![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
நாலாயிர திவ்விய பிரபந்தம் நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார். இந்நூல் முதலாயிரம் 947 பாடல்கள், பெரிய திருமொழி 1134 பாடல்கள், திருவாய்மொழி 1102 பாடல்கள், இயற்பா 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும். இந்நூலை இயற்றிய பன்னிரு ஆழ்வார்கள்: 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசையாழ்வார் 5. நம்மாழ்வார் 6. மதுரகவியாழ்வார் 7. குலசேகர ஆழ்வார் 8. பெரியாழ்வார் 9. ஆண்டாள் 10. தொண்டரடிப்பொடியாழ்வார் 11. திருப்பாணாழ்வார் 12. திருமங்கையாழ்வார் திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும் : 2. பெரியாழ்வார் திருமொழி 7. திருமாலை 8. திருப்பள்ளி எழுச்சி 9. அமலனாதிபிரான் 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு 11. பெரிய திருமொழி 12. திருக்குறுந்தாண்டகம் 13. திருநெடுந்தாண்டகம் 14. முதல் திருவந்தாதி 15. இரண்டாம் திருவந்தாதி 16. மூன்றாம் திருவந்தாதி 17. நான்முகன் திருவந்தாதி 18. திருவிருத்தம் 19. திருவாசிரியம் 20. பெரிய திருவந்தாதி 21. திருஎழுகூற்றிருக்கை 22. சிறிய திருமடல் 23. பெரிய திருமடல் 24. இராமானுச நூற்றந்தாதி |