![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
கோ. சந்திரசேகரன் நூல்கள் |
![]() இவர் தனது பள்ளிப்படிப்பை, திருநெல்வேலி, கடலூர், மற்றும் சேலத்தில் பயின்றார். சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலை பட்டமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறையில் முதுகலை பட்டமும், சென்னை தரமணியிலுள்ள டாக்டர் ஏஎல் முதலியார் முதுகலை அடிப்படை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நாளமில்லாச் சுரப்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். இவர் விலங்கியல் துறையில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கணினி மற்றும் இணையத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக தம்மை முழுதும் இணையதள வடிவமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டார். 2001 ஆம் ஆண்டில் இவர் துவங்கிய ‘சென்னைநெட்வொர்க்.காம்’ இணையதளம் இன்று வரை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2006ல் இவர் துவங்கிய ‘சென்னைநூலகம்.காம்’ இணையதளம் இன்று உலகின் முன்னணி இணைய தமிழ் நூலகமாகத் திகழ்கிறது. தற்சமயம் 8 இணையதங்களை சொந்தமாக நடத்தி வரும் இவர், பல்வேறு இணையதளங்களை வடிவமைத்தும் பராமரித்தும் வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் நூல்களை மின்னூல்களாக குறுந்தகடுகளிலும் வெளியிட்டு வருகிறார். அவற்றில் முக்கியமானவை ‘தமிழ் மின்னூல் தொகுப்பு’, ‘அமரர் கல்கியின் படைப்புக்கள்’, ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’, ‘தமிழ் புதினங்கள் -1’, ‘கம்பராமாயணம்’ போன்றவை. 2009 ஆம் ஆண்டு கௌதம் பதிப்பகத்தை துவங்கி, சிறப்புற நடத்தி வருகிறார். இவர் ‘இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?’, ‘பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?’, ‘உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்குங்கள்’, ‘தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி?’, ‘நிஜமாகா நிழல்கள்’, ‘மண்மேடு’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது மனைவி பெயர், ச.சுதாதேவி. இவருக்கு, ச.கௌதம், ச.தரணிஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்சமயம் சென்னையில் வசித்து வருகிறார். நூல்கள்
1. இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? 2. பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? 3. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் 4. மண்மேடு 5. நிஜமாகா நிழல்கள் 6. 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் 7. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி? |