என். தெய்வசிகாமணி

     1951-ஆம் ஆண்டு சிவகங்கை வழக்கறிஞர் திரு. வே.நல்லசாமிபிள்ளை அவர்களுக்கும் திருமதி. சிவபாக்கியத்தம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்த இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். 'நோட்டரி பப்ளிக்' மற்றும் பல்வேறு வங்கிகளில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றும் இவருக்கு கலைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஆர்வமும், ஈடுபாடும் அதிகம். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரபல மாத, வார, நாளிதழில் வெளியாகி இருக்கின்றன. இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து சின்னத் திரையில் அறிமுகமாகி இருக்கும் இவருக்கு ஜோதிடம் மற்றும் இசையில் நாட்டம் உண்டு. இவரது தமக்கையார் பிரபல நாவலாசிரியை திருமதி. லீலா கிருஷ்ணன் அவர்கள். இவரது துணைவியார் திருமதி. கீதா தெய்வசிகாமணி, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் மூலம் வாசகர் மத்தியில் ஏற்கனவே நன்கு அறிமுகமாகி உள்ளவர். இவரது மகன் ஷிவா பொறியியல் பட்டதாரி, மகள் சத்தியலீலா அறிவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

சிறுகதைகள்