வாராற் கசங்கினமென் றேகவலைப் பட்டுமுகம் சாய்ந்திருந்த பான்மையோ - எட்டியே 374 கும்பமதாய் வந்த குவலயத்தின் மேல்சீறி வெம்பியே பார்க்கும் விதந்தானோ - அம்புவிமேல் 375 எல்லா வரையும் இருக்கநாம் அந்தரத்தே நில்லோம் எனவிறங்கு நீர்மையோ - வல்லான 376 வெற்றி இனி நமக்கு மேவா(து) எனக்குழைந்து முற்றியே வீழ்ந்த முலையினாள் - கற்றதனால் 377 நேருஞ் சுரத நிலையறிசிற் றின்பமெலாம் பேரின்பம் ஆக்கும் பெருமிதத்தாள் - ஆரியனைக் 378 காத்தபிரான் கண்ணின் கருணையென வேகுளிரப் பாத்தசீர் நீங்காத பார்வையாள் - பூத்(து)ஒளிரும் 379 கொம்பெனலாம் எம்பிரான் கோலா கலச்சரணம் நம்பும் உபய நளினத்தாள் - உம்பர்களும் 380 காணா மலைக்கொழுந்தைக் கண்டு பணியுமதே பூணார மாய்நினையும் பொற்பினாள் - நாணாமல் 381 ஆறு பருவத்(து) அடங்கா ததுமுடிக்க வீறுடனே எண்ணும் விபரத்தாள் - மீறியே 382 வீசு நிலா வெறிக்கும் வெண்ணிலா முற்றத்தே பாசிழையார் தந்த பலகைவைத்தே - காசு 383 பரப்பியே கூடல் பயிலுமணி ஒன்பான் நிரப்பியே பார்க்கும் நெறியை - விருப்பமிக 384 முன்னதாம் முத்தைவேய் முத்தென் றிடமடவார் என்னநீ கண்டாய் எனமயங்கித் - தன்னை 385 மறந்து பவளத்தை வாழ்த்தி அரன்வேணி சிறந்ததென மாதர் செறிந்தே - அறந்திறம்பா 386 மானே தகாதெனுமுன் மாமணியை நோக்கியிது தேனார் இதழியார் தேகமெனத் - தானே 387 மருவ மனங்கொண்டு மையலுறும் எல்லை அரிபிரமர் காணா அமலன் - விரிபுவனி 388 ஆண்டவன்மா தேவன் அகில சபைநடனத் தாண்டவன் நாகேசன் சராசரமும் - பூண்டவனாம் 389 காலகா லன்பரமன் கங்காள ரூபனுயர் ஆலநீ ழற்பயிலும் ஆனந்தன் - கோல 390 அருணா சலன் நிமலன் அற்புதம தானான் கருணா கரன்கமலக் கண்ணன் - சரணமலர் 391 வந்திக்கும் நேசன் மகேசன்மார்த் தாண்டனுளஞ் சிந்திக்கும் யோக சிவவிரதன் - பைந்தொடியாய் 392 பன்னிருவர் பாலுகந்த பன்னிருவர் போற்றியது பன்னிருவர் வாழ்த்தவே பன்னிருவர் - என்னுடனே 393 என்று வருநடையான் ஏகாம் பரவுடையான் துன்று பிறைச்சடையான் சூர்விடையான் - கொன்றை 394 மருக்கொழுந்து சூடி மலைக்கொழுந்தாய் நின்றான் திருக்கொழுந்து வீசும் தெருவில் - அருக்கரென 395 ஆடகத் தேர்மீதில் அணுகுதலும் ஆங்கமைத்த கூடல் ஒழிந்துபோய்க் கும்பிட்டாள் - நீடுமணித் 396 தேரில் வருவார் திருவுளமுந் தஞ்செயலும் பாரில் அறியும் படி நினைந்தே - மாரவேள் 397 பூங்கணையும் தென்றற் புலியும் மதிக்குடையும் மாங்குயிலும் மேன்மேல் வருத்தாமல் - ஓங்கியெழு 398 மந்திரமே தேவே மருந்தே மணியேசொல் தந்திரமே வாழ்வே தயாநிதியே - எந்திரமே 399 அன்பே பொருளே அருட்கடலே யாவர்க்கும் முன்பே சிவமே முழுமுதலே - என்பார்முன் 400 பாராமல் இன்னம் பராமுகமே பண்ணுமோ ஆரா அமுதென் (று) அடிபணிந்தாள் - நேராய்க் 401 கலைக்கொழுந்து சூடக் கருதும்நீர் என்றன் முலைக்கொழுந்து சூட முயங்கீர் - அலைத்துவரும் 402 காவேரி நீரில் கனிவாம்நீர் என்னதரப் பூவேறு நீரைப் பொருந்தீடீர் - மூவாச் 403 சுரும்பார் குழலிசைக்கும் சொற்கடவீர் என்வாய்க் கரும்பார் குழலிசைக்குங் காவீர் - திரும்பிமுகம் 404 பாரீர் எனத்தொடரும் பைந்தொடிமேல் அன்புவைத்துக் காரீர் எனுமென்னைக் கைவிடான் - ஏரான் அக் 405 கன்னிதுற்கை நாகம் கடவுளர்கோன் காலிரவி மின்னிடிகொள் மாமுனிவர் வேண்டவே - கின்னரர்தம் 406 மாதர் ககன மடவார் திசைமடவார் பூதல மின்னாரும் புடைசூழ - ஆதி 407 விரகேசன் தென்சிவதை வீதிதொறும் தேர்மேல் உரகேசன் போந்தான் உலா. 408 வாட்போக்கியென்னும் இரத்தினகிரியுலா முற்றிற்று வாழி வாழி சிவாயநகர் வாட்போக்கி யார்வாழி வாழிமா ணிக்க மலைவாழி - ஊழியினும் தொண்டரெலாம் வாழி சுருதி சிவாகமமும் மண்டலமும் வாழி மகிழ்ந்து. திருச்சிற்றம்பலம் |