நாககுமார காவியம்

     நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதன் ஆசிரியர் ஒரு சமணப் பெண்துறவி. பெயர் அறியக் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

     முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

     அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.

காப்பு

மணியும்நல் கந்தமுத்தும் மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின்கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணிபாதம் பண்ணவர் தமக்கும் எந்தம்
இணைகரம் சிரசில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே.

முதல் சருக்கம்

தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்

செந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரிதீர்த்த காலம்
கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம். 1

திங்கள் முந்நான்கு யோகம் தீவினை அரிய நிற்பர
அங்கபூ ஆதி நூலுள் அரிப்புஅறத் தௌபிந்த நெஞ்சில்
தங்கிய கருணை ஆர்ந்த தவமுனி அவர்கள் சொன்ன
பொங்குநல் கவிக்கடல்தான் புகுந்துநீர்த்து எழுந்தது அன்றே. 2

அவை அடக்கம்

புகைக்கொடி உள்உண்டு என்றே பொற்புநல் ஒளிவிளக்கை
இகழ்ச்சியின் நீப்பார் இல்லை ஈண்டுநல் பொருள் உணர்ந்தோர்
அகத்துஇனி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லைச்
செகத்தவர் உணர்ந்து கேட்கச் செப்புதல் பாலது ஆமே. 3

கேட்போர் பெறு பயன்

வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன்கு அடைக்கும் வாய்கள்
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம்
கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும்
இவ்வகைத் தெரிவுறுப்பார்க்கு இனிதுவைத்து உரைத்தும் அன்றே. 4

மகத நாட்டுச் சிறப்பு

நாவலந் தீப நூற்றை நண் ணுதொண்ணூறு கூறில்
ஆவதன் ஒருகூறு ஆகும் அரியநல் பரத கண்டம்
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி
மேவுமின் முகில்சூழ் சோலை மிக்கதுஓர் மகதநாடு. 5

இராசமாகிரிய நகரம்

திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்துஇனிது உறையும் நாட்டுள்
இசையுநல் பாரிசாத இனமலர்க் காவும் சூழ்ந்த
அசைவிலா அமர லோகத்து அதுநிகரான மண்ணுள்
இசைஉலா நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே. 6

கிடங்குஅரு இஞ்சி ஓங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
கடங்கள்வைத்து இலங்கு மாடம் கதிர்மதி சூட்டினால்போல்
படம்கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே
இடம்கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் மெச்சும் அன்றே. 7

சிரேணிக ராசனின் செங்கோல்ஆட்சி

பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம்மடங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை எழுந்த மேகம்
வாரித்து அசைந்து இளிக்கும் வண்கைஅம்பொன்திண் தோளான்
சீரித்தது அலங்கல் மார்பன் சிரேணிக ராசன்ஆமே. 8

ஆறில்ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன்மாதேவி அன்னப்
பேறுடை நடைவேல் கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள்பேர்
வீறுடைச் சாலினீதா மிடைதவழ் கொங்கை கொண்டை
நாறுடைத் தார்அணிந்த நகைமதி முகத்தினாளே. 9

மற்றும் எண்ணாயிரம்பேர் மன்னனுக்கு இனிய மாதர்
வெற்றிவேல் விழியினாரும் வேந்தனும் இனிய போகம்
உற்றுஉடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்குச்
செற்றவர்ச் செகுத்துச் செங்கோல் செலவிய காலத்து அன்றே. 10

வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்

இஞ்சிசூழ் புரத்து மேற்பால் இலங்கிய விபுலம் என்னும்
மஞ்சிசூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து
இஞ்சிமூன்று இலங்கும் பூமி ஏழிறை இருக்கை வட்டம்
அஞ்சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே. 11

வனமிகு அதிசயங்கள் வனபாலன் கண்டுவந்து
நனைமது மலர்கள் ஏந்தி நன்நகர் புகுந்துஇராசன்
மனைஅது மதில்கடந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனமிக மகிழ்ந்து இறைஞ்சி மாமுரசு அறைக என்றான். 12

மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்

இடிமுரசு ஆர்ப்பக் கேட்டும் இயம்பிய அத்தினத்தின்
படுமத யானை தேர்மா வாள்நால் படையும் சூழக்
கடிமலர் சாந்தும் ஏந்திக் காவலன் தேவியோடும்
கொடிநிரை பொன் எயிற்குக் குழுவுடன் சென்ற அன்றே. 13

பொன்எயில் குறுகிக் கைம்மாப் புரவலன் இழிந்துஉள்புக்கு
நன்நிலத்து அதிசயங்கள் நரபதி தேவியர்க்குப்
பன்உரை செய்து காட்டிப் பரமன்தன் கோயில் தன்னை
இன்இயல் வலங்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே. 14

