சிறுமணவூர் முனிசாமி முதலியார்

இயற்றிய

மனோதிருப்தி

வெண்பா

நாடறிய வேங்கடத்தில் நாரா யணனிருக்க
காடுஞ் செடிதோருங் கால்கடுத்து - ஓடாமல்
போட்டவிட மங்ஙனமே பொருள்தேடு வார்போல
நாட்டமுட னேமனமே நம்பு. 1

நம்பி முயல்வார்க்கு நட்டமிலை யென்றமொழி
அம்புவியோர் சொல்ல வறிந்திலையா - கம்பமதில்
உண்டென்ற போதே யோங்கி யெழுந்தவருட்
கண்டிருந்து மோனோ கலக்கம். 2

பிதுரார்ச் சிதம்போல பிராரத்வ மாமனமே
விதனப் படுவதினால் விட்டிடுமோ - மெதுவாக
பட்டு துலைத்தக்கால் பழயவடி யார்போல
தொட்டுகொளு மீசன் துணை. 3

இட்டார்க்கு யிட்டபல னென்றபடி யூழ்வினையிற்
பட்டாலு மீசன்மேற் பற்றுடையார் - கெட்டதுண்டோ
நோய்படுவ தெண்ணிமனம் நோகாதே யீன்றெடுத்த
தாய்விடுமோ சேய்முறையைத் தான். 4

நம்ம மனைக்கு நாம்பெரியோ ரானதுபோல்
செம்மையுல கம்படைத்த ஸ்ரீஹரியை - இம்மையெலாம்
முக்காலும் நம்பி மெய்வழியே நிற்பாரை
எக்காலுங் காப்பாரென் றெண். 5

மனோதிருப்தி முற்றிற்று