![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
பெரியாழ்வார் அருளிய திருமொழி ... தொடர்ச்சி - 3 ... மூன்றாம் பத்து முதல்திருமொழி - தன்னேராயிரம்
(யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 223 தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான் பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும் மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே. அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 1 224 பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால் வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2 225 கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய் இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார் அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3 226 மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய் கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய் பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன் ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4 227 முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5 228 கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே. சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும் அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6 229 மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி. பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7 230 வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய் கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன் காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8 231 தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர் நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும் ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9 232 தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய் ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10 233 கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம் பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல் ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11 இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
(யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்)
கலிநிலைத்துறை 234 அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 1 235 பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில் சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின் எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2 236 நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும் பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின் என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3 237 வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின் எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4 238 அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய் கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின் தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5 239 மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய் படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின் இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6 240 வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின் புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7 241 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8 242 குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9 243 என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல் இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. 10 மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
(கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 244 சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும் காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர் ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. 1 245 கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம் மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன் என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. 2 246 காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச் சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன் ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3 247 கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும் குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே. கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4 248 பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே. எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே. சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய் கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும். 5 249 அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன் என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6 250 பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல் கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும் என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7 251 கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும் ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8 252 திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன் பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன் கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன் கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. 9 253 புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம் செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. 10 நான்காம் திருமொழி - தழைகளும்
(காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 254 தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும் தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி குழல்களும்கீதமுமாகிஎங்கும் கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு மழைகொலோவருகின்றதென்றுசொல்லி மங்கைமார்சாலகவாசல்பற்றி நுழைவனர்நிற்பனராகி எங்கும் உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. 1 255 வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு வசையறத்திருவரைவிரித்துடுத்து பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப் பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே முல்லைநல்நறுமலர்வேங்கைமலர் அணிந்து பல்லாயர்குழாம்நடுவே எல்லியம்போதாகப்பிள்ளைவரும் எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே. 2 256 சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும் மேலாடையும்தோழன்மார்கொண்டோட ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம் வருகையில்வாடியபிள்ளைகண்ணன் மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள் அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள் அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3 257 குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான் கோவலனாய்க்குழலூதியூதி கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு என்றும்இவனையொப்பாரைநங்காய் கண்டறியேன்ஏடி. வந்துகாணாய் ஒன்றும்நில்லாவளைகழன்று துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே. 4 258 சுற்றிநின்றுஆயர்தழைகளிடச் சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து பற்றிநின்றுஆயர்கடைத்தலையே பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின் மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன் மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால் கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக் கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5 259 சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல் திருத்தியகோறம்பும்திருக்குழலும் அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ் வருமாயரோடுஉடன்வளைகோல்வீச அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில் பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப் பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ. 6 260 சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ் தன்திருமேனிநின்றொளிதிகழ நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து பல்லாயர்குழாம்நடுவே கோலச்செந்தாமரைக்கண்மிளிரக் குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே. 7 261 சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித் திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால் அந்தரமின்றித்தன்னெறிபங்கியை அழகியநேத்திரத்தாலணிந்து இந்திரன்போல்வருமாயப்பிள்ளை எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன் துகிலொடுசரிவளைகழல்கின்றதே. 8 262 வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து மல்லிகைவனமாலைமௌவல்மாலை சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத் தீங்குழல்வாய்மடுத்தூதியூதி அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர் வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே. 9 263 விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு இளவாய்க்கன்னிமார்காமுற்ற வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார் பரமானவைகுந்தம்நண்ணுவரே. 10 ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
(கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 264 அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும் தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப் பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை வட்டத்தடங்கண்மடமான்கன்றினை வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர் கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 1 265 வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன் வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப மதுசூதன்எடுத்துமறித்தமலை இழவுதரியாததோரீற்றுப்பிடி இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும் குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2 266 அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும் ஆனாயரும்ஆநிரையும்அலறி எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை தம்மைச்சரணென்றதம்பாவையரைப் புனமேய்கின்றமானினம்காண்மினென்று கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3 267 கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக் கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல் அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு அமரர்பெருமான்கொண்டுநின்றமலை கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக் கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும் குடவாய்ப்படநின்றுமழைபொழியும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4 268 வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல் அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல் ஏனத்துருவாகியஈசன்எந்தை இடவனெழவாங்கியெடுத்தமலை கானக்களியானைதன்கொம்பிழந்து கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5 269 செப்பாடுடையதிருமாலவன் தன் செந்தாமரைக்கைவிரலைந்தினையும் கப்பாகமடுத்துமணிநெடுந்தோள் காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை எப்பாடும்பரந்திழிதெள்ளருவி இலங்குமணிமுத்துவடம்பிறழ குப்பாயமெனநின்றுகாட்சிதரும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6 270 படங்கள்பலவுமுடைப்பாம்பரையன் படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல் தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத் தாமோதரன்தாங்குதடவரைதான் அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7 271 சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச் சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல் நாராயணன்முன்முகம்காத்தமலை இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர் இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8 272 வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன் வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில் தாமோதரன்தாங்குதடவரைதான் முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள் முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9 273 கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள் கோலமும்அழிந்திலவாடிற்றில வடிவேறுதிருவுகிர்நொந்துமில மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம் முடியேறியமாமுகிற்பல்கணங்கள் முன்னெற்றிநரைத்தனபோல எங்கும் குடியேறியிருந்துமழைபொழியும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10 274 அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு அரவப்பகையூர்தியவனுடைய குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல் திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த் திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும் பரவுமனநன்குடைப்பத்தருள்ளார் பரமானவைகுந்தம்நண்ணுவரே. 11 ஆறாம் திருமொழி - நாவலம்
(கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 275 நாவலம்பெரியதீவினில்வாழும் நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர் தூவலம்புரியுடையதிருமால் தூயவாயில்குழலோசைவழியே கோவலர்சிறுமியர்இளங்கொங்கை குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும் காவலும்கடந்துகயிறுமாலையாகி வந்துகவிழ்ந்துநின்றனரே. 1 276 இடவணரைஇடத்தோளொடுசாய்த்து இருகைகூடப்புருவம்நெரிந்தேற குடவயிறுபடவாய்கடைகூடக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது மடமயில்களொடுமான்பிணைபோலே மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2 277 வானிலவரசுவைகுந்தக்குட்டன் வாசுதேவன்மதுரைமன்னன் நந்த கோனிளவரசுகோவலர்குட்டன் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது வானிளம்படியர்வந்துவந்தீண்டி மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப தேனளவுசெறிகூந்தலவிழச் சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே. 3 278 தேனுகன்பிலம்பன்காளியனென்னும் தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி கானகம்படிஉலாவியுலாவிக் கருஞ்சிறுக்கன்குழலூதினபோது மேனகையொடுதிலோத்தமைஅரம்பை உருப்பசியரவர்வெள்கிமயங்கி வானகம்படியில்வாய்திறப்பின்றி ஆடல்பாடலவைமாறினர்தாமே. 4 279 முன்நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில் மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில் குழலினோசை செவியைப்பற்றிவாங்க நன்னரம்புடையதும்புருவோடு நாரதனும்தம்தம்வீணைமறந்து கின்னரமிதுனங்களும் தம்தம் கின்னரம்தொடுகிலோமென்றனரே. 5 280 செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன் தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம் நம்பரமன்இந்நாள்குழலூதக் கேட்டவர்கள் இடருற்றனகேளீர் அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம் அமுதகீதவலையால்சுருக்குண்டு நம்பரமன்றென்றுநாணிமயங்கி நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே. 6 281 புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர் பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து அவையுள் நாகத்தணையான்குழலூத அமரலோகத்தளவும்சென்றிசைப்ப அவியுணாமறந்துவானவரெல்லாம் ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே. 7 282 சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது பறவையின்கணங்கள்கூடுதுறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக் கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. 8 283 திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன் செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான் ஊதுகின்றகுழலோசைவழியே மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா எழுதுசித்திரங்கள்போலநின்றனவே. 9 284 கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து கட்டிநன்குடுத்தபீதகவாடை அருங்கலவுருவினாயர்பெருமான் அவனொருவன்குழலூதினபோது மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும் மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும் இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே. 10 285 குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக் கோவிந்தனுடையகோமளவாயில் குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக் கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன் விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார் குழலைவென்றகுளிர்வாயினராகிச் சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. 11 ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
(திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 286 ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள் கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. 1 287 வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2 288 பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில் சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால் கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3 289 ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்? ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4 290 நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள் சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5 291 பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6 292 பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள் கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய் கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள் வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7 293 காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8 294 கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும் செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9 295 பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10 296 ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. 11 எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
(தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 297 நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன் மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? 1 298 ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள் கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? 2 299 குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? 3 300 ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான் பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? 4 301 தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? 5 302 வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ? நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? 6 303 அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ? கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ? 7 304 குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ. நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன் இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ? 8 305 வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ? ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ? 9 306 மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம் தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. 10 ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
(கிருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இரண்டு தோழியர் எதிரெதிராகக் கூறி உந்திபறித்தல்)
கலித்தாழிசை 307 என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள் தன் நாதன்காணவே தண்பூமரத்தினை வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. 1 308 என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான் தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற தாசரதிதன்மையைப்படிப்பற. 2 309 உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச் சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3 310 மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன சீற்றமிலாதானைப்பாடிப்பற சீதைமணாளனைப்பாடிப்பற. 4 311 பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5 312 முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன் அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. 6 313 காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன் நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன் தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7 314 தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச் சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள் ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8 315 மாயச்சகடமுதைத்து மருதிறுத்து ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற ஆயர்களேற்றினைப்பாடிப்பற ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9 316 காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10 தரவு கொச்சகக்கலிப்பா 317 நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல் செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல் ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. 11 பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
(இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்)
கலிவிருத்தம் 318 நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம் செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். 1 319 அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம் சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே. எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில் மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம். 2 320 கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய குலக்குமரா. காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். 3 321 வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம் தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய் கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில் சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். 4 322 மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம் கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப பால்மொழியாய். பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். 5 323 சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். 6 324 மின்னொத்த_ண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம் பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். 7 325 மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம் ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான் இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. 8 326 திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள் மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல் வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. 9 327 வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம் பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார் ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. 10 |