நிலமுறப் பணிந்து எழுந்து நிகர்இலஞ் சினையின் முற்றிக்
கலன்அணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலில் பொங்கி
நலமுறு தோத்திரங்கள் நாதன்தன் வதனம் நோக்கிப்
பலமனம் இன்றி ஒன்றிப் பலதுதி செப்பல் உற்றான். 15

வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்

வேறு

பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு மலர்ப்பிண்டிப் போதன் நீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே
அறவிபணி பணஅரங்கத்து அமர்ந்தாய் நீயே
ஐங்கணைவில் மன்மதனை அகன்றாய் நீயே
செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை ஆளும்
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே. 16

கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயே
காலம்ஒரு மூன்றுஉணர்ந்த கடவுள் நீயே
பஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயே
பரமநிலை ஒன்றுஎனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயே
தொல்வினை எல்லாம்எரித்த துறவன் நீயே
செஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்தமான் எனும் தீர்த்தன் நீயே. 17

அறவன்நீ அமலன்நீ ஆதி நீயே
ஆரியன்நீ சீரீயன்நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே
தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே
எரிமணிநல் பிறப்புடைய ஈசன் நீயே
இருநான்கு குணம்உடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுதுஇறைஞ்சும் செல்வன் நீயே
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே. 18

முனிவர்தமக்கு இறையான மூர்த்தி நீயே
மூவா முதல்வன்எனும் முத்தன் நீயே
இனிமை ஆனந்தசுகத்து இருந்தாய் நீயே
இயல்ஆறு பொருள்உரைத்த ஈசன் நீயே
முனிவுமுதல் இல்லாத முனைவன் நீயே
முக்குடையின் கீழ்அமர்ந்த முதல்வன் நீயே
செனித்துஇறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே. 19

நவபத நன்னயம்ஆறு நவின்றாய் நீயே
நன்முனிவர் மனத்துஇசைந்த நாதன் நீயே
உவமைஇலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே
உத்தமர்தம் இருதயத்துள் உகந்தாய் நீயே
பவமயமாம் இருவினையைப் பகர்ந்தாய் நீயே
பரம நிலைஅமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்றதிகழ் தேசன் நீயே
சிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன் நீயே. 20

வேறு

துதிகள் செய்துபின் தூய்மணி நன்நிலத்து
அதிகொள் சிந்தையின் அம்பிறப் பணிந்து உடன்
நெதி இரண்டுஎன நீடிய தோளினான்
யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே. 21

சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவன் நன்மொழி இப்பொருள் உள்கொண்டு
அறைஅமர்ந்து உயிர்க்கு அறமழையைப்பெயும்
துறவன் நற்சரண் தூய்தின் இறைஞ்சினான். 22

தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்

மற்றுஅம் மாமுனி ஏர்மல ராம்பதம்
உற்றுடன்பணிந்து ஓங்கிய மன்னவன்
நற்றவர்க்கு இறையானநற் கௌதமர்
வெற்றி நற்சரண் வேந்தன் இறைஞ்சினான். 23

இருகரத்தின் இறைஞ்சிய மன்னனும்
பொருகயல்கணிப் பூங்குழை மாதரும்
தரும தத்துவம் சனமுனிவர்க்குஉரை
இருவரும்இயைந்து இன்புறக் கேட்டபின். 24

நாக பஞ்சமி கதைஉரைக்க மன்னன் வேண்டுதல்

சிரிநல் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக என்றலும்
அறிவு காட்சி அமர்ந்துஒழுக் கத்துஅவர்
குறிஉ ணர்ந்துஅதன் கூறுதல் உற்றதே. 25

மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்

நாவலந் தீவின் நற்பரதத்துஇடை
மாவலர் மன்னர் மன்னு மகதம்நல்
கூவும் கோகிலம் கொண்மதுத் தாரணி
காவும் சூழ்ந்த கனக புரம்அதே. 26

அந்நகர்க்கு இறையான சயந்தரன்
நன்மனைவி விசாலநன் நேத்திரை
தன்சுதன்மதுத் தாரணி சீதரன்
நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே. 27

மற்றும் தேவியர் மன்னும்எண்ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்துஉறுகின்றநாள்
பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்து
உற்றமாதர் படத்து உருக்காட்டினான். 28

மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
கின்னரியோ கிளர்கார் மாதரோ
இன்ன ரூபம்மிக்கார்இது என்றலும்
மன்னும் வாசவன் வாக்குஉரை செய்கின்றான். 29

வாசவன் மறுமொழி

சொல்அரிய சுராட்டிர தேசத்துப்
பல்சனம்நிறை பரங்கிரியாநகர்
செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி
நல்சுதையவள் நாமம் பிரிதிதேவி. 30

சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்துஅரசி ஆக்குதல்

அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச்
செவ்விதில் செப்பச் சீருடை மன்னனும்
மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத்
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன். 31

மன்னன் இன்புற்று மாதேவி ஆகவே
நன்மைப் பட்டம் நயந்து கொடுத்தபின்
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன ஆற்றின் இயைந்துடன் செல்லுநாள். 32

பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு

வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுள்
பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி
கயந்தம் நீர்அணி காண்டற்குச் சென்றநாள். 33

வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வார்அணி கொங்கை யார்அவள் என்றலும்
ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்று
தார்அணிகுழல் தாதி உரைத்தனள். 34

பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்

வேறு

வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக்
கால்மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று
பால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து
நூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே. 35

ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்

வேறு

கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார்
பொல்லாக் கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற்கு எளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள். 36

முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்

பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நல்தவமும் ஆமோ எனக்குஎன்றாள்
கணிதம்இலாக் குணச்சுதனைக் கீர்த்திஉடனேபெறுவை
மணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான், 37

நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை அறஉரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள். 38

வேறு

நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல்
உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம் தன்னில்
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள். 39

இரண்டாம் சருக்கம்

சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்

வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காதலாலே
புனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்ன
கனவரை மார்பன் கேட்ந்பக் காரிகை உரைக்கும் அன்றே. 40

இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீய
கறைஇலா முனிவன் பாதம் கண்டுஅடி பணிந்து தூய
அறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம் மகிழ்ந்து
பிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார். 41

பிரிதிதேவி கண்ட கனவு

இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்ந்து
மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம்
இருள்மனை இமில் ஏறுஒன்றும் இளங்கதிர் கனவில் தோன்றப்
பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே. 42

சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்

வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று
சேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்
ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார். 43

புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்

அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச்
செம்மையின் இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும்
கம்பம்இல் நிலங்கள் எல்லாம் காத்துநல் தவமும் தாங்கி
வெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார். 44

புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்

தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்று
புனைமலர் அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமின்அக் குறிகள் உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின்
தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான். 45

திகம்பர முனிவரின் மறுமொழி

வேறு

பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தான் நீங்கும் திருக்கதவம்
நன்நாக வாவிதனில் நழுவப் பதமும்உண்டாம்
மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான். 46

அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடு
இருவரும் இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்து
பருமுகில் தவழும்மாடப் பஞ்சநல் அமளிதன்னில்
திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள். 47

பிரிதிதேவி கருக் கொள்ளுதல்

வேறு

புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்இனிது உண்ண எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும்
பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும்
கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே. 48

புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்

திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில் தோன்றப்
பொங்குநீந்ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை ஆகித்
தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச்
சிங்கம்நேர் சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார். 49

பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்

பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி
விரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப்
பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே. 50

ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்

சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப்
பிறைநுதல் தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள்
நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக் காணாச்
சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே. 51

கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப்
பிறைஎயிற்று அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டு
பறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து
இறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே. 52

நாககுமாரன் எனப் பெயர் பெற்றது

நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணி
நாகநல் குமரன் என்று நரபதி நாமம் செய்தான்
நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி இன்ப
நாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள். 53

கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்

கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும்
அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார்
என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன் காண்க
என்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே. 54

இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்று
அசைவிலா மன்னன் தானும் அதிசய மனத்தன் ஆகித்
திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல் என்ன
வசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன். 55

நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்

பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள்
அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார். 56

நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்

நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்ல
நாகநல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு
வேகத்தின்ந் விட்டுவந்து வேந்தநீ கொள்க என்ன
வாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான். 57

மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு
உற்றஊர் வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டி
வெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ கொள்க என்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே. 58

நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்

அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும்
திறவதின் எய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம்
பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான். 59

விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்

தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள்
தேசநல் புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசஓணா வகையில் கேட்டேன் பெருந்தவம் இல்லை நீயும்
ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள். 60

சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்

சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகி
குறிகொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச்
செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை
அறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள். 61

நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்

வேறு

குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள்
மமரநீரில் ஆடவே வன்னமாலை குங்குமம்
சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில்
சமையும்மாட மீமிசைச் சயந்தரன் இருந்ததே. 62

விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்

வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள்
போந்தனள் மனைவியால் புணரும்சோரன் தன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
ஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே. 63

பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்

பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்
நையும்இடை மாதரும் நாகநல் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியே
வெய்யவேல்கண் தாயுடன் வியன்மனை அடைந்தனன். 64

பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை

மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன்
நின்னுடைப் புதல்வன் நீராடல்காணப் போனதுஎன்
நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின் ஆடல்என்
நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன். 65

தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்

அரசன்உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே
சிரசுஇறங்கித் துக்கமாய்ச் சீர்கரத்து இருந்தனள்
விரகுநல் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
அரசன்உரை சொல்லக்கேட்டு ஆனைமிசை ஏறினான். 66

வாத்தியம் முழங்கவும் மதவாரணம் அடக்கவும்
ஏத்துஅரிய வீதிதொறும் ஈடுஇல்வட்ட சாரியும்
பார்த்துஅரிய நடனமும் பல்இயங்கள் ஆர்ப்பவே
சீற்றமொடு உலாச்செலச் சீர்அரசன் கேட்டனன். 67

அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்

நன்அடியார் சொல்லினர் நாகநல் குமரன்என்
இன்உரையை மீறினன் இனிஅவன் மனைபுகுந்து
பொன்அணிகள் நற்பொருள் நாடிமிக் கவர்கொள
என்றுஅரசன் கூறலும் இனப்பொருள் கவர்ந்தனர். 68

நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்

ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதர
நீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான். 69

அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்

அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழ
அரவமணி ஆரமும் ஆன முத்து மாலையும்
கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும்
எரிமணிகள் இலதைவேந்து என்னஇக் கூற்றென. 70

நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்

சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன்
சூதில்ஆட என்னுடன் சுதன்அழைப்ப வந்தபின்
சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில்
சூதுஇரண்டு ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன். 71

தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்

இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்துஉடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருள் கொடுத்தபின்
அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன். 72

புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்

மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில்
நன்நகர் சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்று
அந்நகரின் நாமமும் அலங்கரிய புரம்எனத்
தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே. 73

மூன்றாம் சருக்கம்

கவிக்கூற்று

அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும்
பிரிவுஇன்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்ந்கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன். 74

நாககுமாரனின் தோழர் வரலாறு

பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர்அணி கொடிகள் ஓங்கும் உத்தர மதுரை தன்னில்
வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர் செயவர்மாவின்
சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும். 75

வியாள-மாவியாளரின் தோற்றம்

வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும்
சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில்
காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர்
வேந்தன்வந்து அடி வணங்கி விரித்துஒன்று வினவினானே. 76

என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோ
அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை பண்ணும்
என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான். 77

வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்

மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப்
பின்னவர் அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்இறை தேடிப் போந்தார் தரைமகள் திலதம் போலும்
பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே. 78

பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்

நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் றேவி பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன்
கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந் தரிஎன்பாள்ஆம்
விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார். 79

மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டு
தன்உடையப் புதல்வி தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரிவியாளனுக்கு
மன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே. 80

நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்

சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநல் குமரன் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு
சிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே. 81

சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்

செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார்
கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே. 82

சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்

சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேல் குமரன் தோன்றி அவனும்வந்து எதிர்த்த போது
மானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை ஏவ
கோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே. 83

மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி

நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்ன
போகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன
ஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான். 84

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்

நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே
செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே. 85

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்

தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து
தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து
அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில். 86

மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்

வேறு

மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின்
இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன். 87

எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று
அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும்
தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து
இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே. 88

வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி

வேறு

நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி
கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று
என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம். 89

திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்

வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில்
உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான். 90

வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி

தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்
சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான்
ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான். 91

வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்

குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து
சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான். 92

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார்
ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான். 93

இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான். 94

வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும்
கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே. 95

வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்ந்குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான்
அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள். 96

இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்
எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்
நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து
வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான். 97

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்
ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று
தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான். 98

கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்
மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்
நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப்
பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே. 99

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்
சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்
பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே. 100

நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி
எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி
நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான். 101



நாககுமார காவியம் : 1 2



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247